”ஹெகலையும் ஃபாயர்பாக்கையும் மார்க்ஸ் தலைகீழ் ஆக்கினார்” -என்பதன் பொருள் என்ன?

 ”ஹெகலையும் ஃபாயர்பாக்கையும் மார்க்ஸ் தலைகீழ் ஆக்கினார்” -என்பதன் பொருள் என்ன?

^^^ *** ^^^
மார்க்சிய அடிப்படைகளில் சில (1)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஹெகல், ஃபாயர்பாக் எனும் இரு தத்துவவியலாளர்களின் பாரம்பரியத்தில் வந்தவர் மார்க்ஸ் என்றாலும் இந்த இருவரின் தத்துவங்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டவர் அல்ல என்பது மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஒன்று.
ஹெகலின் தத்துவம் இரு கூறுகளைக் கொண்டது. அவர் கருத்துமுதல்வாதி. கடவுளின் இருப்பை ஏற்பவர். மார்க்ஸ் அதை ஏற்பதில்லை என்பது ஒன்று.. ஆனால் ஹெகல் ஒரு இயங்கியல்வாதி. எல்லாம் மாறிக்கொண்டும், இயக்கத்திலும் உள்ளது என்பது அவர் கருத்து. மார்க்ஸ் அதை ஏற்கிறார். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலகால வகையினானே “ என்பது தமிழ் முது மொழி (நன்னூல் 462).
நவீன காலம் என்பது மதத்தின் பிடியிலிருந்து அனைத்தையும் விடுதலை செய்தது. நியூட்டன் முதலானோரின் விஞ்ஞான வளர்ச்சிகளால் ஊக்கப்பட்ட காலம் அது. மதத்தின் ஆதிக்கத்தை எதிர்த்த பெரும் சிந்தனைக் கிளர்ச்சி ஒன்று மேற்குலகில் அப்போது ஏற்பட்டது. மிகக் கடுமையான விமர்சனங்கள் மதத்தின் மீது, குறிப்பாக கிறிஸ்தவத்தின் மீது மேலைச்சூழலில் வைக்கப்பட்டன. அப்படியானவர்களில் ஒருவர்தான் மார்க்சின் ஆளுமை உருவாக்கத்தில் இடம் பெற்ற இந்த இன்னொரு முக்கிய தத்துவவியலாளரான ஃபாயர்பாக்.
"மனிதனின் ஆக உன்னதமான உணர்வான 'உண்மை' குறித்த உணர்நிலையை மதம் விஷம் ஊட்டி அழிக்கிறது"; எனவும் "மதம் என்பது மனித மனத்தின் (வெற்றுக்) கனவு; இன்றைய யுகத்தில் மாயைகளே புனிதமாகப் போற்றப்படுகின்றன. உண்மைகள் அற்பமாக அலட்சியம் செய்யப்படுகின்றன." எனவும்- மதத்தைக் கடுமையாகச் சாடியவர் அவர். அவரைப் பொருத்தமட்டில் எல்லாவிதமான மத வெளிப்பாடுகளும் நிறைவேற்றப்படாத மனித ஏக்கங்களின் கருத்துருவாக்கப்பட்ட பிம்பங்கள்தான்; கடவுள் என்பது மனிதனே உருவாக்கிக் கொண்ட ஒரு மாயைதான்.
ஹெகலைப்போல் அல்லாமல் ஃபாயர்பாக் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஹெகல், ஃபாயர்பாக் என்கிற சமகால இரு முக்கிய தத்துவ ஆளுமைகளால் உந்தப்பட்டவர்தான் மார்க்ஸ் எனில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு என்பது என்ன?
மார்க்ஸ் இந்த இரு மகத்தான சிந்தனையாளர்களாலும் ஊக்கப்பட்டவர்தானே ஒழிய அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டவர் அல்ல என்பதை நாம் கவனமாக நினைவில் கொள்ள வேண்டும். இருவரையும் ஏற்றுக்கொண்டார், ஆனால் அப்படியே அல்ல. இருவரையும் ‘தலைகீழாக்கி’ ஏற்றுக்கொண்டார் என்பார்கள் மார்க்சிய அறிஞர்கள். தம் கருத்துக்களை அவர்கள் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களுடன் பொருத்தி முன்நிறுத்தினர். ஹெகலின் கருத்துமுதல் வாதமும், ஃபாயர்பாக் முன்வைத்த கருத்துக்களை முதன்மைப்படுத்தாத அணுகல் முறையும்- இரண்டுமே ஓரம்சத்தில் இணைந்து போவதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். தூலமான சமூக நிலைகளை, அதாவது வரலாற்றை அவை இரண்டுமே புறக்கணிப்பதுதான் அது. சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ள ஹெகலின் சிந்தனை ஒரு சிறந்த கருவிதான். ஆனால் இந்த மாற்றங்கள் என்பன சமகாலப் பொருளியல் சூழல்களிலிருந்து உருவாவதை ஹெகல் பார்க்கத் தவறினார். அதை வெறும் ஒரு 'உலக ஆன்மா' அல்லது 'உலக இயக்கு சிந்தனை' (the Weltgeist - "world spirit") என்பதன் வெளிப்பாடு என நிறுத்திக் கொண்டதே ஹெகலின் பிரச்சினை.
அதேபோல ஃபாயர்பாக்கின் மதம் குறித்த விமர்சனமும் தூலமான எதார்த்தங்களின் அடிப்படையில் அமையவில்லை. மனிதன் தன் ஏக்கங்களையும், எதார்த்தத்தில் நிறைவேற்றிக் கொள்ள இயலாத தன் தேவைகளையும் ஆசைகளையும் அவன் மதத்தில் ஏற்றி ஆறுதல் தேடினான் என்றார் ஃபாயர்பாக். அந்த வகையில் கடவுளும் மனிதனும் வேறு வேறல்ல. "கடவுள்தான் மனிதன்; மனிதன்தான் கடவுள்" எனவும் "இறையியல் என்பது வேறொன்றுமில்லை; மானுடவியல்தான் (anthropology) இறையியல்" எனவும் ஃபாயர்பாக் கூறியதன் பொருள் இதுதான். தான் வாழ்வில் சாதிக்க இயலாத அனைத்தையும் மனிதன் கடவுளிடம் ஏற்றி ஆறுதல் கண்டான். "மனிதன் தன் வடிவில் கடவுளைப் படைத்துக் கொண்டான்" எனக் கிறிஸ்தவ இறையியல் (Theology) சொல்வதன் பொருள் இதுவே. "பாவங்களிலிருந்து" விடுபட இயலாத தன் இயலாமையை அவன் கடவுளின் புனிதத்தன்மையில் ஏற்றி வைத்து ஆறுதல் கண்டான். தனது படைப்பாற்றல் தன்னிடமிருந்து கைநழுவிப் போனதை (அந்நியமானதை) அவன் அளவிடற்கரிய படைப்பாற்றல் மிக்கவராகக் கடவுளைக் கற்பிப்பதன் மூலம் தீர்த்துக் கொண்டான். சமூகத் தீமைகளை அழிக்க இயலாதத் தன் கையாலாகாத்தனத்தை எல்லாத் தீமைகளையும் அழிக்க வல்லவராகக் கடவுளைக் கற்பிப்பதன் மூலம் மறைத்துக் கொண்டான் அல்லது தன் நினைவிலிருந்து ஒளித்துக் கொண்டான்.
1841 ல் The Essence of Christianity எனும் ஃபாயர்பாக்கின் (Feuerbach) நூல் வெளிவந்தது. 'மனிதனின் கையாலாகாத் தன்மையே கடவுளின் பிறப்பிடம்' என அவர் அதில் குறிப்பிட்டார். தான் என்னவாக விரும்பினானோ அவ்வாறே மனிதன் கடவுளைப் படைத்தான். மனிதப் பண்புகளை தெய்வீகமாகக் கட்டமைக்கும்போதே மதம் என்பது உண்மையாகிறது. ‘இறையியல்’ எனும் பெயரில் கடவுளை மனிதரிடமிருந்து வேறுபடுத்திப் பிரிக்கும்போது அது பொய்யாகிறது என்று கூறிய ஃபாயர்பாக் கிறிஸ்தவம் மானுடரின் அரசியல் ஆற்றலை அழிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலைச் சூழலில் அவர் கிறிஸ்தவம் எனக் கூறியது உலகளவில் எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு மனிதனின் உண்மையான இருப்பு குறித்த உணர்நிலையை மதம் அழிக்கிறது, அவனது அரசியல் உணர்வை மழுங்கடிக்கிறது என்பதை எல்லாம் ஃபாயர்பாக் மிகச் சரியாக அடையாளம் கண்டாரே ஒழிய அது எவ்வாறு அழிக்கப்பட்டுகிறது, அதன் நோக்கம், பின்னணி, செயல்முறை, அவற்றில் வர்க்கங்களின் பாத்திரம் ஆகியவற்றை அவர் பேசவில்லை என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டினார்.
இந்தப் பின்னணியில்தான் 1848 இல் மார்க்ஸ் - எங்கல்சின் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' வெளிவந்தது. "இதுவரை வரலாற்றில் கண்ட சமூகங்களின் வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே" எனும் புகழ்பெற்ற வாசகத்தை அது கொண்டிருந்தது. ஆக, வரலாற்றின் உண்மையான இயக்குவிசை என்பது உண்மையான வர்க்கங்களுக்கிடையே நிகழ்ந்த உண்மையான வர்க்கப் போராட்டங்களின் விளை பொருளே. இந்த உண்மையான வர்க்கப் போராட்டங்கள் உண்மையான வரலாற்று மாற்றங்களுக்குக் காரணமாயின. இந்த வரலாற்றின் ஊடாகப் புதிய வர்க்கங்கள் உருவாயின. இவற்றுக்கிடையே புதிய வர்க்கப் போராட்டங்கள் உருவாயின. எதை அழித்து எது முகிழ்த்ததோ அதை அழித்து அடுத்தது முகிழ்க்கும் என ஹெகல் கூறியதன் பொருள் இதுவே. இப்படிப் புதிதாக உருவான மாற்றங்களின் ஊடாகப் புதிய பார்வைகளும் புதிய சிந்தனைகளும் உருவாகும் என்பது பொருள்
(தொடரும்: கார்ல் மார்க்ஸ் குறித்த என் நூலின் ஒரு அத்தியாயன் சில பத்திகள் மட்டும்)
May be art of one or more people and text that says 'Karl Marx 1818 - 1883'
Gnana Suriyan Munisamy, குருசாமி மயில் வாகனன் and 119 others
27 Shares
Like
Comment
Share

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு


பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் அடங்கிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு  தீர்ப்பு வழங்கியுள்ளது.

"இந்த வழக்கில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் பல்வேறு வாதங்களை முன்வைத்தார்கள். பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று கூறிய சிம்ஹோ கமிஷனின் பரிந்துரைகளை முன்வைத்து வாதாடினார்கள். இருந்தும்  தீர்ப்பு எதிராக வந்திருக்கிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோ அதை ஆர்ஜேடி, திமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக ஆகிய கட்சிகள் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தன.

தீர்ப்பு குறித்து

மகாராஷ்டிராவின் முன்னாள் ஐஜி அப்துர் ரஹ்மான்,இந்த முடிவு குறித்து அதிருப்தி தெரிவிக்கும் அவர், "ஓபிசி அல்லது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை ஏற்படும்போதெல்லாம், சரியான தரவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மக்கள்தொகை சதவீதத்தை வழங்கும்படி நீதிமன்றம் கேட்கிறது. 50% வரம்பை மீற முடியாது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான தரவு நம்மிடையே இல்லை. பிறகு எப்படி அவசரகதியில் அந்த பிரிவினருக்காக 10% ஒதுக்கீடு வழங்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்புகிறார்.

உண்மையில் இந்த தீர்ப்பு என்பதே நடுவண் அரசின் அரசியல் விளையாட்டுக்கானதே உண்மையில் எந்த மக்களின் நலனுக்கானவை அல்ல என்று வாதிடுவதை விட... இந்திய அரசியலமைப்பின்படி, பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் 49.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர்.

இந்த வகை இடஒதுக்கீட்டை எதிர்த்து 40 மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை ஜன்ஹித் அபியான் 2019இல் தாக்கல் செய்தார்.இந்த வகை இடஒதுக்கீடு நீடித்தால், சம வாய்ப்புகள் முடிவுக்கு வரும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.

மண்டல் கமிஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டின் அதிகபட்ச வரம்பை 50 சதவீதமாக நிர்ணயித்தது. இந்த ஒதுக்கீடு 50 சதவீத வரம்பை மீறுவதாக EWSக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் வாதிட்டனர்.

இருந்தும் இந்த தீர்பானது நடுவண் அரசின் தேவைக்கான தீர்பாகவே பார்க்க வேண்டும். 2019ல் வேக வேகமாக கொண்டுவரப்பட்ட இந்த சட்ட திருத்தம் வடமாநில மக்களை குறிவைத்தே களமிறக்கப் பட்டுள்ளன என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே வேளையில் மற்ற மாநிலங்களில் உள்ள மக்களை திசைத் திருப்ப இவை பயன்படும் என்பதில் உறுதி.

ஆக நாம் புரிந்துக் கொள்ள "இந்தியாவின் அரசியல் அமைப்பு படி  பட்டியல் இன மக்கள், பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, மக்களவை மற்றும் சட்டசபையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும் சட்டப்பிரிவு கொண்டுவரப்பட்டது. இதுவே அரசியல் இடஒதுக்கீடு ஆகும்."இதற்கு முதலில் 10 ஆண்டுகள் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் வாக்குகளை பெற, அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் இதனை அவ்வப்போது நீட்டித்து கொண்டனர். ஆனால், மாநிலங்களவை மற்றும் மாநில சட்டமன்ற கவுன்சில்களில் தனி இடங்கள் என்பது கிடையாது.பின்னர், உள்ளாட்சி தேர்தல்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரோடு, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால், அரசியல் செயல்முறையில் இல்லாத பலரும், அரசியல் அதிகாரம் பெற முடிந்தது. இது இடஒதுக்கீட்டின் சிறப்பான அம்சமாகும். ஆனால், இடஒதுக்கீட்டின் முக்கிய நோக்கங்களை இது நிறைவேற்றவில்லை என்பதே நம் கண் முன் உள்ள நிஜம்".

டாக்டர் ஹரி நார்கே "இடஒதுக்கீடு என்பது மூன்று வகைப்படும். அரசியலில் இடஒதுக்கீடு (தனித் தொகுதிகள்), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு. அரசமைப்புச் சட்டத்தின் 334 பிரிவின்படி, அரசியல் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும்தான் 10 ஆண்டு வரம்பு உள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எந்த வரம்பும் கிடையாது," என்கிறார் பிபிசி மாராட்டி செய்தி பிரிவு.. 

அதே செய்தியில்-ஆகஸ்ட் 25, 1949 அன்று ஆந்திர மாநில உறுப்பினரான நாகப்பா, 150 ஆண்டுகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இல்லையென்றாலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களின் நிலை உயரும் வரை இது தொடர வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்கு அம்பேத்கர் அளித்த பதில் என்ன தெரியுமா? "தனிப்பட்ட முறையில் நீண்ட காலத்திற்கு இடஒதுக்கீடு முறை வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். தாழ்த்தப்பட்டோருக்கு நீண்ட காலத்திற்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், நான் ஏற்கனவே கூறியதுபோல, 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறை பின்பற்ற இந்த சபை முடிவு செய்துள்ளது. எனினும், 10 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் போதிய முன்னேற்றம் அடையாத நிலையில், காலவரம்பை மேலும் நீட்டிக்க அரசியல் அமைப்பில் வழி செய்திருக்கிறேன்" என்றார்.

ஆக சமூகத்தில் பல்வேறு ஒடுக்குமுறைக்கும் மேலெழ வாய்ப்பே இல்லாதவர்களுக்கு இந்த இடஒதுகீடு மூலம் சற்றேனும் முன்னேற வாய்பளிக்கப் பட்டது. அதில் சிலர் பயன்பெற்றனர் இருந்தும் இன்றும் பெருவாரியான மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டுதான் உள்ளனர் அவர்களுக்கு இந்த இடஒதுக்கீடின் பயன் போய் சேருமுன்னே சமூகத்தில் மேல்நிலையில் அங்கம் வகிக்கும் எல்லா பிற்போக்குதனங்களையும் தூக்கி பிடிக்கும் இந்த மதவாத மேலடுக்கு சாதிகளுக்கு இட ஒதுக்கீடு என்பது மக்களை ஏய்க்கும் வேலையே....

நமது நீதிபதிகளின் விளக்கவுரை கீழே;-

  • "இட ஒதுக்கீடு என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட எந்தவொரு பிரிவினருக்குமான உறுதியான நடவடிக்கை. எனவே, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு என்பது அரசமைப்பை மீறாது.
  • பட்டியல் சாதிகள்/பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்கான இட ஒதுக்கீடுகளில் இருந்து விலக்குவது அரசமைப்பு ரீதியாக செல்லுபடியாகும். கிடைக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் 50% கூடுதலாக பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது அரசமைப்புப்படி செல்லுபடியாகும். ஏனெனில் உச்சவரம்பு என்பது நெகிழ்வானது, அது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்," என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி கூறியுள்ளார்.
"பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு செல்லுபடியாகும்" உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • நீதிபதி மகேஷ்வரியின் தீர்ப்புடன் ஒத்துப் போன நீதிபதி பெலா திரிவேதி, பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்பின் அவசியமான அம்சமாகும் என்று தெரிவித்துள்ளார்.
  • "சட்டம் மக்களின் தேவைகள் குறித்து புரிந்து கொள்கிறது. அதேபோல பொருளாதார ரீதியில் சிலரை ஒதுக்கி வைத்திருப்பது குறித்து தெரிந்துள்ளது. இந்தியாவில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு சம வாய்ப்பை வழங்க பழமையான சாதி அமைப்புதான் இட ஒதுக்கீட்டிற்கு வித்திட்டது என்று சொல்ல முடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்களுக்கு பிறகு அரசமைப்பை மாற்றியமைக்க வழிவகுக்கும் வகையில் இட ஒதுக்கீடுகள் குறித்த மாற்றுப் பார்வை தேவை" என நீதிபதி திரிவேதி தெரிவித்துள்ளார்.
  • நீதிபதி பர்டிவாலா, ஒட ஒதுக்கீடு ஒரு இறுதியான முடிவல்ல, ஆனால் சமூக பொருளாதார நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
  • பெரும்பான்மை தீர்ப்போடு ஒத்துப் போகாத நீதிபதி ரவிந்திர பட், "இந்த திருத்தம் அரசமைப்பு ரீதியாக தடை செய்யப்பட்ட பாகுபாட்டை பின்பற்றுவதுபோல உள்ளது. சமத்துவத்தின் ஆன்மாவை இது தாக்குவதாக உள்ளது. இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட 50 வரம்பை மீறுவது, மேலும் பல சிக்கலுக்கு வழிவகுக்கும்," என தெரிவித்துள்ளார்.
  • பின்குறிப்பு;-
  • கல்வியையும் வேலைவாய்ப்பையும் அளிக்காத அரசு மக்கள் விரோத அரசு. ஆக இந்த மக்கள் விரோத அரசால் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு பயன் இல்லை என்பதனை புரிய வைக்க வேண்டியது இடதுசாரி சிந்தனையாளர்களின் வேலை என்று நினைக்கிறேன் தோழர்களே....நமது நாட்டில் உலகமய மாக்கலுக்கு பிறகு கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு எல்லாம் தனியார் மயமாகி இன்று பொதுத்துறை நிறுவனங்களிலே வேலைகுறைப்பு ஏன் இராணுவமே தனியார் மயமாகி விட்டபின் வேலை வாய்பென்பதே எட்டாகனியாகிவிட்டது இந்த ஆட்சியாளர்களால். அப்படி இருக்கும் பொழுது இந்த தீர்பானது மக்களுகிடையில் முரண்பாடுகளை வளர்பதும் இல்லாத வேலை வாய்ப்புக்காக மக்களிடையே தேவையற்ற முரண்பாட்டை தூண்டி விடும் வேலையை தவிர வேறொன்றும் இல்லை என்பேன்.
  • மேலும் எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை வாய்ப்பு என்ற முழக்கதின் கீழ் மக்களை திரட்டி உழைக்கும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யாத அரசை அம்பலப்படுத்தி மக்களை திரட்ட வேண்டும். நமக்கான அரசானது அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்ற இலட்சியம் கொண்ட அரசாக இருக்க வேண்டும்.

10 percent quota for economically weaker sections (EWS) in public jobs, public and private education institutes in 3:2 split verdict.

 இட ஒதுக்கீடு என்றாலே தவறு என்ற மனநிலை சமீபகாலமாக மேலோங்கி வருகிறது. இட ஒதுக்கீடு எதற்காக கொண்டு வந்தார்கள், அவற்றால் என்ன பயன், இட ஒதுக்கீட்டால் என்ன மாற்றம் என பேசினால் அதற்கான பதிவு நீண்டு கொண்டே செல்லும். சமீபத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் 10 % இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டது.

2017-ல் 10-வகுப்பு எழுதிய மாணவர்களின் அடிப்படையில் வகுப்பு வாரியாக பார்க்கும் பொழுது ஓசி பிரிவினர் 3 சதவீதம், பிசி பிரிவினர் 37 சதவீதம், பிசி(முஸ்லீம்) 6 சதவீதம், எம்பிசி 27%, எஸ்சி 22%, எஸ்சி(அருந்ததியர்) 3%, எஸ்டி 1 %, எஸ்எஸ் 1 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

தற்பொழுது வரை உள்ள இடஒதுக்கீட்டின் படி, பொது பிரிவினருக்கு 31.00%, பிற்படுத்தப்பட்டோருக்கு 26.50 % , பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.50% , மிகவும் பிறப்படுத்தப்பட்டவர்களுக்கு 20 %, எஸ்.சி-க்கு 15%, எஸ்.சி(அருந்ததியர்) 3%, எஸ்.டி-க்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

பொது பிரிவில் ஒரு பிசி மாணவன் போட்டியிடும் பொழுது பிசி இடஒதுக்கீடு பிரிவில் மற்றொரு மாணவருக்கு வழி பிறக்கிறது. இதில், 3% மட்டுமே உள்ள ஓசி பிரிவினர் பொது பிரிவினருக்கு உண்டான 31% பிரிவில் போட்டியிட முடியவில்லையா என்ற கேள்வி உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் பொழுது அது 3% உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு அதிக பலன் அளிக்கும் வாய்ப்பாக இருப்பது மட்டுமல்லாமல், பொது பிரிவில் உள்ள 31%-ல் சதவீத குறைப்பு ஏற்பட வழி வகுக்கும். அது பிற சமூகப் பிரிவைச் சேர்ந்த மாணவருக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும் செயலாகும்.

தமிழகத்தில் பிற பிரிவினருக்கான இடஒதுக்கீடு அங்குள்ளவர்களை விட குறைவாகவே இருக்கிறது. பட்டியலின மக்கள் முன்னேறிய விட்டனர், அவர்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு எனக் கூறுபவர்கள், பணம் கட்டி படிக்க கூடிய தனியார் பள்ளிகளில் அதிகம் எண்ணிக்கையில் படிப்பவர்கள் யார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். ஆக, அதிலிருந்தே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும் என நினைக்கிறோம்.

The Supreme Court on Monday upheld the 10 percent quota for economically weaker sections (EWS) in public jobs, public and private education institutes in 3:2 split verdict. The Supreme Court pronounced the judgement on a batch of pleas challenging the validity of the 103rd Constitution amendment providing 10 percent reservation to EWS persons in admissions and government jobs.

A five-judge Constitution bench headed by Chief Justice Uday Umesh Lalit delivered the verdict in the matter. CJI UU Lalit and Justice Ravindra Bhat struck down the EWS amendment. Justices Dinesh Maheshwari, Bela Trivedi and JB Pardiwala upheld the EWS amendment. The majority bench upheld the 103rd Constitutional amendment.
CJI Lalit dissented with the majority view upholding EWS reservation. The CJI held that 10 percent quota for EWS is violative of Constitution. "I have concurred with the view taken by Justice Bhat. The decision stands at 3:2," said the CJI.
The apex court had on September 27 reserved the verdict on the legal question of whether the EWS quota violated the basic structure of the Constitution after hearing a battery of senior lawyers in the marathon hearing that had lasted for six-and-half-day.
The top court heard as many as 40 petitions and most of the pleas, including the lead one filed by 'Janhit Abhiyan' in 2019, challenged the validity of the Constitution Amendment (103rd) Act 2019.
The Centre, through the 103rd Constitutional Amendment Act, 2019, introduced the provision for EWS reservation in admissions and public services.
The Lok Sabha and the Rajya Sabha cleared the bill on January 8 and 9 in 2019 respectively and it was then signed by then-President Ram Nath Kovind. The EWS quota is over and above the existing 50 percent reservation to SCs, STs, and Other Backward Classes (OBCs).
Questions answered by the five-member bench:
Is the 103rd amendment constitutional in allowing reservation solely on economic criteria?
Is the 103rd amendment constitutional in allowing state government's to enforce reservation in private institutes which do not receive any government aid?
Is the 103rd amendment constitutional in excluding SC, ST, OBC from scope of EWS reservation?
With inputs from PTI

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...