பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் அடங்கிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
"இந்த வழக்கில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் பல்வேறு வாதங்களை முன்வைத்தார்கள். பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று கூறிய சிம்ஹோ கமிஷனின் பரிந்துரைகளை முன்வைத்து வாதாடினார்கள். இருந்தும் தீர்ப்பு எதிராக வந்திருக்கிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோ அதை ஆர்ஜேடி, திமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக ஆகிய கட்சிகள் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தன.
தீர்ப்பு குறித்து
மகாராஷ்டிராவின் முன்னாள் ஐஜி அப்துர் ரஹ்மான்,இந்த முடிவு குறித்து அதிருப்தி தெரிவிக்கும் அவர், "ஓபிசி அல்லது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை ஏற்படும்போதெல்லாம், சரியான தரவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மக்கள்தொகை சதவீதத்தை வழங்கும்படி நீதிமன்றம் கேட்கிறது. 50% வரம்பை மீற முடியாது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான தரவு நம்மிடையே இல்லை. பிறகு எப்படி அவசரகதியில் அந்த பிரிவினருக்காக 10% ஒதுக்கீடு வழங்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்புகிறார்.
உண்மையில் இந்த தீர்ப்பு என்பதே நடுவண் அரசின் அரசியல் விளையாட்டுக்கானதே உண்மையில் எந்த மக்களின் நலனுக்கானவை அல்ல என்று வாதிடுவதை விட... இந்திய அரசியலமைப்பின்படி, பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் 49.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர்.
இந்த வகை இடஒதுக்கீட்டை எதிர்த்து 40 மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை ஜன்ஹித் அபியான் 2019இல் தாக்கல் செய்தார்.இந்த வகை இடஒதுக்கீடு நீடித்தால், சம வாய்ப்புகள் முடிவுக்கு வரும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.
மண்டல் கமிஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டின் அதிகபட்ச வரம்பை 50 சதவீதமாக நிர்ணயித்தது. இந்த ஒதுக்கீடு 50 சதவீத வரம்பை மீறுவதாக EWSக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் வாதிட்டனர்.
இருந்தும் இந்த தீர்பானது நடுவண் அரசின் தேவைக்கான தீர்பாகவே பார்க்க வேண்டும். 2019ல் வேக வேகமாக கொண்டுவரப்பட்ட இந்த சட்ட திருத்தம் வடமாநில மக்களை குறிவைத்தே களமிறக்கப் பட்டுள்ளன என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே வேளையில் மற்ற மாநிலங்களில் உள்ள மக்களை திசைத் திருப்ப இவை பயன்படும் என்பதில் உறுதி.
ஆக நாம் புரிந்துக் கொள்ள "இந்தியாவின் அரசியல் அமைப்பு படி பட்டியல் இன மக்கள், பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, மக்களவை மற்றும் சட்டசபையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும் சட்டப்பிரிவு கொண்டுவரப்பட்டது. இதுவே அரசியல் இடஒதுக்கீடு ஆகும்."இதற்கு முதலில் 10 ஆண்டுகள் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் வாக்குகளை பெற, அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் இதனை அவ்வப்போது நீட்டித்து கொண்டனர். ஆனால், மாநிலங்களவை மற்றும் மாநில சட்டமன்ற கவுன்சில்களில் தனி இடங்கள் என்பது கிடையாது.பின்னர், உள்ளாட்சி தேர்தல்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரோடு, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால், அரசியல் செயல்முறையில் இல்லாத பலரும், அரசியல் அதிகாரம் பெற முடிந்தது. இது இடஒதுக்கீட்டின் சிறப்பான அம்சமாகும். ஆனால், இடஒதுக்கீட்டின் முக்கிய நோக்கங்களை இது நிறைவேற்றவில்லை என்பதே நம் கண் முன் உள்ள நிஜம்".
டாக்டர் ஹரி நார்கே "இடஒதுக்கீடு என்பது மூன்று வகைப்படும். அரசியலில் இடஒதுக்கீடு (தனித் தொகுதிகள்), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு. அரசமைப்புச் சட்டத்தின் 334 பிரிவின்படி, அரசியல் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும்தான் 10 ஆண்டு வரம்பு உள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எந்த வரம்பும் கிடையாது," என்கிறார் பிபிசி மாராட்டி செய்தி பிரிவு..
அதே செய்தியில்-ஆகஸ்ட் 25, 1949 அன்று ஆந்திர மாநில உறுப்பினரான நாகப்பா, 150 ஆண்டுகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இல்லையென்றாலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களின் நிலை உயரும் வரை இது தொடர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு அம்பேத்கர் அளித்த பதில் என்ன தெரியுமா? "தனிப்பட்ட முறையில் நீண்ட காலத்திற்கு இடஒதுக்கீடு முறை வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். தாழ்த்தப்பட்டோருக்கு நீண்ட காலத்திற்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், நான் ஏற்கனவே கூறியதுபோல, 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறை பின்பற்ற இந்த சபை முடிவு செய்துள்ளது. எனினும், 10 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் போதிய முன்னேற்றம் அடையாத நிலையில், காலவரம்பை மேலும் நீட்டிக்க அரசியல் அமைப்பில் வழி செய்திருக்கிறேன்" என்றார்.
ஆக சமூகத்தில் பல்வேறு ஒடுக்குமுறைக்கும் மேலெழ வாய்ப்பே இல்லாதவர்களுக்கு இந்த இடஒதுகீடு மூலம் சற்றேனும் முன்னேற வாய்பளிக்கப் பட்டது. அதில் சிலர் பயன்பெற்றனர் இருந்தும் இன்றும் பெருவாரியான மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டுதான் உள்ளனர் அவர்களுக்கு இந்த இடஒதுக்கீடின் பயன் போய் சேருமுன்னே சமூகத்தில் மேல்நிலையில் அங்கம் வகிக்கும் எல்லா பிற்போக்குதனங்களையும் தூக்கி பிடிக்கும் இந்த மதவாத மேலடுக்கு சாதிகளுக்கு இட ஒதுக்கீடு என்பது மக்களை ஏய்க்கும் வேலையே....
நமது நீதிபதிகளின் விளக்கவுரை கீழே;-
- "இட ஒதுக்கீடு என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட எந்தவொரு பிரிவினருக்குமான உறுதியான நடவடிக்கை. எனவே, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு என்பது அரசமைப்பை மீறாது.
- பட்டியல் சாதிகள்/பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்கான இட ஒதுக்கீடுகளில் இருந்து விலக்குவது அரசமைப்பு ரீதியாக செல்லுபடியாகும். கிடைக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் 50% கூடுதலாக பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது அரசமைப்புப்படி செல்லுபடியாகும். ஏனெனில் உச்சவரம்பு என்பது நெகிழ்வானது, அது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்," என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி கூறியுள்ளார்.
- நீதிபதி மகேஷ்வரியின் தீர்ப்புடன் ஒத்துப் போன நீதிபதி பெலா திரிவேதி, பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்பின் அவசியமான அம்சமாகும் என்று தெரிவித்துள்ளார்.
- "சட்டம் மக்களின் தேவைகள் குறித்து புரிந்து கொள்கிறது. அதேபோல பொருளாதார ரீதியில் சிலரை ஒதுக்கி வைத்திருப்பது குறித்து தெரிந்துள்ளது. இந்தியாவில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு சம வாய்ப்பை வழங்க பழமையான சாதி அமைப்புதான் இட ஒதுக்கீட்டிற்கு வித்திட்டது என்று சொல்ல முடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்களுக்கு பிறகு அரசமைப்பை மாற்றியமைக்க வழிவகுக்கும் வகையில் இட ஒதுக்கீடுகள் குறித்த மாற்றுப் பார்வை தேவை" என நீதிபதி திரிவேதி தெரிவித்துள்ளார்.
- நீதிபதி பர்டிவாலா, ஒட ஒதுக்கீடு ஒரு இறுதியான முடிவல்ல, ஆனால் சமூக பொருளாதார நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- பெரும்பான்மை தீர்ப்போடு ஒத்துப் போகாத நீதிபதி ரவிந்திர பட், "இந்த திருத்தம் அரசமைப்பு ரீதியாக தடை செய்யப்பட்ட பாகுபாட்டை பின்பற்றுவதுபோல உள்ளது. சமத்துவத்தின் ஆன்மாவை இது தாக்குவதாக உள்ளது. இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட 50 வரம்பை மீறுவது, மேலும் பல சிக்கலுக்கு வழிவகுக்கும்," என தெரிவித்துள்ளார்.
- பின்குறிப்பு;-
- கல்வியையும் வேலைவாய்ப்பையும் அளிக்காத அரசு மக்கள் விரோத அரசு. ஆக இந்த மக்கள் விரோத அரசால் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு பயன் இல்லை என்பதனை புரிய வைக்க வேண்டியது இடதுசாரி சிந்தனையாளர்களின் வேலை என்று நினைக்கிறேன் தோழர்களே....நமது நாட்டில் உலகமய மாக்கலுக்கு பிறகு கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு எல்லாம் தனியார் மயமாகி இன்று பொதுத்துறை நிறுவனங்களிலே வேலைகுறைப்பு ஏன் இராணுவமே தனியார் மயமாகி விட்டபின் வேலை வாய்பென்பதே எட்டாகனியாகிவிட்டது இந்த ஆட்சியாளர்களால். அப்படி இருக்கும் பொழுது இந்த தீர்பானது மக்களுகிடையில் முரண்பாடுகளை வளர்பதும் இல்லாத வேலை வாய்ப்புக்காக மக்களிடையே தேவையற்ற முரண்பாட்டை தூண்டி விடும் வேலையை தவிர வேறொன்றும் இல்லை என்பேன்.
- மேலும் எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை வாய்ப்பு என்ற முழக்கதின் கீழ் மக்களை திரட்டி உழைக்கும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யாத அரசை அம்பலப்படுத்தி மக்களை திரட்ட வேண்டும். நமக்கான அரசானது அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்ற இலட்சியம் கொண்ட அரசாக இருக்க வேண்டும்.
நீங்கள் சொல்வது போல் மக்களுக்குள் முரண்களை உண்டாக்கவே இந்த EWS. மேலும் இடஒதுக்கீட்டின் பலன்கள் போதிய அளவிற்கு oppressed caste மக்களுக்கு சென்று சேரவில்லை என்பது தான் நிஜம்....
ReplyDeleteThanks comrade
Delete