இட ஒதுக்கீடு என்றாலே தவறு என்ற மனநிலை சமீபகாலமாக மேலோங்கி வருகிறது. இட ஒதுக்கீடு எதற்காக கொண்டு வந்தார்கள், அவற்றால் என்ன பயன், இட ஒதுக்கீட்டால் என்ன மாற்றம் என பேசினால் அதற்கான பதிவு நீண்டு கொண்டே செல்லும். சமீபத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் 10 % இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டது.
2017-ல் 10-வகுப்பு எழுதிய மாணவர்களின் அடிப்படையில் வகுப்பு வாரியாக பார்க்கும் பொழுது ஓசி பிரிவினர் 3 சதவீதம், பிசி பிரிவினர் 37 சதவீதம், பிசி(முஸ்லீம்) 6 சதவீதம், எம்பிசி 27%, எஸ்சி 22%, எஸ்சி(அருந்ததியர்) 3%, எஸ்டி 1 %, எஸ்எஸ் 1 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.
தற்பொழுது வரை உள்ள இடஒதுக்கீட்டின் படி, பொது பிரிவினருக்கு 31.00%, பிற்படுத்தப்பட்டோருக்கு 26.50 % , பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.50% , மிகவும் பிறப்படுத்தப்பட்டவர்களுக்கு 20 %, எஸ்.சி-க்கு 15%, எஸ்.சி(அருந்ததியர்) 3%, எஸ்.டி-க்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
பொது பிரிவில் ஒரு பிசி மாணவன் போட்டியிடும் பொழுது பிசி இடஒதுக்கீடு பிரிவில் மற்றொரு மாணவருக்கு வழி பிறக்கிறது. இதில், 3% மட்டுமே உள்ள ஓசி பிரிவினர் பொது பிரிவினருக்கு உண்டான 31% பிரிவில் போட்டியிட முடியவில்லையா என்ற கேள்வி உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் பொழுது அது 3% உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு அதிக பலன் அளிக்கும் வாய்ப்பாக இருப்பது மட்டுமல்லாமல், பொது பிரிவில் உள்ள 31%-ல் சதவீத குறைப்பு ஏற்பட வழி வகுக்கும். அது பிற சமூகப் பிரிவைச் சேர்ந்த மாணவருக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும் செயலாகும்.
தமிழகத்தில் பிற பிரிவினருக்கான இடஒதுக்கீடு அங்குள்ளவர்களை விட குறைவாகவே இருக்கிறது. பட்டியலின மக்கள் முன்னேறிய விட்டனர், அவர்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு எனக் கூறுபவர்கள், பணம் கட்டி படிக்க கூடிய தனியார் பள்ளிகளில் அதிகம் எண்ணிக்கையில் படிப்பவர்கள் யார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். ஆக, அதிலிருந்தே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும் என நினைக்கிறோம்.
The Supreme Court on Monday upheld the 10 percent quota for economically weaker sections (EWS) in public jobs, public and private education institutes in 3:2 split verdict. The Supreme Court pronounced the judgement on a batch of pleas challenging the validity of the 103rd Constitution amendment providing 10 percent reservation to EWS persons in admissions and government jobs.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ஏதோ பிராமணர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவதாகத் தவறான தகவலைப் பரப்புகிறது திமுக. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் – 67%, பட்டியலினத்தோர் – 18%, மலைவாழ் மக்கள் – 1% போக மீதி இருக்கும் 14% மக்களுக்கானது இது பொருந்தும்.
உண்மை என்ன ?
அப்பதிவில், தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், மலைவாழ் மக்கள் இத்தனை சதவீதத்தினர் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளதின் உண்மைத் தன்மையினை கண்டறிய முயன்றோம். பல ஆண்டுகளாக சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பாஜகவை சார்ந்த செல்வகுமார் குறிப்பிடுவது போல பிரிவு வாரியாக மக்கள்தொகை குறித்து எந்த அதிகாரப்பூர்வ விவரங்களோ தரவுகளோ இல்லை.
மேலும், தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 26.5 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 20 சதவீதமும், பட்டியல் பிரிவினருக்கு 18 சதவீதமும் (SC 15% + SCA 3% = 18%), பட்டியல் பழங்குடியினருக்கு 1 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 69 சதவீதம் இட ஒதுக்கீடு முறையினை கொண்டுள்ளது. மீதமுள்ள 31 சதவீதம் பொதுப் பிரிவாகும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குக் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அரசமைப்பு திருத்தச் சட்டத்தை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு 2019ம் ஆண்டு ஜனவரியில் கொண்டுவந்தது. இதன்படி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 15 மற்றும் 16-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு சில விதிமுறைகளை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. முதலாவதாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் இடஒதுக்கீடு கோரும் மாணவர் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளின் கீழ் இடஒதுக்கீட்டினை பெறாதவராக இருக்க வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி சொந்தமாக 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது. சொந்தமாக வீடு இருப்பின் 1000 சதுர அடிக்குள்ளாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
செல்வகுமார் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் தமிழ்நாட்டில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுமாயின் 50க்கும் மேற்பட்ட சாதிகள் பயன்பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ள சாதிகளில் ரெட்டியார், பாண்டிய வேளாளர் ஆகியோர் தற்போது பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், கொங்கு செட்டியார் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும் இடஒதுக்கீட்டினை பெற்று வருகின்றனர். ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டினை பெறத் தகுதியானவர்கள் கிடையாது என்பது தெளிவாகிறது.
முடிவு :
நம் தேடலில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினால் 50க்கும் மேற்பட்ட சாதிகள் பயன் அடைவர் என குறிப்பிடப்பட்டிருப்பதில், சில ஜாதிகள் தற்போதே பிசி மற்றும் எம்பிசி பிரிவுகளில் இடஒதுக்கீட்டினை பெறுகின்றனர்.
பல ஆண்டுகளாக சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த செல்வகுமார் குறிப்பிட்டிருக்கும் மக்கள் தொகை பற்றிய தகவலானது ஆதாரமற்ற தகவல் என்பதை அறிய முடிகிறது.
No comments:
Post a Comment