மூவர்ண கொடியை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றி விட்டால் மக்கள் பிரச்சினை தீர்ந்து விடுமா?
தேசியக்கொடியை DPயில் வை.
ஒவ்வொரு வீட்டிலும் கொடியை பறக்க விடு.
இவை என்ன வகையான கோசங்கள்!!!
75 ஆண்டுகள் ஆகிவிட்டதாம் நாடு சுதந்திரம் அடைந்து.
ஆனால்
உண்மையில் இந்நாட்டில் இன்றுவரை மக்கள் வாழ்வதற்கு வழிவகைதான் இல்லை (இந்தி சேனல்களை காது கொடுத்துகக் கூட கேட்க முடியாத ஆட்சியாளர்களின் பஜனை) எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டு பறிக்கப் பட்டு இன்னல்பட்டுக் கொண்டுள்ள மக்கள் ஒருபுறம் உலகமய தனியார்மயத்தால் நாட்டையே கொள்ளை அடிக்கும் கும்பல் இன்னொறுபுறம். வகை வகையான திட்டங்களால் அடிதட்டு மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
படிக்க பள்ளி இல்லை அதுவும் தனியாரிடம்
படித்து விட்டாலும் வேலையில்லை அதுவும் தனியாரிடம்
பள்ளியில்லை கல்வியில்லை ஏன் வேலையும் இல்லை பின் மருத்துவமும் தனியாரிடம் இப்படி எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்து விட்டு மக்கள் மீது வரி போட்டு சுரண்டுவதை மட்டும் மறப்பதில்லை.
அதனை பேசாத தேசிய கொடி பூஜாரிகளாக்கட்டும் அதனை எதிர்க்கும் கருப்பு கொடி ஏமாற்று பேர் வழிகளாகட்டும் அவர்கள் இந்த ஆட்சி அதிகாரத்தை கட்டிக்காக்க தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே முனைகின்றனர்.
உண்மையில் இந்த ஆட்சி அதிகாரம் என்பதே முதலாளிகளின் சேவைபுரிவதுதான் அதில் எந்த கட்சியும் விதிவிகல்ல… ஆக இவர்கள் பெரும்பான்மை உழைக்கும் அடிதட்டு ஏழை எளிய மக்களுக்கானவர்கள் இல்லை இந்த ஓட்டரசியல் பச்சோந்திகள் தங்களின் தேவைக்காக யாரையும் பலி கொடுக்க தயங்குவதில்லை இவைதான் 75 ஆண்டுகால இந்திய ஜனநாயகம்.
உண்மையான ஒடுக்கப் பட்ட மக்களின் ஜனநாயகம் இங்கில்லை ஆக அதற்க்கான போராட்டம் மட்டுமே மக்களை இந்த ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்கும் உழைக்கும் மக்களுக்கான அரசால் மட்டுமே அவை சாத்தியம்.
இதை கண்டு ஒரு தோழர் தந்து வாட்சாப் குழுவிலிருந்து நீக்க சொன்னார்
[7:31 am, 14/08/2022] kravichandran00@gmail com: தோழர் வணக்கம்!
இதுபோன்ற அரசியல் பதிவுகளை இங்கு பதிவிடக் கூடாது. கட்சி கட்டுவதில் உள்ள பிரச்சனைகளை பேசுவதற்காக மட்டுமே இக்குழு. அரசியல் பதிவுகள் அனைத்தும் தமிழகப் புரட்சி குழுவில் பதிவிடலாம். இக்குழுவில் உள்ள 87 தோழர்களும் அரசியல் குழுவிலும் இருப்பவர்களே. எனவே அரசியல் பதிவுகள் மீண்டும் இங்குத் தேவையில்லை. இப்பதிவை டெலிட் செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
[7:43 am, 14/08/2022] CP: நன்றி தோழர் நீக்கி விட்டேன். அரசியல் என்றால் என்ன தோழர் கொஞ்சம் விளக்கி விட்டல் நானும் புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் தோழர்
No comments:
Post a Comment