நேற்று எங்கள் ஊரில் பிஜேபியின் கூட்டம் . பிரஷாந்த் கிஷோர் பாணி பிஜேபி ஆட்சி அமைப்பதற்கான ஓட்டு கேட்டு கர்ஜித்தவை சில ... நீங்களே தெரிந்துக் கொள்ளதான் இந்தப் பதிவு....

"மோடிதான் வரபோறாரூ நீங்கள் தாமரைக்குதான் ஓட்டு போட வேண்டும்" என்று தொடங்கிய கூட்டம்,
மோடி வந்த பின் செய்த சாதனைகளை பட்டியலிட்டனர்.
(1). ஒரே நாடு ஒரே வரி என்று ஜீஎஸ்டி கொண்டு வந்தார்.
( நாட்டு மக்களின் குறுசிறு தொழில்களையும் நாட்டு மக்களின் வாழ்க்கையும் குழி தோண்டி புதைத்ததை எப்படி கெத்தா பேசுகின்றனர்பாருங்கள்).
(2). கருப்பு பணம் இல்லாத இந்தியாவை உருவாக்கியுள்ளார். (வீழ்ந்து போன தொழில்துறை பற்றியோ சுருக்கு பையிலிருந்த பணத்தையும் பறி கொடுத்த அந்த கிராமத்தான் மத்தியிலே பேசுகிறான் பாருங்கள்).
(3). ஊழலே இல்லாத இந்தியாவை உருவாக்கி உள்ளார். (இன்று ஊழல் மட்டுமே அரசியல் பலமாக வாழும் ஒரு கட்சி எவ்வளவு திமிர்தனமாக பேசுது பாருங்கள்).
(4). வாரிசு அரசியலே இல்லாத கட்சி.( அமித் ஷா மகன் என்ன செய்துக் கொண்டுள்ளார் இன்னும் லிஸ்ட் உள்ளது அதை விடுங்கள்).
(5). விலைவாசி உயர்வுக்கான தமிழ அரசை ஒழித்துக் கட்டுவோம்( புரியவில்லை பெட்ரோலிய பொருடகளின் விலை உயர்வால் எல்லாம் உயர்கிறது இந்த உயர்வுக்கு காரணம் நடுவண் அரசு இல்லையோ?).
இது போன்ற மக்களை ஏய்க்கும் பொய்யான தகவல்களை எப்படிதான் பேச முடியுதோ தெரியவில்லை?
என்ன செய்ய கூட்டத்தில் சிலர் சொல்லும் எந்த பார்பனனும் இல்லை எல்லாம் சூத்திர சங்கிகள்தான்....
EWS க்கான 10% ஒதுக்கீடு என்னவென்றே தெரியாமல் கூவிக் கொண்டிருந்தார் பேச்சாளர்...
கேட்க்க காதே கூசியதால் இடத்தை காலி செய்து விட்டேன்.
நான் 2015 ல் இந்த மாவட்ட செயலாளரை ஒரு விவாதத்தில் செ... அடிப்பேன் நா... என்றேன் இன்று பொய்யால் உயர்ந்து ஏய்த்துக் கொண்டுள்ளான்.
இவைதான் மக்களை ஏய்க்கும் ஓட்டு அரசியல் இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு காரணமான ஆட்சிகட்சியை சேர்ந்தவன் சொல்லும் பொய்யை நம்பும் மக்களை கொண்டுதான் இவை செயல்படுகிறது.
இடதுசாரிகள் வர்க்க அரசியல் பேச வேண்டியர்கள் மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டி பேச வேண்டி அரசியலை பேசாமல் ஆம் அவர்கள் கைகொள்ள வேண்டிய திட்டத்தை வழியை மக்களுக்கு போதித்து ஒன்றிணைக்காமையால் இந்த கேடுகெட்ட பொய்யர்கள் முன் நாமும் வாலாக ஓடிக் கொண்டிருப்பதா நீங்களே பேசுங்கள், நமது அரசியல் களத்தில் நாம் எப்பொழுது இறங்குவது.
---------
இங்குள்ள எல்லா பிரச்சினைக்கும் இந்த சமூக அமைப்பே காரணம் என்கிறது மார்க்சிய கண்ணோட்டம்.... இல்லை இல்லை சிறிது மாற்றத்தை கொண்டு வந்துவிட்டால் எல்லாரும் சுகமாக வாழமுடியும் என்கிறது திருத்தல்வாத சுயநல சீர்திருத்தவாத கண்ணோட்டம் என்பது.... ஆக இந்த சமூகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க முடியாது என்னும் பொழுது இந்த அமைப்புமுறையை மாற்றினால் ஒழிய தீர்வில்லை என்கிறது மார்க்சியம்.
இங்குள்ள ஒடுக்கும் ஆளும் வர்க்க கருத்துக்கு பின் அணி திரண்டால் இவை நாம் கேட்டுக் கொண்டேதான் இருக்க வேண்டும்... உண்மையான மார்க்சிய சிந்தனையாளன் என்போன் இந்த ஒடுக்குமுறைக்கு காரணமான இந்த அரசை தூக்கி எறிய சொல்லும் மார்க்சியத்தை புரிந்து கொண்டால் மட்டுமே இந்த ஏமாற்று அரசியலிருந்து விடுபட முடியும்....
இன்றைய பிஜேபி திமுக மோதல் நாடகங்கள் மக்களை ஏய்க்கும் வழிவகையே...
படம் எடுக்கவில்லை ஆக செய்தியில் வந்தவற்றை போட்டுள்ளேன்.
May be an image of 8 people and people standing

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...