உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கு (EWS) 10% இட ஒதுக்கீடு பற்றிய தேடுதலே நமது இன்றைய வகுப்பு. இந்த வகுப்பானது முந்தைய 14/11/2022 ந் தொடர்ச்சியே தோழர்களே.
அரசியலமைப்புச் சட்டம் 103ல் 2019ம் ஆண்டில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தம் செல்லும் என்னும் தீர்ப்பானது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும். இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக சாதி தீண்டாமை கொடுமைகளாலும் சமூக ஒடுக்குமுறையாலும் கல்வி மற்றும் அரசுப்பணிகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும். அரசியல் அமைப்புச் சட்டமும் இதையேதான் வலியுறுத்துகிறது. இடஒதுக்கீட்டின் மூலம் சற்று முன்னேறிய மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் கூட சமூக ஒடுக்குமுறையில் இருந்து இன்னமும் முற்றாக விடுபடாத நிலைதான் உள்ளது. ஆனால் சமூக, சாதி ஒடுக்குமுறைக்கு உட்படாத உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானதாக உள்ளது. சட்ட திருத்தம் மற்றும் தீர்பானது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும்.
ஆக மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு என்பதனை அளிக்க முடியாத அரசு எல்லாமே தனியார் மயமாகி போனபிறகு இந்த சட்ட திருத்தம் எதற்காக. இதை கொண்டு வந்தவர்களுக்கு தெரியாதா என்ன?
எல்லோருக்கும் சம வாய்பளிக்கும் கல்வி வேலை வாய்ப்பை வழங்குவதே மக்கள் நல அரசின் அடிப்படையாக இருக்கும். அப்படி என்னும் பொழுது அரசை பற்றி ஒரு மார்க்சியவாதி புரிந்திருந்தால் மட்டுமே இதில் தெளிவாக முடிவெடுக்க முடியும் தோழர்களே.
இட ஒதுக்கீடு பற்றி மார்க்சிய கோட்பாடு என்ன என்று ஒரு தோழர் கேட்டிருந்தார், உண்மையில் வர்க்க சமூகத்தில் ஒடுக்குமுறைக்கான வர்க்கத்திற்க்கு கிடைக்கும் பலனை மறுப்பது எப்படி முற்போக்கு அல்லவோ அதே போல் பொருளாதார நலங்களில் மூழ்கடிப்பதும் பாட்டாளி வர்க்க அரசியல் இல்லை என்று மட்டும் சொல்லிக் கொள்ள விளைகிறேன்.
அதனால் இட ஒதுக்கீடு பற்றி புரிந்து கொள்ள வரலாற்று வழியில் சமூகத்தை சற்று திரும்பி பார்ப்போம் தோழர்களே.
ஒரு சமூக அமைப்பின் தன்மையை அதன் உற்பத்தி முறையே தீர்மானிக்கின்றது. பிரிட்டன் ஆதிக்கத்திற்கு முந்தைய சமூகத்தில் நிலவிய உற்பத்தி முறையைப் பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன அதனைத் தேடுவதை விடுத்து நாம் கி.பி 1600 லிருந்து மார்க்சிய அடிப்படையில் நமது சமூகத்தை புரிந்து கொள்ளும் முயற்சிப்போம்.
உற்பத்தி முறையின் அடிப்படையில் சமூக வரலாற்றை புராதன பொது உடைமை சமூகம் அடிமை உடைமை சமூகம் நில உடைமை சமூகம் முதலாளிய சமூகம் மற்றும் பொதுவுடமை சமூகம் என்பர். முதலாளித்துவத்திற்கும் பொதுவுடமைக்கும் கடந்து செல்லும் இடைப்பட்ட காலத்தை சோசலிச சமூகம் என்பர். இது அனைத்து நாடுகளுக்கும் தழுவிய பொது தன்மையாகும். இந்த பொதுத்தன்மை ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்டின் தனித்தன்மையுடன் வெளிப்படும். அய்ரோப்பிய பகுதியில் தோன்றிய அடிமை முறையும் நிலவுடைமை முறையும் அப்படியே இந்திய பகுதிகளுக்கு பொருத்திப் பார்ப்பது இயந்திர வகைப்பட்டதே.
இந்தியப் பகுதிகளின் தனித்தன்மையை புரிந்து கொள்ளுதல் உற்பத்தி முறையின் விளக்கத்துக்கான பொதுத்தன்மை விட்டுவிடுதல் அல்ல.
கி.பி 1600 ன் இறுதி கட்டத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி தொடங்கப்பட்டது. அதன் பிறகு உற்பத்தியிலும் உற்பத்தி முறையிலும் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி தேடுவது நமது நோக்கமாகும்.
முதல் 100 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கம்பெனியானது நான்கு விதமான கட்டத்தைக் கடந்ததாக கோ கேசவன் அவர்கள் சொல்கிறார்.
1).அரசுக்கு உட்பட்டு இருத்தல்
2. உள்நாட்டு அரசியலுக்கு இடையிலான மோதலில் சமதளத்தில் நிற்றல்.
3). மோதலில் ஒரு சார்புகளை எடுத்தல்.
4). அரசியல் அதிகாரத்தை கையில் எடுப்பதற்கான முதற்கட்டத்தை அடைதல்.
இவ்வாறு தன்னை வளர்த்துக் கொண்ட பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியானது வியாபாரத்திலிருந்து 1757 இல் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது.
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் அது தீவிரம் காட்டியது இரண்டு முக்கிய பணிகளில் ஆகும்.
1). அரசியல் அதிகாரத்தளத்தை விரிவுபடுத்துதல்
2). ஆளுகைக்கு உட்பட்டு பகுதியில் நில உற்பத்தி முறையில் மாற்றம் கொண்டு வருதல்.
இந்த மாற்றமானது பிரிட்டனின் வணிக மூலதன நோக்கில் கொணரப்பட்டவையே.
1). தனக்குத் தேவையான பொருட்களை விளைவிக்கும் விவசாய பண்ணையாக இந்திய பகுதியை மாற்றியது.
2).தான் கொண்டு வந்து நிற்கும் பொருள்களை வாங்கும் சக்தி கொண்ட புதிய வர்க்கங்களை படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
3). உபரி உழைப்பை அபகரிக்க வேண்டும்.
விவசாயத்தில் புகுத்திய மாற்றங்களானது உற்பத்திசக்திகளிடையே ஏற்படுத்திய மாற்றங்களுக்கேற்ப புதிய வகை உற்பத்தி உறவுகளும் ஏற்பட்டன.
மேற்கூறிய விவசாய மாற்றங்களால் ஏற்பட்ட விளைவுகளை காண்போம்.
1).பிரிட்டன் ஆலைகளுக்கான விவசாயப் பண்ணையாக இந்திய பகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.
2).பிரிட்டன் உற்பத்தி பொருள்களுக்கான குப்பைத் தொட்டியாக இந்தியப் பகுதிகள் சீரமைக்கப்பட்டன.
3).அபகரிக்கப்பட்ட உபரி உற்பத்தி இரண்டு விதங்களில் பயன்பட்டது ஒன்று பிரிட்டனின் ஏற்பட்ட தொழில் வளர்ச்சிக்குரிய மூலதனமாக பயன்பட்டது இரண்டு இந்திய பகுதிகளை மேலும் சுருண்டுவதற்குரிய நிதி ஆதாரமாக பயன்பட்டது.
4). இந்தியப் பகுதிகளின் மன்னர்கள் பாளையக்காரர்கள் வட்டிக்கடைக்காரர்கள் தரகு வணிகர்கள் ஆகியது இருப்பு மூலதனம் நில உற்பத்தியில் திருப்பி விடப்பட்டது.
5). இவை ஒரு புதிய வகை நில உடமை முறையை தோற்றுவித்தது.
இவ்வாறாக பிரிட்டன் வணிக நிறுவனம் கொணர்ந்த உற்பத்தி முறை மாற்றத்துக்கு ஏற்ப அதன் அரசு நிர்வாக முறையை மாற்ற வேண்டிய தேவைப்பட்டது.
அதற்காக சில சீர்திருத்தங்களை அதிகாரத்தில் கொண்டு வந்தது. நவீன கல்வி முறையை புகுத்தியது தனது நிர்வாக தேவைகளுக்காகவும் அரசியல் தேவைகளுக்காகவும் பண்பாட்டு தேவைக்காகும் புதிய கல்வி முறை இந்திய பகுதியில் புகுத்தப்பட்டது.
இந்தக் கல்வி முறையால் உற்பத்தியிலும் ஆட்சியிலும் கொணர்ந்த சீர்திருத்ததின் மூலமாக ஏற்பட்ட புதிய சமூக வர்க்கங்களையும் அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மையும் தெரிந்து கொண்டால் மட்டுமே நமது இன்றைய தேடுதலுக்கான சில காட்சிகள் தெளிவாக்க முடியும் என்று நினைக்கின்றேன்.
இந்த வணிக நிறுவன ஆட்சிக்காலத்தில் தான் தரக முதலாளிகள் வர்க்கம் உருவெடுத்தது இப்போது நில உடமை முறை மாற்றத்தால் ஏற்பட்ட வர்க்கங்களை காண்போம்.
அ. ஜமீந்தார்கள் இவர்கள் ஜமீன்தாரி முறையின் விலை பொருள்கள்ள ஆவர்.
ஆ. குத்தகைதாரர்கள் - இவர்கள் ஜமிதாரி முறையின் துணைவிளைப் பொருள்கள்.
இ. நில உடைமையாளர்கள் - இவர்கள் முற்றிலும் புதிய வர்க்கமாக உருவானவர்கள் .
ஈ. வட்டி கடைக்காரர்கள் - ஏகாதிபத்தியத்திற்கான உற்பத்தி முறை உருவாக்கிய சமூக ஒட்டுண்ணிகளுள் இவர்களுக்கு முதன்மையான பங்கு உண்டு.
உ. கற்றறிந்த நடுத்தர வர்க்கம் - இவர்கள் நவீன கல்வி முறையின் விலைப் பொருட்கள் ஆவர்.
மிகச் சிறுபான்மை அயல் நாட்டினர் பெரும்பான்மையான சுதேசிகளை ஆளுமை செய்யும் காலனி முறையிலான அரசாங்கம் உள்நாட்டுக்குடிகளின் ஆதரவை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. வட மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு சின்ன சிறிய தீவு தெற்காசியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஆட்சி செய்ய வேண்டுமெனில் அரசுக்கும் அதன் குடிகள் சிலருக்கும் இடையே இணக்கமான உடன்பாடு இன்றி நடைபெறாது அது அவசியமாகும் அதிக குழுவில் அனைத்துக் கூட்டாளிகள் எனப்படுவர் இவர்களது செயல்கள் பிரிட்டன் அரசின் நலங்களுக்காக மட்டுமே இருக்கும்.
1830 உங்களில் மெக்காலே அவர்களால் கொண்டுவரப்பட்ட நவீன கல்வி முறையானது அடிமை முறை புகுத்தப்பட்டு ஏகாதிபத்திய நான் சார்ந்தே சிந்திக்க வகைப்பட்டவர்களை உருவாக்கியது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தன் நிர்வாக வசதிக்காகவும் ஆதிக்க நலனுக்காகவும் ஆங்கிலக் கல்வியை 1835 மார்ச் 7 ம் நாள் அறிமுகப்படுத்தி போது மெக்காலே சொன்னதுதான் "இந்தியர்கள் அனைவரும் தோற்றத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருந்தாலும் அவர்கள் உள்ளத்தாலும் உணர்வாளும் உளவியல் உருவாக்கத்தாலும் தங்களை ஆங்கிலேயர்கள் போல் உணர செய்ய வேண்டும் "என்று .
1857 பிரிட்டிஷ் சாருக்கு எதிரான கலகங்கள் போலியாக பல்வேறு சீர்திருத்தங்களை கொணர செய்தது
.
தன் ஆட்சியின் மீது ஏற்படும் எதிர்ப்புகளையும் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு பாராளுமன்ற வடிவங்களுக்கு உட்பட்டு நெறிப்படுத்த வேண்டியது அதன் அரசியல் அவசியமாக தெரிந்தது. 1857 கிளர்ச்சிக்கு பிறகு ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக நீண்ட கால அடிப்படையில் உடனடி செயல் தந்திரங்களை சில இங்கே பரப்பப்பட்டது.
1860 முதல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கல்வி நவீன பொருளாதாரம் நவீன அரசியல் நிறுவனங்களாகியவற்றின் முதற்பயனை பிராமணர்களே நுகர்ந்தனர். இங்கு அதற்கு முன் பிராமண நிலப் பிரபுத்துவமும் அதிகாரத்துவமும் இருந்தது . இந்த பிராமண குடும்பங்கள் வேளாளர் நிலப்பிரப்புத்துவத்துடன் முரண்பாடு கொண்டிருந்தன. பிரிட்டிஷாரின் நவீன கல்வி பிராமணர்கள் அடுத்த நிலையில் விரைவாக வேளாளர் பெற்று காலனி அரசு அதிகாரத்தின் இளைய பங்குதாரர்களாக ஆவதில் பிராமணர்களுடன் முரண்பட்டனர்.ஒருபுறம் அரசு அதிகாரத்திற்கு போட்டி என்றால் இன்னொறுபுறம் புதிய நிலவுடையில் வியபாரத்தில் ஆங்கிலேயனின் தேவைகள் பூர்த்தி செய்யும் கூட்டம் உருவானது. இதில் பெருவாரியான கூட்டம் அல்லல் பட்டு கொண்டுதான் இருந்தது அவை போராடிக் கொண்டும் தன்னால் இயன்றதை செய்துக் கொண்டும் இருந்தது. அந்த பெருபான்மை மக்களை குறிவைத்தே பல சீர்திருத்தங்கள் கொணரப்பட்டது அதில் ஒன்றுதான் இட ஒதுக்கீடு. அவை கல்விஅரசியல் பொருளாதார நலங்களுக்காக கொண்டு வரப்பட்டாலும் கொண்டு வரப்பட்ட நோக்கம் இன்றும் நிறைவேறயில்லை உலக மயமாக்களால் கல்வியை தரவேண்டிய அரசு தனியாருக்கு குத்தகை கொடுத்து விட்டது. ஒன்னொருபுறம் இந்த 10% ஒதுக்கீடு என்னத்த சொல்ல?
இறுதியாக
பணப்பயிர் பொருளாதாரத்தின் விளைவாக சில ஜாதிகள் பணக்கார விவசாயிகள் தரகு வணிகர் வட்டி முதலாளி ஆலை முதலாளி ஆகி வர்க்கங்களாய் தோன்றினர். ஒரே சாதிக்குள் இருந்த இந்த சிறுபான்மையிரே இவ்வாறு புதிய வர்க்கமாக உருவெடுத்தனர். இருந்தும் இந்த புதிய வர்க்கம் தத்தம் பழைய ஜாதி அடையாளத்தை இழந்துவிடவில்லை. அதற்கு மாறாக ஜாதி உள்ள பெரும்பான்மையான மக்களின் பலத்துடன் தம் புதிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அன்று படித்த இளைஞர்களின் நலன்களை முன்னிறுத்தப்பட்டு பிராமணர் அல்லாத நலன் என்று பொதுவாக அடையாளப்படுத்தப்பட்டது ஏகாதிபத்திய நலம் சார்ந்தது.அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பில் காலணிய அரச அதிகாரத்தை எதிர்க்காமல் தம் நலன்களோடு உடனடியாக முரண் கொள்கிற பிராமண சக்தியோடு மட்டுமே முரண் கொள்ளும் போக்காகும். இத்தகைய எதிர்ப்பை காலணி ஆதிக்க ஆதரவு என்று பருந்தபட்ட அமைப்புக்குறிக்குள் காண வேண்டும்.
இந்த ஜாதிகளில் தோன்றிய புதிய வர்க்க நிலையானது அதிகாரிகளும் முதலாளிகளும் வணிகர்களும் தத்துவக்குரிய நலன்களை அடைந்து கொள்வதில் சாதியின் எல்லா மக்களையும் பயன்படுத்திக் கொள்ளும் போக்கே பிரதானமாக உள்ளது.
இந்த சூழலில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் அடிநிலை மக்களுக்கு அந்த ஜாதியில் உள்ள மேல்நிலை மக்களே தடையாக உள்ளனர்.
இவ்விடத்தில் தான் பல்வேறு சாதிகளில் உள்ள அடிநிலை மக்கள் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உருவாக்கக் கூடிய வர்க்க அமைப்புகளை கட்டுதல் தவிர்க்கப்பட இயலாதவையாகும்.
இந்த விதத்தில் மேல் ஜாதிக்குள் இருக்கும் சிறுபான்மையாக இருக்கும் அடிநிலை மக்களும் கீழ் சாதியில் இருக்கும் பெரும்பான்மையினருக்கும் அடிநிலை மக்களும் ஒருங்கிணைந்து வர்க்க அமைப்புகளை கட்ட வேண்டும்.
ஒரே ஜாதிக்குள் இருக்கும் முதலாளியை அதிகாரியை, முதலாளியாகவும் அதிகாரியாக பார்க்காமல் தன் ஜாதிக்காரனாக மட்டும் பார்க்கும்படி பாமர மக்கள் பழக்கப்படும் வரையில் வர்க்க சமுதாயத்தின் அடிப்படையை புரிந்து கொள்வது அரிதே.
பயன்பட்ட நூல்கள் கோ.கேசனின் இந்திய தேசியத்தின் உருவாக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கும் பொதுவுடமையும்.
No comments:
Post a Comment