பெரு வெடிப்பு (Big-Bang) எனப்படுகின்றது

 பெருவெடிப்பு என்பது அண்டம்(GALAXY)  எவ்வாறு உருவானது என்பதை பற்றியும் கூறுகிறது. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு  என்ற ஒரு முறையின் அடிப்படையிலும் அண்டவியற்கொள்கையின் அடிப்படையிலும்   பெறு வெடிப்பை விளக்குகின்றனர். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வான்கணிப்பாளர் ஜார்ஐஸ் லெம்டையர்  விரிவடையும் பிரபஞ்சம் பெருவெடிப்பால் உருவானது என்று கூறினார். பெருவெடிப்பின் போது 4 மில்லியன் ஆண்டகளுக்கு முன்பு அதிக அடர்த்தி கொண்ட தீப்பிழம்பாக இருந்திருக்கலாம் அந்த தீப்பிழ்பே  பிறகு விரிவடைய தொடங்கியது அதுவே பெருவெடிப்பு என்று அவர் கூறுகிறார்.

இந்த பெரு வெடிப்பிற்கான பொருள் என்னவென்றால் இந்த ஒட்டுமொத்த அண்டமும் ஒரு  ஒரு சிறய துகளில் இருந்து விரிவடைந்துள்ளது என்பதாகும். அதில் இருந்த மூலக்கூறு காரணமாகவே இந்த ஒட்டுமொத்த  பிரபஞ்சமும்  உருவானது .

இந்த பெரு வெடிப்பு 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு புள்ளியிலிருந்து ஒரு பிரஞ்சமாக விரிவடைந்தது இருக்கலாம்  என்று அறிவியளாலர்கள் குறிப்பிடுகின்றனர் நமது பிரபஞ்சம் உருவான பொழுது  ஒரு வெளிச்சம் தோன்றியது அதுவே  இன்று வரை நாம் பார்க்கிறோம் என்று கூறுகிறார்கள் . குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த வெடிப்பு ஒரு சிறிய புள்ளியிலிருந்து உருவாகி  விரிவடைந்து விரிவடைந்து ஒரு மிக பெரிய பிரபஞ்சத்த்தை உருவாக்கியுள்ளது .


பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்டவெளியில் உள்ள பொருள்கள் அனைத்தும் 12 முதல்14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான, தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வளிமங்கள் ஆங்காங்கே விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராகப் பரவிக் காணப்படும் நுண்ணலைக் கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெரு வெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப்படுகின்றது.


பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருள்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருள்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை.

கீழ் உள்ள படம்- WMAP ஆல் எடுக்கப்பட்ட அண்ட நுண்ணலைப் பின்புலக் கதிர்வீச்சின் படிமம்


பெருவெடிப்பு தொடங்கியதில் இருந்து அணுக்களும் மற்ற அண்டப் பொருள்களும் எக்காலத்தில் தோற்றம் பெற்றன என்பதைப் பின்வரும் வரிசை குறிக்கின்றது.

  1. வெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றியது.
  2. இரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது.
  3. பிற்பாடு அணுத்துகள்களான குவார்க்குகள் தோன்றின.
  4. அணுத்துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் புரோட்டானும் நியூட்ரானும் தோன்றின.
  5. மூன்று நிமிடங்கள் கழித்து புரோட்டானும் நியூட்ரானும் தம்முடைய வெப்பத்தைத் தணித்ததால் இரண்டும் சேர்ந்து அணுக்கருவை மட்டுமே கொண்ட ஹைட்ரஜனும்ஹீலியமும்இலித்தியமும் உருவாகின.
  6. அதன் பிறகு ஐந்து இலட்சம் ஆண்டுகள் கழித்தே எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால் சிறை பிடிக்கப்பட்டன. அதனால் முறையே ஹைட்ரஜன்ஹீலியம்இலித்தியம் அணுக்கள் உருவாகின.
  7. பிற்பாடு முப்பது கோடி ஆண்டுகள் கழித்தே விண்மீன்களும்விண்மீன் பேரடைகளும் உருவாகின.
  8. இந்நிகழ்வுகள் எல்லாம் நடந்து முடிந்த பின்னரே சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோன்றின. இவை தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து தற்காலமானது ஏறத்தாழ ஐநூறு கோடி ஆண்டுகள் ஆகியுள்ளது.

பெறுவெடிப்பில் முதலில் உருவானது ஹைட்ரஜன் ஆகும். இந்த ஹைட்ரஜன் ஒரு கட்டத்தில் காலியாகி பெரிய நோவாவாக வெடிக்கும். அப்பொழுது அதிக ஆற்றலை வெளிவிடும்  அப்பேதுதான் விண்மீன்கள் உருவாகி  ஈர்ப்பு விசை உருவானது. இந்த விண்மீன் அண்டம் போல்(GALAXIES) பல உருவானது. அதில் ஒன்று தான் நமது விண்மீன் கூட்டம் ஆகும்  இதனை நட்சத்திரம் என்கிறோம்.  இதில் நம்முடையதுதான் பால்வெளி மண்டலமாகும்(MILKY WAY).  இதில் நமது நட்சத்திரம் சூரியன் ஆகும்.  இந்த சூரியன் ஈர்ப்பு விசையால் பல கோள்களை தன்னை சுற்றிவர செய்கிறது.
 குவார்ட்ஸ் துகள்களுக்கு பின்னர் உலகம் உருவானது ஆச்சரியமே . அதற்கு முன்னர்  பெறு வெடிப்பு தானாக வெடித்ததா அல்லது அதற்கு ஒரு உந்து சக்தி கொடுக்கபட்டதா என்பது ஒரு கருத்தாகவே உள்ளது.
     இந்த உலகம் விரிவடைந்தே அதாவது பிரபஞ்சம் விண்வெளியில் விரிந்து செல்லும் என்று நம்பியிருந்த காலத்தில் 20 நூற்றாண்டில் ஐன்ஸ்டீன்  கூறிய சார்பியல் கோட்பாடு அடிப்படையில் ஜெர்மானிய வானியலாளர்  ஜார்ஜஸ் லாமிடர்  பெறு 1927 ல் பெரு வெடிப்பு பற்றிய கருத்துகளை வெளியிட்டார் இது முதலில் கோட்பாடாக பார்க்கபட்ட பிறகு எட்வின் ஹபுள் 1964 ல் காஸ்மிக்  மைக்ரோ வேவ் பேக்ரவுன் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம்  ஒரு எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்(ELECTRO MAGNETIC WAVES) தான் பெரு வெடிப்பு உருவாக காரணமாக இருந்தது என்று கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...