மார்க்சிய அடிபடை கூட தெரியாத ஒருவர் தலைவனாம்

 

மார்க்சியத்தின் அடிப்படை புரிதல் இல்லை தன்னிடம் கேள்வி கேட்போரையெல்லாம் எதிரி என்று கலைப்புவாதி என்றும் சராசரி மக்களின் சபை மொழி அல்லது பொதுவெளியில் எப்படி பேசுவது என்று தெரியாத இது போன்றோர் மக்களிடம் எப்படி நடந்துக் கொள்வர். எந்த பொறுப்பும் இல்லை மக்களை அரசியல் படுத்த இயலாத இவர்கள் ஆளும் வர்க்கத்திடம் பேரம் பேசி வாழும் காலம் சிரமம் இல்லாமல் கழித்திட முற்போக்கு வேசம் வேண்டும் அதற்க்குதான் இத்தனை குதியாட்டம் எங்கே என்னை அம்மணப் படுத்தி விடுவார்களோ என்று பயம்.

உண்மையில் அவரின் ஆட்டம் 2019 ல் தன் அமைபிலிருந்து அம்பலப்பட்டு துறத்தி அடிக்கப் பட்ட பொழுதே முடிந்து விட்டது. அவர் ஏன் எதற்க்கு விரட்டி அடிக்கபட்டார் என்பது நமது ஆராட்சி அல்ல.

தன் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விரட்டி அடிக்கப் பட்ட மனோகரன் தனது சில சீட கோடிகளுடன் தனது பயணத்தை மார்க்சியம் வேடமணித்து ஏமாற்றுவதை கேள்வி கேட்டாலே பாய்ந்து வந்து முத்திரை குத்துகிறார். இவை இவரின் குருநாதரிடமிருந்து பெற்றவை அதனை வேறோரிடத்தில் தேவைப்படும் பொழுது பேசுவோம்.

தான் யாரிடம் பேசினாலும் உங்கள் திட்டம் என்ன என் திட்டம் படித்து பாருங்கள் என்று கடை விரித்தார் கொஞ்சம் காலம். அதை கண்டுக் கொள்ளாமல் போகவே நாய் சண்டை போடுகிறார் இன்று.

இவரின் திட்டம் என்னிடம் உள்ளது நான் படித்து கேள்வி கேட்டேன். ஏன் இதனை உடைவுகள். நீங்கள்தானே ஏஎம்கே யின் வாரிசு இதை உடை விட்டு அடுத்தவர் மீது பலிப்போடும் உங்களின் செயல் எப்படி பட்டது? என்று சரமாரியாக கேள்வி வைத்தேன் முகநூலில் என்னை பிளாக் செய்து ஓடிவிட்ட புண்ணியவான் இப்பொழுது அவதூறு பேசியுள்ளதாகவும் அவை என்னவென்றும் தோழர்கள் பேசியதோடு அனுப்பியும் வைத்துள்ளனர். அவைதான் கீழே.

இனி தோழர் ரவீந்தரனின் முகநூல் பதிவு:- சிந்தனையை இணைத்துப் பார்க்க வேண்டும்.இத்தகைய கட்சிகளிலுங் கூட, இவர்கள் தொடர்ந்து இருக்க முடியாமல் தங்களுடைய சிந்தனைகளைக் கட்சிகளுக்கு வெளியில் அமைத்துக் கொண்டவர்கள். அதிலே ஃபூக்கோ, கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராக இருக்கும் பொழுதே கூட தன்னை ஒரு நீட்சேயிச கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண் டவர். நீட்சேயிச கருத்தாக்களால் கவரப்பட்ட பொதுவுடைமையாளர் என்பது அதன் அர்த்தம், நீட்சேயின் அதிகாரம் பற்றிய கோட்பாடு, அதிகாரம் சமூகத்தில் இருக்க வேண்டிய நியாயம் போன்றவற்றின் தொடர்ச்சியாக ஃபூக்கோவின் சிந்தனைகளைக் காண வேண்டும். ஃபூக்கோ தன்னுடைய விவாதங்களின் மையமாக, "19-ஆம் நூற்றாண்டினுடைய ஐரோப்பாவிற்கும், 20ஆம் நூற்றாண்டினுடைய ஐரோப்பாவிற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவை வறுமை வாட்டி வதைத்தது. ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவிற்கு வறுமை ஒரு பிரச்சனை இல்லை. அதிகாரம் தான் பிரச்சனையாக இருக்கிறது' என்கிறார். இதனால் பகுத்தறிவு என்கின்ற கோட்பாட்டை முழுவதுமாக ஃபூக்கோ மறுக்கிறார்.இதை இன்றைய இந்திய ஆர் எஸ் எஸ் கோமாளிகள் தேடும் வேத கால இந்தியா போன்றதே பின் நவீனதுவ வாதிகளின் வாதம், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத அரசு இங்கே கருத்து முதல்வாத புதைச் சேற்றில் மக்களை அமிழ செய்வதை மார்க்சியம் செய்யவில்லை, மக்களுக்கான விடுதலை சமத்துவ சமூகத்தை கட்டி எழுப்பினர்.ஒரு சிலர் மட்டுமே உண்டு கொழுத்ததை முடிவுக்கு கொண்டு வந்தனர். எல்லா மக்களும் வாழ வழிவகை செய்தனர், ஏழை எளிய மக்களும் பாதுகாப்புடன் வாழ விழைந்ததை சுரண்டி கொழுத்த ஏகாதிபத்தியம் விடுமா? பொதுவுடமை சமூகம் உலகில் எங்குமே மலரா வண்ணம் அவர்களின் கம்யூனிச விரோத போக்குகளே மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தை எதிர்ப்பது இன்றைய தேவையாக உள்ளது இந்தியா போன்ற பெரும் சந்தையை இழக்க நினைக்குமா ஏகாதிபத்தியம்....அதில் இது போன்ற பலியாடுகள் காணவே செய்யும் என்ன செய்ய இவர்களைஇனி..........இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (மக்கள் யுத்தம் - போல்ஷ்விக்)பத்திரிகை செய்திமார்க்சிய ஆசான் ஏ.எம்.கே.வின் பெயரில் ஏ.எம்.கே.வின் காலனிய இனவியல் பற்றிய நிலைப்பாட்டை திருத்தி வெளியிட்டுள்ள டிராட்ஸ்கியவாதி மனோகரனின் துரோகத்தை முறியடிப்போம்!ஏற்கெனவே ஏ.எம்.கே. உயிருடன் இருந்தபோது அவரது வழிகாட்டலில் எழுதப்பட்டு, எமது அமைப்பில் இன்னும் விவாதத்தில் இருக்கின்ற ‘காலனிய இனவியல்: ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகளும் பாட்டாளி வர்க்க நிலைப்பாடும்’ எனும் வரைவு அறிக்கையின் தலைப்பை ‘காலனிய இனவியல்: ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகளும் பாட்டாளி வர்க்க தேசிய கோட்பாடுகளும்’ என திருத்தி (உள்ளடக்கத்தையும் திருத்தியுள்ளதாக முன்னுரையில் கூறுகிறார்), அதை (பாட்டாளி வர்க்க சமரன் அணி) சமரன் வெளியீட்டகத்தின் பெயரில் வெளியிடுவதாக டிராட்ஸ்கியவாதி மனோகரன் அறிவித்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத, மோசடியான மார்க்சிய விரோத செயல் ஆகும்.முன்பு முகநூலில் “ஆரிய இனக் குழுக்கள் இல்லை என்றோ, திராவிட இனக் குழுக்கள் இல்லை என்றோ சமரன் எங்குமே கூறவில்லை” என ஏ.எம்.கே. நிலைப்பாட்டிற்கு எதிராக எழுதியவர்தான் மனோகரன். ஆரிய இனக்குழு, திராவிட இனக் குழு இருக்கிறது என்று கூறுவதால் இவரும் ஒரு இனவாதி ஆவார். காலனிய இனவியல் பற்றிய ஏ.எம்.கே.வின் நிலைப்பாட்டில் உடன்பாடில்லை என அமைப்பிலும் பொதுவெளியிலும் பேசிய மனோகரன், இன்று டிராட்ஸ்கியவாதத்தால் அம்பலப்பட்டுப் போனதை மூடி மறைக்கவும், மார்க்சியவாதி வேடம் பூணவும் இந்த நூலை சந்தர்ப்பவாதமாக திருத்தி கொண்டுவருகிறார். கோட்பாடற்ற போலியான ஐக்கியம் பேசுகிறார்.ஆரிய இனக் குழுக்கள் - திராவிட இனக் குழுக்கள் உண்டு என்று கூறுவதே ஐரோப்பிய காலனியவாதிகளின் கற்பிதம் என்பதுதான் ஏ.எம்.கே. நிலைப்பாடு ஆகும். இந்த இனவாதத்தில் இருந்து உதித்துள்ள பார்ப்பனிய பாசிசம், கார்ப்பரேட் காவி பாசிசம், பார்ப்பன-பனியா-பார்சி பாசிசம் எனும் தரகு முதலாளிய நிலைப்பாடுகளை எழுதியும் பேசியும் வரும் இனவாதி மனோகரனின் சந்தர்ப்பவாதத்தை இனம் காண்போம் தோழர்களே!ஆசிய உற்பத்தி முறை, மாறா நிலை சமூகம் என்று ஆசான் மார்க்ஸ் கூறியதாலேயே அவரை இயக்க மறுப்பியல்வாதி என மனோகரன் எழுதியுள்ளார். மார்க்ஸ் இயக்க மறுப்பியல்வாதி என்பது ஏ.எம்.கே.வின் கருத்தல்ல. மார்க்ஸ் மீதான இந்த அவதூறை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். ஆசிய உற்பத்தி முறை என்பது பிரிட்டன் பாராளுமன்ற குறிப்புகளிலிருந்து மார்க்ஸ் வந்தடைந்த கருத்தாகும். 1931ல் லெனின் கிராடில் ஸ்டாலின் தலைமையில் கூட்டப்பட்ட அகிலத்தில் ஆசிய உற்பத்தி முறைக்கு வரலாற்றில் எந்த இடமும் இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1939ஆம் ஆண்டு தனது சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் என்ற நூலில் மாவோ பின்வருமாறு கூறுகிறார்: “உலகின் பிற தேசங்கள் பலவற்றை போலவே அதே வழியில் வளர்ந்துகொண்டிருக்கும் சீன மக்கள் (இங்கு நாம் முதன்மையாக ஹான் தேசிய இனத்தை குறிப்பிடுகிறோம்) வர்க்கமற்ற தொல்குடி பொதுவுடமைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் ஊடாக சென்றனர். இத்தொல்குடி சமூகம் அழிந்து வர்க்க சமூகமாக மாற்றம் பெற்றது முதல் இன்றுவரை ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகள் சென்றுவிட்டன. இச் சீன சமூகம் முதலில் அடிமை சமூக வடிவத்தையும், பின்னர் நிலவுடமை சமூகத்தின் வடிவத்தையும் மேற்கொண்டது” என்று கூறுகிறார். இதன் மூலம் மாவோ ஆசிய உற்பத்தி முறையை மறுத்துள்ளார் என அறியலாம். ஆசிய உற்பத்தி முறையை மறுப்பது என்பது மார்க்சியத்தை மறுப்பதாகாது. மார்க்ஸ் கூறிய வரலாற்று பொருள்முதல்வாத வளர்ச்சிக் கட்டங்களை போலவே இந்திய சமூகமும் வளர்ந்து வந்துள்ளது என்று ஏ.எம்.கே. கூறுகிறார். ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு மார்க்சிய ஆசான்கள் யாரும் மார்க்ஸை இயக்க மறுப்பியல்வாதி என்று கூறவில்லை. ஆனால் மனோகரன் இந்த ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு மார்க்ஸை இயக்க மறுப்பாளர் என்று கூறி மார்க்ஸ் மீதும் மார்க்சியத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கிறார். ஏற்கெனவே மனோகரன், ஸ்டாலின் குறுங்குழுவாதி எனவும்; ஸ்டாலின், மாவோ அகிலத்தை கலைத்த கலைப்புவாதிகள் எனவும் கூறியதோடு; லெனினின் சோசலிச கட்டுமானம் பற்றிய நிலைப்பாட்டிற்கு எதிராக ஸ்டாலின் செயல்பட்டார் என்று கூறி லெனினுக்கு எதிராக ஸ்டாலினை நிறுத்தினார்; சீனப் புரட்சிக்கு ஸ்டாலின் தடையாக இருந்தார் என மாவோ கூறியதாக சொல்லி ஸ்டாலினுக்கு எதிராக மாவோவை நிறுத்தினார்; மாவோவால்தான் இந்தியாவில் புரட்சி நடக்கவில்லை என்றார்; இறுதியில் தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என லெனினையே தாக்கினார்; ஏ.எம்.கே. தத்துவ தலைமை இல்லை, நிரூபிக்கப்பட்ட தலைமை இல்லை, அவர் எண்ண முதல்வாத அடிப்படையில் சிறப்புக் கூட்ட அறிக்கையை எழுதினார் என்றெல்லாம் ஏ.எம்.கே.வை தாக்குதல் நடத்தியவர், இப்போது ஏ.எம்.கே.வின் பெயரால் “மார்க்ஸ் இயக்க மறுப்பியல்வாதி”என மார்க்ஸை தாக்குகிறார். மார்க்ஸை மார்க்சியத்துக்கு எதிராக நிறுத்துகிறார். மார்க்சிய ஆசான்களுக்கு எதிராக இன்னொரு மார்க்சிய ஆசான்களை எதிராக நிறுத்துவதையே தனது செயல்தந்திரமாக வைத்திருப்பவர்தான் மனோகரன். இது டிராட்ஸ்கிய வாதிகளின் சந்தர்ப்பவாத, சதித்தனமான அணுகுமுறையாகும்.காலனிய இனவியல் பற்றிய ஆவணம் ஏ.எம்.கே.வின் வரலாற்று சிறப்புமிக்க ஆய்வாகும். ஏ.எம்.கே.வின் இந்த ஆவணத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை ஏ.எம்.கே.வின் சமரன் பத்திரிகையில் ஏற்கெனவே அறிவித்து இருந்தோம். அவ்வாறிருக்க இந்த ஆவணத்தை சந்தர்ப்பவாதமாக வெளியிடும் மனோகரனின் செயல் சதித்தனமான செயலே ஆகும். மேலும் இந்த ஆவணத்தில் வரலாற்று பகுதியை ஒழுங்குபடுத்தி, செழுமைப்படுத்த வேண்டியும். அதே போல் மொழி பகுதியில் கூடுதலான கருத்துகளை சேர்க்கவும் ஏ.எம்.கே. வழிகாட்டியிருந்தார். அவரின் இறுதி காலத்தில் உட்கட்சி போராட்டத்தில் இருந்ததாலும், அவர் மறைந்த முதல் ஓராண்டு முழுவதும் மனோகரனின் டிராட்ஸ்கியவாதத்தை எதிர்த்த போராட்டமாக இருந்தது. இந்த ஆண்டோ கொரோனாவில் கடந்துவிட்டது. ஆகவே, ஏ.எம்.கே. கூறிய திருத்தங்களை திருத்தி வெளியிடலாம் என திட்டமிட்டே சமரனில் அறிவிப்பு வெளிவந்தது. அதன் பிறகும், அதை தனது அமைப்பு பெயரில் வெளியிடும் மனோகரனின் செயல் ஏ.எம்.கே.விற்கு செய்யும் துரோகம் ஆகும். டிராட்ஸ்கிய கருத்துகளை அமைப்பிற்குள் பரப்பியதாலும், அமைப்பை பிளவுபடுத்தியதாலும் அவரும் அவரை ஆதரித்த சிலரும் அமைப்பில் இருந்து அமைப்பின் பெரும்பான்மையினரால் வெளியேற்றப்பட்டனர். இந்த ஆவணத்தின் படைப்பாளி ஏ.எம்.கே.வோ, அவரது நேரடி வழிகாட்டுதலில் எழுதிய தோழரோ திருத்துவதற்கு முன்பே, அதற்கு சம்பந்தமில்லாத, எமது அமைப்பிற்கு யாதொரு தொடர்புமில்லாத டிராட்ஸ்கியவாதி மனோகரன், விவாதத்தில் இருக்கின்ற எமது அமைப்பின் ஆவணத்தை திருத்துவதற்கும், வெளியிடுவதற்கும் அவருக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அவ்வாறு திருத்தியது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் ஆகும்.ஆகவே, மார்க்சிய ஆய்வாளர்களும், புரட்சிகர ஜனநாயக சக்திகளும், டிராட்ஸ்கி மனோகரனின் இந்த அரசியல் ஓட்டாண்டிதனத்தை, மார்க்சிய விரோதமான சதித்தனானமான இந்த செயலை கண்டிக்க வேண்டுகிறோம். மார்க்சிய ஆசான்களின் மீது தாக்குதல் தொடுக்கும் தனிமைப்பட்டுபோன மனோகரனை மார்க்சிய லெனினியத்தை நேசிக்கும் அனைவரையும் அவரின் சதித்தனத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் இனங்காணுமாறு கோருகிறோம்.இங்கணம்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (மக்கள் யுத்தம் - போல்ஷ்விக்)16.11.2020

இதற்க்கு பதிலாக மனோகரன் :-Ravin dran ஒரு ஐக்கிய முன்னணி இல்லாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது....!!!

பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி சர்க்காரில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரும் பங்கேற்பார்கள்...!

அது பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முழு திட்டத்தையும் அமல்படுத்தாது!

அது ஒரு பூர்ஷ்வா ஜனநாயக சர்க்காராகவே இருக்கும்.

ஒடுக்கப்பட்ட நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்புடன் இணைக்கப்படும். இது எல்லா ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்காது!

இதுதான் டிமிட்ரோ முன் வைத்துள்ள பாசிச எதிர்ப்புத் திட்டம்.

இதிலிருந்துதான் பல்வேறு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி, தொழிலாளர் முன்னணி கட்டப்பட வேண்டும்!

இதுதான் மார்க்சிய வழி....!

உமது வழிபற்றி எங்களுக்கு 

எந்த கவலையுமில்லை...!!! 

தோழர் ரவீந்திரன் பதிலாக:- ஒரு ஒன்றுபட்ட கட்சி இல்லாமல், அதாவது பாட்டாளி வர்க்க அமைப்புகளின் பலத்தை வளர்க்காமல், ஐக்கிய முன்னணி உருவானால் அந்த ஐக்கிய முன்னணி யாருடைய பலத்தின் அடிப்படையில் செயல்படும்?

உழைக்கும் வர்க்கங்கள் முதலாளிகளின் வாலாக எடுபிடிகளாகத்தானே செயல்பட முடியும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியானது சுதந்திரப் போராட்டத்தில் முதலாளிகளின் கூட்டோடு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுப்போம் என்று சொல்லி காங்கிரஸ் கட்சியின் வாலாகப் போன வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா? 

அன்று காங்கிரஸ் கட்சியின் கொள்கையைத்தானே கம்யூனிஸ்டு கட்சி பின்பற்றியது. அதுபோல இன்று ஏகாதிபத்தியவாதிகளின் கொள்கையான கீன்சியக் கொள்கையைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமா? நாம் அன்று செய்த அதே தவறை இன்று நாம் செய்ய வேண்டுமா? 

நமக்கென்று சொந்த கொள்கையை நாம் உருவாக்க வேண்டியது அவசியமில்லையா? அத்தகைய கொள்கையை நாம் உரு…இறுதியாக பாசிச ஆட்சிமுறையை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி ஒன்றுபட்ட பலம்வாய்ந்த கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் திரட்டப்பட்ட மக்கள் சக்திதான் என்பதை ஆழமாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் வரலாறு. அத்தகைய சக்திக்கு துணையாக முதலாளித்துவ கட்சிகள் வரலாம், அவர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

இதற்கு மாறாக பலம் வாய்ந்த கம்யூனிஸ்டு கட்சியை முதன்மைப் படுத்தாமல் முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டணி அமைப்பதை முதன்மைபடுத்துவது டிமிட்ரோவின் கொள்கைக்கு எதிரானதாகும். 

shamuga chadersekaran பதில்:- Ravindran  சரியாக சொன்னீர்கள்.‌ஆயினும் முதலாளித்துவ கட்சிகள் பிரதிபலன் எதிரபார்த்தும் காலத்தின் கட்டாயத்தாலும் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையுடன் இணையலாம்.எனவே போராட்ட வடிவங்களில் குறிப்பிட்ட திட்ட ஒருங்கிணைப்பை மேற்கொள்ளாமல் கூட்டணி அமைப்பது பொதுவுடைமைக் கட்சிக்கு நன்மை பயக்காது.

Manokaran:- ரவீந்திரன்...

கட்சி கட்டுவதற்கே 

பூர்ஷ்வா ஜனநாயகம் 

தேவை! உன்னைப் 

போல் கலைப்பு வாதிகள் 

இனம்காணப்பட வேண்டும்!

உங்களது இன்றைய நண்பர்களான அ.கா.ஈஸ்வரன், பழனி சின்னசாமி போன்றவர்கள், அதாவது ஃபிரீலான்சர்கள் கட்சி கட்டப் போகிறார்களா...?

மானக்கேடு! 

உங்களது அண்மைகாலத்துக்கும் முந்தைய நண்பர்கள் கூட பரவாயில்லையே!

முழுக்க நனைந்தும் முக்காடு எதற்கு ரவீந்திரா...?

பாசிசத்தை எதிர்க்காதவன் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமாட்டான்...!

கலைப்பான்...!!!!

 மனப்பாடம்....

அய்யோ கண்ணை கட்டுதே....!!!

பாசிச எதிர்ப்பு என்பது 

மக்களின் அடிப்படை கடமை...

அதை எதிர்ம்துப் 

போராடாவிட்டால்

உயிர்வாழ்வு என்பதே 

இல்லை...!!!

உயிர்வாழும் போராட்டம் 

இல்லாமல்

கட்சி கட்டுவது என்பது

கலைப்புவாதிகளின்

தந்திரம்...!!!

அதுவே ரவீந்திரனின்

செயல் திட்டம்...!!!

தோழரின் கேள்வி:-  Manokaran Karan நீங்கள் சொல்வது. சரி. இங்கு யார் பாசிச வாதி. என்பதுதானே பிரச்சனை. பார்வைகள் பலவிதமாக உள்ளதே இங்கு. பாசிச எதிர்ப்பு காட்ட வெகுமக்களை நாம் இன்னும் முழுமையாக  நெருங்கிடவில்லை. அப்புறம் எப்படி நாடு தழுவிய பாசிச எதிர்ப்பு  மக்கள் போராட்டம் சாத்தியம். மாலெ குழுக்களிடையே கூட இது குறித்து ஒருங்கிணைந்து செயல்படல் இன்றி உள்ளது. குறுங்குழு வாத /திரிபுவாதிகளாக உள்ள எதிர்புரட்சியாளர்கள் அதிகம் அதிகரித்துக்கொண்டே இருப்பது எப்படி பாசிச போராட்டத்துக்கு வழி வகுக்கும்.

 குழுக்களையே பிளவுபடுத்திக்கொண்டிருக்கும் குறுங்குழுவாதிகளுக்கு, மார்க்சிய லெனினியவாதிகளை ஒன்றுபடுத்தி கட்சி கட்ட வேண்டும் என்று சொல்பவர்கள் கலைப்புவாதிகளாகத் தெரிகிறார்கள்.

குறுங்குழுவாதிகள், மார்க்சிய லெனினியவாதிகளை ஒன்றுபடுத்தத் தயாரில்லை. மாறாக பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டுசேரத் துடிக்கிறார்கள். அதன் மூலம் முதலாளிகளிடம் ஒன்றுபட வேகமாகப் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

குறுங்குழுவாதிகள் பாசிசத்திற்கு எதிராக மக்களை திரட்டிடத் தயாரில்லை. மாறாக ஆளும்வர்க்கக் கட்சிகளுக்கு ஓட்டு சேர்க்க இந்த குறுங்குழுவாதிகள் பாடுபடுகிறார்கள்.

 shanmuga chandersekaran:- Manokaran Karan தோழர் முதல் பாராவுக்கு.             நீங்கள் குறிப்பிடும் ஆளுங்கட்சிகளுடன் கூட்டணி என்பது ஏற்கனவே அப்படிப்பட்ட செயல்பாட்டால் CPI..CPM ..சில ML குழுக்கள் மக்களிடமிருந்து விலகி சீட்டுக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டதை அறிந்தும் பேசுவது சரியா. பாட்டாளி வர்க்கம் மட்டுமே பொதுமக்கள் துணையின்றி பாசிசத்தை வீழ்த்தவேண்டும் என்பது தள்ளுபடியாயிற்று. அப்புறம் கருத்து விவாதத்தில் தனிநபர் தாக்குதல் வேண்டாமே.

 Manokaran team:- Shanmugam Chandrasekharan சில தோழர்களின் வேலையே தனி நபர் தாக்குதல் மட்டுமே.காரணம் இந்த சமூகம் மாறக்கூடாது இது தான் அவர்களின் நோக்கம்.

ரவீந்திரன்:- ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர கட்சி இல்லாமலேயே, ஒரு சிறு குழுவாகவே நீடித்துக்கொண்டே பாசிசத்தை வீழ்த்திவிட முடியும் என்று குறுங்குழுவாதிகள் கனவு காண்கிறார்கள். 

இந்த குறுங்குழுவாதிகளால் கனவுகாணத்தான் முடியும். மக்களைத் திரட்டவோ, பாசிசத்தை எதிர்த்துப் போராடி வீழ்த்தவோ முடியாது.

சில முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டு சேர்ந்து பாசிசத்தை வீழ்த்திவிடலாம் என்று இந்த குறுங்குழுவாதிகள் கனவு காண்கிறார்கள். ஆனால் இந்த குறுங்குழுவாதிகளை நம்பியிருக்கும் அணிகளையும், மக்களையும் இந்த முதலாளித்துவ கட்சிகளிடம் அடகு வைக்கத்தான் முடியும், உழைக்கும் மக்களின் தலைமையை நிறுவ முடியாது. பாசிசத்தை வீழ்த்தவும் முடியாது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியே சுதந்திரப் போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கத் தலைமையை நிறுவத் தவறியது வரலாறு. அது காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று, காங்…

manokaran: பலம் வாய்ந்த கட்சி இருந்தால்தான் பாசிசத்தை வெல்ல முடியும் எனபது சின்னக் குழத்தைக்கும் தெரியும்!

இன்று கட்சி இல்லாததால் கட்சி கட்ட வேண்டும் என்பமை யாரும் தடுக்கவில்லை. இந்த கட்சியை கட்டுவதற்கு முதற்படி சிதறுண்ட குழுக்கள் ஜனநாயாகத்தை மீட்க ஒன்றுபடுவதே!

அவ்வாறு ஒன்றுபட்டு போராடிக்கொண்டே தங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்க விவாதத்தை துவங்குவார்கள்!

அதுவே கட்சி கட்டுவதற்கான முதற்படி!

மாறாக பாசிச எதிர்ப்பில் ஒன்றுபடுவதை தடுத்து, கட்சி கட்டுவது என்ற பேரில் குழுக்களை உடைப்பது கலைப்பு வாதம்!

முன் சொன்னது எங்கள் வழி...!

பின் சொன்னது உங்கள் வழி...!

பின்னால் இழுக்கும் ரவீந்திரா

உன் எண்ணம் ஈடேறாது...

நிச்சயம்...!!!

Manokaran: Ravindran நீயும்தானே ஜால்ர போட்ட. இப்போது என்னவோ பூனூல் போட்டுகிட்டு அலையுற...!

அதுதான் அமைப்பின் அரசியல் வழி அதாவது நீ இப்போது சொல்கிறாயே அதே போன்ற குறுங்குழுவாத நிலையை எடுத்ததால்தீன் இந்த நிலை என்று சொல்கிறோம்..!

அமைப்பின் குறுங்குழு வாதத்திற்கு, அன்று  ஏ.எம்.கே வைத்து ஏகமனதாக அமைப்பு ஏற்றுக் கொண்ட அரசியல் வழியே காரணம். அந்த வழியைத்தான் அதை விட கேவலமாக நீ இன்று முன் வைக்கிறாய். குறுங்குழு வாதத்தின் வாகனமே நீதான்.

Manokaran:- மதுரை

ரவீந்திரனின் 

"இலக்கு" பாசிச எதிர்ப்பல்ல...

எதிர்ப்பவர்களை எதிர்க்கும் "இலக்கு"...!!!

Manokaran:- ரவீந்திரன், அ.கா.ஈஸ்வரன், பழனி சின்னசாமி போன்ற மார்க்சிய மந்திரவாதிகளிடம் உஷார்...!!!

Manokaran: சமூக நடைமுறை இன்றி பாட்டாளி வர்க்கம் கட்சி கட்ட முடியுமா...?

அது கரு நிலையில் இருந்தாலும்...!!!

Manokaran: மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு...

உலகமய ஒழிப்பு சமூகநல அரசை மீட்பதே...!!! இதை மறுப்பது பாசிசத்தை பலப்படுத்துவதே..!!! 

Manokaran: ஏகாதிபத்திய பிற்போக்கு சந்தைநல அரசை ஒழித்து, ஏகாதிபத்திய சீர்திருத்த "சமூகநல அரசு" அமைக்க வேண்டும் என்பதை சில குதர்க்கவாதிகள் குற்றம் சொல்கிறார்கள். புதிய ஜனநாயகம் அல்லது சோஷலிசத்தைத் தவிர வேறு எதையும் ஏற்க முடியாது என்று வாய்ச்சவடால் அடிக்கின்றனர்...!

ஆனால் சமூகப் புரட்சிக்கு மக்கைள அணிதிரட்டுவதற்கு லெனின் காட்டும் வழி மாறானது. இதோ சீர்திருத்தங் களுக்காக போராடுவதே சமூக மாற்றத்துக்கான படிக்கல் என்று லெனின் சொல்வதை பாருங்கள்:

"சமூகப் புரட்சி என்பது ஒரே யுத்தமல்ல. ஆனால் பொருளாதார மற்றும் ஜனநாயக சீர்தருத்தத்தின் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தொடர்ச்சியானபோர்களை உள்ளடக்கிய ஒரு காலக்கட்டம், அவை முதலாளித்துவத்தை பறிமுதல் செய்வது மூலம் மட்டுமே திறைவு செய்யப்படுகின்றன. இந்த இறுதி நோக்கத்திற்காகவே, நமது ஒவ்வொரு ஜனநாயக கோரிக்கைகளையும் நாம் தொடர்ந்து புரட்சிகர வ…

Manokaran: KP Danus எனக்கு பாடம் நடத்த நீ யார் என்று சொல்லிவிட்டு நடத்து...!

இந்த நாகரிகம் கூட அறியாத காட்டு மிராண்டி நீ. மற்றவர்களுக்கு  பாடம் நடத்துற...! அசிங்கம்!!! 

Manokaran: மதுரை ரவீந்திரன் போன்ற ஃபிரீலான்சர்கள் கம்யூனிசத்துக்கு பதவுரை எழுதலாம்...

புரட்சி என்றால் என்னவென்றே அறிய முடியாது...!!! 

Manokaran: KP Danus அவரிடம் விவாதிக்க ஒன்றுமே இல்லை!

அவர் கலைப்பதற்கே பிறந்தவர். அவருக்கோ அவரது நண்பர்களுக்கோ என்ன திட்டம் உள்ளது? கொடுங்கள் பேசலாம்!

மற்றவர்களை விமர்சிப்பதே ஒருப்திட்டமா? அதற்கு பேர் கம்யூனிஸ்டா? அதற்கு ஒரு எடுப்பா? வெட்கக்கேடு? 

kpdanus: அப்படி என்றால் அவர் கருத்தின் மீது நீங்கள் ஏன் விவாதிக்க திறன் இல்லை. உண்மையான மார்க்சியவாதி ஆனவன் எதைக் கண்டு பயப்படுவதில்லை நீங்கள் ஏன் அவரோடு விவாதிக்க திறனற்று முத்திரை குத்துகிறார்கள். உண்மையில் திறன் இருந்தால் அவர் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதில் தாருங்கள். தங்களை மார்க்சியவாதி என்று சொல்லிக் கொள்வதால் மார்க்சியவாதி ஆகிவிட முடியாது அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். அவருக்கு பதிலளிக்க முடியாமல் முத்திரை குத்தி ஒதுங்கி ஓடுவதால் நீங்கள் மார்க்சிவாதியாக முடியாது நினைவில் கொள்ளுங்கள்.

Manokaran: KP Danus அவரிடம் ஏதாவது திட்டம் இருந்தால் வாங்கி கொடுத்து விவாதித்து ஒன்றுபடலாம் என்று சொல்ல வேண்டிய நீங்கள் என் மீது பாய்வதில் தெரியவில்லையா உங்கள் கோஷ்டிவாதம்! கோஷ்டிவாதம் அவர்களையே முதலில் அழித்து அனைவரையும் அழிக்கும் கொடிய நோய்! 

kp danus: Manokaran Karan இங்கேதான் நீங்கள் ஒளிந்து கொள்கிறீர்கள். யார் கோஸ்டிவாதிகள் என்பது உங்களுக்கு தெரியாத ஒன்றல்ல .கட்சிகளே குழுக்களாகவும் குழுக்களே தனிநபர்களாகவுகும் உடைந்து சிதறி உள்ளது. உங்கள் போன்ற மார்க்சிய அறிஞர்  விளக்குவீரா? சிலரால்தான் நடப்பது என்று கூறும் நீங்கள் ஒரு மார்க்சியவாதியாக சிந்தியுங்கள் பதில் சொல்லுங்கள் பார்ப்போம் 

Manokaran: KP Danus நீங்க எவ்வளவு பெரிய கேடி? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் காததூரம் ஒடுகிறீகள்...! சபாஷ்...சையான கோஷ்டி! 

Manokaran: இதை வாங்கி படியுங்கள்! பின்னர் விமர்சியுங்கள்...!!! 

kpdanus: Manokaran Karan யார் ஓடுகிறார்கள் ஒரு மார்க்சியவாதி ஆக கேட்கும் கேள்விக்கு திறன் இல்லை பதில் சொல்ல ஓடி ஒளிந்துகொள்ளும் நீங்கள்தான் 

Manokaran: KP Danus முக நூலில் மார்க்சியம் பயில முடியாது...! கொஞ்சமாவது உழையுங்கள்! 

Manokaran: ரவீந்திரா உங்களைப்போல் நாங்க தொப்புள் கொடியை அறுத்து பெற்றக் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசி எறியும்  புறம்போக்கு இல்லை!ஒரு புரட்சிகர அமைப்பின் தொடர்ச்சி என்பதில் பெருமை கொள்ளுகிறோம்! 

Ravindran எங்களுக்கு எல்லா திட்டமும் இருக்கு! நாங்க எங்க திட்டப்படி செயல்படுகிறோம்...!

திட்டமே இல்லை என்று கூறி, செயல்பாட்டு அமைப்பை கலைத்துவிட்டு படிப்பறை ஃபிரீலன்சர்கள் மூலம் மண்டபத்தில் யாராவது எழுதி கொடுத்து திட்டம் தயாரிக்கும் நீங்கள்தான்  அம்மணமாக திரியுறீங்க...!

இதோ இதுதான் எங்கள் திட்டம்...!

புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க நிலைபாடு...இதோ.. 

 Ravinderan: சிதறுண்டு இருக்கும் குழுக்களை இணைத்து ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கான முயற்சி இல்லை. மனோகரன் அவர்களே ஒரு ஒன்றுபட்ட கட்சி இல்லாமலேயே ஐக்கிய முன்னணிக்கு  ஒரேயடியாகத் தாவித் திட்டமிடுகிறீர்கள். பாட்டாளி வர்க்க புரட்சிகர சக்திகளை ஆளும்வர்க்க கட்சிகளிடம் அடகு வைப்பதற்கான முயற்சியில் படு வேகமாக செயல்படுகிறீர்கள்.

Manokaran: Ravindran பிழைப்புவாதத்தை வைத்து குழு கட்டுவதற்கு கற்றுக் கொடுத்த கலைப்புவாதி நீங்கள்...!!!

விவாதிக்கவே தயாரில்லை. எங்கே ஒற்றுமை.

ஒன்றும் இல்லாமல் ஒற்றுமை பேசும் உம்மைப் போல கேனத்தனத்தை என்னவென்று சொல்ல...!

நீங்க நடத்தும் இலக்கே இலகற்று உடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. காசு கொடுத்து ஓட்டு வாங்கலாம்! கட்சி கட்ட முடியாது! 

ரவீந்திரன்: ரஷ்யாவில் மார்க்சியத்தின் அடிப்படைகளை பிரச்சாரம் செய்த பிளக்னோவின் பிரச்சாரம்தான் அங்கு கட்சி கட்டுவதற்கான அடிப்படைகளைப் போட்டது என்று லெனின் பிளக்னோவை புகழ்ந்துள்ளார். ஆகவே பத்திரிக்கையின் மூலம் மார்க்சியப் பிரச்சாரம் செய்வது இங்கே ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கு உதவி செய்யும் என்பது ரஷ்ய அனுபவமாகும். இதற்கு மாறாக உங்களைப் போன்ற குறுங்குழுவாதிகளால் கட்சி கட்டப்பட்டதற்கான வரலாறு உலகில் எங்குமில்லை. 

Nirmal: 500 1000 பேர்    உள்ள  கூட்டங்களில் மட்டும் தான் நான் பேசுவேன் நான் எவ்வளவு பெரிய தலைவன் என்று தெரியுமா  இந்த அகந்தை உணர்வு கொண்டவர்கள் மட்டும் புரட்சியைப் பற்றி பேச தகுதி உடையவர்களா  மிஸ்டர்   மனோகரன் அவர்களே 

Manokaran: Nirmal Raj தம்பி நான் என்ன கூட்டம் பேசினேன் என்பதற்கு விளக்கு புடிச்சியா? இப்படி புடிச்சிருந்தா இப்படி பேசமாட்ட! உன் தலைவன் டிராட்ஸ்கி எருச்சியை உருவாக்கிய பிறகுதான் நம்பிக்கை பெற்று புரட்சிக்கே வந்தான்..! இதுதான் வரலாறு...!!! 

Nirmal: Manokaran Karan  எந்த   கூட்டத்தில் நீங்கள் இவ்வாறு கூறினீர்கள் என்ற ஆதாரமும் கொடுக்கட்டுமா Manokaran Karan  அப்படி நீங்கள் முன்னர் பேசியதற்கும் இன்று திராவிடத்திற்கு வால் பிடிப்பதற்கும் ஒரு தத்துவார்த்த பின்புலம் இருக்கிறதா இல்லையா 

Manokaran Karan  : Nirmal Raj நீ யாரு? எந்த அமைப்பில் என்ன நடக்கதுன்னு பார்ப்பது எதற்கு? நான் அப்படி சொன்னதில் என்ன பிரச்சினை?

இப்போ உனக்கு என்ன வேண்டும்.

மிரட்டுறியா? பேரமா?

லூசுத்தனமா பேசுவதே

உன் பொழப்பா ??? 

Manokaran Karan  : KP Danus தம்பி நீ எதாவது அமைப்பில் இருக்கியா இல்ல நீயும் ஒரு உதிரியா???

எந்த அமைப்பு என்று சொல்லுப்பா...! 

KP Danus : Manokaran Karan ஐயா நீங்கள் நாலு பேர் சேர்ந்து விட்டால் அது அமைப்பு ஆயிடுச்சா உங்களுடைய சிறப்பு கூட்டறிக்கை கொஞ்சம் திருப்பிப் பாருங்க அதுல என்ன சொல்லுதுன்னு அப்ப உங்கள் நிலை என்ன என்பது உங்களுக்குப் புரியும் அதை விட்டு அடுத்தவர்களை தேடுவதை விடுங்கள் ஒரு மார்சியவாதியாக சிந்திக்கத் தொடங்குங்கள் 

Manokaran: அரசு முதலாளியத்தை சூறையாடியே அதானி்,அம்பானி வளர்ச்சி...! அதை பறிமுதல் செய்வதே சமூகநல அரசு!!! 

: வங்கிகள், காப்பீடு, ரயில்வே, தகவல் தொடர்பு அனைத்தும் அரசுடைமை ஆக்குவதே சமூகநல அரசு...! 

கல்வி, மருத்துவம், சுகாதாரம் அரசே ஏற்று நடத்த வேண்டுமானால் அரசு முதலாளித்துவம் வேண்டும்..!!! உலகமயம் ஒழிய வேண்டும்...!!! 


யார் கேட்க்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத மனோகரன் அவதூறு பரப்புவதை தொழிலாக கொண்டுள்ளார் இவர் போன்றோருக்கு காலம்தான் பதில் சொல்லும் நாம் இவரின் தவறுகளை எடுத்துரைத்து திருத்த முயற்சிக்க முடியாத நிலையில் வேறு வழியில்லை.

அவரின் முகநூல் பகுதியில் அவரின் உண்மையான நோக்கம் என்ன அவர் மார்க்சியவாதிதான என்பதனை நீங்களே புரிந்துக் கொள்வீர்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0BayAN9eKGeB1G2xAsj3GNNNVfpPE5TvdHQCo8XTXTgVfsAgntYBoTRQ5gqaQtTFVl&id=100004833941710



https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02HWynjLAECrwjQCLuWYpHZUjjQKPkLmxMkJFyVW42r9UfuzDt1eKxnVS6GYYfq7ACl&id=100004833941710



https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02aK8jM8PuG1mDWUbQJKAcHTiwmUMXWPorYjCKRQtoSHYB3EjaPwRrhwyk14tgDunel&id=100004833941710


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0AoYAZ5KAuiHFuJwuCddqsinuW9Tj4yMZxKYhkWw97KZna7a7MpiSdwhe8KaREwnUl&id=100004833941710


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0BayAN9eKGeB1G2xAsj3GNNNVfpPE5TvdHQCo8XTXTgVfsAgntYBoTRQ5gqaQtTFVl&id=100004833941710


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02jfadjnAUUPV2QMNuZzEuCGPF8yjS9yP8HFYizwBBPXLnMY9XkmWMniPCXpYrE2znl&id=100004833941710

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0BjpFooRAJu65mJJrEsmiGB7J9dhrKuepK3FVyj9M23o8p93KS7fZyjM72hoLfYvfl&id=100004833941710

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...