நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குழுவாக பல்வேறு தளங்களில் மார்க்சிய அடிப்படை நூல்களை வாசித்து அதிலிருந்து பெறப்பட்ட உண்மைகளிலிருந்து மார்க்சியத்தை சரியான முறையில் கொண்டு செல்வதற்காக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் இயங்கி கொண்டுள்ளோம்.
ஆக எங்களின் முதன்மையான நோக்கம் அடிப்படை மார்க்சியத்தை எல்லோருக்கும் புரியும் வகையில் கொண்டு செல்வதே.
குறிப்பாக லெனின் தன் நாட்டில் புரட்சிக்கு முன் உள்ள அனுபவங்களை தொகுத்து ஒரு சரியான மார்க்சிய வகைப்பட்ட கட்சி மற்றும் மக்களுக்கான அரசியல் பொருளாதார தத்துவார்த்தப் போராட்டத்தை இங்கு உள்ளோர் புறக்கணித்துள்ளனர் என்பதனால் அதை சரியான முறையில் எல்லோருக்கும் புரியும் வகையில் மார்க்சிய புரிதலை உண்டாக்குவதே முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளோம் .
மார்க்சியத்தின் அடிப்படைகளை சரியான முறையில் எழுதி முடித்த பின் இங்குள்ள நிலைமைகளோடு இங்கு உள்ள மார்க்சியம் மற்றும் மார்க்சியம் அல்லாத போக்குகளோடு இடதுசாரிகட்சிகளையும் அதன் சரி தவறுகளையும் விமர்சிக்க உள்ளோம் .
இப்பொழுது லெனின் வகைப்பட்ட கருத்துக்களை எழுதும் பொழுது சிலர் தங்களுக்காக எழுதப்பட்டதாக குதிக்கின்றனர் அப்பொழுது இங்குள்ள எல்லோரும் ஒன்று சேர்ந்து எங்களை வசை பாடுவார் இருந்தும் ஒரு சரியான மார்க்சியத்தைக்கொண்டு எல்லோருக்கும் மார்க்சியத்தை போதிப்பதும் அதற்கான சரியான வழி வகை என்ன என்பதையும் விவாதத்தின் ஊடாக கொண்டுவருவது என்பது முதன்மையான நோக்கமாக இருக்கும் என்பதை பறை சாற்றிக் கொள்கிறோம்.
மக்களிடையே ஒரு கம்யூனிஸ்ட் கடைபிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்க வேண்டும்?
மக்கள் தான் புரட்சியைக் கொண்டு வருகிறார்கள். கோடிக்கணக்கான இந்தப் பரந்துபட்ட மக்கள் தான் புரட்சியை விசுவாசமாக ஆதரித்து அதற்காகப் பணிபுரிவார்கள். தோழர் மாவோ குறிப்பிடுவது போல் "மக்கள் தான் உண்மையான இரும்புக்கோட்டை , இதை உலகில் எந்த சக்தியாலும் தவிர்ப்பது சாத்தியமாகாது".
ஆனால் இந்த இரும்புக் கோட்டையை உருவாக்கும் இரும்பு கற்கள் தனித்தனியாகவும் ஒன்று சேர்க்கப்பட்டு பூசப்படும் படாமலும் உள்ளது. இந்த இரும்பு கற்களை அடுக்கி பூசி உலகிலுள்ள எந்த சக்தியாலும் மறுக்கப்பட முடியாத அளவிற்கு ஒரு சக்திவாய்ந்த இரும்புக் கோட்டையாக நிறுவவேண்டும்.
இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க கடமையை மேற்கொள்வதுதான் கம்யூனிஸ்டுகளின் முக்கிய பணி. ஆனால் இந்தப் பணியை கம்யூனிஸ்டுகள் எவ்வாறு ஏற்று நடத்துவது மக்களிடம் எவ்விதமான அணுகுமுறையை கொண்டு கம்யூனிஸ்டுகள் இந்த பணிகளை நிறைவேற்றுவது மக்களிடம் இவர்களை முந்திச் செல்லும் உள்ளுணர்வு விருப்பமும் எண்ணமாக இருக்க வேண்டும்?.
வெறும் தலைவர்களாக வேண்டும் என்ற ஆசையுடன் மக்களிடம் செல்வதா இல்லை அவர்கள் மக்களிடையே மார்க்சியவாதிகள் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செல்ல வேண்டுமா இல்லை அல்லது மக்களை அவர்களது தொழில்களிலும் சங்கங்களிலும் முன்னணி கட்டும் நோக்கத்தோடு செல்வதாக இல்லை கம்யூனிஸ்டுகளும் மக்களிடையே செல்வதற்கான ஒரே நோக்கம் உந்து சக்தியும் அவர்களுக்கு உளமார தொண்டு செய்வதுமே ஆகும்.
மக்களுக்குத் தொண்டு செய்வதன் பொருள் அவர்களுக்கு பரோபகாரியாக இருப்பதல்ல; மாறாக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களில் கம்யூனிஸ்டுகள் முழுமையிலும் பொருந்திய ஒரு பகுதியினராவர், உண்மையாக நன்மை கிடைக்கும் வகையில் பணியாற்றுவதாகும். மக்களின் நலனுக்காக விசுவாசமாக பாடுபடுவது என்பதன் பொருள் உண்மையில் மக்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களுக்கு பயிற்றுவிப்பது பயிற்சி அளிப்பதும் அவர்களை அமைப்பாகத் திரட்டுவதுமேயாகும்.
திமிரான போக்கு கம்யூனிஸ்டுகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடும் பணிவான போக்கு பெரும் மதிப்பை தேடித்தரும் . மக்களிடம் கம்யூனிஸ்டுகள் அதி மேதாவிபோக்கை கடைபிடிக்கக் கூடாது மக்கள் கலந்து ஆலோசித்து எந்த நடவடிக்கையும் செயலையும் செய்யவேண்டும் கம்யூனிஸ்டுகள் அரசியல் அறிவில் ஏகபோகமாக முற்படாமல் மக்களுக்கு தொடர்ந்து பயிற்றுவித்து அவர்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்க முயலவேண்டும் மக்கள் முன் முழுக்கவும் வெளிப்படையாக திறந்த மனதுடனும் அடக்கத்துடனும் தவறுகளை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் உத்தரவிடும் போக்குகள் எப்போதும் தவிர்க்க வேண்டும் எல்லா கருத்துக்களையும் அதை முற்போக்காக இருந்தாலும் பிற்போக்காக இருந்தாலும் சுதந்திரமாக பேச அனுமதிக்க வேண்டும் அப்போதுதான் எது சரி எது பிழை என்பதை எடுத்துக் கூறி மக்களை ஒப்புக்கொள்ள செய்ய முடியும்.
எதார்த்த நோக்கில் மக்கள் அனைவரின் உணர்வு மட்டமும் சீராக ஒன்று போல் இருக்கும் என்று கருதுவது சரியானது அல்ல மாவோ கூறியுள்ளதாவது "குறிப்பிட்ட எந்த இடத்துப் பொது மக்கள் மத்தியிலும் ஒப்பீட்டு வகையில் ஊக்கமானவர்கள் நடுநிலையாளர்கள், ஒப்பீட்டளவில் பின்தங்கியவர்கள் என்ற மூன்று பிரிவினர் இருப்பர். எனவே தலைவர்கள் சிறிய தொகையினராக உள்ள ஊக்க மானவர்களை தலைமையைச் சூழ அய்க்கிய படுத்தி அவர்களை முதுகெலும்பாக கொண்டு நடுநிலையாளர்களின் தரத்தை உயர்த்தி பின் தங்கியவர்கள் வென்றெடுப்பதில் தேர்ச்சி பெற வேண்டும்.
நடைமுறையில் நிகழக்கூடியது என்னவெனில் தோழர்கள் முன்னேறிய சக்திகளின் மீது மட்டும் கவனத்தை செலுத்துவது மற்றவர்களை பற்றி மறந்து விடுவதும் ஆகும் இது சரியல்ல மற்றவர்களை உணர வைப்பதுதான் மிகவும் கடினமானதும் சிக்கலானதும் ஆகும் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைவரது மத்தியிலும் பிரசாரம் மற்றும் கிளர்ச்சியை நடத்துவதும் அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதும் அவசியம் மக்களை எப்போதும் பிளவு படுத்தாதீர் அய்க்கிப்படுத்துவீராக.
No comments:
Post a Comment