நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுக் கொண்டு உள்ள தொடர்புகளைக் கண்டறிய வேண்டும்

 

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுக் கொண்டு உள்ள தொடர்புகளைக் கண்டறிய வேண்டும். மேலும் இதைச் செய்வதற்காக நாம் அகவய கற்பனையையோ, அப்போதைய ஆர்வத்தையோ அல்லது சாரமற்ற புத்தகங்களையோ சார்ந்திருக்கக் கூடாது, புறவயமாக நிலவுகின்ற சூழல்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். உரிய வகையில் தகவல்களைச் சேகரித்து, மார்க்சிய-லெனினிய பொதுக்கொள்கை நெறிகளினை சரியாகப் பின்பற்றி அதிலிருந்து முடிவுகளை வகுக்க வேண்டும். இத்தகைய முடிவுகள் வெறும் , , , வரிசையாலான நிகழ்ச்சிப்போக்குகள் நிறைந்த பட்டியல்களோ, பயனற்ற கூற்றுகள் நிரம்பிய எழுத்துக்களோ அல்ல, அவை அறிவியல் பூர்வமான முடிவுகள் ஆகும். இத்தகைய உளப்பாங்கு என்பது மெய் நிகழ்வுகளிலிருந்து பேருண்மையை தேடுவது, வெற்று பசப் புரையிலிருந்து அணுகூலமானதைப் பெறுவது அல்ல. இதுதான் மார்க்சிய-லெனிய வழியில் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பதாகும், உயிரோட்டமான கட்சியின் வெளிப்பாடு இதுவே. எந்தவொரு கட்சி உறுப்பினரும் இந்த அணுகுமுறையை மிக குறைந்த அளவிலேனும் கைக் கொண்டிருக்கவேண்டும்.

 பயிலும் முறை சீர்திருத்தம், மாவோ ஆற்றிய பகுதி

மக்கள் திரள் விழித்துக்கொள்ளும் முன்பே நாம் தாக்குதலில் இறங்கிட முயல்வோமென்றால் அது சாகசவாதமாகிவிடும். மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுவதற்கு அவர்களுக்கு உத்தரவிடுவோமென்றால் அது நிச்சயம் தோல்வியிலேயே முடியும். மக்கள் முன்னேற்றத்தை எதிர்நோக்கும்போது நாம் அதற்கு முயலாமலிருந்தால் அது வலதுசாரி சந்தர்ப்பவாதமாகிவிடும்.

சான்ஷி-சுயான் நாளிதழ் ஆசிரியர்குழுவோடான உரையாடல் 1948 ஏப்ரல் 2

சிலர் தாங்கள் மார்க்சியத்தை நம்புவதாக எண்ணுகின்றனர். ஆனால் அகநிலைவாதச் செய்தியை கேட்கும் பொழுதோ வாசிக்கும்பொழுதோ அதற்கு எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்தாமலோ யோசிக்காமலோ இருந்து பொருள்முதல்வாதத்தை அவ்விடத்தில் பிரச்சாரம் செய்வதற்கு முயற்சி எதையும் மேற்கொள்வதில்லை. இது ஒரு கம்யூனிஸ்டின் எண்ணப் போக்கல்ல. அது நமது பல தோழர்கள் அகநிலைவாதக் கருத்துகளால் நஞ்சூட்டப்படுவதற்கு அனுமதிக்கிறது. அது அவர்களின் உணர்வு நுட்பத்தை மரத்துப் போகச் செய்கிறது. ஆகவே நாம் கட்சிக்குள் நமது தோழர்களின் உள்ளங்களை அகநிலைவாதம்மற்றும் வறட்டுக் கோட்பாட்டியம் என்ற மூடுபனியிலிருந்து விடுவிப்பதற்கு கற்பித்தல் இயக்கத்தை மேற்கொண்டு அகநிலைவாதம், குறுங்குழுவாதம், செக்குமாட்டுத்தனமான கட்சி எழுத்துக்கள் ஆகியவற்றைப் புறக்கணிப்பதற்கு அவர்களுக்கு அறைகூவல் விட வேண்டும்.

கட்சி வேலைப்பாணியில் சீர்திருத்தம்

 

 

=============================================================

புரட்சிகர அமைப்புகளிடம் சித்தாந்த வலிமையைத் தவிர பிற வலிமைகள், அதாவது மக்களின் ஆதரவு, வலிமைகள் குறைவாக இருக்கிறது. ஒரு அமைப்பு தனது அமைப்பின் உறுப்பினர்களது வலிமையில் மட்டும் செயல்பட முடியாது. அதற்கு மக்களின் ஆதரவும், அவர்களது பங்களிப்பும் தேவை. மக்களே வரலாற்றை படைக்கிறார்கள் என்பதுதான் மார்க்சியம். மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதற்காக தானே மக்களுக்கு முன்னால் சென்று நடவடிக்கையில் மக்களை சாராது செயல்படுகிறார்களே மாவோவிஸ்ட்டுகள் அது இடது பாதையாகும். வேறுவழியில் மக்களின் உணர்வு நிலைக்கு பின்னால் நின்றுகொண்டு மக்களுக்கு வாலாக போகிறவர்கள் வலது சந்தர்ப்பவாதிகளாவர். இவ்விரு வழிகளின் மூலம் மக்கள் வெற்றியடையமுடியாது. மாறாக மக்களோடு சேர்ந்து மக்களை உணரவைத்து அவர்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்துவதன் மூலம் செயல்படவேண்டும். அதுதான் மார்க்சிய பாதையாகும். அவ்வாறு கம்யூனிஸ்ட்டுகள் செயல்படும்போது தங்களை கம்யூனிஸ்ட்டுகளாக காட்டிக்கொண்டு மக்களை தவறான வழிகளில் இழுத்துச்செல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரம் உள்ளிட்டு பல ஆதரவுகள் உண்டு. அவர்களின் பலத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம். அவர்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். இந்த சூழலில் கம்யூனிஸ்ட்டுகள் சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகள் 1.மக்களின் அறியாமை, 2.ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறை, 3.திருத்தல்வாதிகள், கலைப்புவாதிகளின் மக்களை குழப்பும் நடவடிக்கைகள், 4.மக்கள் கம்யூனிஸ்ட்டுகளின் பின்னால் அணிதிரளாமல் இருப்பது இவ்வாறு பல்வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டு உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் புரட்சிக்காக மக்களை அணிதிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது எவ்வளவு கடினமான பணி என்பதை அவர்கள் உணர்ந்தபோதும் நம்பிக்கையோடு செயல்படுகிறார்கள். எதிரியை எதிர்த்த போராட்டம் எவ்வளவு அவசியமானதோ அந்த அளவிற்கு மக்களை ஏமாற்றும் போலிகளையும் எதிர்த்து போராடி மக்களுக்கு இந்த போலிகளை தோலுரித்து காட்டவேண்டியது அவசியம் என்பதால்தான் இந்த விவாதங்களையும் பிரச்சாரத்தையும் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ரஷ்யாவில் கம்யூனிசம் வீழ்த்தப்பட்டதற்கும் ஈழத்தில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டதற்கும் துரோகம்தான் காரணம் என்பதை புரிந்துகொண்டால் கம்யூனிசத்திற்கு எதிரான போலிகளை எதிர்த்து போராடவேண்டியதன் அவசியம் புரியும். யாரைத்தான் நம்புவது இந்த பேதை நெஞ்சம் என்ற நிலையில் மக்கள் இருக்கிறார்கள். மக்கள் மட்டுமல்ல மக்களுக்காக பாடுபட விரும்பும் முன்னோடிகளிடமும் குழப்பங்கள் உள்ளது. அவர்களை குழப்புவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் கலைப்புவாதிகள் ஆவர். கலைப்புவாதிகள் என்பவர்கள் மார்க்சின் தத்துவத்தையும் பெரியார், அம்பேத்கார் போன்ற முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் கருத்தையும் இணைப்பது பின்பு காலப்போக்கில் மார்க்சியத்தை கைவிட்டுவிட்டு பெரியார் அம்பேத்காரின் வழியில் மக்களை அழைத்துசெல்வது என்ற முறையில் செயல்படுபவர்களை நாம் கலைப்புவாதிகள் என்கிறோம். தமிழ் நாட்டில் பெரியாரியவாதிகளின் செல்வாக்கு அதிகரித்துள்ளது, அதேவேளையில் சாதிய வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளது. காரணம் என்ன சிந்தித்திடவேண்டும்.

நம் முன் உள்ள பிரச்சினைகள்

இன்று நம் சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம், ஏகாதிபத்திய- நிலவுடமைத்துவக் கலாச்சாரம் ஆகும்.கலை வெளியீட்டுச் சாதனங்களான பத்திரிக்கை,திரைப்படம், வீடியோ, நூல்கள் ஆகியவற்றில் ஏகாதிபத்தியத்தின் ஊடுருவலும் ஆதிக்கமும் உண்டு.கதைகள், கட்டுரைகள்,துணுக்கு செய்திகள்,

 

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சர்வதேசகீதம்
===========

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதருகின்ற மனிதர்காள்
பாரினிற் கடையரே எழுங்கள் வீறுகொண்டு தோழர்காள்

கொட்டுமுரசு கண்ட நம் முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட

பண்டையப் பழக்கமென்னும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேட்சை கீதம்
விடுதலை பிறந்தது

இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திடும்
இன்மை சிறுமைதீர நல் இளஞர் உலகமாகிடும்

தொன்றுதொட்டுழைத்த தொழிலாளி,விவசாயிகள் நாம்
தோழராகினோம் உழைப்போர் யாவரேனும் ஓர்குலம்

உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச் சொல்லுவோம்
உழைப்பவர் யாவருக்கும் சொந்தமிந்த நிலமெல்லாம்

பார் அதோ மமதையின் சிகரத்திருமாந்துமே
பார்க்குறான் சுரங்க,மில்,நிலத்தின் முதலாளியே

கூறிடில் அன்னார் சரித்திரத்தில் ஒன்று கண்டதே
கொடுமை செய்து உழைப்பின் பலனைக் கொள்ளைகொண்டு நின்றதே

மக்களின் உழைப்பெலாம் மறைத்துவைத்து ஒருசிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்ற தறிகுவீர்

இக்கணமும் அதைத்திரும்பக் கேட்பதென்ன குற்றமோ?
இல்லை நாம் நமக்குரிய பங்கைக் காட்டிக் கேட்கின்றோம்

வேலை செய்யக் கூலியுண்டு வீணர்கட்கிங்கிடமில்லை
வேதம் ஓதி உடல் வளர்க்கும் காதகர்க்கும் இங்கிடமில்லை

நாளை எண்ணி வட்டிசேர்க்கும் ஞமலிகட்கும் இடமில்லை
நாமுணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங்கிடமில்லை

பாடுபட்டு ழைப்பவர் நிணத்தைத் தின்ற கழுகுகள்
பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளதில்

காடுவெட்டி மலையுடைத்துக் கட்டிடங்கள் எழுப்புவோம்
கவலையற்ற போகவாழ்வை சகலருக்குண்டாக்குவோம்-
( பட்டினிக்)

(1871 மார்ச்26 ல் ஏற்பட்ட பாரிஸ் கம்யூன் புரட்சியின் போது பிரெஞ்சுத் தொழிலாளிக் கவிஞனால் பாடப்பட்டது.

பின்பு தென்னக ரயில்வேப் போராட்டத்தின்போது பழிவாங்கப்பட்ட ரயில்வே தொழிலாளியான தோழர் கவிஞர் நாகை சாமிநாதனால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.)

 

இயங்கியலைக் காண்போம்

1, ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வைத் தனித்த ஒன்றாகக் காணா

 

பொருளினுடைய இயக்கம்

  • பருப்பொருளினுடைய இயக்கத்தின்
    • பௌதிக வடிவங்கள் - பரப்பிடம், வேகம், நிறை, ஆற்றல், மின்னேற்றம், வெப்பம், பருமன் () போன்ற உண்மைப் பொருள்களின் தன்மைகளிலான மாற்றம்;
    • இரசாயன வடிவங்கள்- ஒருவிதமான பொருள்கள் இன்னொரு விதமான பொருள்களாக மாறுவது அதாவது அணுக்களின் இணைப்பும் மறு இணைப்பும்
    • சமுதாய வடிவங்கள்- மனித சமுதாயத்துக்கு மட்டுமே உரித்தான, சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள். இவை ஒரு குறிப்பிட்ட இயக்க வடிவமும், மனித மனத்திற்கு வெளியே எதார்த்த உண்மையாய் நிலவுகிறது, பொருளாதாய நிகழ்ச்சிப் போக்காக இருக்கிறது.
  • மனித உணர்ச்சிகள், மனநிலைகள், கருத்துகள் ஆகியவற்றின் இயக்கமோ மனிதனது மனதில் மட்டுமே இருந்து வருகிறது.
  • உணர்ச்சிகளும், கருத்துகளும், அவற்றின் பொருள்வகைத் தன்மையான மூளை இல்லாமல் தோன்றுவதில்லை.
  • இதை சிந்தனைப் பொருள்வகை தன்மையது என்று கூறுவது பிழையாகும், பொருள் முதல்வாதத்தையும், கருத்து முதல்வாதத்தையும் போட்டு குழப்புவதாகும்.[2]

இயக்கவியல் பொருள் முதல்வாதம், வரலாற்றியல் பொருள் முதல்வாதம் ஆகியவற்றிற்கான அடிப்படைகள்

இவ்விரண்டு பொருள் முதல்வாதங்களும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானவையாகும். இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவை, பொருள்களையும் அவற்றின் இயக்கத் தன்மைகளையும் வளர்ச்சிப் போக்குகளையும் முன்னிலைப்படுத்துவதாக உள்ளன. இதனடிப்படையில், சமூக அமைப்பை இவற்றின் செயல்பாட்டு உறவுகளின் தொடர்பு காரணமாக, இரண்டு கட்டுமான நிலைகள் இருப்பதாக மார்க்சியம் எடுத்துரைக்கிறது. இவை அடிக் கட்டுமானம் (Basic Structure) , உயர் கட்டுமானம் (Super Structure) எனப்படும்.[3]

அடிக் கட்டுமானம்

அடிக் கட்டுமானம் எனப்படுவது பொருளாதார வாழ்க்கையின் பயன்பாடுகளால் கிடைக்கப்பெற்ற பொருளாதார உற்பத்தி உறவு நிலைகளைக் குறிப்பிடுவதாக அமையும். இதனைச் சமூக இருப்பு (Social Being) என்றழைப்பர்.

உயர் கட்டுமானம்

இத்தகு வாழ்வியல் தன்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அதன் உயர்மட்ட கருத்தாக்கங்கள், சமய நெறிகள், அரசமைப்புகள், சமூக மரபுகள், அழகியல் கோட்பாடுகள் போன்றவற்றின் ஒட்டுமொத்தத்தைச் சமூக உணர்வு (Social Consciousness) எனக் குறிப்பிடுவர். இத்தகைய, சமூக உணர்வே மனித சமுதாய அமைப்பின் உயர் கட்டுமானம் என்றழைக்கப்படுகிறது. இவ் அடிக் கட்டுமானமும் உயர் கட்டுமானமும் தமக்குள் ஒன்றுடனொன்று சார்ந்து காணப்பட்டு பல்வேறு உள்ளீடுகளைக் கொண்டதாக இருக்கின்றன.

இரு கட்டுமானங்களுக்கு இடையேயான தொடர்பு

அடிக் கட்டுமானமும் உயர் கட்டுமானமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றுக்கொன்று ஒருமித்தவை. ஒன்றின் மீது மற்றொன்று செல்வாக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இரண்டு கட்டுமானங்களும் வேறுவேறானது அல்ல. தனித்துச் செயற்படும் தன்மையற்றது. அடிக் கட்டுமானத்தைச் சார்ந்தே எப்போதும் உயர் கட்டுமானம் அமைந்துள்ளது. அதேபோல், உயர் கட்டுமானமானது, பொருளாதார உற்பத்தி உறவுமுறைகளால் உருவான அடிக் கட்டுமானத்தைப் பாதிப்படையச் செய்கின்றது. இத்தகைய, உயர் கட்டுமானத்தில் மொழி, கலை, இலக்கியம், அழகியல் முதலானவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருள் உற்பத்திமுறை

மனித சமுதாய வாழ்கையின் அடிப்படையாகப் பொருள் உற்பத்திமுறை விளங்கிறது. இந்தப் பொருள் உற்பத்திமுறையானது உற்பத்திச் சக்திகள் (Productive Forces) மற்றும் உற்பத்தி உறவுகள் (Objects of labour) ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.

உற்பத்திச் சக்திகள்

சமூகத்தின் அடிப்படையாகப் பொருள் உற்பத்தி உள்ளது. மனித சமூகம் வாழ்வதற்கு அடிப்படையான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றிற்குரிய தேவையான, இன்றியமையாதப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டி இருக்கின்றது. உற்பத்தி என்பது மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைத் தோற்றுவிக்கும், மக்களின் செயல்பாடாகும். இந்த உற்பத்தியை மேற்கொள்வதற்கு, மனிதனுக்கு உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள் (Instruments of labour), உழைப்பு ஆகிய மூன்றும் இன்றியமையாததாக உள்ளன.[4]

உழைப்பின் குறிபொருள்

மனித சமூகம் உற்பத்தியைத் தொடங்குவதற்கும், அவ் உற்பத்தி மூலமாக உருவான விளைபொருட்களைப் பெறுவதற்கும் தேவைப்படும் பொருளுக்கு உழைப்பின் குறிபொருள் என்று பெயர். அதாவது, எந்தப் பொருட்களின் மீது மனித சக்தி, தமது உழைப்பை செலுத்துகிறதோ, அந்தப் பொருளானது உழைப்பின் குறிபொருள் என அழைக்கப்படுகின்றது. வழக்கத்தில் இரு வகையான உழைப்பின் குறிபொருள்கள் உள்ளன.[4]

இயற்கைக் குறிபொருள்கள்

இயற்கைக் குறிபொருள்கள் என்பவை இயற்கையிலிருந்து நேரடியாக பெறப்படுபவையாகும். பூமியிலிருந்து கிடைக்கும் மண் வளம், கனிம வளம், நீர் வளம், மீன்வளம், காட்டு வளம், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள் மற்றும் நிலப்பகுதிகள் முதலானவை எடுத்துக்காட்டுகளாவன. பயிரிடுவதற்கான உரிய, உகந்த நிலம் உழவுத்தொழில் மேற்கொள்வதற்குரிய உழைப்பின் குறிபொருளாக அறியப்படுகிறது.

மனித ஆக்க மூலப்பொருள்கள்

இயற்கைக் குறிபொருளைப் பயன்படுத்தி மனிதனால் உருவாக்கப்படும் கசசாப் பொருள்களுக்கு மனித ஆக்க மூலப் பொருள்கள் எனப்படும். நெல், பருத்தி, இரும்பு, கரும்பு, தங்கம், செங்கல் முதலாவை மனித ஆக்க மூலப் பொருள்களுக்குச சான்றுகளாகும்.

உழைப்புக் கருவிகள்

உற்பத்திக்குக் கருவிகளின் பயன்பாட்டுத் தன்மை இன்றியமையாதது. மனித உழைப்பிற்கு உபயோகப்படும் கருவிகளே உழைப்புக் கருவிகள் ஆகும். மனிதன் என்பவன், உழைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி, உழைப்பின் குறிபொருளின் மீது வினையாற்றிப் பொருள் உற்பத்தியில் ஈடுபடுகிறான். தொடக்கக் காலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில் அம்பு உள்ளிட்ட ஆயுதங்களும், அண்மைக் காலத்தில் நவீன இயந்திரங்கள், சாலை வசதிகள், போக்குவரத்து வாகனங்கள், தொழில்நுட்ப வசதிகள், தொலைத்தொடர்புகள் முதலியன உழைப்புக் கருவிகளாகச் செயற்படுகின்றன. உழைப்புக் கருவிகளுடன் இணைந்த தொழிற்கூடங்கள், கிடங்குகள், இருப்புப்பாதைப் போக்குவரத்து, நீர்ப்பாசன வசதிகள், மின்சாரம் போன்றவையும் உழைப்புக் கருவிகளுக்குள் அடங்கும்.[4]

உழைப்பு

பொருள் உற்பத்திக்கு இன்றியமையாதது உழைப்பு ஆகும். உழைப்பின் குறிபொருள் மற்றும் கருவிகள் தாமாகவே இயங்கி எந்தவொரு உற்பத்தியையும் செய்திடவியலாது. அவற்றுள், மனிதனது உழைப்பு செயற்படுத்தப்படும் போதுதான் உற்பத்தி நிகழ்கிறது. உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து பெறப்படும் பொருட்களைக் கொண்டு மனிதனின் தேவைகளை ஈடேற்றிட முற்படும் நடவடிக்கையாகும். உழைப்பின் பயனாக மனித சமூகம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் உற்பத்திச் செய்துள்ளது. உழைப்பானது மனிதனுக்குத் திறமையையும் திறன்களையும் தருகின்றது. மனித சமுதாயம் வளர்ச்சியும் மேம்பாடும் அடைய உழைப்பு உறுதுணையாக உள்ளது. உழைப்பே புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாகும்.

ஜனநாயகக் கட்டத்தின் வழியாகத்தான் சோசலிசம் அடையப்பட முடியும் என்பது மார்க்சிய விதியாகும். சீனாவில் ஜனநாயகத்திற்கான போராட்டம் ஒரு நீண்ட போராட்டமாகும். ஐக்கியமுற்ற புதிய-ஜனநாயக அரசொன்று இல்லாமலும், புதிய-ஜனநாயகப் பொருளாதாரத்தின் அரசுத்துறை, தனியார் முதலாளித்துவ துறை, கூட்டுறவுத்துறை ஆகியவை இல்லாமலும், தேசிய, விஞ்ஞான மற்றும் வெகுஜன கலாச்சாரமொன்றின் வளர்ச்சி இல்லாமலும, கோடிக்கணக்கான மக்களுடைய தனித்துவத்தின் விடுதலையும் விருத்தியும் இல்லாமலும்-சுருங்கக் கூறினால் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஒரு புதிய ரகமான, பரிபூரணமான முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ஒன்று இல்லாமல்-காலனிய அரைக்காலனிய, நிலப்பிரபுத்துவ அமைப்பின் அழிவுக்குவியலின் மேல் சோசலிச சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்ப முயல்வது வெறும் பிரமையாகவே இருக்கும்.
முதலாளித்துவத்தைக் கண்டு அஞ்சுவதற்கு நேர்மாறாகக் கம்யூனிஸ்டுகள் ஏன் சில குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில் அதன் வளர்ச்சியை ஆதரிக்க வேண்டும் என்பதைச் சிலரால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை. நமது பதில் சுலபமானது. அந்நிய ஏகாதிபத்தியத்தினதும் நிலப்பிரபுத்துவத்தினதும் ஒடுக்குமுறையினிடத்தில் சிறு அளவு முதலாளித்துவம் வைக்கப்படுவது ஒரு முன்னேற்றம் மட்டுமல்ல, தவிர்க்க முடியாத ஒரு செயல் போக்குமாகும். அது தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் நன்மை செய்கிறது; ஒருவேளை தொழிலாளி வர்க்கத்திற்குக் கூடுதலாக நன்மை செய்கிறதாகவுமிருக்கலாம். இன்று சீனாவில் அபரிமிதமாக இருப்பது உள்நாட்டு முதலாளித்துவம் அல்ல; அந்நிய ஏகாதிபத்தியமும் உள்நாட்டு நிலபிரபுத்துவமும்தான் நம்மிடம் உள்ளது. மிகச் சிறிதளவு முதலாளித்துவம்தான். சீன முதலாளித்துவ வர்க்கத்தின் சில பிரமுகர்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சியைக் கோருவதற்கு வெட்மடைந்து அதை ஜாடை மாடையாகக் குறிப்பிடுவது விநோதமாக உள்ளது. சீனா அவசியமான அளவிற்கு முதலாளித்துவத்தின் வளர்ச்சியை அனுமதிக்க வேண்டுமென்பதை மொட்டையாக மறுப்பவர்கள், மேலும் ஒரே எட்டில் சோசலிசத்தை அடைவது பற்றியும் மூன்று மக்கள் கோட்பாடுகளின் சோசலிசப் பணிகளை, ஒரே அடியில் நிறைவேற்றுவதைப் பற்றியும் பேசுபவர்கள் உள்ளனர். இந்தக் கருத்துகள் சீனத் தேசிய முதலாளிகளின் பலவீனத்தைப் பிரதிபலிக்கிறது அல்லது, பெரும் நிலப்பிரபுக்கள் மற்றும் பெரும் முதலாளிகளின் தரப்பிலான பச்சோந்தித்தனமான தந்திரத்தையே காட்டுகிறது என்பது தெளிவு. சமுதாய வளர்ச்சியின் மார்க்சிய விதிகளிலிருந்து நமக்குத் தெரிந்தவரை, கம்யூனிஸ்டுகளாகிய நாம் சீனாவில் புதிய ஜனநாயக அரசு அமைப்பின் கீழ்ச் சமுதாய முன்னேற்றத்தின் நலனுக்காகப் பொருளாதாரத்தின் அரசுத்துறையின் அபிவிருத்தியுடனும் உழைக்கும் மக்களால் நடத்தப்படும் தனியார் மற்றும் கூட்டுறவுப் பிரிவுகளின் அபிவிருத்தியோடும் கூடவே தனிநபர் முதலாளித்துறையின் அபிவிருத்தியை (அது மக்களின் வாழ்க்கையை ஆதிக்கம் செய்யாத பட்சத்தில்) முன்னேற்றுவதும் அவசியமாயிருக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டுள்ளோம். கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் வெற்றுப் பேச்சோ, ஏமாற்றுத் தந்திரங்களோ எங்களைக் குழப்பிட அனுமதிப்பதில்லை.
-
மாவோ, கூட்டரசாங்கம் பற்றி நூலிலிருந்து

Image may contain: 1 person, smiling

 

 

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...