5 G அலைகற்றை ஏலம் நமது படிப்பினைகள் என்னே?.



 இன்று 5 G அலைகற்றை ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு படிப்பினைக்காகவே இதனை எழுதுகிறேன்.


4 G அலைகற்றையின் தாக்கம் நமக்கு புரியாத பொழுது, 5 G அலைகற்றை ஏலம் நமது படிப்பினைகள் என்னேகொடுக்கப் போகின்றது என்பதே என் எழுத்தின் நோக்கம்.

4 G யின் சேவை பற்றி நான் சொல்லிதான் நீங்கள்  புரிந்துக் கொள்ள ஒன்றுமில்லை என்பேன்.

இவர்களின் கொள்ளையை மட்டும் தெரிவிக்க நினைக்கிறேன் முதலில்.

(1). ஆண்டுக்கு 12 மாதங்களே உள்ள போது இவர்கள் 13 வது மாதத்தை புகுத்தினர் இதனை கேள்வி கேட்க்க யாருக்கும் புரிதலே வரவில்லை என்பேன்.

(2). 4 G யானது 100Mbps பதிவிறக்கமும் 50Mbps பதிவேற்றமும் இருக்க வேண்டும் ஆனால் நடைமுறை என்னே? இன்றும் Mbps  அல்ல Kbps அதன் வேகம் உள்ளது யாரிடம் நாம் கேள்வி கேடபது?

(3). பொதுதுறை நிறுவனமான BSNL லை ஒழித்துக் கட்டி விட்டது.

இப்பொழுதே 1Gbps வேகத்தில் சீனா போன்ற நாட்டில் உள்ள போது இந்தியாவில் Kbps வேகத்தில் உள்ள போது என்ன தொழிற் நுட்பமோ?

5G யின் வேகம் 3Gbps பதிவிறக்கமும் 1Gbps பதிவேற்றமும் இருக்கும் எங்கின்றனர் அதற்கான வேலையை ஜீயோ பெருநகரங்களில் எப்பொழுதோ தொடங்கி விட்டது ஏர்டெல்லும்தான். அதாவது இன்று ஒரு சிம்க்கு 249 மாத செலவளிப்பது 499 தாம மாதம் இருக்க உள்ளது. பெரும் நகரங்களில் நீங்கள் விரைவில் இதனை காண போகின்றீர்.( நான் நேரடி அனுபவம் அடிப்படையில்). 

5G அலைகற்றை மூலம் அரசுக்கு 4.30 இலட்சம் கோடி கிடைக்க உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் அரசானது இதற்க்கு அதிகமான அளவில் அவர்கள் கொள்ளையடிக்க உள்ளனர் என்பதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.  நாட்டில் 1.5 கோடி பேர் மட்டுமே பயன்படுத்தும் டிஜிட்டலேசன் நாட்டில் 40 கோடி மக்களுக்கு எந்த பயனும் இல்லாத இந்த 4G யோ 5G யோ யாரின் நலனுக்கானது என்று சொல்லவோ நான் தொலிற்நுட்பத்திற்க்கு எதிரானவனோ அல்ல எனது ஒரு பழைய எழுத்தே உங்களுக்கு புரிந்துக் கொள்ள...  

சரி வாருங்கள் அலைகற்றை பற்றி ஒரு அடிப்படை புரிதல் தேவைக்காக

காற்றை காசக்கதுடிக்கும் கார்ப்ரேட்டுகள்

(4G அலைக்கற்றையும் அதன் உண்மையும்)-சி.பி.

அலைக்கற்றையும் அதன் தேவையும்:-

      மனித இன வளர்ச்சியின் ஒரு மைல் கல்லே தகவல் தொடர்பு தொழிற் நுட்பம். இன்றைய மிண்ணனு உலகில் அதிவேகமாக செயல்பட தேவைபடும் தொலைதொடர்பு தொழிற்நுட்பம் எப்படி உள்ளது அதன் சாதக பாதக தன்மையை இங்கே சுட்டிகாட்டுவதுடன், இந்திய மக்களை அரசும் அதேபோல் தரகு முதலாளிகளும் எப்படி ஏமாற்றி சுரண்டி கொண்டுள்ளனர் என்பதனை காண்பிக்க முயற்சிப்பேன்.

தினம் டெலிகம் நிறுவன முதலாளிகளின் சீண்டல் சினுங்கள், பிரதரிடமும், TRAI யிடமும் அளிக்கும் புகாரை நினைத்தால் 150 ஆண்டுகளுக்கு முன்னே பாட்டாளி வர்க்க ஆசான்களில் ஒருவரான எங்கெல்ஸ் தமது புகழ்மிக்கக் கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் என்ற நூலில் கூறுவதுபோல் ”முதலாளி செய்து வந்த எல்லாச்சமூக வேலைகளையும் இன்று சம்பளச் சிப்பந்திகள் செய்து விடுகின்றனர். லாபப்பங்கீடுகளை மூட்டை கட்டிக் கொள்வதையும் வட்டி லாபம் பெறுவதையும் முதலாளிகள் ஒருவர்முதலை ஒருவர் சூறையாடிக்கொள்ளும் பங்குச் சந்தையில் சூதாடுவதையும் தவிர முதலாளிகளுக்கு இனி சமூக வேலை எதுவும் இல்லாமற் போய்விட்டது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை முதலில் தொழிலாளர்களை வெளியே தள்ளுகிறது; இப்பொழுது அது முதலாளிகளையும் வெளியே தள்ளி, தொழிலாளர்களைச் செய்தது போலவே, இவர்களையும் சிறுமைப்படுத்துகிறது; உடனடியாகவே தொழில்துறை ரிசர்வ் பட்டாளத்தின் அணிகளுக்கு இல்லாவிட்டாலும், வேண்டாத உபரி மக்கள் தொகையோரின் அணிகளுக்குத் தாழ்வுறச் செய்கிறது.” என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.

 

மார்க்சிய ஆசானின் சொற்படியே இன்றுவரை இந்தியாவில் 4G தொழிற்நுட்பமே இல்லாமல் 4G க்கான கட்டணத்தை வசூலித்து கொண்டிருக்கும் இந்திய தொலைதொடர்பு துறையில் முன்னனி நிறுவனமான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜீயோ உள்ளே நுழைவதையே தன் நிலை பறி போய்விடும் என்று பதறுகின்றது.

 

நான் சில தினங்களாக மிண்ணனு ஊடகம் 4G மற்றும் JIO பற்றிய பல விவாதங்கள் வந்துகொண்டுள்ளதன் அடிப்படையில் அதன் உண்மைதன்மையை விளக்கியே இந்த பதிவை எழுத நினைக்கிறேன். என் அனுபவம் மற்றும் அறிவியல் பூர்வமாக விளக்க முயற்சிக்கிறேன். 4G தான் என்ன என்பதனை எழுத நினைக்கிறேன்.

தொழில் வளர்ச்சி என்பது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக  இருக்க வேண்டும், மனித குலவளர்ச்சியின் அடிப்படையே அறிவியலாலும் சிந்தனையாலும் உயர்ந்த இந்த சமூகம், இன்று சில பெரும் முதலாளிகளின் தேவைக்கும் பன்நாட்டு கம்பெனிகளும் சுரண்டலுக்கேற்றவாறு போட்டிபோட்டு கொண்டு உலகையே ஒரே கொடையின் கீழ் கொண்டு வர துடிக்கும் ஏகாத்திபத்தியமும், ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்பாடையில் நாடுகளை மையபடுத்தும் தேசியம் பேசும் ஆளும் கும்பலும் தரகு முதலாளிகலும் தன் சுரண்டலுக்கு ஏதுவாக மைய படுத்தபட்ட ஓர்  கூட்டம் வேண்டும், கலாச்சார ரீதியாக அந்த கூட்டம் முதலாளிகளின் அடிமைகளாக வாழும் மேல் தட்டு மக்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டால் உயர்ந்து கொண்டிருக்கும் ஒரு கும்பலும் இதே கூட்டதை சாரும்.

உண்ண உணவில்லை உடுக்க உடையில்லை தங்க இருப்பிடமில்லை இதில் டிஜிடல் உலகை கடைவிரிக்கும் அரசும் கார்ப்ரேட்களும் என்ன எண்ணத்தில் இருப்பார்கள் என்பதனை நான் விவரிக்க தெவையில்லை. ஒருபுறம் கோடிக்கணக்கான மக்கள் ஒரு நேர உணவின்றியும், நிறந்தர வேலையின்றியும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் வாங்கும் திறன் கொண்ட அந்த சில கோடி பேரை வலைவீசி அழைகின்றனர் டிஜிடல் உலகை காண.

ஊழலின் ஊற்று கண்ணான தனியார் துறையும் பன்நாட்டு கம்பெனிகளும் போட்டி போட்டு கொண்டு தொலைதொடர்பு துறையில் நுழையும் போது பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்தை அ்ரசு வளர்த்தெடுக்காமை ஏனோ? நாட்டின் பெரும் பொருட்செலவில் பல விண்கோல்களை தொலைதொடர்பு துறைசார்ந்த பயன்பாட்டிற்க்கு அனுப்பியுள்ள அரசானது, பல லட்சம் விவசாயிகள் இறந்த பின்னும் கண்டு கொள்ளாத அரசு தொலைதொடர்பு துறையில் தனியார் நிறுவனங்களுக்கு கொட்டிகொடுக்கும் மானியம் வரி சலுகை பல்லாயிரம் கோடி இதை நிருபிப்பது போலவே அன்மையில் மோடி அரசின் தொலைதொடர்பு ஊழல் 45,000 கோடி ரூபாய், இந்த ஊழல் மையபடுத்தபட்ட பொதுசேவை வரியால் (GST) மூடி மறைக்கபட்டுள்ளது.

 

அலைக்கற்றை குறித்த விளக்கத்திற்க்கு வருவோம்:-

     நாம் இன்றைய டிஜிடல் உலகை அறிய ஏர்டெல் நிறுவனத்தின் கடந்தகால விளம்பரம் அதன் உண்மைதன்மை மற்றும், மக்களின் அறியாமையை பயன்படுத்தும் கார்ப்ரேட்டுகளின் கொள்ளை இவற்றை விளக்கினாலே சில பகுதி சுலபமாக புரிந்து கொள்ள முடியும் ஆகவே ஏர்டெலின் 4ஜீ பற்றி பொய்யான விளம்பர உத்தியை முதலில் அறிவோம். டேட்டா என்றும் வாய் கால் என்றும் கோடி கோடியாக மக்களிடமிருந்து கொள்ளை அடித்து கொண்டிருக்கும் ஏர்டெல் ஆகஸ்ட் 2015 ல் இந்தியாவின் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சவால் விடுத்தது. ஏர்டெல் 4Gயை விட அதிகமான வேகம் உள்ள எந்த நெட்வொர்க்காவது உண்டா என்று கேட்டது. அப்படி இருப்பதாக நிரூபித்தால், நிரூபித்தவரின் வாழ்நாள் முழுமைக்குமான மொபைல் செலவுகளை ஏற்கத் தயார் என்றது. 2015 ஆகஸ்ட் 6 முதல் நாடு முழுவதும் 4G சேவையை ஏர்டெல் வழங்குவதை உறுதிபடுத்தியது ஏர்டெல் நிறுவனம், இது எவ்வளவு பெரிய ஏமாற்று என்பதனை கண்கூடாக அறியலாம் 4G ஏலம் இப்பொழுது அரசு அறிவித்துள்ளது ஆனால் ஏர்டெல் நிறுவனமோ ஒருவருடத்திற்க்கு முன்னிருந்தே 4G க்கான கட்டணத்தை மக்களிடமிருந்து வசூலித்து கொண்டிருக்கினற்து.

மெய்யான 4Gஅல்ல! LTE தொழில்நுட்பம்தான்!

ஏர்டெல் வழங்கும் 4G மெய்யான 4G தொழில்நுட்பம் கொண்டதல்ல. இது LTE (LONG TERM EVOLUTION) எனப்படும் தொழில்நுட்பம் ஆகும். 4G சேவை என்றால், 4G அலைக்கற்றை (4G Spectrum) வேண்டும் அல்லவா? ஆனால், இந்திய அரசு இதுவரை 4G அலைக்கற்றையை ஏலம் விடவோ ஒதுக்கீடு செய்யவோ முன்வரவில்லை என்னும்போது, 4G சேவை என்று உரிமை கோருவது சரிதானா?(தோழர் பிச்சையாண்டி அவரின் முகநூல் பதிவிலிருந்து) ( 4ஜீ ஏலம்  இந்த மாதம் பரிசிலிக்கபட்டு 1 அக்டோபர் 2016 நடைபெறவுள்ளது, 4ஜீ நெட்வொர்க்கின்றி மக்களிடம் 4 ஜீக்கான கட்டணம் வசூலிக்கும் இவ்வளவு பெரிய திருட்டை நாட்டின் அரசும் மக்களிடம் மறைத்துள்ளதை என்னவென்று சொல்ல).

LTE தொழில்நுட்பம் என்பது இருக்கின்ற 3G அல்லது WiMAX அலைக்கற்றையை வைத்துக் கொண்டு அதில் தேவையான மேம்பாடுகளைச் செய்வதன் மூலம் 3Gயை விட அதிகமான வேகத்தைத் தருவது என்பதுதான். கொல்கத்தாவில் 4G சேவை வழங்கியதாக உரிமை கோரிய ஏர்டெல் நிறுவனம், சீனாவின் மொபைல் உற்பத்தி நிறுவனமான ZTE நிறுவனத்துடன் சேர்ந்து TD-LTE தொழில் நுட்பத்தில் சேவையை வழங்கியது. (TD என்றால் Time Division என்று பொருள். Time Division, Code Division, Frequency Division ஆகியவை தொலைதொடர்பின் தொழில்நுட்பங்கள் ஆகும்). LTE என்பது 3Gயை விட மேலான ஆனால் 4Gயை விடக்குறைந்த சேவை ஆகும். அதாவது 3Gக்கும் 4Gக்கும் இடைப்பட்ட சேவை ஆகும். (It is a rational number between 3 and 4 but well beyond 3.5) அப்படியெனில் 4ஜீதான் என்ன? (கீழே உள்ளன ).

மெய்யான  அலைக்கற்றையை  அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு?

ஐ.நா.வின் சார்பு அமைப்பான (agency) ITU (International Telecommunications Union) எனப்படும் சர்வதேச தொலைதொடர்புச் சங்கம் என்ற அமைப்புதான், உலகளவில் 2G, 3G, 4G ஆகிய தொழில்நுட்பங்களை வரையறுத்து, வகை பிரித்து, அடையாளப்படுத்தி அறிவிக்கும் அதிகாரம் படைத்த ஒரே அமைப்பாகும். வேறு எவருக்கும் இந்த அதிகாரம் கிடையாது.

ஏர்டெல் திவால் ஆகும்!

சர்வதேச அளவில் ஏர்டெல் வழங்கும் LTE வேகம் 183 நிறுவனங்களில் 147 ஆம் இடத்தில் உள்ளது  முதலிடத்தில் நியூசிலாந்து36 Mbps வேகத்துடனும், இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் 33 Mbps வேகத்துடனும் உள்ளன. 4G என்பது 100Mbps லிருந்து 1Gbps வரை பதிவிரக்கமும் பதிவேற்றமும் இருக்க வேண்டும் ஆகையல் ஏர்டெல் இங்கே கொடுத்துள்ளது LTE தொழிற்நுட்பம் மட்டுமே 4G அல்ல எனவே, அதெ LTE தொழிற்நுட்பத்திலும் எங்களை விட வேகம் யாருக்காவது உண்டா என்று ஏர்டெல் இந்தியாவில் மட்டும்தான் கேட்க முடியும். உலகத்தை நோக்கிக் கேட்டால் என்ன ஆகும்? அத்தனை பேரின் மொபைல் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் ஏர்டெல் திவால் ஆகும்!

இப்படி அரசும் கார்ப்ரேட்டும் மக்களின் வாங்கும் திறன் கொண்ட மக்களை குறி வைத்து காற்றை காசாக்கும் தந்திரத்தை, டேட்டா என்றும் வாய்ஸ் கால் என்றும் மக்களை ஒட்ட சுரண்டுவதுடன் ஏழை எளிய மக்களுக்கு எட்டாகனியாக ஆகவுள்ளது முபைல் போன் பயன்பாடு, இந்த டெலிகாம் நிறுவனங்களின் உண்மையான முகத்தையும் சரியான அலைக்கற்றை அளவுகளை பற்றியும் நான் எழுத உள்ளது மக்களை தெளிவு பெற சிறிதேனும் பயன்பட்டால் நன்று.

 

இனி தொடருவோம் அலைகற்றை பற்றி (அறிவியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் காணுவோம்)

1G (1 ஜெனரேசன்) வர்த்தக அடிப்படையில் ஜப்பானின் நிப்பான் கம்பெனி உலகில் முதல் முதலில் 1979ல் டோகியோவில் முபைல் டெலிகம்யூனிகெசன் தொடங்கியது, இவை தொடர்ந்து 5 வருடத்தில் மொத்த ஜப்பானில் சேவை விரிவு படுத்த பட்டது. 1G  என்பவை அனலாக் அடிப்படையாக கொண்ட ரேடியோ சிக்னல் 2G என்பது டிஜிடலை அடிப்படையாக கொண்ட ரேடியோ சிக்னல், இதனை நாம் முன்னர் TV காண பயன்படுத்திய பெரிய குடையும் அனலாக் ரிசிவரையும் தற்பொழுது டிஜிடல் ரிசிவர் இடம்பிடித்துள்ளதை பெரும்பாலான வீட்டில் தொலைகாட்சி காண்பவர்கள் அறிவார்கள்.(1G 150 MHz அலைக்கற்றையை கொண்டது ).

2G ( 2 ஜெனரேசன்)  யானது இதுவரை பேச மட்டுமே இருந்த(1G) முபைல் போன் SMS,MMS ஆகிய செய்திகள் பறிமாறி கொள்ள பயன்பட்டது இதற்க்கு டேட்டா(Data) தேவைபட்டது. இவையே பேசவும் தகவல் அனுப்பவும் பயன்பட்டது ஆகையால் அன்லாக் முறையிலான 1G நெட்வொர்க் தேவையின்றி போய்விட்டது. 1991ல் 2ஜீ நெட்வொர்க் தொடங்கபட்டது.2G தொழில் நுட்பமானது  இரண்டு பகுதியானது ஒன்று time division multiple access (TDMA)-மற்றொன்று code division multiple access (CDMA)இவை அதில் பயன்படுத்தும் ரேடியோ அலைவரிசை கடத்தும்(multiplexing ) அடிப்படையில் இவை பிரிக்கப் பட்டுள்ளது.. 2G மிக முக்கிய GSM (அய்ரோப்பியாவை மையமாக கொண்ட டெலிகாம் நிறுவனங்களும்) மற்றும் CDMA (அமெரிக்காவை ஆசிய பகுதிகளை முதன்மையாக கொண்ட நிறுவனங்கள்) பயன்படுத்துகின்றது. இவை 450MHz frequency band அடிப்படையிலானவை.மக்களின் பயன்பாடு 2G ல் அதிகரிக்க தொடங்கியது அதற்கேற்றால் போல் டெலிகம் புதிய தொழிற்நுட்பமான GPRS (General Packet Radio Service ) சேவையை புகுத்தியது,  இதன் டேட்டா வேகமானது 50 kbit/s (40 kbit/s in practice) இவையும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யாமையால் புதிய EDGE (Enhanced Data Rates for GSM Evolution) என்ற தொழிற்நுட்பமான புகுத்தப்பட்டது, இதன் டேட்டா வேகமானது 1 Mbit/s (500 kbit/s in practice).முறையே 2G அய்  2.5G(GPRS) என்றும் 2.75(EDGE) என்றும் அழைப்பர். 2G நெட்வொர்க்கானது வாய்ஸ் அடிப்படையாக கொண்டது டேட்டாவானது மிகவும் மெதுவாக செயல்படுபவை. ஆகவே இன்னும் மிக அதிவேக அலைக்கற்றையை தேடிய போது LTE என்ற புதிய தொழிற்நுட்பம் அறிமுக படுத்த பட்டது.

இனி 3G மற்றும் 4G என்றால் என்ன?

மேலே நான் ஏர்டெல் பற்றிய விளக்கத்தில் இது 4G அல்ல 3Gதான் என்று கூறியுள்ளது போல சில தொழில் நுட்பம் மட்டுமே ஆகையால் இனி LTE பற்றி அறிவோம் LTE ஆனது FDD மற்றும் TDD பயன்முறை இரண்டையுமே ஆதரிக்கிறது. டூப்ளக்ஸ் அதிர்வெண் இடைவெளியால் பிரிக்கப்பட்ட UL மற்றும் DL பரிமாற்றத்துக்காக இணையாக்கப்பட்ட அலைக்கற்றையை பயனுள்ளதாக FDD ஆக்குகின்ற அதேவேளை, காப்பு நேரத்தால் பிரிக்கப்பட்ட UL மற்றும் DL க்காக பயன்படுத்தப்படும் அதே அலைக்கற்றையை வளங்களைப் பயன்படுத்துவதை TDD மாற்றீடாக்குகிறது. ஒவ்வொரு பயன்முறையும் LTE இற்குள் அது அதற்குரிய சொந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது, இவை ஒன்று மற்றதுடன் சீரமைக்கப்பட்டுள்ளன,

நாம் தேடி கொண்டிருக்கும் 4G நெட்வொர்க் என்பது நொடிக்கு 100 Mbps அதிக அளவாக இறக்குத்தொடுப்பு (டவுன்லிங்க்) வீதத்தையும், நொடிக்கு 50 Mbps குறைந்த அளவாக ஏற்றுத்தொடுப்பு (அப்லிங்க்) வீதத்தையும், 10 மி.வி ஐவிடக் குறைவான RAN ரவுண்ட்-டிரிப் டைம்களையும் வழங்குகிறது. LTE 20 MHz இலிருந்து குறைந்து 1.4 MHz வரையான அளக்கக்கூடிய கேரியர் கற்றை அகலங்களை ஆதரிக்கும், மேலும் அதிர்வெண் பிரிவு டுப்ளக்ஸாக்கம் (FDD) மற்றும் நேரப் பிரிவு இரண்டாக்கம் (TDD) இரண்டையுமே ஆதரிக்கும்.இந்த தரத்தை அடையும் போது அதனை 4G எனலாம்.

LTE தரத்தின் கட்டமைப்பு வளர்ச்சி, இது ஒரு தள IP-அடிப்படையான வலையமைப்பு கட்டமைப்பு, GPRS கோர் நெட்வொர்க்கை இடமாற்றவும் அதற்கான ஆதரவை உறுதிப்படுத்தவும் மற்றும் சில மரபுவழி அல்லது 3ஜிபிபி அல்லாத முறைமைகளுக்கு, எடுத்துக்காட்டாக முறையே GPRS மற்றும் WiMax, இடையிலான நகர்வுக்குமாக வடிவமைக்கப்பட்டது.LTE இன் பிரதான நன்மைகளாவன உயர் செயல்வீதம், தாழ் செயலற்ற நிலை, பிளக்-அண்டு-பிளே, ஒரே பணித்தளத்தில் FDD மற்றும் TDD, மேம்படுத்தப்பட்ட இறுதிப் பயனர் அனுபவம் மற்றும் குறைந்தளவு இயக்க செலவுகளை ஏற்படுத்துகின்ற எளிமையான கட்டமைப்பு. LTE ஆனது GSM, cdmaOne, W-CDMA (UMTS), மற்றும் CDMA2000 போன்ற பழைய வலையமைப்பு தொழில்நுட்பத்தைக் கொண்ட செல் கோபுரங்களுக்கு பொருத்தில்லாத கடத்தலையும் ஆதரிக்கும். இதுவறை நாம் முபையில் துறையில் (டெலிகம்யூனிகேசன்) வளர்ச்சியை கண்டோம். இனி நாளைய அலைகற்றை பற்றி பார்ப்போம்.

இனி Reliance JIO பற்றி சற்று அறிவோம்:-

டிசம்பர் 2015லிருந்து சோதனை அடிப்படையில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஜீயோ என்றழைக்கபடும் முகேஸ் அம்பானியின் டெலிகாம் நிறுவனம் நேரடியாக 4ஜீ சேவையில் பல சலுகை மற்றும் சரியான விதிமுறைபடி 2016-2017ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தடம்பதிக்க உள்ளது. இதன் பல அறிவிப்புகள் புதுமையாக உள்ளமையால் ஏற்று கொள்ள கடினமாக உள்ளது. இதுவரை நாம் அழைப்புக்கு தனியாகவும் டேட்டாவிற்க்கு தனியாகவும் பணம் செழுத்தியவர் இனி டேட்டாவிலே பேசுவதனால், டேட்டா மட்டும் புதிபித்து கொண்டால் போதும் எவ்வளவு பேசினாலும் இலவசம் என்கின்றது ஜியோ. 2035 வரை அனுமதி பெற்றதாக கூறும் ஜீயோ மூன்று அலைவரிசை (அலைகற்றை) கையில் கொண்டுள்ளது 800 MHz, 1,800 MHz bands மற்றும் 2,300 MHz spectrum இவை மற்றுமின்றி அனில் அம்பானியின் Reliance Communications உடனான உடன்படிக்கையின் அடிப்படையில் R.Comமின் 800 MHz band யும் பயன்படுத்தி கொள்ள உள்ளன . நாட்டின் நகரங்களை இணைத்துள்ள ஜீயோ கிரமங்களை அடுத்த நிதியாண்டில் இணைக்க உள்ளதாக கூறியுள்ளது. எல்லா முக்கிய சாலைகளையும் இரயில் பாதையையும் மற்றும் முக்கிய வணிக வளாக பகுதிகளை முழு வீச்சில் இணைத்துள்ள ஜீயோ புதிய தொழிற்நுட்பத்துடன்  பெரும் பொருட் செலவில் (1.2 லட்சம் கோடி ரூபாய் ஜீயோவிற்க்கு செலவளித்துள்ளதாக – மு.அம்பானி தெரிவிக்கிறார்) ஆரம்பிக்கவுள்ள ஜீயோ என்பது நாம் இப்போது பார்த்து கொண்டிருக்கும் ஏர்டெல் போல் இல்லாமல் பல அதி நவின முறையில் வரவுள்ளன. எல்லா தொலைகாட்சி நிகழ்ச்சியும் நேரடியாகவும், எல்லா ஊடக நூல், பத்திரிக்கை ம்ற்றும் மேகசின் (டிஜிடலில் உள்ள) நேரடியாக பார்த்து படித்து கொள்ளலாம் பேசுவதை மிக தெளிவாக கேட்கும் தரம் உள்ளதுடன் தொடுதிரையை தொட்டவுடன் அடுத்தவரை தொடர்பு கொள்ளமுடியும் போன் ரிங்க் ஆகும் முன், பழைய் தொழிற்நுட்பத்தில் எந்த ஒரு பதிவிரக்கம் செய்யவும் பல நிமிடங்கள் காத்துகிடக்க வேண்டியிருந்தது ஆனால் ஜீயோவில் நீங்கள் தொட்டவுடன் தொடங்கிவிடும் TV, Cinema எந்த பதிவிரக்கமும். இதுவரை வீட்டில் மட்டுமே தொல்லைபடுத்தி கொண்டிருக்கும் TV இனி உங்களின் கையில் எல்லா சேனல்களும், அதேபோல் எந்த சினிமா பாடல் வேண்டுமாயினும் HD Video திறனுடன் உங்கள் கையில் மேழும் எல்லா வார மாத இதழ்களும் உடன் படித்து கொள்ளலாம். இப்படி தொழிற்நுட்பம் மேன்மையை மக்களின் அறிவு வளர்ச்சிக்கா அல்லது கார்ப்ரேட்டின் ஏகபோக கொள்ளைக்கா?

இங்கே நாம் JIO மற்றும் ஏர்டெல் பற்றி அறிந்து கொண்டோம் இவை மற்றுமின்றி இந்திய பொதுத்துறை நிறுவனமான BSNL எல்லா கட்டுமானம் தொழிற்நுட்பம் இருந்தும் அதன் வளர்ச்சியை அரசே தடைபடுத்தி அதன் சேவையை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திகொள்ள சதிவேலையில் ஈடுபட்டுள்ள அரசின் திட்டங்களை என்னவென்று சொல்ல?.

இனி இந்திய தொலைதொடர்பு சேவையும் அதன் உண்மைதன்மையும்

இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களை நிர்வகிக்கும் TRAI மற்றும் DOT இவை எல்லா டெலிகாம் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தி விதிமுறையின் அடிப்படையில் செயல்பாட்டை கண்கானிக்கும் கடமைபட்டது ஆனல் அவை ஆளும் கும்பலின் கைபாவையாக உள்ளது வருத்தமளிக்கிறது.

இன்றைய ஆளும் கும்பலின் கைபாவையாகி போனது டிராய், தனியார் நிறுவனங்கள் கிராமங்களுக்குச் சேவை செய்யவில்லை என்றால் அபராதம்செலுத்தவேண்டும் என்பது டிரையின் விதி ஒன்று உள்ளது., கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தனியார் நிறுவனங்கள் அபராதமாக 16½ லட்சம் கோடி செலுத்தவேண்டியுள்ளது. சி.ஏ.ஜி. ரிப்போர்ட் தெளிவாகச் சொல்கிறது. இதை வசூல் செய்ய, காங்கிரசு விரும்பவில்லை. இப்போது ஆளக்கூடிய பா.ச.க முயலவில்லை. என்ன காரணம்? என்ன ஊள்நோக்கம்? ஆட்சியில் உள்ளவர்கள் இலாபம் அடையத்தானே!!!

BSNL. நிருவாகம் வடகிழக்கு மாநிலங்களில் அசாம், உத்தரகாண்டு உள்ளிட்ட பாதிப்படைந்த மாநிலங்களிலும், காசுமீர் போன்ற எல்லையோர மாநிலங்களிலும், வளர்ச்சி குறைவான பீகார், இராசஸ்த்தான், ஒரிசா போன்ற மாநிலங்களிலும் லாபம், இழப்பு பார்க்காமல் சேவை நோக்கத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.

டிராய் விதியை மதிக்காத தனியார் நிறுவனங்கள் நான்கு டவர்கள் மூலம் அனுப்பவேண்டிய அதிர்வலைகளை, ஒரு டவர் மூலமாக (அதிக ரேடியோ அதிர்வலையை பயன்படுத்திப் 'பூஸ்ட்' செய்து) அனுப்புவதால் பயனாளிகள் உறுதியாய் உடல்அளவில் பாதிக்கப்படுவார்கள். இவற்றையெல்லாம் கண்காணிக்கும் டிராய் அமைதி காத்து வருகிறது.

BSNL பொதுத்துறை நிறுவனம் என்பதனால் ஆளும் கும்பலின் பலியாடாய் கார்ப்ரேட்டுகளின் கொள்ளை காடாய் மாறியுள்ளது.எல்லா தனியார் துறை டெலிகாம் நிறுவனங்களும் BSNL நிறுவனத்தை தங்களின் தேவையை பயன்படுத்தி கொண்டு அவற்றை அழிக்க முற்படுகின்றது.இப்படியாக பொதுத்துறை நிறுவனத்தின் வளர்ச்சியை தடுத்து தனியார் நிறுவனங்கள் வளர ஆளும் கும்பலே துணை போகின்றது.

ஊழலே வரலாறக தொடரும் அலைக்கற்றை ஒதுக்கீடு:-

மத்திய அரசின் முதல் தொலைதொடர்புதுறை மந்திரியான சுக்ராம் தன் படுக்கை அறையிலே 1996ல் 3.6 கோடி ரூபாய் வைத்திருந்ததை CBI கண்டுபிடித்தது.  உலகறிந்த 2G அலைகற்றை ஊழல் US$26 billion என்று 2010 கணக்கின் அடிப்படையில் CBI, CAG அறிக்கை கூறுகின்றது..இவற்றை அன்றைய தொ.தொ. மந்திரியான எ.ராஜா மீதும் இன்னும் பலர் மீது CBI சுமத்தியது. இவை எல்லாம் மக்கள் வரி பணத்தை கார்ப்ரேட் மற்றும் ஆளும் கும்பலின் இந்த கொள்ளையை விளக்க நான் வேறு பதிவு எழுத வேண்டியிருக்கும், ஆகையால் நான் இதனை அதிகம் எழுதுவதை தவிற்த்து அரசும் கார்ப்ரேட்டுகளும் சேர்ந்து அடிக்கும் திருட்டின் புதிய வடிவமாக மோடியின் அரசின் தொலைதொடர்பு ஊழல் ரூ.45,000 கோடி இதை GST மசோதா மூடிமறைத்துவிட்டது. இப்படி தொடர்கதையாகி கொண்டிருக்கும் ஊழல் புராணம், இந்த தரகு முதலாளிகளின் தலைமையிலான அரசின் கையில் தீர்வு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

எல்லா மக்களுக்கும் எல்லா முபைல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்த தனியார் துறையால் முடியாது, லாபம் மட்டுமே குறிக்கோளக கொண்ட தனியார் நிறுவனம் தன் வளர்ச்சிக்கு அரசின் அதிகாரிகளுக்கும் ஆளும் கும்பலுக்கும் லஞ்சம் கொடுத்து வரி ஏய்ப்பாலும் கருப்பு பண பதுக்களாலும் தன் பணப்பையை பெருக்கி மட்டுமே கொள்ளும் மக்கள் சேவையிருக்காது, ஆகவே பொதுத்துறை நிறுவனமான BSNL வளர்த்தெடுத்து மக்கள் தேவை சேவை இவையால் மட்டுமே முடியும்.  

முடிவுரை:-

 * புதிய காலனிய ஆட்சிமுறையை பயன்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் நாட்டின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்காக கொடுக்கும் விலையே ஊழல்!
* ஊழலின் ஊற்றுக்கண்ணான உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை கைவிடு! பொதுத்துறை நிறுவனமான BSNL வளர்த்தெடு!
* ஊழல் செய்யும் முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!
* ஆளும் வர்க்கத்தின் எந்த ஒரு பிரிவாலும் ஊழலை ஒழிக்க முடியாது!!
* பொதுத்துறை நிறுவனமான BSNL க்கு நிதி அளி அதை மக்கள் சேவைக்கு பயன்படுத்து! எல்லா தனியார் துறையையும் மூடு!!!

* ஊழலை ஒழிக்க மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

ஆதாரம்:-

· http://www.myjio.

·  http://www.betanews.com/article/European-Commission-pumps-a18-million-into-LTE-research/1250618141

 ·  http://www.npstc.org/documents/Press_Release_NPSTC_Endorses_LTE_Standard_090610.pdf

 ·  http://www.fcc.gov/Daily_Releases/Daily_Business/2009/db0814/DA-09-1819A1.pdf

4ஜீ வந்த பொழுது எழுதிய கட்டுரை இன்று தேவைக் கருத்தி பதிவு செய்கிறேன்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது அதனை பற்றி ஒரு அலசல்


 நேற்று(24/07/2022) நடந்து முடிந்த தேர்வு பற்றி பத்திரிக்கைகள் தகவல்களை கொடுத்து விடுகின்றன அதனை சமூக நிகழ்வோடு ஆராய்ந்து பார்க்க வேண்டிய கடைமை நமக்குள்ளதல்லவா?

ஸெய்தியின் சுருக்க:-  தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 18½ லட்சம் பேர் எழுதினார்கள். 3½ லட்சம் பேர் எழுதவில்லை. சென்னை, 397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை குரூப்-4 பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் ஒப்பிடும்போது இதுதான் அதிகபட்சமாக  இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு 20 லட்சத்து 76 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்து இருந்ததுதான் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து வேலைவாய்ப்புக்காக காத்திருந்த ஏராளமானோர் இதற்கு விண்ணப்பித் துள்ளனர். 

 3½ லட்சம் பேர் வரவில்லை .  22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதாவது 3 லட்சத்து 52 ஆயிரத்து 471 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது 84 சதவீதம் பேர்தான் இந்த தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஒரு பணியிடத்துக்கு 253 பேர் வரை போட்டியிடுகின்றனர். இந்த தேர்வின் முடிவு வருகிற அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அதனைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும் அதே மாதத்தில் நடத்தப்பட்டு, நவம்பர் மாதத்துக்குள் கலந்தாய்வும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரி



மாஞ்சோலை தொழிலாளர் போராட்ட வரலாறு

 


ஜூலை 23, 1999 தமிழ்நாட்டின் மற்றுமொரு கருப்பு தினம். அடிப்படை உரிமைக்காக போராடிய தோட்டத் தொழிலாளர்களை திட்டமிட்டுக் கொன்று ஆற்றில் வீசியது தமிழ்நாட்டுக் காவல்துறை. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசும் அரசியல்வாதிகளும் இழைத்த அநீதி, 22 ஆண்டுகளாக இன்றளவும் உரிமைக்காகப் போராடும் மக்களின் மனதில் பெரும் வடுவாகவே உள்ளது.

மாஞ்சோலை வரலாறு

இயற்கை எழில் மிகுந்த திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட்கள் அமைந்துள்ளது. இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் சிங்கம்பட்டி ஜமீன்தார், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மனின் போர் வெற்றிக்கு உதவினார். இந்த உதவிக்கு நன்கொடையாக மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 74 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை மன்னர் மார்த்தாண்டவர்மன் சிங்கம்பட்டி ஜமீனுக்கு வழங்கினார்.

1930-இல் ஜமீன் தன்னிடம் இருந்த நிலத்தில் 8,374 ஏக்கரை, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மார்வாடி முதலாளி நுலேவாடியா என்பவரின் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பிபிடிசி) என்ற தனியார் நிறுவனத்திற்கு 110 வருட காலம் குத்தகைக்குக் கொடுத்தார். பின் 1948-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில், அனைத்து ஜமீன் சொத்துக்களும்  அரசுடைமையாக்கப்பட்டன. இதனால் மீண்டும் பிபிடிசி நிறுவனம் அப்போது ஆட்சியில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிடம் 2029-ஆம் ஆண்டு வரைக்கான ஒப்பந்தத்தை சில நிபந்தனைகளுடன் புதுப்பித்துக்கொண்டது.

 

மக்களின்  வாழ்வியல்

திருநெல்வேலியை சுற்றியுள்ள மாவட்டங்களில் பஞ்சம், பட்டினி மற்றும் சாதி ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியலின மக்கள், 1929-ஆம் ஆண்டு முதல் இந்த மலைப்பகுதியில் கூலி வேலைக்காக பிபிடிசி நிறுவனத்தால் குடியமர்த்தப்பட்டனர். நான்கு ஐந்து தலைமுறைகளாக இங்கு வேலை செய்யும் பட்டியலின மக்களே மேற்கு தொடர்ச்சி மலையை, தேயிலை, ஏலம், மிளகு மற்றும் காபி போன்ற பணப்பயிர்களை விளைவிக்கும் எஸ்டேட்களாக உருவாக்கினர்.

வெளியூரிலிருந்து இங்கு குடியமர்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் கடும் குளிருக்கும், வேலை சுமைக்கும் நடுவில், அடிப்படை வசதி இல்லாமல் ஒரே வீட்டில் 5, 6 குடும்பங்களாக, தங்களுக்கென்று ஒரு அடி நீளம் கூட இல்லாமல் சொந்த நாட்டில் அகதிகளாகவே வாழத் தொடங்கினர்.

இங்கு, சுமார் 5,000-திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தோட்டத் தொழிலாளர்கள் இருந்தனர். இவர்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளையோ, கால்நடைகளையோ வளர்க்கக் கூட நிறுவனம் அனுமதியளிக்கவில்லை என்று கூறுகிறார் மாஞ்சோலையில் வளர்ந்த வழக்கறிஞர் திரு. இராபர்ட் சந்திரசேகர் அவர்கள்.

 

போராட்டமே வாழ்க்கை

இந்தியா சுதந்திரம் அடைந்ததையே பொருட்படுத்தாமல் தங்கள் அடிமை வாழ்க்கையை தொடர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் முதல் போராட்டம், மலைப்பகுதியில் தேயிலைப் பறிக்க டிராலி வண்டிகளை அறிமுகப்படுத்தியதற்கு எதிராக 1968-ஆம் ஆண்டில் நடந்தது.

1978-இல் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பிற வேலை நேரத்தைப் போலவே கூடுதலாக இரண்டு இட்லி காலை உணவாகக் கொடுக்க வேண்டும் என்று போராடினர்.

மற்றும், குடியிருப்பிலிருந்து பல மைல் தூரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோட்டத்திற்குச் செல்ல கூடுதலாக 10 நிமிடம் தரவேண்டும் என 1988-இல் போராடினர்.

அனைத்துப் போராட்டங்களிலும் வெற்றியும் பெற்றுள்ளனர். இவ்வாறு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் உரிமைக்காக இந்த மக்கள் குரல் எழுப்பிக் கொண்டே தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், தினக்கூலிக்கு வேலை செய்யும் இவர்கள் முன்னெடுத்த எல்லாப்  போராட்டங்களும் எப்பொழுதுமே வேலை நேரத்திற்கு முன்பு அல்லது மாலை நேரத்தில் மட்டுமே இருந்தது என்றார் வழக்கறிஞர் திரு. இராபர்ட் அவர்கள்.

 

1998 மக்களவைத் தேர்தல்

1998 ஜூலை மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாஞ்சோலை மக்களை சந்தித்தார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அந்த மக்களுக்கு அடிப்படை ஊதியம் 33 ரூபாயும், இதர படிகள் சேர்த்து 56 ரூபாய் மட்டும் தினக்கூலியாக வழங்கப்படுகின்றன போன்ற செய்திகளைக் கேள்விப்பட்டதும், கண்டிப்பாக இந்த கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து மக்களை விடுவிப்பதாக தொழிலாளர்களிடம் வாக்களித்தார்.

தேர்தலுக்குப் பின், தொழிலாளர்களுக்கு அடிப்படையாக ஒருநாள் சம்பளம் ரூ.150 தர வேண்டும், 15 கிலோவிற்கு மேல் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.5 அதிகமாக வழங்க வேண்டும், 8 மணி நேரம் வேலை நேரம் போன்ற தொழிலாளர்களுக்கான 25 அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற பிபிடிசி நிறுவனத்தை தேயிலைத் தொழிலாளர்களின் சார்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஆகஸ்ட் 20, 1998 வரை காலக்கெடுவும் கொடுத்தார். இதுவே மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆரம்பப் புள்ளி.

 

போராட்டம் தொடக்கம்

இவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நிறுவனத்திற்கு எதிராக ஆகஸ்ட் 20, 1998 அன்று தோட்டத் தொழிலாளர்கள் முதல் முறையாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று நிறுவனம் அறிவித்தது. இந்த தொழிலாளர்களுக்காக 1950-களில் இருந்து செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற தொழிற்சங்கங்களைக் கலைத்து, புதிய தமிழகம் கட்சி தனியாக ஒரு தொழிற்சங்கத்தை அமைத்தது.


இதுவரை சாதியக் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த புதிய தமிழகம் கட்சி முதல் முறையாக தொழிலாளர் பிரச்சனையை கையில் எடுத்தது. அன்றிலிருந்து பத்து நாட்களில் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களை கொண்டு வேலை தொடங்கப்பட்டதை எதிர்த்து மக்கள் தேயிலையை கொண்டுச் செல்லும் லாரியை மறித்து, விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீஸ் வரவழைக்கப்பட்டது. ஒரு வாரக்காலம் அங்கு ரோந்தில் இருந்த காவல்துறை தடியடி நடத்தி 127 பேரை கைதும் செய்தது. 40 நாட்கள் கழித்து திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் அமல்ராஜ் அவர்களின் உதவியால் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 4 மாதங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டனர். அதுவரை பெரிதாக வெளி உலகத்தொடர்பு இல்லாத மக்கள், தேயிலைத் தோட்டத்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாமல் மாதக்கணக்காக வறுமையில் வாடினர். தொடர்ந்து நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நிறுவனம் செவி சாய்கவில்லை. நான்கு மாதங்களுக்கு மேல் இந்த சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பேச்சுவார்த்தைக்குப் பின் சிலர் 1999 ஜனவரி மாதம் 5-ஆம் நாள் வேலைக்கு திரும்பினர். இதனால் தொழிலாளர்களுக்கும் கட்சித் தொழிற்சங்கத்தினருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் இடையே முதல்முறையாகப் பிளவு ஏற்பட்டதாக கூறிகிறார் வழக்கறிஞர் திரு. இராபர்ட் சந்திரசேகர். இதற்கிடையில் தொழிலாளர் அந்தோணி முத்து மற்றும் பாலகிருஷ்ணன் படுகொலையும் மக்களிடையே பதட்டத்தை உண்டாக்கியது. அந்தோணி முத்து கொலை வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 11 பேர் மேல் வழக்கு பத்தியபட்டது.

நான்கு மாத போராட்டத்திற்கு பிறகு வேலைக்குச் சென்ற மக்களுக்கு, முன்பு போராடிப் பெற்ற உரிமைகளைக் கூட கொடுக்க மறுத்தது நிறுவனம். மேலும், இந்தப் போராட்டத்தில் பங்குப் பெற்ற தற்காலிகப் பணியாளர்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது என்று நோட்டீசும் அனுப்பியது நிறுவனம். இதைக் கண்டித்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம்

இந்த வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து  ஏப்ரல், 30, 1999 அன்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி 8 மணி நேர  வேலை, தற்காலிகத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பது, மேலும் தொழிலாளர்களின் ஒழுங்கு நடவடிக்கையை விசாரிக்க தொழிலாளர்கள் இணை ஆணையருக்கு உரிமை போன்றவை வழங்கப்பட்டது. டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் ஒப்புதலுடனேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஆனால் 150 ரூபாய் கூலி உயர்வு தொழிலாளர்களின் சிம்ம சொப்பணமாகவே இருந்து வந்தது. இருப்பினும் வறுமையை போராட முடியாமல் மக்கள் மீண்டும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பினர்.   நிறுவனமும் இந்த உரிமைகளை வழங்க மனமில்லாமல் வழங்கியதாக கூறப்படுகிறது. மே 3 முதல் மக்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.

அதன்பின் மாஞ்சோலை வந்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், தொழிலாளர்களை மிரட்டியே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், இதை ரத்து செய்வதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து மீண்டும் போராடப் போவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணாசாமி அவர்கள் தொழிலாளர்களை ஒன்றுத்திரட்டி 1999 ஜூன் மாதம் 6 மற்றும் 7-ஆம் தேதி  தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்டனர். இதில் 451 ஆண்களும், மறுநாள் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய 198 பெண்களும், 4 ஆண்களும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். உரிமைக்காக போராடிய 652 தொழிலாளர்களைக் கைது செய்த சம்பவம் பொதுமக்கள்ளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கைது சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுமக்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பினர்.

 

மக்கள் பேரணி

அரசின் இந்த ஜனநாயகமற்ற செயலை கண்டித்து மக்கள் ஜூன் 23 ஒன்றுகூடினர். கைது செய்யப்பட்ட தொழிலார்களை விடுவிப்பதை பிரதான கோரிக்கையாகவும், கூலி உயர்வு மற்றும் எஸ்டேட்டை அரசே எடுத்து நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து சுமார் 5,000 தொழிலாளர்களும், கிராம மக்களும், பிற அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் 23 ஜூலை 1999-ல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக சென்றனர்.  திருநெல்வேலி சந்திப்பில் தொடங்கியப் பேரணி பெரும் உத்வேகத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றது. ஆனால், மாவட்ட ஆட்சியரை சந்திக்க அவர்களை காவல் ஆணையர் சைலேஷ் குமார் அனுமதிக்கவில்லை. ஆட்சியர் அலுவலகத்திற்கு 50 மீட்டர் முன்பே காவலர்கள் பேரணியை தடுத்து நிறுத்தினர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்தனர். ஆட்சியர் அலுவலக மதில் சுவருக்கும் தாமிரபரணி ஆற்றங்கரைக்கும் நடுவே பொதுமக்கள் செல்ல முயன்றனர். அப்பொழுது போலீஸ் வானத்தை நோக்கி சுட்ட துப்பாக்கிச் சத்தம் கேட்கவே, மக்கள் என்ன செய்வது என்று குழம்பிய நேரத்தில், காவல்துறை மக்கள் மீது தடியடி நடத்தி துரத்த ஆரம்பித்தது. உயிர் தப்பிப்பதற்கு வேறு வழி இல்லாமல் தாமிரபரணி ஆற்றில் மக்கள் இறங்கி மறுபுறம் செல்ல முயன்றனர். இதைக் கவனித்த காவல்துறையும், ஆற்றின் மறுபக்கம் சென்று மக்களைச் சுற்றி வளைத்து கரை ஏற விடாமல் அடித்தனர். அடிப்படை உரிமைக்காக போராடிய மக்களிடம் காவல்துறை கண்மூடித்தனமாக தடியடியில் ஈடுபட்டது. உயிருக்கு பயந்து ஓடிய மக்ககளை கற்கள் கொண்டும், கண்ணீர் புகை குண்டுகள் கொண்டும் காவல்துறை தாக்குதலில் ஈடுபட்டது. இறுதியாக, அடித்த ரத்தக் காயங்களுடன் மயங்கியவர்களின் உடலை ஆற்றில் வீசியது. ஒன்றரை வயது சிறுவன் விக்னேஷ் அவன் தாய் ரத்னமேரி, ஜோஸ்பின், ஷாநவாஸ், ஆறுமுகம், ரத்தினம், ஜெயசீலன், குட்டி (குமார்), ஜான் பூபாலராயர், இன்னாசி மாணிக்கம், ஆண்டணி, சஞ்சீவி, ராஜு, முருகன், வேலாயுதம், கெய்சர், அப்துல் ரஹ்மான் ஆகிய 17 பேரை காவல்துறைக் கொடூரமாகக் கொலைசெய்தது.

படுகொலை ஒருபுறம் இருக்க, கரையில் இருந்த மக்களை கடுமையாக தாக்கிக் காயப்படுத்தினர். கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் காயமுற்றுக் கிடந்த நிலையிலும் மக்களைத் தேடித்தேடி கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய  பத்திரிகையாளர்களையும் காவல்துறை தாக்கியது குறிப்பிடத்தக்கது. பெண்களின் ஆடைகளை உருவி அவமானப்படுத்தியது. மேலும் அடிபட்டு அருகில் இருந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தவர்களையும் வீடு புகுந்து தாக்கியது. மக்களை சாதியைக் குறிப்பிட்டு “உங்களுக்கு எல்லாம் ஒரு போராட்டமா? இனி போராடுவீர்களா?” என்றும், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் சாதி ஆதிக்க வெறியை வெளிப்படுத்தியது காவல் துறை.

மேலும், கிராமத்து மக்கள் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக இரத்தக் காயத்தோடு கரையொதுங்கிய உடலுக்கு பொய்க் கதையை போலீசார் ஜோடித்தனர். அதைப் போலவே, பிரேதப் பரிசோதனையிலும் மக்கள் நீரில் மூழ்கி இறந்ததாக மருத்துவர்கள் சான்று வழங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் கொல்லப்பட்ட போராளிகளுக்கு நீதி கேட்டு மறுபரிசோதனை செய்யக் கூறி பிணங்களை வாங்க மறுத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு, ஐந்து நாட்கள் கழித்து வெவ்வேறு இடத்தில் அரசே பிணங்களை புதைத்தது. யாரை எங்கு புதைத்தோம் என்று கூட மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

 

அரசின் அறிக்கை

அப்பொழுது மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் அவர்கள் தலைமையில் தனி நபர் கமிஷனை அமைந்தது. இதை விசாரித்த நீதிபதி மோகன் அவர்கள், 11 பேர் தண்ணீரில் மூழ்கியும் மற்றவர்கள் காயத்தால் இறந்ததாகவும் அரசுக்கு சாதகமாகவே குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்தப் பேரணியில் வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் எனவும் அறிக்கை சமர்ப்பித்தார்.

அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், தொழிலாளர்களுக்கான முழு சம்பள கோரிக்கையைத் தவிர மற்ற பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது என்றும், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் மட்டுமே காவலர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இந்த திட்டமிட்ட படுகொலையை நியாயப்படுத்தினார்.

47 நாட்களுக்குப் பின் ஜூலை 28-ஆம் தேதி, கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களும் விடுதலைச் செய்யப்பட்டனர்.  இத்தனை சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் வேலைக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு பல்வேறு இடைஞ்சல்களை நிர்வாகம் கொடுக்கத் துவங்கியது.. மேலும் 2001-ல் தான் தினக்கூலி 56 ரூபாயில் இருந்து 76 ரூபாயாக நிறுவனம் உயர்த்தியது.

பேரணி நடந்ததிலிருந்து 6 மாதத்தில் நடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சி 10 தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

பேரணியில் பங்கேற்ற மக்களின் நேர்காணல் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளையும் இணைத்து “நதியின் மரணம்“ என்ற ஆவணப்படத்தை 1999 அக்டோபர் மாதம் தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன், காஞ்சனை திரைப்பட இயக்கத்தில் வெளியிட்டார். இதற்கு வழக்கு பதியப்பட்டு, ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி கைது செய்யப்பட்டு 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு மக்களுக்காக போராடிய செயல்பாட்டளர்களை முடக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டது.

உரிமைக்காக ஒன்று சேரும் மக்களின் எழுச்சியை விரும்பாத அரசு, வன்முறை மூலம் தன் அடக்குமுறையையும் பனியாக்களுக்கான விசுவாசத்தையும் காட்டியது. முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களுக்கு பதில் மரணமாகவே இருந்தது.

இன்றும் ஜூன் 23-ஆம் தேதி தமிழ்நாட்டின் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. மக்கள் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவிடம் அமைப்பது 12 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே இருக்கிறது.

அதிமுக-பாஜக அரசால் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்காக நம் கண்முன்னே நடந்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு எந்த விதத்திலும் குறையாத கொடூரம்  மாஞ்சோலைப் படுகொலை என்றால் மிகையாகாது. அரசு என்றும் உழைக்கும் மக்களின் உரிமைக்குரலை நசுக்கவே பார்க்கிறது. மேலும், மக்கள் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டிய காவல்துறையினர் முதலாளித்துவவாதிகளின் அடியாட்களாக இருக்கின்றனர் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது இந்த இரண்டு சம்பவங்களும்.

மூலம் :-  https//may17kural.com/wp/history-of-manjolai-labourers-protest/

நமது சமூகத்தில் கல்விமுறையும், கல்வி பற்றி மார்க்சியமும்


நமது சமூகத்தில் கல்வியும். கல்வி பற்றி லெனினும் (இதனை அழுத்தி நேற்றைய வகுப்பை கேட்க்க முடியும் தோழர்களே)
 அமைச்சர் தொழிலாளர்களை துப்பாக்கி ரவைகள் எனவும் அறிவையும் கல்வியையும் தீப்பொறி எனவும் கருதுகின்றார் ;இந்த தீப்பொறி துப்பாக்கி ரவையில் விழுந்தால் அந்த வேட்டு அரசாங்கத்திற்கு எதிராக முதலாவதாக முக்கியமாகும் திரும்பிவிடும் என்று அமைச்சர் நன்கு புரிந்து இருந்தார் ".

வர்க்க சமுதாயத்திலான கல்வியை கலாச்சாரத்தை மற்றும் கல்விக் கூடத்தில் வர்க்கத் தன்மையை மறைக்க முயன்ற எல்லாவித சந்தர்ப்பவாதிகள் திருத்தல்வாதிகள் ஆகியோரின் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராக புரட்சி இயக்க வளர்ச்சியில் எல்லா கட்டத்திலும் லெனின் உறுதியாக முன்வைத்தார்.

மக்களின் கல்விக்கு லெனின்-நமது சமுதாயத்தில் கல்வி


 மாபெரும் சோசலிச அக்டோபர் புரட்சிக்கு பல காலம் முன்னதாகவே பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவு புகட்டவும்  அரசியல் ரீதியாக போதனை பெறவும் லெனின் தலைமையில் தொடர்ந்து போராடியது.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் கலாச்சாரத்தை கல்வியையும் சாதாரண பொதுமக்களும் எளிதில் பெறக்கூடிய அமைப்பு கொண்ட சோசலிச சமுதாயமாக முதலாளித்துவச் சமுதாயத்தை மாற்றுவதற்கும் பாட்டாளிகளை ஆயத்தம் செய்ய வேண்டுவது ஓர் இன்றியமையாத நிலை என்பது இதில் கண்டது .

மக்களின் கல்விக்கு லெனின் எல்லாவற்றிற்கும் மேலான முக்கியத்துவம் கொடுத்தார் சமுதாய வளர்ச்சியில் இந்த அல்லது அந்த கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பொதுப்படையான அரசியல் கடமைகள் சம்பந்தப்பட்ட போதனைகள் அவர்களது கல்வி பயிற்றுவிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகியவற்றில் லெனின் கவனம் செலுத்தினார் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜார் ஆட்சி நிலைமைகளில் பாட்டாளிகளிடம் முன்னேற்றமான வர்க்க விழிப்புணர்வை வளர்க்கும் பணிகளுடன் லெனின் இணைத்தார் .

சர்வாதிகாரத்தை எதிர்த்து புரட்சிகரமாக போராடாமல் நிலப்பிரபுக்கள் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆகியோரின் ஆட்சி தூக்கி எறியாமலும் பொதுக் கல்வியை அடிப்படையாக மாற்றி அமைப்பது இயலாது என்ற கருத்திற்கு ருஷ்ய பாட்டாளிகளை லெனின் தட்டி எழுப்பினார் .

வர்க்க சமூக சமுதாயத்தில் கல்வியின் வர்க்கத் தன்மையை பற்றிய மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் போதனையை லெனின் தெளிவாக வெளிப்படுத்தி வளர்த்தார். சாதாரண பொதுமக்கள் அறிவு பெறும் வழியை ருஷ்ய சர்வாதிகாரம் திட்டமிட்டு வேண்டுமென்றே தடுத்து வந்திருப்பதை லெனின் இந்த நிதர்சனப்படுத்தி விளக்கினார் .நமது அமைச்சர்கள் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அவருடைய கட்டுரையில் பின்வருமாறு எழுதினார் (1895):"அமைச்சர் தொழிலாளர்களை துப்பாக்கி ரவைகள் எனவும் அறிவையும் கல்வியையும் தீப்பொறி எனவும் கருதுகின்றார் ;இந்த தீப்பொறி துப்பாக்கி ரவையில் விழுந்தால் அந்த வேட்டு அரசாங்கத்திற்கு எதிராக முதலாவதாக முக்கியமாகும் திரும்பிவிடும் என்று அமைச்சர் நன்கு புரிந்து இருந்தார் ".

வர்க்க சமுதாயத்திலான கல்வியை கலாச்சாரத்தை மற்றும் கல்விக் கூடத்தில் வர்க்கத் தன்மையை மறைக்க முயன்ற எல்லாவித சந்தர்ப்பவாதிகள் திருத்தல்வாதிகள் ஆகியோரின் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராக புரட்சி இயக்க வளர்ச்சியில் எல்லா கட்டத்திலும் லெனின் உறுதியாக முன்வைத்தார்.

மகத்தான சோசலிசப் புரட்சி ஆனது ஆளும் வர்க்க ஒடுக்குவோருக்கான கல்வி என்பதை தனி சலுகையை முடிவு கட்டியது விஞ்ஞான கலாச்சார கலை சாதனைகள் அனைத்தையும் வெகுஜனங்கள் எளிதில் பெறக்கூடிய நிலைக்கு கொண்டு வந்தது .

சமுதாய புரட்சியானது கலாச்சாரப் புரட்சிக் ஓர் இன்றியமையாத முன் நிபந்தனையாகும் என்று லெனின் கருதினார். முதலாளித்துவ சமுதாய நிலைமைகளில் முதலாளித்துவத்தில் இருந்து இதற்கான மாற்றத்தை அமைதியான வழியில் மட்டுமே செய்து முடிக்க முடியும் எனவும் உற்பத்தி சக்திகளும் கலாச்சாரம் ஒரு நிச்சயமான வளர்ச்சி கட்டத்தை அடைந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் எல்லா சீர்திருத்தவாதிகளும் வெளியிட்ட துணிபு ரகளை லெனின் கடுமையாக விமர்சித்தார் நமது புரட்சி என்ற கட்டுரையில் அந்த கருத்து நிலையை விரிவாக விளக்கி, "சோசலிசத்தை கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் தேவை என்றால் அந்த குறிப்பிட்ட கலாச்சாரத்துக்கு தேவையான முன் தேவைகளை புரட்சிகரமான வழியில் முதலில் அடைவதன் மூலம் எனவே நாம் ஆரம்பிக்க கூடாது ".(Lenin selected works volume 33 pp.478-79).

கலாச்சாரப் புரட்சியின் வெற்றி சாதனை ஒரு நாளில் பெறக்கூடிய விஷயமல்ல அது நீடித்த நடைபெற நடைமுறை விசியம்  ஆகும் என்பதனை லெனின் அறிவுறுத்தினார்.   செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் சர்வப் பொதுவான முறையில் கல்வி அளிப்பது,  எல்லா தேசிய இனங்களையும் சார்ந்த உழைக்கும் மக்களின் கலாச்சார தரத்தை உயர்த்துவது உண்மையான ஒரு மக்கள் அறிவுஜீவிகள் பகுதியை உருவாக்குவது ஆகியவை அதன் முக்கியமான பணிகள் ஆகும்.

பழைய பள்ளி கல்வி முறையை விமர்சிக்கும் போது அது "உண்மையான கம்யூனிஸ்ட் கல்விக்கான " பள்ளியாக அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று லெனின் கூறினார் .பழைய கல்விகளில் பேராதிக்கம் செலுத்தி வந்த மனப்பாடம்  போடும் பழக்கத்தை உறுதியாக கண்டித்த லெனின் " நன்கு கற்ற இன்றைய மனிதனுக்கு இன்றியமையாத எல்லா  விவரங்களும் அடங்கிய அறிவை" ஒவ்வொரு மாணவரும் வளர்ந்து அதில் பரிபூரண அடைய வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார் .உயர்ந்த கல்வி உடையவர்களாக உயர்ந்த பண்பாடு உடையவர்கள் உயர்ந்த கோட்பாடு உடையவர்களாக கம்யூனிசத்தை கட்டுவதற்கு மனிதனும் இனம் சேகரித்த அறிவை பயன்படுத்தும் ஆற்றல் உடையவர்களாக,  இளைஞர்களை உருவாக்கும் அடிப்படையில் பொதுக் கல்வியை பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது லெனின்னுடைய கருத்து . 

கல்வி இடம் புதிய கடமைகளை நம்முடைய காலம் எதிர்பார்க்கிறது சமுதாய உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தை உறுதிசெய்யவும் மேலும் விஞ்ஞான தொழில் நுணுக்க முன்னேற்றத்தை உறுதி செய்யும் விஞ்ஞான ரீதியில் முன் முறைப்படுத்தப்பட்ட உழைப்பை பயன்படுத்தி அதனுடைய உற்பத்தி திறனை மேலும் மேலும் உயர்த்தவும் அறிவை சுயேட்சையாக பெற்று அதனை நடைமுறையில் பயன்படுத்தி தங்களை முழுமையாக தயார் செய்து கொண்ட மக்கள் தேவை .(பொதுக்கல்வி பற்றி லெனினுடைய நூலின் முன்னுரையில் இருந்து சுருக்கம் என்னுடையவை) .

நமது கல்வி முறையும் இந்திய சமூகம் 

தற்போது நமது நாட்டில் சமூக அரசியல் சூழ்நிலையில் புதிய அம்சம் என்னவென்றால் பெரும் முதலாளி வர்க்கமானது அரசு அதிகாரத்தை அன்னிய நிதி மூலதனத்துடன் சேர்ந்து நாடு முழுவதிலும் பொருளாதார வாழ்வை ஏகபோகமாக்க முயற்சித்துக் கொண்டு உள்ளது . இங்கே அரசின் அமைப்பிலும் மாற்றம் கொண்டுவர அவர்கள் விரும்புகின்றனர் .எல்லா அதிகாரங்களையும் ஒன்றியத்தில் குவித்து அதாவது ஒரு கட்சி ஆட்சிக்காக பாசிச நிலையில் முன்னேறிக் கொண்டுள்ளது. 

ஆளும் கும்பலுக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவே ஏற்கனவே நிலவுகின்ற சில உரிமைகளையும் பறிக்கிறது முன் கண்டிராத அளவிற்கு கருப்பு சட்டங்களால் தன்னை ஆயுதபாணி ஆக்கிக் கொள்கிறது.

இன்றைய பாசிச நிலையில் நமது கல்விக் கொள்கையும் மக்கள் மீது திணிக்கப்படும் பல்வேறுவிதமான கருத்தாக்கங்களின் புரிந்து கொள்வதற்காக கல்வி பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டத்திற்கு நாம் செல்வோம்.

இன்றைய சமூக அமைப்பில் இருக்கும் "கல்வி எல்லோருமானது" என்பதும் "எல்லா மக்களின் நலனை கருத்தில் கொண்டு" உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை; எப்படியெனில் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், மொழி என்று எல்லா துறைகளிலும் ஒடுக்குமுறைகளை கையாளும் சமூகத்தில் கல்வி மட்டும் எப்படி வர்க்க சார்பற்றதாக இருக்க முடியும் அதனை பற்றிய தேடுதலே இன்றைய கிளப் அவுஸின் முதன்மையான நோக்கம் .

இந்திய கல்வின் தோற்றம் பற்றி ஒரு தேடுதல் 

இந்தியப் பகுதிகள் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த பொழுது கல்வியானது அன்றைய சமூக அமைப்பில் ஜாதியின் அடிப்படையில் இருந்தது. அதில் குறிப்பாக அவர்களின் தொழில் சார்ந்த கல்வியாக இருந்தது பார்ப்பனர்கள் சாஸ்திரங்களை கற்பதும் வணிகர்கள் வணிகத்திற்கான கல்வி கற்பதும் நிலவுடைமை சமூகத்தில் நிலம் சார்ந்த முறையில் அவரவர்களுக்கான கல்விகள்  கற்பிக்கப்பட்டன .

உடல் உழைப்பால் ஈடுபட்ட பெரும் பகுதி மக்கள் கல்வி இன்றி வெறும் கூலிகளாக ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கல்வியற்ற கூட்டமாக தான் வாழ்ந்தனர்.

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் 1813ல் அக்கால வணிக நிறுவனங்களின் தேவைகளுக்காக  முறைசார் கல்வி முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

அந்தத் தேவைகளான ..

1).அரசு நிர்வாக தேவை 

2).அரசியல் தேவை

 3). பண்பாட்டுத் தேவை 

இந்த தேவைகளுக்காக பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்ய இயலாது.

ஒரு அடிமை நாட்டை நிர்வாக முறைகளை அதுவரை இருந்தது போல் அல்லாமல் மாற்றிவிட்டன . எப்பொழுதும் "வெறும் வாள் கொண்டு அதாவது ஆயுத அடக்குமுறையின் மூலம் மட்டுமே ஒரு நாட்டை அடக்கி விட இயலாது" என்பதை புரிந்து கொண்டவர்கள் அவர்கள். அதற்கான பணியினை மிகத் தெளிவாக செய்தனர் என்றால் மிகையன்று. இந்திய பகுதிக்குள் தம்மை என்றும் ஆதரிக்கக் கூடிய சக்திகளை தயாரிக்கும் தேவை ஏற்பட்டது .இந்தியப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு அதிருப்தியுறாதவகையில் வழங்கி எதிர்தரப்பு தனக்கு எதிராக போகாத வகையில் உரிய சேவை செய்தது இந்த கல்விமுறை.

எல்லோருக்குமான கல்வி என்பதோடு  மதம் சாரா கல்வியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது இருந்தும் சில விதிவிலக்குகள் செயல்பட்டது.

அதேபோன்று "எல்லோருக்குமான கல்வி" என்று அறிவிக்கப்பட்டாலும் "எல்லோரும் படிப்பதற்கான சூழல் சமூக நிலையிலிருந்து உருவாக்கப்படவில்லை".  ஆக எல்லோருக்குமான கல்வி என்பது கொள்கை முடிவு தானே தவிர நடைமுறை திட்டமாக அமலுக்கு வரவில்லை. 1854 ல் உட்(Wood) என்ற ஆங்கிலேய அதிகாரி தன் குறிப்பில் எழுதுகின்றார். கிழக்கிந்திய வணிக நிறுவனத்துக்கு சேவை செய்யக்கூடிய நம்பகமானதும் திறமையான ஊழியர்களை வழங்கக்கூடிய தேவை கல்விக்கு உள்ளது. இதைத்தான் மெக்காலே கல்வியின் விருப்பத்தை நினைவுபடுத்துகிறது . உடல் அளவில் இந்தியர்களாகவும் சிந்தனை அளவில் ஆங்கிலேயர்களாகவும் தம்மை நினைத்துக்கொள்ளும் ஒரு பிரிவை ஏற்படுத்தும் தேவையுள்ளது என்று 1835 ல் மெக்காலே கூறியது நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக,அரசு, சட்டம், கல்வி, மதம், கலை இலக்கியம் இவையாவும் மேல்மட்ட அமைப்பை சார்ந்தவையே புரட்சி என்பது அரசு இயந்திரத்தின் மீது கை வைப்பதில்லை அதை உடைத் தெரிவதாகவும் என்று லெனின் கூறினார் அவர் கூறியது அரசு இயந்திரத்துக்கு மட்டுமல்ல மற்றும் மேல்மட்ட அமைப்புகளுக்கும் பொருந்தியதாகும் .

இன்றைய முதலாளித்துவ அரசமைப்பை தெய்வம் போல தொழுவது போலவே சட்டங்கள், கல்வி, மதம், மற்றும் கலை இலக்கியங்கள் ஆகியவற்றில் பரிசுத்தமாக பலர் தொழுகின்றனர்.

இன்றைய அரசியலமைப்பு சட்டங்கள் யாவும் பூர்ஷ்வா வர்க்கத்தின் அவர்களது தனிச்சொத்துடைமையையும் பாதுகாக்கப்பதற்காகவே உருவாக்கபட்டுள்ளன. தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சிறைச்சாலைக்குள் இன்றைய சட்டங்கள் நிறைத்து வைத்துள்ளன .

இன்றைய கல்வியானது முதலாளி வர்க்கத்துக்கு தேவையான கூலி அடிமைகளை உருவாக்குவதற்காக ஏற்பட்டுள்ளதே இதன் மேல் மக்கள் கொண்டிருக்கும் மயக்கம் சொல்ல முடியாததாகும். தன் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடையலாம் என்று அவர் தம் பெற்றோர்கள் எண்ணுகின்றனர். தமது உற்பத்தி உறவில் இருந்து பிரித்து தனது உழைப்பைச் செலவிட்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர் அங்கு சரியான அறிவு உற்பத்தியில் ஈடுபட கல்வியை அரசு அளிப்பதில்லை.

கூலி அடிமை சந்தைக்கு பிள்ளைகளை தயாரிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் வேலையற்றவர்களாக இன்றை நிலையில் தெருவில் நிற்கின்றனர் தமது பெற்றோரின் உற்பத்தி உறவிலும் ஈடுபடவும் தயங்குகின்ற இந்த கல்விமுறை உடைத்தெறியப் படவேண்டிய அவசியமானது.

மதம் வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காகவே நிலவுடைமை சமூகத்தில் தோற்றுவிக்கப்பட்ட பொய்மை வழிபாடு ஆகும். இயக்கவியல் பொருள்முதல்வாத சித்தாந்தத்தை நமக்கு மார்க்ஸ் தெளிவாக தந்துள்ளார் .

மத உணர்வுகளை புண்படுத்தும் மூலம் மத கேடுகளை எதிர்த்து போரிட்டு வெற்றி காண முடியாது என்று லெனின் கூறினார். ஆகவே இயக்கவியல் பொருள்முதல்வாத சித்தாந்தத்தை பரப்புவதும் மூலமே மத ஆதிக்கத்தை உடைத்தெறிய முடியும் .

முதலாளித்துவத்தின் விற்பனைப் பொருளாக வர்க்க அமைப்பின் பாதுகாவலனாக பேணப்பட்டு வரும் கலை இலக்கியங்கள் யாவும் கூட உடைத்தெறிய படவேண்டியது ஆகும். இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் உலகமயமாக்கலில் பொய்மையை கலை இலக்கியம் இன்று எங்கும் ஏகாதிபத்திய சார்பு நாடுகளில் விதைத்துக் கொண்டுள்ளது . குறிப்பாக தமிழக சூழலில் இன்று சினிமா துறையானது அரசியல் ஆதிக்கம் பெற்று வருவதை காணலாம். மதம் போலவே தெய்வ வழிபாடு போலவே சினிமா நடிகர்கள் போற்றப்பட்டு அரசியலில் முன்னுக்கு வைக்கப்படுகின்றனர் இந்த மாயைகள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டியது அவசியமாகும்.

மேல் கட்டுமானம் அனைத்தும் பொருளாதாரம் என்ற அடித்தளத்திற்க்கு சேவை செய்பவை ஆகும் இவற்றில் அரசியல் முதன்மை வகித்த போதும் அது போலவே பிற மேல்மட்ட அமைப்புகளும் அதற்கு பக்கபலமாக நின்று அடிப்படை அமைப்பை கட்டிக்காப்பதேயாகும். ஆக கல்வி பற்றி சற்று ஆய்ந்தறிவோம் தோழர்களே.

நமது இன்றைய கல்வி முறையானது உண்மையில் ஏன் சமுக பிரச்சினையை தீர்பவனாக இல்லை?

இன்றுள்ள குழந்தைகளானது 98% கற்க்கவும் கேட்டறியவும் ஆர்வம் கொண்டதாகவும் அதே வளர்ந்து கல்வி கற்று கல்வி நிலையங்களை விட்டு வெளியேறியப் பின் 2% மட்டுமே கற்க்கவும் கேட்டறியவும் ஆர்வம் உள்ளதாக ஒரு ஆய்வரிக்கை தெரிவிக்கிறது இதிலிரிந்து நமது கல்வி முறையானது சிந்திக்கும் திறனை அடியோடு ஒழித்துக் கட்ட முனைகிறது என்பதுதானே அதனை பற்றி தொடர்ந்து விவாதிப்பதே இந்த பகுதியின் நோக்கம்.

அரசு எந்திரமானது தனது ஒடுக்கு முறையை கல்வியில் எப்படி திணிக்கிறது என்பதனை பற்றி பார்ப்போம்.

உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி அதாவது முதலாளித்துவ சுரண்டல் உறவு, அதற்க்கு சேவை செய்யும் கல்வி மிகவும் அமைதியான மற்றும் ஆழமான கருத்தியலாகும்.

சிறுவயதிலே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் படுகிறார்கள் அவர்கள் தாய் தந்தை மற்றும் பள்ளியில் பல விசியங்கள் திணிக்கப் படுகிறது, நடைமுறையில் உள்ள கருத்தியல் கற்ப்பிக்கப் படுகின்றன.

இயற்க்கை அறிவியல் ,அறிவியல் வகுப்புகளில் பகுத்தறிவுப் பூர்வமாக கற்றுக் கொடுக்கப் படுகிறது.

ஆனால் மொழிப் பாடத்தில் மதம் சார்ந்து பகுத்தறிவு மறுப்பு முக்கியமாக உள்ளது.

சமூக அறிவியல் முற்றிலுமாக பகுதறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் பொய்களை தவறான தகவல்களின் அடிப்படையில் கற்ப்பிக்கப் படுகின்றன.

இத்தகை இரண்டுச் சிந்தனைகளின் மூலவேர் நம் கல்வி அமைப்பில் உள்ளது. இதை திட்டமிட்டு ஆளும் வர்க்கம் செய்கிறது.

இன்றைய ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக சமூக நிகழ்வுகளை பகுத்தறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் கொண்டு செல்கிறது..

இன்றைய கல்விமுறையானது வெறும் மனனம் செய்வது மட்டுமே.

இவை சமுக அறிவோ அல்லது அறிவியல் ரீதியான அறிவியல் பூர்வமான சிந்தனை இல்லாத வெறும் கருத்து முதல்வாதிகளாகவும்,

சாதி மத குப்பைகளை சுமந்து திரியும் கீழான சிந்தனையுள்ளவர்களாக அரசே மாணவர்களை வளர்க்கிறது.

இவை ஒருபுறமிருக்க கல்வி என்பது பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலும் படிப்பு. இவ்வாறு இளம் வயதினரின் காலமெல்லாம் உழைப்பேயன்றி வெறும் புத்தகப் படிப்பிலும் மனனம் செய்வதிலும் கழிகிறது, இவை அவர்களை ஒரு செக்கு மாட்டுதனத்திற்க்கு கொண்டு போகிறது.

தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றது. அதே போல் இக்கல்விக்கூட தொழிற்சாலைகளில் (கல்லூரிகள் உட்பட) கூலியடிமைச் சந்தைக்கு தயாராகும் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

சிந்தனை முறையில் இவர்களுக்கு தங்களின் இன்னிலை பற்றிய கல்வி அறிவு போதிக்கப் படுவதில்லை.

முதலாளித்துவத்தின் திட்டமற்ற உற்பத்தியை இங்கும் காணலாம் ஆம் இவர்களை ஒரு கருவியாக சிந்தனையற்ற உழைப்பு கருவியாக வளர்த்தெடுக்கிறது. முதலாளித்துவத்தின் அரச நிர்வாகம், தொழிற்சாலைகள், விற்னை, இறக்குமதி ஏற்றுமதி வாணிபம் இன்னும் பல சிறு தொழில்கள் நடத்த படித்த கூலியடிமைகள் தேவைப்படுகின்றனர், அத்தேவைக்கு சந்தை நிரம்பி வழிவதால் மிக மலிந்த விலையில் கூலி அடிமைகளின் உழைப்பைப் பெறமுடிகிறது.

கல்வி என்பது தனிமனித வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது.

ஆனால்

இன்றோ உலகமய, தனியார்மயக் கொள்கையால் கல்வி கடை சரக்காக மாறி, யார் வேண்டுமானலும் கல்வி நிலையங்களை துவங்கலாம் என்ற காரணத்தால் பல குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. அப்படியே படித்து விட்டாலும் அவை சார்ந்த வேலை இல்லை.

உலகமய, தனியார்மயக்கொள்கையால் ஏழை மிகவும் ஏழையாக ஆக்கப்பட்டு அவர்களின் குழந்தைகள், தான் என்ன ஆகப்போகிறோம் என்பதே தெரியாமல் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று மதவாதிகளின் ஆட்சியில் பகுத்தறிவாதிகள் நாத்திகவாதத்தை தூக்கி நிறுத்த முயற்ச்சிக்கின்றனர் (இவை மக்களை அணுகி உள்ளதா என்பதனை பின் பார்ப்போம்) மதவாதிகளோ மக்களிடம் மண்டிக்கிடக்கும் பழைமைவாதம் மற்றும் மதம் சார்ந்த சிந்தனையை விதைத்து அறுவடை செய்துக் கொண்டுள்ளனர்.

இன்றைய உலக மயம் தனியார் மய சூழலில் எல்லாம் லாபம் கொழிக்கும் தொழிலாகி போயுள்ள போது நாம் எங்கெ தேடுவது தரமான கல்வியை.

உலக மயமாக்கலுக்கு பிறகு கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனித்தனியாக நீயுக்கிளியர் குடும்பங்களாக உள்ள சூழலில் குழந்தை வளர்ப்பு என்பதே பெற்றோருக்கு பெரும் பாரமாகி உள்ளது.கடன்பட்டாவது தன் குழந்தையை எப்படியேனும் ஒரு நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் அவை விளம்பரத்தில் முன்னணியில் உள்ள பள்ளியாக இருக்க வேண்டும் இப்படிதான் இன்றைய கல்வியின் டெரண்ட்..

அப்படிபட்ட அந்தப் பள்ளியில் சேரும் பிள்ளை வீட்டிலும் பள்ளியிலும் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டால் பதிலளிக்க முடியாத பள்ளி, பதிலளிக்க நேரமில்லாத குடும்பம், இப்படி சிந்தனை முடக்கப் பட்டு கேள்விக்கு பதிலளிக்க திறனற்ற பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் ஆயுதம் ஒடுக்குமுறை அடி உதை குழந்தைகள் ஒருமுறையில் அடங்கி ஒடுங்கி அடிமைதனத்திற்க்கு பயிற்றுவிக்கும் இடமாக பள்ளி இருக்கிறது.

அப்படியே படித்து முடித்து தன் கல்விக்கான வேலை கிடைக்கிறாதா என்றால் இல்லை ஏனெனில் இவை திட்டமிடப்பட்ட கல்வி முறை இல்லை அவர்களுக்கு காசு கொழிக்கும் கல்விகளை சந்தையில் விற்பனை செய்கின்றனர், காசு கொடுத்து வாங்கும் மக்கள் தலையிலே அரசும் திணித்து விடுகிறது. கல்வியை கொடுக்காத அரசு வேலையையும் கொடுக்க முன் வரவில்லை, ஏனெனில் அதற்க்கான திட்டமிடல் அரசிடம் இல்லை.

ஆக இந்த கல்வியால் அந்த மாணவன் கற்றவை என்ன? தன் வாழ்க்கைகான கல்வியாக ஏன் இல்லை என்று அவன் சிந்திக்கும் அளவிற்க்கு அவனை ஏன் வளர்க்கவில்லை என்பதே என் கேள்வி.

கல்வி முடிந்து வேலை தேடும் பட்டாளம் சந்தையில் பெருகிக் கொண்டே உள்ளது அவர்கள் விரக்தியடைகின்றனர். அவர்களது விரக்தி பல்வேறு வகையில் ஆளும் வர்க்கத்திற்கு பிரச்சனையாகி விடுகிறது.

படித்த மாணவர்களுக்கும் அரசிற்கும் இடையில் ஏற்படும் முரண்பாடுகள் வேறும் பல பயங்கர வடிவங்கள் பெற்றுவருகின்றன.

ஆனால் இந்த அரசு அவர்களுக்கு கொடுப்பது வேலை அல்ல ஒடுக்குமுறை மட்டுமே.

இந்த ஒடுக்குமுறை முதலாளித்துவ சட்டங்களால் தற்காலிகமாக தள்ளிப் போகும், இருந்தும் பல போராட்டங்கள் இந்த அமைப்பில் தீர்வு காண முடியாது இருக்கிறது. அவை நீருபூத்த நெருப்பாக எப்பொழுதும் இருக்கும் அதனை புரிந்து செயல் பட வேண்டியவர்கள் செயல்படல் வேண்டும்.

எல்லா மக்களுக்கான பாட்டாளி வர்க்க பாதையை நோக்கிய புரட்சியால் மட்டுமே புத்தகக் கல்வியால் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்க்கமுடியும்.

சமூக அறிவியல் பூர்வமான சிந்தனை செயல் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் மக்களுக்கான கல்வி ஒரு பொதுவுடைமை சமூக அமைப்பில் மட்டுனே சாத்தியம்…..

நான் இந்திய சாதி அமைப்பு முறையை தேடிய பொழுது அதற்கான பிர்ச்சினை நமது கல்வியிலே உள்ளது என்றறிந்து அதனையும் இதன் ஊடாக அறிந்துக் கொள்ள ஒரு முயற்ச்சியேதான் இந்த கல்வி பற்றி தேடுதலும், ஆக ஜாதியை பற்றி புரிந்துக் கொள்ள அதன் பல உடன்பிறப்புகளையும் அறிந்தே செல்வோமே என்ற ஒரு தேடுதல் இவை.

காலனி ஆதிக்கவாதிகளின் கருத்துக்களும் பங்கும்

கல்விக் கற்றறிதவர்கள் தங்கள் நாட்டின் மரபுவழி வரலாற்றை கையால் எழுதப்பட்ட இதிகாசங்கள் புராணங்கள் வாழ்க்கை வரலாறு எனும் வடிவத்தில் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் பண்டைய கால இந்திய வரலாறு குறித்த தற்கால ஆராய்ச்சி பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமாயிற்று.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலனி ஆதிக்க நிர்வாகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த ஆய்வு தொடங்கியது 1765 இல் வங்காளதிலும் பீகாரிலும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையின் கீழ் வந்தபோது இந்து வாரிசு உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருந்தது கண்டனர்.

எனவே அந்நாட்களில் மிகவும் அதிகார உரிமை படுவதாக கருதப் பட்ட மனுதர்மத்தில் உள்ள கருத்துகளை பிரிட்டிஷ் தங்களின் நலனுக்காக 1776 இந்து சட்டத் தொகுப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர் . இதன் மூலம் பிரிட்டிஷ்சார் இந்துக்களின் சிவில் சட்டங்களை செயல்படுவதுவதற்க்கு இந்து சமய சாஸ்திர வல்லுனர்களையும் பண்டிதர்களும் பயன்படுத்தியது போன்றே முஸ்லிம் சட்டங்களை செயல்படுத்துவதில் மௌலிகளை பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு துணையாக இருந்தனர்.

பண்டைய சட்டங்களையும் பழக்கவழக்கங்களில் புரிந்து கொள்ளும் ஆரம்பகால முயற்சிகள் அனேகமாக 18-ம் நூற்றாண்டு வரை நீடித்தன.

இதன் விளைவாக 1776 கல்கத்தாவில் வங்காள ஆசியக் கழகம் நிறுவப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த சேர் வில்லியம் ஜோன்ஸ் என்ற அதிகாரி தான் அந்த கழகத்தை நிறுவியவர்.

1785 ல் வில்கின்சால் பகவத் கீதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

1823 ல் லண்டனில் பிரிட்டிஷ் ஆசியக் கழகம் உருவாக்கப்பட்டது. தொடக்க காலத்தில் ஐரோப்பிய மொழிகள் சமஸ்கிருதத்தையும் ஈரானிய மொழியையும் பெரிதும் ஒத்திருந்தன என்று ஐரோப்பிய நாடுகளை இந்தியாவின் மீது பல கருத்துகளை இது தூண்டி பல வேலைகளை செய்தது.

இந்தியவியல் ஆராய்ச்சிக்கு மிகப்பெரும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் ஜெர்மன் அறிஞரான மாக்ஸ் முல்லர் ஆவர். அவர் தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இங்கிலாந்தில் கழித்தார். 1857 ஆம் வருடம் இந்திய எழுச்சி பிரிட்டிசு பல உண்மையை உணர்த்துவதாக இருந்தது. ஆகையால் தங்களுக்காக வேண்டிய இந்திய மக்களின் பழக்க வழக்கங்களை சமூக அமைப்புகள் பற்றி மிக ஆழமாக தெரிந்து கொள்ள மிக மிக அவசியம் என்பது பிரிட்டனுக்கு பெரிதும் உணரப்பட்டது. இதேபோன்று கிறிஸ்தவ மதத்துக்கு பல ஹிந்துக்களை ஈர்க்கும் பொருட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வலுப்படுத்தும் பொருட்டு இந்து சமயத்திலுள்ள பலவீனமான பகுதிகளை கண்டறிய கிறிஸ்தவ சமயப் பரப்பாளர்கள் விரும்பினார்கள்.

இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே மாக்ஸ் முல்லரை கொண்டு பண்டைய இந்து சமய நூல்கள் பிரம்மாண்ட அளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன .

இரத்தின சுருக்கமாக கூறினால் இந்திய வரலாறு குறித்த பிரிட்டிஷ் கண்ணோட்டங்கள் இந்திய குணநலன் வெளிப்படுத்தவும் இந்திய சாதனைகளைச் இழிவுபடுத்தவும் காலனி ஆதிக்க ஆட்சி நியாயப்படுத்தும் ஆக இருந்தன.

இதில் முக்கியமாக வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் எழுதிய இந்தியாவின் ஆரம்ப கால வரலாறு என்ற நூல்.

இவைதான் பண்டைய கால பல்வேறு விதமான கருத்தாக்கங்களை உருவாக்கிய ஏகாதிபத்திய ஆதரவு தன்மை கொண்டதாகவும் இன்றும் பல அதிகார வர்க்கத்தில் உள்ளோர் வாசிக்கும் நூலாக அவை கொண்டுள்ளது என்றால் மிகையன்று.

(ஆதாரம் பண்டைய கால இந்திய ஆர்எஸ் சர்மா பக்கம் 8 லிருந்து 11 வரை சுருக்கம் மாற்றம் என்னுடையவை)

பள்ளிப் பாடம் என்பது ஒருவித சிந்தனையற்ற மனனம் செய்து ஒப்புவிக்கும் முறையே, இதில் தேர்ச்சி என்பது புத்தக புழுக்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே, இங்கே சிந்தனை எங்கேயும் தேவையின்றி ஒரு நடமாடும் எந்திரமாக்கும் வேலையை செய்கிறது இந்தக் கல்வி முறை. ஆகவே இங்குள்ள சமூக சிக்கலுக்கு காரமாண பல்வேறு பிர்ச்சினை குறித்து நமது கல்விமுறையில் எங்கேயும் போதுப்பதில்லை... இந்த வாழ்க்கை பாடம் அனைவ்ரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாயினும் ஏன் நம்க்கு போதிப்பதில்லை? நாம் சிந்தனை அற்ற மூடர்களாக ஆளும் வர்க்க அடிமைகளாக வாழ சொல்கிறது இந்தக் கல்விமுறை..

இதனை நாம் நமது கல்விமுறையில் இருந்து இனம் கண்டால் நலம்

வெறும் புத்தகக் கல்வியால் மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் கிடைத்துவிடும் என்று போட்டா போட்டி எங்கும் நீக்கம் மற நிறைந்துள்ளவைதானே. இன்றைய உலகமய தனியார்மய தாராள மய கொள்கையால் அரசு தனது பணியை தனியாருக்கு கொடுத்துவிட்டது. இன்று பெரிய சுரண்டும் இயந்திரங்களாக வளர்ந்து வருகின்றன, இன்று இலவசக் கல்வி என்பது கேலிக் கூத்தாகி வருகிறது.

இன்றைய கல்விமுறையானது வெறும் மனனம் செய்வது மட்டுமே சமுக அறிவோ அறிவியல் ரீதியான அறிவியல் பூர்வமான சிந்தனை அற்ற வெறும் கருத்து முதல்வாதிகளாக சாதி மத குப்பைகளை சுமந்து திரியும் கீழான சிந்தனையுள்ளவர்களாக அரசே மாணவர்களை வளர்க்கிறது. இவை ஒருபுறமிருக்க கல்வி என்பது பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலும் படிப்பு. இவ்வாறு இளம் வயதினரின் காலமெல்லாம் உழைப்பேயன்றி வெறும் புத்தகப் படிப்பிலும் மனனம் செய்வதிலும் கழிகிறது, இவை அவர்களை ஒரு செக்கு மாட்டுதனத்திற்க்கு கொண்டு போகிறது.

மேல் படிப்புக்கு பல போட்டிகள் நடத்தப் படுகின்றன இப்போட்டிப் படிப்பில் தேர்ச்சிஅடைந்த போதும் பல்கலைக் கழகப் படிப்பிற்கு நுழைய அவர்கள் பெரும் பொருள் செலவுக்கு பின்னரே கல்விக் கற்க்கின்றனர். இதில் சேர முடியாத மற்றவர்கள் குறைந்த கூலிச் சந்தையில் தள்ளப்படுகின்றனர். ஏற்கெனவே கூலிச்சந்தை நிரம்பி வழிகிறது. இதற்கு மேலும் மேலும் ஆண்டுதோறும் இந்த கூலியடிமைச் சந்தைக்கு படித்தவர் அனுப்பப்படுகின்றனர். இதுவே பெரிய வியப்பான செய்தியாகும்.

தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்யப்படுவதுண்டு. இக்கல்விக்கூட தொழிற்சாலைகளில் (கல்லூரிகள் உட்பட) கூலியடிமைச் சந்தைக்கு தயாராகும் பொருட்கள் அனுப்பப்படுகின்றன சிந்தனை முறையில் தங்களின் இன்னிலை பற்றிய கல்வி அறிவு போதிக்கப் படுவதில்லை. முதலாளித்துவத்தின் திட்டமற்ற உற்பத்தியை இங்கும் காணலாம் ஆம் இவர்களை ஒரு கருவியாக சிந்தனையற்ற உழைப்பு கருவியாக வளர்த்தெடுக்கிறது. முதலாளித்துவத்தின் அரச நிர்வாகம், தொழிற்சாலைகள், விற்னை, இறக்குமதி ஏற்றுமதி வாணிபம் இன்னும் பல சிறு தொழில்கள் நடத்த படித்த கூலியடிமைகள் தேவைப்படுகின்றனர், அத்தேவைக்கு சந்தை நிரம்பி வழிவதால் மிக மலிந்த விலையில் கூலி அடிமைகளின் உழைப்பைப் பெறமுடிகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள் முரண்பாடு எழுவதும் தவிர்க்க முடியாததாகும். அதுவே அவ்வமைப்பை உடைத்தும் விடுகிறது.

கல்வி முடிந்து கூலியடிமைத் தொழிலை பெறமுடியாது சந்தையில் நிற்பவர்கள் விரக்தியடைகின்றனர். அவர்களது விரக்தி பல்வேறு வகையில் ஆளும் வர்க்கத்திற்கு பிரச்சனையாகி விடுகிறது.

படித்த மாணவர்களுக்கும் அரசிற்கும் இடையில் ஏற்படும் முரண் பாடுகள் வேறும் பல பயங்கர வடிவங்கள் பெற்றுவருகின்றன. இந்த அரசு அவர்களுக்கு கொடுப்பது ஒடுக்குமுறை மட்டுமே முதலாளித்துவ சட்டங்களால் தற்காலிக ஒடுக்கு முறையால் தள்ளிப் போகும் பல போராட்டங்கள் இந்த அமைப்பில் தீர்வு காண முடியாது இருக்கிறது.

எல்லா மக்களுக்கான பாட்டாளி வர்க்க பாதையை நோக்கிய புரட்சியால் மட்டுமே தேசிய புத்தகக் கல்வியால் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்க்கமுடியும் ... இன்னும் வரும். சிபி.

நமது இன்றைய கல்வி முறையானது உண்மையில் ஏன் சமுக பிரச்சினையை தீர்பவனாக இல்லை?நமது இன்றைய கல்வி முறையானது உண்மையில் ஏன் சமுக பிரச்சினையை தீர்பவனாக இல்லை?

அரசு எந்திரமானது தனது ஒடுக்கு முறையை கல்வியில் எப்படி திணிக்கிறது என்பதனை பற்றி பார்ப்போம்.

உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி அதாவது முதலாளித்துவ சுரண்டல் உறவு, அதற்க்கு சேவை செய்யும் கல்வி மிகவும் அமைதியான மற்றும் ஆழமான கருத்தியலாகும்.

சிறுவயதிலே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் படுகிறார்கள் அவர்கள் தாய் தந்தை மற்றும் பள்ளியில் பல விசியங்கள் திணிக்கப் படுகிறது, நடைமுறையில் உள்ள கருத்தியல் கற்ப்பிக்கப் படுகின்றன.

இயற்க்கை அறிவியல் ,அறிவியல் வகுப்புகளில் பகுத்தறிவுப் பூர்வமாக கற்றுக் கொடுக்கப் படுகிறது ஆனால் மொழிப் பாடத்தில் மதம் சார்ந்து பகுத்தறிவு மறுப்பு முக்கியமாக உள்ளது.

சமூக அறிவியல் முற்றிலுமாக பகுதறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் பொய்களை தவறான தகவல்களின் அடிப்ப்டையில் கற்ப்பிக்கப் படுகின்றன.

இத்தகை இரண்டுச் சிந்தனைகளின் மூலவேர் நம் கல்வி அமைப்பில் உள்ளது. இதை திட்டமிட்டு ஆளும் வர்க்கம் செய்கிறது.

இன்றைய ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக சமூக நிகழ்வுகளை பகுத்தறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் கொண்டு செல்கிறது.

வகுப்பிலே ஒழுங்கு முறைகளைச் சிறிது மீறிச் சத்தம் போட்டாலோ, குழப்படி செய்தாலோ தண்டிக்கிறார்கள். பிரம்பால் அடிக்கிறார்கள். மேசை மேல் வகுப்பு முடியும் வரை நிற்கச் செய்கிறார்கள். பள்ளி முடிந்த பின்னரும் தண்டனை தருகிறார்கள். சில வகுப்புகளில் குற்றத்திற்குப் பணமாகவும் வாங்குகிறார்கள். பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்து மாணவர் முன்னிலையில் தண்டனையளிக்கின்றனர். பள்ளியிவிருந்து சில வேளை வெளியேற்றியும் விடுகின்றனர். பள்ளிகளைப் பொறுத்து வெவ்வேறு விதமாகத் தண்டனை வழங்கப்படுகிறது.

இவற்றை எதிர்த்து மாணவர்கள் போராடுவதில்லை எவரும் எதிர்க்காது கீழ்ப்படிகின்றனர் என்பதனை அறிவோமா?.

பள்ளியை விட்டு வெளியேறிய பின்னரும் கட்டுப்பாடாக, இன்றைய சமூக சட்ட விதிமுறைகளுக்கமைய கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். தவறினல் பள்ளியில் கிடைக்கும் தண்டனைகள் வேறு வடிவத்தில் வழங்கப்படும். போலிசாரின் குண்டாந்தடிகள், பூட்ஸ்கால்கள், விலங்குகள், அதன் மேல் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் தண்டனை களை வழங்கும்.

மேலே கூறியவற்றைச் சுருக்கிக் கூறிவிடலாம். உற்பத்திக்கு வேண்டியவை தொழில் நுட்பம், செயலாற்றும் திறன், உடலுழைப்பு மட்டுமல்ல. இன்று நடைமுறையிலுள்ள சட்ட விதிகள், ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டும் தொழிலாளர்கள் நடக்க வேண்டும்! இவையும் பள்ளிகள் மூலம் பயிற்றப்படுகின்றன. அதனலேயே பள்ளிகளில் புத்தகப் பாடங்கள் மட்டுமல்ல சமுக உற்பத்தி ஒழுங்காக நடைபெறுவதற்கு வேண்டிய விதி முறைகளும் கற்பிக்கப்படு கின்றன என்று கூறினேன்.

இக் கல்வி முறையையும் இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

பெரும்பாலான மக்களே உழைப்பவர்கள். அவர்கள் இன்றுள்ள சட்ட விதி முறைகளுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் தொழிலாளர், அரசு ஊழியர்கள் இன்று தனியார்துறையையும் கணக்கில் கொள்வோம்.

மற்றொரு சிறுபான்மையினர் இச்சட்டவிதிகளின் காவல்காரர்கள். அடக்கி ஒடுக்குபவரின் ஏஜெண்டுகள். இவர்களும் அதற்கேற்ற ஆரம்பக் கல்வியைக் கற்றுவிட்டே வெளிவருகின்றனர்.

மற்றொரு சிறுபான்மையினர் இச்சட்டவிதிகளின் காவல்காரர்கள். அடக்கி ஒடுக்குபவரின் ஏஜெண்டுகள். இவர்களும் அதற்கேற்ற ஆரம்பக் கல்வியைக் கற்றுவிட்டே வெளிவருகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவெனில் அடக்குபவர்களும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களும் ஒரே பள்ளியிலிருந்தே பயிற்சி பெற்று வெளியேறுகின்றனர்.

பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர், இன்னும் பிற... என்றெல்லாம் மாணவரின் ஒழுங்கு விதிகள். கட்டுப்பாடுகளைக் கவனிக்க இருக்கிறார்களல்லவா? இவர்களும் அரசுயந்திரத்தின் பொம்மைகளே.

இன்றைய சமுக அமைப்பு இருக்கும் வரை இளம் வயதில் மாணவர்களே அடக்கி ஒடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். இவற்றை புரிந்துகொள்ள வேண்டும்

நமது கல்வியை குழிதோண்டி புதைக்க நினைக்கும் அரசும் அதன் கொள்கையும்!!!- சி.ப

எங்கே ஓடி கொண்டிருக்கிறோம், நம் சமுதாயம் எப்படியெல்லாம் நஞ்சாகி கொண்டிருக்கின்றது, நேற்று ஆங்கிலேயன் எப்படி இந்திய மக்களை அடிமையாக்கினான் என்பதனை அறிந்தவையே இருந்தாலும் இன்றைய கல்வி கொள்கை எப்படி உள்ளது என்பதனை அறியுமுன் இந்த அரசு மக்களுக்கான அடிப்படையான கல்வி வழங்காமல் தட்டி கழிப்பதை எப்படி ஏற்க்க முடியும்!! தற்போது தமிழ் இந்துவிலும் பல ஊடகங்களும் அவர்கள் வசதிக்கேற்ப்ப எழுதி கொண்டிருக்கும்போது, நாம் சிறிது அலசுவோமா?

அமெரிக்காவின் உலக கொள்ளையின் அடிப்படையில் ஏற்படுத்தபட்ட, “ஏகாத்தியபத்திய சுரண்டலுக்காக,” பல்வேறு முறையில் உலக நாடுகளை அடிமைபடுத்த கொண்டிருந்த கொள்கையில் ஒன்று மக்களின் அடிப்படை கல்வியை பறிப்பது அதாவது சிந்தனையை சிதைப்பது,”மக்களை சிந்திக்காத தனக்கான (அமெரிக்க ஏகாத்தியபத்திய) தேவையை சரியாக நடத்தி முடிக்கும் அடிமை கூட்டம் மட்டுமே தேவையாக்க தகுதியான கல்வி மட்டுமே அளித்து ஒரு சிந்தனை அற்ற கூட்டத்தை உருவாக்குவதே ஆகும்”. இனி மக்களுக்கான் கல்வியை கைவிட்ட அரசை பற்றி ஒரு சின்ன விளக்கம். நாட்டை அந்நியனிடம் அடகு வைக்கும் “தனியார் மயம், தாராள மயம்” கொள்கையை முதன்மைபடுத்தி மைய அரசின் திட்டம் மக்களின் நலன் மறந்து, தரகு முதலாளிகளின் தேவை கேற்ப்ப ஏகாத்தியபத்திய ஆணைக்கினங்க, மக்களை கல்வியற்ற தற்குறிகளாக்க கல்வியையும் விற்ப்பனை பொருளாக்கி மக்களின் எதிர் காலத்தையே சூனியமாக்கிவிட்டது. ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்வியாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக சட்டத்தின் மூலமும் கமிசன் மூலமாகவும் வெளியிடபட்ட இ.க.க சட்டம் 2009 உண்மைகள் என்ன நீங்களே புரிந்து கொள்வீர்.

இலவச கட்டாய கல்விச்சட்டம் 2009: அரசு கடைபிடிக்கும் தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. பெயரில் இலவசம் என்ற சொல் இருந்தாலும் கட்டணப் பள்ளிகளுக்கும் இடம் அளிப்பதால் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி கிடைக்காது. சட்டத்தில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் சில: பள்ளிகள் அமைவிடம் குழந்தைகள் எளிதாகச் சென்றடையும் வண்ணம் இருக்க வேண்டும்; 5 -ஆம் வகுப்பு வரைப் படிக்க 1 கி.மீ. தொலை விற்குள்ளும், எட்டாம் வகுப்பு வரைப் படிக்க 3 கிமீ தொலைவிற்குள்ளும் பள்ளிகள் அமைய வேண்டும்.

அரசு அங்கீகாரமில்லாது எப்பள்ளியும் இயங்கக்கூடாது. அங்கீகாரம் பெறாத அல்லது மறுக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பது அரசின் பொறுப்பாகும். பள்ளிச் சேர்க்கை எளிதாக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு, பெற்றோரை அல்லது குழந்தைகளை நேர்காணல், வயதுச் சான்றிதழ், நன்கொடை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. மாற்றுகைச் சான்றிதழ் குழந்தைகளின் உரிமை. அதனைத் தர மறுத் தாலோ, கால தாமதம் செய்தாலோ தண்டனைக்கு உட்படுத்தப்படும்.

பள்ளியில் சேராமலோ, அல்லது பள்ளியிலிருந்து இடைவிலகியோ இருக்கும் குழந்தைகள் பள்ளியில் மீண்டும் சேரும்போது அவர்கள் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தைகள் சேரும் வகுப்பிற்குத் தகுதியுள்ளவராக்கும் பொறுப்பு பள்ளியைச் சார்ந்தது. 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி அளித்திட வேண்டும். பள்ளிகளில் எவ்வித பாகுபாடுகளுக்கும் எந்தக் குழந்தையும் உட்படக்கூடாது. பள்ளிகளில் உடல், மனரீதியான தண்டனைகள் ஒழிக்கப்பட்டுள்ளது. எந்த வகுப்பிலும் மாணவர்கள் ஓராண்டிற்கு மேல் தக்கவைக்கக் கூடாது. இடையில் பள்ளியை விட்டு வெளியேற்றவும் கூடாது.

அரசு உதவிபெறா தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் பள்ளிக்கு அருகில் வசிக்கும் எளியவர் வீட்டுக் குழந்தைகளுக்குஒதுக்கப்பட வேண்டும். தகுதி பெற்ற ஆசிரியர்கள்தான்நியமிக்கப்பட வேண்டும். கல்விப் பணியல்லாத மாற்றுப்பணிகளில்ஆசிரியர்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு பள்ளிக்கும்பெற்றோரைப் பெரும்பான்மையோராகக் கொண்ட பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுசெயல்பட வேண்டும்.

நடப்பது ( நடை முறை ) தான் என்ன என்பதனை நான் விளக்க தேவையில்லை?

பொதுச் செலவில், உயர்கல்வி உதவித்தொகையாக வழங்கும் பணத்தின் அளவு பாதியாகக் குறைந்துவிட்டதைப் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் எங்கெல்லாம் ஜனநாயகம் உயிர்ப்புடன் இயங்குகிறதோ, அங்கெல்லாம், கல்வித் தரம், கற்றல் கற்பித்தல் முறைகள், புதியன காணும் போக்கு அதிகமாக இருப்பதைக் காண முடியும். இந்நிலையில், முன்னணியில் இருந்த பல உயர்கல்வி நிறுவனங்கள், அதில் பயிலும் மாணவர்களின் செயல்பாடுகளை முடக்க, கல்வி உதவித்தொகையை முடக்க நுட்பமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கல்வி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மாணவன் நேரடியாக நீதி கேட்க நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பை மறுக்கும் ஏற்பாடுகள் இந்தப் பரிந்துரையில் இருப்பது அச்சம் தருகிறது. (நா.மணி The Hindu 17/08/2016)

நம்பப்படும் ‘2016-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்’ என்ற மத்திய மனிதவளத் துறையின் ஆவணம் உயர்கல்விச் சிக்கல்களைப் பற்றிப் பேசுவதாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள். உயர் கல்வித் துறையில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. மூன்றில் இரண்டு பங்கு பல்கலைக்கழகங்கள், 90% கல்லூரிகள் சராசரிக்கும் கீழாகத் தரம் குறைந்தவை. துணைவேந்தர்கள் நியமனங்களோ, சாதி, சமய அரசியல் சார்புத்தன்மை கொண்டதாகவும் லஞ்ச லாவண்யம் சார்ந்ததாகவுமே மாறிவிட்டது என்று கூறினார் 2007-ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். தமிழ்நாட்டுக் கல்வி நிலைமைகளை அறிந்தவர்களுக்கு இது புதிய விஷயம் இல்லை. இந்திய உயர்கல்வித் துறையின் அவலங்கள் இவ்வளவுதானா? இக்குழு கண்டறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவராத அவலங்கள், சிக்கல்கள் பல. அவற்றை அறிந்திருந்தால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம், மருத்துவக் கல்விக் குழுமம் ஆகியவற்றைக் கலைத்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக ஒற்றை நிறுவனம் ஒன்றை அமைக்கப் பரிந்துரைத்தது சுப்ரமணியம் குழு. ஆனால் அப்படியெல்லாம் வெளிப்படையாகக் கூறாமல், அதைப் பூடகமாகப் பேசுகிறது அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம். (நா.மணி The Hindu 17/08/2016).

நாட்டின் கல்வியை அழிக்க துணிந்துவிட்ட அரசும் அதன் ஏவலர்களும் மக்களுக்காக சிந்திக்க போவதில்லை, உண்மையான மக்கள் நலனில் அக்கரை கொண்ட ஒவ்வொருவரும் இதனை எதிர்ப்போம் மக்களின் விடுதலைக்கான சரியான கல்வியை எல்லா மக்களுக்கும் கிடைக்க, உண்மையான இலவச கல்வி கொள்கை நடைமுறை படுத்த பரந்துபட்ட மக்களுடன் இணைந்து இன்னொரு சுதந்திர போர் அறை கூவினால் மட்டுமே இந்த ஏகாத்திபத்திய கொள்ளையிரிடமிருந்து காப்பாற்ற படுவோம்


பள்ளியை விட்டு வெளியேறிய பின்னரும் கட்டுப்பாடாக, இன்றைய சமூக சட்ட விதிமுறைகளுக்கமைய கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். தவறினல் பள்ளியில் கிடைக்கும் தண்டனைகள் வேறு வடிவத்தில் வழங்கப்படும். போலிசாரின் குண்டாந்தடிகள், பூட்ஸ்கால்கள், விலங்குகள், அதன் மேல் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் தண்டனை களை வழங்கும்.

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...