இன்று 5 G அலைகற்றை ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு படிப்பினைக்காகவே இதனை எழுதுகிறேன்.
4 G அலைகற்றையின் தாக்கம் நமக்கு புரியாத பொழுது, 5 G அலைகற்றை ஏலம் நமது படிப்பினைகள் என்னேகொடுக்கப் போகின்றது என்பதே என் எழுத்தின் நோக்கம்.
4 G யின் சேவை பற்றி நான் சொல்லிதான் நீங்கள் புரிந்துக் கொள்ள ஒன்றுமில்லை என்பேன்.
இவர்களின் கொள்ளையை மட்டும் தெரிவிக்க நினைக்கிறேன் முதலில்.
(1). ஆண்டுக்கு 12 மாதங்களே உள்ள போது இவர்கள் 13 வது மாதத்தை புகுத்தினர் இதனை கேள்வி கேட்க்க யாருக்கும் புரிதலே வரவில்லை என்பேன்.
(2). 4 G யானது 100Mbps பதிவிறக்கமும் 50Mbps பதிவேற்றமும் இருக்க வேண்டும் ஆனால் நடைமுறை என்னே? இன்றும் Mbps அல்ல Kbps அதன் வேகம் உள்ளது யாரிடம் நாம் கேள்வி கேடபது?
(3). பொதுதுறை நிறுவனமான BSNL லை ஒழித்துக் கட்டி விட்டது.
இப்பொழுதே 1Gbps வேகத்தில் சீனா போன்ற நாட்டில் உள்ள போது இந்தியாவில் Kbps வேகத்தில் உள்ள போது என்ன தொழிற் நுட்பமோ?
5G யின் வேகம் 3Gbps பதிவிறக்கமும் 1Gbps பதிவேற்றமும் இருக்கும் எங்கின்றனர் அதற்கான வேலையை ஜீயோ பெருநகரங்களில் எப்பொழுதோ தொடங்கி விட்டது ஏர்டெல்லும்தான். அதாவது இன்று ஒரு சிம்க்கு 249 மாத செலவளிப்பது 499 தாம மாதம் இருக்க உள்ளது. பெரும் நகரங்களில் நீங்கள் விரைவில் இதனை காண போகின்றீர்.( நான் நேரடி அனுபவம் அடிப்படையில்).
5G அலைகற்றை மூலம் அரசுக்கு 4.30 இலட்சம் கோடி கிடைக்க உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் அரசானது இதற்க்கு அதிகமான அளவில் அவர்கள் கொள்ளையடிக்க உள்ளனர் என்பதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நாட்டில் 1.5 கோடி பேர் மட்டுமே பயன்படுத்தும் டிஜிட்டலேசன் நாட்டில் 40 கோடி மக்களுக்கு எந்த பயனும் இல்லாத இந்த 4G யோ 5G யோ யாரின் நலனுக்கானது என்று சொல்லவோ நான் தொலிற்நுட்பத்திற்க்கு எதிரானவனோ அல்ல எனது ஒரு பழைய எழுத்தே உங்களுக்கு புரிந்துக் கொள்ள...
சரி வாருங்கள் அலைகற்றை பற்றி ஒரு அடிப்படை புரிதல் தேவைக்காக
காற்றை காசக்கதுடிக்கும்
கார்ப்ரேட்டுகள்
(4G அலைக்கற்றையும் அதன்
உண்மையும்)-சி.பி.
அலைக்கற்றையும்
அதன் தேவையும்:-
மனித இன வளர்ச்சியின் ஒரு மைல் கல்லே தகவல்
தொடர்பு தொழிற் நுட்பம். இன்றைய மிண்ணனு உலகில் அதிவேகமாக செயல்பட தேவைபடும்
தொலைதொடர்பு தொழிற்நுட்பம் எப்படி உள்ளது அதன் சாதக பாதக தன்மையை இங்கே
சுட்டிகாட்டுவதுடன், இந்திய மக்களை அரசும் அதேபோல் தரகு முதலாளிகளும் எப்படி
ஏமாற்றி சுரண்டி கொண்டுள்ளனர் என்பதனை காண்பிக்க முயற்சிப்பேன்.
தினம் டெலிகம் நிறுவன முதலாளிகளின் சீண்டல்
சினுங்கள், பிரதரிடமும், TRAI யிடமும் அளிக்கும் புகாரை நினைத்தால் 150
ஆண்டுகளுக்கு முன்னே பாட்டாளி வர்க்க ஆசான்களில் ஒருவரான எங்கெல்ஸ் தமது
புகழ்மிக்கக் கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் என்ற நூலில் கூறுவதுபோல் ”முதலாளி
செய்து வந்த எல்லாச்சமூக வேலைகளையும் இன்று சம்பளச் சிப்பந்திகள் செய்து
விடுகின்றனர். லாபப்பங்கீடுகளை மூட்டை கட்டிக் கொள்வதையும் வட்டி லாபம்
பெறுவதையும் முதலாளிகள் ஒருவர்முதலை ஒருவர் சூறையாடிக்கொள்ளும் பங்குச் சந்தையில்
சூதாடுவதையும் தவிர முதலாளிகளுக்கு இனி சமூக வேலை எதுவும் இல்லாமற் போய்விட்டது.
முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை முதலில் தொழிலாளர்களை வெளியே தள்ளுகிறது;
இப்பொழுது அது முதலாளிகளையும் வெளியே தள்ளி, தொழிலாளர்களைச் செய்தது போலவே,
இவர்களையும் சிறுமைப்படுத்துகிறது; உடனடியாகவே தொழில்துறை ரிசர்வ் பட்டாளத்தின்
அணிகளுக்கு இல்லாவிட்டாலும், வேண்டாத உபரி மக்கள் தொகையோரின் அணிகளுக்குத்
தாழ்வுறச் செய்கிறது.” என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.
மார்க்சிய ஆசானின் சொற்படியே இன்றுவரை இந்தியாவில்
4G தொழிற்நுட்பமே இல்லாமல் 4G க்கான கட்டணத்தை வசூலித்து கொண்டிருக்கும் இந்திய
தொலைதொடர்பு துறையில் முன்னனி நிறுவனமான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜீயோ உள்ளே நுழைவதையே
தன் நிலை பறி போய்விடும் என்று பதறுகின்றது.
நான் சில தினங்களாக மிண்ணனு ஊடகம் 4G
மற்றும் JIO பற்றிய பல விவாதங்கள் வந்துகொண்டுள்ளதன் அடிப்படையில் அதன்
உண்மைதன்மையை விளக்கியே இந்த பதிவை எழுத நினைக்கிறேன். என் அனுபவம் மற்றும்
அறிவியல் பூர்வமாக விளக்க முயற்சிக்கிறேன். 4G தான் என்ன என்பதனை எழுத
நினைக்கிறேன்.
தொழில் வளர்ச்சி என்பது மக்களின்
வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக இருக்க
வேண்டும், மனித குலவளர்ச்சியின் அடிப்படையே அறிவியலாலும் சிந்தனையாலும் உயர்ந்த
இந்த சமூகம், இன்று சில பெரும் முதலாளிகளின் தேவைக்கும் பன்நாட்டு கம்பெனிகளும்
சுரண்டலுக்கேற்றவாறு போட்டிபோட்டு கொண்டு உலகையே ஒரே கொடையின் கீழ் கொண்டு வர
துடிக்கும் ஏகாத்திபத்தியமும், ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்பாடையில் நாடுகளை
மையபடுத்தும் தேசியம் பேசும் ஆளும் கும்பலும் தரகு முதலாளிகலும் தன் சுரண்டலுக்கு
ஏதுவாக மைய படுத்தபட்ட ஓர் கூட்டம்
வேண்டும், கலாச்சார ரீதியாக அந்த கூட்டம் முதலாளிகளின் அடிமைகளாக வாழும் மேல்
தட்டு மக்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டால் உயர்ந்து கொண்டிருக்கும் ஒரு
கும்பலும் இதே கூட்டதை சாரும்.
உண்ண
உணவில்லை உடுக்க உடையில்லை தங்க இருப்பிடமில்லை இதில் டிஜிடல் உலகை கடைவிரிக்கும்
அரசும் கார்ப்ரேட்களும் என்ன எண்ணத்தில் இருப்பார்கள் என்பதனை நான் விவரிக்க
தெவையில்லை. ஒருபுறம் கோடிக்கணக்கான மக்கள் ஒரு நேர உணவின்றியும், நிறந்தர
வேலையின்றியும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் வாங்கும் திறன் கொண்ட அந்த
சில கோடி பேரை வலைவீசி அழைகின்றனர் டிஜிடல் உலகை காண.
ஊழலின் ஊற்று கண்ணான தனியார் துறையும் பன்நாட்டு
கம்பெனிகளும் போட்டி போட்டு கொண்டு தொலைதொடர்பு துறையில் நுழையும் போது பொதுத்துறை
நிறுவனமான BSNL நிறுவனத்தை அ்ரசு வளர்த்தெடுக்காமை ஏனோ? நாட்டின் பெரும் பொருட்செலவில் பல விண்கோல்களை
தொலைதொடர்பு துறைசார்ந்த பயன்பாட்டிற்க்கு அனுப்பியுள்ள அரசானது, பல லட்சம்
விவசாயிகள் இறந்த பின்னும் கண்டு கொள்ளாத அரசு தொலைதொடர்பு துறையில் தனியார்
நிறுவனங்களுக்கு கொட்டிகொடுக்கும் மானியம் வரி சலுகை பல்லாயிரம் கோடி இதை
நிருபிப்பது போலவே அன்மையில் மோடி அரசின் தொலைதொடர்பு ஊழல் 45,000 கோடி ரூபாய்,
இந்த ஊழல் மையபடுத்தபட்ட பொதுசேவை வரியால் (GST) மூடி மறைக்கபட்டுள்ளது.
அலைக்கற்றை குறித்த விளக்கத்திற்க்கு வருவோம்:-
நாம் இன்றைய டிஜிடல் உலகை அறிய ஏர்டெல் நிறுவனத்தின் கடந்தகால விளம்பரம்
அதன் உண்மைதன்மை மற்றும், மக்களின் அறியாமையை பயன்படுத்தும் கார்ப்ரேட்டுகளின்
கொள்ளை இவற்றை விளக்கினாலே சில பகுதி சுலபமாக புரிந்து கொள்ள முடியும் ஆகவே ஏர்டெலின்
4ஜீ பற்றி பொய்யான விளம்பர உத்தியை முதலில் அறிவோம். டேட்டா என்றும் வாய் கால்
என்றும் கோடி கோடியாக மக்களிடமிருந்து கொள்ளை அடித்து கொண்டிருக்கும் ஏர்டெல்
ஆகஸ்ட் 2015 ல் இந்தியாவின் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சவால் விடுத்தது.
ஏர்டெல் 4Gயை விட அதிகமான வேகம் உள்ள எந்த நெட்வொர்க்காவது உண்டா என்று கேட்டது. அப்படி
இருப்பதாக நிரூபித்தால், நிரூபித்தவரின் வாழ்நாள் முழுமைக்குமான மொபைல் செலவுகளை
ஏற்கத் தயார் என்றது. 2015 ஆகஸ்ட் 6 முதல் நாடு முழுவதும் 4G சேவையை ஏர்டெல்
வழங்குவதை உறுதிபடுத்தியது ஏர்டெல் நிறுவனம், இது எவ்வளவு பெரிய ஏமாற்று என்பதனை கண்கூடாக
அறியலாம் 4G ஏலம் இப்பொழுது அரசு அறிவித்துள்ளது ஆனால் ஏர்டெல் நிறுவனமோ
ஒருவருடத்திற்க்கு முன்னிருந்தே 4G க்கான கட்டணத்தை மக்களிடமிருந்து வசூலித்து
கொண்டிருக்கினற்து.
மெய்யான
4Gஅல்ல! LTE தொழில்நுட்பம்தான்!
LTE தொழில்நுட்பம் என்பது இருக்கின்ற 3G
அல்லது WiMAX அலைக்கற்றையை வைத்துக் கொண்டு அதில் தேவையான மேம்பாடுகளைச் செய்வதன்
மூலம் 3Gயை விட அதிகமான வேகத்தைத் தருவது என்பதுதான். கொல்கத்தாவில் 4G சேவை
வழங்கியதாக உரிமை கோரிய ஏர்டெல் நிறுவனம், சீனாவின் மொபைல் உற்பத்தி நிறுவனமான ZTE
நிறுவனத்துடன் சேர்ந்து TD-LTE தொழில் நுட்பத்தில் சேவையை வழங்கியது. (TD என்றால்
Time Division என்று பொருள். Time Division, Code Division, Frequency Division
ஆகியவை தொலைதொடர்பின் தொழில்நுட்பங்கள் ஆகும்). LTE என்பது 3Gயை விட மேலான ஆனால்
4Gயை விடக்குறைந்த சேவை ஆகும். அதாவது 3Gக்கும் 4Gக்கும் இடைப்பட்ட சேவை ஆகும்.
(It is a rational number between 3 and 4 but well beyond 3.5) அப்படியெனில்
4ஜீதான் என்ன? (கீழே உள்ளன ).
மெய்யான அலைக்கற்றையை
அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு?
ஏர்டெல்
திவால் ஆகும்!
சர்வதேச அளவில் ஏர்டெல் வழங்கும் LTE
வேகம் 183 நிறுவனங்களில் 147 ஆம் இடத்தில் உள்ளது
முதலிடத்தில் நியூசிலாந்து36 Mbps வேகத்துடனும், இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர்
33 Mbps வேகத்துடனும் உள்ளன. 4G என்பது 100Mbps லிருந்து 1Gbps வரை பதிவிரக்கமும்
பதிவேற்றமும் இருக்க வேண்டும் ஆகையல் ஏர்டெல் இங்கே கொடுத்துள்ளது LTE
தொழிற்நுட்பம் மட்டுமே 4G அல்ல எனவே, அதெ LTE தொழிற்நுட்பத்திலும் எங்களை விட
வேகம் யாருக்காவது உண்டா என்று ஏர்டெல் இந்தியாவில் மட்டும்தான் கேட்க முடியும்.
உலகத்தை நோக்கிக் கேட்டால் என்ன ஆகும்? அத்தனை பேரின் மொபைல் கட்டணத்தைச் செலுத்த
முடியாமல் ஏர்டெல் திவால் ஆகும்!
இப்படி அரசும் கார்ப்ரேட்டும் மக்களின்
வாங்கும் திறன் கொண்ட மக்களை குறி வைத்து காற்றை காசாக்கும் தந்திரத்தை, டேட்டா
என்றும் வாய்ஸ் கால் என்றும் மக்களை ஒட்ட சுரண்டுவதுடன் ஏழை எளிய மக்களுக்கு
எட்டாகனியாக ஆகவுள்ளது முபைல் போன் பயன்பாடு, இந்த டெலிகாம் நிறுவனங்களின்
உண்மையான முகத்தையும் சரியான அலைக்கற்றை அளவுகளை பற்றியும் நான் எழுத உள்ளது
மக்களை தெளிவு பெற சிறிதேனும் பயன்பட்டால் நன்று.
இனி
தொடருவோம் அலைகற்றை பற்றி (அறிவியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் காணுவோம்)
1G
(1 ஜெனரேசன்) வர்த்தக அடிப்படையில் ஜப்பானின் நிப்பான் கம்பெனி உலகில் முதல் முதலில்
1979ல் டோகியோவில் முபைல் டெலிகம்யூனிகெசன் தொடங்கியது, இவை தொடர்ந்து 5 வருடத்தில்
மொத்த ஜப்பானில் சேவை விரிவு படுத்த பட்டது. 1G
என்பவை அனலாக் அடிப்படையாக கொண்ட ரேடியோ சிக்னல் 2G என்பது டிஜிடலை அடிப்படையாக
கொண்ட ரேடியோ சிக்னல், இதனை நாம் முன்னர் TV காண பயன்படுத்திய பெரிய குடையும் அனலாக்
ரிசிவரையும் தற்பொழுது டிஜிடல் ரிசிவர் இடம்பிடித்துள்ளதை பெரும்பாலான வீட்டில் தொலைகாட்சி காண்பவர்கள் அறிவார்கள்.(1G
150 MHz அலைக்கற்றையை கொண்டது ).
2G ( 2 ஜெனரேசன்) யானது இதுவரை பேச மட்டுமே இருந்த(1G)
முபைல் போன் SMS,MMS ஆகிய செய்திகள் பறிமாறி கொள்ள பயன்பட்டது இதற்க்கு
டேட்டா(Data) தேவைபட்டது. இவையே பேசவும் தகவல் அனுப்பவும் பயன்பட்டது ஆகையால்
அன்லாக் முறையிலான 1G நெட்வொர்க் தேவையின்றி போய்விட்டது. 1991ல் 2ஜீ நெட்வொர்க்
தொடங்கபட்டது.2G தொழில் நுட்பமானது இரண்டு பகுதியானது ஒன்று time division multiple access
(TDMA)-மற்றொன்று code division multiple access (CDMA)இவை
அதில் பயன்படுத்தும் ரேடியோ அலைவரிசை கடத்தும்(multiplexing )
அடிப்படையில் இவை பிரிக்கப் பட்டுள்ளது.. 2G மிக முக்கிய GSM (அய்ரோப்பியாவை
மையமாக கொண்ட டெலிகாம் நிறுவனங்களும்) மற்றும் CDMA (அமெரிக்காவை ஆசிய பகுதிகளை
முதன்மையாக கொண்ட நிறுவனங்கள்) பயன்படுத்துகின்றது. இவை 450MHz frequency band
அடிப்படையிலானவை.மக்களின் பயன்பாடு 2G ல் அதிகரிக்க தொடங்கியது அதற்கேற்றால் போல்
டெலிகம் புதிய தொழிற்நுட்பமான GPRS (General Packet Radio Service ) சேவையை
புகுத்தியது, இதன் டேட்டா வேகமானது 50
kbit/s (40 kbit/s in practice) இவையும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யாமையால்
புதிய EDGE (Enhanced
Data Rates for GSM Evolution) என்ற தொழிற்நுட்பமான புகுத்தப்பட்டது, இதன் டேட்டா
வேகமானது 1 Mbit/s (500 kbit/s in practice).முறையே 2G அய் 2.5G(GPRS) என்றும் 2.75(EDGE) என்றும்
அழைப்பர். 2G நெட்வொர்க்கானது வாய்ஸ் அடிப்படையாக கொண்டது டேட்டாவானது மிகவும்
மெதுவாக செயல்படுபவை. ஆகவே இன்னும் மிக அதிவேக அலைக்கற்றையை தேடிய போது LTE என்ற
புதிய தொழிற்நுட்பம் அறிமுக படுத்த பட்டது.
இனி
3G மற்றும் 4G என்றால் என்ன?
மேலே
நான் ஏர்டெல் பற்றிய விளக்கத்தில் இது 4G அல்ல 3Gதான் என்று கூறியுள்ளது போல சில
தொழில் நுட்பம் மட்டுமே ஆகையால் இனி LTE பற்றி அறிவோம் LTE ஆனது FDD மற்றும் TDD
பயன்முறை இரண்டையுமே ஆதரிக்கிறது. டூப்ளக்ஸ் அதிர்வெண் இடைவெளியால் பிரிக்கப்பட்ட
UL மற்றும் DL பரிமாற்றத்துக்காக இணையாக்கப்பட்ட அலைக்கற்றையை பயனுள்ளதாக FDD
ஆக்குகின்ற அதேவேளை, காப்பு நேரத்தால் பிரிக்கப்பட்ட UL மற்றும் DL க்காக
பயன்படுத்தப்படும் அதே அலைக்கற்றையை வளங்களைப் பயன்படுத்துவதை TDD
மாற்றீடாக்குகிறது. ஒவ்வொரு பயன்முறையும் LTE இற்குள் அது அதற்குரிய சொந்த
கட்டமைப்பைக் கொண்டுள்ளது, இவை ஒன்று மற்றதுடன் சீரமைக்கப்பட்டுள்ளன,
நாம்
தேடி கொண்டிருக்கும் 4G நெட்வொர்க் என்பது நொடிக்கு 100 Mbps
அதிக அளவாக இறக்குத்தொடுப்பு (டவுன்லிங்க்) வீதத்தையும், நொடிக்கு 50 Mbps குறைந்த
அளவாக ஏற்றுத்தொடுப்பு (அப்லிங்க்) வீதத்தையும், 10 மி.வி ஐவிடக் குறைவான RAN
ரவுண்ட்-டிரிப் டைம்களையும் வழங்குகிறது. LTE 20 MHz இலிருந்து குறைந்து
1.4 MHz வரையான அளக்கக்கூடிய கேரியர் கற்றை அகலங்களை ஆதரிக்கும், மேலும்
அதிர்வெண் பிரிவு டுப்ளக்ஸாக்கம் (FDD) மற்றும் நேரப் பிரிவு இரண்டாக்கம் (TDD)
இரண்டையுமே ஆதரிக்கும்.இந்த தரத்தை அடையும் போது அதனை 4G எனலாம்.
LTE
தரத்தின் கட்டமைப்பு வளர்ச்சி, இது ஒரு தள IP-அடிப்படையான வலையமைப்பு கட்டமைப்பு,
GPRS கோர் நெட்வொர்க்கை இடமாற்றவும் அதற்கான ஆதரவை உறுதிப்படுத்தவும் மற்றும் சில
மரபுவழி அல்லது 3ஜிபிபி அல்லாத முறைமைகளுக்கு, எடுத்துக்காட்டாக முறையே GPRS
மற்றும் WiMax, இடையிலான நகர்வுக்குமாக வடிவமைக்கப்பட்டது.LTE இன் பிரதான
நன்மைகளாவன உயர் செயல்வீதம், தாழ் செயலற்ற நிலை, பிளக்-அண்டு-பிளே, ஒரே
பணித்தளத்தில் FDD மற்றும் TDD, மேம்படுத்தப்பட்ட இறுதிப் பயனர் அனுபவம் மற்றும்
குறைந்தளவு இயக்க செலவுகளை ஏற்படுத்துகின்ற எளிமையான கட்டமைப்பு. LTE ஆனது GSM, cdmaOne, W-CDMA (UMTS), மற்றும்
CDMA2000 போன்ற பழைய வலையமைப்பு தொழில்நுட்பத்தைக் கொண்ட செல் கோபுரங்களுக்கு
பொருத்தில்லாத கடத்தலையும் ஆதரிக்கும். இதுவறை நாம் முபையில் துறையில்
(டெலிகம்யூனிகேசன்) வளர்ச்சியை கண்டோம். இனி நாளைய அலைகற்றை பற்றி பார்ப்போம்.
இனி Reliance JIO பற்றி சற்று அறிவோம்:-
டிசம்பர்
2015லிருந்து சோதனை அடிப்படையில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஜீயோ என்றழைக்கபடும்
முகேஸ் அம்பானியின் டெலிகாம் நிறுவனம் நேரடியாக 4ஜீ சேவையில் பல சலுகை மற்றும்
சரியான விதிமுறைபடி 2016-2017ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தடம்பதிக்க உள்ளது.
இதன் பல அறிவிப்புகள் புதுமையாக உள்ளமையால் ஏற்று கொள்ள கடினமாக உள்ளது. இதுவரை
நாம் அழைப்புக்கு தனியாகவும் டேட்டாவிற்க்கு தனியாகவும் பணம் செழுத்தியவர் இனி
டேட்டாவிலே பேசுவதனால், டேட்டா மட்டும் புதிபித்து கொண்டால் போதும் எவ்வளவு பேசினாலும்
இலவசம் என்கின்றது ஜியோ. 2035 வரை அனுமதி பெற்றதாக கூறும் ஜீயோ மூன்று அலைவரிசை (அலைகற்றை)
கையில் கொண்டுள்ளது 800 MHz, 1,800 MHz bands மற்றும் 2,300 MHz
spectrum இவை மற்றுமின்றி அனில் அம்பானியின் Reliance
Communications உடனான உடன்படிக்கையின் அடிப்படையில் R.Comமின்
800 MHz band யும் பயன்படுத்தி கொள்ள உள்ளன . நாட்டின் நகரங்களை இணைத்துள்ள
ஜீயோ கிரமங்களை அடுத்த நிதியாண்டில் இணைக்க உள்ளதாக கூறியுள்ளது. எல்லா முக்கிய
சாலைகளையும் இரயில் பாதையையும் மற்றும் முக்கிய வணிக வளாக பகுதிகளை முழு வீச்சில்
இணைத்துள்ள ஜீயோ புதிய தொழிற்நுட்பத்துடன்
பெரும் பொருட் செலவில் (1.2 லட்சம் கோடி ரூபாய் ஜீயோவிற்க்கு
செலவளித்துள்ளதாக – மு.அம்பானி தெரிவிக்கிறார்) ஆரம்பிக்கவுள்ள ஜீயோ என்பது நாம்
இப்போது பார்த்து கொண்டிருக்கும் ஏர்டெல் போல் இல்லாமல் பல அதி நவின முறையில்
வரவுள்ளன. எல்லா தொலைகாட்சி நிகழ்ச்சியும் நேரடியாகவும், எல்லா ஊடக நூல்,
பத்திரிக்கை ம்ற்றும் மேகசின் (டிஜிடலில் உள்ள) நேரடியாக பார்த்து படித்து
கொள்ளலாம் பேசுவதை மிக தெளிவாக கேட்கும் தரம் உள்ளதுடன் தொடுதிரையை தொட்டவுடன் அடுத்தவரை
தொடர்பு கொள்ளமுடியும் போன் ரிங்க் ஆகும் முன், பழைய் தொழிற்நுட்பத்தில் எந்த ஒரு
பதிவிரக்கம் செய்யவும் பல நிமிடங்கள் காத்துகிடக்க வேண்டியிருந்தது ஆனால் ஜீயோவில்
நீங்கள் தொட்டவுடன் தொடங்கிவிடும் TV, Cinema எந்த பதிவிரக்கமும். இதுவரை வீட்டில்
மட்டுமே தொல்லைபடுத்தி கொண்டிருக்கும் TV இனி உங்களின் கையில் எல்லா சேனல்களும்,
அதேபோல் எந்த சினிமா பாடல் வேண்டுமாயினும் HD Video திறனுடன் உங்கள் கையில் மேழும்
எல்லா வார மாத இதழ்களும் உடன் படித்து கொள்ளலாம். இப்படி தொழிற்நுட்பம் மேன்மையை
மக்களின் அறிவு வளர்ச்சிக்கா அல்லது கார்ப்ரேட்டின் ஏகபோக கொள்ளைக்கா?
இங்கே
நாம் JIO மற்றும் ஏர்டெல் பற்றி அறிந்து கொண்டோம் இவை மற்றுமின்றி இந்திய
பொதுத்துறை நிறுவனமான BSNL எல்லா கட்டுமானம் தொழிற்நுட்பம் இருந்தும் அதன்
வளர்ச்சியை அரசே தடைபடுத்தி அதன் சேவையை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திகொள்ள
சதிவேலையில் ஈடுபட்டுள்ள அரசின் திட்டங்களை என்னவென்று சொல்ல?.
இனி இந்திய தொலைதொடர்பு சேவையும்
அதன் உண்மைதன்மையும்
இந்திய தொலைதொடர்பு
நிறுவனங்களை நிர்வகிக்கும் TRAI மற்றும் DOT இவை எல்லா டெலிகாம் நிறுவனங்களை
ஒழுங்குபடுத்தி விதிமுறையின் அடிப்படையில் செயல்பாட்டை கண்கானிக்கும் கடமைபட்டது
ஆனல் அவை ஆளும் கும்பலின் கைபாவையாக உள்ளது வருத்தமளிக்கிறது.
இன்றைய ஆளும்
கும்பலின் கைபாவையாகி போனது டிராய், தனியார் நிறுவனங்கள் கிராமங்களுக்குச் சேவை
செய்யவில்லை என்றால் அபராதம்செலுத்தவேண்டும் என்பது டிரையின் விதி ஒன்று உள்ளது.,
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தனியார் நிறுவனங்கள் அபராதமாக 16½ லட்சம் கோடி
செலுத்தவேண்டியுள்ளது. சி.ஏ.ஜி. ரிப்போர்ட் தெளிவாகச் சொல்கிறது. இதை வசூல் செய்ய,
காங்கிரசு விரும்பவில்லை. இப்போது ஆளக்கூடிய பா.ச.க முயலவில்லை. என்ன காரணம்? என்ன
ஊள்நோக்கம்? ஆட்சியில் உள்ளவர்கள் இலாபம் அடையத்தானே!!!
BSNL. நிருவாகம்
வடகிழக்கு மாநிலங்களில் அசாம், உத்தரகாண்டு உள்ளிட்ட பாதிப்படைந்த மாநிலங்களிலும்,
காசுமீர் போன்ற எல்லையோர மாநிலங்களிலும், வளர்ச்சி குறைவான பீகார், இராசஸ்த்தான்,
ஒரிசா போன்ற மாநிலங்களிலும் லாபம், இழப்பு பார்க்காமல் சேவை நோக்கத்துடன்
பணியாற்றி வருகிறார்கள்.
டிராய் விதியை
மதிக்காத தனியார் நிறுவனங்கள்
நான்கு டவர்கள் மூலம் அனுப்பவேண்டிய அதிர்வலைகளை, ஒரு டவர் மூலமாக (அதிக ரேடியோ
அதிர்வலையை பயன்படுத்திப் 'பூஸ்ட்' செய்து) அனுப்புவதால் பயனாளிகள் உறுதியாய்
உடல்அளவில் பாதிக்கப்படுவார்கள். இவற்றையெல்லாம் கண்காணிக்கும் டிராய் அமைதி
காத்து வருகிறது.
BSNL பொதுத்துறை நிறுவனம் என்பதனால் ஆளும் கும்பலின் பலியாடாய்
கார்ப்ரேட்டுகளின் கொள்ளை காடாய் மாறியுள்ளது.எல்லா தனியார் துறை டெலிகாம்
நிறுவனங்களும் BSNL நிறுவனத்தை தங்களின் தேவையை பயன்படுத்தி கொண்டு அவற்றை அழிக்க
முற்படுகின்றது.இப்படியாக பொதுத்துறை நிறுவனத்தின் வளர்ச்சியை தடுத்து தனியார்
நிறுவனங்கள் வளர ஆளும் கும்பலே துணை போகின்றது.
ஊழலே
வரலாறக தொடரும் அலைக்கற்றை ஒதுக்கீடு:-
மத்திய
அரசின் முதல் தொலைதொடர்புதுறை மந்திரியான சுக்ராம் தன் படுக்கை அறையிலே 1996ல் 3.6
கோடி ரூபாய் வைத்திருந்ததை CBI கண்டுபிடித்தது. உலகறிந்த 2G அலைகற்றை ஊழல் US$26 billion என்று 2010 கணக்கின்
அடிப்படையில் CBI, CAG அறிக்கை கூறுகின்றது..இவற்றை அன்றைய தொ.தொ. மந்திரியான
எ.ராஜா மீதும் இன்னும் பலர் மீது CBI சுமத்தியது. இவை எல்லாம் மக்கள் வரி பணத்தை
கார்ப்ரேட் மற்றும் ஆளும் கும்பலின் இந்த கொள்ளையை விளக்க நான் வேறு பதிவு எழுத
வேண்டியிருக்கும், ஆகையால் நான் இதனை அதிகம் எழுதுவதை தவிற்த்து அரசும்
கார்ப்ரேட்டுகளும் சேர்ந்து அடிக்கும் திருட்டின் புதிய வடிவமாக மோடியின் அரசின்
தொலைதொடர்பு ஊழல் ரூ.45,000 கோடி இதை GST மசோதா மூடிமறைத்துவிட்டது. இப்படி
தொடர்கதையாகி கொண்டிருக்கும் ஊழல் புராணம், இந்த தரகு முதலாளிகளின் தலைமையிலான
அரசின் கையில் தீர்வு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
எல்லா மக்களுக்கும்
எல்லா முபைல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்த தனியார் துறையால் முடியாது, லாபம்
மட்டுமே குறிக்கோளக கொண்ட தனியார் நிறுவனம் தன் வளர்ச்சிக்கு அரசின்
அதிகாரிகளுக்கும் ஆளும் கும்பலுக்கும் லஞ்சம் கொடுத்து வரி ஏய்ப்பாலும் கருப்பு பண
பதுக்களாலும் தன் பணப்பையை பெருக்கி மட்டுமே கொள்ளும் மக்கள் சேவையிருக்காது, ஆகவே
பொதுத்துறை நிறுவனமான BSNL வளர்த்தெடுத்து மக்கள் தேவை சேவை இவையால் மட்டுமே
முடியும்.
முடிவுரை:-
* புதிய காலனிய ஆட்சிமுறையை பயன்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டு
பெருமுதலாளிகள் நாட்டின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்காக கொடுக்கும் விலையே
ஊழல்!
* ஊழலின் ஊற்றுக்கண்ணான உலகமய, தாராளமய, தனியார்மயக்
கொள்கைகளை கைவிடு! பொதுத்துறை நிறுவனமான BSNL வளர்த்தெடு!
* ஊழல் செய்யும் முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல்
செய்!
* ஆளும் வர்க்கத்தின் எந்த ஒரு பிரிவாலும் ஊழலை ஒழிக்க
முடியாது!!
* பொதுத்துறை நிறுவனமான BSNL க்கு நிதி அளி அதை மக்கள்
சேவைக்கு பயன்படுத்து! எல்லா தனியார் துறையையும் மூடு!!!
* ஊழலை ஒழிக்க
மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!
ஆதாரம்:-
· http://www.betanews.com/article/European-Commission-pumps-a18-million-into-LTE-research/1250618141
· http://www.npstc.org/documents/Press_Release_NPSTC_Endorses_LTE_Standard_090610.pdf
· http://www.fcc.gov/Daily_Releases/Daily_Business/2009/db0814/DA-09-1819A1.pdf
4ஜீ வந்த பொழுது எழுதிய கட்டுரை இன்று தேவைக் கருத்தி பதிவு செய்கிறேன்.
No comments:
Post a Comment