தோழர் கோ. கேசவன் நினைவுநாள் இன்று


 

தோழர் கோ.கேசவன் மறைந்து இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது (16.09.1998).

 இன்றைக்கு ஏகாதிபத்திய பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் இன்நாட்டு பெரும் முதலாளிகளின் கொள்கை நலன்களுக்கான நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில் பேராசிரியர் கோ.கேசவனின் வாழ்க்கையை, படைப்புகளை நினைவு கூர்வதும், திறனாய்வதும் அவசியமானதொரு பணியாகின்றது.

 இன்று எங்கும் நுகர்வு வெறியும், சுயநலமும், தன்னகங்காரமும் பிற்போக்குதனம் பழைமையை தூக்கி பிடித்தல் ன்று ஏகாதிபத்திய கலாச்சாரமும் இன்நாட்டின் பெருமை பேசும் நிலவுடைமை சிந்தனை முறையும் மேலோங்கி உள்ளது. தான், தன்குடும்பம், தன் வாழ்வு என்று தாழ்ந்து தாழ்ந்து ஆளும் வர்க்கத்தின் அடிமைகளாகி போயுள்ள இன்றைய சூழலில். தோழர் கோ.கேசவனின் பணியானது பரந்து விரிந்து இந்த மானுட வாழ்க்கையை மார்க்சிய கண்ணோட்டத்துடன் தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டவர் என்றால் மிகையாகாது. 

தோழர் கோ.கேசவன் முதுகலைப்பட்டம் பெற்று இரண்டாண்டுகள் மொழி பெயர்ப்பாளராகவும், பின்பு வாழ்நாள் முடியும் வரை தமிழ்ப் போராசிரியராகவும் பணியாற்றியவர்.ஆரம்ப நாட்களில் தி.மு.க அனுதாபியாக, இருந்து பின்பு இடதுசாரி கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர், எழுபதுகளின் ஆரம்பத்தில் வளர்ந்த வானம்பாடி இலக்கிய இயக்கம் தெளிவான அரசியல் வழிகாட்டுதலும், தலைமையும் இன்மையால் தேய்ந்து நெருக்கடி கால கட்டத்தில்(1975) மறைந்து போனது. இத்தகைய பின்னணியில் நெருக்கடி நிலையை எதிர்த்து, பிள்ளை பாண்டியன் என்ற பெயரில் சில கவிதைகளை எழுதினார். அடக்குமுறை உச்சத்தில் இருந்த நெருக்கடிநிலையை விமர்சித்து எழுதிய சிலரில் கேசவனும் ஒருவர் என்பது பதிவு செய்ய வேண்டிய தகவல் ஆகும். இந்தப்பண்பு அவர் வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்தது.ஆரம்பத்தில் இந்திய கம்யூஸ்ட்டு கட்சி {மார்க்சிஸ்ட்}யிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து கேசவன் பணியாற்றினார். அப்பொழுது எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1979இல் 'மண்ணும் மனித உறவுகளும்' என்ற நூலாக வெளியிடப்பட்டது. பரவலாக பாராட்டப்பட்ட இந்நூல் கேசவனுக்கு மார்க்சிய ஆய்வாளர், கைலாசபதியின் சீடர் என்ற பெருமைகளைத் தேடித் தந்தது. 

பின்பு சி.பி.எம்.மின் திரிபுவாத நிலைபாடுகளை உணர்ந்து அதிலிருந்து விலகினார். புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியான இ.க.க(மா.லெ) (மக்கள் யுத்தம்) உடன் தன்னை இணைத்துக் கொண்டார். இயக்கத்தின் தேவைகளை ஒட்டி மாரிஸ் கான் போர்த்தின்-"இயக்கவியல் பொருள் முதல்வாதம்", ஜார்ஜ் தாம்சனின் "மனித சமூகச் சாரம்" போன்றவைகளை மொழி பெயர்த்தார். புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராகவும், செந்தாரகை ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்து புரட்சிகரப்பணிகளை ஆற்றினார். செந்தூரன் என்ற புனைபெயரில் ஏகாதிபத்திய - நிலவுடைமை கருத்துக்களையும் திரிபுவாத தத்துவங்களையும் அம்பலப்படுத்தி எழுதினார்.தொடர்ந்து சமரன், தோழமை, மக்கள் தளம், பொதுவுடைமை ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுக்களிலும் இருந்து பங்களிப்பு செய்தார். மக்கள் பண்பாட்டு பேரவையின் பல கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, மக்கள் பண்பாடு இதழிலும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார். 

சோசலிசக் கருத்துக்களும் பாரதியாரும்,பொதுவுடைமை இயக்கமும் சிங்காரவேலரும் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மேலும் பாரதியார் குறித்த ஆவணத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும், ஜார்ஜ் தாம்சனின் நூலை, ‘மனித சமூக சாரம்’ என்ற தலைப்பிலும், மாரிஸ்கார்ன் போர்த்தின்- லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள், இயக்கவியல் பொருள்முதல்வாதம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.

1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்நவீனத்துவம் உட்பட பல்வேறு பிற்போக்கு கருத்துகளை முறியடிக்க அயராது உழைத்தார். தனது சர்க்கரை நோயையும் பொருட்படுத்தாது கடுமையாக பாடுபட்டதால் தோழர் கேசவன் 16.9.1998 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

புரட்சிகர ஆளுமை நக்சல்பாரி பாதையை தனது அரசியல் வழியாக கோ.கேசவன் ஏற்றவுடன் அவர் எழுதிய நூல் "பள்ளு இலக்கியம் ஒரு சமூகப்பார்வை" என்பதாகும். தலித் மக்கள் பற்றி விரிவாகப் பேசும் இந்நூல் எழுத தோழருக்கு உந்து கோலாக இருந்தது நக்சல்பாரி அரசியல் கண்ணோட்டமே ஆகும். இந்நூலில் தலித் மக்கள் விடுதலை என்பது பாராளுமன்ற சனநாயக மாயைகளைத் தகர்த்து, ஆயுதம் தாங்கி உழவர் போராட்டமாக மலரும்போது மட்டுமே சாத்தியம் என்று கேசவன் தெளிவாக விளக்குகிறார். இதற்காக காவல்துறை கேசவனை விசாரணை என்ற பெயரில் நெருக்கடிக்க உள்ளாகியது. கேசவன் அடக்குமுறையை உறுதியாக எதிர்கொண்டார். இந்தத் தெளிவும் உறுதியாக தோழரிடம் இறுதிவரை இருந்ததை அவரின் சாதியம், தாழ்த்தப்பட்டோரும் சமூக விடுதலையும் நூல்களைப் படிக்கும் வாசகர்கள் அறியமுடியும்.புரட்சி பண்பாட்டு இயக்கம் ஆரம்பித்து பின்பு அதன் நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு 'இலக்கிய விமர்சனம் ஒரு மார்க்சிய பார்வை' என்ற நூலை பேராசிரியர் கோ.கேசவன் எழுதினார். பண்பாட்டு அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருந்த தோழர் சரியாகவே அதை நிறைவேற்றும் வண்ணம் அத்தளத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டார். செந்தாரகை இதழில் பல கட்டுரைகள் எழுதினார். 'நமது இலக்குகள்' என்ற தொடர் கட்டுரை நிலவுடைமை பிற்போக்குத் தனங்களை, ஏகாதிபத்திய சீரழிவுகளை மட்டும் தோலுரிக்கவில்லை..... பல்வேறு நவீன திரிபுவாத கருத்துகளையும் அம்பலப்படுத்துவதாக அந்நூல் இருந்தது. 

ஆய்வாளராக மட்டுமல்லாமல், கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும் பங்கேற்று, இச்சங்கம் நடத்திய பல போராட்டங்களில் முன்னணிப் போராளியாக இருந்தது வழிநடத்தினார்.

1990-களில் முன்னாள் சோலிச நாடுகளின் தகர்வும் ஏகாதிபத்தியங்களின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரமும் அறிவு ஜீவிகளின் மத்தியிலும், நடுத்தர வர்க்கத்தினிடமும் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியது. கம்யூனிசத் தத்துவம், புரட்சி, சோசலிச சமூகம் என்று பலவற்றையும் கேள்விக்குள்ளாக்கியது. கேசவன் இந்தப் போக்குகளை எதிர்த்துப் போராடினார். "ரசியப் புரட்சி மாயையா?" என்ற நூலை எழுதினார். 

நரசிம்மராவ் காலம் தொட்டு உலகமயமாதல், தாராளமயமாதல் என்று பல விதங்களில் ஏகாதிபத்திய சுரண்டல் அதிகரித்தது. உலகமயமாதல் தலித் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது முதல் ஏகாதிபத்திய சீரழிவுத் தத்துவமான பின் நவீனத்துவம் வரை பல சரக்குகளை ஆர்ப்பாட்டமாகச் சிலர் தமிழகக் களத்தில் இறக்கி விட்டனர். தலித் மக்கள், பெண்கள், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை இத்தத்துவ பின்னணியில் வியாக்யானம் செய்து அப்போராட்டங்களைச் சிதறடித்து நீர்த்துப் போக வைக்க முயன்றனர். தோழர் கேசவன் அதைத் தனக்கே உரிய முறையில் எதிர்கொண்டார்.1987க்குப் பின்பு தமிழக நக்சல்பாரி இயக்கத்தில் பின்னடைவு ஏற்பட்டதை ஒட்டி புரட்சிப் பண்பாடு இயக்கம் மறைந்து போனது. கேசவன் பணியானது சிறிது திசை திரும்பியது. ஆனாலும், மார்க்சிய அடிப்படையில் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், தலித் இயக்கம் பற்றியும், பெரியார், அம்பேத்கார், சிங்காரவேலர் போன்றோரின் பணிகள்-படைப்புகள் பற்றியும் வரலாற்று அடிப்படையிலான மதிப்பீட்டு ஆய்வு நூல்களைச் செய்தார். இவையெல்லாம் பொதுவுடைமை இயக்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் விலை மதிப்பற்ற அறிவுச் செல்வங்களாக என்றும் விளங்கும்.

சிலரின் இறப்பு இறகை விட இலேசானது என்றும், சிலரது இறப்பு மலையை விட கனமானது என்றும் தோழர் மாவோ குறிப்பிடுவார். 

இந்தியச் சூழலில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டுச் சூழலில் திரிபுவாத தற்கால நவீன திரிபுவாத சக்திகள், சீர்திருத்த இயக்கங்கள், ஓட்டுப் பொறுக்கும் திராவிட இயக்கங்கள் ஆகியவற்றின் துணையோடு இந்துத்துவம் பாசிச பரிவாரங்கள் அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலைமையில், ஏகாதிபத்திய சீரழிந்த தத்துவமான பின்நவீனத்துவம் அடையாள அரசியல் தான் முற்போக்கானது என்று ஏமாற்றுவது முதற்கொண்டு திராவிட இயக்கமே மண்ணுகேற்ற மார்க்சியம் என்று பிழைப்பு நடத்துவது வரை உள்ள சூழ்நிலையில் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாத ஆய்வு அடிப்படையில் பல்வேறு தளங்களில் 33 நூல்களையும், இன்னும் பல கட்டுரைகளையும் எழுதிய மார்க்சிய ஆய்வாளரும், நக்சல்பாரி இயக்கத் தோழருமான தோழர் கோ.கேசவன் பற்றி எழுத எழுத எழுதிக் கொண்டே போகலாம்.

 இப்போது அவரது நூல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுவிட்டது, நாம்முடைய சரியான மார்க்சிய புரிதலுக்கு இந்த நூல்கள் வித்திடும் என்பது தெளிவு.

அவரை விமர்சிக்கும் பலரும் அவரின் எழுத்துகளை வாசித்திருக்கவில்லை என்றி நினைக்கிறேன். இன்னும் பின் எழுதுவேன்.


அவரின் எழுத்துகள் கீழே:-

  1.   மண்ணும் மனித உறவுகளும்; 1979 டிசம்பர்; சென்னை புக் ஹவுஸ், சென்னை.
  2. பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை; 1981 அக்டோபர்; அன்னம் (பி) லிட், சிவகங்கை (முதல் பதிப்பு).
  3. இயக்கமும் இலக்கியப் போக்குகளும்; 1982 டிசம்பர்; சென்னை புக் ஹவுஸ், சென்னை.
  4. இலக்கிய விமர்சனம் - ஒரு மார்க்சியப் பார்வை; 1984 மே; அன்னம் (பி) லிட், சிவகங்கை.
  5. கதைப்பாடல்களும் சமூகமும்; 1985 ஜூலை; தோழமை வெளியீடு, கும்பகோணம்.
  6. இந்திய தேசியத்தின் தோற்றம்; 1985 டிசம்பர்; சிந்தனையகம், சென்னை - 17.
  7. நாட்டுப்புறவியல் - ஒரு விளக்கம்; 1986 ஜூலை; புதுமைப் பதிப்பகம், திருச்சி.
  8. மார்க்சியத் திறனாய்வுச் சிக்கல்கள்; 1986 ஆகஸ்டு; புதுமைப் பதிப்பகம், மதுரை.
  9. புதியக் கல்விக் கொள்கை; 1986 செப்டம்பர்; பு.ப. இயக்கம்.
  10. புராணச் சார்புக் கதைப்பாடல்களில் ஆண்பெண் உறவுநிலை; 1987 மார்ச்; புதுமைப் பதிப்பகம், திருச்சி.
  11. நாட்டுப்புறவியல் கட்டுரைகள்; 1987; புதுமை பதிப்பகம், திருச்சி.
  12. சோசலிச கருத்துகளும் பாரதியாரும்; 1987 நவம்பர்; ரசனா புக் ஹவுஸ், சென்னை .
  13. பொதுவுடைமை இயக்கமும் சிங்காரவேலரும் (1921-1934); டிசம்பர் 1988; சரவண பாலு பதிப்பகம், விழுப்புரம்.
  14. தமிழ்ச் சிறுகதைகளில் உருவம்; 1988 டிசம்பர்; அன்னம் (பி) லிட், சிவகங்கை .
  15. சோசலிசமும் முதலாளிய மீட்சியும்; 1990 ஜூலை; புதுமைப் பதிப்பகம், திருச்சி.
  16. ரசியப் புரட்சி ஒரு மாயையா?; 1990 அக்டோபர்; புதுமை பதிப்பகம், திருச்சி.
  17. சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்; 1990 அக்டோபர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  18. இட ஒதுக்கீடு; 1990 நவம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  19. திராவிட இயக்கமும் மொழிக் கொள்கையும்; 1991 மே; செல்மா பதிப்பகம், சிவகங்கை.
  20. பாரதியும் அரசியலும்; 1991 டிசம்பர்; அலைகள் வெளியீட்டகம், சென்னை -24.
  21. சமூகவிடுதலையும் தாழ்த்தப்பட்டோரும்; 1994 ஜூன்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  22. தாழ்த்தப்பட்டோர் இலக்கியம்; 1995 ஜூன்; பஃறுளி பதிப்பகம், சென்னை -5.
  23. அம்பேத்கரிசம் - ஆளும் வர்க்கச் சித்தாந்தமா?; 1995 அக்டோபர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  24. திராவிட இயக்கத்தில் பிளவுகள்,; 1995 டிசம்பர்; அலைகள் வெளியீட்டகம், சென்னை -24.
  25. சாதியம்; 1995 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  26. கோவில் நுழைவுப் போராட்டங்கள்; 1997 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  27. தலித் இலக்கியம் சில கட்டுரைகள்; 1998 பிப்ரவரி; புதுமைப் பதிப்பகம், திருச்சி.
  28. பாரதி முதல் கைலாசபதி வரை; 1998 ஏப்ரல்; அகரம், கும்பகோணம்.
  29. தமிழ்: மொழி, இனம், நாடு; 1998 ஜூலை; அலைகள் வெளியீட்டகம், சென்னை -24.
  30. தலித் அரசியல்; 1998 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  31. அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும்; 1998 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  32. முனைவர் கோ. கேசவன் கட்டுரைகள்; 1998 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
  33. நமது இலக்குகள்; 2001 டிசம்பர்; சரவணபாலு பதிப்பகம். விழுப்புரம்.
  34. குணா: பாசிசத்தின் தமிழ்வடிவம் (அ.மார்க்ஸுடன் இணைந்து); 1997 பிப்ரவரி; மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம் & விடியல் பதிப்பகம், கோவை.

“புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்”-2 -மாவோ

 

5. வர்க்க சக்திகள் பற்றி சரியான மதிப்பீட்டிற்கு வருவதும்மேலும் போராட்டத்திற்கான சரியான உத்திகளை வகுப்பதுமே சமூக மற்றும் பொருளாதார பரிசீலனையின் நோக்கம்
மூக மற்றும் பொருளாதார நிலைமைகளை ஏன் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு கீழ்க்கண்டதுதான்நமது பதில்அனைத்து சமூக வர்க்கங்களேநமது பரிசீலனையின் நோக்கங்கள் – பிளவுபட்ட சமூகம் பற்றி அல்ல.
அண்மைக் காலமாகசெம்படையின் நான்காவது படையில் இருக்கும் தோழர்கள் தீவிர ஆய்வுப் பணிக்கு3 பொதுவான கவனம் செலுத்தி வருகின்றனர்ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் தவறானவைஒரு மளிகைக் கடைக்காரரின் கணக்கு வழக்கு போன்று அவர்களது விசாரணையின் விளைவு அற்பமாக அமைகிறதுஅல்லது மலை உச்சியிலிருந்து மக்கள் தொகை மிகுந்த ஒரு மாநகரத்தைக் காணும் தொலைவுப் பார்வை போல் இருக்கிறதுஅல்லது நகரத்திற்கு வரும் நாட்டுப்புறத்தான் கேட்கும் விநோதக் கதைகள் போல் இருக்கின்றனஇது போன்ற பரிசீலனைகளால் சிறிதும் பயனில்லைஅவை நமது முக்கிய நோக்கத்தை நிறைவேற்றாபல்வேறு சமூக வர்க்கங்களின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி அறிவதுதான் நமது முக்கிய நோக்கம்.
நமது பரிசீலனையின் முடிவு ஒவ்வொரு வர்க்கத்தின் தற்போதைய சூழ்நிலையை படம் பிடிப்பதாகவும் அவற்றின் வளர்ச்சியின் ஏற்ற இறக்கங்களை சித்தரிப்பதாகவும் இருக்க வேண்டும்உதாரணமாகவிவசாயத் துறையின் உள்ளடக்கம் பற்றி நாம் பரிசீலனை செய்யும்போதுகுத்தகை உறவை ஒட்டி வகைப்படுத்தப்பட்டுள்ள உடைமைக்கார விவசாயிகள்அரை உடைமைக்கார விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் ஆகியோரின் எண்ணிக்கையை மட்டும் அறிந்தால் போதாதுவர்க்கத்தின் அடிப்படையிலும்பொருளாதார படிநிலையின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்ட பணக்கார விவசாயிகள்நடுத்தர விவசாயிகள் மற்றும் ஏழை விவசாயிகளின் எண்ணிக்கையையும் அறிய வேண்டும்.
வணிகர்களின் உள்ளடக்கம் பற்றி பரிசீலனை செய்யும்போதுதானியம்துணிமூலிகைகள் என்று ஒவ்வொரு வணிகத்திலும் ஈடுபடுவோர் பற்றி மற்றும் அறிந்தால் போதாதுகுறிப்பாக சிறு வணிகர்கள்நடுத்தர வணிகர்கள் மற்றும் பெரும் வணிகர்களின் எண்ணிக்கையை அறிய வேண்டும்ஒவ்வொரு வணிகத்தின் நிலையை மட்டும் பரிசீலனை செய்தால் போதாதுகுறிப்பாக அவற்றுக்குள் நிலவும் வர்க்க உறவு முறையையும் பரிசீலனை செய்ய வேண்டும்வெவ்வேறு வர்த்தகங்களுக்கிடையே உள்ள உறவுமுறையை மட்டும் ஆய்வு செய்தால் போதாதுகுறிப்பாக வெவ்வேறு வர்க்கங்களிடையே நிலவும் உறவு நிலையையும் பரிசீலனை செய்ய வேண்டும்.
வேறுபட்ட சமூக வர்க்கங்களைப் பகுத்தாய்வு செய்வதே நமது தீவிர ஆய்வின் முதன்மையான வழிமுறையாக இருக்க வேண்டும்வர்க்க சக்திகளின் சரியான மதிப்பீட்டிற்கு வரும் பொருட்டுவர்க்கங்களுக்கிடையேயான உறவு நிலையைப் புரிந்து கொள்வதே நமது பரிசீலனையின் இறுதி நோக்கமாக இருக்க வேண்டும்பிறகுபுரட்சிகர போராட்டத்தில் முக்கிய சக்தி எதுநமது கூட்டாளிகளாக வென்றெடுக்கப்பட வேண்டிய வர்க்கம் எதுதூக்கியெறியப்பட வேண்டிய வர்க்கம் எது என்று விவரித்து சரியான வியூகம் வகுக்க வேண்டும்இதுதான் நமது ஒரே முக்கிய நோக்கமாகும்.
பரிசீலனை தேவைப்படும் சமூக வர்க்கங்கள் எவைஅவையாவன :
தொழிற்துறை பாட்டாளிகள்கைவினைத் தொழிலாளர்கள்பண்ணைத் தொழிலாளிகள்ஏழை விவசாயிகள்நகரத்து ஏழைகள்உதிரிப் பாட்டாளிகள்தேர்ந்த கைவினைஞர்கள்சிறு வணிகர்கள்நடுத்தர விவசாயிகள்பணக்கார விவசாயிகள்நிலச்சுவான்தார்கள் வணிக முதலாளிகள்தொழிற்துறை முதலாளிகள்.
நமது பரிசீலனையில் இந்த வர்க்கங்கள் அல்லது சமூக படி நிலைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும்நாம் பணியாற்றும் தளங்களில் தொழிற் துறை பாட்டாளிகள்தொழிற்துறை முதலாளிகள் மட்டுமே இடம்பெறவில்லைமற்ற வர்க்கத்தினரையும் தொடர்ந்து நமது பணிகளுக்கிடையே சந்தித்து வருகறோம்இந்த அனைத்து வர்க்கங்கள் மற்றும் அதன் சக படிநிலைகள் தொடர்பானவைதான் நமது போராட்ட உத்திகள்.
நகரங்களைப் புறக்கணித்து கிராமப்புறப் பணிகளுக்குத் தேவைக்கு அதிகமான அழுத்தம் அளித்தது நமது கடந்த கால பாரிசீலனையின் கடுமையான குறைபாடாகும்அதனால் பல தோழர்கள் நகர ஏழைகள் மற்றும் வணிக முதலாளிகள் பற்றி நமது உத்திகள் பற்றி மேலெழுந்தவாரியாகவும்தெளிவின்றியும் அறிந்துள்ளனர்மலைகளை விட்டு இறங்கி சமவெளிக்கு நாம் வருவதற்குப் போராட்டத்தின் வளர்ச்சி உதவியுள்ளது.4 உடல் ரீதியாக நாம் மலையிலிருந்து இறங்கியிருப்பினும்மனதளவில் நாம் இன்னும் மலையின் மீதே இருக்கிறோம்நாம் நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறம் இரண்டையுமே புரிந்துகொள்ள வேண்டும்இல்லாவிடில்புரட்சிகர போராட்டத்திற்குத் தேவையானவற்றை தருவதற்கு நம்மால் இயலாமல் போகும்.
6. சீனத் தோழர்கள் சீனாவின் நிலைமைகளைப் புரிந்து கொள்வதிலிருந்தே சீன புரட்சிகர போராட்டத்தின் வெற்றி சார்ந்துள்ளது.
ஜனநாயக கட்டம் மூலம் பொதுவுடைமையை அடைவதே நமது போராட்டத்தின் நோக்கமாகும்நிலஉடைமை வர்க்கம்ஏகாதிபத்தியம் மற்றும் கோமின்டாங் ஆட்சியாளர்களை தூக்கி யெறியும் பொருட்டு உழைக்கும் வர்க்கத்தினரை வென்றெடுத்துஉழவர் பெருந்திரளையும்நகர்ப்புற ஏழைகளையும் எழுச்சியுறச் செய்யும் ஜனநாயகப் புரட்சியை முழுமையடையச் செய்வதே இந்தக் கடமையின் முதல் அடியாகும்இந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் அடுத்த அடியாக சோசலிசப் புரட்சி தொடர்ந்து நடத்தப்படும்இந்த மகத்தான புரட்சிகர கடமையை நிறைவேற்றுவது எளிதானதோஎளிமையானதோ இல்லைபாட்டாளி வர்க்க கட்சியின் சரியான மற்றும் உறுதியான உத்திகளை சார்ந்தே இப்புரட்சிகர கடமை வெற்றிபெறும்.
போராட்டத்தின் உத்திகள் தவறானதாகவோஉறுதியற்றதாகவோதடுமாற்றம் உடையதாகவோ இருந்தால்புரட்சி நிச்சயம் தற்காலிகத் தோல்வியை சந்திக்கும்முதலாளித்துவக் கட்சிகளும் தங்களது போராட்ட உத்திகளை அடிக் கடி தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்உழைக்கும் வர்க்கத்தை தவறாக வழி நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடமிருந்து விலக வைக்க சீர்திருத்த திட்டங்களை எப்படிப் பரப்புவது என்றும்ஏழை உழவர்களின் எழுச்சிகளை நசுக்கி பணக்கார விவசாயிகளை எப்படிப் பிடிப்பது என்றும்புரட்சிகர போராட்டங்களை அடக்க ஆயுகம் தரித்த குற்றவாளிக் கும்பல்களை எப்படி திரட்டுவது என்றும் பரிசீலித்துக் கொண்டு வருகிறார்கள்.
வர்க்கப் போராட்டம் தீவிரமாக அதிகரித்துநெருக்கமான வட்டாரங்களில் நடக்கப்பட்டு வரும் சூழ்நிலையில்அவற்றின் வெற்றிக்குத் தங்களது சொந்தக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் சரியானஉறுதியான உத்திகளையே முழுவதுமாக பாட் டாளி வர்க்கம் சார்ந்திருக்க வேண்டும்கம்யூனிஸ்ட் கட்சியின் சரியானபின்வாங்காத போராட்ட உத்திகளை அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சிலரால் எந்தச் சூழ்நிலையிலும் உருவாக்க முடியாதுஅவை மக்கள் பெருந்திரள் போராட்டங்களிடையே – அதாவது உண்மையான அனுபவத்தின் மூலம் – உருவாகின்றனஎனவேநாம் எப்போதும் சமூக நிலைமைகளை ஆய்வு செய்துஎதார்த்தமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
வளைந்து கொடுக்காதபழமைவாதசடங்குப் பூர்வமானஆதாரமின்றி நம்பிக்கைவாதிகளாக இருக்கும் தோழர்கள்தற்போதைய போராட்ட உத்தி சரியானது என்றும்கட்சியின் ஆறாவது தேசிய காங்கிரசின் ஆவணங்களின் புத்தகம்” 5 நிலைத்த வெற்றியை உத்தரவாதப்படுத்தும் என்றும்நிரூபித்து நிறுவப்பட்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமே நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்றும் எண்ணுகின்றனர்இந்த எண்ணங்கள் முற்றிலும் தவறானவை.
கம்யூனிஸ்ட்டுகள் போராட்டங்கள் மூலம் சாதகமான புதிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்தோடு எந்த விதத்திலும் ஒத்துப் போகாததாக இருக்கிறதுஅவை முழுவதும் பழமைவாத வழிமுறையை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனஅவற்றை முழுமையாக கைவிடாவிடில்இந்த வழிமுறை புரட்சிக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தும்இது தோழர்களுக்கே பெருங்கேடு விளைவிக்கும்நிலைமைகள் தற்போது இருப்பது போலவே இருப்பதில் திருப்தி கொண்டுள்ளஎதனையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முயலாதஆதாரமின்றி நம்பிக்கை கொண்டுள்ளவர்களாகசில தோழர்கள் செம்படையில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை.
இதுதான் பாட்டாளி வர்க்கத் தன்மை” என்ற பொய்யை அவர்கள் பரப்புகிறார்கள்அவர்கள் ஒரு அடிகூட நகராதுபரிசீலனை செய்ய மக்களிடம் செல்லாதுமுழுமையாக உண்டுதங்கள் அலுவலகத்திலேயே சிறுதுயில் கொண்டுநாள் முழுவதும் அமர்ந்திருக்கிறார்கள்அவர்கள் எப்போது வாயைத் திறந்தாலும்அவர்களது வெற்றுரைகள் மக்களை சோர்வடையச் செய்கின்றனஇந்தத் தோழர்களைத் தட்டியெழுப்பநமது குரல்களை உயர்த்திஅவர்களிடம் கூச்சலிட வேண்டும்:
தாமதமின்றி உங்களுடைய பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர்!
முற்போக்கான போர் குணம் வாய்ந்த கம்யூனிச கருத்துக்களின் மூலம் அவற்றை மாற்றுவீர்!
போராட்டத்தில் ஈடுபடுவீர்!
மக்களிடையே சென்றுஉண்மைகளை பரிசீலனை செய்வீர் !
குறிப்புகள் :
3. பரிசீலனையை மாசே – துங் எப்போதும் அதிக அழுத்தத்துடன் வலியுறுத்தினார். சமூகப் பரிசீலனையை மிக முக்கியமான கடமைப் பணியாகவும் தலைமைப் பணிக்கான கொள்கைகளை விவரிப்பதற்கான அடிப்படையாகவும் கருதினார். தோழர் மாசே-துங்கின் முன்முயற்சியால் செம்படையின் நான்காவது படையில் பரிசீலனைப் பணி படிப்படியாக வளர்க்கப்பட்டது. பணியின் வழக்கமான பகுதியாக சமூகப் பரிசீலனை இருக்க வேண்டும் என்று வரையறுத்திருந்தார். பெருந்திரள் போராட்டங்களின் நிலைமை, பிற்போக்கானவர்களின் நிலைமை, மக்களின் பொருளாதார வாழ்வு மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் சொந்தமாக இருந்த நிலங்களின் அளவு ஆகிய இனங்கள் அடங்கிய விரிவான படிவங்களை செம்படையின் அரசியல் துறை தயாரித்திருந்தது. செம்படை சென்ற இடத்திலெல்லாம், அந்தப் பகுதியின் வர்க்கச் சூழ்நிலைகளைப் பற்றி முதலில் நன்கு தெரிந்து கொண்டது. பிறகு பெருந்திரள் மக்களின் தேவைக்கு ஏற்ற முழக்கங்களை உருவாக்கியது.
4. இங்கே “மலைகள்” என்பது கியாங்சி மற்றும் ஹூனான் மாகாணங்களின் எல்லைப் பகுதியில் இருந்த சிங்காங் மலைப் பகுதியாகும்; ”சமவெளி” என்பது தெற்கு கியாங்சி மற்றும் மேற்கு ஃபியுகியன் பகுதிகளில் இருப்பதை குறிப்பதாகும். இரு மிகப்பெரிய புரட்சித் தளங்களை அமைக்கும் பொருட்டு, ஜனவரி 1929-ல் சிங்காங் மலையிலிருந்து தெற்கு கியாங்சி மேற்கு ஃபியுகியன் பகுதிகளுக்கு தோழர் மா சே – துங் செம்படையின் நான்காவது அணியின் பிரதானப் படையை அழைத்துச் சென்றார்.
5. ஜூலை 1928-ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது காங்கிரசில்,
அரசியல் தீர்மானங்கள், உழவர்களின் பிரச்சனை குறித்த தீர்மானங்கள், நிலப் பிரச்சனைகள், அரசியல் அதிகாரத்தை நிறுவுதல், மற்றும் ஏனைய பொருட்கள் பற்றிய தீர்மானங்களை உள்ளடக்கியது “ஆவணங்களின் புத்தகம்” ஆகும். செம்படையில் இருந்த கட்சி அமைப்புகளுக்கும், கட்சியின் தள அமைப்புகளுக்கும் விநியோகிக்கும் பொருட்டு இந்தத் தீர்மானங்களை புத்தக வடிவில் செம்படையின் நான்காவது அணியின் முன்னணிக் குழு 1929-ம் ஆண்டு துவக்கத்தில் வெளியிட்டது.
நூல் : மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 6
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
நன்றி வினவு செய்தி பிரிவு

“புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்”-1 -மாவோ

 தோழர் மாவோ உலக பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக சிந்திப்பதை நிறுத்தி இன்றுடன் (09-09-1976) 46-ம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முதலாளித்துவ சுரண்டல் உலகின் அனைத்து மூலைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. உலகம் முழுவதும் பொதுவுடைமை இயக்கங்கள் சிதறுண்டு கிடக்கின்றன.

புரட்சியை முன்னெடுத்துச் சென்று முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டி கம்யூனிசத்தை நோக்கி சமூகத்தைக் கொண்டு செல்ல, ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களைத் தாங்களே பரிசீலித்து, தவறுகளை சீர்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்பது பொதுவாக சொல்லப்படும் வாசகமாகிவிட்ட நிலையில், பரிசீலனையை எப்படிச் செய்ய வேண்டும், எப்படி செய்யக் கூடாது என்பதை மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் தோழர் மாவோ.

1930-ம் ஆண்டு எழுதப்பட்ட “புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்” எனும் அவரது படைப்பு ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் படித்து கிரகித்து தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய விஞ்ஞான வழிமுறையாகும்.

1. பரிசீலனை இல்லையெனில், பேசுவதற்கான உரிமை இல்லை

ஒரு பிரச்சனையை நீங்கள் பரிசீலனை செய்யாவிடில், அதன் மீது பேசுவதற்கான உரிமையை இழக்கிறீர்கள். இது மிகவும் கடுமையானதாக இல்லையா? சிறிதும் கிடையாது. ஒரு பிரச்சனையையும், அதன் இன்றைய அனுபவங்களையும், அதன் கடந்த கால வரலாற்றையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்காவிட்டால், அதன் அத்தியாவசிய அம்சங்களைப் பற்றி நீங்கள் அறியாவிட்டால் அது சந்தேகக்திற்கு இடமின்றி அபத்தமானது.

அபத்தமாகப் பேசுவது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது என்பது அனைவரும் அறிந்ததே. அதைப் பற்றி பேசுவதற்கான உரிமையை உங்களுக்கு மறுப்பது எப்படி அநியாயமானதாகும்? சில தோழர்கள் தங்களது கண்களை மூடிக் கொண்டு, அபத்தமாகப் பேசுகிறார்கள். ஒரு பொதுவுடைமைவாதிக்கு அது அவமானம். ஒரு பொதுவுடைமைவாதி எவ்வாறு தன் கண்களை மூடிக்கொண்டு, அபத்தமாய் பேசமுடியும்?

அது சரிப்படாது! அது சரிப்படாது! நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்! நீங்கள் அபத்தமாய் பேசக்கூடாது!

உங்களால் ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லையா? நல்லது, உடனடியாக அதன் இன்றைய அனுபவங்களையும் அதன் கடந்த கால வரலாற்றையும் பரிசீலனை செய்யுங்கள்! பிரச்சனையை முழுமையாக பரிசீலனை செய்து விட்டால், அதனை எவ்வாறு தீர்ப்பது என்று அறிவீர்கள். முடிவுகள் எப்போதும் பரிசீலனைக்கு பின்பே வரும் – பரிசீலனைக்கு முன்பு வராது.

ஒரு முட்டாள்தான் தனியாகவோ மற்றவர்களுடன் இணைந்தோ பரிசீலனை செய்யாமல், தீர்வு காணவும்” ”ஒரு கருத்தை உருவாக்கவும்’ மூளையைக் கசக்கிக் கொள்வான். பயனுள்ள தீர்வுக்கோ, ஒரு நல்ல கருத்துக்கோ இது இட்டுச் செல்லாது என்று வலியுறுத்திக் கூற வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவன் தவறான முடிவிற்கும், தவறான கருத்திற்கும் வருவான் என்பது நிச்சயம்.

ஆய்வுப் பணிகளைச் செய்யும் தோழர்கள் கொஞ்சம் இல்லை, கொரில்லா தலைவர்களும், புதிதாக வந்திருக்கும் ஊழியர்களும் கூட ஒன்றை மேலோட்டமாகப் பார்த்து விட்டு, அதனைப் பற்றி குறைந்த விவரங்களையே தெரிந்து கொண்டு, ஒரு இடத்திற்கு வந்த உடனேயே அதனைக் கண்டித்து, அதனைக் குறைகூறி அரசியல் பிரகடனங்களை வெளியிடுகின்றனர்.

அத்தகைய அபத்தமான உணர்ச்சிகரமான பேச்சுகள் உண்மையில் வெறுக்கத்தக்கன. இவர்கள் விசயங்களை குழப்புவது நிச்சயம். அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்து, எந்தப் பிரச்சனையையும் தீர்ப்பதற்கான திறனற்றவர்கள் என்று நிரூபித்து விடுவார்கள்.

கடினமான பிரச்சனைகளை சந்திக்கும்போது, தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலர் பிரச்சனைகளைத் தீர்க்க இயலாது பெருமூச்சுவிடுகின்றனர். அவர்கள் பொறுமை இழக்கின்றனர். ”தங்களுக்குத் திறமை இல்லை; இந்த வேலையை செய்ய முடியாது” என்று காரணம் காட்டி, இடமாற்றம் கோருவார்கள். இது கோழைகளின் வார்த்தைகள்.

உங்களது இரு கால்களாலும் இயங்கிக் கொண்டே இருங்கள். தங்கள் பொறுப்பில் இருக்கும் பிரிவினை சுற்றி வாருங்கள். மேலும், கன்ஃபூசியஸ் செய்தது போல ”எல்லாவற்றை பற்றியும் தீர விசாரியுங்கள்”1 அப்போது உங்களது திறமைகள் எவ்வளவுதான் குறைவாக இருந்தாலும், உங்களால் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆய்வுக்காக நீங்கள் வாயிலைக் கடந்து வெளியேறும்போது உங்கள் தலை காலியாக இருக்கலாம். நீங்கள் திரும்பும்போது ஒருபோதும் தலை காலியாக இல்லாமல், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து விவரங்களும் அதில் இருக்கும். இவ்வாறுதான் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.

நீங்கள் வெளியில் சென்றுதான் ஆக வேண்டுமா? அவசியமில்லை. கடினமான பிரச்சனை என்று தாங்கள் கருதுவது பற்றி தல நிலைமைகளை அறியும் பொருட்டும், தற்போது அது என்ன நிலையில் இருக்கிறது என்று அறியும் பொருட்டும், நிலைமைகளை நன்கறிந்த மனிதர்களோடு உண்மையறியும் கூட்டம் கூட்டலாம். பிறகு, உங்களது கடினமான பிரச்சனையை எளிதாகத் தீர்க்கலாம்.

நீண்ட பேறு காலத்தை பரிசீலனையோடும், பிறப்பு நாளை பிரச்சனையைத் தீர்க்கும் நாளோடும் ஒப்பிடலாம். ஒரு பிரச்சனையை பரிசீலனை செய்வது என்பது உண்மையில் அதனைத் தீர்ப்பதற்குத் தான்.

கலாச்சார ரீதியாகப் பின்தங்கியுள்ள சீன உழவர்களின் மனப்போக்கின்படி, ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்துமே சரியானவை. விநோதமாக, விவாதங்களின்போது அது புத்தகத்தில் எங்கு எழுதப்பட்டுள்ளது என்று காட்டுங்கள்” என்று எப்போதும் கேட்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் கூட பலர் இருக்கின்றனர்.

உயர்மட்ட தலைமையின் கட்டளை சரியாக இருப்பதாகக் கூறுவது, ‘அது உயர்மட்ட தலைமையிடமிருந்து வருகிறது’ என்பதற்காக, அல்ல; ஆனால், போராட்டத்தின் அக மற்றும் புறச் சூழலுக்கு அதன் உள்ளடக்கம் ஒத்துப் போவதாக இருப்பதாலேயே அவற்றை ஏற்கிறோம்.

கட்டளைகள் மேலிடத்திலிருந்து வருகின்றன என்பதற்காக அவற்றைப் பற்றி விவாதிக்காமலும், உண்மை நிலையின் பின்னணியில் அவற்றை ஆராயாமலும் சடங்குப்பூர்வமான போக்கில் அவற்றை ஏற்பது மிகவும் தவறு. கட்சியின் நிலைபாடுகளும், உத்திகளும் மக்களிடம் ஆழமாய் ஏன் வேர்விடவில்லை என்பதற்கு, இந்த சடங்குத்தனம் செய்யும் கெடுதலே காரணம்.

மேலிடத்தின் கட்டளையை கண்களை மூடிக் கொண்டு, எந்தக் கருத்து மாறுபாடுமின்றி செயல்படுத்துவது, உண்மையில் அதனை நிறைவேற்றுவதாய் இருக்காது. அது அந்தக் கட்டளையை சாதுர்யமாக எதிர்ப்பதும், கவிழ்ப்பதுமாகும்.

புத்தகத்திலிருந்து மட்டும் சமூக விஞ்ஞானத்தை கற்கும் வழிமுறை அவ்வாறே மிகவும் அபாயகரமானது; அது எதிர்ப்புரட்சியின் பாதைக்கு இட்டுச் செல்லும். சமூக விஞ்ஞானத்தை கற்பதில் புத்தகங்களோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்ட சீன பொதுவுடைமைவாதிகளின் முழுக் குழுவும் எதிர்ப் புரட்சியாளர்களாக மாறிய உண்மையே இதற்குத் தெளிவான நிரூபணமாக இருக்கிறது.

மார்க்சியம் சரியானது என்று நாம் கூறுவது, மார்க்ஸ் ஒரு “தீர்க்கதரிசி” என்பதனால் அல்ல; நமது போராட்டத்திலும், நடைமுறையிலும் அவரது கோட்பாடுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டதால் மட்டுமே அவ்வாறு கூறுகிறோம். நமது போராட்டங்களில் நமக்கு மார்க்சியம் தேவைப்படுகிறது. நாம் அவரது கோட்பாடுகளை ஏற்கும்போது, “”தீர்க்க தரிசனம்” என்ற புதிரான கருத்தோட்டமான சடங்குத்தனம் நமது மனத்தில் ஒருபோதும் நுழைவதில்லை.

மார்க்சிய நூல்களைப் படித்த பலர் ஓடுகாலிகளாக மாறிவிட்ட நிலையில், படிப்பறிவற்ற தொழிலாளிகள் மார்க்சியத்தை நன்கு கிரகித்துக் கொள்வதை நாம் அடிக்கடி காண்கிறோம். நாம் மார்க்சிய நூல்களை நிச்சயம் படிக்க வேண்டும்; ஆனால் இந்தப் படிப்பு நமது தேசத்தின் உண்மையான எதார்த்த நிலைமையோடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நமக்கு புத்தகங்கள் தேவை. ஆனால் உண்மை சூழ்நிலையிலிருந்து விலகி நிற்கும் புத்தக வழிபாட்டை நாம் வெற்றிகொள்ள வேண்டும்.

புத்தக வழிபாட்டை நாம் எப்படி வெற்றி கொள்ள முடியும்? – எதார்த்த நிலையை பரிசீலனை செய்வதுதான் ஒரே வழி.

4. எதார்த்த நிலைமையை சரியாக ஆய்வு செய்யாவிடில், வர்க்க சக்திகளை அகநிலையாக மதிப்பீடு செய்வதும் வேலைக்கான அகநிலைவாத வழிகாட்டலும் தோன்றி வலது சந்தர்ப்பவாதமாகவோ இடது சாகசவாதமாகவோ சீரழியும்

இந்த முடிவை நீங்கள் சந்தேகிக்கிறீர்களா? இதனை ஏற்றுக் கொள்ள உண்மைகள் உங்களை நிர்ப்பந்திக்கும். எந்த பரிசீலனையும் செய்யாமல், அரசியல் சூழ்நிலையை மதிப்பீடு செய்யவோ, ஒரு போராட்டத்தை வழிநடத்தவோ முயன்று பாருங்கள், அத்தகைய மதிப்பீடும் வழிகாட்டுதலும் அடிப்படையற்றதாகவும், அகநிலை வாதமாகவும் இருக்கிறதா? இல்லையா? என்பதை காண்பீர்கள். அது சந்தர்ப்பவாதத்திற்கோ, சாகசவாதத்திற்கோ இட்டுச் செல்கிறதா, இல்லையா என்று அறிவீர்கள். நிச்சயமாய் அது அப்படித்தான் இருக்கும். நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கவனமாக திட்டமிடத் தவறியது இதற்குக் காரணம் அல்ல; செம்படை கொரில்லாக் குழுவில் அடிக்கடி நிகழ்வது போல, குறிப்பான சமூகச் சூழ்நிலைகளை கவனமாக ஆய்வு செய்யாமல், திட்டங்களை தீட்டுவதே காரணம்.

லி கியுயி2 வகையான அலுவலர்கள் மனிதர்களை அவர்களது தவறுகளுக்காக தண்டிக்கும்போது பாரபட்சம் காட்டுவதில்லை. விளைவாக, அவர்கள் அநியாயமாக நடத்தப்பட்டு விட்டதாக தவறிழைத்தவர்கள் கருதுகின்றனர்; பல சச்சரவுகள் ஏற்படுகின்றன; தலைவர்கள் அனைத்து கவுரவங்களையும் இழக்கின்றனர். செம்படையில் இது அடிக்கடி நிகழ்வதில்லையா?

நாம் அகநிலைவாதத்தை துடைத்தெறிய வேண்டும். நாம் மக்களை வென்றெடுப்பதிலும், எதிரிகளை வீழ்த்துவதிலும் வெற்றி அடைவதற்கு முன்பாக அனைத்து சந்தர்ப்பவாத, சாகசவாத தவறுகளுக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும். இலட்சியமயத்தை துடைத்தெறிய உள்ள ஒரே வழி, முயற்சிகளை மேற்கொண்டு, உண்மைச் சூழ்நிலையை பரிசீலனை செய்வதே ஆகும்.

குறிப்புகள் :

1. கன்ஃபூசியஸ்ஸின் இலக்கியத் துணுக்குகள் நூல் III ஐ காண்க. “பாயி : “மூதாதையர்களின் ஆலயத்தில், கன்ஃபூஷியஸ் நுழைந்தபோது, அவர் எல்லாவற்றையும் விசாரித்தார்.

2. வடக்கு ஷங் வம்சத்தின் இறுதி ஆண்டுகளில் (960-1127) நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் பற்றி விவரித்த “சுயி ஹூ சுவான்” (மார்ஸ் பெஸ்ளின் கதாநாயகர்கள்) என்ற பிரபல சீன நாவலின் நாயகன் லி-கியூ ஆவார். அவர் எளிமையானவர்ர்; வெளிப்படையானவர்; விவசாயிகளின் புரட்சி நோக்கத்திற்கு முகவும் விசுவாசமானவர். ஆனால் முரட்டுத்தனமானவர்; சாதுர்யமானவர் அல்ல.

நூல் : மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 6
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்

நன்றி வினவு செய்திப் பிரிவு

நட்சத்திரம் நகர்கிறது. பா.ரஞ்சித்தின் அரசியல் பிழையும் - பிழைப்பும்

 ரஞ்சித் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஒருபிரிவினரும் அதன் பாதக அம்சங்களை மற்றொரு பிரிவினரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மையில் பா. ரஞ்சித்தின் படங்கள் என்ன சொல்ல வருகின்றது என்பதனை கருத்தில் கொண்டால் இந்த படத்தின் நோக்கம் புரிந்துக் கொள்ள முடியும். இவரின் எல்லா படங்களும் இங்குள்ள ஒடுக்குமுறை பற்றி பேசுகிறது அதற்க்கு தீர்வு காண முயலாமல் ஒடுக்குமுறைக்கு காரணம் சாதியம்தான் ஆக சாதி  ஒடுக்குக்கு சில சாதிகளை குறிபிட்டு திருப்தி படுத்தி விடுகிறார். உண்மையில் இன்று சாதியின் தேவை யார் யாருக்கு சேவை செய்கிறது இவருக்கு தெரியாதா? ஒடுக்கப் பட்ட மக்கள் என்றாலே குறிப்பிட்ட சாதி மக்கள்தான் என்று என்னிடம் ஒரு தோழரே விவாதிக்க வந்து விட்டார். உண்மையில் வர்க்கத்தை மறைத்து சாதியை தூக்கி பிடிப்போர் எல்லோரும் ஆளும் வர்க்கத்திடம் ஒன்று சேருமிடம் இதுதான். ஆர் எஸ் எஸ் ஆகட்டும் பல்வேறு மத பிரிவினைவாத சக்திகளாகட்டும் ஏன் ஒடுக்கப் பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் பல்வேறு முகாம்களாகட்டும் இவர்களின் ஆண்டை அமெரிக்க ஏகாதிபத்திய ஏஜெண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யவே என்று பல ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  உண்மையில் கடை நிலையில் வாழ வழியற்ற மக்களுக்கு இது போன்ற அரசியலில் ஒரு பயனும் இல்லை. அவர்கள் இன்றும் ஏதும் அற்ற நிலையில் வாழ்ந்துக் கொண்டுள்ளனர். அவர்களின் பெயரால் சிலர் சொகுசாக வாழ்ந்துக் கொண்டுள்ளனர். நாம் வர்க்கம் புரிந்துக் கொள்ளாவிட்டால் இது போன்ற அடையாள பின்நவீனத்துவ பிழைப்புவாத அரசியலுக்கு அடிபணிந்து சின்னாபின்னமாகி போக வேண்டியதுதான்.ஆக மக்களின் ஒடுக்குமுறைக்கு காரணமான வர்க்க அமைப்பை தவறியும் கேள்வி கேட்க்காமல் வர்க்கமாக ஒன்று சேர வேண்டிய மக்களை சாதியாக பிரித்து வைத்து சுரண்டிக் கொண்டிருக்கும் இந்த வர்க்க அரசை ஏன் கேள்வி கேட்க்கவில்லை என்றால் அவர்களின் நோக்கம் மேலே குறிபிட்டவர்களின் நோக்கத்தை முழுமை செய்வதாக உள்ளமையே எனலாம்.

மேலும் இரு தோழர்களின் முகநூல் பகுதியிலிருந்து சில கீழே

புணர்ச்சிக்கு பின்னான உரையாடலுடன் தொடங்குகிறது முதல் காட்சி. அங்கிருந்து தொடங்கி படம் நெடியிலும் காதல், உடல், புணர்ச்சி, காதலுக்கும் புணர்ச்சிக்கும் இடையே ஊடாடும் சாதி படிநிலை பெண் மற்றும் ஆண் உடல்கள் மீதும் உணர்வுகளின் மீதும் நடத்தப்படும் கலாச்சார கண்காணிப்பு . தலித் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படும் உதாசீனம் வன்முறை மேலும் உடல் ,உடல் வழி நிகழும் உணர்வு வெளிப்பாடும் .மனித சமுதாயத்தில் தன்பால் உணர்வாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் இடமும் இறுப்பும் என்னவாக இருக்கிறது என்பதனை தன் போக்கில் வெளிப்படுத்த முயற்சித்துள்ளார் பா. ரஞ்சித்.




<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fvijayanr.simsim%2Fposts%2Fpfbid091b7GoovF9nxKhV12kgJrMqCQtH5H9ne72CbbURXqDNzEeQmknPuwJvXfKM5iiyxl&show_text=true&width=500" width="500" height="635" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>


இந்த சமூக மாற்றத்திற்கு தேவையான உரையாடல்கள் மிக முக்கியம். அந்த உரையாடல்களை கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அப்படி செய்யப்படும் உரையாடல்களில் தவிர்க்க முடியாமல் தமிழக சூழலில் ஆதிக்கம் செலுத்தும் அம்பேத்கர், பெரியார் கருத்துகள் குறித்தும் உரையாடல்களை செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.
ஆனால் இதை அம்பேத்கர் மற்றும் பெரியார் கருத்துகளை பின்பற்றுபவர்கள் ஏற்கவே மறுக்கின்றனர். இந்த இரண்டு கருத்துகளையும் குறித்து ஆக்கப்பூர்வமான உரையாடல்களை தொடர முற்பட்டால் சாதி வெறியர்கள்,பார்ப்பன அடிமைகள் என்கிற தூற்றுதலுக்கே உள்ளாக்கப்படுகின்றனர்.
இவையெல்லாம் தெரியாமல் நீலம் குழுவினர் இல்லை. இருந்தும் உரையாடல் வேண்டும் என்கிறார்கள்.
நல்லது உரையாடல் நிகழ்த்துவோம் என்றாலும், அவர்கள் விரும்பும் போக்கிலே உரையாடல்களை நிகழ்த்த வேண்டும் என்கிறார்கள்.இளையராஜா வை விமர்சிக்க கூடாது அப்படி விமர்சித்தால் அது சாதி வெறி என்று சொல்லி தங்களை தற்காத்து கொள்கின்றனர்.
யாரையும் விமர்சனத்திற்கே உள்ளாக்காமல் நாங்கள் சொல்வதை மட்டுமே கேக்க வேண்டும் என்பதற்கு பெயர் விவாதம் இல்லை. கருத்து திணிப்பு. -சேராவின் முகநூல் பதிவு.
வர்க்க அரசியல் என்கிற ஒன்றை மறந்துவிட்டனர். எல்லாவித அடையாளத்திலிருந்தும் மக்களை விடுவித்து ஆளும் முதலாளிய வர்க்கத்தை வீழ்த்தும் வல்லமை வர்க்க அரசியலிடம் இருப்பதை காணத்தவறி ஆளும் வர்க்க அரசியலான அடையாள அரசியல் வளர்வதற்கு துணை நிற்கன்றனர்.

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...