நட்சத்திரம் நகர்கிறது. பா.ரஞ்சித்தின் அரசியல் பிழையும் - பிழைப்பும்

 ரஞ்சித் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஒருபிரிவினரும் அதன் பாதக அம்சங்களை மற்றொரு பிரிவினரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மையில் பா. ரஞ்சித்தின் படங்கள் என்ன சொல்ல வருகின்றது என்பதனை கருத்தில் கொண்டால் இந்த படத்தின் நோக்கம் புரிந்துக் கொள்ள முடியும். இவரின் எல்லா படங்களும் இங்குள்ள ஒடுக்குமுறை பற்றி பேசுகிறது அதற்க்கு தீர்வு காண முயலாமல் ஒடுக்குமுறைக்கு காரணம் சாதியம்தான் ஆக சாதி  ஒடுக்குக்கு சில சாதிகளை குறிபிட்டு திருப்தி படுத்தி விடுகிறார். உண்மையில் இன்று சாதியின் தேவை யார் யாருக்கு சேவை செய்கிறது இவருக்கு தெரியாதா? ஒடுக்கப் பட்ட மக்கள் என்றாலே குறிப்பிட்ட சாதி மக்கள்தான் என்று என்னிடம் ஒரு தோழரே விவாதிக்க வந்து விட்டார். உண்மையில் வர்க்கத்தை மறைத்து சாதியை தூக்கி பிடிப்போர் எல்லோரும் ஆளும் வர்க்கத்திடம் ஒன்று சேருமிடம் இதுதான். ஆர் எஸ் எஸ் ஆகட்டும் பல்வேறு மத பிரிவினைவாத சக்திகளாகட்டும் ஏன் ஒடுக்கப் பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் பல்வேறு முகாம்களாகட்டும் இவர்களின் ஆண்டை அமெரிக்க ஏகாதிபத்திய ஏஜெண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யவே என்று பல ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  உண்மையில் கடை நிலையில் வாழ வழியற்ற மக்களுக்கு இது போன்ற அரசியலில் ஒரு பயனும் இல்லை. அவர்கள் இன்றும் ஏதும் அற்ற நிலையில் வாழ்ந்துக் கொண்டுள்ளனர். அவர்களின் பெயரால் சிலர் சொகுசாக வாழ்ந்துக் கொண்டுள்ளனர். நாம் வர்க்கம் புரிந்துக் கொள்ளாவிட்டால் இது போன்ற அடையாள பின்நவீனத்துவ பிழைப்புவாத அரசியலுக்கு அடிபணிந்து சின்னாபின்னமாகி போக வேண்டியதுதான்.ஆக மக்களின் ஒடுக்குமுறைக்கு காரணமான வர்க்க அமைப்பை தவறியும் கேள்வி கேட்க்காமல் வர்க்கமாக ஒன்று சேர வேண்டிய மக்களை சாதியாக பிரித்து வைத்து சுரண்டிக் கொண்டிருக்கும் இந்த வர்க்க அரசை ஏன் கேள்வி கேட்க்கவில்லை என்றால் அவர்களின் நோக்கம் மேலே குறிபிட்டவர்களின் நோக்கத்தை முழுமை செய்வதாக உள்ளமையே எனலாம்.

மேலும் இரு தோழர்களின் முகநூல் பகுதியிலிருந்து சில கீழே

புணர்ச்சிக்கு பின்னான உரையாடலுடன் தொடங்குகிறது முதல் காட்சி. அங்கிருந்து தொடங்கி படம் நெடியிலும் காதல், உடல், புணர்ச்சி, காதலுக்கும் புணர்ச்சிக்கும் இடையே ஊடாடும் சாதி படிநிலை பெண் மற்றும் ஆண் உடல்கள் மீதும் உணர்வுகளின் மீதும் நடத்தப்படும் கலாச்சார கண்காணிப்பு . தலித் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படும் உதாசீனம் வன்முறை மேலும் உடல் ,உடல் வழி நிகழும் உணர்வு வெளிப்பாடும் .மனித சமுதாயத்தில் தன்பால் உணர்வாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் இடமும் இறுப்பும் என்னவாக இருக்கிறது என்பதனை தன் போக்கில் வெளிப்படுத்த முயற்சித்துள்ளார் பா. ரஞ்சித்.




<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fvijayanr.simsim%2Fposts%2Fpfbid091b7GoovF9nxKhV12kgJrMqCQtH5H9ne72CbbURXqDNzEeQmknPuwJvXfKM5iiyxl&show_text=true&width=500" width="500" height="635" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>


இந்த சமூக மாற்றத்திற்கு தேவையான உரையாடல்கள் மிக முக்கியம். அந்த உரையாடல்களை கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அப்படி செய்யப்படும் உரையாடல்களில் தவிர்க்க முடியாமல் தமிழக சூழலில் ஆதிக்கம் செலுத்தும் அம்பேத்கர், பெரியார் கருத்துகள் குறித்தும் உரையாடல்களை செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.
ஆனால் இதை அம்பேத்கர் மற்றும் பெரியார் கருத்துகளை பின்பற்றுபவர்கள் ஏற்கவே மறுக்கின்றனர். இந்த இரண்டு கருத்துகளையும் குறித்து ஆக்கப்பூர்வமான உரையாடல்களை தொடர முற்பட்டால் சாதி வெறியர்கள்,பார்ப்பன அடிமைகள் என்கிற தூற்றுதலுக்கே உள்ளாக்கப்படுகின்றனர்.
இவையெல்லாம் தெரியாமல் நீலம் குழுவினர் இல்லை. இருந்தும் உரையாடல் வேண்டும் என்கிறார்கள்.
நல்லது உரையாடல் நிகழ்த்துவோம் என்றாலும், அவர்கள் விரும்பும் போக்கிலே உரையாடல்களை நிகழ்த்த வேண்டும் என்கிறார்கள்.இளையராஜா வை விமர்சிக்க கூடாது அப்படி விமர்சித்தால் அது சாதி வெறி என்று சொல்லி தங்களை தற்காத்து கொள்கின்றனர்.
யாரையும் விமர்சனத்திற்கே உள்ளாக்காமல் நாங்கள் சொல்வதை மட்டுமே கேக்க வேண்டும் என்பதற்கு பெயர் விவாதம் இல்லை. கருத்து திணிப்பு. -சேராவின் முகநூல் பதிவு.
வர்க்க அரசியல் என்கிற ஒன்றை மறந்துவிட்டனர். எல்லாவித அடையாளத்திலிருந்தும் மக்களை விடுவித்து ஆளும் முதலாளிய வர்க்கத்தை வீழ்த்தும் வல்லமை வர்க்க அரசியலிடம் இருப்பதை காணத்தவறி ஆளும் வர்க்க அரசியலான அடையாள அரசியல் வளர்வதற்கு துணை நிற்கன்றனர்.

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...