முதலாளித்துவ ஜனநாயகத்தையும் முதலாளி வர்க்க பாசிசத்தையும் போட்டு குழப்பி கொள்ளக்கூடாது.
முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முதலாளி வர்க்கம் மக்களுக்கு போடும் பிச்சை அல்ல.அது ஒரு வரலாற்று காலகட்டம்.
ஆனால் பாசிசம் என்பது முதலாளி வர்க்கத்தால் புறச்சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது அது தனது வரலாற்று கட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கிறது மத்தியகால கொடுங்கோன்மைக்கு இணையான ஒரு சர்வாதிகார ஆட்சியை தனது சுரண்டல் மற்றும் சந்தை விரிவாக்க நலனுக்காக நடைமுறைபடுத்துகிறது.
முதலாளித்துவ சமூகம் தான் பாசிசத்தை உருவாக்குகிறது என்றால் அது ஏன் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் தோன்றுவதில்லை என்ற கேள்வியை நாம் கேட்பதில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் தனிநபர் சுதந்திரம்,தனிமனித உரிமைகள் போன்ற முதலாளித்துவ ஜனநாயகம் உச்சத்தில் இருக்கிறது எனவே அங்கு ஒரு பாசிசத்தை கட்டமைக்க முடிவதில்லை.
ஆனால் இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளில் நிலபிரபுத்துவ எச்சங்களை முதலாளி வர்க்கம் தனது நலனுக்காக பயன்படுத்தி பாசிசத்தை கட்டமைக்க முயல்கிறது அதே சமயம் முழு பாசிசம் என்பது அதன் வளர்ச்சிக்கு இக்காலகட்டத்தில் தடையாக இருக்கும் என்பதால் அதை முழுவதுமாக அமல்படுத்தவில்லை.
ஆனால் பாசிசம் என்பது முதலாளித்துவத்தின் அடுத்த கட்டம் என்பது போல் நமது தோழர்கள் பேசுவது எனக்கு வியப்பை கொடுக்கிறது. ஜனநாயகம் என்ற ஒன்றை வரலாறு நமக்கு வழங்கியுள்ளது அதை மறுக்கும் முதலாளிகளுக்கு எதிராக அதை பயன்படுத்தி உழைக்கும் மக்களை அமைப்பாக்க வேண்டும் அந்த ஜனநாயகத்தை முழுமையடையச்செய்ய வேண்டும்.
All reactions:
5Kanagu Kanagraj, Sivakumar Selvaraj and 3 others8 comments
Like
Comment
Share
8 comments
Most relevant
- Palani Chinnasamyதோழர் வணக்கம் நீங்கள் இந்த கருத்தில் உடன்படுகிறீர்களா? அப்படியென்றால் இதனை பற்றி உங்கள் கருத்து என்னே ஈஸ்வரன் தோழர்
- Like
- Reply
- 2d
- ஈஸ்வரன் அ.கா.இந்த கருத்தில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை விமர்சியுங்கள்
- Like
- Reply
- 2d
- Palani Chinnasamyஈஸ்வரன் அ.கா. அவை தவறென்று நான் கூறுவதற்கு என்ன உள்ளது தோழர். நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது நான் தடுக்க வரவில்லையே தோழர். இவை தவறு என்று மட்டுமே கூறிக்கொள்ள விரும்புகிறேன் தோழரே
- Like
- Reply
- 2d
- ஈஸ்வரன் அ.கா.தவறை விமர்சியுங்கள் தோழர்
- Like
- Reply
- 2d
- Palani Chinnasamyஈஸ்வரன் அ.கா. நேரமில்லை தோழர் மாலையில் அவசியம் எழுதுவேன் தோழர்
- Like
- Reply
- 2d
- Tholar Velanமுதலாளித்துவப் புரட்சி முழுமையடையாத நாடுகளில் உருவாகும் பாசீசம் தரகு முதலாளியத்தின் கோரமுகம் இதை சிலி, ஆர்ஜென்ரீனா, பிரேசில், குவாத்தமாலா, பிலிப்பீன் போன்ற நாடுகளில் இருந்து அறியலாம். முதலாளித்துவ கிரேக்கம், ஸ்பானியாவிலும் பாசிஸ்டுக்கள் உருவாக்கியது.
- Like
- Reply
- 1d
- ஈஸ்வரன் அ.கா.//ஜனநாயகம் என்ற ஒன்றை வரலாறு நமக்கு வழங்கியுள்ளது அதை மறுக்கும் முதலாளிகளுக்கு எதிராக அதை பயன்படுத்தி உழைக்கும் மக்களை அமைப்பாக்க வேண்டும் அந்த ஜனநாயகத்தை முழுமையடையச்செய்ய வேண்டும்.//இருக்கும் ஜனநாயகத்தை முழுமையடைய செய்வது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே.
- Like
- Reply
- 16h
No comments:
Post a Comment