ஆரியர்கள்தான் எல்லாவற்றிக்கும் காரணமா?

 ஆரியர்கள்தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்று கூறி சமூக வளர்ச்சி விதியை வெறும் மதமாக இனவாதமாக குறுக்கிக் கொள்வதா? கூறுங்கள்....

உண்மையில் கற்றது கைமண் அளவு கல்லாதவை கடல் அளவு என்று சும்மா சொலியிருக்க மாட்டர்.
நாம் இங்கே விவாதிக் கொண்டிருக்கும் பலரும் வரலாற்று ஆவணங்கள் மற்றும் தொல்லியல் ஆவணங்கள் படித்தவர்கள் எத்தனை பேர் இருப்பர் என்று தெரியவில்லை. நான் இரண்டு நாளாக வாசித்த நூல்கள் வாயிலாக ஆரியர்கள் வருகை என்பதும் ஆரியர் பற்றி வேதங்கள் கூறும் எல்லாமே ஆங்கிலேயர்களின் புனைவிற்க்கு துணை போயின மற்றும் நேற்று கேட்ட கேள்விகளுக்கு எனது இணையத்தில் பதில் தேடியுள்ளேன். இந்திய வரலாறு பற்றி, "ஏ.ஏல் பஸ்யம், ரோமிலா தாப்பர், ஆக்ஸ்போர்யூனிவர்சிட்டி, சோசப் இட மருகு" நூல்களிலிருந்து நல்ல புரிதல் அடைந்துள்ளேன். ஆர்.எஸ். சர்மா எழுதிய ஆரியரை தேடி போல ஆரியர்களா அவர்கள் யார் ? என்று சிறு நூல் எழுத கண்டண்ட் உள்ளது என்ன செய்ய தோழர்களே???
சரி சில தேடுதல் இன்று
பஞ்சாப் அரியான ,ஜம்மு, ராஜஸ்தான் பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வில் ரிக்வேதத்தில் கூறபடுவதுபோல் தேர் சக்கரங்களோ இரும்போ,விவசாயம் செய்யப்பட்டதற்கான அறிகுறியோ காணப்பட்டவில்லை போதுமான அளவில் தாமிரக்கருவிகளோ கிடைக்கவில்லை.
இங்கு ஆரியர்கள் குடியேறிய காலம் கிமு 1300,இந்த காலத்துக்கு பின்னால் 300 ஆண்டுகள் கழித்துதான் ரிக்வேதம் காலமாக உள்ளது.
இங்கே காலத்திற்கும் களத்திற்கும் அப்பாற்பட்டு வரலாற்றை பேசுகின்றனர் நமது ஆங்கிலேய எழுத்துகளை பின்பற்றுவோர்.
அன்று ஆரியர்களின் வருகையானது மேய்ச்சல் குடிகளாக அதிக பட்சம் நூறு பேருக்கு மேல் ஒரு இடத்தில் சேர்ந்து வாழ்வது கடினமான காரியம். அந்த காலப் பகுதியில் பல்வேறு கட்டங்களில் தங்களின் கால்நடைகளின் மேச்சலுக்காக இடம்பெயர்ந்தாவர்களே அந்த மேச்சல் குடிகள். அவர்களைதான் ஆரியர்கள் இங்கு வந்து இந்த நாட்டை அடிமை படுத்திவிட்டனர் என்று கூச்சலிடுகின்றனர்.
அவர்கள் இங்கே நுழையும் பொழுது சிந்து சமவெளி நாகரிகமானது நகர நாகரிகமாகவும் உயர்ந்த சமூக வளர்சியையும் அடைந்து இருந்தது என்பது தொல்பொருள் ஆராய்சி கூறுகிறது. அப்படியெனும் பொழுது, வேளாண் வளர்ச்சியும், நீர்ப்பாசன வசதிகளையும், சுரங்கத் தொழில்களும் மேம்பட்டில்லாமல் எப்படி இந்த வளர்சியை அச் சமூக அமைப்பு கொண்டிருக்க முடியும்??? .
இதற்கு பெரும்மனித ஆற்றல் தேவை கூட்டு சமூக வாழ்வும் அவசியமானது அல்லவா?
நைல்நதிநாகரீகமும் மெசடோமிய,சிந்து சமவெளி நாகரிகங்களும் பெரும் வேலைப் பிரிவினையாகக் கொண்டிருந்தது அல்லது கொண்டிருக்கவேண்டும். அங்கே அரசு உருவாகியிருந்தது இதனை கருத்தில் கொள்ள வேண்டும் நாம்.
மனிதகுல வளர்ச்சியில் திறமையுள்ள குலங்கள் மற்ற குலங்களை அபகரித்து இணைப்பது மூலம் குல சமூகங்களாகமாறுகின்றன.
இவையே அடிமைசமுகமாகவும் பரிணமிக்கின்றன. இதற்கான திறமை இல்லாத குலங்கள் காலப்போக்கில்
அழிந்து விடும் .இல்லை யெனில், அக்கம் பக்கமாக உள்ள குலங்கள் இயல்பாக இணைந்து குல சமூகங்களாக மாறுகின்றன.
இந்திய துணைக்கண்டம் பெரும் நிலப்பரப்பையும் பல்வேறு இயற்கை பௌதீக பூகோள காரணங்களால் பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடந்தது. அவை ஏன் மொகலாயர்கள் ஆண்ட அத்துனை ஆண்டுகளில் கூட ஒன்று பட்ட இந்திய பகுதி உருவாகவில்லை இதனை பற்றி உங்களின் வரலாற்று அறிவை பயன்படுத்தினால் புரிந்துக் கொள்ள எளிதாகும்.
தென் இந்திய பகுதிகளை திராவிடம்,என்றும். வட இந்திய பகுதிகளை ஆரிய வர்த்தம் என்றும் கருத்துகான நூல் ஆதாரம் தேடுங்கள்....
இக்கருத்து பரவிய காலத்தில் ஆரியர் என்ற இனமோ திராவிடர் என்ற இனமோ இந்திய துணைக்கண்டத்தில் இல்லை.
ஆரியர்களே கிபி 400 பின் இந்தியாவில் ஒரு இனமாக நிலை நிறுத்த முயற்சிக்கின்றனர் அவை எல்லாவற்றின் கலப்பில் விளைந்தது என்னும் பொழுது அவற்றை ஒரு இனமாக எப்படி ஏற்பது??? திராவிடர் என்ற இனம் எப்போதும் கிடையாது திராவிடம் என்ற வார்த்தை வெறும் நிலப்பகுதியை குறிக்கும் அடையாளம் ஆகும்.
இன்னும் தேடுவோம் விவாதிப்போம் தெளிவடைவோம் தோழர்களே....

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...