உண்மையான புரட்சியாளர்கள் மா லெ த்தின் பக்கமே நிற்கமுடியும்பேராசிரியர் கைலாசபதியும் அவ்வாறே நின்றார் என்பதை அவரதுஎழுத்துகள் நமக்கு காட்டுகிறது.
ஆனாலும் தமிழகத்தில் சமிபகாலமாக சில உதிரிகள் ட்ராட்ஸ்கியத்தை தாங்கிபிடித்து வருகின்றனர்.இந்த உதிரிகள்ஓடியாடி வளர்ந்த இடம் மா லெ பாசறையில்தான்.கலைஞர் அவர்கள் நெடுஞ்செழியனைபற்றி குறிப்பிடும் போது அவர்ஒரு கோண தென்னைமரம் என்பார்.ஏனென்றால் அதை வைத்து தண்ணீர்ஊற்றி பராமறித்து வளர்த்துவிட்ட பிறகு அது வளைந்து போய் அடுத்தவர் தோட்டத்தில் தேங்காய் போட்டதுபோல.
ட்ராட்ஸ்கிய உதிரிகளும் அவ்வாறே. நமது ஆசான்களால் முறியடிக்கபட்ட தத்துவபோக்குகள் மீண்டும் மீண்டும் தலைதூக்குவது இயல்புதான். இவற்றை மாலெவாதிகள் ஒன்று பட்டு முறியடிப்பதுதான் தலையாய கடமை.
தொடர்ந்து மார்க்சிய ஆசான்களை குறை கூறுவதும் அது ஏதோ மார்க்சிய விமர்சனம் என்றும் ஏமாற்றும் இவர் யார் எதற்க்காக செய்கிறார் என்பதனை பலமுறை எழுதியாகி விட்டது. மீண்டும் ஒருமுறை அவர்கள் வைத்துள்ள கேள்விகளூக்கு பதிலளிக்க தயாராகிக் கொண்டுள்ளோம். அதற்க்கு முன் அவரிடம் சில கேள்விகள். லெனினின் "என்ன செய்ய வேண்டும்?" நூல் வாசிதுள்ளீரா? மேலும் லெனின் எழுதியுள்ள "ட்ராட்ஸ்கிக்கு எதிராக" நூல் வாசித்து விட்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.
============
நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் மார்க்சிய முன்னோடிகள் பதில் கொடுத்துள்ளனர் அதனை முழுமையாக யாரும் தொகுக்கவில்லை அவ்வளுவே ....
1943ஆண்டு 21 ஜனவரி 01 ல் வெளியான ஜனசக்தியில் தோழர் பி.
சீனிவாசராவ் கட்டுரையின் சுருக்கிய இறுதி பகுதி.(அவரின் பகுதியில் உள்ள தேவையான
பகுதிகளை எடுத்தெழுதினேன்).
1. லெனின் சரியான
வழிகாட்டினாரென்றும் ட்ராட்ஸ்கி அந்தப் பாதையில் போக வேண்டுமென்று கூறியதற்க்காக ஸ்டாலின்
அவரை எதிர்த்து நாடு கடத்திவிட்டதாகவும் ஸ்டாலின் உலக மக்களின் துரோகி என்றும்
பிரசாரம் செய்கின்றனர்.
2. 1918 ஜீலை 4 மற்றும் 5
ந் தேதிகளில் சோவியத் காங்கிரஸ் கூடியது. ட்ரொட்ஸ்கியின்
அனுமதியின் பெயரில் மாஸ்கோவில் எதிர் புரட்சியினர் கலகத்தை ஆரம்பித்தனர், இதனை
சோவியத் படை நசுக்கி விட்டது. ஜெர்மனுக்கும் சோவியத்துக்கும் போர் ஏற்படுத்தி
ஆட்சி கவிழ்த்து அதிகாரத்தை கைபற்ற ட்ரொட்ஸ்கி முயற்ச்சி செய்தார்.
3. ட்ராட்ஸ்கி உலக
மக்களின் விடுதலைக்கு (புரட்சிக்கு) வேலை செய்தாரா அல்லது ஸ்டாலின் செய்தாரா இதனை
தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதனை தெரிந்து கொள்ள 1917 ல் நடந்த ரசிய புரட்சி
மற்றும் அந்த கால கட்டத்தில் கட்சிக்குள் ட்ராட்ஸ்கியின் பணி போல்ஸ்விக்
கட்சியையும் சோவியத் அமைபையும் அழிபதற்க்கு செய்த பல சதிகள் ட்ரொட்ஸ்கியின் உண்மை பக்கத்தை வாசித்திருப்பீர் என்று
நம்புகிறேன்.
ஒரு புரட்சிகாரர்
எப்படி துரோகியாக முடியும். தொழிலாளி வர்க்க வரலாற்றில் பல புரட்சியாளர்கள்
முதாலாளி வர்க்க கோஸ்டியின் குலாம்களாக(அடிமைகளாக) மாறியிருக்கிறார்கள். இத்தாலிய
பாசிஸ்ட் முசோலினி ஒரு காலத்தில் இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் இடதுசாரிகளுடைய
தலைவனாக் இருந்தான். பின்னர் முதலாளிகளின் கையாளாக மாறி தன்னுடன் பணி புரிந்த பல
தோழர்களை சித்தரவதை செய்தான், பிரான்ஸில் டோரியட் என்பவன் கம்யூனிஸ்ட் கட்சியில்
இருந்து பாசிச கூட்டத்தில் போய்ச் சேர்ந்து பின் பிரெஞ்ச் பாஸிஸ்ட் தலைவனாகிறான்.
1914 ஆம் ஆண்டு பல சோசலிஸ்ட் தலைவர்கள் ஏகாதிபத்திய கும்பலின் கையாட்களாக மாறித்
தன் சக தோழர்காளை கொன்றொழிக்க (கொலை) செய்திருக்கிறார்கள். இவை வரலாற்று
புரிதலுக்கு.
சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க ட்ராட்ஸ்கி செய்த துரோகங்களை பார்ப்போம்.
அடுத்தடுத்த கட்சி விரோத செயல்களால் ட்ராட்ஸ்கியையும் அவரது ஆதரவாளர்களையும்
1926 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தாவது காங்கிரஸில்
கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.
1934ம் ஆண்டு கட்சியின் முன்னணித் தலைவர் கிரோவ்வை படுகொலை செய்யப் படுகிறார், இதிலிருந்தே அவர்களின் அரசியல் தேவை தெரிந்தவையே.
1936 டிசம்பர் 22 ந் தேதி சோவியத் சதி வழக்கில்
விசாரணையின் போது ராடக் கூறியது, ட்ராட்ஸ்கி தனக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
ஸ்டாலின் அரசாங்கத்தை நீக்குவது முடியாத காரியம் ஆகவே ஜெர்மன் மற்றும் ஜப்பான்
உதவியுடன் முதலாளித்துவ மனோபாவத்தை பூரணமாக கைவிடாத மக்களையும் கூட்டு பண்ணையில்
அதிருப்தி அடைந்துள்ள மக்களையும் மேலும் குலாக்குகளுக்கு கூட்டு பண்ணைகளை விட்டு
வெளியேற துடிக்கும் மிராசுதாரர்களையும் பயன்படுத்தி ஜெர்மன் ஜப்பான் உதவியுடன்
ஒப்பந்தம் அடிப்படையில் சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் திட்டத்தை
வெளிபடுத்தியுள்ளதை வெட்டவெளிச்சமாக்குகிறார்.
அடுத்த சாட்சி பிளாட்கோவுடன் 1935 டிசம்பரில் பேசிய
போது ட்ராட்ஸ்கி ஜெர்மன் நாஜிக் கட்சியின் தலைவர் ஒருவருடன் செய்துள்ள ஒப்பந்தம்,
ஜெர்மனுக்கு சோவியத்தின் சில பகுதிகளை கொடுக்கவும், ஜெர்மன் முதலாளிகள் ரஸ்யாவில்
தொழில் தொடங்க சலுகைகள் அளிக்க, யுத்த காலத்தில் ஜெர்மனியின் தேவைகேற்ப்ப
சோவியத்துக்கு எதிரான பணிகளை செய்தல் என சோவியத் மக்களுக்கு எதிரான சதிகள்
வெளிபடுத்தினர்.
இன்று 4ம் அகிலம் ட்ராட்ஸ்கிசம் என்றால் அவை
மார்க்சியமாகுமா? மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி உயிர் வாழும் பாசிஸத்தை ஆரத்
தழுவிய ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியே அல்ல இவன் எதிர் புரட்சியாளனே….
தோழர் லெனின் மறைவிற்குப் பின் அவரது கருத்துக்களை எதிர்த்தோரை அரசியல் சித்தாந்த ரீதியில் எதிர்ப்பதில் ஸ்டாலின் முன் நின்றார்.
தனி ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியமே என்பதை கட்சிக்குள்ளும் வெளியிலும் பேசி எழுதி அணி திரட்டினார்.
லெனினிசத்தின் அடிப்படைகள் என்னும் நூலை எழுதினார். இது உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இன்றளவும் உதவுகிறது. லெனினியத்திற்கு மாற்றாக ட்ராட்ஸ்கியிசம் முன் வைக்கப்பட்டதை இந்நூலில் முறியடித்தது.
ட்ராட்ஸ்கியத்தை தோல்கொடுக்கும் சிலர்.
Annupurselvaraj Selvaraj சற்று இதற்க்கான பதில்கள் அன்றைய சோவியத் கொடுத்துள்ளது அதனை நீங்கள் வாசித்திருந்தால் புரிந்திருக்கலாம், பரவாயில்லை நீங்கள் புரிந்திரிக்காவிட்டால் அல்லது வாசித்திருக்காவிட்டால் என்னால் இயன்றளவு எழுதியுள்ளேன் வாசித்து பாருங்களேன் மேலும்.....உங்களை ஸ்டாலினை யார் சுமக்க சொல்கின்றனர் அவர் எங்கள் தலைவர்தான் அதனால் நாங்கள் அவரை ஏற்கிறோம். அவர் உங்கள் தலைவர் இல்லையே அப்படி என்னும் பொழுது நீங்கள் ஏன் உங்களின் தலைவரை பற்றியும் உங்களின் தத்துவம் பற்றியும் பேசுவதில்லை? உண்மையில் உங்களுக்கு திறன் இருந்தால் உங்கள் தலைவரின் படத்தை போட்டு அரசியல் பேசுங்கள் அப்பொழுது நாங்களும் உங்களுடன் ஆரோக்கியமாக விவாதிக்க முடியும். நீங்கள் (உங்கள் சித்தாந்தம்) யார்? உங்களின் செயல் என்னே என்பதனை தெளிவுபடுத்தி விட்டு பேசினால் சிறப்பாக இருக்கும். மார்க்சிய ஆசான்களை அன்றைய சோவியத் எதிர்கள் முதல் ஏகாதிபத்திய ஏஜெண்டுகள் ஈறாக வசைமாறி பொழிவதையே தொழிலாக கொண்டுள்ளனர் ஆனால் அவர்களின் எண்ணம் என்னவோ மார்க்சியத்தை மறுப்பதும் சீர்குழைபதும்தான் நீங்கள் அந்த வரிசையில் நின்றுக் கொண்டு யாருக்காக சேவை செய்கின்றீர் அதை மட்டும் புரிய வையுங்கள்.
No comments:
Post a Comment