...........................,..........
உண்மையில் இதுபோன்ற விவாதங்களை நான் தவிர்த்தே வந்தேன் இன்று சற்று நேரம் உள்ளதால் இதில் கலந்து கொண்டேன்.
தோழர் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முகமாக இந்தப் பதிவினை எழுதுகிறேன்.
இதற்கு முன் நான் எழுதியதை விட நேரடியாக இருந்தே எழுதுகிறேன்.
அரசு பற்றிய பிரச்சினை இவ்வளவு தூரம் குளறுபடி செய்து சிக்கலாக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் யாதெனில் மற்ற எந்தப் பிரச்சினைகளையும் விட (பொருளாதார விஞ்ஞானத்தின் அடிப்படைகளை தவிர்த்து) அதிகமாக ஆளும் வர்க்கங்களின் நலன்களை இது பாதிக்கிறது.சமுதாய சலுகைகளை நியாயப்படுத்துவதற்கும் சுரண்டல் நிகழ்வதை நியாயப்படுத்துவதற்கும் முதலாளித்துவம் இருப்பதை நியாயப்படுத்துவதற்கும் அரசு பற்றிய போதனை பணி புரிகிறது.
அரசு பற்றிய பிரச்சினையை முடிந்த அளவுக்கு விஞ்ஞான முறைப்படி அணுகும் பொருட்டு அரசு என்பதின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாற்று மேலோட்டமாவது பார்வையிட வேண்டும். சமூக விஞ்ஞானம் பற்றிய பிரச்சினையில் மிக மிக நம்பகமானதொன்றும் இந்தப் பிரச்சினையை சரிவர அணுகும் பழக்கத்தை உண்மையிலே பெறுவதற்கும் சில்லறை விவரங்களின் திரலிலோ ஒன்றை ஒன்று எதிர்க்கும் கருத்துக்களின் மிகப்பெரிய வேறுபாட்டிலேயோ சிக்கி வழி தவறி விடாமல் இருப்பதற்கும் மிக மிக அவசியமான ஒன்று இந்தப் பிரச்சினையை விஞ்ஞான வழியில் அணுகுவதற்கு மிக மிக முக்கியமானது ஒன்று. என்னவென்றால் அடிப்படையான வரலாற்று தொடர்பு மறவாதிருப்பதும் ஒவ்வொரு பிரச்சனையும் ஆராயும்போது குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி வரலாற்றில் எவ்வாறு தோன்றியது அது தன் வளர்ச்சி போக்கில் என்னென்ன முக்கியமான கட்டங்களை கடந்து சென்றது என்று நிலைகளில் நின்று ஆராய்வதும் இந்த வளர்ச்சி நிலையிலிருந்து குறிப்பிட்ட பொருள் இன்று என்னவாக இருக்கிறது என்பதை ஆராய்வதும் ஆகும். ( அரசு பக்கம் 7 -
நிலத்திலும் உற்பத்தி சாதனைகளிலும் தனி சொத்து நிலவும் ஒவ்வோர் அரசும் மூலதன ஆதிக்கம் செலுத்தும் ஒவ்வொரு அரசும் எவ்வளவுதான் ஜனநாயக தன்மை உடையதாக இருப்பினும் அது முதலாளித்துவ அரசே ஆகும். தொழிலாளி வர்க்கத்தையும் ஏழைக் குடியானவர்களையும் அடிப்பணிய வைப்பதற்காக முதலாளிகளால் பயன்படுத்தப்படும் இயந்திரமாகும் அது என்று குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூல் கூறுகிறது. அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமை நிர்ணய சபை நாடாளுமன்றம் என்பனவெல்லாம் வெறும் வெளித்தோற்றமே ஒரு விதமான கடன் பார்த்து பத்திரமே ஆகும் உண்மை நிலைமையை இது மாற்றுவதில்லை என்றும் அது கூறுகிறது.
அரசு செலுத்தும் ஆதிக்கத்தின் வடிவங்கள் வேறுபடக்கூடும். எதுவானாலும் மூலதனத்தின் கரங்களில்தான் அதிகாரம் இருக்கிறது. உண்மையில் குடியரசு எவ்வளவுக்கு எவ்வளவு ஜனநாயக தன்மை கொண்டதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு முதலாளித்துவ ஆட்சி அதிக முரடாகவும் இரக்கம் இன்றியும் இருக்கிறது உலகத்தில் மிகப்பெரிய அளவு ஜனநாயகத் தன்னுடைய குடியரசுகளில் ஒன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் எவ்வளவு பண்பற்ற வகையில் எவ்வளவு பட்டவர்த்தனமாக ஊழல் மிகுந்த வகையில் சமுதாய முழுவதும் மீதும் மூலதனத்தின் அதிகாரம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கோடீஸ்வரர்களின் ஆதிக்கம் இருப்பது வேறு எங்கும் கிடையாது.
நாடாளுமன்ற முறையில்லையேல் தேர்தல் முறை இல்லையேல் தொழிலாளர்கள் வளர்ச்சி பெருக்கம் ஆக முடியாது காரியமாக இருந்திருக்கும் ......
உண்மையில் தனி உடைமை என்பது நீடிக்கிற வரையில் உங்களுடைய அரசு ஜனநாயக குடியரசாக இருந்தாலும் கூட தொழிலாளரை அடக்குவதற்காக முதலாளிகளால் பயன்படுத்தப்படும் இயந்திரமே தவிர வேறு ஏதும் அன்று எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு இது தெளிவாக வெளிப்படுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஜனநாயகம் சமத்துவம் என்றெல்லாம் பேசினாலும் சரி அவ்வளவு வெட்கம் கெட்டதாகவும் இரக்கமின்றியும் மூலதனம் வேறு எங்கும் ஆள்வதில்லை அவை ஜனநாயக குடியரசாக இருந்தாலும் கூட ..(அரசு .பக்கம் 30 -31).
ஒரு குடியரசு மிக மிக ஜனநாயக தன்மை உடைய குடியரசு கூட எந்த வேஷம் போட்டாலும் இது முதலாளித்து குடியரசாக இருக்குமானால், இதில் நிலம் ஆலைகள் தொழிற்சாலையில் ஆகியவற்றின் மீது தனி உடமை நிலவுமானால் சமுதாய முழுவதையும் தனிப்பட்ட மூலதனம் அடிமை நிலையில் வைக்குமானால் .... இந்த அரசு சிலர் மற்றவர்களை அடக்கி வைப்பதற்கான இயந்திரம் ஆகும். இனி மூலதன ஆதிக்கத்தை தூக்கி எறிய வேண்டிய ஒரு வர்க்கத்திடம் இந்த இயந்திரத்தை ஒப்படைப்போம் அரசு என்பது அனைத்து மக்களுக்கு இடையில் சமத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது எனும் பழைய தப்பெண்ணங்களை எல்லாம் நாம் மறுப்போம் ஏனெனில் அது வஞ்சனையாகவும் சுரண்டல் நீடிக்கிற வரையில் சமத்துவம் என்பது இருக்க முடியாது. நிலப்பிரப்பு தொழிலாளிக்கு சமம் என்றோ அல்லது பசித்த மனிதன் உண்டுக்கொடுத்த மனிதனுக்கு சமம் என்று கூற முடியாது. அரசு என்பது அனைத்து மக்களுடைய ஆட்சி என்று பொருள் எனும் பழங்கதைகளை நம்பிக்கொண்டு மூடத்தனமாக பயபக்தியுடன் மக்கள் அதன் முன் வணங்கி நின்றார்களே, அந்த அரசு என்னும் இயந்திரத்தை பாட்டாளி வர்க்கம்ப ஒதுக்கி தள்ளி விட்டு அது முதலாளித்து பொய் என்று சாற்றுகின்றது. முதலாளிகள் இடமிருந்து இந்த இயந்திரத்தை பறித்து அதை நாம் எடுத்துக் கொண்டு விட்டோம் இந்த இயந்திரம் அல்லது குண்டாந்தடியை கொண்டு எல்லா சுரண்டலையும் நாம் தகர்த்தெறிவோம் ... நில சொந்தக்காரர்களும் ஆலை சொந்தக்காரர்களும் எங்கும் இல்லை எனும் பொழுது சிலர் மட்டும் வாரி வாரி விழுங்க மற்றவர்கள் பட்டினி கிடக்கும் நிலை இல்லாத பொழுது , இதற்கெல்லாம் இனி வாய்ப்பே கிடையாது எனும் நாள்தான் இந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம். அப்பொழுது அரசு என்பதும் இருக்காது சுரண்டலும் இருக்காது நம் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் இதுவே (பக்கம் 32) ... அரசு பற்றி லெனின்.
(சிலர் சுருக்கம் செய்துள்ளேன்) ....
தோழர் கேட்டமையால் அப்படியே பதிந்துள்ளேன் இதற்கான விளக்க உரை நாளை காலையில் பதிவு செய்வேன் ....
All reactions:
சந்திரன்சந்திரன், Shanmuga and 7 others
3 comments
1 share
Like
Comment
Share

3 comments

  • ஈஸ்வரன் அ.கா.
    முன்பே குறிப்பிட்டது போல் லெனின் கூறிய இவைகளை கணக்கில் கொள்ளவே இல்லை.
    தன் கட்சித் திட்டத்துக்கு ஏற்ப மார்க்சியம் படிப்பதும், தனது கருத்துக்கு ஏற்ப மார்க்சியம் பேசுவதும் ஆபத்தானது.
    மார்க்சியம் கூறுகிற அனைத்தையும் ஒருங்கிணைந்து புரிந்து கொள்ள வேண்டும்.
    அராஜகவாதிகள் மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது என்பது உறுதியாகிவருகிறது.
    லெனின்:-
    “பண்ணையடிமை முறையுடன் ஒப்பிடும் பொழுது, ஜனநாயகக் குடியரசும் அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமையும் மாபெரும் முன்னேற்றமாகத் திகழ்ந்தன."
    "சமுதாயத்தின் உலக வளர்ச்சி நிலையிலிருந்து பார்க்கும் பொழுது, முதலாளித்துவக் குடியரசு, நாடாளுமன்றம், அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமை ஆகிய அனைத்தும் மாபெரும் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. மனித இனம் முதலாளித்துவத்தை நோக்கிச் சென்றது.
    முதலாளித்துவம் ஒன்றுதான், நகர்ப்புறப் பண்பாட்டின் மூலம், ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் தன்னைத் தானே உணரும்படியாகச் செய்யும் உலகத் தொழிலாளி இயக்கத்தை உண்டாக்கவும் வாய்ப்பு அளித்தது;....... "
    "நாடாளுமன்ற முறை இல்லையேல், தேர்தல் அமைப்பு இல்லையேல், தொழிலாளி வர்க்கத்தின் இவ்வளர்ச்சிப் பெருக்கம் ஆக முடியாத காரியமாகவே இருந்திருக்கும். "
    • Like
    • Reply
    • 2d
    • Palani Chinnasamy
      ஈஸ்வரன் அ.கா. தோழர் நேற்று சில எழுத்து பணி ஆக முகநூல் பகுதிக்கு வர முடியவில்லை உங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை. நான் கூறிக்கொள்வது ஒன்று மட்டுமே நேரமிருந்தால் லெனின் நூலான,"பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்" வாசியுங்கள் இதற்கான பதில் கிடைக்கும் மேலும் மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதலாவது காங்கிரஸ் அறிக்கை வாசித்து விட்டீரென்றால் தெளிவாகிவிடும் நான் சொல்வதனால் நீங்கள் ஏற்கப் போவதில்லை தோழர்.
      • Like
      • Reply
      • 1d
    • Palani Chinnasamy
      ஈஸ்வரன் அ.கா. உண்மையில் நான் எழுதும் ஒவ்வொரு வரியும் அந்த நூலை கொண்டேதான்,"ஜனநாயகம் பற்றி பேசுவது ஒரு மிதவாதி விஷயத்தில் இயல்பானது ஆனால் எந்த வர்க்கத்துக்கு என்ற கேள்வியை ஒரு மார்க்சியவாதி மறவாது கேட்பான்" லெனின் சொன்ன அதே நூலில் காவுத்ஸ்கியை பார்த்து வைத்த கேள்விதான் . நான் பயன்படுத்தியுள்ளேன். இன்றும் அதே நூலிலிருந்து எழுதப் போகிறேன் தோழர்.
      • Like
      • Reply
      • 1d