தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். மற்றும் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் அரசு தன்னிடத்து கொள்ளுதல், வர்த்தக நிறுவனங்களோடு சேர்ந்து இயங்கி நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டு சந்தையையும் கட்டுப்படுத்துதல், ஒரே ஒரு தலைவரின் பிம்பத்தை போற்றி அவரைத் தனியதிகார மையமாகக் கொள்ளுதல், அரசியல் எதிர்ப்பினையும் விமர்சனத்தையும் சகித்துக் கொள்ளாமல் நசுக்குதல், ஒரு கட்சி அரசியல் கொள்கை போன்றவை பாசிச அரசுகளின் பண்புகளில்
முதலாளித்துவ ஜனநாயகத்தையும் முதலாளி வர்க்க பாசிசத்தையும் போட்டு குழப்பி கொள்ளக்கூடாது.
முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முதலாளி வர்க்கம் மக்களுக்கு போடும் பிச்சை அல்ல.அது ஒரு வரலாற்று காலகட்டம்.
ஆனால் பாசிசம் என்பது முதலாளி வர்க்கத்தால் புறச்சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது அது தனது வரலாற்று கட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கிறது மத்தியகால கொடுங்கோன்மைக்கு இணையான ஒரு சர்வாதிகார ஆட்சியை தனது சுரண்டல் மற்றும் சந்தை விரிவாக்க நலனுக்காக நடைமுறைபடுத்துகிறது.
முதலாளித்துவ சமூகம் தான் பாசிசத்தை உருவாக்குகிறது என்றால் அது ஏன் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் தோன்றுவதில்லை என்ற கேள்வியை நாம் கேட்பதில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் தனிநபர் சுதந்திரம்,தனிமனித உரிமைகள் போன்ற முதலாளித்துவ ஜனநாயகம் உச்சத்தில் இருக்கிறது எனவே அங்கு ஒரு பாசிசத்தை கட்டமைக்க முடிவதில்லை.
ஆனால் இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளில் நிலபிரபுத்துவ எச்சங்களை முதலாளி வர்க்கம் தனது நலனுக்காக பயன்படுத்தி பாசிசத்தை கட்டமைக்க முயல்கிறது அதே சமயம் முழு பாசிசம் என்பது அதன் வளர்ச்சிக்கு இக்காலகட்டத்தில் தடையாக இருக்கும் என்பதால் அதை முழுவதுமாக அமல்படுத்தவில்லை.
ஆனால் பாசிசம் என்பது முதலாளித்துவத்தின் அடுத்த கட்டம் என்பது போல் நமது தோழர்கள் பேசுவது எனக்கு வியப்பை கொடுக்கிறது. ஜனநாயகம் என்ற ஒன்றை வரலாறு நமக்கு வழங்கியுள்ளது அதை மறுக்கும் முதலாளிகளுக்கு எதிராக அதை பயன்படுத்தி உழைக்கும் மக்களை அமைப்பாக்க வேண்டும் அந்த ஜனநாயகத்தை முழுமையடையச்செய்ய வேண்டும்.
All reactions:
1நடராஜன் துரைராஜன்6 comments
Palani Chinnasamyதோழர் வணக்கம் நீங்கள் இந்த கருத்தில் உடன்படுகிறீர்களா? அப்படியென்றால் இதனை பற்றி உங்கள் கருத்து என்னே ஈஸ்வரன் தோழர்
ஈஸ்வரன் அ.கா.இந்த கருத்தில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை விமர்சியுங்கள்
Palani Chinnasamyஈஸ்வரன் அ.கா. அவை தவறென்று நான் கூறுவதற்கு என்ன உள்ளது தோழர். நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது நான் தடுக்க வரவில்லையே தோழர். இவை தவறு என்று மட்டுமே கூறிக்கொள்ள விரும்புகிறேன் தோழரே
G Manjulaஜெர்மனி வளர்ந்த நாடு தானே. அங்கு பாசிசம் உருவாயிற்றே தோழர்.


முதலாளியை மீட்பு வழியில் தான் குருசேவை தொடங்கி கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் வரை ஏன் சீன திரிபுவாதிகளும் கடந்தார்கள்.
இவர்களுக்கு கம்யூனிஸ்டுகள் என்ற பெயர் இருந்தது ஆனால் கம்யூனிஸ்டுகளாக இல்லை. கட்சித் தலைமையில் இருந்து டிராட்ஸ்கியை பற்றி லெனின் சொன்னதை கவனியுங்கள் "அவர் நம்மிடையே தான் இருக்கிறார் ஆனால் நம்மவராக இல்லை ".
முதலாளித்துவ சிந்தாந்தத்தை நெஞ்சில் கொள்கிற திரிப்பு வாதிகள் முதலாளிய ஜனநாயகத்தையும் அதற்கான பல கட்சி ஆட்சி முறையும் மீட்டெடுப்பது தவிர்க்க முடியாதது.
ஆக நமது புரிதலுக்காக ....
சோசலிச சமுதாயத்தில் உற்பத்தி சாதனைகளின் தனி உடமை முதலில் ஒழிக்கப்படுகிறது:உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடமையாக ஆக்கப்படுவதின் விளைவாக "உழைக்காதவர்களுக்கு உணவு இல்லை " என்று சோசலிச கோட்பாடு நடைமுறைக்கு வருகிறது. கூடவே, "திறமைக்கேற்ற உழைப்பு உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற சோசலிச கோட்பாடும் நடைமுறைக்கு வருகிறது:இந்த நிலையில் இருந்து, 'திரும்பிக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற பங்கீடு' என்ற கம்யூனிச கட்டத்திற்கு சமுதாயம் மாறும் புரட்சிகர நிகழ்ச்சிகள் நடந்தேறும்".
சோசலிசம் என்பது அரசியல் பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வரது மட்டுமல்ல :அது சமூக நீதி சம்பந்தப்பட்டதாகும்.அரசியல் அமைப்பு முறையிலும் பொருளாதார கட்டுமானத்திலும் மட்டுமல்லாமல், மனிதனையும் சோசலிச மனிதனாக மாற்றுவதை உள்ளடக்கியது.
No comments:
Post a Comment