புதுடில்லி:கடன்கள் வாயிலாக நிதி பெற்று, நிறுவனங்களை கையகப்படுத்துவது, அதானி குழுமத்தின் தரமதிப்பீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என 'எஸ் அண்டு பி., குளோபல் ரேட்டிங்ஸ்' தெரிவித்து உள்ளது.

சில நாட்களுக்கு முன், 'பிட்ச்' குழுமத்தைச் சேர்ந்த, 'கிரெடிட்சைட்ஸ்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையும் இதேபோன்ற கருத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.எஸ் அண்டு பி., குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் அபிஷேக் தங்கரா கூறியதாவது:அதானி குழுமத்தைச் சேர்ந்த 'அதானி போர்ட்ஸ்' போன்றவற்றின் வணிக அடிப்படை மிகவும் வலுவாக உள்ளது.

இதேபோல் துறைமுக வணிகமும் அதிக பணப்புழக்கம் கொண்டதாக இருக்கிறது.ஆனால், சில கையகப்படுத்தும் நடவடிக்கைகள், குழுமத்தின் 'ரிஸ்க்'கை அதிகரிப்பதாக இருக்கிறது. இத்தகைய கையகப்படுத்துதல், பெரும்பாலும் கடன் நிதி வாயிலாகவே நடைபெறுகிறது.


இதற்கு மேல் இதுபோன்ற கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும்பட்சத்தில், அது குழுமத்தின் தரமதிப்பீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.சிமென்ட், தரவுகள், கிடங்கு மற்றும் விமான நிலையங்கள் போன்ற பல பிரிவுகளில் குழுமம் வளர்ந்து வருகிறது. அவற்றில் சில தரமதிப்பிடப்படாதவை. இத்தகைய வளர்ச்சி, ஒருகட்டத்தில் குழுமத்துக்கு சவாலாக மாறக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.  ஆதாரம்- 
https://www.dinamalar.com/m/elec_detail.php?id=3107917