31/07/2022 அன்று சில தமிழ் தேசிய வாதிகளுடன் விவாதித்த பொழுது எழுந்த விவாத பொருளே இந்தப் பதிவு.
நீங்கள் திருக்குறல் படிதீரா? தொல்காப்பியம் படித்தீரா? என்று தொடங்கி நீங்கள் மார்க்ஸை படித்து என்ன நமது தமிழை பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று தொடங்கிய அவர்களின் அறிவுறுத்தல். விவாதம் புரிதலற்று போக காரணம் அவர்களுக்கு மார்க்சியத்தின் பெயரை பயன்படுத்துகின்றனரே தவிர அவர்களுக்கு மார்க்சியம் காததூரம் என்று புரிந்துக் கொண்டேன்.
அதனை தேடித்தான் இந்தப் பதிவு.
நமது பண்டிதர்களுக்கு நம் இலக்கியம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை பரிணாம தத்துவப்படி தோன்றிய முதல் குரங்கு தமிழ் குரங்கு என்றால் தான் நம்மவர்களுகுத் திருப்தி .
குறிப்பிட்ட சமூகத்தினர் பண்டைகாலத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட கொள்கை கூறுகள் அப்படியே கடைபிடிப்பது போன்றதே ஆகும். அவற்றை நம்பிக்கையின் பேரில் ஏற்றுக்கொள்வது. ஏன்? எதற்கு? என்று கேட்கும் வழக்கம் இல்லை தமிழின் தொன்மை பற்றி மட்டுமின்றி பழந்தமிழ் நூல்கள் பலவற்றில் காலமும் இத்தகைய நம்பிக்கைகள் ஒன்றாகவே இருந்து வருகிறது - கோ கைலாசபதி அடியும் முடியும் பக்கம் 21.
எவ்வகையான வேறுபாடும் இன்றி தோன்றிய காலத்தில் இருந்தது போலவே தமிழ் மொழி இருந்து வருகிறது என்று கருதுவோர் தமிழ் வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறு அறியாத ஒன்றுகதான் கூறவேண்டும். ஆதியில் இருந்த கலப்பற்ற தூய நிலைக்கு நமது மொழி பின்னோக்கி செல்வதே தக்கதாகும் என்பதாகும். இயற்கைக்கு மாறாக செல்வதுதான் உயரியது என்பவர் இக் கொள்கையாகும்- கோ கைலாசபதி அடியும் முடியும் பக்கம் 37.
அறிவு என்பது என்ன? அதன் பண்பும் பயனும் அது செயலுக்கு வழிகாட்டும் வகையில் நடைமுறை சார்ந்ததாக இருப்பது அறிவின் லட்சணம். .மாய விதிகளும் மந்திர சக்தியில் நம்பிக்கை வைத்து அவற்றில் வல்லவராக இருந்த வந்ததை, அறிவு உள்ளவராக கருதி கடந்த காலத்திலும் நவீன சுகாதார முறையில் விஞ்ஞான ஆர்வம் கொண்டு அவற்றில் வல்லவர்களாக படித்தவர்களாக கருதும் புறநிலை எதற்த்தோடு அறிவைக்கொண்டு விளக்குவதில் ஐயப்பாடு இல்லை.
மனித குல வரலாற்றின் அடிப்படையான இவ் வளர்ச்சிப் பாதையை கண்ட படியலே அறிவுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்தார் மார்க்ஸ். அவர் சொன்னார் புறநிலை உலகின் விதிகளை விளங்கிக் கொண்டு அவற்றில் பிறருக்கும் விளக்கி விவரிப்பதில் திறமை பெற்றிருப்பது பெருமைப்படத் தக்கதல்ல . அவ் விதிகள் பற்றிய அறிவை ஆயுதமாகக் கொண்டு ஊக்கத்துடன் உலகை மாற்றுவதற்கு அதனைப் பயன்படுத்துவது தான் மிக முக்கியமான சாதனை அறிவியல் எனப்படும் விஞ்ஞானம் பெருமளவுக்கு இவ்வடிப்படையில் வளர்ந்து வந்துள்ளது ஆனால் விஞ்ஞானம் வேறு கலைத்துறை வேறு என்று ஒரு தவறான எண்ணம் நம்மவர்களிடையே வளர்ந்து கொண்டிருப்பது அவர்களுடைய. சிந்தனை வளர்ச்சி குறைபாடு உடையதே. மொழி கலை இலக்கியம் ஆகியவற்றில் இயக்கவியல் போக்கை இவர்கள் புரிந்து கொள்வதில் பின்தங்கி உள்ளனர் சிந்தித்துப் பார்ப்பதில்லை என்பேன்.
இனி இவர்கள் செய்யும் தவறு...
1. பண்டைய கலை. இலக்கியங்கள், கலை உருவங்களின் ஆதிக்கம் சமுதாய வளர்ச்சியின் தேக்கத்தையே காட்டி நிற்கின்றன. அவை இன்றும் பொறுந்தும் என்பது என்ன வகை அறிவு முதிர்ச்சியோ தெரியவில்லை?
2. மனிதாபிமான உணர்வு எவ்வகைச் சமுதாயத்திலும் நிரந்தரமானது என்று
இவர்கள் கருதுவது வர்க்க உணர்வை வேண்டுமென்றே மறைக்க முயல்வதாகும்.
‘வாழ்நிலையிலிருந்து உணர்வு தோன்றுகிறதேயன்றி உணர்வுநிலையிலிருந்து
வாழ்நிலை தோன்றுவதில்லை" என்பது மார்க்ஸ் கூறிய அடிப்படைச்
சித்தாந்தமாகும். ஆகவே, வாழ்நிலை மாறிக்கொண்டே செல்லும்போது
உணர்வுநிலைகளும் மாறவே செய்யும். வாழ்நிலை, உணர்வுநிலைகளின்
மாறுதல்களை விவரிப்பதே கலை, இலக்கியமாகும். ஆகவே, சமுதாய
மாற்றத்தை விவரிக்கும் கலை. இலக்கியம் மாறிக் கொண்டேயிருக்கும்.
கலை, இலக்கியங்களே நிரந்தரமானது என்று கட்டி அழுவோர் சமுதாய
மாற்றத்தை மறுப்பவராவர்.நிலவுடைமையில் மகாபாரதம், இராமாயணம்
போன்று யாவரும் அறிந்த இதிகாசக் கதைகள், கூத்து, கிராமிய இசை நாடக
மரபில் நடித்துக் காட்டப்பட்டன. முதலாளித்துவத்தில் அவை தனிமனிதர்
படிக்கத்தக்க நூல்களாக முதலாளித்துவம் அச்சிட்டு பரப்புகிறது. படிப்பவர்
யாவரும் இராமன் என்ற தெய்வாம்சம் பொருந்திய மன்னனும் பாண்டவர்கள்
என்ற கண்ணன் ஆதரவுபெற்ற அரசகுடும்பத் தவர்களும் அரக்கர்களையும்
கொடியவர்களையும் எவ்வாறு எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றனர் என்ற
கருத்தை நிலைநாட்டுகின்றன. இவற்றைப் படிப்போரும் பார்ப்போரும்
மன்னர்களுக்காக இரக்கப் பட்டு மெய்மறந்து அவர்களது ஆட்சியை
வாழ்த்துகின்றனர்.
இதிகாசக்களை வைத்துக் கொண்டு அன்றும் இன்றும் மனித உணர்வுகள்
மாறாநிலை என்று பொது சமப்படுத்துவதன் மூலம் வர்க்க உணர்வு என்ற
வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வு முறையை மழுங்கச் செய்துவிடுகின்
றனர். அன்றை ஒடுக்கிய மன்னனின் புகழ்பாடி இன்றைய ஒடுக்குவோர்
ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்க சிறந்த கருவியாக இதனை பயன்படுத
தவறுவதில்லை இதிலிருந்து வர்க்க அடிப்படையில் புரியவைக்க வேண்டிய
கடமையில் உள்ளோர் அவசியம் செய்யவேண்டிய பணி இவை.
"பழமையைக் களைந்து புதியவை கொள்வோம்" என்று மாவோ பின்னர்
கூறியது சோஷலிசக் கண்ணோட்டத்தை முன்வைத்து பழைமையைக்
களைவாகும். சோஷலிசக் கண்ணோட்டம் என்பது இயக்கவியல் பொருள்
முதவாத, வர்க்கப் போராட்டக் கண்ணோட்டமாகும். அதாவது சமுதாய
அமைப்பு முரண்பாடுகளைக் கொண்டது; அவ்வமைப்பு தேங்கிகிட்பதல்ல;
சமுதாயம் இயங்கிக் கொண்டிருப்பது; வர்க்க உணர்வின் எழுச்சியும்
போராட்டமும் தவிர்க்க முடியாதவை என்ற கோட்பாடுகளைக் கொண்டதாகும்.
ஆகவே, இக்கோட்பாட்டைக் கடைப்பிடிப்போர் பண்டைய கலை,
இலக்கியங்கள் கண்மூடித் தனமாக ஆதிக்கம் பெறுவதை எதிர்க்கவே செய்வர்.
வர்க்க உணர்வையும் போராட்டத்தையும் மாறுத்து உணர்வுகள்
நிரந்தரமானவை என்று நிலைநாட்ட முயல்வதை கண்டிக்கவே செய்வர்
கலை, இலக்கியம் மாறும் சமுதாய இயக்கத்திற்கு உந்து சக்தியாக விளங்க
வேண்டும். அவ்வவ்வேளைய கலைத் தேவையை ஒட்டி வர்க்க
உணர்வையும் வர்க்கப் போராட்டத்தையும் பலப்படுத்துவதாக அமைய
வேண்டும். எல்லோருக்குமான கலை, இலக்கியம் என்று எதுவும் இருக்க
முடியாது. அடுத்த ஆண்டுத் தேவைகள் இன்றைய தேவைகளுக்கு
மாறுபட்டவையாகவே இருக்கும். அத் தேவைகளைப் பூரணப்படுத்துப
வையாகவே கலை, இலக்கியம் அமைதல் வேண்டும்.
No comments:
Post a Comment