இன்று இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி ஏறத்தாழ 100 ஆண்டுகள் நிறைவுறப் போகிறது ஆனால் அவை தனது இலக்கை அடையாமல்
பல்வேறு சிக்கல்களில் சிக்குண்டு தவிக்கிறது. அதனை பற்றிய ஒரு தேடுதலே இந்தப்
பதிவு....
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியானது 1951 ஆம் ஆண்டுவரை ஒரு முழுமையான வேலை திட்டத்தை உருவாக்கவேயில்லை ஏறத்தாழ 30 ஆண்டுகள் வேலைதிட்டத்தின் வழிகாட்டுதல் இல்லாமலே கழிந்துவிட்டது. CPI(ML) தொடங்கப் பட்ட போதே வேலை திட்டம் வைத்திருந்தது அதன் அடிப்படையில் கட்சி இயங்கவே இல்லை.
1917 அக்டோபர் புரட்சிக்கு பின் உலகில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி
உதயமானது, 1925 ல் இந்திய கம்யூனிச கட்சியும், சீன கம்யூனிச கட்சியும் ஏறக்குறைய
அதே காலக் கட்டத்தில் உருவானது, இரண்டு கட்சிகளுக்கும் மூன்றாம் அகிலம் தொடர்சியாக
வழிகாட்டுதலை அளித்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டலை சீன கம்யூனிஸ்ட் கட்சி
சரியாக புரிந்து கொண்டு அதை தனது நாட்டின் சூழலுக்கு பொருத்தி மக்கள் ஜனநாயகம்
படைத்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகிலத்தின் வழிகாட்டுதலை அதாவது ஏகாதிபத்திய
எதிர்ப்பு முன்னணி, ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளை தூக்கி எறிந்து மக்கள் ஜனநாயக
அரசை நிறுவும்படியும், அதற்க்கு உடனடியாக பிரிந்துகிடக்கின்ற கம்யூனிச
குழுக்களையும், தனி நபர்களையும் இணைத்து பலம் வாய்ந்த ஒன்று பட்ட கம்யூனிஸ்ட்
கட்சியை நிறுவும் படி திரும்ப திரும்ப வலியுறுத்தியது. ஆனால் இன்றுவரை இந்தப் பணி
நிறைவேறவில்லை.
முடிவாக, அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.
பல ஆண்டுகள் CPM திரிபுவாதத்திற்கு எதிராக
போராடி நக்சல்பாரி
என அறியப் பட்ட இ.க.க (மா-லெ) தொடங்கப்
பட்டது. மார்க்சியத்தின் புரட்சிகர
ஆன்மாவை மீண்டும்
நிகழ்ச்சி நிரலில்
வைத்து, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு
புரட்சிகர கட்சியின்
தலைமையளிக்க சாருமஜீம்தார்
முன்கையெடுத்தார். பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரத்தை
உயர்த்திப் பிடித்து, புரட்சியின்
மூலம் சுரண்டும்
வர்க்க அரசைத்
தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி
மாற்றத்தை நிராகரித்து, புரட்சிகர
பலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி
வர்க்கத்தின் முன்னணிப்
படையாக கம்யூனிஸ்ட்
கட்சியை மாற்றியமைத்தல், புதிய
ஜனநாயகப் புரட்சி,தொழிலாளி, விவசாயிகள்
கூட்டணி அமைத்தல்
போன்ற அரசியல்
நிலைப்பாடுகளை அங்கீகரித்தது. ஆனால்
வலது திருத்தல்வாத
போக்குகளுக்கு சித்தாந்த
ரீதியில் பலத்த
அடி கொடுக்காமலும், கம்யூனிஸ்ட்
கட்சிகள் இயங்குவதற்க்கான
நெறிமுறைகள் மூன்றாம்
அகிலத்தினால் உருவாக்கப்
பட்டத்தை கவனத்தில்
கொள்ளாமலும் கட்சி
தொடங்கிய காலத்தில்
குருச்சேவ் திருத்தல்வாதத்தை
எதிர்த்து சீன கம்யூனிஸ்ட்
கட்சியின் தத்துவப்
போராட்டமான மாபெரும்
விவாதத்தின் நிலைப்பாடுகளை
கிரகித்துக் கொள்ளாமலும்
கட்சி கட்டப்
பட்டது. கொரிலாப் போரைத் தவிர மற்ற
எல்லா போராட்ட
வடிவங்களும் அமைப்பு
வடிவங்களும் நிராகரிக்கப்பட்டன. இடது
குறுங்குழுவாதத்தை புரட்சி
வழியாக உயர்த்திப்
பிடிக்கப்பட்டது.
இன்று ஒரு கட்சிக்கு
பதிலாக பல குழுக்கள்
இயங்கிக் கொண்டிருக்கின்றன. அனுபவத்தின்
வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக்
கொண்டதன் மூலம்
இன்று அறியப்
படும் நிலைப்பாடுகள்.
எந்த ஒரு அமைப்பும்
உண்மையான மார்க்சியத்தை
கடைபிடிக்கிறாதா என்பதே
என் கேள்வி.
“தங்களது
இயகத்தில் உள்ள குறைபாடுகளை
பூசி மறைக்காமல்
இருக்க வேண்டுவது
கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆனால்
அவைகளை விரைவில்
மற்றும் அடிப்படையில்
சரி செய்வதற்காக பகிரங்கமாக
அவைகளை விமர்சனம
செய்ய வேண்டும்”. (லெனின்- மூன்றாம்
அகிலத்தின் இரண்டாம்
காங்கிரசின் அடிப்படைப்
பணிகள்).
அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.இங்கோ ஒரு அமைப்பே பல
குழுக்கலாக சிதறுண்டு போய் கொண்டுள்ளது கேட்டால் கருத்து போராட்டமாம், இத்தனை
ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் ஒடுக்கும் வர்க்க சேவையை தவிற சொல்ல முடியுமா
நியாயவாங்களே???
கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.
உலகத்
தொழிலாளர்களே,
ஒன்றுசேருங்கள்!
(கம்யூனிஸ்டு கட்சி
அறிக்கையில் இருந்து)....
'தொழிலாளி வர்க்கத்திற்கு தனது அடிமைத்தனத்தைத் தவிர இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனல் வென்றெடுப்பதற்கு ஒர் உலகம் உண்டு’ என கம்யூனிஸ்ட் அறிக்கை கூறுகின்றது." கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இந்த உணர்ச்சியுடன் செயல் புரிய வேண்டும். கம்யூனிஸ்டுகள் நமது சகாப்தத்தின் வீரபுருஷர்கள். புரட்சிகரப் போராட்டங்களில், சோஷலித்தின் வெற்றிக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்யக் கடமைப்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மார்க்சிஸ் லெனிஸம் என்னும் பதாகையை உயர்த்திப்பிடித்து, புரட்சியின் இறுதி நோக்கத்தில் வெற்றி பெற, நாட்டு மக்களை தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
புரட்சிக்காகத் தமது வாழ்க்கையைத் தியாகம் செய்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சபதமேற்கவேண்டும். இவர்கள் திட முள்ள நெஞ்சும், தெளிவுள்ள சிந்தனையும், வீரமிக்க உறுதியும் படைத்தவர்களாக இருத்தல் வேண்டும். புரட்சியின் நோக்கத் தையும், மக்களின் நலனையுமே வேறெதையும் விட மேலான முக்கியத்துவம் வாய்ந்ததாக இவர்கள் கருதவேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் சோம்பலுறவோ, தோல்வியுறவோ, மனமுடையவே! கூடாது. இறுதி இலட்சியத்தை நோக்கி உறுதியுடன் முன்னேற வேண்டும்.
“ஓர் புரட்சிவாதி-ஒரு கம்யூனிஸ்ட்-கஷ்டங்களைக் கண்டு மனம் தளர மாட்டான், புரட்சியைத் தனது இலட்சியமாகக்கொண்டுள்ளவன்,புரட்சிவாதிகள் அவசியம் என்று நம்புபவன்.”
என்று வியட்நாம்
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், தோழர் ஹோ சிமின் கூறியுள்ளார்.
சரித்திரம்
நமக்குக் கற்பிக்கும் பாடங்களைச் சரியாகக் கணக்கிடக்கூடிய, பழைய சமுதாய அமைப்பை மாற்றி, புரட்சிகரமான புதிய சமுதாயத்தை நிர்ணயிப்பதையே தமது இலட்சியமாகக்கொண்ட தோழர்கள், தமது பணி, புரட்சிப்பணி என்பதை உணர வேண்டும். சிந்தனையிலும், செயலிலும் ஓர் புரட்சிவாதியாகத் திகழ வேண்டும். தேச பக்தியுள்ளவனுக, தனது நாட்டு மக்களுக்காக நேர்மையுடனும், அக்கறையுடனும் செயலாற்றவேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, விடா முயற்சி, தொழில் விருப்பம், 'விமர்சனம்-கய விமர்சனம்’’ ஆகிய குணும்சங்களைப் புரட்சிக்கரத் தலைவர்கள் பேணிக்கொள்ளுதல் வேண்டும். கட்சியின் தலைவர்கள், ஊழியர்கள் சகலரும், மற்றவர்கட்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். ஓர் இயக்கத்தை அணிதிரட்டுவதிலோ, மக்களின் சக்திகளைப் பலப்படுத்துவதிலோ, இவர்கள் முன்னின்று செயலாற்றவேண்டும்.
தலைமைக்கு இன்னுமொரு
முக்கியமான கடமையாதெனில், தனது தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா வென்று எப்பொழுதும் எடைபோட்டுப் பார்த்தல்.
“விமர்சனம், சுய விமர்சனம்" என்ற பிரச்சினையைப் பற்றிச் சற்று சிந்திப்போம், புதிய தலைவர்களைச் சிருஷ்டிப்பதற்கும், உள்ளவர்களிடமிருந்து கூடிய சேவையைப்பெறுவதற்கும், கம்யூனிஸ்டுகளாகிய எங்களிடமுள்ள புனிதமான கருவி 'விமர்சனம் சுய விமர்சனம்’’ ஆகும். இந்த முறை கம்யூனிஸ் இயக்கத்துடனேயே தோன்றியது. சோ. க. க. (போல்ஷ்விக்)யினுடைய மாஸ்கோ ஸ்தாபனத்தில் தோழர் ஸ்டாலின் சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்: "எமக்குத் தண்ணிரும், காற்றும் எவ்வளவு அவசியமோ, அதேபோல் விமர்சனமும்-சுய விமர்சனமும் அவ்வளவு அவசியம். ’’ இது இல்லாமல், எமது கட்சி முன்னேற முடியாது; எமது தவறுகளைப்புரிந்துகொள்ள முடியாது. குறைபாடுகளைத் திருத்திக்கொள்ளமுடியாது. எம்மிடம் குறைபாடுகள் ஏராளம். இதை நாம் ஒழிவு மறைவின்றியும், நேர்மையாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். சில தோழர்கள், ‘எமது எதிரிகள் குறைபாடுகளைப் பயன்படுத்திவிடுவர்' என அஞ்சுகின்றனர். இதைக்கண்டு நாம் அஞ்சக்கூடாது. நமது தவறுகளையும், குறைபாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்ள அஞ்சக்கூடாது. **விமர்சனம்-சுய விமர்சனம்" மூலம்தான் குறைகளை நீக்கி, நமது செயல்முறைகளைத் திருத்தி, நாம் நமது கட்சியின் வேலை களைச் சீர்திருத்த முடியும். 'விமர்சனம்-சுயவிமர்சனம், தலைவர் களுக்கும், மக்களுக்கிடையேயும் உள்ள உறவுகளை ஸ்திரப்படுத்த உதவும்.
ஒர்
இலட்சியத்திற்காக அர்ப்பணித்த சேவையின் காரணமாக தலைவர்களின் கெளரவம் உயர்வதும், அதன் காரணமாக இவர்களுக்கும், மக்களுக்குமிடையே உள்ள தொடர்புகளில் மாற்றம் ஏற்பட்டு, மக்களிலிருந்து தலைவர்கள் அப்பாற்படவும் எமது கட்சியின் பழைய தலைமையில் இந்தநிலை உருவான சாத்தியக்கூறுகள் காணப்பட்டன. தொழிலாளி வர்க்கத் தோழர்கள் கட்சியின் முக்கிய பதவிகள் ஏற்றதும், தாம் தோன்றிய வர்க்கத்தையே மறந்து, அவர்கள் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, தான்தோன்றித்தனமும், தனித் தம்பிரான் போக்கும் அவர்கள் மத்தியில் உருவெடுத்தன. இந்த நிலையில் இவர்கள் தொழிலாளி வர்க்கத்தினின்றும் பிரிந்து நிற்கின்றனர்.
இதன்
காரணமாக எமது கட்சியின் தலைவர்கள், தம்மைப் பிரபல்யம் மிக்கவர்கள் என்றும், தவறேசெய்ய முடியாத அறிவாளிகளென்றும் கருதத் தொடங்கினர். இது கட்சியின் நாசத்திற்கே வழி வகுத்தது.
எமது
குறைபாடுகளை எடுத்துச்சொல்ல " சில வேளைகளில் தொழிலாளர்கள் தயங்குவர். அவர்களின் விமர்சனம் 100 க்கு 100 சரியானதல்லாமல் இருக்கக்கூடும். அவரகள் சொல்வதை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லக்கூடும். அவர்கள் சொல்வதில் 5 சதவிகிதம் சரியாக இருக்கலாம். இந்தச் சந்தர்ப்பத்திலும், அமைதியுடன் அவைகளுக்குச் செவிசாய்த்து, இருக்கும் தவறுகளைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். இந்த வகையால் தான், தலைவர்கள் தலைமைதாங்க முடியும். ‘விமர்சனம்-சுய விமர்சனம்" மூலம் தொழிலாளி வர்க்கத்தின் அக்கறையை ஸ்திரப்படுத்த முடியும். அத்துடன் தன்னம்பிக்கையையும், கலாசாரப் பண்பையும் வளர்த்து, தொழிலாளி வர்க்கத்தை நமது நாட்டின் தலைவர்களாகவும்,சிருஷ்டி கர்த்தாக்களாகவும் ஆக்க உதவும். குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் விமர்சனம பாதகமான தாயும் இருக்கும். நேர்மையற்றவர்கள், தவறாண நோக்கங்களுக்காக விமர்சிக்கும்போது, பாதகமான விளைவுகளைக் கொடுக்கும். இப்பேர்ப்பட்ட விமர்சனங்களை நாம் எதிர்க்க வேண்டும். இத்தகைய தவறுகளை நிவர்த்தி செய்யாதுவிடுதல் இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.
திரிபுவாதத்தைத் தோற்கடித்து, தனது இறுதி இலட்சியத்தை நிறைவேற்ற, கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைமை தனது மார்க்சிஸ்-லெனினிஸ் அறிவை மேலும் வளர்க்க வேண்டும். கட்சியின் கொள்கைகளைத் தெளிவாகக் கற்றறிய வேண்டும். புத்தகவாதப் போக்கையும், பிரச்சினைகளை அக்கறையின்றி, கண்மூடித்தனமாக அணுகுவதையும் தவிர்க்க வேண்டும், சுக போகங்களில் விருப்பங்கொள்ளாது, சுய நலத்தை (இலஞ்ச ஊழல்களை) எதிர்த்துப் போராட வேண்டும்.
தொடரும்
No comments:
Post a Comment