மனோகரனின் டிராட்ஸ்கிய வாதம்
ஏ.எம்.கே
மறைவிற்குப் பிறகு, நான்காம் அகிலத்தில்
சோசலிச சமத்துவக் கட்சி எனப்படும் டிராட்ஸ்கிய கும்பலைச் சேர்ந்த பொன்னையா வீரபாகு, ஜரதுஷ்டிரா, டிராட்ஸ்கி ஓஷோ மற்றும் இவர்களுடன் உறவாடும் காலன்துரை, ஏலகிரி இராமன், அனுப்பூர் செல்வராஜ் போன்ற டிராட்ஸ்கியர்களின் கருத்துகள்
மனோகரன் மூலம் அமைப்பிற்குள் ஊடுருவ முயற்சி எடுத்தது. மனோகரன் ‘டிராட்ஸ்கி பற்றிய ஆய்வு’ எனும் பெயரிலும், ‘ஸ்டாலின் மீதான விமர்சனம்’ எனும் பெயரிலும், அப்பட்டமாக டிராட்ஸ்கி ஆதரவு - ஸ்டாலின்
எதிர்ப்புக் கருத்துகளை சதித்தனமாக பிரச்சாரம் செய்து கோஷ்டி கட்டி, பிறகு தனி அமைப்பு கட்டி அமைப்பை
பிளவுபடுத்தினார். மனோகரனையும் அவரது ஆதரவாளர்களையும் அமைப்பு களையெடுத்தது.
தற்போது ‘பாட்டாளி வர்க்க சமரன் அணி’ எனும் பெயரில் டிராட்ஸ்கிய அணியாக செயல்பட்டு
வருகிறது.
மனோகரன்
டிராட்ஸ்கியர்கள் பேசும் கருத்துகளையே அமைப்புக்குள்ளும் பேசினார். மனோகரன் தனது
அறிக்கையில் டிராட்ஸ்கிய ஆதரவு, ஸ்டாலின் எதிர்ப்பு
கருத்துகளை நயவஞ்சகமாக ‘ஆய்வு’ எனும் பெயரில் புதிய இடது பாணியில்
முன்வைத்துள்ளார். அறிக்கை மீதான வாதத்தில் அப்பட்டமாக நான்காம் அகிலத்தின்
கருத்துகளை முன்வைத்தார். ஆனால் மாவோ வழியில் ஸ்டாலினை விமர்சிப்பதாகக் கூறி
மாவோவை இழிவுபடுத்தி தாக்கினார். வாதத்தில் அவர் முன்வைத்த மார்க்சிய விரோதக்
கருத்துகள் பின்வருமாறு:
1. ஸ்டாலின் இந்தியப்
புரட்சியின் எதிரி; சீனப் புரட்சிக்குத்
தடையாக இருந்தார்; அவர் உலகப் புரட்சியின்
எதிரி.
2. ஸ்டாலின் அகிலம் கலைத்தது
தவறு; அவர் கலைப்புவாதி; அகிலம் கலைத்ததால்தான் கம்யூனிச அமைப்புகள்
பிளவுண்டன; அகிலம் கலைத்ததற்கு
ஸ்டாலின் சொன்ன காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை.
3. ஸ்டாலினின் பாசிச
எதிர்ப்பு செயல்தந்திரம் தவறு; அதில் இடது வலது விலகல்
போக்குகள் ஏற்பட்டன.
4. சோசலிசக் கட்டுமானத்தில்
ஸ்டாலின் செய்த கடுமையான மார்க்சிய விரோத தவறுகளே ருஷ்யாவில் முதலாளித்துவ மீட்சி
ஏற்பட்டதற்கு காரணம். கலைப்புவாதத்தை எதிர்த்தப் போராட்டம் என்பது கூட
முதலாளித்துவ மீட்சி பற்றிய இந்த ஆய்விலிருந்தே துவங்க வேண்டும். ஸ்டாலின்தான்
கலைப்புவாதத்தின் தொடக்கம். அவர் சர்வாதிகாரி; பலரைக் கொன்ற கொலைகாரன்.
5. ஸ்டாலின் வெறும்
துப்பாக்கி; தத்துவவாதி இல்லை.
6. காந்தி கூட ஏகாதிபத்திய
எதிர்ப்பு நிலை எடுத்தார். ஸ்டாலின் வழிகாட்டுதலால் தான் இந்திய பொதுவுடைமை
இயக்கம் ஏகாதிபத்திய ஆதரவு நிலையெடுத்தது.
7. மாவோ அகிலம் கலைத்ததை ஆதரித்தார்; அகிலம் கட்ட முயற்சிக்கவில்லை; அவர் சர்வதேச பாத்திரம் ஆற்றவில்லை.
8. மாவோ-லின்பியோ கூட்டணியே
இந்தியாவில் நக்சல்பாரி இயக்கம் அழிந்து போனதற்கு காரணம்.
9. மாவோவின் கலாச்சாரப்
புரட்சி தோல்வி அடைந்தது. கலாச்சாரப் புரட்சி முதலாளித்துவ மீட்சியைத் தடுக்க
முடியவில்லை. சீனாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட மாவோதான் காரணம்.
10. ஸ்டாலின்-மாவோவை
விமர்சிக்காமல் கட்சி கட்ட முடியாது. ஸ்டாலின் வழியில் சென்று அழியப் போகிறோமா? ஸ்டாலினை மறுத்து கட்சி கட்டப் போகிறோமா? இதுவே நம்முனுள்ள கேள்வி.
11. லெனின் சொன்னவாறு ஏன்
ஐரோப்பா முழுதும் புரட்சி நடக்கவில்லை? தனிநாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று டிராட்ஸ்கி முன்பே
சொன்னார்.
12. டிராட்ஸ்கியின் ‘நிரந்தரப் புரட்சி’ பரிசீலனைக் குரியது. அவர் மா-லெ வாதி.
புரட்சியில் பங்கு பெற்றார். டிராட்ஸ்கி ஸ்டாலினின் எதேச்சதிகாரத்தால்தான்
கோஷ்டிவாதியாகவும் எதிர்ப்புரட்சியாளனாகவும் மாறினான். (இது மாவோவின் விமர்சனம்
என்கிறார். ஸ்டாலினை எதேச்சதிகாரி என்றும் ஸ்டாலினால்தான் டிராட்ஸ்கி
எதிர்புரட்சியாளனாக மாறியதாக மாவோ கூறினாரா?) லெனின் டிராட்ஸ்கியைத்தான் வாரிசாக பார்த்தார். ஸ்டாலினை
எதிர்த்தார். லெனின் உயிலை இவ்வமைப்பு ஏற்கிறதா? இல்லையா? என்று கேட்டார்.
13. ஸ்டாலின்-மாவோவை
மறுபரிசீலனை செய்ய இந்த அமைப்பு அனுமதித்தால்தான் இந்த அமைப்பில் இருப்பேன்.
14. மார்க்சிய-லெனினியத்தை
மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு
ஸ்டாலின் மீதான விமர்சனம் எனும் பெயரில் டிராட்ஸ்கியவாதிகளின் கருத்துகளை
அடிப்படையாகக் கொண்டு மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் மீது மனோகரன் கடும்
தாக்குதல் தொடுத்தார். டிராட்ஸ்கியை எதிர்ப்பது என்பதே மாவோ சிந்தனையைக் கைவிடுவது
என்றும், அது தொண்டு நிறுவன அரசியல்
என்றும், கலைப்புவாதம் என்றும் பேசுகிறார்.
மனோகரன் பாசிச காலகட்டத்தில் புதிய ஜனநாயகப் புரட்சி பேசுவது டிராட்ஸ்கியம் என்கிறார். ஆனால் இது புதிய ஜனநாயகப் புரட்சியை கைவிட்டு ஓடுவதும், அப்பட்டமான முதலாளித்துவ தேசியவாதமும் ஆகும்
No comments:
Post a Comment