தனிநபரா அமைப்பா-3

 

ம.ஜ.இ.காவும் நானும்

என் பள்ளி நாட்களில் தின செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் ஆசிரியர் தூண்டுவார்,அதன் காரணமாக பள்ளிக்கு அருகாமையில் இருந்த டீ கடைக்கு போய் பத்திரிக்கை வாசிக்க பழக்க படுத்தி கொண்டேன், அங்கேதான் என் அரசியல் பயிலகமாக இருந்தது. அங்கு இரட்டை குவளை முறை ஒழிந்து நக்சல்பாரிகளின் செய்திகளை தனியே ஒரு அட்டையில் ஒட்டும் பணி என்னை ஈர்த்தது, தின நிகழ்வுகளோ அல்லது அரசின் கொடுமைகளை நக்சல்பாரி புரட்சியாளர்களின் மீதான தாக்குதல் மேலும் நக்சல்பாரி புரட்சியாளர்களின் கையில் எழுதபட்ட பிரதிகளையும் அங்கே காண முடியும், பின்னர் அரசு படைகளால் ஆங்காங்கே பல தோழர்கள் கொல்லபட்டதை அங்கே தனியாக எடுத்து ஒட்டி வைப்பார், அவர்களின் வீரம் மேலும் அவர்களின் அர்ப்பணிப்பு என்பதனை எனது உயர்நிலை பள்ளியின் போது விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் அங்கு ஒரு ______________ மக்கள் விரோத ஆண்டையின் பேச்சை பற்றி கேள்விப்பட்டேன், “கூலிக்கார பசங்க கோவணம் கட்டி கொண்டு கூலி வேலை செய்யாமல் படிக்க வந்து விட்டால் கூலிவேலை யார் செய்வதும்,” என்று ஏலனம் செய்தமை அதற்க்குபின் அவனை நேர் கொண்ட முறை பற்றி எனது ஆசிரியர் எடுத்து சொன்ன போது தோழர்கள் மீதான என் ஈடுபாடு கூடியது இருந்தும் அரசின் கொடுங்க் கரங்களால் நக்சல்பாரி அமைப்பு ஒடுக்கப் பட்டது அதே போல் நக்சல்பாரி அமைப்பும் அழித்தொழிப்பு என்ற அதி தீவிரவாத (இடது) பாதையை விட்டு…..

என் மீதான எந்தவிதமான ஆதாரத்தின் அடிப்படையில் அன்னியர் அமைப்புக்குள் புகுந்துவிட்டார் அவர் மாவோஸ்ட் என்று அமைப்பு தோழர்களுக்கு கூறிய தோடில்லாமல் என்னை அமைப்பில் சேர்தமைக்காக வருந்துவதாகவும் நீங்கள் கூரியதாக சில தோழர்கள் என்னிடம் கூறினார்கள் அதன் அடிப்படையில் எனது இந்த கடிதம்.

 எனக்கு உங்களுடன் ஏற்பட்ட தொடர்பு கனுஸன்யால் மீதான விமர்சன் நூல் மற்றும் ம.க.இ.க (மக்கள் அதிகாராம்) மீதான விமர்சன நூல் வினியோகிப்பதோடு வளர்ந்தது, மேலும் SOC ரமலிங்கம் உடன் ஏற்பட்ட மோதலை தீர்க்க தோழர்கள் உதவினார்கள் அதிலிருந்து நான் அமைப்பில் இணைந்து செயல்பட விருப்பம் என்று கடிதம் கொடுத்தப் பின் தவறாமல் எல்லா வழிகாட்டுதலிலும் கலந்து கொண்டுள்ளேன் மேலும் என்னால் முடிந்த நிதி உதவி செய்துள்ளேன். நான் அமைப்பில் இணைந்து செயல்பட்டு ஆண்டுக்கு மேலாகிவிட்டது இதுவரை அமைப்பில் எனது இடம் (ஆதாவது உறுப்பினரா, அனுதாபியா) தெரியவில்லை, மேலும் என்னை தோழர்கள் அழைக்கும் போது அவர்கள் சொன்ன இடத்திற்க்கு செல்வேன் அதை கடந்து அமைப்பு எனக்கு ஏதாவது பணி ஒதுக்கவேயில்லையே நான் அமைப்பில் இணைந்து பணி செய்ய.   

எனக்கு தெரியாத அரசியல் மற்றும் என் கருத்துகளை உங்களுக்கு சொல்ல மறந்தது இல்லை, இதில் அன்னிய ஊடுறுவல் மாவோஸ்ட் ஏன் எப்பொழுது ஆனேன் சற்று விளக்க முடியுமா? தோழர்( பகத்சிங் பாரதி). என் மீதான் விமர்சனங்களை என்னுடன் என்றாவது பகிந்து கொண்டிரா? திருமேனி என்ற திருடனிடம் பணம் கேட்டதால் நான் அன்னிய ஊடுருவல் மாவோஸ்ட்டா?

 இல்லாமல் ஒன்றைப் பற்றிய மதிப்பீட்டையே முத்திரை குத்துவது என்கிறோம். தகுந்த விவரங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைத்து ஒருவரை அடையாளப்படுத்துவது  நன்றாக இருக்கும் வரவேற்கிறேன். எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் அற்பத்தனமான விவரங்களை உதாரணத்திற்கு காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது என்ற அற்பத்தனமான ஆதாரத்தை வைத்து ஒருவரை எடைபோடுவதை முத்திரை குத்துவதே. இவை ஏன் வந்தது விளக்குவீரா?

ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சிக்குள் உள்ள தோழர் என் மீது இதுபோன்ற முத்திரை குத்துவது மிகவும் வேதனை அளிக்கிறது. பரவாயில்லை இதனால் சில நூல்களை கற்க்க கிடைத்தது மேலும் எனக்கு சிறு வளர்ச்சியை கொடுத்தது.


தோழமையுள்ள ம.ஜ.இ.க மத்திய கமிட்டிக்கு,

 

தோழர்களே செவ்வணக்கம்,

 

நான் இதற்க்கு முன் எழுதி கொடுத்த விளக்கம் மாவட்ட அமைப்பாளரிடம் சமர்பித்தேன், அதில் உள்ள செய்திகள் உண்மையானவை, நடந்த சம்பங்களை கீழ் தொகுக்கிறேன்.

தோழர் பாலனின் நினைவுகளை சிறு நூலாக மனிதன் பதிப்பகம் கொண்டு வந்துள்ளதை முகநூலில் பதிவு கண்டு உடனடியாக எனக்கு 20 நூல் தேவை என்று கேட்டேன், அதற்க்கு அவர் பதிலாக இப்பொழுது கைவசம் இல்லை ஆனால் அமைப்பு தோழர்களிடம் கொடுத்துள்ளோம் அவைத்தெரிந்து பதில் அளிப்பதாக கூறினார், பின் தொடர்பு கொண்டு மதுரை பகுதியில் உள்ளதாகவும் ஒரு தோழரின் மொபைல் எண் கொடுத்தார் அப்பொழுது எனது தேடுதலில் தெரிந்த தோழர் மதுரை பகுதியை சார்ந்தவர் ரவீந்திரன் தோழர் மட்டுமே அறிவேன், ஆகவே நான் தகவல்களை கொடுத்து நூல் வாங்கி வர சொன்னேன். அவர் திருப்பத்தூர் எடுத்து வந்தார். அரங்க கூட்டத்திற்க்கு வந்தவுடன் நான் நூலை கேட்டேன் அவர் கூட்டம் முடிந்த பின் கொடுப்பதாக கூறினார், நான் அவரை வற்புறுத்தி வாங்கினேன், “ அரங்க கூட்டம் முடிந்தவுடனே ஆர்ப்பாட்டம், யார் எப்படி போவார்கள் என்று தெரியாது ஆகவே இப்போழுதே கொடுத்துவிட்டால் தேட வேண்டி அவசியம் இருக்காது,” என்று கூறிவாங்கி கொண்டேன், இதை கண்ட சுப்பராசன் தோழர் அவர் ஒரு நூலை எடுத்து பிரித்தார் அந்த அட்டை படத்தை கண்ட வெறொரு தோழர் நூல் கேட்டு வாங்கி சென்றார், இதனை பார்த்து வேறொரு பெண் தோழர் பெற்று சென்றவுடன் மணோகரன் தோழர் என்னை அழைத்து இந்த நூல் இங்கு விற்பது சரியா? என்று கேட்டார், அதற்க்கு நான் நமது தோழரின் வரலாறுதானே என்றேன் அவை நமது அமைப்பு கொண்டு வந்ததா? என்றார், இல்லை என்றேன், ஆகவே இதனை யாருக்கும் கொடுக்க கூடாது என்றார், நானும் யாருக்கும் அதன் பின் கொடுக்கவில்லை. எல்லா செயல்களை பற்றியும் என்னை அறிமுகப் படுத்திய தோழரிடம்(*) கூறினேன், அவர் உங்கள் விமர்சனத்தை அங்கே வைதிருக்க வேண்டும் என்றார், நான் என் கருத்துகளை கூறியதோடில்லாமல், எழுத்து மூலமாக மனிதன் பதிபகத்திற்க்கு எனது விமர்சனத்தை அனுப்பிவைத்தேன், இதனை எ.அ.ப.தோ க்கும் பகிர்ந்தேன், அவர் சரியென்ற பின் முக நூலிலும் பதிவிட்டேன் இதனை.

 

                                                தோழமையடன்

                                                சி. பழனி

(*)என்னை அறிமுகப் படுத்திய தோழர் பகத்சிங் பாரதி.

 

மனிதன் பதிபகத்திற்க்கு நான் எழுதிய விமர்சனம் கீழே:-

26/10/2017
எனது நீண்ட நாள் ஆசை தோழர் பாலன் மற்றும் தோழர் அப்பு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும் என்பது அண்மையில் தோழர் பாலனின் நினைவுகளை சிறு நூலாக மனிதன் பதிப்பகம் கொண்டு வந்துள்ளது. அதனை பற்றியதே இந்த பதிவு.

என் பள்ளி நாட்களில் தின செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் ஆசிரியர் தூண்டுவார்,அதன் காரணமாக பள்ளிக்கு அருகாமையில் இருந்த டீ கடைக்கு போய் பத்திரிக்கை வாசிக்க பழக்க படுத்தி கொண்டேன், அங்கேதான் என் அரசியல் பயிலகமாக இருந்தது. அங்கு இரட்டை குவளை முறை ஒழிந்து நக்சல்பாரிகளின் செய்திகளை தனியே ஒரு அட்டையில் ஒட்டும் பணி என்னை ஈர்த்தது, தின நிகழ்வுகளோ அல்லது அரசின் கொடுமைகளை நக்சல்பாரி புரட்சியாளர்களின் மீதான தாக்குதல் மேலும் நக்சல்பாரி புரட்சியாளர்களின் கையில் எழுதபட்ட பிரதிகளையும் அங்கே காண முடியும், பின்னர் அரசு படைகளால் ஆங்காங்கே பல தோழர்கள் கொல்லபட்டதை அங்கே தனியாக எடுத்து ஒட்டி வைப்பார், அவர்களின் வீரம் மேலும் அவர்களின் அர்ப்பணிப்பு என்பதனை எனது உயர்நிலை பள்ளியின் போது விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் அங்கு ஒரு ______________ மக்கள் விரோத ஆண்டையின் பேச்சை பற்றி கேள்விப்பட்டேன், “கூலிக்கார பசங்க கோவணம் கட்டி கொண்டு கூலி வேலை செய்யாமல் படிக்க வந்து விட்டால் கூலிவேலை யார் செய்வதும்,” என்று ஏலனம் செய்தமை அதற்க்குபின் அவனை நேர் கொண்ட முறை பற்றி எனது ஆசிரியர் எடுத்து சொன்ன போது தோழர்கள் மீதான என் ஈடுபாடு கூடியது இருந்தும் அரசின் கொடுங்க் கரங்களால் நக்சல்பாரி அமைப்பு ஒடுக்கப் பட்டது அதே போல் நக்சல்பாரி அமைப்பும் அழித்தொழிப்பு என்ற அதி தீவிரவாத (இடது) பாதையை விட்டு…..

 

நக்சல்பாரி பற்றி:-
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இருக்கும் நக்சல்பாரி கிராமத்தில் உருவான உழவர் போராட்டத்தின் காரணமாய் சாருமஜீம்தார், கனுசன்யால், ஜங்கர் சந்தால் ஆகியோருடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்] அமைப்பு உருவாகியது. அந்த கட்சியே பின்னாளில் நக்சல்பாரிக் கட்சியென அழைக்கப்பட்டது. நக்சல்பாரி கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் வெகுண்டெழுந்த உழவர் போராட்டத்தை அன்றைய செஞ்சீனத்தின் தமிழ் வானொலி ஒலிப்பரப்புவசந்தத்தின் இடி முழக்கம்என்று வர்ணித்தது.

நக்சல்பாரி அமைப்பு தொடக்கத்தில் அழித்தொழிப்புக் கொள்கை என்ற வழிமுறையை தனது நடைமுறை தந்திரமாய் பின்பற்றியது. அதன் விளைவாய் தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் கொடிய நிலவுடமையாளர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடந்த வீரஞ்செறிந்த உழவர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை உருவாக்கியது
தோழர் பாலன் நினைவுகள்:-
தோழர் பாலன், தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்.ஸி பட்டம் பெற்றவர். அவர் நக்சல்பாரி வழிமுறையால் ஈர்க்கப்பட்டு, தனது புரட்சிகர வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்தார். முதலில், மிக கொடுமையான கந்து வட்டிக்காரன் நல்லம்பள்ளி பெரியண்ண செட்டியை மற்ற தோழர்களுடன் சேர்ந்து அழித்தொழித்தார். அதில், அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. சிறையில் இருந்து வெளியான பிறகு, தோழர் பாலன் சற்றும் சோர்வில்லாமல் அநீதிகளுக்கு எதிராய் மக்கள் திரள் போராட்டங்களைக் கட்சியின் வழிகாட்டுதலில் கட்டியமைத்தார்.

அந்நேரம் தோழர் சாருமஜீம்தாருக்குப் பின்னால், நக்சல்பாரி இயக்கம் பிளவுண்டிருந்தது. தமிழகத்தில் கூட்டக்குழு என்ற பெயரில் ஒரு பிரிவாய் இயங்கி வந்தார்கள். அதுவே பின்னாளில் ஆந்திரத்துடன் இணைந்து மக்கள் யுத்தக் குழுவாய் மாறியது. அவர்களின் வழி காட்டுதலை ஏற்று மக்கள் யுத்தத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் தோழர் பாலன். அவரது போராட்ட வழி முறைகள் ஆதிக்க பண்ணைகளை நடுங்க வைத்தன. சாதிவெறியர்கள் பதைத்தார்கள். இதன் விளைவாய் அரசு அவர்களைப் பாதுக்காக்க வால்டர் தேவாரம் என்பவரை வடாற்காடு மற்றும் சேலம் தர்மபுரி டி..ஜி யாக நியமித்தது.

திருப்பத்தூரில் நடந்த ஒரு வெடிகுண்டு சம்பவத்தை சாக்காக வைத்து தேவாரம்நக்சலைட்டுகளைஒடுக்குவதாய் கூறி, புரட்சியாளர்களை அழித்தொழிக்க தொடங்கினான். அவனது நரவேட்டைக்கு முதல் பலி தோழர் பாலன். 1980 செப்டம்பர் 9 ந்தேதி இரவு தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் அருகிலுள்ள சீரியம்பட்டி என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பாலனையும் இன்னும் பத்துக்கும் மேற்பட்ட தோழர்களையும் பெரும் படையுடன் வந்து கைது செய்கிறான் தேவாரம். தோழர் பாலன் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு பாலக்கோடு காவல் நிலையம் கொண்டு செல்லப்படுகிறார். அங்கே, கடுமையான போலீஸ் சித்ரவதையில் அவரது கால் முறிக்கப்படுகிறது. அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் குற்றுயிரும்,குலையுயிருமாய் கொண்டு வந்து சேர்க்கிறது போலீஸ். அவர் இறந்து விடுவார் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தோழர் பாலன் மேல் மரியாதை உடைய மருத்துவர்கள் அவரை குணமாக்க முயல, கோபம் கொண்ட தேவாரம் வலுக்கட்டாயமாய் பாலனை சென்னைக்கு தூக்கிச் செல்கிறார். வழியிலேயே போலீஸ் வேனில் சித்ரவதை தொடர்கிறது. சென்னை அரசு மருத்துவமனைக்கு பாலன் கொண்டு வரப்பட, அங்கேயும் சில மனிதாபிமானமுள்ள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க முயல, அவர்கள் தேவாரத்தால் மிரட்டி தடுக்கப்படுகிறார்கள். சாகும் தறுவாயில் தனக்கு மருத்துவம் பார்க்க முயன்ற அந்த டாக்டரை அருகில் அழைத்துநீங்கள் கிருத்துவரா?’ எனக் கேட்டுஇந்த உலகத்தை மீட்க வந்த இயேசு நாங்கள் தான். நக்சல்பாரி பாதையில் இந்த நாடு வறுமையில் இருந்து ஒருநாள் மீளும். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை வெல்கஎன்று கூறி இறந்திருக்கிறார் தோழர் பாலன்.
தோழர் பாலனின் செயல்களை பின்னிறுந்து இயக்கிய இயக்கம் பற்றி முன்னுறை அதாவது பதிப்புரையில் பதிவு செய்யபடவில்லை, மேலும் தோழரின் செயல்களை தனிநபர் சகாசமாக காட்டியுள்ளது விமர்சனத்திற்க்குறியது, தோழர் பாலனின் பணிகளை அவரின் அமைப்பு வெளியிடாமை வருந்த தக்கது ஆனால் அவரின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் அவரின் அமைப்பு பயிற்று வைத்துள்ளதை மனதில் கொளல் வேண்டும். செய்திகளை களத்தில் உடன் பயணித்த தோழர்கள் மூலம் தெரிவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Top of Form


------------------------------------------------------------------------------------------------

 

நான் உங்களின் சமரன் வாங்கியமைக்கு முக்கிய காரணம் ஏஎம்கே அடுத்து தலைமை பொருப்பை வகிக்க தேர்ந்தெடுக்கப் பட்ட தோழர் நீங்கள் உங்களிடம் தலைமை பண்பின் முதிர்ச்சியும் மாலெ அமைப்பை கட்டிக் காக்கும் திறனும் இருக்கும் என்பதனாலே உங்களின் பத்திரிக்கையை வாசிக்க நினைத்தேன் மேலும் உங்கள் அமைப்பு சிதறி போனதற்க்கு நீங்கள்தான் காரணம் ஆகவே ஆக்க பூர்வமாக நீங்கள்தான் எல்லா அணிகளையும் அணுகி ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்க வேண்டும். விமர்சனம் சுயவிமர்சன முறையில் ஒவ்வொருவரின் தவறுகளையும் வெளிப்படையாக அறிவித்து ஒற்றுமைக்கு அடி கோலுங்கள் வீண் விவாதம் ஒற்றுமையை வளர்க்காது. நான் அரசியல் அற்று வெற்று வார்த்தைகள் பேச நினைக்கவில்லை அதே போல் ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது முத்திரை குத்தும் வேலையையும் நான் செய்ய நினைக்கவில்லை தோழர் மனோகரன்.

  நீங்கள் கேட்ட பதில் நான் இதர்க்கு முன்னரே மாவட்ட அமைப்பு தோழர் மாய கண்ணனிடம் கொடுத்தவையே திரும்பவும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் தோழரே. 

உங்களின் பார்வைக்கு மார்க்சிய ஆசான்கள் என்ன விளக்கியுள்ளார்கள் என்பதை பார்ப்போம்…

++++++++++++++++++++++++++++++++++++++++

1. “மகத்தான போராட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைமை உறுப்புகள் எல்லாவற்றையும், அதன் உறுப்பினர், ஊழியர் அனைவரையும் தமதுமுன்முயற்சியை (முனைப்பை) (initiative) முற்றாக வெளிப்படுத்த வேண்டும் என்று கோருகின்றது. இந்த முன்முயற்சி மட்டுமே வெற்றியை உத்தரவாதம் செய்ய முடியும். இந்த முன்முயற்சி தலைமை உறுப்புகளும் ஊழியர்களும் கட்சி அணியினரும் ஆக்கபூர்வமாக வேலை செய்யும் ஆற்றலிலும், பொறுப்புணர்ச்சியிலும், வேலையில் காட்டும் நிரம்பிய சுறுசுறுப்பிலும், கேள்விகள் எழுப்பி அபிப்பிராயங்கள் தெரிவித்துத் தவறுகள் விமர்சனம் செய்யும் துணிவிலும் திறமையிலும், தலைமை உறுப்புகளையும் தலைமை ஊழியர்களையும் தோழமை பூர்வமாகக் கண்காணிப்பதிலும், பருண்மையாகக் காட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால்முன்முயற்சிஎன்பது வெறும் வாய்ப்பந்தலாகும். ஆனால் இத்தகைய முன்முயற்சியின் பிரயோகம் கட்சி வாழ்வில் பரவியுள்ள ஜனநாயகத்தைச் சார்ந்திருக்கிறது. கட்சி வாழ்வில் போதிய ஜனநாயகம் இல்லாவிட்டால் இதை முற்றாக வெளிப்படுத்த முடியாது.

ஜனநாயக சூழ்நிலையில் தான் பெருந்தொகையான திறமைசாலிகளை வளர்த்தெடுக்க முடியும்.”

(தேசிய யுத்தத்தல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்- அக்டோபர் 1938)

2. சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? : மாஓ சேதுங் (1963 மே)
சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. அவை மனதில் இயல்பாகவே உள்ளனவா? இல்லை. அவை சமூக நடைமுறையிலிருந்து, அதிலிருந்து மட்டுமே, வருகின்றன. அவை மூவகையான சமூக நடைமுறைகளிலிருந்து வருகின்றன: உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞானப் பரிசோதனை. மனிதனுடைய சமூக இருப்பே அவனது சிந்தனையைத் தீர்மானிக்கிறது. முன்னேறிய வர்க்கத்திற்குரிய தனிச்சிறப்பான சரியான கருத்துக்கள் வெகுசனங்களாற் பற்றிக் கொள்ளப்பட்டதும் அக் கருத்துக்கள் சமூகத்தையும் உலகையும் மாற்றும் ஒரு பொருண்மையான சக்தியாகின்றன. மனிதர் தமது சமூக நடைமுறையிற் பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டுத், தமது வெற்றிகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும், செழுமையான அனுபவத்தைப் பெறுகின்றனர்.
பார்வை, கேட்டல்;, மணம், சுவை, தொடுகை ஆகியவற்றுக்கான உறுப்புக்களான மனிதனது ஐம்புலன் உறுப்புக்களின் வழியே புற உலகின் எண்ணற்ற இயல்நிகழ்வுகள் மனித மூளையிற் பிரதிபலிக்கின்றன. முதலில் அறிவு புலனணர்வு சார்ந்தது. போதிய அளவு அறிவு திரண்டதும், கருக்துருவ அறிவை, அதாவது சிந்தனையை, நோக்கிய பாய்ச்சல் நிகழ்கிறது. விளங்குதல் என்பதில் இது ஒரு செய்முறையாகும். விளங்குதல் எனுஞ் செயற்பாடு முழுமைக்கும் இதுவே முதற் கட்டமாகும். புறநிலைப் பொருளிலிருந்து அகஞ் சார்ந்த உணர்வுநிலைக்கும் இருத்தலிலிருந்து சிந்தனைக்கும் இட்டுச் செல்லுங் கட்டமாகும். ஒருவரது உணர்வுநிலையோ (கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் உட்பட்ட) கருத்துக்களோ புறநிலையான வெளி உலகின் விதிகளைச் சரியாகப் பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பது, அவை சரியானவையா இல்லையா என நிச்சயிக்க இயலாத இந்தக் கட்டத்தில், இன்னமும் நிறுவப்படாதுள்ளது.
அதையடுத்து அறிதலின் இரண்டாவது கட்டமாக உணர்வுநிலையினின்று பொருளுக்குத் திரும்பச் செல்லுவதான, கருத்துக்களிலிருந்து இருப்புக்குத் திரும்பச் செல்லுவதான கட்டம் வருகிறது. இங்கே, கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் எதிர்பார்த்த வெற்றியைத் தந்தனவா என உறுதிப் படுத்துவதற்காக, முதலாவது கட்டத்திற் பெறப்பட்ட அறிவு சமூக நடைமுறையிற் பிரயோகிக்கப் படுகிறது. பொதுவாகச் சொன்னால் வெற்றி பெறுபவை சரியானவை தோல்வி பெறுபவை தவறானவை. இயற்கையுடனான மனிதனது போராட்டத்தில் இது சிறப்பாகச் சரியானது.


3.
சமூகப் போராட்டத்தில் முன்னேறிய வர்க்கத்தின் பிரதிநிதியான சக்திகள் சில சமயங்களிற் தோல்வியடைகின்றன. அதன் காரணம் அவர்களது கருத்துக்கள் தவறானவை என்பதல்ல, மாறாகப் போராட்டத்திற் சம்பந்தப்பட்ட சக்திகளின் சமநிலையில் அப்போதைக்குப் பிற்போக்குச் சக்திகளினளவுக்கு அவை வலியனவாயில்லை என்பது தான். எனவே அவை தற்காலிகமாகத் தோற்கடிக்கப் படுகின்றன. ஆனால் அவை இன்றோ நாளையோ வெல்லப் போகின்றவை.
மனிதனின் அறிவு, நடைமுறைச் சோதனை மூலம் இன்னோரு பாய்ச்சலுக்கு உட்படுகிறது. இப் பாய்ச்சல் முன்னையதை விட முக்கியமானது. ஏனெனில் இது மட்டுமே முதலாவது பாய்ச்சல். அதாவது புறநிலையான வெளி உலகைப் பற்றி யோசிக்கும் போக்கில் முடிவான கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும், சரியா இல்லையா என நிறுவ முடியும். உண்மையைப் பரீட்சிக்க வேறு வழியில்லை. மேலும், பாட்டாளி வர்க்கம் உலகத்தை அறிவதன் ஒரே ஒரு நோக்கம் அதனை மாற்றுவது தான்.
பல வேளைகளிற், பொருளிலிருந்து உணர்வுநிலைக்கும் மீண்டும் பொருளுக்கும், அதாவது நடைமுறையிலிருந்து அறிவுக்கும் மீண்டும் நடைமுறைக்குங்;, கொண்டு செல்லும் செயற்பாட்டைப் பலமுறை திரும்பத் திரும்பச் செய்வதன் மூலமே சரியான ஒரு கருத்தை வந்தடைய முடிகிறது. அறிவு பற்றிய மாக்ஸியக் கொள்கை, அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கை, அத்தகையது.
நம்மிடையே பல தோழர்கள் அறிவு பற்றிய இக் கொள்கையை இன்னமும் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களது கருத்துக்களதும் அபிப்பிராயங்களதும் கொள்கைகளதும் செய்முறைகளதும் திட்டங்களதும் முடிவகளதும் விவரணமான உரைகளதும் நீண்ட கட்டுரைகளதும் தோற்றுவாய் ஏதென்று கேட்டால் அவர்கள் அக் கேள்வி விசித்திரமானது என நினைக்கிறார்கள். அவர்களால் அதற்கு மறுமொழி கூற இயலாதுள்ளது. பொருள் உணர்வுநிலையாகவும் உணர்வுநிலை பொருளாகவும் மாற்றப்படுவதுமான பாய்ச்சல் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வான போதும், அத்தகைய மாற்றம் இயலுமென அவர்கட்கு விளங்குவதில்லை.
எனவே, நமது தோழர்கள் தமது சிந்தனையைச் சரியான திசைப்படுத்தி விசாரித்தலிலுங் கற்றலிலும் அனுபவங்களைத் தொகுத்தலிலும் வல்லோராகிச் சிரமங்களை எதிர்கொண்டு தவறிழைத்தலைத் குறைத்துத் தமது வேலையைச் சிறப்பாகச் கெய்து சீனாவை உயர்வான வலிய சோசலிச நாடாகக் கட்டியெழுப்பி நமது மாபெரும் சர்வதேசக் கடமையை நிறைவுசெய்யுமுகமாக உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் பரந்துபட்ட வெகுசனங்கட்கு உதவவும் நமது தோழர்கட்கு அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கையிற் பயிற்றுவிக்க வேண்டியுள்ளது.
(
தோழர் மாஓ சேதுங்கின் நெறிப்படுத்தலின் கீழ் வரையப்பட்டநமது தற்போதைய கிராமப்புறப் பணிகளிலுள்ள சில பிரச்சனைகள் பற்றிச் சீனக் கம்யூனிஸ்ற் கட்சி மத்திய குழுவின் வரைவுத் தீர்மானம்எனும் ஆவணத்தினின்று பெறப்பட்ட பகுதி. இப் பகுதியைத் தோழர் மாஓ சேதுங் எழுதியிருந்தார்


4.
மனிதன், தன் அறிதல் அனுபவங்களை முறை பற்றி அறியும்பிரிவே அறிவியல் என்பதாகும். தன் உணர்தல்அநுபவங்களைமுறைப்படுத்தி ஆயும்பிரிவே கலை என்பதாகும். சிந்தனனக்கும் உணர்தலுக்கும்இடையிலானவேறுபாட்டையே, அறிதலும், உணர்தலும் தெளிவாக்குகிறது.
புரதானகாலசமுதாயத்தில்,அறிவியலும் கிடையாது கலையும் கிடையாது. மந்திரம் மட்டுமே இருந்தது. நாம் இப்போது அறிந்திருக்கிற அறிவியலும் கலையும்,
சரக்கு உற்பத்திமுறையின் வளர்ச்சிக்குப்பின்னரும்
மன உழைப்பு உடல் உழைப்பு ஆகிய வற்றுக்குஇடையிலான
முரண்பாட்டின்வளர்ச்சிக்குப்பின்னரும்,சமூகம் வர்க்கங்களாகப் பிரிவுண்டப்பின்னரும்வளர்ந்ததுறைகள் ஆகும் .(நூல்:மனிதசமூகசாரம்.
ஜார்ஜ்தாம்சன்).
5.
குறுங்குழுவாதம்

*எல்லா குறுங்குழுவாதப் போக்குகளும் அகவய வாதமே!*
மாவோ

கட்சி பள்ளி தொடங்கிவைத்து தோழர் மா.வோ. பெரும்பாலான நமது தோழர்கள் கட்சி சாராத மக்கள் மீது கர்வப் போக்கு உடையவர்களாக, இகழ்ச்சியாக அவர்களை பார்ப்பவர்களாக, அவர்களை வெறுக்கவோ, அல்லது மறுக்கவோ அல்லது அவர்களின் நல்ல அம்சங்களை கவனிக்காமல் வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்கிறார்கள். இது உண்மையில் குறுங்குழுவாத போக்கு ஆகும். சில மார்க்சிய புத்தகங்கள் படித்த பின்னால், அடக்கத்திற்கு மாறாக அகந்தையுள்ளவர்களாக மாறுகின்றனர். தங்கள் அறிவு அரை குறையானது என்ற உண்மையை உணராமல் மற்றவர்களை பயனற்றவர்கள் என்று ஒதுக்கி விடுகின்றனர். எந்த சமயத்திலும் கட்சி சாராத மக்களிடம் ஒப்பிடும்போது நாம் சிறுபான்மையினர்தான் என்ற உண்மையை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு நூறு நபருக்கு ஒரு பொதுவுடமை வாதி வீதம் இருந்தால் 45 கோடி மக்களுக்கு, 45 இலட்சம் பொதுவுடமை வதிகள் இருக்கவேண்டும். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நமது கட்சி அடைந்தாலும் கூட மக்கள் தொகையில் நாம் ஒரு சதவீதம் இருப்போம் கட்சி சாராத மக்கள் 99 சதவீதம் இருப்பார்கள். கட்சி சாராத மக்களிடம் நாம் இணையாமல் இருப்பதற்கு காரணமென்ன? நம்முடன் இணைய விரும்புகிறவர்கள் அல்லது இணையப் போகிறவர்களை பொறுத்த மட்டில் நமது ஒரே வேலை அவர்களோடு ஒத்துழைப்பது தான். அவர்களை புறக்கனிப்பதற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை ஆனால் சில தோழர்கள் இதைப் புரிந்து கொள்ளாமல் நம்முடன் ஒத்துழைப்பவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள் அல்லது அவர்களை புறக்கணிக்கிறார்கள். இம்மாதிரி செயல்படுவதற்கு எந்த நியாயமும் இல்லை. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் ஏதாவது நியாயங்களை கொடுத்துள்ளனரா? இல்லை. மாறாக, அவர்கள் மக்களுடன் இணைவதற்கு நம்மை ஊக்கப் படுத்தியுள்ளனர். மக்களிடமிருந்து நாம் விலகுவதை அல்ல. சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய கமிட்டி ஏதாவது நியாயங்கள் தந்துள்ளதா? இல்லை. அதன் எல்லாத் தீர்மானங்களிலும் மக்களிடமிருந்து நம்மை விலக்கி தனிமைப் படுத்தும்எந்த ஒரு தீர்மான வாசகமும் இல்லை அதற்கு மாறாக மக்களுடன் நெருங்கிய உறவு கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது. மக்களிடமிருந்து நம்மை பிரிக்கும் எட்த ஒரு செயலுக்கும் எந்த நியாயமும் இல்லை. சில தோழர்களின் திட்டமிட்ட குறுங்குழுவாத சிந்தனையின் விளவுதான் இது. இம் மாதிரியான குறுங்குழுவாதப் போக்கு நம் தோழர்களில் சிலரிடையே அதிக அளவு உள்லது. அது நம் கட்சி வழியை தடுத்து வருகிறது. இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள நம் பரந்த அளவிற்கு கட்சிக் கல்வியை எடுத்துச்செல்ல வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை - கட்சிசாராத மக்களுடனும், ஊழியர்களுடனும், இணையாமல் நாம் எதிரியை வெல்வதோ புரட்சியின் இலட்சியத்தை அடைவதோ சாத்யமில்லை - என்பதை உண்மையோடு நமது கட்சி ஊழியர்களுக்கு உணர்த்த வேண்டும். எல்லா குறுங்கூவாதப் போக்குகளும் அகவய வாதமே புரட்சியின் உண்மையான தேவைகளுடன் பொருந்தாது ஒன்று. ஆகவே அகவயவாதத்திற்கும், குறுங்குழுவாதத்திறும் எதிராக ஒரே சமயத்தில் போர் தொடுக்க வேண்டும்-. மாவோ.

 

(அ) . “மக்களிடமிருந்து மக்களுகே” அதாவது மக்களிட்மிருந்து கற்றுக் கொள்வதும் மக்களுக்குக் கற்பிப்பதும் ஆகும்.

(ஆ). மக்கள் மீது எந்த ஒரு கண்ணோட்டத்தையும் அது எவ்வளவு சரியாக இருந்தாலும் சரி- தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் திணிக்கக் கூடாது, இது அதிகார் வர்க்க போக்கு.

(இ).

Top of Form



தங்களது இயகத்தில் உள்ள குறைபாடுகளை பூசி மறைக்காமல் இருக்க வேண்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆனால் அவைகளை விரைவில் மற்றும் அடிப்படையில் சரி செய்வதற்காக பகிரங்கமாக அவைகளை விமர்சனம செய்ய வேண்டும்”. (லெனின்- அகிலத்தின் இரண்டாம் காங்கிரசின் அடிப்படைப் பணிகள்).

இங்குள்ள ஒவ்வொரு குழுவும் தம்மை தாமே ஒரே சரியான புரட்சிகரமான கம்யூனிஸ்ட கட்சியாக கருதிக் கொள்ளும் மனப்பான்மை கொண்டவை. சுவர்களில் காணும், “நானே உயிரும் ஆன்மாவும், வழியுமாக இருக்கிறேன்”, என்கிற வாசகத்துக்கும், மேலே கண்ட மனபான்மைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? புற நிலை உண்மை என்று கூறுகிறோமே, அதற்க்கு ஒத்துப் போகிறதா?
விருப்பங்களிலிருந்து அல்லாமல் தமக்கு அப்பால் நிலவும் புறவய உண்மைகளிலிருந்து விசயங்களை பார்க்க வேண்டும் என்று மார்க்க்சியம் போதிக்கிறது. இந்த அரிச்சுவடி பாடத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கம் குறிப்பாக மா-லெ என்று அறியப்படும் நக்சல்பாரி இயக்கம் புறக்கணித்து விட்டது, இன்று 

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...