முரண்பாடுகள் பற்றிய பகுப்பாய்வுகள்

 

1.சோலிச- ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடு- இன்று இவை இல்லை
2. ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவ நாடுகளுக்குமான முரண்பாடு
3. முதலாளித்துவ நாட்டில் உள்ள முதலாளிகளுக்கு இடையேயான முரண்பாடு
4. உழைப்பாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடு
இவைகள் தான் இந்தியாவில் கட்சியில் ஒன்று முன்வைத்துள்ளதாக கூறுகின்றார்கள்.
இங்கு அறிய வேண்டியது என்னவெனில் இந்த முரண்பாடு எந்த அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றது?
அது இன்றும் பொருத்தமானதா?
நாட்டரசில் உள்ள நிலைக்கும், தேச அரசுகளுக்கும் இடையே எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகின்றது? இந்திய கட்சிகளின் பகுப்பாய்வாக இருக்கின்றது. (முழுமையான வரையறை பெற்று உரையாடப்பட வேண்டும்)
தமிழகம்
”நிலப்பிரபுத்துவ முரண்பாட்டையே பிரதான முரண்பாய் எம். எல் இயக்கம் கணித்ததும், அதுவே இறுதிவரை பிரதான முரண்பாடாய் இருக்கும் என்பது போன்ற பார்வை கொண்டிருந்த்ததும் தவறாய் அமைந்து விட்டது. (ப156- தோழர் தமிழரசன் அறிக்கை- பொழிலன்)
--”தமிழ் நாட்டைப் பொறுத்த வரை அடிப்படை முரண்பாடுகள் இரண்டு. ஒன்று, ஏகாதிபதம்தியங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு மற்றொன்று நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்குமான முரண்பாடு ஏகாதிபத்தியத்திற்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடு. இப்பிரதான முரண்பாட்டின் பிரதாரனக் கூறு, டெல்லி அரசுக்கும் தமிழ் மக்களுக்கிடையலான முரண்பாடே. (ப.157- தோழர் தமிழரசன் ) - பொழிலன்)
ஈழத்தைப் பொறுத்த வரையில் சர்வதேச முரண்பாடு ஒடுக்கப்படும் தேசங்கள், நாடுகளுக்குள் இருக்கின்ற முரண்பாடு உள்ளது. அதே போல இலங்கையில் முதலாளி- தொழிலாளி முரண்பாடு அடிப்படை முரண்பாடாக உள்ளது.
தேசிய ஒடுக்குமுறை என்பது பிரதான முரண்பாடாக இருக்கின்றுது. பிரதான முரண்பாடு தீராத வரையில் சிங்கள தொழிலாளர் வர்க்கத்திற்கு விடுதலை என்பது சாத்தியமில்லை.
மூல உத்தி பற்றிய உரையாடல் என்பது அவசியமாக இருக்கின்றது. இதன் ஊடாக ஒரு ஐக்கிய முன்னணியை கட்ட முடியும்.
”மூல உத்தியானது, திட்டத்தின் வழிகாட்டுதலிலும், உள்நாட்டிலும் (தேசிய) சர்வதேசத்திலும் கேமாதிக் கொண்டிருக்கும் சக்திகளின் கணக்கீட்டின் அடிப்படையிலும், பொதுவழியை, பொது திசையை, வரையறுக்கிறது, அதில் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க இயக்கம், வளரத் தொடக்கும் அல்லது வளர்ந்து கொண்டிருக்கும் சக்திகளின் உறவின் கீழ் மாபெரும் விளைவுகளை அடையும் கண்ணோட்டத்துடன், வழிகாட்டப்பட வேண்டும். இதற்கு ஒத்திசைவாக, அது பாட்டாளி வர்க்கம் மற்றும் சமூக முன்னணியில் அதன் கூட்டாளிகளின் சக்திகளின் அணிவகுப்புக்கான ஒரு திட்டத்தை (பொது ணிவகுப்பு) சுருக்கமாக வரையறுக்கிறது. ”சக்திகளின் அணிவகுப்புத் திட்டத்தைச் சுருக்கமாக வரையறுப்பதை” செயலுத்தி மற்றும் மூல உத்தியால் கூட்டாக மேற்கொள்ளப்படுகிற, சக்தகளின் அணிவகுப்பும் ஒதுக்கீடும் பற்றிய , உண்மையான )பருண்மையான, நடைமுறை ரீதியான) நடவடிக்கையுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. மூல உத்தி என்பது திசை வழியை வரையறுப்பதுடனும், பாட்டாளி வர்க்க முகாமில் போரிடும் சக்திகளின் அணிவகுப்புத் திட்டத்தைச் சுருக்கமாக வரையறுப்பதுடனும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். என்று இதற்குப் பொருளல்ல; அதற்கு மாறாக, அது போராட்டத்தை நெறிப்படுத்தி, மாற்றத்தின் ஓட்டுமொத்தக் கால கட்டத்தின் போதும், கிடைக்கக் கூடிய இருப்புகளை திறமையாகப் பயன்படுத்தியும், செயலுத்தியை ஆதரிக்கும் நோக்கத்துடன் செயலாற்றியும் நடப்புச் செயலுத்தியில் திருத்தங்களைக் கொண்டு வருகிறது. (77-5)
பொதுச் திசை வழி, போராடும்ம சக்திகளை, வர்க்களை இணைப்பதும் வழிநடத்து, வரலாற்றுக் காலத்தை மதிப்பீடு செய்வது, போராட்டங்களை நெறிப்படுத்துவது, செயலுத்தியை வழிகாட்டுவதாகும்.
4
செயலுத்தி
”செயலுத்தி என்பது மூல உத்தியின் ஒரு பகுதியாகும், அதற்குக் கீழ்ப்பட்டதும், அதற்குச் சேவை செய்வதும் ஆகும். செயலுத்தி என்பது ஒட்டு மொத்த யுத்தத்திற்கும் தொடர்புடையதல்ல, மாறாக அதன் தனித்தனி நிகழ்வுகளுடன், போர்களுடனும் மோதல்களுடனும், தொடர்புடையதாகும். மூல உத்தி என்பது ஒரு யுத்தத்தை வெல்வதற்குப் போராடுகிறது, …” (173)
”செயலுத்தியின் மிகவும் முக்கியமான ஓரு செயற்பாடு, குறிப்பிட்ட தருணத்தில், பருண்மையான
இலக்கை அடைவதற்கான அமைப்பை உருவாக்குவது, நடைமுறையில் எவ்வாறு செயற்படுவது, அதற்கான சூழல் எவ்வாறு இருக்கின்றது, அந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அமைப்பை கட்டமைப்பது, செயற்படுத்துவது, இலக்கை அடைவதற்காக எவ்வகையான சூழலை உருவாக்குவது, பலம் இல்லாத பகுதிகளில் எவ்வாறு செயற்படுவது, அதில் இருந்து எவ்வகையான பாடங்களை கற்றுக் கொள்வது, வீழ்வது என்பது வழமையானது. ஆனால் வீழ்வது என்பது முடிவு அல்ல.
செயலுத்தி வர்க்கங்களை வீழ்த்த அணிதிரட்டும், கட்சியின் அரசியல் போக்கை செயல்வடிவம் கொடுப்பது. ”செயலுத்தியானது, மூல உத்தியாலும், உள்ளநாட்டிலும் அண்டை நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் அனுபவத்தாலும், வழிகாட்டப்பட்டு, பாட்டாளி வர்க்கத்திற்குள்ளும் அதன் கூட்டாளிகளுக்குள்ளும் (கலாச்சாரத்தின் உயர்ந்த அல்லது தாழ்ந்த மட்டத்தில், அமைப்பு மற்றும் அரசியல் உணர்வு நிலையின் உயர்ந்த அல்லது தாழ்ந்த அளவில், இயக்கத்தில் நிலவும் பாராம்பரியங்கள் , வடிவங்கள், முதன்மையான மற்றும் துணை அமைப்பு வடிவங்கள் ஆகிய) சக்திகளின் நிலையைக் குறிப்பிட்ட ஒவ்வொரு கணத்திலும் கருத்தில் எடுத்துக் கொண்டும், மேலும் எதிரியின் முகாமில் உள்ள சக்திகளைக் (ஒத்திசைவின்மை அல்லது குழப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதைக்) கணக்கில் எடுத்துக் கொண்டும், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் பரந்து பட்ட மக்களை வென்றெடுக்கும் திட்டவட்டமான வழிகளைச் சுட்டிக் காட்டுகிறது, மேலும் சமூக முன்னணியில் (மூல உத்தித் திட்டத்தில் சுருக்கமாக வரையறுத்துக் கொடுக்கப்பட்ட சக்திகளின் அணிவருப்புக்கான திட்டத்தை நிறைவேற்றுவதில்)அவர்களுடைய போரிடும் மூல உத்தியின் வெற்றிக்கு மிகவும் உறுதியாகத் தயாரிப்புச் செய்யக் கூடிய நிலைகளில் நிறுத்தி வைக்கவும் கூடிய வழிகளைச் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு ஒத்திசைவாக, அது கட்சியின் ழுக்கங்களை அல்லது வழிகாட்டு நெறிகளை வெளியிடுகிறது, அல்லது மாற்றுகிறது. (78-5)
5
போராட்ட வடிவங்கள்
போராட்ட வடிவங்கள் எல்லாக் காலத்திலும் ஒரே வடிவத்தில் அமைந்திருக்க முடியாது. ஆனால் மக்கள் எந்த வகையிலும் போராட்டத்திற்கு தயாராக இருப்பார்கள். 2009 பின்னர் பல்வேறு வகைப் போராட்டங்கள் தமிழர் தேசத்தில் நடைபெற்றது. முன்னர் யுத்தம் நடைபெற்ற காலத்தில் செயற்பட்ட வடிவம் போல அடக்குமுறைக்குள், அரசியல் தலைமை இல்லாத நிலையில் ஒரே வடிவத்தில் வடிவமைக்க முடியாது. முழக்கங்களும் செயலுக்களும் மக்களை அணிதிரட்டும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.
”அரசியல் அரங்கிலும் போராட்டத்தின் வடிவங்கள் பற்றி இதையே தான் கூற வேண்டும். அரசியல் அரங்கில் போராட்ட வடிவங்கள் யுத்த அரங்கின் வடிவங்களை விட இன்னும் மிகுதியாக வேறுபட்டவையாக இருக்கின்றன. பொருளாதா வாழ்க்கை, சமூக வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கேற்ப, வர்க்க நிலைமைகள், மோதிக் கொள்ளும் சக்திகளின் உறவு, அரசாங்கத்தின் வகை, மேலும் இறுதியாக சர்வதுச உறவுகள் இன்ன பிறவற்றுக்கு ஏற்ப அவை மாறுபடுகின்றன. (176-5)
இரத்தம் சிந்தும் அரசியல், இரத்தம் சிந்தா அரசியல் என்ற வகையில் ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டம் என்று உள்ளது. 2009 வீழ்ச்சி என்பது தேசியப் இராணுவத்தின் வீழ்ச்சி அதன் பொருள் ஈழ தேசத்தின் அரசியல் நியாயம் என்பது தொடர்கின்ற போது இரத்தம் சிந்தா அரசியல் பாதை தொடரப்பட வேண்டும்.
ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தோல்விமனப்பான்மைக்கு தமிழ் தரகு வர்க்கத்தினால் மக்களை இட்டுச் சென்றார்கள். அரசியல் எழுச்சியை கட்டமைக்க வேண்டிய தேவையுள்ளது. முதலாளித்துவ புரட்சி நடைபெற்று முடிந்துவிடாத சமூகக் கட்டத்தில் இருக்கின்ற போது தேச விடுதலையின் ஊடாக ”புதிய ஜனநாயக சமூகம் நிறுவுப்படுதில் முடியும். பிறகு இரண்டாவது கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லப்படும். அதில் ஒரு சோசலிச சமூகம் சீனாவில் நிறுவப்படும்” (457-2 மாவோ) போராட்ட வடிவங்களை சமூகப் போக்கின் அவசியம் தீர்மானிக்கும்.
போராட்ட வடிவங்களை ஒன்றிணைப்பது, அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்திலும் நடைபெறும் வகையாக போராட்ட வடிவங்கள் அமையப் பெற வேண்டும். வெகுமக்களின் திரட்சி என்பது அரச இயந்திரத்தை முடக்கும் வகையில் அமையப்பட வேண்டும். அவ்வாறான போராட்ட வடிவத்தின் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கின்றது.
6.
அமைப்பு வடிவங்கள்
வாழ்கின்ற சமூகத்தில் எவ்விதமாக சமூக அமைப்பு இருக்கின்றது என்பதை வலதுசாரிகள் சமூகத்திடம் முன்வைக்கமாட்டார்கள். ஆனால் சமூகப் பொருளாதார உற்பத்தி முறையை முதலாளித்துவ சிந்தனையை மையமாகக் கொண்டே ”பந்தி” எழுத்தாளர்களாக வலம் வரும் சூழல் இருக்கின்றது. அவர்களை சுற்றிய ஒரு விசிறி வட்டமும் உள்ளது.
இந்த விசி வட்டம் என்பது வர்க்கம் அற்ற படைப்பாளிகளின் உலகம் என்ற வகையில் அதற்கு 30 வருடங்களுக்கு மேலான வரலாறும், உறவுகள், தொடர்புகள், ஒப்புறவுச் செயற்பாடுகளும், எதிர்வினைத் திறனும் கொண்டதாக உள்ளது.
முன்னேறிய சமூகப் பிரிவான மார்க்சிய உரையாடல், சமூகச் செயற்பாடு, முன்னோக்கிச் செல்லும் வழியைக் கொண்டதாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை. இந்தப் போக்குகளை முறித்துக் கொண்ட அமைப்பு வடிவத்தை கோருவதே மார்க்சிய லெனினிய வழிகாட்டலாகும்.
இராணுவம், அரசியல் அமைப்பு வடிவங்களை உருவாக்கிக் கொள்வது என்பது சூழலில் மாற்றம் ஏற்பட முடியும். யுத்தமும் அது சார்ந்த போராட்ட வடிவம் மாறுபடும். அரசியல் போராட்டம் என்பது வெகுசன அமைப்புகளால் கட்சியின் வழிநடத்தலின் கீழ் நடைபெறும்.
”சேவையில் உள்ள அனைத்துப் படைக்கல அணிகளின் பிரிவுகளையும் கொண்டிருப்பதை உறுதிபடுத்திக் கொண்டு, அவற்றை முழுநிறைவான நிலைக்குத் கொண்டு வந்து, திறன்வாய்ந்த வகையில் அவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது யுத்தக் கலையின் பணியாகும்.
அரசியல் அரங்கிலும் அமைப்பு வடிவங்கள் குறித்து அதையே கூற முடியும். இங்கு, இராணுவ அரங்கில் போல, அமைப்பு வடிவங்கள் போராட்ட வடிவங்களுக்குப் பொருத்தப்படுகின்றன. ……. பெருந்திரள் நடவடிக்கை மற்றும் எழுச்சிக் கால கட்டத்தில், தொழிற்சாலை மற்றும் பணிமனைக் குழுக்கள், தொழிலாளர்கள், படைவீர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துக்கள், புரட்சிகர இராணுவக் குழுக்கள், மற்றும் அமைப்பு வடிவங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கிற ஒரு பரந்த பாட்டாளி வர்க்கக் கட்சி ; …
இந்த அமைப்பு வடிவங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெறுவதும் அவற்றை முழுநிறைவான நிலைமைக்குக் கொண்டு வருவதும், ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும், அவற்றின் நடவடிக்கைகளைத் ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும், அவற்றின் நடவடிக்கைகளைத் திறன்வாய்ந்த வகையில் ஒருங்கிணைப்பதும் கட்சியின் பணியாகும்.” (176-7தொ5)
இன்றையச் சூழலில் இரத்தம் சிந்தும் அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது. ஆனால் இரத்தம் சிந்தா அரசியல் முன்னெடுக்க முடியும். இரண்டு வகையான அரசியலும் சமூக இயக்கப் போக்கை முன்னொக்கிச் கொண்டு செல்பவையே. ஆனால் இரத்தம் சிந்தும் அரசியலின் வீழ்ச்சி என்பது அரசியல் இலக்கின் வீழ்ச்சியாக கற்பிற்கப்படுகின்றது. இந்தப் போக்கு சமூகத்தை தோல்வி மனப்பாங்கிற்குள் கொண்டு செல்கின்றது.
அரசியல் முன்னெடுப்பிற்கு சிந்தாந்தம், கட்சி அவசியமாகும். அதன் கீழ் வெவ்வேறு வர்க்கப் பிரிவுகளை அணிதிரட்ட முண்ணனி அவசியமாகும். இதனையே அமைப்பு வடிவம் என்பது நமக்கு கற்றுத் தருகின்றது.
7.
முழக்கம். உத்தரவு
குறிப்பான சமூகக் கட்டத்திற்காக செயற்பாட்டில் எவ்வகையான முழக்கங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குறிப்பான முழக்கங்கள் சமூக இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதாகும்.
”மூல உத்தியை வகுப்பவர் அல்லது செயலுத்தியை வகுப்பவரின் கலைத்திறன் ஒரு கிளர்ச்சி முழக்கத்தை, திறமையான முறையிலும் சரியான நேரத்திலும், ஒரு செயல் முழக்கமாக நிலைமாற்றம் செய்வதிலும், சரியான நேரத்திலும் திறமையான முறையிலும் ஒரு செயல் முழக்கத்தை ஒரு திட்டவட்டமான, பருண்மையான, உத்தரவுகளாக வார்த்தெடுப்பதிலும் அடங்கியிருக்கிறது.(80- தொ5)
” ஒரு முழக்கம் என்பது போராட்டத்தின், ஒரு குறிப்பிட்ட முன்னணிக் குழுவால், பாட்டாளி வர்க்கத்தின் கட்சியால் என்று வைத்துக் கொள்ளலாம், முன்வைக்கப்படும் உடனடி அல்லது தொலைதூர, குறிக்கோள்களின் சுருக்கமான, தெளிவான சூத்திரமாகும். போராட்டத்தின் பல்வேறு குறிக்காள்களுக்கேற்ப முழக்கங்கள் மாறுபடுகின்றன, அந்தக் குறிக்கோள்கள் ஒரு முழுமையான வரலாற்றுக் கட்டத்தையோ குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தையோ குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தின் தனித்தனிக் கட்டங்களையும் நிகழ்வுகளையுயுமோ தழுவியவையாக இருக்கின்றன. (178-5)
எடுத்துக் காட்டாக கூற வேண்டுமென்றால் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையில் நெடும் பயணத்தில் வைக்கப்பட்ட முழக்கங்களை எடுத்துக் கொண்டால் அது ஈழ தேசத்தின் அரசியல் நியாயத்தை வலியுறுத்தும் உள்ளடக்கத்தை கொண்டிருந்ததை அவதானிக்க முடியும். அவைகள் தொடர்ச்சியான அரசியல் போராட்டங்களின் ஊடாக சமூகத்தை செயற்பாட்டு இயக்கத்திற்கு கொண்டு வர துணையாக்கப்பட வேண்டும். சமூகத்தை அரசியல் மயமாக்கல், அமைப்பாக்கல் போராட்டத்தினை வீரியமாக்கும்.
” முழக்கங்களை உத்தரவுகளுடன் குழப்பிக் கொள்வது அல்லது ஒரு கிளர்ச்சி முழக்கத்தை நடவடிக்கை முழக்கத்துடன் குழுப்பிக் கொள்வது, காலம் கனிவதற்கு முன்னதாக அல்லது காலம் தாழ்த்திய நடவடிக்கையைப் போன்றே அபாயகரமானதாகும், அது சில நேரங்ளில் அழிவு ஏற்படுத்தக் கூடியதாகவும் ஆகிவிடும்.” (179- 5)
இறுதியாக
இரத்தம் சிந்தும், சிந்தா அரசியலின் முக்கியத்துவம் பற்றி இன்று உரையாடப் பட வேண்டும். இரந்தம் சிந்தா அரசியலை எவ்வித தடையும் இல்லாது முன்னெடுக்க முடியும். ஆனால் சீர்திருத்தவாத, பிற்போக்கு முகாம், விதேசிய பிரிவு, மேட்டுக்குடி தாராளவாதிகளும் ஏகாதிபத்திய, பிராந்திய, உள்நாட்டு ஆளும் வர்க்கச் சக்திகளுக்கு துணையாக இருக்கின்றார்கள்.
2009 பின்னரான காலத்தில் தோல்வி மனப்பாங்கை வளர்ப்பதில் அதிகம் கவனம் செலுத்தினார்கள். இரத்தா அரசியல் என்பதன் முக்கியத்தை தவிர்த்து வருவதில் அதிக கவனத்தை செலுத்தினார்கள்.
பிராந்திய, சிறிலங்கா அரசுகளின் நலன்களின் பின்னால் செல்ல முடியாது. தமிழ் தேசத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை கட்டமைக்கப்படவேண்டும். அதற்கான அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அமைப்பாக்கம், அமைப்புருவாக்கம், செயற்பாடு என்று நோக்கி நகர வேண்டும். இதற்கான உரையாடல் என்பது அவசியமாகும்.
இரத்தம் சிந்தா அரசியலின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு ஊட்டப்பட வேண்டும் என்ற நிலையில் இந்த குறிப்பு எழுதப்படுகின்றது.
இது தோழர் ஸ்ராலின் தொகுப்பில் இருந்து எடுத்தாளப்படுகின்றது. தோழர் ஸ்ராலின் சோவியத் புரட்சிக்குப் பின்னர் வழிகாட்டியுள்ளார். அதனை கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் கருதியே அறிமுகச் சுருக்கமாக இங்கு தரப்படுகின்றது.

தோழர் வேலன்

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...