பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. பவுத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியன வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட மக்கட் சமூகத்தின் மத்தியில் உருவாகிப் பரவியவை. இவற்றை உருவாக்கியவர்கள், உருவான காலம், இடம் ஆகியனவற்றை அறுதியிட்டு உறுதியாகச் சொல்ல முடியும், ஆனால் ஆகத் தொன்மையான இந்துமதம் இந்த மூன்று அம்சங்களிலும் முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அதை இன்னாரால், இந்த ஆண்டில். இங்கே உருவானது எனச் சொல்ல இயலாது. மிகப் பின்னாட்களில் சமஸ்கிருதப் பாரம்பரியத்தில் அவை கொண்டுவரப்பட்ட போதிலும் கடவுளர்கள் குறித்த இறை நம்பிக்கைகள், புராணங்கள் என்பனவற்றுக்கு மத்தியில் ஒருமித்த கருத்துக்கள் எல்லா மட்டங்களிலும் உருவாகிவிட்டன எனச் சொல்ல இயலாது. இன்றுவரை பல வேறுபாடுகளுடந்தான் இந்தக் கடவுளர்கள் ஏற்கப்பட்டு வணங்கப் படுகின்றனர். இராவணணை சீதையைக் கடத்திச் சென்ற அரக்கராக இந்துமரபில் முன்வைக்கப்பட்ட போதிலும் அவரையே தம் குலக் கடவுளாக வணங்கும் கோண்டு இன மக்கள் மத்திய இந்தியாவில் இன்றும் உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்களும் இந்நாட்டுக் குடி மக்களே. இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளை நாம் சொல்ல இயலும். எல்லோரையும் உள்ளடக்க விரும்பும் மேன்மையாளர்கள் இந்து மதத்ததின் இந்தப் பண்பை ஒரு பன்மைத் தன்மையுடன் கூடிய சிறப்பு அம்சமாகவே கருதுகின்றனர். சமஸ்க்ருத மரபை மட்டுமே மேன்மையானது அல்லது உண்மையானது எனக் கூறி மற்ற நம்பிக்கைகள் மற்றும் வழிபாடுகள் முதலியவற்றை ஒடுக்க முனைவதை ஏற்க இயலாது. ”காளி” எனும் இறை உருவாக்கம் மற்றும் நம்பிக்கைகளுக்கும் இப்படி ஒரு வரலாற்று ஆய்வு உண்டு. கிராமப்புற மக்கள், பழங்குடியினர், மலையோரப் பகுதிகளில் வணங்கப்பட்ட கடவுள்தான் காளிதேவி. ஆறாம் நூற்றாண்டில் “தேவி மகாத்மியம்” உருவான காலகட்டத்தில்தான் காளிதேவி சமஸ்கிருதப் பண்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறார். அதாவது ஆறாம் நூற்றாண்டில்தான் காளியை சமஸ்கிருத மரபு உள்வாங்கும் முயற்சியைத் தொடங்குகிறது
காளிதேவி வணக்கம்: ஒரு குறிப்பு
கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தீமையை அழித்து ஒழிப்பவள் என வணங்கப்படவர் தாய்மைப் பண்புடையவராகவும் முன்வைக்கப்படுவதும் பின்னாளில் உருவானது. அதே நேரத்தில் காளிதேவி வணக்கத்தில் இந்த ஆகப் பழம் நம்பிக்கைகளுக்கும் சமஸ்கிருத மரபிற்கு அப்பால் இன்றளவும் இடம் இருக்கத்தான் செய்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. சமஸ்கிருத மரபை மட்டுமே எல்லோரும் ஏற்கவேண்டும் எனச் சொல்வது இவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை
ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...
-
இந்த நாட்டில் தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளை விட தொடங்கிய காலம் முதல் டிராட்ஸ்கியவாதம் உடன் பிறந்தே கொல்லும் வ...
-
பல நாட்களாக எழுத நினைத்தும் நிறைவேறாமல் இருந்த இந்த எழுத்தை குறிபிட்ட அளவில் தயார் ஆன நிலையில் பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறே...
-
ஓடுகாலி காவுத்ஸ்கியை பற்றிய விமரசனத்தில் லெனின் மதிப்பீடு செய்துள்ளவைதான். இங்கே முன்னால் கம்யூனிஸ்டாக அவர் செய்த பணி எவ்வளவு உய...
No comments:
Post a Comment