தற்போது பெரும்பாலான துறைகளில் ரோபோக்களின் பயன்பாடு இருந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் அவற்றின் உபயோகம் இன்னும் அதிகமாகலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கட்டுமான பணிகளில் அவற்றின் பயன்பாடு இன்னும் பெரிய அளவில் இல்லை என்றாலும், ஒரே மாதிரியான கட்டமைப்புகளை அதிக எண்ணிக்கையில் அமைக்கவும், ஆபத்தான உயரங்களில் அல்லது அஸ்திவார பணிகளில் உதவி செய்யவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது குறித்த ஆய்வுகள் உலக அளவில் அதிகமாகி வருவதாக அறியப்பட்டுள்ளது. மனித உழைப்புக்கு சவாலாக உள்ள கட்டுமான பணிகளில் ‘ரோபோக்கள்’ பங்களிப்பை மறுக்க இயலாது என்று மேலை நாட்டு கட்டுமான பொறியாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். புதுமையான ரோபோ சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ‘ஸ்விஸ் பெடரல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி’ என்ற அமைப்பின் பொறியியல் வல்லுனர்கள் பறக்கும் கட்டுமான ‘ரோபோ’ வகைகளை உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது, உயரம் மற்றும் அகலம் அதிகமாக உள்ள கட்டமைப்புகளின் கட்டுமான பணிகள் நடக்கும் பகுதியில், குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்படவேண்டிய சாரங்களை இணைக்கும் கயிற்றுப் பாலங்களை அமைக்க இவ்வகை பறக்கும் ரோபோ வகைகள் உதவி செய்யும்படி அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட கயிற்றுப் பாலத்தை பயன்படுத்தி பணியாளர்கள், கட்டிடங்களுக்கு இடையில் மேற்கொள்ள வேண்டிய சிக்கலான பணிகளை செய்து முடிக்க இயலும். கயிற்று பாலம் அமைப்பு பறக்கும் ‘ரோபோ’ வகைகள் கட்டுமானங்களுக்கு இடையில் எளிதாக பறந்து சென்று பல்வேறு பணிகளை செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாதாரண ரோபோக்கள் செல்ல முடியாத பகுதிகளிலும் இவை நுழைந்து பணிகளை செய்கின்றன. கிரேன்கள் உள்ளிட்ட இதர இயந்திரங்களை பயன்படுத்தி இரண்டு உயரமான கட்டிட அமைப்புகளுக்கு இடையில் சாரங்களுக்கான கயிற்று பாலங்களை அமைப்பது கடினமானது. ஆனால், பறக்கும் ரோபோ வகைகள் அந்த பணியை எளிதாக செய்வதுடன், பெரிய அளவுகொண்ட கனமான பொருள்களை நகர்த்திச் செல்லவும் உதவுகின்றன. தகவல் பரிமாற்றம் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் உருவாக்கப்பட்ட இவ்வகை ரோபோக்களை பயன்படுத்தி கயிற்று பாலங்களை அமைக்கும்போது, ஒரே சமயத்தில் 4 ரோபோக்கள் பணியில் ஈடுபட வேண்டியதாக இருக்கும். சாரங்களில் அமைக்கப்படும் சட்டங்களில் எவ்வளவு தூரத்தில், எந்த இடங்களில் முடிச்சுக்களை போட்டு இணைக்க வேண்டும் என்ற நுட்பமான கணக்குகள் அடங்கிய மின்னணு மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையில் செய்யப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த ரோபோ வகைகள் இயங்குகின்றன. அவற்றுக்கிடையில் அதிவேகமாக நடக்கும் தகவல் பரிமாற்றங்கள் காரணமாக கயிற்றுப்பாலங்களை அவை கச்சிதமாக கட்டி முடிக்கின்றன.
எந்த வேலைகளில் எல்லாம் மனிதர்கள் சிந்தனை வடிவங்கள் தேவைப்படுகின்றனவோ, சிக்கல்களை தீர்க்கும் மூளை தேவைப்படுகிறதோ, ஒரு தனிமனிதனுடைய தனித்தன்மை எந்த வேலைகளில் எல்லாம் தேவைப்படுகிறதோ, கட்டாயம் அந்த வேலைகளையெல்லாம் இயந்திரங்களால் செய்ய முடியாது.
எந்த வேலைகளில் எல்லாம், இரக்க குணம், பொறுமை, உள்ளுணர்வு, உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய திறன்கள் தேவைப்படுகிறதோ, அந்த வேலைகள் எல்லாம் இயந்திரங்களுக்கு ஏற்ற வேலைகளாக இருக்காது. அந்த வகையில் பார்க்க போனால், பராமரிப்பாளர்கள், மருத்துவத்துறையில் இருப்பவர்கள், செவிலியர்கள், இன்னும் சொல்லப்போனால் விற்பனையாளர்கள் என இந்த சமூகத்தைச் சார்ந்தவர்களை இயந்திரங்களால் மாற்றியமைக்க இயலாது.
ஒரு பேரம் பேச வேண்டும் என்றாலோ, ஒரு சிக்கலான முடிவு எடுக்க வேண்டும் என்றாலோ, இம்மாதிரியான மனிதர்களை சார்ந்த செயல்கள், மனித மூளை, ஒரு தனிமனிதனின் திறன் ஆகியனவற்றை முன்வைத்து செயல்படுத்தப்படும் எந்த ஒரு வேலையையும் நிச்சயமாக இயந்திரங்கள் செய்ய முடியாது. திட்டமிடுதல், வியூகம் வகுத்தல் ஆகியவற்றில் எப்போதுமே இயந்திரங்கள் பிந்தங்கியே இருக்கும். எனவே அரசியல், தொழில் வணிகம், ஆலோசனைகள் வழங்குதல் ஆகிய துறைகளில் எப்போதுமே கணினியின் கைகள் நுழைய முடியாது.
ஒருவேளை உங்கள் நாட்டுப் பிரதமர் தேர்தலில் ஒரு ரோபோ போட்டியிட்டால் நீங்கள் வாக்களிப்பீர்களா? உங்கள் முன் அமர்ந்து செய்தி வாசிப்பது ஒரு ரோபோவாக இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு பதில் வாதாடுவது ஒரு ரோபோவாக இருந்தால்? அல்லது தீர்ப்பு வழங்கும் நீதிபதி ஒரு ரோபோ என்றால், வழக்கு என்ன ஆவது, தீர்ப்பு என்ன ஆவது?
ஓரு வியபார ஒப்பந்தம். வடிக்கையாளரிடம் பேசி ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும். ஒரு ரோபோவால் அதை செய்து முடித்திட முடியுமா? அல்லது ரோபோக்களால் பிரச்னைகளை ஆராய்ந்து முடிவு எடுக்க முடியுமா? ஒரு தொழில் உள்ளது என்றால், அந்த தொழிலின் வருங்காலத்தை ஆராய்ந்து அதனை மேம்படுத்த முடியுமா?
விளையாட்டுத்துறையில் மனிதர்களுக்கு பதில் ரோபோக்களை பயன்படுத்த முடியுமா? அப்படி பயன்படுத்தினால் அது போட்டியாக இருக்குமா? அந்தப் போட்டியை யாராவது பார்ப்பார்களா?
கலை, ஓவியம், நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு இதையெல்லாம் எந்த இயந்திரத்தினால் செய்ய முடியும்?
இவை அனைத்தும்தான் உலகம் முழுக்க இயந்திரமயமாக மாறுவதை தடுத்து வைத்திருக்கிறது. இயந்திரங்களால் பல செயல்களில் மனிதர்களை விட சிறப்பாக செயல்பட முடியும். ஆனால், அவைகளால் செய்ய முடியாத செயல்களும் பல இருக்கின்றன.
மனிதன் உணவு தேடியே உழைக்க ஆரம்பித்தான், உழைப்பதனால் உண்டான உபரியை அபகரித்தவன் ஒடுக்குமுறையாளனாக மூலதன அதிபதியாக உள்ளான். அவனுக்கு தேவை மூலதன குவிப்பு மட்டுமே அதனை அவன் அடைய அதற்க்கான நுகர்வோரும் வேண்டும் அல்லவா? தோடர்ந்து தேடுவோம்.
No comments:
Post a Comment