அரசுதான் என்ன? மார்க்சிய கோட்பாடுகளில்

 

அரசை பற்றிய லெனின் கூறுகிறார்.
ஒரு குடியரசு மிகமிக ஜனநாயக தன்மையுடைய குடியரசாக கூட எந்த வேஷம் போட்டாலும் இது முதலாளித்துவ குடியரசாக இருக்குமானால், இதில் நிலம், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீது தனியுடமை நிலவுமானால் சமுதாயம் முழுவதையும் தனிப்பட்ட மூலதனம் கூலி அடிமை நிலையில் வைக்குமானால், அதாவது நமது கட்சியின் வேலை திட்டத்திலும் சோவியத் அரசியலமைப்பு சட்டத்திலும் சாத்திய வற்றை அது நிறைவேற்ற வில்லை ஆனால் அப்பொழுது இந்த அரசு சிலர் மற்றவர்களை அடக்கி வைப்பதற்காக உள்ள இயந்திரமே ஆகும் இனி மூலதனத்தின் ஆதிக்கத்தை தூக்கி எறிய வேண்டிய ஒரு வர்க்கத்திடம் இந்த இயந்திரத்தை ஒப்படைப்போம் அரசு என்பது அனைத்து மக்களுக்கு இடையிலான சமத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது எனும் பழைய எண்ணங்களை எல்லாம் நாம் மறுப்போம் ஏனெனில் அது வஞ்சனையாகும் சுரண்டல் நீடிக்கிற வரையில் சமத்துவம் என்பது இருக்கமுடியாது நிலப்பிரபு தொழிலாளருக்கு சமம் என்றோ அல்லது பசித்த மனிதன் வயிறார உண்டு கொழுத்த மனிதனுக்கு சமம் என்று கூறமுடியாது அரசு என்பதற்கு அனைத்து  மக்களுடைய ஆட்சி என்று பொருள் தினம் பார்க் பழங்கதைகளை நம்பிக்கொண்டு மூடத்தனமான பயபக்தியுடன் மக்கள் அதன் முன் வணங்கி நின்றார்கள் அந்த அரசு என்ற இயந்திரத்தை பாட்டாளி வர்க்கம் ஒதுக்கித் தள்ளிவிட்டு அது முதலாளித்துவ பொய்யென்று சாற்றுகிறது முதலாளி கைகளில் எடுத்து இருந்து இந்த இயந்திரத்தை பறித்து அதை நாம் எடுத்துக் கொண்டு விட்டோம் இந்த இயந்திரம் அல்லது இந்த குண்டாந்தடியை கொண்டு எல்லா சூழ்நிலையிலும் நாம் தகர்த்தெறிவோம் சுரண்டலுக்கு வேண்டிய வாய்ப்பு உலகில் எவ்விடத்திலும் இல்லாமல் போன பொழுது நிலச் சொந்தக்காரர்கள் அலை சொந்தக்காரர்களும் எங்கும் இல்லை எனும் போது சிலர் மட்டும் வாரிவாரி விழுந்த மற்றவர்கள் பட்டினி கிடக்கும் நிலை இல்லா பொழுது இதற்கெல்லாம் இனி வாங்கிய கிடைக்கும் என்று நாளில் இந்த இயந்திரத்தை நாம் குப்பை துணிப்பை குளத்தில் வீசுவோம் அப்பொழுது அரசு என்பது இருக்காது சுரண்டலும் இருக்காது நம் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கி இதுவே.  (அரசு பற்றி லெனினுடைய சிறுநூல் பக்கம் 32) .

மேலும் அரசை பையபைய அணுகி சீர்திருத்தம் செய்துக் கொள்ள முடியும் என்போருக்கு லெனின் என்ன சொல்கிறார் பாருங்கள்.

"கம்யூனானது  முக்கியமாய் ஒரு விவரத்தை அதாவது ஏற்கனவே உள்ள அரசு பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டு விட முடியாது என்பதை நிரூபித்துக்  காட்டிற்று".

இந்த வாசகத்தில் ஒற்றை மேற்கோள் குறிப்பிட்டு காட்டப்படும் சொற்களை ஆசிரியர்கள் மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலிலிருந்து அப்படியே  எடுத்து கையாளுகின்றனர்.

இவ்வாறாக பாரிஸ் கம்யூனில் தலைமையானது அடிப்படைதுமான ஒரு படிப்பினையை கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய் புகுத்தும்படி அவ்வளவு பிரம்மாண்டமான  முக்கியத்துவம் உடையதாய் மார்க்சும் எங்கெல்சும் கருதினர் .

இந்த முக்கிய திருத்தம் சந்தர்ப்பவாதிகளால் திரித்துப் புரட்டப் பெற்றிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது . கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாசகர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு, ஏன் நூற்றில்  தொண்ணூற்று ஒன்பது பேருக்கும் கூட இதன் பொருள் அனேகமாக தெரிந்து இருக்காது எனலாம். இந்தப் புரட்டலைப் பிற்பாடு, புரட்டல்களுக்கென்றே  ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தனி அத்தியாயத்தில் நாம் பரிசீலிப்போம். 

மார்க்சியத்தின் புகழ்மிக்க வாக்கியத்திற்கு தற்போது சகஜமாய் அளிக்கப்படும் கொச்சையான வியாக்கியானத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறோம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மாறாய் மெதுவாய் பையப்பைய வளர்ச்சி காணும் கருத்தினை இங்கு  வலியுறுத்துகிறார் என்பதாய் விளக்கம் அளிக்கப்படுகிறது. 

ஆனால் இதற்கு நேர் எதிரானது உண்மை. " ஏற்கனவே உள்ள வர அரசு பொறியமைவைத்" தொழிலாளர்கள் கைப்பற்றுவதோடு மட்டும் நிற்காமல் அதை அழித்தொழித்திடவும் நொறுக்கவும் வேண்டும் என்பதே மார்க்ஸ் கூறும் கருத்து .(அரசும் புரட்சியும் நூலிலிருந்து பக்கம் 52-52).

வெறும் வாய் வீச்சிலும் வெறும் ஏமாற்றுப் பேர்வழிகளாக வாழும் பலர் புரட்சியாளர்களாக மக்கள் மத்தியில் ஏமாற்றுப் பேர்வழிகளாக இன்னும் வாழ்ந்து கொண்டு புரட்சியை காட்டிக் கொடுத்துக் கொண்டு ஆளும் வர்க்க கைக்கூலிகளாக வாழும் சமூகத்தில் சரியான புரட்சிகரமான பாதையில் பயணிக்கும் சிலர் தன்னை அறிந்தோ அறியாமலோ இடறிக் கொண்டு உள்ளனர்  இதுவரை நான் பல தோழர்களுடன் உரையாடி அதிகம் பல்வேறு விதமான தத்துவார்த்தப் போராட்டங்களையும் ஒன்றிணைத்து ஒரு எழுத்து வடிவமாக கொண்டு வந்து இங்கே காண விழைகின்றேன். 

அரசின் தோற்றம் வளர்ச்சி பற்றி ஒரு தேடுதல்

அரசியல் என்றாலே அந்த வார்த்தை எதோ ஒரு தவறான சொல்போலவும், அரசியல் பேசும் மனிதர்களெல்லாம் எதோ தவறான எண்ணத்தில் அனுகுவது போலவும் ஒரு சித்திரத்தை பரப்பியுள்ள சமூகத்தை என்னவென்று சொல்ல?

     அதாவாது மக்கள் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றம் பாராளுமன்றம் பற்றிபேசும் எல்லா அறிவு ஜீவிகளும் ஏனோ மக்களால் தேர்ந்தெடுக்கபடாத எப்பொழுதும் மக்களின் மீது ஆளுமை செய்யும் இராணுவம், நீதிமன்றம், நிர்வாகம் பற்றி தவறியும் வாய் திறப்பதில்லை!

யார் ஆட்சிக்கு வந்தாலும் தொடரும் இவர்கள் ஆளூமையே! அதனால் இதனின் அடிவேரை தேடி செல்வோமே!

அரசு எங்கின்ற இந்த ஏற்பாடு ( நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ் )ஏன் எதற்க்கு எப்போது தோன்றியது என்பதனை குறித்து அறிவோம்.

வரலாற்று பக்கம் தேடினால், மனித இனம் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன ஆனால் எழுத்து வடிவிலான வரலாறோ எழுதி சில ஆயிரம் வருடங்களே ஆகின்றன, மனிதன் முதன்முதலாக தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்த காட்டுமிராண்டிக்கு அரசு தேவைபடவில்லை தண்ணீரும் உணவும் தேடி குழுக்களாக கூட்டம் கூட்டமாக நடக்கதொடங்கிய ஆதிகால மனிதன் கூட்டாக வேட்டையாடி கூட்டமாக பகிர்ந்துண்டனர். அப்போது வேட்டையாடும் மிருகம் மற்றும் பழம் கிழங்கு ஒரே நாளில் தின்றுவிடவோ அல்லது அடுத்த நாள் தேவைக்கு சேமிக்கவோ தெரியாத அவர்கள் சமமாக பங்கிட்டுக் கொண்டனர், அங்கே தனி மனித வாழ்க்கையோ அல்லது தனி சொத்தோ பாதுகாக்கபடவில்லை அன்றோ எல்லாம் பொதுசொத்தாக இருந்தது எல்லோரும் சமமாக நடத்தபட்டனர் இதனை ஆதிகால பொதுவுடைமை சமூகம் என்பர்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேட்டையாடினர், பிரசவகாலங்களில் பெண்கள் குகையில் தங்க நேரிடும் அப்போது மரம் செடி கொடிகளை கவனித்து பயிரிட கற்று தேர்ந்த மக்கள் விவசாயம் செய்ய தொடங்கினர். குகையைவிட்டு காட்டை நோக்கி நடந்த மனித சமூகம் காட்டை அழித்து விவசாயம் செய்யவும் அவன் ஆடு மாடுகளையும் வளர்க்கவும் தெரிந்து கொண்டான். அவன் விளைசலின் தணியங்கள் பண்டங்களையும் சேமிக்க அதன் வழி அவையே “தனி சொத்தாகி” காட்டை வளைத்துப் போட்டு தனியுடைமையாக்குகிறான், இயற்க்கை கொடுத்த பொதுவுடமையை மனிதன் “தனியுடைமையாக்குகிறான்”. பொதுவுடைமை காலத்தில் எந்த மரத்திலும் கனிகாய்களை பறிக்கலாம் ஆனால் தனியுடைமை காலத்தில் சண்டையும் அடித்து கொள்ளவும் தொடங்கினர். சொத்துடையவன் சொத்தற்றவன் அதாவது உடைமையுள்ள ஒரு கூட்டம் உடைமை அற்ற பெரும் கூட்டம் உழைத்தால் மட்டும் வாழமுடியும் என்ற நிலை உருவானது.

இரண்டு நேர் எதிரான சமூக பிரிவு அதாவது காடுகளையெல்லாம் ஒரு சிலர் வளைத்து போட மற்றவர்கள் உழைத்து வாட ஏங்கும் நிலை உருவானது. சொத்துள்ளவன் உடைமை கூட்டத்தினன்(வர்க்கம்), உடைமையற்ற உழைப்பாளர்கள் உழைக்கும் வர்க்கம்(கூட்டம்). ஒருவர் மற்றவருடன் மோதல் உருவானது அதனை நிர்வகிக்க நிர்வாகம், சட்டம், நீதி என்ற அரசின் தூண்கள் தோண்றின...

இப்படியாக தனிசொத்து என்ற ஒன்று வந்த பிறகுதான் அதைப் பாதுகாப்பதற்க்காக நீதி, நிர்வாகம், இராணுவம்,போலிஸ், ஜெயில் எல்லாம் வந்தது, சொத்தை பாதுகாக்க அதாவது உள்ளவனை இல்லாதவனிடமிருந்து பாதுகாக்க உருவாக்க பட்டதே இராணுவம்,இதனை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் ”வர்க்கப்பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன் விளைவாய்த் தொன்றியதே அரசு-லெனின்”.

அரசு என்பது ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறைக் கருவி என்றார் லெனின்.

ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்களை வைத்திருந்தார்கள், தனியுடைமை (சொத்துடைமை) சமுகம் அரசை உருவாக்கி செய்த முதல்வேலை பொது மக்களிடமிருந்த ஆயுதங்களை பறித்ததுதான். பின்னர் இராணுவமும் போலிசும் சீருடை அணிவித்து தன் சேவைக்கு (உடைமையாளர்களின் பணிக்குதான் என்பதனை அறியாமலே எதிரிக்காக அடியாளாக பல்லாயிரம் இராணுவத்தினர் மடிந்து கொண்டுள்ளனர்) வைத்து கொண்டது.  

ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்க்கான உறுப்பே அரசு...

இப்பொழுது ஒட்டு சீட்டு அரசியலுக்கு வரலாம்,” டாட்டா, பிர்லா,அம்பானி,அதானி போன்ற பெரு முதலாளிகலுக்கும் ஒரு ஓட்டுதான், உழைத்தால்தான் உணவு என்று வாழ்கின்ற உழைப்பாளிக்கும் ஒரு ஓட்டுதான், இதனால் இருவரும் சமம் ஆகிவிடுமா?”, இதை ஜனநாயக நாடு எனலாமா? அல்லது பணநாயகமா? அதாவது முதலாளிகளுக்கான ஜனநாயகம்!

இதை வேரு வார்த்தையில் சொன்னால்,” 1947ல் ஆங்கிலேயர் கையிலிருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 200 கோடிக்கு அதிபதியாய் இருந்த பெரும் முதலாளி கூட்டம் இன்றோ பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் மறுபக்கம் இரண்டு வேலை உணவுகூட இல்லாமல் வாடும் கூட்டம்”. இதனை புரியும் படி சொன்னால், அந்த பெரு முதலாளிகளின் தேவைக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கு நீதி மற்றும் இராணுவம் நெகிழ்ந்து போகவும், மொத்த மக்களின் உழைப்பை அந்த முதலாளிகளுக்கு காணிக்கையாக்கதான் அரசின் மொத்த இயந்திரமும் இயங்கி கொண்டுள்ளது”.

இப்பொழுது அமெரிக்க அடிமையாகி கொண்டிருக்கும் நடுவண் அரசு, ஊடகங்கள் ஊமைகளாகிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையை அறிவதே அரிதாய் உள்ள நிலையில். அரசின் அடிமட்டத்தை அசைக்காமல் மேலேறிக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

எந்த அரசு முதலாளிகளின் தேவையை முன்னிருத்துகின்றதோ?

எந்த அரசு ஏகாதியபத்தியத்தை முன்னிருத்துகின்றதோ?

எந்த அரசு மக்கள் நலன் இன்றி முதலாளிகளின் சிறுபான்மையினரின் உயர்வை தூக்கிபிடிக்கிறதோ?

அவை எல்லா மக்களின் அரசாக இருக்க முடியாது, இவற்றை அடியோடு மாற்றினால் மட்டுமே மக்களுக்கான விடிவுகாலம் வரும்!!!!

இதனை நான் மேம்போக்காக எழுதியுள்ளேன்... பாராளுமன்றம், சட்டமன்றம் அதனை பற்றி விரிவாக பின்னர் தொடர்வேன். 

இன்னொருபுறத்தில்

இதே காலத்தில்தான் கிறிஸ்துவம் தன் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் வலியுறுத்தி வந்தது மன்னன் கலாச்சார அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக உருவாக்கப்பட்ட ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை வலிமை வாய்ந்ததாக இருந்தது அது மதத்தின் பெயரால் அரசன் மேல் செல்வாக்கு செலுத்தி அவனை கட்டுப்படுத்துவதோடு மட்டற்ற அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நாடிற்று இதன் விளைவாக திருச்சபை அரசன் இடையே முரண்பாடு தோன்றிற்று.

குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் திருச்சபையின் கட்டுப்பாட்டை குடிமக்களே தகத்தெரிய வேண்டும் அவர்களே அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் தேவை எழுந்தது. இவ்வாறு  மதசார்பற்ற அரசர்கள் முழுமையான அதிகாரம் பெற வேண்டுமானால் தனி அடையாளம் முழுவதுமாக வேண்டும் என்று உணர்ந்து திருச்சபையும் அதன் அதிகாரத்தை தகர்த்தெரிந்து திருச்சபைக்கு பதிலாக மக்கள் தம்மால் அச்சம் கொண்டு அடங்கி நடக்க வேண்டிய கடமை என்றாயிற்று எனவே அரசு பற்றி அறிவதற்கு ஆர்வம் பிறந்தது .

மார்க்சிய மூலவர்கள் எடுத்த முடிவுகளுக்கு அவர்களே மாற்றம் கண்டுள்ளனர் 1848 இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டது 1872 இல் அறிக்கைக்கு எழுதிய முன்னுரையின் சில விவரங்கள் இந்த வேலைத்திட்டம் காலங்கடந்து விட்டன என்பது விளங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்,இன்னொன்றும் காண்போம் ஏகாதிபத்திய சகாப்தத்துக்கு முந்தைய முதலாளித்துவ உலகில் வாழ்ந்த எங்கெல்ஸ் ஒரு நாட்டில் மட்டும் சோஷலிசப் புரட்சி சாத்தியமா என்பதற்க்கு இல்லை என மறுத்துள்ளார், 

ஆனால் ஏகாதிபத்திய சகாப்தத்தில் சில நிலைக்கு உட்பட்டு இவ்வாறு ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் என லெனின்  நடைமுறை ஆக்கினார் இவை இரண்டும் முடிவுகளில் ஏற்பட்ட மாற்றங்களாகும்,

அந்த மாற்றங்கள் மார்க்சிய அடிப்படையில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் வழிநின்று புரட்சிகர நடைமுறை அனுபவங்களைக் கொண்டு எடுக்கப்படும் மாற்றங்களாகும், மார்க்சிய பூர்வமாக இருக்க வேண்டும், இதுவன்றி கருத்து முதல்வாத கண்ணோட்டத்தின் வழி நின்று  எடுக்கப்படும் மாற்றங்கள் மார்க்சிய மாற்றங்கள் ஆகாது ,

மார்க்சியமானது விஞ்ஞானபூர்வமான மாற்றங்களும் அவை குறித்த தேடல்களும் உண்டு தேடலே இல்லை வளர்ச்சியை இல்லை என்பது மார்க்சியத்திற்க்கு உடன்பாடு இல்லை அவை விஞ்ஞானபூர்வமான வளர்ச்சியோடு வளரும் தன்மை கொண்டது .

ஆக புரட்சியானது ரஷ்யாவை போன்றதே உலக நாடுகள் எல்லாவற்றிலும் நடைபெற வேண்டும் என்பதும் சீனாவில் நடந்தது புரட்சி அல்ல என்பதும் அப்படியில் மார்க்சியத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளலாமையே என்பேன் ஏனென்றால் ரஷ்யாவில் ஒருபுறம் பின்தங்கிய விவசாய பகுதியான ஆசியப் பகுதியில் இன்னொரு ஐரோப்பிய சார்ந்த தொழில் வளர்ச்சியான பகுதியையும் லெனின் தன்னுடைய நூல்" சமூக ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த் தந்திரங்களில் " சுட்டிக் காட்டியிருப்பார்.

இதைப்போல் தன்னுடைய நாட்டின் சரியான பொருத்தமான முறையில் மாவோ கணித்து சீனப்புரட்சி கையிலெடுத்த அங்கு பின்தங்கிய விவசாய முறையில் பல்வேறு விதமான குறு மன்னர்கள் நிலப்பரப்புகள் ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறிந்து அந்நாட்டில் புரட்சிக்கான வழி முறையை கண்டறிந்தார், அங்கே ஒரு வளர்ந்த பாராளுமன்றமும் தொழில் துறையை இல்லாமையால் அவை புரட்சியை இல்லை என்பது தவறானது ஆகும்,

அப்படியெனில்  வியட்நாம் மற்றும் தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் எவ்வகையான புரட்சி அதை தன்னுடைய தேசிய விடுதலைக்கான புரட்சி அல்லவோ அதேபோல் சில நாடுகளில் காலனி ஒடுக்கு முறையில் ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறிந்த Cuba போன்ற புரட்சி சோசலிச புரட்சி அல்ல சோசலிசதிற்க்கு முந்தைய புரட்சியே அவை சோசலிசத்திற்கு வழி வகுத்தது.

சில மார்க்சிய விரோதிகள் சொல்கின்றனர்

விஞ்ஞானிகள் விஞ்ஞானத்தை திரித்து அல்லது தன் வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொண்டு அதில் தோல்வியுற்ற பின் இது விஞ்ஞானம் இல்லை என்பதும் இந்த விஞ்ஞானம் வெற்றி பெறாது என்பது தவறாகும். விஞ்ஞானிகள் விஞ்ஞானிகளாக இருக்க வேண்டும் அஞ்ஞானிகளாக மாறிவிடக்கூடாது.

 அறிவியலின் அடிக்கல்லை மட்டுமே மார்க்சியம் அமைத்துக் கொடுத்தது, பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே அளித்துள்ளது -லெனின்.

இதனை இரண்டு விதமான கோட்பாடுகள் ரீதியாக பேசுவோம்.

 1).  பொருள்முதல்வாத கண்ணோட்டம்

 2). கருத்து முதல்வாத கண்ணோட்டம்

பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் வழிநின்று புரட்சிகர நடைமுறையால் பெறப்பட்ட அனுபவங்களையும் கருத்துகளையும் கொண்டு மார்க்சியத்தின் மீது கொண்டுவரப்படும் மாற்றங்கள் மார்க்ச்சிய நெறிப்பட்டவையாகும். மார்க்சிய முறையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும் இது பொருள்முதல்வாத கண்ணோட்டமாகும்.  

கருத்து முதல்வாத கண்ணோட்டத்தில் மார்க்சிய முறையிலை அணுகி அதன் அடிப்படை அம்சங்களை திரித்தல் என்பது மார்க்சிய எதிரான  மாற்றங்கள் ஆகும் இவை கருத்துமுதல்வாதமே.

மேல்தளம் அடித்தளம் என்பவை மார்க்சிய கருத்தாக்கங்கள் ஆகும் மேல் தளத்து அம்சங்கள் அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்டு அதை பாதிக்கின்றன என்பது மார்க்சியம் ஆகும். 

இதை தான் நவ மார்க்ச்சியம் என்றும் புதிய இடதுகள் என்றும் மார்க்சியத்தை கருத்து முதல்வாத கண்ணோட்டத்தில் மாற்ற முயலும் ஒன்றாக இருப்பதை நாம் காண்கிறோம். 

இப்பொழுது பலர்மார்க்சியத்தை இவர்களின் பிராங்க்பர்ட் பள்ளியின் கருத்துக்களோடு சேர்த்தே பேசுகின்றனர் பிராங்க்பர்ட் பள்ளியின் நோக்கமே மார்க்சியத்தை மடை மாற்றுவதுதான். 

1952 அக் 5 ல் சோவித் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது காங்கிரஸ் மாஸ்கோவில் கூடியது இதுவே ஸ்டாலின் கலந்து கொண்ட கடைசி காங்கிரஸ் இந்த காங்கிரஸில் ஸ்டாலின் எழுதிய சோவியத் யூனியனில் பொருளாதார பிரச்சினைகள் என்ற நூலும் மத்திய குழுவின் வேலை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது, அந்த அறிக்கையானது கீழே,

சித்தாந்தப் பிரச்சினையில் மீதான கவனம் எப்பொழுது எல்லாம் தீர்ந்து போகிறதோ அப்போதெல்லாம் நமக்கு எதிராக உள்ளவர்களின் கருத்துக்களும் சிந்தனைகளும் புத்துயிர் பெறுவதற்கு சாதகமாக தளம் உருவாக்கப்படுகிறது, ஏதாவது ஒரு காரணத்துக்காக கட்சி அமைப்புகளின் எல்லை சுருங்கி சித்தாந்த பணிகளில் பிரிவுகளில் கட்சித் தலைமை குணமும் செல்வாக்கும் தொள தொளத்து போனால் நமது சக்திகள் கட்சியில் ஒதுக்கி தள்ளப்பட்டு மிச்சமிருக்கும் உள்ள எதிர்ப்பு குழுக்கள் இந்த  பிரிவுகளை கைப்பற்றவும் தங்கள் சொந்த திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கும் இவர்களை பயன்படுத்தவும் முயற்சி செய்வார்கள், மார்க்கத்திற்கு எதிரான கருத்துக்களையும் கோட்பாடுகளையும் இவர்கள் பரப்பி விடுவார்கள், நமது முன்னணி ஊழியர்கள் கணிசமானோர் தங்கள் சொந்த அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவில்லை எனில், மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவில்லை எனில், கட்சியின் வரலாற்று அனுபவத்தின் மூலமாக தங்களின் அனுபவ அறிவை வளர்த்துக் கொள்ள வில்லை எனில், சித்தாந்த அரசியல் வளர்ச்சியில் யார் யாரெல்லாம் பின்தங்கி இருக்கிறார்களோ உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களை புரிந்துகொள்ளும் திறன் அற்றவர்களாக இருக்கிறார்கள் இயக்கத்தின் முன் வரிசையில் இருக்க தகுதியற்றவர்களாக  ஆகிவிடுகிறார்கள், குறைந்தோ அல்லது சற்று தாமதித்து வாழ்க்கையின் எதார்த்தம் அவர்களை குப்பையில் எறிந்து விடும். 

இன்றைய உலக சூழலில் அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் புதிய காலணிமுறையை மேலும் தீவிரப்படுத்தி இதற்கான ஒடுக்குமுறை போர்களும் வரலாறு காணாத கொள்ளையும் நடைபெறுகிறது. ஆனால் இதை எதிர்த்து சவால் விடுவதற்கு உலகில் எங்கும் கம்யூனிஸ - சோசலிச நாடுகளை இல்லை கம்யூனிஸ்ட் சக்திகளும் இல்லை ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவுண்டும் பலமற்றும், தேசிய வெறிகளுக்கு ஆட்பட்டும், பல்வேறு  போக்குகளுக்கும் ஆட்பட்டு உள்ளது. இந்நிலையிலும் ஏகாதியபத்திய பிற்போக்குத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் உள்ளது .

இன்றைய உலகமய தாராளமய கொள்கையை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது இதற்கு எந்த சிறு தடங்கலுமின்றி நாடுமுழுவதும் அந்நிய மூலதனம் வெள்ளம் போல் பாய்ந்து வருகிறது. இவற்றை முறியடிக்க ஒரு தலைமை தாங்கி புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது எதிர்கொள்ளும் திறன் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியோ இங்கே இல்லை என்பது  உண்மை அல்லவா?

 இங்குள்ள ஒவ்வொரு கம்யூனிஸ்ட் குழுக்களும் பாட்டாளி வர்க்கத்தின் உழைக்கும் மக்களின் வெவ்வேறு கொள்கை முழக்கத்தின் பால் வழி நடத்தி வருகிறது இது பாட்டாளி வர்க்கத்தின் பலவீனத்தையும் இதன் எதிர்மறையாக பிற்போக்காளர்களுக்கு பலத்தையும் அளிக்கக்கூடியது அன்றோ?

எந்த ஒரு புரட்சிகர குழுவும் தன்னந்தனியே செயல்பட்டு இந்திய ஏதேசதிகாரத்தை வீழ்த்த முடியாது என்பது தங்கள் அனுபவத்தில் இருந்து எல்லாம் மார்க்சிய குழுக்களும் கோட்பாடுகளில் இருந்து புரிந்து கொண்டுதான் இருக்கும் .

கம்யூனிஸ்டுகள் மக்களிடம் வேரூன்றி அவர்களே அரசியல் படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் மாபெரும் புரட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதை எல்லா பொதுவுடமை இயக்கங்கள் ஒப்புக் கொள்கின்றனர் ஆனால் திருத்தல்வாதிகளாகி ஆகிப்போன இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(CPI, CPM) மக்களி டையே பணியாற்றுவது என்ற பெயரால் உழைக்கும் மக்களை அணிதிரட்டி உடனடி பொருளாதார கோரிக்கைகளுடன் வரம்பிற்குட் பட்ட அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் புரட்சிகரப் போராட்டங்களை புறக்கணித்து  அதற்கேற்ப ஓட்டுப் பொறுக்கும் பிழைப்பு வாதத்தையே தமது நடைமுறையை மாற்றிக் கொண்டனர்.

திருத்தல் வாதத்தை தனது புரட்சியாக கையிலெடுத்த சிபிஅய், சிபிஎம் அதனை  புறக்கணித்த புரட்சி யின் இலக்கான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை தூக்கிப பிடித்த புரட்சியாளர்கள் இன்று  இடது வலது சந்தர்ப்பவாத போக்கில் இன்று மாலெ அமைப்புகளின் தோல்விகளும் தேக்கமும்  பின்னடைவும் பல்வேறு கேள்விகளை உள்ளடக்குகின்றன அவர்களை  தேடியே நமது பயணமாக இருக்கும் மேலும் இன்றைய நிலையில்,மக்கள் என்னும் கடலில் மீன்களாக நீந்தி வரும் கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கு ம் புரட்சிகர அணிகளுக்கும் மக்களிடையே ஆற்றவேண்டிய புரட்சிப் பணிகளைப் பற்றி ஒருங்கிணைந்த கண்ணோட்டம் புரிதலையும் உருவாக்குவதே நமது கடமையாக இருக்கின்றது, முயல்வோம்.

மார்க்சியவாதிகள் இயக்க இயல் பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தை தங்கள் அணிகளுக்கு  மட்டுமன்றி  பரந்துபட்ட திரளான மக்களுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும். உழைக்கின்ற  பெரும் திரள்  மக்கள் இந்தக் கண்ணோட்டத்தை பற்றிக்கொண்டு முதலாளித்துவ கண்ணோட்டத்தை (திரிப்புவாதிகளையும்) நிராகரிக்காத வரையில், எதிரியை தோற்கடிப்பது என்பது அசாத்தியமாகும்.

அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடே சமுதாயத்தை உந்தி முன்தள்ளி செல்வதற்கு தலையாய காரணமாகும். இம்முரண்பாட்டுத் தீர்வே ஒரு புதிய சமுதாயம் எழ வழிவகுக்கிறது.இம் முரண்பாட்டின் பிரதான அம்சம் உற்பத்தி சக்திகள் ஆகும் .

இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி இருப்பதான் இந்திய சமுதாயத்தை பின் தங்கிய நிலையிலே வைத்திருக்கிறது.  பிற்போக்கு சக்திகளின் தளைகளில் இருந்து உற்பத்தி சக்திகள் விடுபடும் பொழுது ஒரு புதிய சமுதாயம் உருவாகிறது. அப்படி என்றால் இந்த உற்பத்தி சக்திகளில் தலையாய மற்றும் பிரதானபிறக்கிறது.

அது பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் உள்ள உழைப்பே அன்றி வேறல்ல எனவே மக்கள் திரள் அதாவது உழைக்கும் மக்கள் பின்தங்கிய உற்பத்தி உறவுகளின் தளைகளில் இருந்து விடுபட்ட உடன் புதிய உற்பத்தி உறவுகளை கொண்ட ஒரு முற்போக்கான புதிய சமுதாயம் பிறக்கிறது.

"பொருள்களின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம் அப்பொருளுக்கு வெளியே இல்லை; ஆனால், அவற்றிற்குள்ளேயே அவற்றின் உள் முரண்பாடுகளிலேயே உள்ளது" என்று இயற்கை இயல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

மூலதனத்துடனான உழைப்பின் மோதல், அவை இரண்டுக்கும் இடையிலான கடுமையான போராட்டத்தின் மூலம் தான் தீர்க்கப்படுகிறதே ஒழிய அவற்றிற்கு வெளியில் உள்ள சக்தியால் அல்ல.

மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் - அதாவது அரசு எந்திரத்தைத் தலையாய அங்கமாகக் கொண்டிருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின்  பலத்தில் - அடங்கியுள்ளது. அதுபோலவே, உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே -அதாவது பாட்டாளி வர்க்கக் கட்சியைத் தலையாய அங்கமாக கொண்டுள்ள அதன் ஒட்டு மொத்த அமைப்பின் பலத்தில்- அடங்கியுள்ளது.  

ஆனால், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், உழைப்பாளரில் ஒரு பகுதியினரைக் கொண்டதே பொதுவுடைமைக் கட்சி. எனவே சமூதாயத்தை மாற்ற புரட்சி நடத்துவது என்பது கட்சி மட்டுமே செய்ய கூடியது அல்ல;

உழைப்பாளர் அனைவரும் ஒட்டுமொத்தமாக செய்வதாகும்; பொதுவுடமைக் கட்சி புரட்சிக்கு சித்தாந்த தலைமை அளிக்கிறது. ஆனால், அது தனது சொந்த பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது ஒருபோதும் முடியாது. எனவே பொதுவுடமைக் கட்சி என்ற தேர் ஆனது மக்கள் திரள் என்ற 

 அச்சாணியை உறுதியாக கொண்டிருக்க வேண்டும் . ஒரு பொதுவுடமை கட்சி அல்லது மார்க்சிய குழு பரந்துபட்ட மக்களின் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு பணியாற்றுமானால் அது அச்சாணி அற்ற தேர் போன்றதாகும் , அதன் இதர பகுதிகள் எவ்வளவு அழகாக மிகச் சரியாக இருந்தாலும் உண்மையான பொருளில் அது தேர் ஆகாது. அதாவது,  பரந்துபட்ட மக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்பட்ட ஒரு கட்சி பொதுவுடமைக் கட்சியே அல்ல.

"ஒரு தத்துவம் மக்களால் பற்றி கொள்ளப்பட்டு விட்டால் அது ஒரு பௌதிக சக்தியாகி விடுகிறது"என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிலாளி வர்க்க சித்தாந்த்தால் மக்கள் திரளை ஆயுதபாணியாக்கும் இக் கடமைதான் எந்த ஒரு  நேர்மையான பொதுவுடமைக் கட்சியும் மேற்கொள்ள வேண்டிய கடமை ஆகும்.  பரந்துபட்ட மக்கள் தமக்குச் சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொண்டு அதன்படி நடக்க துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சு கிருமிகளையும் சீறி எழுந்து ஒரே அடியாக அழித்தொழிப்பர். கட்சி மக்களிடம் இருந்து பிரிந்து தனிமைப் பட்டிருந்தால் இது சாத்தியமில்லை.

ஏனெனில் மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொள்ள முடியாது. மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலன்களைப் பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பாக திரட்டுவதும் ஆன இந்த இமாலயப் பணியையே நாம் மக்களிடையேயான பணி என்கிறோம்.

மக்களிடையேயான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டப்பட்ட பின் சில நடைமுறைப் பிரச்சினைகளை எழுகின்றன. அவையாவன:

(1). மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?

(2). மக்களிடம் ஒரு கம்யூனிஸ்ட் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்கவேண்டும்?.

(3). மக்களை பயிற்றுவிப்பதிலும் அமைப்பாகத் திரட்டுவதிலும் என்ன முறைகள் கையாளப்பட வேண்டும்?.

மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?

பொதுவாக மக்கள் என்று நாம் குறிப்பிடும் போது உற்பத்தியில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் அடிப்படை வர்கங்களையே அதாவது தொழிலாளர்கள் விவசாயிகளை யே குறிப்பிடுகின்றோம். எனவே,

இவ்வர்கங்கள் மத்தியிலேதான் மக்களிடையேன பணி அடிப்படையாகச் செய்யப்படவேண்டும் இருந்த போதிலும் இன்றைய புரட்சி கட்டம் புதிய ஜனநாயகப் புரட்சி கட்டமாகதனால் புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுக்க ஆதரிக்கின்ற அதற்காக வேலை செய்ய முன் வருகின்ற எந்த ஒரு சமூக தட்டு அல்லது குழுவும் மக்கள் என்ற பிரிவில் அடங்குவர் என கவனிக்கத்தக்கது.

அடுத்து எழும் கேள்வி என்னவெனில் மக்களின் எந்த பிரிவினரிடையே வேலை செய்வது மிக முக்கியம் இப்பிரச்சினை வேறு எந்த பிரச்சினை போலவே இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து நோக்க வேண்டுமே ஒழிய நெகிழ்வற்ற வறட்டுத்தனமான ஒரு பக்க கண்ணோட்டத்துடன் நோக்கக்கூடாது.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடையே பணியாற்றுவது முதன்மையானது என்பதை கோட்பாட்டு ரீதியாக சரியானது என்று கூற வேண்டியதில்லை ஆனால் உடனடி நடைமுறை என்ற கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் பொழுது குறிப்பிட்ட நிலைமைகளில் பொருத்துமாறு வேலை செய்ய வேண்டும் அப்படி அல்லாமல் நெகிழ்வட்டு ஒருபக்க அணுகு முறையை கைக் கொண்டால் எல்லா வேலைகளுக்கும் கிராமப்புறங்களில் தான் விவசாயிகளை பிரதான சக்தி என்பதாக அல்லது எல்லா வேலைகளையும் தொழில்துறை பாட்டாளிகள் தான் முன்னணி சக்தி அதுதான் என்பதாக தவறான முடிவுகளுக்கு கொண்டு செல்லலாம் இதுபோன்ற ஒரு பக்கப் பார்வை நெகிழ்வுப் போக்கு மிகவும் ஊறு விளைவிக்கும்

உடனடியான நடைமுறையை கணக்கில் எடுத்து நோக்கும் போது ஒரு பகுதிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பது மற்ற பகுதிக்கும் பொறுமை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் எந்தப் பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுக்கும் முன்னர் ஒவ்வொரு அம்சமும் அதற்குத் தொடர்புடைய மற்ற அம்சங்களையும் மிக ஆழமாக பரிசீலிக்க வேண்டும் ஒன்று அல்லது இரண்டு பொதுவான முக்கிய அம்சங்களை பரிசளித்துவிட்டு கொள்ளக் கூடாது

ஆரம்பக் கட்டங்களில் அதாவது நாடுகளில் அளவில் இல்லாது இருக்கிற மாற்றுக் குழுக்களை மட்டுமே கொண்டிருக்கிற நன்கு வளர்ச்சி பெற்ற மக்கள் திரள் இயக்கங்களை குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கொண்டிருக்கிற ஆரம்ப கட்டங்களில் ஒரு விஷயம் நாம் தீர்மானகரமான சொல்லலாம் தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் நமக்கு மிகவும் பரிச்சயமான மற்றும் திறம்பட பணியாற்ற கூடிய துறைகளில் பணியாற்ற வேண்டும் அவ்வாறு இன்றி ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இயந்திர ரீதியில் எடுத்து பொருத்தக் கூடாது.

மக்களிடையே ஒரு கம்யூனிஸ்ட் கடைபிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்க வேண்டும்?

ஏற்கனவே குறிப்பிட்டது போல, மக்கள் தான் புரட்சியைக் கொண்டு வருகிறார்கள். கோடிக்கணக்கான இந்தப் பரந்துபட்ட மக்கள் தான் புரட்சியை விசுவாசமாக ஆதரித்து அதற்காகப் பணிபுரிவார்கள். தோழர் மாவோ குறிப்பிடுவது போல் "மக்கள் தான் உண்மையான இரும்புக்கோட்டை , இதை உலகில் எந்த சக்தியாலும் தவிர்ப்பது சாத்தியமாகாது".

ஆனால் இந்த இரும்புக் கோட்டையை உருவாக்கும் இரும்பு கற்கள் தனித்தனியாகவும் ஒன்று சேர்க்கப்பட்டு பூசப்படும் படாமலும் உள்ளது. இந்த இரும்பு கற்களை அடுக்கி பூசி உலகிலுள்ள எந்த சக்தியாலும் மறுக்கப்பட முடியாத அளவிற்கு ஒரு சக்திவாய்ந்த இரும்புக் கோட்டையாக நிறுவவேண்டும்.

இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க கடமையை மேற்கொள்வதுதான் கம்யூனிஸ்டுகளின் முக்கிய பணி. ஆனால் இந்தப் பணியை கம்யூனிஸ்டுகள் எவ்வாறு ஏற்று நடத்துவது மக்களிடம் எவ்விதமான அணுகுமுறையை கொண்டு கம்யூனிஸ்டுகள் இந்த பணிகளை நிறைவேற்றுவது மக்களிடம் இவர்களை முந்திச் செல்லும் உஉள்ளுணர்வு விருப்பமும் எண்ணமாக இருக்க வேண்டும்?.

வெறும் தலைவர்களாக வேண்டும் என்ற ஆசையுடன் மக்களிடம் செல்வதா இல்லை அவர்கள் மக்களிடையே மார்க்சியவாதிகள் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செல்ல வேண்டுமா இல்லை அல்லது மக்களை அவர்களது தொழில்களிலும் சங்கங்களிலும் முன்னணி கட்டும் நோக்கத்தோடு செல்வதாக இல்லை கம்யூனிஸ்டுகளும் மக்களிடையே செல்வதற்கான ஒரே நோக்கம் உந்து சக்தியும் அவர்களுக்கு உளமார தொண்டு செய்வதுமே ஆகும்.

மக்களுக்குத் தொண்டு செய்வதன் பொருள் அவர்களுக்கு பரோபகாரியாக இருப்பதல்ல; மாறாக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களில் கம்யூனிஸ்டுகள் முழுமையிலும் பொருந்திய ஒரு பகுதியினராவர், உண்மையாக நன்மை கிடைக்கும் வகையில் பணியாற்றுவதாகும். மக்களின் நலனுக்காக விசுவாசமாக பாடுபடுவது என்பதன் பொருள் உண்மையில் மக்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களுக்கு பயிற்றுவிப்பது பயிற்சி அளிப்பதும் அவர்களை அமைப்பாகத் திரட்டுவது மேயாமேதாவி

திமிரான போக்கு கம்யூனிஸ்டுகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடும் பணிவான போக்கு பெரும் மதிப்பை தேடித்தரும் . மக்களிடம் கம்யூனிஸ்டுகள் அதி மேதாவி

‌போக்கை கடைபிடிக்கக் கூடாது மக்கள் கலந்து ஆலோசித்து எந்த நடவடிக்கையும் செயலையும் செய்யவேண்டும் கம்யூனிஸ்டுகள் அரசியல் அறிவில் ஏகபோகமாக முற்படாமல் மக்களுக்கு தொடர்ந்து பயிற்றுவித்து அவர்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்க முயலவேண்டும் மக்கள் முன் முழுக்கவும் வெளிப்படையாக திறந்த மனதுடனும் அடக்கத்துடனும் தவறுகளை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் உத்தரவிடும் போக்குகள் எப்போதும் தவிர்க்க வேண்டும் எல்லா கருத்துக்களையும் அதை முற்போக்காக இருந்தாலும் பிற்போக்காக இருந்தாலும் சுதந்திரமாக பேச அனுமதிக்க வேண்டும் அப்போதுதான் எது சரி எது பிழை என்பதை எடுத்துக் கூறி மக்களை ஒப்புக்கொள்ள செய்ய முடியும்.

‌எதார்த்த நோக்கில் மக்கள் அனைவரின் உணர்வு மட்டமும் சீராக ஒன்று போல் இருக்கும் என்று கருதுவது சரியானது அல்ல மாவோ கூறியுள்ளதாவது "குறிப்பிட்ட எந்த இடத்துப் பொது மக்கள் மத்தியிலும் ஒப்பீட்டு வகையில் ஊக்கமானவர்கள் நடுநிலையாளர்கள், ஒப்பீட்டளவில் பின்தங்கியவர்கள் என்ற மூன்று பிரிவினர் இருப்பர். எனவே தலைவர்கள் சிறிய தொகையினராக உள்ள ஊக்க மானவர்களை தலைமையைச் சூழ அய்க்கிய படுத்தி அவர்களை முதுகெலும்பாக கொண்டு நடுநிலையாளர்களின் தரத்தை உயர்த்தி பின் தங்கியவர்கள் வென்றெடுப்பதில் தேர்ச்சி பெற வேண்டும்.

‌நடைமுறையில் நிகழக்கூடியது என்னவெனில் தோழர்கள் முன்னேறிய சக்திகளின் மீது மட்டும் கவனத்தை செலுத்துவது மற்றவர்களை பற்றி மறந்து விடுவதும் ஆகும் இது சரியல்ல மற்றவர்களை உணர வைப்பதுதான் மிகவும் கடினமானதும் சிக்கலானதும் ஆகும் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைவரது மத்தியிலும் பிரசாரம் மற்றும் கிளர்ச்சியை நடத்துவதும் அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதும் அவசியம் மக்களை எப்போதும் பிளவு படுத்தாதீர் அய்க்கிப்படுத்துவீராக.



இன்னும் பின்.......

2 comments:

  1. தோழர் நேர்த்தியான கட்டுரை. ஸ்டாலின் சித்தாந்தக் கல்வியில் தளர்ச்சியடைவே கூடாது என்பதை மேற்கோள் காட்டியது சிறப்பு. ஒரு முன்வைப்பு தத்துவக்கல்வியைப் பரவலாக்கும் செயல்திட்டத்தின் ஊடாகவே இன்றைய அரசியல் களத்தில் வெடித்து எரிகிற பிரச்சினைகளை எப்படிப் பாரர்க்கவும் எதிர்வினையாற்றவும் வேண்டுமென்ற நடைமுறைக் கேள்விகளை முன்வைத்து விவாதம் தொடங்கலாம். தொகுத்து இலக்கில் கட்டுரையாக வெளியிடலாம். சித்தாந்தக் கோட்பாடுகளை நடைமுறை அரசியலுக்குஎப்படிப் பொருத்திப்பார்ப்பது என்பதே முக்கியமான பணியாக இருக்கிறது என்பது என் கருத்து. புரட்சிகர வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் உங்களின் கருத்திற்க்கு

      Delete

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...