நான் ஏன் எழுதுகிறேன்? யாருககாக எழுதுகிறேன்: -இன்குலாப்

 

‘மூட நம்பிக்கைகளை புனிதமான வேதங்கள் மூடி மறைப்பதுபோல” சமூகக் கொடுமைகள் சட்டங்களால் மூடிமறைக்கப்படுகின்றன, மானு டத்தின் காயங்களை மறந்து என்னால் மலர்களை ரசிக்க முடியாது. கந்தல் துணியால் உடலை மூடுபவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு என்னால் நட்சத்திரப் பூவேலை செய்த வானத்தைப் போர்த்திக் கொள்ள இயலாது. பூமியின் துயரங்களிலிருந்து ஒடி நான் தொடுவானத்தில் அடைக்கலம் புக விரும்புவதில்லை. ஒடுக்கப்பட்ட எல்லா உதடுகளுக்கும் ஒரு புன்னகையை உத்தரவாதம் செய்யாமல், எனது உதடுகளுக்கு மட்டும் ஒரு சிரிப்பைத் தேடவும் நான் தயாராக இல்லை.
சுயநலவாதிகளால் நிலை நிறுத்தப்பட்ட கொடுமைகளை எதிர்த்தே நான் ஒரு கலைப்போராட்டத்தை நடத்துகிறேன். இந்தக் கொடுமைகளை எதிர்ப்பவர்களை எல்லாம் என் கலையால் கவுரவிக்க விரும்பு கிறேன். அவர்களால் நான் உணர்வு பெறுவதுபோலவே அவர்களுக்கும் நான் உணர்வூட்ட விரும்புகிறேன். இதில் நான்மட்டும் தனித்து நிற்க வில்லை; இன்று எழுதும் பெரும்பாலான கவிஞர்களும் இருக்கிற நிலை மைகளோடு மோதுகிறார்கள் என்பதே எனக்குத் தென்பூட்டுகிறது.
சுரண்டலும் சுயநலமும் அடக்குமுறையும் அன்றாட நியதியாகி விட்ட இந்தச் சமூகத்தில் போராடுவதும் போராடத் தூண்டுவதுமே என் தலையாய கடமை. சுரண்டப்படுபவர்களும், ஒடுக்கப்படுபவர் களும் இந்தச் கமூகத்தில் அமைதியாக இருக்க முடியாது என்பதனால் நானும் எனது பேணாவாலும் கையாலும் கலகம் செய்வதையே சரி என்று கருதுகிறேன்- இது நான் ஏன் எழுதுகிறேன் என்பதற்கான விளக்கம்,
கிஞ்சித்தும் மனித நியாயமற்ற இந்தச் சமூக அமைப்பை நியாயப் படுத்தி இதனால் லாபம் பெறுபவர்கள் எல்லாம் என் எதிரிகள். நான் நண்பர்களுக்காகவும் எழுதுகிறேன்; எதிரிகளுக்காகவும் எழுதுகிறேன். தோழர்கள் முகத்தில் பன்னீர் தெளிக்கிறேன். எதிரிகள் மூஞ்சியில்
காரித்துப்புகிறேன். எல்லாரையும் என்னுடைய எழுத்துக்களால் திருப்திப்படுத்த முடியாது. என்னுடைய தோழர்களின் செவியில் எனது குரல் விழாமல் போனாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் எதிரிகளுக்கு ஒரு கைதட்டுக்கூட என்னிடமிருந்து கிளம்பாது. இது நான் யாருக்காக எழுதுகிறேன் என்பதற்கான பதில்.
இப்படி ஓர் போர்க்குணத்தையே நான் கலையாக்க முயலுகிறேன். ஒடுக்கப்பட்டவர்களின் துயரத்தையும் போராட்டத்தையும் பாடுபொருளாகக் கொண்டு இசைப்பதனுல்மட்டுமே நான் படைப்பது கவிதை யாகிவிடும் என்று கருதவில்லை. கவிதைக்குக் கலை நியாயத்தை வழங்க விரும்புகிறேன். -
படிப்பறையில் தனிமையாக உட்கார்ந்து சுவைப்பதற்காக எழுதப படுவதுமட்டுமே கலை நயமிக்க கவிதை என்றால் என்னல் அப்படிப்பட்ட கவிதையை இயற்ற முடியாது. அதுதான் உண்மையான கலைவடிவம் என்பதை ஏற்கவும் இயலாது.
ஒன்றுபட்டுப்பாட ஒசைநயம் வேண்டும்; உணர்வில் கிளர்ச்சி செய்ய காட்சிகள் வேண்டும். எனவே எனது பாடல்களில் இசையையும் ஓவியத்தையும் இணைக்க விரும்புகிறேன். என்னல் இயன்றமட்டுக்கும் நான் செய்யும் கலை முயற்சி என்பது இதுதான் “
இது கலையே அல்ல என்று சேற்றை வாரி வீசிய விமர்சகர்களும் உண்டு அல்லது இந்தப் படைப்பைப் பற்றி மூச்சுவிடக்கூடாது என்று மெளனம் சாதித்த மேதாவிகளும் உண்டு.
சமூக மாற்றத்திற்கான போராட்டக் கருவிகளில் ஒன்றான கவிதையை, அது சமூக மாற்றத்திற்கு உதவிபுரிகிறது என்ற காரணத்தின லேயே புறக்கணிக்கின்ற கலை விமர்சகர்களுக்கு நானும், என்னைப் போன்ற படைப்பாளிகளும் மாயகாவஸ்கி சொன்னதைத்தான் பதிலாகச் சொல்வோம்.
“எனக்கு மகிழ்ச்சி; நான் கலைஞன் அல்ல; நான் கலையற்ற வகையிலேயே படைக்க விரும்புகிறேன்." .
சமூக மாற்றத்திற்காக எழுதும் விமர்சகர்கள் எனது கவிதைகளில் உள்ள குறைகளைக் காட்டித் திருத்தி இருக்கிறார்கள். கார்க்கியில் ‘விடியல் கீதங்கள் பாடுகிறோம்" என்ற கவிதை வெளிவந்தபோது ஒரு தொழிலாளத் தோழர் திருத்தினர். அவற்றை நான் நன்றியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். (முன்னுரை: சூரியனைச் சுமப்பவர்கள்),
No photo description available.
You, Tholar Velan, Rocky and 26 others
3 Comments
7 Shares
Share

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...