மாநில அமைப்புக் கமிட்டியின் மீதான ஒரு மார்க்சிய விமர்சனம்

தலைமை குழு உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்தவே "சோவியத் கலாச்சாரம்" பற்றி பேசும் இவர்கள் ஆளும் வர்க்க சித்தாந்திகளுக்கு பக்கம்பக்கமாக இரங்கற்பா எழுத பாட எந்த சித்தாந்தம் வழிவகை செய்தது?.

ஆக இவர்கள் பேசுவது மார்க்சியம் மட்டும் இல்லை என்பது உறுதி அதனை சற்று தேடுவோம் இப்பொழுது.

தோழர் கணேசன் என்ற அன்பழகன் இறந்த பின்பு வினை செய் என்கின்ற இணையதளத்தில் வெளிவந்த இரங்கற்பா மற்றும் அவருடன் பயணித்த தோழர்கள் பலரின் கேவலமான எழுத்துகளுக்கு பதிலளிப்பதல்ல இவை எவ்வளவு மட்டமானது என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

முதற்க்கண்

நக்சல்பாரி எழுச்சிக்குப் பின் அதிலிருந்து சித்தாந்த வேறுபாட்டுடன் பிரிந்த நபர்களால் உருவாக்கிய கட்சிதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநில ஒருங்கிணைப்பு குழு என்னும் SOC.

சாரு மஜும்தாரின் அழித்தொழிப்பு பாதையில் இருந்து முற்றாக வேறுபட்ட மக்கள் திரள் பாதை என்கின்ற பாதையுடன் செயல்படத் துவங்கியது. தன்னை நக்சல்பாரிக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கும் நக்சல்பாரிக்கும் ஒட்டும் உறவும் இல்லை அதாவது  நகல்பாரி என்று சொல்லிக் கொள்வது முகாந்திரமற்றவர்கள் (அதாவது 70 திட்டத்தை இவர்கள் ஏற்றுக் கொள்ளாத பொழுது அதன் வாரிசு உரிமை அபத்தம் அல்லவா இதனை தெளிவாக விரிவாக தேவைப்படும் பொழுது பார்ப்போம்) . இன்று இந்த அமைப்பு மூன்றாக பிளவு பட்டிருக்கிறது உண்மையில் அவர்களின் தத்துவ அரசியல் பேசுவதை விட SOC யின் அடிப்படை பற்றி ஒரு சிறு தேடுதல்.

1975 - 76 களில் இந்திரா காந்தி அம்மையாரால் அவசர நிலைப் பிரகடனம் அரங்கேறிய காலகட்டமும், மேற்குப் பிராந்தியக் குழு அறிக்கை வெளியான காலகட்டம். சாரு மஜூம்தாரின் இடது தீவிரவாதத்திற்கு மாற்றாக மக்கள் திரள் வழியைத் தேர்வு செய்து, அமைப்பை உருவாக்கி - தொடர்ந்து அரசியல் கோட்பாட்டு ஆவணங்களைத் தயாரித்தது வெளியிட்டது. அவை இன்றும் ஆவணமாக உள்ளது அதனை பற்றி யாரும் பேசுவதாக தெரியவில்லை. 

1980 களின் துவக்கத்தில் திருச்சியில் நடைபெற்ற .... வின் முதல் மாநில மாநாடு. 1984  வி.வி.மு. தொடக்க விழா (இன்று அவை எங்கே). மற்றும் 2004 ல் WSF க்கு எதிரான கூட்டமைப்பு நடத்தியது இவ்வாறு வளர்ந்ததோடு. அவ்வப்போது புதிய புதிய செயல் தந்திரங்களை வகுத்து தன் அணிகளை தக்க வைத்துக் கொள்ள முணைந்ததோடு அந்த செயல்தந்திரத்தை ஏன் கிடப்பில் போட்டனர் என்றே தெரியாமல் அடுத்த செயல்தந்திரத்திற்க்கு தாவீனர்.

எல்லோருக்கும் மார்க்சியம் கற்பித்த இவர்கள், தாங்கள் மார்க்சியத்தை மார்க்சியம் அல்லாத போக்கோடு கலந்து மார்க்சியத்தை கைவிட்டு சீர்திருத்தவாதத்தை கையில் எடுத்து இறுதியாக ஆளும் வர்க்க வாலாக சீரழிந்து போனதுதான் மிச்சம்.

இதனை இன்னும் விளங்கிக் கொள்ள ," இறால் பண்ணை அழிப்பு தொடங்கி டாஸ்மாக் உடைப்பு வரை நடத்திய போராட்டங்கள் படிப்பினை என்ன? ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் நிலை என்னே தலைமை குழுவில் உள்ளவர்களூக்கு தெரியுமா மேலும் இன்று மக்கள் அதிகாரம் என்ற பெயரில் இயங்கும் அந்த இயக்கம் தன் கடந்தகால செயல்தந்திரங்கள் என்ன ஆனது, அதில் கலந்துக் கொண்ட தோழர்களின் நிலை என்ன? அவர்களிடமிருந்து வசூலித்த நிதி பற்றி நிதி ஆறிக்கை ஏதாவது எப்பொழுதாவது தன் அணிகளுக்கு சமர்பித்தது உண்டா? தன் இயக்கத்திற்க்காக பசி பட்டினியோடும் இயங்கும் அந்த தோழர்களின் பிரச்சினையை என்றாவது கேட்டது உண்டா? அவர்கள் இயக்க நோக்கத்திற்க்கா போராடிய போது அடைந்துள்ள போலீஸ் நீதித்துறை துன்புறுத்தல் பற்றி என்றாவது கேட்டது உண்டா?  இன்றும் பல தோழர்கள் அல்லல் பட்டுக் கொண்டுள்ளனர் அவர்களுக்கு ஒரு அமைப்பாக இவர்கள் என்ன செய்தனர்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் உள்ளது அதற்க்கு பதிலளிக்க அவர்களுக்கு நேரமிருக்காது ஆக இவர்களின் நிலையை புரிந்துக் கொள்ள இன்று இவர்கள் கையில் எடுத்துள்ள மக்கள் அதிகாரம் தான் என்னே பார்ப்போம்.

மக்கள் அதிகாரம் என்பது எந்த மக்களுக்கானது?

மார்க்ஸ் “மக்கள்” என்ற சொல்லை பயன்படுத்தும் பொழுது அதன் வழியாக வர்க்க வேறுபாடுகளை மெருகிட்டு மறைக்காமல் புரட்சியை முடித்து கொடுக்கும் திறன் உள்ள திட்டவட்டமான பகுதியை ஒன்றுபடுத்தினார் என்று எடுத்துக்காட்டுகிறார் லெனின் (லெனின் தேர்வு நூல்1, பக்கம் 272). வர்க்கங்களை மூடிமறைத்து “மக்கள்” என்று பேசுவதை ஏட்டுப்புலமை என்று விமர்சித்துள்ளார் லெனின்.

போராட்டமும் சூழலும்:

பொதுவாக ஒரு போராட்டம் என்றால் அதில் அதன் நோக்கம் எவ்வளவு முக்கியமானதோ, அதே போல அது நடத்தப்படும் காலமும், நேரமும் முக்கியமான ஒன்று. மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய போராட்டமும் அவர்கள் வைத்த முழக்கமும் "காலத்தே பயிர் செய் " என்பது போல் இல்லாமல் ஏதோ ஓர் உள்நோக்கங் கொண்டு நடத்தப்பட்டது என்ற பரவலான விமர்சனங்களை நம்மால் முழுமையாக புறக்கணிக்க இயலவில்லை. இவர்களின் பல போராட்டங்களின் நிலையில் இருந்து இந்த கருத்துக்கு வருகிறோம்.

திமுக மீதான மென்மையான போக்கு

மக்கள் அதிகார‌ அமைப்பை பின்னால் இருந்து இயக்கும், நக்கசல் பாரி வழிமுறையை உள்வாங்கிக் கொண்ட மகஇக தோழமை அமைப்புகளும், அடிநாதமான மாநில அமைப்புக் கமிட்டியும், சமீப காலமாக திமுகவின்பால் ஒருசார்பான கருத்தைக் கொண்டுள்ளதை அதன் எழுத்துகள் கருத்த்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பாடகர் கோவன் கைதுக்குப் பிறகு, கைதுக்கு கண்டனம் தெரிவித்த வைகோ, ராமதாஸ் ஆகியோரை சந்திக்காமல் கருணாநிதியை மட்ட்டும் சந்தித்ததிலிருந்து இத்தகு விமர்சனம் தொடங்கியது. மஜஇக போன்ற அமைப்புகள் திமுகவுக்கு துணைபோகாதே எனும் தொனியில் முழக்கங்களை பகிரங்கமாக முன்வைத்தன.

"பார்ப்பன எதிர்ப்பு , சுயமரியாதை, பகுத்தறிவு, இந்திய சமஸ்கிருத திணிப்புக்கு எதிப்பு ஆகிய திராவிடக் கருத்தாக்கங்கள் தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருப்ப‌தற்கு கருணாநிதியையும், திமுகவையும் காரணமாக கருதி வருகிறது பார்ப்பன கும்பல். அதனால்தான் திமுக தீய சக்தி என்று குற்றம் சாட்டுகிறது. திமுகவை அடுத்தடுத்த தேர்தல்களில் தோற்கடிப்பதன் மூலம் வழக்குகளை ஏவி, நிலை குலையச் செய்வதன் மூலம் , இதனையும் கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே செய்து முடிப்பதன் மூலம் அக்கட்சிக்கு மங்களம் பாடி தமிழகத்தை மீண்டும் பார்ப்பன தேசியத்துக்குள் முழுமையாக மூழ்கடித்து விடலாம் என முனைந்து வருகிறது அக்கும்பல்" ம.க.இ.க (மக்கள் அதிகாரம்).

மேற்கோளில் உள்ள உண்மைத் தன்மையை ஆய்வு செய்வது ஒருபக்கம் இருக்கட்டும், உண்மையில் தேர்தல் நேரத்தில் ஒரு புரட்சிகர அமைப்பின் இந்த நிலைபாடு எத்தகு பிம்பத்தை உண்டாக்கும் என்பதே முக்கியம்.இத்தகு "நரகலில் நல்லது தேடும்" புஜ வின் செயல்பாடு எதைச் சுட்டுகிறது? பாராளுமன்றத்தின் மீதும், மத்திய மாநில அரசமைப்பு முறைகளின் மீதும், பாராளுமன்றவாதக் கட்சிகளின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வரும் இந்தச் சூழலில், அதனைக் கருவாக முன்னெடுத்து தலைமையேற்றுச் செல்லாமல், திமுகவுக்கும் வக்காலத்து வாங்க விளைவது எதை அடிப்படையாக வைத்து?

மகஇகவின் திமுக மீதான மென்மையான அணுகுமுறை என்பது இயங்கியல் கண்ணோட்டத்துக்கும், அடிப்படையான வர்க்கப் பார்வைக்கும் அந்நியமானது மட்டுமல்ல, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்த அணுகுமுறை என்பது திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்வதை பு. குழு விரும்புகிறது என்பதையே காட்டுகிறது.

போராட்ட வடிவங்களும் முழக்கங்களும்:

ஒரு இயக்கத்தின் போராட்ட வழிமுறைகளில் முழக்கங்களின் வடிவங்கள் என்பவை அதி முக்கியமானவை. அந்தப் போராட்டத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்கு பெரும் பங்காற்றக் கூடியவை. பு.ஜ வுக்கு முழக்கங்களை குழப்பிக் கொள்வது என்பது ஒன்றும் புதியதல்ல. ஏற்கனவே பல போராட்டங்களில் இத்தகு குழப்பம் அதற்கு இருக்கவே செய்தது. இறால் பண்ணை அழிப்பு போராட்டமும் சரி , கருவறை நுழைவுப் போராட்டமும் சரி இத்தகு முழக்க வடிவத் தடுமாற்றத்தால்தான் அவை பெற்றிருக்க வேண்டிய பிரம்மாண்ட வரவேற்பைப் பெற முடியாமலே போய்விட்டது. உண்மையில் மக்கள் அதிகாரத்தால் முன்வைக்கப்பட்ட டாஸ்மாக் மூடுவோம் எனும் முழக்கம் எத்தகு விளைவுகளை ஏற்படுத்தும்? ஒரு முழக்கத்தின் வடிவங்களைத் தீர்மானிக்க நான்கு வகையான கட்டங்களை மார்ஸிய ஆசான்கள் குறிப்பிடுகிறார்கள்.

1). propaganda slogan (பிரச்சார முழக்கம்)
2). agitation slogan(
கிளர்ச்சி முழக்கம்)
3).action slogan (
நடவடிக்கை முழக்கம)
4).directive (
ஆணை)

மேலேகண்ட முழக்கத்தின் நான்கு வடிவங்களில் , சூழல் அறிந்து , மக்களின் மனநிலை அறிந்து, கட்சியின் பலம் அறிந்து குறிப்பிட்ட முழக்கத்தின் வடிவத்தைத் தீர்மானிக்க வேண்டும்.

தோழர் ஸ்டாலின் அவர்கள் சொல்வார்...

"........ 19 ம் நூற்றாண்டின் 80 களில் 'உழைப்பாளர் விடுதலைக் குழு ' வினரால் முதன் முதலில் முன்வைக்கப்பட்ட முழக்கமான " எதேச்சதிகாரம் ஒழிக" என்பது ஒரு பிரச்சார முழக்கமாகும். அதன் நோக்கம் மிகவும் உறுதியான மற்றும் திடமான போராட்டக் குழுக்களையும், தனிமனிதர்களையும் கட்சியின் பால் வென்றெடுப்பதாகும். ரஷ்ய- ஜப்பானிய போர்காலத்தில் எதேச்சதிகாரத்தின் உறுதியற்ற தன்மை தொழிலாளி வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்கு கிட்டதட்ட தெளிவாகத் தெரிந்த காலத்தில் இந்த முழக்கமானது ஒரு கிளர்ச்சி முழக்கமாயிற்று. ஏனெனில் அது இப்போது பரந்துபட்ட உழைப்பாளி மக்கள் திரளினரை வென்றெடுக்க உருவாக்கப் பட்டது. 1917 பிப்ரவரி புரட்சிக்கு சற்றே முந்தைய காலகட்டத்தில் , மக்கள் திரளினரின் கண்களில் ஜாரிஸம் ஏற்கனவே முற்றிலுமாக மதிப்பிழந்து இருந்தபோது எதேச்சதிகாரம் ஒழிக எனும் முழக்கமானது ஒரு கிளர்ச்சி முழக்கம் என்ற நிலையில் இருந்து ஒரு நடவடிக்கை முழக்கமாக மாற்றப்பட்டது. காரணம் அம்முழக்கமானது அப்போது ஜாரிசத்தின்மீது தாக்குதல் தொடுப்பதற்கு பரந்துபட்ட மக்கள் திரளினரை தூண்டுவதற்காக உருவாக்கப்பட்டது. பிப்ரவரி புரட்சியின்போது இம்முழக்கமானது ஒரு கட்சியின் ஆணையாகியது."

"முழக்கங்களை ஆணைகளுடன் சேர்த்து குழப்புவது அல்லது ஒரு கிளர்ச்சி முழக்கத்தை ஒரு நடவடிக்கை முழக்கத்துடன் இணைத்துக் குழப்புவது என்பது காலம் கனிவதற்கு முன்பு அல்லது காலம் கடந்தபிறகு மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைபோல அபாய கரமானது. அது சில சம‌யங்களில் அழிவு ஏற்படுத்தும்"

இந்து மதத்துக்கு, சர்வதேச அளவிலான பொதுவான மதம் குறித்த மார்க்ஸிய அணுகுமுறை பொருந்தாது என்பதிலும், பார்ப்பனர் யாரும் ஜனநாயக சக்தியாக வரமுடியாது என்ற வர்க்கப்பார்வையற்ற கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்திலும் அது அடங்கியிருக்கிறது.

அரசு அதிகாரம் பற்றிய பிரச்சினையை புரிந்து கொள்ளாவிட்டால் புரட்சியை வழி நடத்தவும் முடியாது. புரட்சியில் விவேகமாக பங்கேற்க்கவும் இயலாது என லெனின் கூறுகிறார் இவை மா.அ.க பொருந்தும் ஒன்றே.

இந்த கட்டுரை எழுதுவதன் நோக்கமானது 28 ஜீன் 2022 அன்று மாநில அமைப்புக் கமிட்டிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்தமிழ்நாடு என்ற அமைப்பில் ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக செயலர் பொறுப்பிலிருந்தவரும் 74 வயதான முன்னாள் செயலருமான கணேசன் என்கிற அன்பழகன் மறைவை ஒட்டி எழுந்துள்ள விவாதம் பற்றி ஆய்வதே.

“2010 வரை எளிய மக்களுடன் வாழ்ந்து வந்த தோழர்அமைப்பு வேலைகளின் காரணமாக நகர்ப்புறங்களிலும் குட்டி முதலாளித்துவ வாழ்க்கைமுறை கொண்ட தோழர்களின் குடும்பங்களிலும் தங்கி வேலை செய்யத் துவங்கியதன் விளைவாக சிந்தனைமுறையிலும் அவரிடம் பாட்டாளி வர்க்க விரோத பண்புகள் குடிகொள்ளத் துவங்கியது. ( அந்த பெல் தொழிலாளர்களின் கோடிகளை வாங்கியது எந்த சித்தாந்தமோ என்ன சிந்தனை முறையோ அதையையும் விளக்கி விடுங்கள்? எனது கேள்விதான்).

கம்யூனிச இயக்கத்தில் திரிபுவாத  நவீன திரிபுவாத சித்தாந்தங்களைக் கொண்டவர் மரணமடையும்போது அவர்கள் எத்தகைய முன்னுதாரணமிக்க தலைவராக இருந்தபோதிலும் – நாம் அஞ்சலி செலுத்துவதில்லை.(அப்படி என்னும் பொழுது கலைஞருக்கு ஏன் அந்த கருணையோ ஒப்பாரியோ?https://www.vinavu.com/2018/08/07/makkal-athikaaram-condolence-to-karunanithi/ SPB என்ன தத்துவ ஆசானோ?- எனது கேள்வியே)  மறைந்த தோழர் அன்பழகன் அவர்களின் இரங்கள் பற்றிய இணையதள ஆதாரம் கீழே:-

https://www.vinavu.com/2022/07/05/some-notes-on-communist-party-attitude-to-salutes-tributes/ 

மேலும் இவர்கள் பேசுவதற்க்கும் உண்மையும் வேறாக உள்ளது அவை அவர்களின் இணையதளமே ஆதாராமக உள்ளது. ம...-விலிருந்து வெளியேறுவதாகக் கூறி மருதையனும், நாதனும் வினவு தளத்தில் 24-02-2020 ஒரு கடிதத்தை (https://www.vinavu.com/2020/02/24/comrade-maruthaiyan-resignation-letter/) வெளியிட்டிருக்கிறார்கள்.

அமைப்பிலிருந்து வெளியேறிய எந்தத் தோழரும் இதுவரை செய்திராத வேலையை இந்த இருவரும் செய்திருக்கிறார்கள். ஓட்டுக் கட்சிகளில் கூட எந்தக் கட்சித் தலைவரும், தன் கட்சிப் பத்திரிகையிலேயே 'நான் கட்சியை விட்டு வெளியேறுகிறேன்' என்று அறிவிப்பாரா?

...-விலும், வினவிலும் அமைப்பு தமக்கு அளித்திருந்த பாத்திரத்தை கேடாகப் பயன்படுத்தி, .... மற்றும் அதன் தோழமை அமைப்புகளை கலைக்கும் விதத்திலும், ..../வினவு முன் வைத்த அரசியலை ஏற்றுக் கொண்டு செயல்படும் ஆயிரக்கணக்கான அமைப்புத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அரசியல் உணர்வை சிதைக்கும் விதத்திலும் மருதையனும், நாதனும் கலைப்புவாத வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அந்தக் கடிதத்தில் மருதையன், நாதன் இருவரும் வெளியேறுவதாக சொல்லியிருக்கிறார்கள். இது வினவு குழுவின் முடிவா அல்லது மருதையன், நாதனின் தனிப்பட்ட முடிவா? குழு முடிவு என்றால், கடிதத்தில் வினவு குழு என்று குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை. இரண்டு தனிநபர்களின் பெயர்கள் மட்டும் தான் இருக்கிறது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு மாறாக, வினவில் வேலை செய்த பிற தோழர்களையும் கோஷ்டி சேர்த்துக் கொண்டு வெளியேறி இருப்பார்களாயின், அவர்களின் பெயர்கள் ஏன் இல்லை? அப்படியானால் குழுவில் உள்ள சக தோழர்களையே சமமாகவும், ஜனநாயகப் பூர்வமாகவும் நடத்தாமல் மந்தைகளாகக் கருதி அதிகாரத்துவப் போக்குடன் இவர்கள் இருவரும் தங்கள் முடிவை அறிவித்திருக்கிறார்கள் என்று தான் பொருள். இன்று தோழர் அன்பழகனை வசை பாடுகின்றனர்.

இன்னும் சிலர் விலகள் கடிதம் அதன் மீதான விமர்சனங்கள் கீழ் காணும் இணையதளத்தில்:- 

https://naanmani.wordpress.com/2016/12/27/ezhil-maran-alias-loose-fascist-vs-eb/ (இன்னும் விரிவாக தெரிந்துக் கொள்ள).

"மக்கள் அதிகாரம்" யாருக்கானது?

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30835-2016-05-15-16-40-41

முடிவாக:-  இங்கு ஒரு கட்சியே இல்லாத பொழுது தனது அணியினரையே ஏற்க்க மறுக்கும் இவர்கள் மார்க்சியவாதிகளா? என்பதே கேள்வியாக உள்ளது.

தனது கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான தோழர் கணேசன் என்ற அன்பழகன் இறந்த பின்பு வினை செய் என்கின்ற இணையதளத்தில் வெளிவந்த இரங்கற்பா மிகக் கேவலமானது. மார்க்சியம் அல்லாத ஒன்றைக் கொண்டு கட்சியையும் அமைப்பையும் மூன்றாக பிளந்திருக்கும் இந்த நபர்கள் புரட்சியாளர்களா என்று கேள்விக் குறியாக்குகிறேன்.

ஒரு கட்சியானது அரசியல் தத்துவத்தின் அடிப்படையில் வளர்ந்தவை தோழர்களின் தியாகத்தாலும், தொழிலாளி வர்க்கத்தின் தியாகத்தாலும், மக்களின் அர்ப்பணிப்பாலும் வளர்ந்த ஒரு கட்சி எப்படி இது போன்ற செயலில் இறங்க முடியும். தன் மூத்த தோழருக்கு அஞ்சலி செலுத்த வெட்க்கம் கெட்ட இவர்கள் ஆளும் வர்க்க ஆளுமைகளின் மரணதிற்க்கு இரங்கற்பா எழுதியதன் மர்மம் என்னே? இதுபோல் இவர்கள் மார்க்சியத்தை கேடாக பயன்படுத்துவதை ஏற்க்க முடியவில்லை.தங்களை புரட்சியாளர்கள் என்று வெட்கம் கெட்டமுறையில் அழைத்துக் கொள்வது கேடானது.







2 comments:

  1. தோழர் கணேசன் என்ற அன்பழகனின் உண்மையான வரலாறு என்ன? அவர்தான் மக்கள் திரள் பாதையை உருவாக்கியவரா? மாஅகவின் உருவாக்கத்தில் அவருடைய பங்களிப்பு என்ன? யாரும் இது குறித்து முழு உண்மையை சொல்லவில்லை. ஒரு மனிதர் சமூகத்திற்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவரின் வராலாறு என்ன? அவர் என்ன சாதித்தார்? அவரிடமிருந்து நாம் எதைக்கற்றுக்கொள்வது? எதுவுமே சொல்லப்பவில்லை. மாஅகவின் இருந்து வெளியேறியவர்களும் சரி, அவருடன் இறுதிவரை பயணித்தவர்களும் சரி, மாஅக என்ற பெயரில் பலக்குழுக்களாக இன்றுவரை இயங்கிக் கொண்டிருப்பவர்களும் சரி அதை பற்றி பேசவில்லை.

    வரலாற்றை தெரிந்துக் கொண்டு மறைக்கிறார்களா? அல்லது வரலாறே தெரியாதா?

    உங்கள் கட்டுரையில் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் நீங்களும் அது குறித்து முழுமையாக சொல்லவில்லை.

    ReplyDelete
  2. தோழர் நான் அவரை பற்றி எழுதவில்லை அவர் சார்ந்த அமைப்பை பற்றியும் அதன் விலகல் போக்கை மட்டுமே தேடியதோடு , மார்க்சியத்தை விட்டு அவர்கள் எப்படி விலகி உள்ளனர் என்பதனை பற்றி எழுத முயற்சித்தேன் தோழர். மேலும் அவரை பற்றி நான் எழுத ஒன்றுமில்லை அவரை உதாசீன படித்திய அவர்சார்ந்த அமியப்பின் பித்தலாட்டத்தை அம்பலப் படுத்தியுள்ளேன்

    ReplyDelete

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...