மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்க்கு எதிராக நாட்டில் வேலை வாய்ப்புகள் பறிக்கப் பட்டு எல்லாம் தனியார் மயமாகி கொண்டிருக்கும் சூழலில் இராணுவத்தில் சேர்ந்தால் நிரந்தர சம்பளம் பின் பென்சன் என்ற உத்திரவாதம் இருந்தமையால் குடும்ப தேவைக்காக எல்லா இன்னல்களையும் பொருத்துக் கொண்டேனும் இராணுவத்தில் பணியில் சேர்கின்றனர். அதில் குறிப்பாக அரியானா, பஞ்சாப், உ.பி. பீகார், தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் இராணுவத்தில் சேருவதை கௌரமாகவும் அதை தொழில்ளாகவும் கொண்டுள்ளனர் என்றால் மிகையில்லை என்பேன்.
தனியார் மய கொள்கையால் நாடே கொள்ளை களமாக மாறி உள்ள போது இராணுவத்தில் மட்டும் என்ன விதிவிலக்கா? அதையையும் அரசு தனிநபர்களின் தேவைகேற்ப்ப மாற்றும் வேலைதான் இந்த திட்டம்.
பசி, பட்டினி, வறட்சி, சுரண்டல், அடக்குமுறைக் கொடுமை, தீண்டாமை, சாதிக்கொடுமை, மதவெறி – இந்த வடிவங்கள் இந்தியாவெங்கும் இருக்கின்றன; மக்கள் இதற்குள்ளேயே சிக்கி, போராடி கொண்டிருக்கும் வேளையில் இந்த அடக்குமுறை கருவியாக நினைக்கும் இராணுவத்தில் சேருவதற்க்கு இந்த போராட்டமா என்று நினைப்போர், சற்றி சிந்திக்க நாட்டின் நிலைமை எப்படி உள்ளதென்று?
இப்பொழுது போரட்டங்களை விட இந்த திட்டம் இந்தச் சமூகத்தை எப்படி மாற்றி போடும் என்பதனையும் கருத்தில் கொள்ளவும்.
இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், இந்த திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதனை பற்றி பேசுவதே இந்த பகுதியில் என் எழுத்தின் நோக்கம்.
அக்னிபத் திட்டம் என்றால் என்ன?
இத் திட்டத்தின்படி,
17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வித் தகுதியே, இதற்க்கும் பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். முதல் 6 மாதங்கள் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 90 நாட்களில் புதிய திட்டத்தில் ஆள்சேர்ப்பு தொடங்கப்படும். 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
முதலாம் ஆண்டு ரூ.30,000, இரண்டாம் ஆண்டு ரூ.33,000, மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40,000 என மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். இதனுடன் சேர்த்து இதர படிகளும் வழங்கப்படும். ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப்படும். மீதமுள்ள 70 சதவீதம் மட்டும் வழங்கப்படும். வீரர்களிடம் பிடித்தம் செய்யப்படும் அதே அளவிலான பங்களிப்பு தொகையை மத்திய அரசு தனது பங்களிப்பாக செலுத்தும். 4 ஆண்டுகளுக்குப் பின்னா் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சோ்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் பணப்பலன் வீரா்களுக்கு வழங்கப்படும். இதற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
25 சதவீத அக்னி வீரர்களுக்கு மட்டுமே நிரந்தர பணி
அக்னிபத் திட்டத்தின் கீழ், முப்படைகளில் சேரும் வீரர்கள், 4 ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு நிரந்தர பணிக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்களில் 25 சதவீத அக்னி வீரர்கள் மட்டுமே நிரந்தர பணியில் சேர்க்கப்படுவர். எஞ்சிய 75 சதவீத வீரர்களுக்கு சேவா நிதி வழங்கப்பட்டு வீட்டு அனுப்பி வைக்கப்பட்டு விடுவர்.
ஓய்வூதியம் கிடையாது
அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. வேலைவாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும், ராணுவ வீரா்களின் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான செலவைக் குறைக்கவே இத்திட்டத்தை அரசு தொடங்குவதாகத் தெரிகிறது.
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்?
25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணிக்கு எடுக்கப்படுவர். மீதமுள்ளவர்களுக்கு நான்காண்டுகளுக்கு பின்னர் வேறு பணி வழங்குவது குறித்து மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பணி நீட்டிப்பாகும் 25 சதவீத வீரர்களுக்குக் கூடுதலாகப் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பலன்களையும் அடைவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேருக்கு ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காது. எனவே, 4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பும் இளைஞர்கள், ராணுவத்தில் தங்களுக்கு நிரந்தரப்பணி வேண்டும் என கோரி நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தற்போதுள்ள ராணுவ ஆட்சேர்ப்பு நடைமுறை காலப்போக்கில் அழிக்கப்பட்டு இதுபோன்ற முறை தொடர வாய்ப்பிருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ராணுவத்தில் அதிக அனுபவமுள்ளவர்களே பணி ஓய்வுக்கு பிறகு செக்யூரிட்டியாக நியமிக்கப்படும் சூழல் உள்ள நிலையில், வெறும் 4 ஆண்டுகள் பணிபுரியும் ஒப்பந்த வீரர்கள் தங்களது பணி காலத்திற்கு பின் எந்த மாதிரியான பணிக்கு செல்வார்கள்? தொலைதூர கல்வி பயின்று கொள்வது பணி காலத்திற்கு பிறகான வேலைவாய்ப்புக்கு உதவும் என்றாலும் கூட, 17.5 வயதில் ராணுவத்தில் வேலை என்று ஆசை வார்த்தை காட்டினால், எப்படியாவது கஷ்டப்பட்டாவது மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஏழை இளைஞர்களின் கனவு சிதைந்து விடாதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
குடும்ப சூழல் கருதி கண்டிப்பாக ராணுவ வேலைக்கு செல்லும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டு விடுவர் என சுட்டுக்காட்டும் சமூக ஆர்வலர்கள், அக்னிபத் திட்டத்தின் கீழ் இணையும் வீரர்கள் அனைவரும் ஜவான் நிலையிலுள்ள டிரைவர், செவிலியர், மெக்கானிக் போன்ற பணிகளில்தான் சேர்க்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் காரணமாக ஒரு தலைமுறை உயர் பொறுப்புகளுக்கு செல்வது தடைபட்டு, சமூக படிநிலை உடையும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
“ஆயுதப்படையில் அனுபவமில்லா இளைஞர்களைச் சேர்க்கும்போது, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ராணுவத்தில் சேரும் ஒரு நபர் தேர்ந்த வீரராக மாறுவதற்கு, குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால், இந்த திட்டத்தின்கீழ் சேரும் இளைஞர்களின் மொத்த பணிக்காலமே 4 ஆண்டுகள் தான். நான்கு ஆண்டுகளில் 75 சதவீத வீரர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வடுவர். இந்தக் காலகட்டங்களில் போர் சூழல் ஏற்பட்டால், சிறப்பாக செயல்படும் குறைவான வீரர்களுடன் வலிமையான ராணுவம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.” என்று முன்னாள் ராணுவ வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பணி நீட்டிப்பு இல்லாத மீதமுள்ள வீரர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகும் அபாயமும் உள்ளது. “சிறிது காலம் இராணுவத்தில் வேலை பார்த்துவிட்டு ஆயுதப்பயிற்சி பெற்ற ஒரு பெரும் பகுதியினர் 22 வயதில் வேலையிழப்புக்கு உள்ளாவார்கள். இது நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தாதா?” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
“பாகிஸ்தான், சீனா என இரண்டு முனைகளிலிருந்து அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொள்ளும் போது, அக்னிபத் திட்டம் நமது ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும். நமது படைகளின் கண்ணியம், மரபு, வீரம், ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பாஜக அரசு நிறுத்த வேண்டும்.” என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம்
வெடித்தது
இத்திட்டத்தின்
சாதக, பாதக அம்சங்கள் தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல
பகுதிகளில் கடந்த 2 நாட்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பீகார்,
உ.பி.யில் நேற்று ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள், மத்திய அரசின்
திட்டத்துக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
போர்க்களமான பீகார்
இந்த நிலையில்
இன்றும் பீகாரில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. பீகாரின் நாவடா பகுதியில் சாலையில்
திரண்ட ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் டயர்களை எரித்து போராட்டம் நடத்தினர்.
பீகாரின் Bhabhua Road ரயில் நிலையத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது போராட்டக்காரர்கள்
தாக்குதல் நடத்தினர். மேலும் ரயில் தண்டவாளங்களில் டயர்களை எரித்து போட்டனர். இதில்
ரயில் பெட்டி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. Arrah ரயில் நிலையத்தில் போராடிய இளைஞர்களை
கலைந்து செல்ல கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு எதிராக போலீசார் மீது சரமாரியாக
கற்கள் வீசப்பட்டன. Jehanabad-ல் போலீசாரும் போராடிய இளைஞர்களும் சரமாரியாக கற்களை
வீசிக் கொண்டனர். இதேபோல் பீகாரின் பல இடங்கள் போர்க்களமாக காட்சி தருகின்றன.
காஷ்மீர் தமிழகம் இதேபோல தமிழகத்தின் வேலூர், ராஜஸ்தானிலும்
போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரிலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான
போராட்டம் நடைபெறுகிறது. ராணுவத்தில் சேருவோருக்கான பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்டவை
அக்னிபாத் திட்டத்தால் பாதிக்கப்படுவதாக கூறி இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் அறிந்துக் கொள்ள
No comments:
Post a Comment