மார்சியமும் திருத்தல்வாதமும், நவீன திருத்தல்வாதமும்-சிபி

 

நேற்று கிளப் அவுஸில் நடந்த  கலந்துறையாடல்  "மார்சியமும் திருத்தல்வாதமும், நவீன திருத்தல்வாதமும்" பல தோழர்கள் கலந்துக் கொண்டனர் அதில் தோழர் வேலன், தோழர் ரவிந்திரன் அவர்களின் விளக்கம் சிறப்பாக இருந்தது.

தோழர் வேலன் பேசியபொழுது நீண்ட நெடிய விவாதத்தின் ஊடாக இங்குள்ள மார்க்சிய விரோத போக்கை துடைதெறிந்தால்தான் ஒரு புரட்சிகர கட்சி நிலைக்க முடியும் அதற்க்கு உண்மையான நேர்மையான முறையில் விவாதிக்க வேண்டும் என்றார்..

தோழர் ரவீந்திரன் மார்க்சியத்திற்க்கும் திருத்தல்வாதத்திற்க்கும் உள்ள வேறுபாடுகளை அடுக்கினார். இங்குள்ள இளம் தோழர்கள் சரியான முறையில் மார்க்சியத்தை உள்வாங்கிக் கொள்ள இந்த போக்குகளை புரிந்து அறிந்துக் கொண்டால் இவை போன்ற மார்க்சிய விரோத போக்கிலிருந்து விடுபட முடியும் என்றார்.

தோழர் கௌதம் பல குழப்பமான கேள்விகளையும், அவர் சார்ந்த இயக்கம் மார்க்சியம் அல்லாத நடவடிக்கைகளை மார்க்சிய மூலாம் பூசுவதையும் சொன்னார்.

அதற்க்கு விளக்கம் அளித்த தோழர் ரவீந்திரன் அரசு பற்றி தெளிவின்மையே இதற்க்கு காரணம் என்று முடித்து வைத்தார்.

வகுப்பில் பொதுவாக விவாதிக்கப் பட்டவை
மார்க்சியமும் திருத்தல்வாதம் என்ற நூல் 1908 ஆம் ஆண்டு லெனினால் எழுதப்பட்டது. 1905 இல் இருந்து ஆயிரத்து 1907 இடைப்பட்ட கட்டத்தில் ரஷ்ய புரட்சி தோல்வியாடைந்ததால் பல்வேறு மார்க்சிய விரோத போக்குகள் தலைவிரித்தாடியது . அப்பொழுது எழுந்த போக்குகளில் மார்க்சியத்தை திருத்தும் போக்கை விவரித்துள்ளார்.

மார்சிக்சியம் இரு தரப்புகளில் இருந்து தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது என்கிறார் லெனின். ஒன்று மார்க்சியத்தை மறுக்கும் போக்கு முதலாளித்துவ தத்துவவாதிகளின் இப்போக்கு. இன்னொன்று  மார்க்சியத்தை மறைமுகமாக திருத்தம் செய்யும் போக்கு இவை மார்க்சிய போதனைகளில் திருத்தம் செய்தல்  மார்க்சியத்தை ஆராய்கிறேன்  என்று மார்க்சியத்தை குழப்புதல் என்கிறார்.

திருத்தல்வாதம் என்றால் என்ன ?

"திருத்தல்வாதம் என்பது தொழிலாளர் வர்க்க இயக்கத்துள் இருக்கும் முதலாளித்துவ போக்கேயாகும். திருத்தல்வாதம் முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு வடிவமாகும்" என்று நமது மூலவர்கள் சொல்லியுள்ளனர் .

சரி நவீனதிருத்தல்வாதம் என்றால் என்ன ?

1960 களில் குருசேவ் கும்பலின் 3 சமாதான கோட்பாடுகள்  ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 பேராயத்தில் கொண்டு வரப்பட்டவை, அவையே சோசலிச சோவியத்தை சிதைக்கும் மார்க்சிய லெனினிய விரோத நிலைப்பாட்டை கையில் எடுத்தது . இவை தனது நாட்டில் மட்டுமல்லாமல் உலக கம்யூனிச இயக்கத்தில் திருத்தல்வாதத்தைப் புகுத்தி; உலகில் உள்ள. எல்லா நாட்டு கம்யூனிச இயக்கங்களையும் புரட்சி நடவடிக்கையை கைவிட்டு முதலாளித்துவதுடன் கைகோர்க்கும் சமரசப் பாதையை வகுத்துக் கொடுத்தது.  இவை பெரும் சிதைவை உருவாக்கியது

லெனின் இரண்டாம் அகில சந்தர்ப்பவாதிகளையும் மாவோ ரசிய குருசேவ் புரட்டல்வாதிகளையும் 'முதலாளி வர்க்கத்தினர்' என்றும் 'வர்க்க விரோதிகள்' என்றும் அடையாளம் காட்டினார்கள்.

"சோஷலிச நாடுகளில் திருத்தல்வாதிகள் முதலாளித்துவ பாதைக்காக போராடுகிறார்கள் மீண்டும் முதலாளித்துவத்தின் மீட்டெடுக்க முயல்கிறார்கள்" என்றார் மாவோ .

மாவோ குருசேவ் திருத்தல்வாத கும்பலுக்கு எதிரான போராட்டத்தின் போது குட்டி முதலாளித்துவ சூழ்நிலைகளில் புதிய முதலாளித்துவ மூல காரணங்கள் இடைவிடாது தாமாகவே உற்பத்தியாவது பற்றியும் முதலாளிய செல்வாக்கின் விளைவாகவும் குட்டி முதலாளிகளின் பரவலாக தீங்கு பயக்கும் சூழ்நிலைகளின் விளைவாகவும் அரசியல் சீரழிவுவாதிகளும் புதிய முதலாளித்துவ கர்த்தாகளும் தொழிலாளி அணிகளிலும் அரசு நிர்வாகிகள் மத்தியிலும் தோன்றுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

"கட்சி உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து புரட்சியை நடத்த விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மாவோ அவர்கள் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள் தமது அதிகார காத்துக் கொள்ள விரும்புகிறார்கள்" என்றார் 

இன்னொரு புறம் மாவோ" நீங்கள் சோசலிசப் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் முதலாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லை, அவர்கள் கட்சிக்குள்ளாகவே இருக்கும் வலதுசாரிகள் அவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு முதலாளித்துவப் பாதையை மேற்கொண்டிருக்கிறார்கள்" என்றார் கலாச்சாரப் புரட்சியின் போது .

ரஷ்யாவின் குருசேவ் கும்பல் போல சீனவின் டெங் கும்பல் உள்நாட்டில் வர்க்கப்போராட்டம் இனி தேவையில்லை என்றும் புரட்சிகர பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அனைத்துலக சீர்திருத்தவாத திருத்தல் வாத கட்சிகளுடன் நட்பும் சகோதரத்துவமும்,  புரட்சிகர இயக்கங்களை கைவிட்டும் தனது உறவை துண்டித்துக் கொண்டும் முதலாளித்துவ பாதையில்  சீரழிந்து புதிய முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப்  படுத்துகிறது. இதனைதான் நவீன திருத்தல்வாதம் என்போம்.

காவுட்ஸ்கி  தொடங்கி குருசேவ் டெங் வரையிலான திருத்தல் வாதிகள் சாராம்சத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் கைவிடுவதன் மூலம் முதலாளி வர்க்கத்துடன் அணி சேர்ந்து கொள்ளும் தொழிலாளி வர்க்கத்துக்குள் இருக்கும் முதலாளி வர்க்கமே என்பது எந்த வேறுபாடும் இல்லை.

இங்குள்ள சிலர் மார்க்சியத்தை புரட்டி வருகின்றனர், அவர்கள் மார்க்சியத்தை சுருக்கி அவர்களுக்கான தேவையை ஒட்டி பேசுகின்றனர்.

மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும்பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையானதனிச்சிறப்பான குறிப்பான   நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மார்க்சியம் போதிக்கிறது. ஆனால் “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” இந்த வகையில் திராவிட – தமிழினவாதிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

இங்குள்ள அதிகாரபூர்வ கம்யூனிசக் கட்சிகள் புறக்கணித்த தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின,  தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பு கைவிட்டதை இப்பொழுது கையிலெடுத்ததுள்ளது வருத்ததிற்க்குறியது.


மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக்கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!

மாவோ ஒரு முறை சொன்னது போல் மார்க்சியம் என்பதே பொதுத்தன்மையைக் குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகவும்அந்தந்த நாடுகளில் உள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்ப பொதுவான தன்மைகள் பொருத்தப்பட வேண்டுமே தவிரகுறிப்பான தன்மைகளுக்கு முதன்மை கொடுத்து பொதுத்தன்மைகளை மறந்துவிடக்கூடாது.

 ஆனால் இங்கோ பலர் இது போன்ற  பொதுத்தன்மைகளை புறக்கணித்து விடுகின்றனர்.

இதுவே பொதுத்தன்மையை குறிப்பான தன்மையயுன் பொருத்திக் காணுதலாகும்.

இங்குள்ள சிலரின் கோட்பாடு மட்டுமல்ல அவர்களுக்கு மார்க்சியமே அவர்களின் ஒவ்வொருவரின் தேவைகளை ஒட்டி மார்க்சியம் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

மார்க்சியத்தில் ரஷ்யா மார்க்சியம் ,சீனா மார்க்சியம் ஏன் தமிழகம்  மார்க்சியம் என்று கோட்பாடுகள் இல்லைஅந்தந்த நாட்டின் பொதுத் தன்மையைக் குறிப்பான குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகும்.

ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியா மார்க்சியம் என்பதில்லை.

ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால எழுச்சிப் பாதை மேற்கொள்ளப்பட்டது.

 குடியேற்ற அரை குடியேற்ற நிலவுடமை தன்மை கொண்ட சீனாவில் நீண்ட மக்கள் யுத்த பாதை மேற்கொள்ளப்பட்டது.

 இன்னும் சொல்லப்போனால் சமனற்ற  வளர்ச்சி தன்மை கொண்டும் பல தேசிய இனங்களை  கொண்டுள்ள ஒரு நாட்டில்குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல் கருதி தேசிய இனங்களின்  தன்மைகளுக்கு ஏற்ப விடுதலைப்பாதையில் மாறலாமே தவிர ஒவ்வொரு தேசியஇனத்திற்கும் தனித் தனி மார்க்சியமாவதில்லை.தனித் தனியாக பார்பவர்கள் மார்க்சிய அரசியல் பொதுத்தன்மை மறுக்கிறார்கள்.

இந்த தேடுதலுக்கு உதவிய நூல்கள்:-

1). மார்க்சியமும் திருத்தல்வாதமும்-லெனின்

2). திரிப்புவாதம்- TNOC(ML)

3). மாபெரும் விவாதம்-மாவோ

இந்த நூல்கள் யாவும் PDF வடிவில் உள்ளது வாசித்து தெளிவடைய உதவும்.

சில தோழர்கள் ரசிய-சீன திருத்தல்வாதம் மேலோங்கிய பின் நூல்களே எழுத்தப் படவில்லை என்று அவர்கள் வாசிக்க வேண்டிய நூல் திரிப்புவாதம் என்பேன்.

நன்றி 




No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...