நேற்றைய கிளப் அவுஸ் விவாதம் ,"அக்னிபத் எதிர்ப்பு போராட்டமும் இராணுவம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டமும்" என்ற தலைப்பில் பேசத் தொடங்கினோம். சில தோழர்களே கலந்துக் கொண்ட நிலையில் வளமை போல 7 மணிக்கு தொடங்கினோம். தோழர் முதலில் வைத்த கேள்வியே இங்கே இதனை பற்றி பேசுவோரின் நிலைப்பாடாக உள்ள போது அதனை முதலில் விவாதிப்போமே.
இந்த போராட்டம் ஏன்?
4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பும் இளைஞர்கள், ராணுவத்தில் தங்களுக்கு நிரந்தரப்பணி வேண்டும் என கோரி நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்போதுள்ள ராணுவ ஆட்சேர்ப்பு நடைமுறை காலப்போக்கில் அழிக்கப்பட்டு இதுபோன்ற முறை தொடர வாய்ப்பிருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ராணுவத்தில் அதிக அனுபவமுள்ளவர்களே பணி ஓய்வுக்கு பிறகு செக்யூரிட்டியாக நியமிக்கப்படும் சூழல் உள்ள நிலையில், வெறும் 4 ஆண்டுகள் பணிபுரியும் ஒப்பந்த வீரர்கள் தங்களது பணி காலத்திற்கு பின் எந்த மாதிரியான பணிக்கு செல்வார்கள்? தொலைதூர கல்வி பயின்று கொள்வது பணி காலத்திற்கு பிறகான வேலைவாய்ப்புக்கு உதவும் என்றாலும் கூட, 17.5 வயதில் ராணுவத்தில் வேலை என்று ஆசை வார்த்தை காட்டினால், எப்படியாவது கஷ்டப்பட்டாவது மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஏழை இளைஞர்களின் கனவு சிதைந்து விடாதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
குடும்ப சூழல் கருதி ராணுவ வேலைக்கு செல்லும் நிலைக்கு இளைஞர்கள் பெரும்பாலும் கடைநிலையில் மற்றும் இடைநிலை சமூகத்தில் உள்ளவர்களே, இவர்கள் அனைவரும் ஜவான் நிலையிலுள்ள டிரைவர், செவிலியர், மெக்கானிக் போன்ற பணிகளில்தான் சேர்க்கப்படுவார்கள் என்றும் பொழுது வேலைவாய்பாக இதனை பார்க்கும் நிலையிலிருந்து சிந்தித்தால் புரியும் இவர்களின் தேவையை.
இந்தப் போராட்டம் எல்லாம் கடைநிலை ஊழியர்களான சிப்பாய்களுக்கே அதிகாரிகளுக்கல்ல அதை புரிந்துக் கொள்ளுங்கள். நாட்டின் பெரும்பாலான இளைஞர்கள் வேறு வேலை இன்மையால் இந்த வேலையை தேர்தெடுக்க வேண்டிய சூழலில் உள்ளனர் என்பதனை கணக்கில் கொள்ள வேண்டும். இதில் ஏழை எளிய மக்கள் எங்கே வருகின்றனர் என்றால்,"இராணூவத்துக்கு வேண்டிய படை வீரர்களை வழங்கி அவர்களுக்கு உணவளிப்பதற்க்கு மட்டுமே மக்கள் தேவைப்பட்டனர். இராணுவ வெறி அய்ரோப்பாவில் மேலாதிக்கம் செலுத்தி அதை விழுங்கி வருகின்றது," என்கின்றார் நமது ஆசான் ஏங்கெல்ஸ்.(Anti duhring page 286).
சரி
இராணுவம் என்றால் என்ன அதன் தேவை என்ன?
போர் நடத்துவதற்க்கு தேவையான மிக முக்கியமான கருவி
இராணுவம் ஆகும்.
புரதான பொதுவுடைமைசமுதாயத்தின் அழிவுக்குப் பின் சமுதாயம் பகை வர்க்கங்களாகப் பிளவுபடுகின்றது. சமுதாயத்தின்வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகின்றது. சமுதாயம் நாடுகளாக அமையப் பெற்றவுடன்நாடுகளை ஒடுக்குவதும் அடிமைபடுத்துவதும் தொடங்கியது. பன்னெடுங்காலமாக வர்க்க சமுதாயத்தில்எண்ணற்ற போர்கள் நடந்துள்ள்ன. கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில் ஏற்த்தாழ 10,000 போர்கள் நட்ந்திருப்பதாக
மதிக்கபடுகின்றது.
சமுதாயம் பகை வர்க்கங்களாகப்பிளவுபட்டவுடன் அரசு தோன்றுகிறது. இராணுவம் என்பது அரசின் சிறப்பான கருவியாகும் ஒருகுறிப்பிட்ட வர்க்கம் தனது அரசியல் மார்க்கத்தை ஆயுதமேந்தி வன்முறை மூலமாக பிரியோகிப்பதற்க்குபயன்படுத்தபடும் கருவியாகும்.
இராணுவத்தின் [தேவை] பணி
அரசின் வர்க்கத்தன்மை,இராணுவ சமுதாயத்தன்மையையும் அதன் செயல்பாடுகளையும் தீர்மானிக்கிறது. பொதுவாக கூறினால்இராணுவம் ஆளும் வர்க்கத்தின் சார்பாக உள்நாட்டுபிறவர்க்கங்களின் போராட்டங்களை நசுக்கவும், ஆளும் வர்க்க கட்டளைக்கு அடிபணிந்து, வெளிநாட்டுவிவகாரங்களைப் பொருத்தவரை மற்றைய நாடுகளை ஆக்கிரமிக்ககூடியதாகவும், வெளியார் தாகுதலில்இருந்து தற்காத்துக் கொள்ளகூடியதாகவும் இருக்கும்.
இந்தியப் பாதுகாப்புப்படைகள்
இந்திய இராணுவம், இந்திய கடற்படைட, இந்திய விமான படை மற்றும் இந்திய கரையோரபாதுகாப்பு படை என நான்கு தொழில்முறை சீருடை அணிந்த சேவைகளாக செயல்படுகின்றன. இந்திய ஜனாதிபதி இராணுவ தலைமை கமாண்டராக இருக்கிறார். இவை தகவலுக்கு போதும் என்று நினைக்கிறேன்.
No comments:
Post a Comment