சாதியம், 5
இதில் எனது சுயவிளக்கத்தையும் அளிக்க அனுமதியுங்கள் தோழர்களே
நான் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மார்க்சின் ஆசிய சொத்துடமை குறித்த தகவல்களுக்கு ஆதாரம் தேடி இந்திய வரலாற்று நூல்களை படிக்க ஆரம்பித்த போதுதான் இந்த நூல்களில் ஆரியர் இந்தியரை வென்று அடிமையாக்க தஸ்யூ தாசன் என்ற பெயர்களில் அழைத்தார்கள் என்ற கருத்து குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன்.
இவை எனக்கு சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது ஒரு சிறிய நாடோடிக்கூட்டம் இவ்வளவு பெரிய நிலப்பரப்பை வெல்ல முடியுமா?
மேய்ச்சல் தொழில் செய்யும் கூட்டத்துக்கு தேர்களை பற்றிய தொழில் நுட்ப அறிவு எங்கிருந்து வரும் ?
ஆரியர்கள் தாமிரம் ,மற்றும் இரும்பை பற்றிய அறிவை பெறுவது எவ்விதம் சாத்தியம்?
தாமிர அறிவும் இரும்பை பற்றிய அறிவும் வர்க்க [பிரிவினையோடு வேலைபிரிவினையோடு இணைந்தது ஒரு குல சமூகம் வர்க்க வேறுபாடுகளை சிறிய செல்வத்தின் அடிப்படையிலும் பொதுவான வேலை பிரிவினையை மட்டுமே கொண்டதாக இருக்கும்.
ஆனால் இரும்பு தாமிரம் போன்ற உலோக பயன்பாடு நிலையான வேளாண் குடி சமூகத்தின் உருவாக்கமாகும்.இது நகரிய நாகரீக சமுதாயமும் ஆகும்,
இந்த நகரிய சமுதாயம் தான் வேளாண்மைக்கு தேவையான ஏர்கலப்பைகள் , மண்பாண்டங்கள், ஆடைகள் , உப்பு, போன்ற பொருட்களையும் ,வேளாண்மை செய்வோருக்கு வழங்க முடியும்.
ஏர்கலப்பைகளுக்கு தேவையான இரும்பாலோ வெங்கலத்தாலோ ஆன உழு முனைகள் , அறிவாள்கள் கோடரிகள் ,மண்வெட்டிகள் கயிறுகள். நீர் இறைக்கும் கப்பிகள், மாட்டு வண்டிகள் , குதிரை வண்டிகள். போன்ற எண்ணற்ற பொருட்களை உற்பத்தி செய்து வழங்கும் மையமாகவும்,அரசனும் அவனின் பரிவாரமும் வாழும் கோட்டைகளையும் கொண்டிருந்தது நகர்புறமே ஆகும்,
மேலும் கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கான சந்தையாகவும் நகர்புறமே இருந்தது,வேளாண் உற்பத்தியின் உபரியை சார்ந்தே நகரம் உருவாகிறது, அதேவேளை வேளாண் உற்பத்தியின் வளர்ச்சிக்கு துணை செய்வது நகர் புற வளர்ச்சியாகும்.
எனவேதான் ஆய்வாளர்கள் நகரமயமாதலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள் இந்த நகரமயமாதல் மனிதன் உற்பத்தியில் மேலாண்மை பெறுவதை அறிவிப்பதாகும்.
ஆனால் இந்த நகர மையம் உருவாவது அடிமைகளின் உழைப்பை சார்ந்தது,அடிமைகள் இல்லை என்றால் நகர மயம் இல்லை.நகரமய உருவாக்கத்தின் அச்சாணியே அடிமை முறை உற்பத்திதான்.
இவற்றை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம், இதை எல்லாம் ஓரளவு விவரமாக கூற காரணம்,இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் மனித வாழ்வையோ வர்ணத்தையோ, சாதியையோ புரிந்து கொள்ளவே முடியாது,
, மேற்கண்ட நகர மயத்தை அறியாத அடிமை உழைப்பை பயன்படுத்தாத ஆரியர்கள் எங்கணம் இரும்பையும்
செம்பையும் தேரையும் வாள்களையும் ஈட்டிகளையும்
உருவாக்கினார்கள்?நிலையான வாழிடம் உணவு உற்பத்தியில் ஓரளவு சிறப்பான உபரி இருந்தால்தான் சுரங்கத்தொழிலுக்கும் கொல்லுப்பட்டரை தொழிலில் ஈடுபடுவோருக்கும் உணவு அளிக்க முடியும்/
ஒரு தேர் செய்வது என்பது ,தச்சுத்தொழில் சுரங்கத்தொழில்,பட்டரைத்தொழில் மூன்றும் இணைந்ததாகும் மேலும் இப்பணி பலமாதங்களை எடுத்துக்கொள்ளும். அவ்வளவு காலத்துக்கு அவர்களுக்கு தேவையான உணவையும் வேறு சமூக தேவைகளையும் நிறைவேற்றும் உபரியை கொண்டதாக அந்த சமுதாயம் இருக்க வேண்டும்.
அக்கால கருவிகளை கொண்டு ஒரு மரத்தை வெட்டிஅதை சக்கரங்களாக மாற்றுவது இக்காலத்திலும் எண்ணிப்பார்க்க முடியாத சாதனையாகும். தேர் உருவாக்கம் என்பது நகர மய வாழ்வுடன் பட்டரைத்தொழில் சுரங்கத்தொழில் கைவிணைத்தொழில் மூன்றும் இணைந்ததாகும்.
எனவே நாடோடிகளான எந்த மக்கள் கூட்டமும் இந்த தொழில் நுட்ப அறிவை பெறவே முடியாது என்று உறுதி செய்துகொண்டு இந்திய வரலாற்று தொகுப்பில் ஏதோ பெரும் பிழை இருப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே ஆரியர்கள் குறித்த தேடலில் இறங்கினேன் பெருவாரியான சிறப்பான நூல்கள் என்று எனக்கு நண்பர்களாலும் தோழர்களாலும் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நூல்களிலும் தேடினேன் .
எல்லாமே ஆரியமயமாகவே இருந்தது ,மார்க்சிய வரலாற்று ஆசிரியர்கள் டி டி கோசாம்பி ஆர் எஸ் சர்மா, டி என் ஜா ,ரொமிலாதாப்பர் ,அயல்நாட்டு எழுத்தாழர்கள் என்று அனைத்தையும் புரட்டினாலும் ஆரிய புரட்டை கூட்டியோ குறைத்தோ ஒவ்வொருவரும் கூறியிருந்தார்கள்.
எனது அறிவுக்கு இவர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது, ஆனால் நிறூபிக்க சான்றுகள் வேண்டுமே?
ஒரு கட்டத்தில் என்னால் இந்திய வரலாற்றின் அடிப்படை உண்மைகளை வெளிக்கொண்டு வரமுடியாது பிற்காலத்தில் யாராவது செய்வார்கள் என்று மனதை அமைதி படுத்திக்கொண்டேன், ஏனேனில் எனது ஊகங்களை நான் உறுதியாக நம்பினேன் ஆனால் சான்றுகள் கிடைக்கவில்லையே என்ன செய்வது?
இந்த நிலையில் தான் மூன்று அகழ்வாய்வு துறையினர் இணைந்து ஒரு சிறு கட்டுரையை எழுதி இருந்தனர் ,
அதில் ஆரியர் பரவல் பற்றியும் இரும்பு பரவல் பற்றியும் சிறிய ஆனால் எனக்கு சிறிய விளக்கொளியை காட்டுவதாக அச்சிறு கட்டுரை இருந்தது.
நான் எனது தேடலை இலக்கியங்களை விட்டுவிட்டு அகழ்வாய்வு துறைக்குள் தொடங்கினேன்.
அகழ்வாய்வு துறை சார்ந்த விரிவான செய்திகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது அகழ்வாய்வு நூல்கள் 40,000 80,000 விலைகளில் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டன,
அவ்வளவு செலவு செய்து வாங்கினாலும் நாம் தேடும் ஒரு பக்க இரு பக்க தகவல்கள் கூட அந்நூல்களில் இல்லை என்றால் என்ன செய்வது என்ற போராட்டம் வேறு.கடைசியாக சிறு சிறு அகழ்வாய்வு தகவல்களையும் சில குறைந்த விலைகொண்ட சிறந்த நூல்களையும் தேர்வு செய்தேன்.
இப்போது என்னால் ஆரியர்கள் இந்தியரை வெல்லவும் இல்லை வருண முறையை புகுத்தவும் இல்லை ,அவர்கள் தேர்கள் , தாமிரம் சுட்ட செங்கல் இரும்பு தொழில் நுட்ப அறிவு எதுவும் பெறாத வருணமுறை என்றால் இந்தியாவுக்குள் வரும் வரை என்னவென்று அறியாத விவசாயத்தை அறியாத புதிய கற்கால பழங்குடிகள் என்பதை நிறுவமுடியும்.
எனது கருத்துக்கள் எந்த நூல்களிலும் இதுவரை எழுதப்படாத கருத்துக்கள் ஆகும்.எனவெ சற்று வித்தியாசமாகவும் புரிந்து கொள்ள எளிமையாகவும் இருக்கும்.
இந்தப்படத்தில் இருப்பவர்கள் நிச்சயம் ஆரியராக இருக்க முடியாது ஒரிஜினல் ஆரியரின் படங்களை இதுவரை யாரும் வரைந்து இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் ஆரிய கற்பனைகதைகளையே நம்பி அதற்கான படங்களை தீட்டி பழகி விட்டனர்.
No comments:
Post a Comment