சாதியம், 5
சாதியம்- சந்திரசேகர்
அரசுதான் என்னே?
அரசு பற்றி இன்னும் குழப்பம் ஏன்?
ஒவ்வொரு மனிதனது தற்கால-கடந்த கால செயல்கள் அரசை மையமாகக்கொண்டு அமைந்ததாகும், மனித சமுதாயம் வர்க்க ரீதிதில் பிளவுபட்டிருக்கும் போது சுரண்டுபவர்கள் சுரண்டப்படுவர்கள் என இரண்டு பிரிவு இருக்கும் போது பொதுவான அரசாக இருக்குமா? அரசை ஆயுதமாகக் கொண்டு ஆளும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது.ஆப்படி என்னும் பொழுது இது ஆளும் வர்க்கத்தின் அரசல்லவா?
அரசாங்கங்கள் (கட்சிகள்) மாறிமாறி வரலாம். ஆனால் பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினது அரசு இயங்கி வருகிறதல்லவா?
(விரிவாக மாற்றி அமைக்க வேண்டும்)
இதுவரை நிலவி வந்த அரசுகள் என்னென்ன?
மனித சமுதாய வரலாற்றில் அடிமையுடைமையரசு, நில பிரவுத்துவ அரசு, முதலாளித்துவ அரசு, ருசியா அக்டோபர் புரட்சிக்குப்பின் தொழிலாளர் அரசு என நாங்குவகையான அரசுகளை உலகம் கண்டுள்ளது.
ஆளுவதற்கென்று ஒரு குழு இருக்குமாயின் அக்குழு மக்களை பலாத்காரமாக அடக்கி ஆளுவதற்கென்றே விசேஷமான நிருவனத்தை அமைத்துக்கொள்கிறது. குறிப்பாக சிறைக்கூடம், ஆயுதப் படை, இராணுவம் ஆகியன இந்நிலையை அடிப்படையாகக் கொண்டு உருவாகுவதே அரசு. (லெனின் அரசு பற்றிய நூலில்) அடக்கி ஆளப்பயன்படும் மேற்கூறிய நிறுவனங்களைத் தவிர மற்றும் நீதி நிர்வாகம், தனியாருக்கு சொந்தமான உற்பத்தி, ஊடகம் மற்றும் அரசதிகாரிகள் அவர்கள் சார்ந்த கூட்டம் ஆகியன சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கம் செலுத்துவதற்காக பயன்படும் சாதனங்களாகும். இவை அத்தனையையும் கொண்டு அமைவதே அரசு. இப்படியிருக்கும் வர்க்க அடிப்படையிலான அரசை வர்க்கப்பேதத்தை அகற்றிய பின்பே அரசின் பலாத்காரம் பயன்படுத்தும் தன்மை அகற்றப்படுகிறது. உற்பத்தி முறையாலும் மற்ற நிர்வாகத்தினலும் சிலரால் இயக்கப்பட்ட அரசாங்கம் அகற்றப்படுகின்றது. (எங்கல்ஸ், ‘குடும்பம் தனியார் சொத்து - அரசு' ஆகியவ்ற்றின் தோற்றம்).
ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கிய வர்க்கத்தின் சாதனமான அரசை பொறு பேற்றுத் தனது வர்க்கத்தேவைக்கேற்ப இயலாதென்பதை கடந்த கால வரலாறு பல வழிகளில் அச்சுறுத்தியுள்ளது. தனது வர்க்கத்தின் நலன் கருதி அவ்வர்க்கத்திற்கு எற்றவாறு ஒடுக்கப்பட வர்க்கத்தின் அரசாக மாற்றியமைக்க வேண்டும். அரசாங்கங்களின் மாற்றத்தால் அடிப்படை சமுதாய மாற்றம் நிகழாது.எனவே அரசின் அடிப்படை அமைப்பு பரிபூரண மாக மாற்றப்படல் வேண்டும்.
இவ்வுண்மையை ருசியா,சீன, மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு பின் புரட்சியின் மூலம் அடைந்த மாற்றம் அந்த நாடுகளில் பிரதிபலிதது.
அரசபலம் என்பது அரசியலின் கருவூலமாக அமைந்துள்ளது. நாம் பொதுவான(வர்க்க பேதமற்ற) சமுதாயத்தை மாற்ற வேண்டுமென்றால் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பொருளாதார சக்தியை முறியடிக்க வேண்டும். அவை சீர்திருத்ததின் மூலம் சாத்தியமல்ல என்று பலநாட்டு வரலாற்று படிப்பினைகள் கூறுகின்றது. ஆக உள்ள அமைப்புமுறையை மாற்றாமல் வர்க்கமற்ற சமூகம் சாத்தியமல்ல.
சிலி நாட்டின் படிப்பினை என்னே?
சிலி நாட்டில் எற்ப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக உலகில் அரசு சம்பந்தப்பட்ட மார்க்சிய சித்தாந்தம் உறுதிபாட்டை அடைந்துள்ளது. அந்நாட்டின் அரசு நிர்வாகத்தை சட்டரீதியாக சோஷலிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கைப்பற்றின. ஆனாலும் ஆயுதப்படை, அரசின் கருவிகளை அகற்றுவர்தற்கு முயன்ற போது, அரசின் உறுப்புகளாகிய அதன் தூண்கள் தங்களுடைய சச்தியின் பலத்தை பயன்படுத்திக் கொண்டு சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அழித்து விட்டனர். அரசு என்ற அமைப்பு சமுதாயத்தின் வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியதாகும்.ஆளும் கட்சிகளின் வர்க்க நலன் கருதி-அவசியமானதாகும் அரசு என்பது. அரசு சமுதாயத்திற்கு மேலானது அல்ல. மாறக அரசின் அமைப்பை உருவாக்குவது சமுதாயமாகும்.அரசின் அதிகாரம்,குறிப்பாக நவீனகால அரசின் அதிகாரம் நிரந்தரமான பல பகுதிகளைக் கொண்டதுமாகும். இவ்வதிகாரம் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பிரயோகிக்கப்படுகின்றது. இந்நிறுவனங்கள், எற்கனவே, கூறியதுபோல், பாராளுமன்ற ஆட்சிமுறையின் கீழான மாற்றங்களினல் பாதிக்கப்படுவதில்லை. இதில் தலையாயது ஆட்சி நிர்வாகமாகும். அரசு பணித் துறை, போலிஸ், ஆயுதப்படைகள்,நீதித்துறை, அத்துடன் கல்வி, மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஊடாக சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினை உருவாக்கும் துறைகள் ஆகியன இந்த வர்க்க அமைப்பில் அடங்குகின்றன. தேர்தல்கள் மூலம் அரசாங்கங்கள் மாற்ற மடைந்தாலும் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் மாறுவதில்லை. தீவிர அரசியல் போக்குடைய கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இந்நிறுவனங்கள் மாற்றமின்றி தாக்குப்பிடித்து விடுகின்றன. இவை, ஆட்சி நடத்தும் வர்க்கத்தைப் பிரதிபலிப்பதுடன் அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தவும் செய்கின்றன. இந்நிறுவனங்கள் மூலம் சமுதாயத்தில் மேல்மட்டத்தில் உள்ள வர்க்கத்தினரின் நீடித்த ஆட்சியும் நிலநாட்டப் படுகின்றது. ஆகவே ஒவ்வொரு அரசும், அதன் வர்க்க அடிப்படையினால் உற்பத்தி முறை, உற்பத்தி உறவு, சொத்துடைமை ஆகியவற்றுடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாக அரசின் பண்பு நலன்கள் உட்பட அரசு அதிகாரம் முழுவதுமே மாற்றியமைக்கப்படுவது மிக அவசியமாகும். இவற்றிலிருந்து அரசு வேறு, அரசாங்கம் வேறு என்று தெளி வாகிறதல்லவா? அரசாங்கம் என்பது தற்காலிகமாகக் கிடைக்கும் ஆட்சி நிர்வாகமும் சட்டமன்ற அதிகாரமுமேயாகும். தற்காலிகமாகக் கிடைக்கும் இவ்வதிகாரத்தைக் கொண்டு அரசு அதிகார அமைப்பை முற்றக மாற்றி விடாமல், அதே சமயம் தீவிரமான சமுதாய, பொருளாதார மாற்றங்களைச் செய்ய வேண்டுமே அல்லாது வெறுமனே பாராளுமன்ற பெரும்பாண்மை பெற்று ஆட்சியில் அமர்ந்துவிடுவதில் எவ்வித பயனுமில்லை.இப்படியான கட்டத்திலேயே அரசு பணித்துறை, ஆயுதப்படைகள், நீதித்துறை உட்பட மற்றைய எல்லா அரசு நிறுவனங்களும், அவற்றுடன் பல்வேறு சமூக, பொருளாதார சக்திகளும் சேர்ந்து கொண்டு ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் சட்ட மன்ற, நிர்வாக அதிகாரத்திற்கு சாவுமனியடிப்பதற்காகக் கொதித் தெழும்புகின்றன. ஆயினும், ஆளும் வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளும் தத்தமது சொந்தகொள்கைகளை நிறைவேற்றுவதற்காக தமக்குள் போராடும் போது அரசின் நிலை தெளிவற்றதாயிருக்கும். இத்தகைய சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்த சில விளைவுகள் உண்டாகும். உதாரணத்திற்கு, அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளனவான ஆளும் வர்க்கத்துக்குள்ளும் அரசுக்குள்ளும் உள்ள சக்திகளின் நடுவர் போல் தோற்றமளிக்கும் அரசாங்க நிருவாகத்துறையானது கூடுதலான சுயாதீனத்தைப்பெறும். இவ்விடத்தில் அதிகாரப் போட்டியானது பாராளுமன்ற அரங்கத்திலிருந்து வெளிப் பட்டு, முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார பலம் செறிந்துள்ள நிலைகளான முதலாளித்துவ சமுதாயத்திற்குள்ளும் முதலாளித்துவ அரசுக்குள்ளும் விரிந்து பரவும். இதன் எதிரொலியை வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் காணலாம். இவை மூலமாகவே நெருக்குதல் பிர் யோகிக்கப்படுகின்றன. இந்நிலயைத் தற்கால ஜப்பானில் காணலாம். அங்கு லிபரல் கட்சியின் தலைவரை அக்கட்சியின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்ப தில்லை. பெரிய தொழில் நிறுவனங்களும் வர்த்தக தாபனங்களுமே லிபரல் கட்சியின் தலைவர் தெரிவைத் தீர்மானிக்கின்றன. சில சமயத்தில் ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான அதிகாரப் போட்டி மிகவும் உச்சகட்டத்தை அடைந்துவிடும். அவ்வர்க்கங்கள் தமக்கிடையில் சமமான பலத்துடன் முட்டி மோதிக்கொள்ளும். இந்நிலையிலேயே, இவ் விருவர்க்கங்களையும் சமரசப்படுத்தும் வகையில் நடுவர் ஒருவர் தலைதூக்குவ துண்டு. இத்தகைய நடுவர், அச்சூழ்நிலயில் பலம் வாய்ந்தவராகவும் மதிக்கப்படுகிறவராகவும் தோற்ற மளிப்பார். அவரது செயல்களும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரானவை போலவே தோற்றமளிக்கும். ஆனல் உண்மை பைச் சொல்லப் போனல், சமுதாயம் இதனுல் உருப்படியான மாற்றமோ பலனே அடைவதில்லை. உற்பத்தி உறவுகளும் நடைமுறையிலுள்ள சமு தாயத்தின் பொருளாதார அடிப்படையும் மாற்றப்படாத வரையில், வறும் தலைமைப்பீட மாற்றங்களால் எவ்வித பயனுமில்லை. வரலாறு இத்தகைய பல சம்பவங்களைக் கண்டுள்ளது. ஜூலியஸ் சீஸர், முதலாம் நெப்போலியன், லுயிஸ் நெப்போலியன் ஆகியோர் இப்படியாக உருவாகியு தலைவர்களேயாவர். : . . . . இவ்வாறன காலகட்டத்தே, அதாவது ஆளும் வர்க்கங்கள் தமக்கிடையேயும் அல்லது ஆளும் வர்க்கத்தினரும் வறிய வர்க்கத்தினரும் அவைகளுக்கிடையேயும் முட்டி மோதிக்கொள்ளும்போது நிறைவேற்றப்படும் சட்டங்கள், இருதரப்பினரில் யாராவது ஒரு தரப்பினருக்குச் சாதகமாக இருந்து விடுவதுண்டு. இப்படியான காலகட்டத்தேதான், ஒரு வர்க்கத்தை நசுக்குவதற்கான இன்னெரு வர்க்கத்தின் அரசியல் அதிகாரக் கருவியாக விளங்கும் அரசு, மாற்றமொன்றிக்கு உள்ளாகிறது. எல்லாவர்க்கங்களுக்கும் அப்பாற்பட்ட சுயாதீன நிலயொன்றினை அரசு அடையும், சமுதாயத்தின் தலையாய சக்தியாக விளங்கும். ஆயினும் இவ்விடத்தில் எனினும் அரசு அதிகாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதில்லை. போனபார்ட் ஒரு வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறர். அந்த வர்க்கம், பிரெஞ்சு சமுதாயத்திலேயே பெரும்பான்மையாக உள்ள சிறு உடமை விவசாயிகளாவர்.' . இதன்படி போனபார்ட் ஒருவர், நடைமுறையிலுள்ள சமூக, பொருளாதார அமைப்புகளில் சில மாற்றங்களைச் செய்தபோதிலும், அரசு அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதாகவே இம்மாற்றங்கள் இருந்து இந்த நிலைமையை எங்கெல்ஸ் பின்வருமாறு விளக்குகிறர்: ‘அபூர்வமான சில சந்தர்ப்பங்கள் தவிர, எவ்வாறயினும், மோதிக் கொள்ளும் வர்க்கங்கிடையிலான சமபல நிலையில், நடுவராசத் தலைதுக்கும் அரசு, அச்சமயத்துக்கு ஒரளவான சுயாதீன நிலைமையை தற்காலிகமாக அடைகிறது.’’ ஆகவே, போனபார்ட்டிஸத்தினல் தொழிலாளர் வர்க்கத்தினர் சுதந்திரம் பெற்றலும் சமூக, பொருளாதார ரீதியாக பழைய அமைப்புக் குள்ளேயே அவர்கள் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. - - - இவ்விடயத்தில் மார்க்சின் கண்ணோட்டம் மிகத் தெளிவானதாகும். பழைய அரசு நிருவாக யந்திரத்தை தொழிலாள வர்க்கம் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். ஆனல் அதே நிருவாக யந்திரத்தை பயன்படுத்தாமல் புதிய நிருவாக அமைப்பை உருவாக்க வேண்டும். வேறு சமூக வர்க்கங்களுக்கு மேலாக தொழிலாளர் வர்க்கம் அடைந்து விட்ட மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய நிருவாக யந்திரம் விளங்க வேண்டும்.ஆனல் முந்திய புரட்சிகளிலும் முந்திய சமூக அமைப்புகளிலும் போலல்லாது, மேலாதிக்கம் பெற்றுவிட்ட தொழிலாளர் வர்க்கம், முதலாளித்துவ சொத்து உரிமைகளையும் முதலாளித்துவ சொத்து உறவு களையும் உடைத்தெறியவும் தனியொருவர்க்கத்தை உருவாக்கவும் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த ஒரு வர்க்கமென்பது உற்பத்தியோடு உறவுகொண்ட வர்க்கமாகவே இருக்கும். இதுவும் கால கட்டத்தில் மறைந்துபோய் வர்க்கமற்ற ஒரு சமுதாயமாகிவிடும். இந்த வர்க்கமற்ற சமுதாயமே முதலாளியாகவும் தொழிலாளியாகவும் விளங்கும் இதனல் முதலாளித்துவத்தின் சமூக, பொருள்ாதார முரண்பாடுகளுக்கும் முற்றப்புள்ளிவைக்கப்படும். இதிலும், தொழிலாள்ர் அரசு என்பது கூட ஒரு இடைக்கால நிகழ்வாகவே இருக்கும். அதுவும் படிட்படியாக மாறி பரிபூரணமான சமதர்ம சமுதாய அரசு எற்படும். மக்கள் முழுப்பேரும் ஒருமுகப்பட்டு இபங்கினுல்தான் இந்நிலயை அடைய முடியும். இம்முயற்சி ல் நிரந்தர ராணுவப் படைகள் அகற்றப்படும் ஆயுதந்தாங்கிய மக்கள் ராணுவப் பணிக்கு பொறுப்பாக இருட்பர். அரசாங்க நிருவாகத்தை உயர்ந்த பதவியிலுள்ளவர் முதல், தாழ்ந்த பதவியிலுள்ளவர் வரை எல்லாரும் நடத்துவார்கள. டிராஸ்கியின் வார்த்தைகளில் - 'அரசு ஆரம்பத்திலிருந்தே இரட்டை குணதிசயங்களை நேரிடையாகப் பெற்றது. உற்பத்திக் கருவிகளல் சமூக உரிமையைப் பாது காத்த வில்ை சோஷலிஸ் உருக்கொண்டது. அதேசமயம் பொருட்களன் விநியோகத்தில் முதலாளித்துவ பாணியிலான் வழிகளைப் பின்பற்றிய தால் பூர்சுவா வேடம் பூண்டது." . அத்துடன், லெனின் தாம் உருவாக்கிய தொழிலாள வர்க்க அரசு பற்றி முறையாகவும் பூரணமாகவும் ஆராய்வதற்கு முன்பே அவர் எவ்வாறு மரணமடைந்தார் என்பதையும் டிராட்ஸ்கி விளக்கியுள்ளார். லெனின் தாம் உருவாக்கிய அரசு, ‘பூர்சுவா இல்லாத ஒரு பூர்சுவா அரசு' என்று வருணித்துள்ளபோதிலும், டிராட்ஸ்கிமினல் வர்ணிக்கப்பட்டவாறு இந்த இரட்டைக் குணதிசயம் புதிய அரசின் அமைப்பை பாதிக்கவே செய்தது. இந்நிலயில் ஸ்டாலினுடைய போனபார்ட்டிசமே சோவியத் அரசு தனக் கென தனியொரு சுயாதீனத்தை அடைவதற்கு உதவியது. இச்சுயாதீனம் புதிய நிருவாகத்துறையொன்று வேரூன்றவழிவகுத்தது. இந்த நிருவாகத் துறை தனக்கென பல்வேறு சிறப்புரிமைகளைக் குவித்துக்கொண்டது. எந்த சமூக அமைப்பு மூலமாக, எந்த சமூக அமைப்புக்காக இப்புதிய நிரு வாகத்துறை நிறுவப்பட்டதோ அது அந்த இலட்சி பங்களுக்கு மாறக தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கெர்ண்டது. அரசு என்பதில் நிரு வாகத்துறையின் ஆதிக்க நலம் மேம்பட்டு நிற்கிறது என்பதற்கு ஒரு நல்ல உதாரணத்தையும் காட்ட முடியும். ^ عی முதலாளித்துவ சமுதாய அமைப்பிலிருந்து விடுபட்டுவிட்ட சோவி யத் யூனியனும் மக்கள் சீனக் குடியரசும் ஒரேவிதமான சித்தாந்தை 16 யும் ஒரேவிதமான வர்க்க அடிப்படையையும் கொண்டுள்ள போதிலும் அவ்விரண்டு த டுகளின் ராணுவங்களும் எல்லையின் இருபுறமும் எதிரும் புதிருமாக நிற்பது, அவற்றின் நிருவாகத்துறைத்களை தெளிவாகப் பிரதி பலிக்கின்றன. இக்கட்டத்தில், எம்மைப் பொறுத்தளவில் அவசரகாலச் சட்டமொன் றுக்குள் நாம் இருக்கிறேம், முதலாளித்துவ முறைகள் இன்னும் இடம் பெற்றுள்ளன. இந்நிலயில் நமது நாட்டின் அரசு யந்திரத்தை ஆராய் வது மிக முக்கியமாகும். இங்கு நமது சமுத்ாயமும் கொதிகலனில் உள்ள நிலைமையிலேயே உள்ளது. விவசாயிகள் தொழிலாளர்களின் பிரதிநிதிக ளானகட்சிகள் தம் கைகளில் உள்ள அரசியல், சட்டத்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தி வருவதே இதற்குக் காரணமாகும். இதனுல் நிருவாகத் துறையினரும் மற்றைய முதலாளித்துவ அமைப்புகளும் ஆத்திர்மடைந் துள்ளன. தங்களது அதிகார சொகுசுக்கு ஆபத்துவந்துவிட்டதாக அஞ்சுகின்றன. ஒவ்வொரு தனி நபரின் தலைவிதி முற்றக சமுதாயத்தின் தலைவிதியுடன் கட்டுண்டு இருப்பதால், ஜனநாயகம் என்பது தனி நபரின் சுதந்திரங்களை மாத்திரம் மலர்ச்சியுற செய்வதன்று. அதன் பொருள் மக்களுடன் பொறுப்புகளைக் கூட்டாகத் தெரிவிப்பது என்பதே. -திரிப்போலித் திட்டம், அல்ஜீரியா, 1962 உலக மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் உயிர்வாழ்வதே கஷ்டமாக இருக்கும் வரை, உலகம் பரஸ்பரம் இணங்கிவர இயலாது. -ஊதான்ட்
லிபரேசன் பற்றி ஓர் ஆய்வுரை
பிப்ரவரியில் நடந்தேறிய மத்திய குழு கூட்டதிற்கு பிறகு நடந்தேறிய வற்றை பேசவே இந்த எழுத்துகள்.. விரிவாக பின்னர் எழுதுவேன் தோழர்களே.
இந்த இதழ் PDF வடிவில் முழுமையாக இந்த லிங்கை அழுத்தி பெற்று கொண்டும் விவாதிக்க வாருங்கள் தோழர்களே
மார்க்ஸ் பிறந்தார் – 26
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
11. “மூலதனத்தின்” தத்துவஞானம்
“மார்க்ஸ் தனக்குப் பின்னால் ஒரு தர்க்கவியலை (கொட்டை எழுத்துக்களில்) விட்டுச் செல்லவில்லை என்றாலும் அவர் மூலதனத்தின் தர்க்கவியலை விட்டுச் சென்றிருக்கிறார்… மார்க்ஸ் மூலதனத்தில் ஒரே விஞ்ஞானத்துக்கு தர்க்கவியலை, இயக்கவியலை மற்றும் ஹெகலிடம் மதிப்புள்ளதாக இருந்த ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு அதை மேலும் வளர்த்துச் சென்ற பொருள் முதல்வாதத்தின் அறிவுத் தத்துவத்தை (மூன்று சொற்கள் அவசியமல்ல, அது ஒரே பொருள் குறித்ததே) கையாண்டார்.” வி. இ. லெனின்(1)
மூலதனத்தின் தத்துவஞானம் என்ற தலைப்பு விசித்திரமான சொற்றொடராகத் தோன்றலாம். மூலதனம் முதலாளித்துவச் சமூகத்தில் பொருளாதார உறவுகளைப் பற்றிய ஆராய்ச்சி என்பது நமக்குத் தெரியும். சில மேற்கத்திய அறிஞர்கள் மூலதனத்தில் எந்தத் தத்துவஞானமும் இல்லை, மார்க்சும் ஒரு தத்துவஞானி அல்ல என்று மறுப்புரைக்கிறார்கள். ஒரு தத்துவஞானி என்பவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களின் அமைப்பு குறித்து விசேஷமான தத்துவஞான நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
மார்க்ஸ் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதவில்லை. அவர் எந்தவொரு இடத்திலும் தத்துவஞானக் “கோட்பாட்டை” விசேஷமாக விளக்கவில்லை. எனினும் அவரே தலைசிறந்த தத்துவஞானியாக இருக்கிறார். மார்க்சின் தத்துவஞானம் – இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் – அவர் எழுதிய எல்லா நூல்களிலும் விளக்கப்படுகிறது. அத்தத்துவ ஞானத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய எந்த நூலைப் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவருடைய வாழ்க்கையின் முக்கியமான சாதனையாகிய மூலதனத்தைப் படியுங்கள் என்பதே சரியான பதிலாகும்.
சென்ற நூற்றாண்டின் கடைசியில் ருஷ்ய மிதவாதப் பிரமுகரும் சமூகவியலாளருமான நி. மிஹயிலோவ்ஸ்கிக்கு லெனின் தந்த பதில் இதுவே. மிஹயிலோவ்ஸ்கி மார்க்சியத்தை மறுத்து எழுதிய கட்டுரைகளில் ஒன்றில் இக்கேள்வியைக் கேட்டிருந்தார்: “மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை எந்த நூலில் எடுத்துக் கூறியிருக்கிறார்?” இக்கேள்விக்கு அவரே உடனடியாகக் கண்டுபிடிப்பவரின் சுயதிருப்தியோடு, அப்படி எந்த நூலையும் மார்க்ஸ் எழுதவில்லை, மார்க்சிய இலக்கியம் முழுவதிலுமே அப்படி எந்த நூலும் இல்லை என்று பதிலளித்தார்.
“மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை விளக்கிக் கூறாத நூல் ஒன்றுண்டா?” என்று லெனின் மிகச் சரியாக மறுப்புத் தெரிவித்தார். மார்க்ஸ் தனக்கு முந்திய சமூகவியலிலிருந்து, அதாவது சமூகத்தைப் பற்றிய போதனைகள் மற்றும் தத்துவங்களிலிருந்து அடிப்படையாகவே வித்தியாசமான ஒன்றைப் படைத்த காரணத்தினால் முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் மார்க்சிடம் சமூக வளர்ச்சி பற்றிய தத்துவஞானத்தைக் காணத் தவறுகிறார்கள் என்று லெனின் எடுத்துக் காட்டினார்.(2)
அக்காலத்திய முதலாளித்துவ அறிவுஜீவிகளின் வட்டாரங்களில் கெளரவம் நிறைந்த, மரியாதைக்குரிய சமூகவியலாளர் என்பவர், பொதுவாக சமூகம் என்றால் என்ன, அதன் நோக்கமும் சாரமும் எவை, “மனித இயல்புக்குப்” பொருந்துகின்ற சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பவற்றைப் போன்ற “கருத்தாழமிக்க பிரச்சினைகளை” விவாதித்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இச்சமூகவியலாளர்கள் இன்றைய அமைப்பு இயற்கைக்கு முரணானது, “மனித இயல்புக்கும்” நீதிக் கோட்பாடுகளுக்கும் பொருந்தாமலிருக்கிறது என்ற உண்மையைப் பற்றித் தங்களது மனப்பூர்வமான ஆத்திரத்தை வெளியிட்டு தார்மிக செல்வாக்கைப் பெற்று அநேகமாகப் புரட்சிக்காரர்களாகக் கூடத் தோன்றியிருக்கலாம்.
மார்க்சுக்கு முந்திய சமூகவியலாளர்கள் சமூகத்தின் நிகழ்வுப் போக்குகளை ஆழமாகப் பார்க்கத் தவறியதுடன் அவற்றை அந்தக் கணத்தில் நடைபெறும் சம்பவங்களின் ஒளியில் பார்த்தார்கள். சமூக உலகம் அரசர்கள், சக்கரவர்த்திகளின் முடிவுகளினால் இயக்கப்படுகிறது, சம்பவங்களின் வளர்ச்சி அவர்களுடைய சித்தத்தையும் பொதுமக்களிடம் தாக்கம் செலுத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் முற்றிலும் சார்ந்திருக்கிறது என்று நினைத்தார்கள்.
படிக்க:
♦ போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
♦ நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?
இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டால் வரலாறு என்பது வலிமைமிக்க தலைவர்களின் உணர்ச்சிகளின் போராட்டத்தைச் சார்ந்திருக்கின்ற சம்பவங்கள், நிகழ்வுப் போக்குகள் மற்றும் மெய்விவரங்களின் கதம்பக் குவியலாகத் தோன்றும்; இக்கதம்பக் குவியலில் முக்கியமான நிகழ்வுகளை முக்கியத்துவமில்லாத நிகழ்வுகளிலிருந்து, அதிகச் சிறப்பானவற்றை குறைவான சிறப்புடையவற்றிலிருந்து ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியாது; இதில் எவ்விதமான விதிகளையும் பார்க்க முடியாது, சமூக வளர்ச்சிக்குப் பின்னே இருக்கின்ற பொறியமைவைப் புரிந்து கொள்ள முடியாது, அல்லது அவற்றின் மீது தாக்கம் செலுத்துவது எப்படி என்பதையும் அறிய முடியாது.
இவையனைத்தும் சமூகவியலில் அகநிலைவாதம், கருத்துமுதல்வாதம். பண்டைக்காலத் தத்துவஞானத்தில் இயற்கையைப் பற்றிய கருத்துக்களில் கருத்துமுதல்வாதம் தொடங்கிய வினாடியிலிருந்தே தீவிரமான எதிர்ப்பு (அதாவது பொருள்முதல்வாதிகள்) இருந்தது என்றால் சமூகத்தைப் பற்றிய கருத்துக்களில் கருத்து முதல்வாதம் மார்க்ஸ் காலம் வரையிலும் ஆட்சி செலுத்தியது.
மார்க்ஸ்தான் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பொருள்முதல்வாதக் கருத்தை முதலில் கையாண்டவர். இது அவருடைய மேதாவிலாசத்தைக் காட்டுகிறது என்றார் லெனின். உணர்ச்சிகளும் கருத்துக்களும் நலன்களும் காரணமல்ல, அவை விளைவே, மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற மிகவும் ஆழமான காரணத்தின் விளைவு என்று மார்க்ஸ் கண்டார். எந்த ஒரு மனிதனுடைய ஏதாவதொரு கருத்து அல்லது நோக்கம் அவனுடைய சமூக வாழ்க்கையினால், சமூகத்தில் அவனுடைய நிலைமையினால் நிர்ணயிக்கப்படுகிறது.
கருத்துக்கள் முதிர்ச்சியடைந்த சமூகத் தேவைகளைச் சந்திக்க முடியுமானால், அவை சமூகத்தின் பெரும்பான்மையினரது நலன்களை, முதலாவதாகவும் முதன்மையாகவும் பொருளாயத நலன்களை வெளியிட முடியுமானால், அவை பெருந்திரளான மக்களை ஆட்கொண்டால் அப்பொழுது அவை சமூக வளர்ச்சியில் தாக்கம் செலுத்த முடியும்.
உதாரணமாக, பிரெஞ்சு முடியாட்சி 18-ம் நூற்றாண்டின் கடைசியில் வீழ்ச்சியடைந்தது ஏன்? பதினாறாம் லுயீ இந்த அல்லது அந்தத் தவறைச் செய்தது (அதுவும் கூட முக்கியமாக இருந்தபோதிலும்) அதற்குக் காரணமல்ல; எதேச்சாதிகார ஆட்சியும் நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளும் நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன, முதலாளித்துவம் மற்றும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தன, அந்த வர்க்கம் ஏற்கெனவே பொருளாதார சக்தியைக் கொண்டிருந்தது, ஆனால் அரசியல் அதிகாரம் இல்லாமலிருந்தது என்பவை அதற்குக் காரணமாகும்.
மனித உணர்விலிருந்து சுதந்திரமான முறையில் வளர்ச்சியடைகின்ற சமூக உறவுகள் கடைசியில் அவ்வக்காலத்திய சித்தாந்த, அரசியல், சட்டவியல் அமைப்புகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாகப் பார்க்குங்கால் கருத்துக்களின் வளர்ச்சி சமூக-பொருளாதார நிகழ்வுப் போக்குகளின் வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறதே தவிர அதன் எதிர்மறையை அல்ல. அப்படியானால் சமூக உறவுகள் பொருளாயதமானவை, புறநிலையானவை என்பது இதன் பொருளாகும்! மார்க்சுக்கு முந்திய சிந்தனையாளர்கள் அடையத் தவறிய முடிவு இதுவே.
ஆனால் சமூக உறவுகள் மிகவும் பலவிதமாக இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தோன்றுபவை; அவை உற்பத்தி உறவுகள் எனப்படும். அவை முதலாவதாகவும் முதன்மையாகவும் உற்பத்தி செய்பவருக்கும் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளருக்கும், அதாவது அடிமைக்கும் அடிமை உடைமையாளருக்கும், பண்னையடிமைக்கும் நிலப்பிரபுத்துவ நிலவுடைமையாளருக்கும், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் உள்ள உறவுகள்.
இந்த மூன்று உறவுகளும் சுரண்டல் உறவுகளின் வடிவங்கள். இவற்றுக்கு இடையிலுள்ள அடிப்படையான வேறுபாட்டை எளிதில் காண முடியும். ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவு என்ற முறையில் ஒன்று மற்றொன்றாக இயற்கையாக வளர்ச்சியடைந்த மூன்று சமூக-பொருளாதார அமைப்புகளையும் நாம் எடுத்துக் கொள்வோம்.
சமூக வளர்ச்சி இயற்கையான வரலாற்று நிகழ்வுப் போக்கு, அது மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற ஆனால் அறியப்படக் கூடிய விதிகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று மார்க்ஸ் கண்டார்.
இக்கருத்துக்கள் அனைத்தையும் மார்க்சிய மூலவர்கள் மிக முந்திய காலமான 1840-கள் மற்றும் 1850-களிலேயே கூறினார்கள். ஆனால் மூலதனத்துக்கு முன்பு இவை விஞ்ஞான ஆதாரத்தைக் கொண்டிருந்தாலும் வெறும் கருதுகோள் என்ற அளவிலேதான் இருந்தன என்று லெனின் கூறினார். “மூலதனம் எழுதப்பட்ட பிறகு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வெறும் கருதுகோளாக இனியும் இல்லை, அது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மையாயிற்று;”(3) சமூகவியல் விஞ்ஞானமாக மாறியது.
மூலதனம் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை உருவாக்குவதிலும் அதை நிறுவுவதிலும் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது ஏன்? ஏனென்றால் மார்க்ஸ் சமூகம் எப்படி அமைக்கப்படுகிறது என்ற ஊக முறையான பொது விவாதங்களுடன் தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை, அவர் முதலாளித்துவ அமைப்பை உதாரணமாகக் கொண்டு அதன் செயல்முறை மற்றும் வளர்ச்சிப் பொறியமைவை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தார். ஆகவே வாசகர் இந்த அமைப்பு முழுவதையும் அதன் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற பல்தொகுதியான இயக்கவியல், முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்கங்களின் முரணியல்பு, தொழிலாளியைச் சுரண்டுவதற்கு முதலாளியின் உரிமையைப் பாதுகாக்கின்ற அரசியல், சட்டவியல் மற்றும் சித்தாந்த அமைப்புகளையும் ஒரு வாழ்கின்ற தொகுதியாகக் காண்கிறார்.
நிலப்பிரபுத்துவம் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவத்துக்கு வழி விட்டதைப் போலப் பிந்தியதும் அதன் வளர்ச்சியின் புறநிலையான விதிகளின் விளைவாகத் தன்னுடைய சொந்த அழிவை நோக்கி, ஒரு வர்க்கமில்லாத சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை மார்க்ஸ் மறுக்க முடியாத தர்க்கவியலின் மூலம் நிரூபித்தார்.
“ஏகபோக மூலதனம், அதனுடனும் அதன் கீழும் தோன்றியதும் வளர்ச்சியடைந்ததுமான உற்பத்தி முறைக்குத் தளையாக மாறுகிறது. உற்பத்திச் சாதனங்களை ஒருமுனைப்படுத்துவதும் உழைப்பு சமூகமயமாதலும் எந்த அளவுக்கு முனைப்படைகின்றன என்றால் அவை முதலாளித்துவ மேலோட்டுக்கு முற்றிலும் முரணானதாகின்றன. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமைக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது, உடைமை பறித்தோர் உடைமை பறிக்கப்படுகின்றனர்.”(4)
படிக்க:
♦ தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்
♦ மூலதனத்தின் தத்துவஞானம் !
கம்யூனிஸ்ட் சமூகம் கனவுகாண்பவர்களின் கற்பனாவாத இலட்சியமல்ல, பொருளாதார வாழ்க்கையின் மொத்த இயக்கமுமே அதை நோக்கிச் செலுத்தப்படுகிறது என்பதைச் சந்தேகமில்லாதபடி மார்க்ஸ் விளக்குகிறார். மூலதனம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியலின் வளர்ச்சியை, எல்லா உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைக் கட்டுப்பாடில்லாமல் துரிதப்படுத்துவதன் மூலம் ஒரு புதிய சமூகத்தின், ஒரு புதிய சமூக-பொருளாதார அமைப்பின் பொருளாயத முன்நிபந்தனைகளைத் தயாரிக்கிறது. மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினரைச் சுரண்டப்படுகின்ற கூலித் தொழிலாளர்களாக மாற்றி, பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களை ஒன்றுசேர்த்து, பழைய சமூகத்தின் அடிமை விலங்குகளை நொறுக்கக் கூடிய, அதைப் புனரமைப்பதைத் தொடங்கக் கூடிய புரட்சிகர சக்தியை மூலதனம் தயாரிக்கிறது.
உழைப்பாளர்கள் அனைத்துப் பொருளாயத மற்றும் ஆன்மிக செல்வத்துக்கு உடைமையாளர்களாக இருக்கின்ற, மனிதன் சமூக உற்பத்திக்குச் சாதனமாக இல்லாமல் அவனே மிக உயர்ந்த மதிப்பாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்ற, ஒவ்வொருவருடைய சுதந்திரமான, பல்துறையான வளர்ச்சி எல்லோருடைய சுதந்திரமான வளர்ச்சிக்கும் நிபந்தனையாக இருக்கின்ற சமூகமே கம்யூனிஸ்ட் சமூகமாகும்.
மார்க்ஸ் இந்தப் புதிய சமூகத்தின் உருவரையை கற்பனாவாதச் சுவடு இல்லாமல், எதிர்காலத்தில் “பொற்காலம்” என்ற இலட்சியச் சித்திரத்தை மனம் போனபடி வரைவதற்கு மிகச் சிறிதளவு கூட முயற்சி செய்யாமல் தயாரித்தார். கம்யூனிசத்தை வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாதபடிச் செய்கின்ற போக்குகளையும் விதிகளையும் அவர் தர்க்கவியல் ஆராய்ச்சியின் வன்மையோடு வெளிப்படுத்துகிறார், பாட்டாளி வர்க்கப் புரட்சி, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் புதிய சமூகத்துக்குச் செல்கின்ற உண்மையான வழியை எடுத்துக்காட்டுகிறார். இப்படி முதலாளித்துவ உற்பத்தியைப் பற்றிக் கடுமுயற்சி கொண்ட பொருளாதார ஆராய்ச்சியின் போக்கில் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளைத் தயாரிக்கிறார். அது போல மூலதனம் மார்க்சியத் தத்துவஞானத்தின் உட்கருவான இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை உள்ளடக்கியிருக்கிறது.
இயக்கவியல்-பொருள்முதல்வாத முறை விசேஷமான சொற்களில் வர்ணிக்கப்படவில்லை, அது செய்முறையில், முதலாளித்துவச் சமூகத்தின் பொருளாதாரத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்குச் செய்முறையில் கையாளப்படுவதன் மூலம் தரப்படுகிறது. மார்க்ஸ் இந்த முறையை எப்படி உபயோகித்தார், எப்படிக் கையாண்டார் என்பதை மூலதனத்தை ஆராய்வதன் மூலம் அறிய முடியும். ஆகவே சமூகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்த இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை ஒருவர் எப்படிக் கையாள முடியும், எப்படிக் கையாள வேண்டும், தத்துவச் சிந்தனையில் இந்த வன்மையான கருவியைக் கையாளுவதில் எப்படி முழுத் திறமையைப் பெற முடியும் என்பனவற்றை மூலதனத்தின் வாசகர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
குறிப்புகள்:
(1)V.I.Lenin, collected works, Vol. 38, p. 319.
(2)V.I.Lenin, collected works, Vol. 1, p. 143.
(3)Ibid., p.142.
(4)Karl marx, capital, vol. 1, Moscow, 1974, p. 715.
– தொடரும்
மார்க்ஸ் பிறந்தார் – 20
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
8. முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் – 3
முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பொருளாயத மதிப்புக்களின் உலகத்தை மட்டுமே செல்வமாகக் கருதுகிறது. அதற்குத் தொழிலாளி செல்வத்தைப் பெருக்குகின்ற சாதனமாகத்தான் இருக்கிறான்.
தொழிலாளி தன்னுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும், பணத்தையும் பொருள்களையும் சேமிப்பதற்காக வாழ்க்கை இன்பங்களைத் துறக்க வேண்டும் என்று அது வற்புறுத்துகிறது.
எவ்வளவு குறைவாகச் சாப்பிடுகிறீர்களோ, குடிக்கிறீர்களோ, புத்தகங்கள் வாங்குகிறீர்களோ, நாடகத்துக்கும் நடனத்துக்கும் சிற்றுண்டி விடுதிக்கும் எவ்வளவு குறைவாகப் போகிறீர்களோ, எவ்வளவு குறைவாகச் சிந்திக்கிறீர்களோ, காதலிக்கிறீர்களோ, பேசுகிறீர்களோ, பாடுகிறீர்களோ, விளையாடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் சேமிப்பீர்கள், உங்கள் செல்வம், உங்கள் மூலதனம், நீங்கள் திரட்டியிருக்கும் பொருள்கள் அதிகரிக்கும்.
இந்தக் கண்ணோட்டத்தின்படி பணம் இல்லாத, பொருள் இல்லாத மனிதன் ஒன்றுமே இல்லாதவனாவான். பொருள்களும் பணமும் அவனுக்குச் சமூகத்தில் அந்தஸ்தையும் முக்கியத்துவத்தையும் தருகின்றன, அவன் மனதில் கூட அவனை முக்கியமானவனாகச் செய்கின்றன.
உங்களால் செய்ய முடியாத எல்லாக் காரியங்களையும் உங்கள் பணம் செய்ய முடியும். பணத்தைக் கொண்டு சாப்பிட முடியும், குடிக்க முடியும், நடனங்களுக்கு, நாடகத்துக்குப் போக முடியும், பிரயாணம் செய்ய முடியும், கலைப் பொருள்களை, புலமையை, வரலாற்றுச் சிறப்புக் கொண்ட பொருள்களை, அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும்.
ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் இந்த “மஞ்சள் பிசாசின்” சர்வ வல்லமையைப் பற்றி ஏதன்ஸ் டைமன் கூறிய சொற்களை 1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் மார்க்ஸ் மேற்கோள் காட்டுகிறார்:
இந்த மஞ்சள் அடிமை மதங்களைச் சேர்க்கவும் பிரிக்கவும் செய்யும், கெட்டவர்களுக்கு ஆசி வழங்கும், குட்ட நோயைப் போற்றச் செய்யும், திருடர்களுக்குப் பட்டம் வழங்கி அரசப் பிரதிநிதிகளோடு சரியாசனமும் பெருமையும் அருளும்……
ஷேக்ஸ்பியர் “பணத்தின் உண்மையான தன்மையை மிகச் சிறப்பான முறையில் சித்திரிக்கிறார்”, குறிப்பாகப் பணத்தின் இரண்டு தன்மைகளை அவர் வலியுறுத்தியிருக்கிறார் என்று மார்க்ஸ் கருதுகிறார்.(1)
பணம் கண்ணுக்குத் தெரிகின்ற கடவுள்-எல்லா மனித மற்றும் இயற்கை குணாம்சங்களையும் அவற்றின் எதிர்நிலைகளாக மாற்றியமைத்தல், பொருள்களைச் சர்வாம்ச ரீதியில் குழப்புவதும் சிதைப்பதும்.
பணம் ஒரு பொதுவான விபசாரி, மக்களையும் தேசங்களையும் கவர்ந்திழுப்பது. பணம் என்பது அந்நியமாக்கப்பட்ட மனிதகுலத்தின் திறமை.(2)
ஷேக்ஸ்பியர் மற்றும் கேதேயின் கவிதைகளை ஆதர்சமாகக் கொண்ட இக்கருத்துக்களை மார்க்ஸ் பிற்காலத்தில் அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, மூலதனம் ஆகிய நூல்களில் வளர்த்துக் கூறினார்.
படிக்க :
♦ ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி | நூல் அறிமுகம்
♦ ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
இளம் மார்க்ஸ் எடுத்துக்காட்டியதைப் போல தலைகீழான உலகத்தில், அந்நியப்படுத்தலின் உலகத்தில் பொருளிட்டலே வாழ்க்கையின் நோக்கமாகிவிடுகிறது; உண்மையான மனிதத் தேவைகளை வளர்ப்பதற்கு மாறாக பொருள்களைப் பற்றிய காரியவாதமான, நுகர்வு அணுகுமுறை ஏற்பட்டுவிடுகிறது. பொருள் மனிதனுக்கு அளவுகோலாகி விடுகிறது, அதன் மறுதலை அல்ல. பொருளாயதச் செல்வம் மனிதத் திறமைகளுடைய செல்வத்தின் இடத்தைப் பிடித்துவிடுகிறது.
அந்நியப்படுத்தலின் உலகத்தில் செப்பமடையாத, பூர்விகமான தேவைகள் உடைமையாக வகைப்படுத்தப்படுகின்றன. “தனிச் சொத்துடைமை நம்மை அதிகமான அளவுக்கு முட்டாளாகவும் ஒருதலைச் சார்பாகவும் மாற்றியிருக்கின்றபடியால் ஒரு பொருள் நம்மிடம் இருந்தால் அல்லது அதை நேரடியாக வைத்திருத்தல், சாப்பிடுதல், குடித்தல், அணிதல், வசித்தல், மற்றும் இதர சந்தர்ப்பங்களின் போது மட்டுமே அது நம்முடையதாக இருக்கிறது.”(3) எல்லாப் புலன் மற்றும் ஆன்மிக உணர்ச்சிகளின் இடத்தில் உடைமை என்னும் புலன் வந்து விட்டது.
இதன் விளைவாகப் பொருள்கள் உழைப்பின் நிகழ்வுப் போக்கில் மட்டுமல்லாமல் வீட்டிலும் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. பொருள்களின் மீது கவனத்தைக் குவிக்கின்ற மனிதன் அவன் பொருள்களின் ஊழியனாக மாறுவதை, அவை தன்னுடைய உழைப்பின் தன்மையையும் வேகத்தையும் மட்டுமல்லாமல் அவன் ஒய்வு நேரத்தைச் செலவிடுகின்ற தன்மையையும் முறையையும் மற்ற மனிதர்களுடன் அவனுடைய தனிப்பட்ட உறவுகளின் தன்மையையும் பாணியையும் ஆட்டுவிப்பதைக் கவனிப்பதில்லை.
மனிதத் தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கின்ற உலகத்திலிருந்து அந்நியமாதலை அகற்றிவிடுவது மனிதர்களுக்கு இடையே உள்ள உறவுகளின் தன்மையில் மாற்றத்தை மட்டுமல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையின் மொத்த உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்படுவதைக் குறிக்கும்.
“மனிதன் மனிதனாக இருப்பதாக, உலகத்துடன் அவனுடைய உறவு மனிதத்தன்மை கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்; அப்பொழுது நீங்கள் அன்புக்கு அன்பை மட்டுமே, நம்பிக்கைக்கு நம்பிக்கையை மட்டுமே, இதரவை பரிவர்த்தனை செய்ய முடியும். நீங்கள் கலையை ரசிக்க விரும்பினால் நீங்கள் கலைப் பயிற்சியுள்ள நபராக இருக்க வேண்டும்; நீங்கள் மற்றவர்கள் மீது தாக்கம் செலுத்த விரும்பினால், அவர்களிடம் சிந்தனையைத் தூண்டுகின்ற, உற்சாகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நபராக நீங்கள் இருக்க வேண்டும்.
மனிதனுடனும் இயற்கையுடனும் உங்களுடைய உறவுகளில் ஒவ்வொன்றும் உங்களுடைய இலட்சியத்துக்குப் பொருத்தமான, உங்களுடைய உண்மையான தனிப்பட்ட வாழ்க்கையின் பிரத்யேகமான வெளியீடாக இருக்க வேண்டும். நீங்கள் அன்பைத் திரும்பப் பெறாமல் அன்பு செலுத்துவீர்களானால், அதாவது நேசித்தல் என்ற முறையில் உங்களுடைய அன்பு பரஸ்பரமான அன்பை ஏற்படுத்தாவிட்டால், அன்புள்ளம் கொண்ட நபர் என்ற உங்களுடைய ஜீவனுள்ள வெளியீட்டின் மூலமாக உங்களை அன்பிற்குரியவராகச் செய்து கொள்ள முடியாவிட்டால் உங்களுடைய அன்பு மலட்டுத்தனமானது-அது ஒரு துர்ப்பாக்கியமே”(4) என்று மார்க்ஸ் எழுதுகிறார்.
மதிப்புச் செல்வம் என்ற சுயபூர்த்தியுள்ள கோட்பாட்டைக் கொண்ட முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் மனித மறுப்பை முரணில்லாமல் போதிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறார்.
படிக்க :
♦ அக்டோபர் புரட்சி : உலகின் விடிவெள்ளி ! ரஜனி தேசாய்
♦ மூலதனத்தின் தத்துவஞானம் !
கம்யூனிஸ்ட் சமூகத்தில் பொருள்களின் செல்வம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும், அதாவது மனித வாழ்க்கையின் குறிக்கோளாக இல்லாமல் முழுமையான மனித நடவடிக்கைக்கு ஒரு சாதனமாக இருக்கும். “அரசியல் பொருளாதாரத்தின் செல்வத்துக்கும் வறுமைக்கும் பதிலாகச் செல்வமுடைய மனித ஜீவனும் வளமான மனித தேவையும் ஏற்படும்.”(5)
மார்க்ஸ் பிற்காலத்தில் மூலதனத்திலும் அதன் பூர்வாங்கமான நூல்களிலும் இக்கருத்துக்குத் திரும்பத் திரும்ப வருகிறார். அவர் சமூகத்தின் மிக உயர்ந்த செல்வமாக, மிக உயர்ந்த மூலதனமாக-மனிதனுடைய உற்பத்திப் பொருளையல்ல – மனிதனை “தனிநபர்களின் தேவைகள், திறமைகள், நுகர்வுச் சாதனங்கள், உற்பத்திச் சக்திகள், இதரவற்றின் முழுதளாவிய தன்மையைப்”(6) பிரகடனம் செய்கிறார்.
கம்யூனிஸ்ட் சமூகத்தில் எல்லாச் சமூக உற்பத்திக்கும் மனிதனே குறிக்கோள்; பொருளாயத மதிப்புகள் இக்குறிக்கோள் நிறைவேறுவதற்குச் சாதனமாக, நிபந்தனையாக, அடிப்படையாக மட்டுமே இருக்கின்றன.
தொடக்க நிலையையும் (சுய அந்நியமாதல்) குறிக்கோளையும் எடுத்துக்காட்டிய பிறகு மார்க்ஸ் இக்குறிக்கோளை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டிய பாதையை, அந்நியப்படுதலை அப்புறப்படுத்துகின்ற பாதையைச் சுட்டிக்காட்டுகிறார். இப்பிரச்சினை பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சமூகவியலாளர்கள் மற்றும் மார்க்சியவியலாளர்களுக்கு இடையில் மிகவும் காரசாரமான விவாதத்துக்குரிய பொருளாகவே இன்னும் இருந்து வருகிறது.
அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது என்ற உண்மையிலிருந்து மார்க்ஸ் தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் முன்னேறுகிறார். தனிச் சொத்துடைமை “அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பின் உற்பத்தி, முடிவு, அவசியமான விளைவு”,(7) பொருளாதார அந்நியமாதல்.
அந்நியமாதலின் வெவ்வேறு வடிவங்களின் (அரசியல், மத, தத்துவஞான, அறவியல், இதரவை) சாயல்களும் அம்சங்களும் பொருளாதார அந்நியமாதலில் குவிகின்றன. மொத்த மனித அடிமைத்தனமும் உற்பத்தி முறையில் தொழிலாளியின் உறவின் அடிமைத்தனத்தில் வெளிப்படுகிறது.” …அடிமைத்தனத்தின் எல்லா உறவுகளும் இந்த உறவின் உருத்திரிபுகளும் விளைவுகளுமே.”(8) இங்கே மார்க்ஸ் அடிப்படையில் சமூக வாழ்க்கையில் உற்பத்தி உறவுகளின் தலைமையான பாத்திரத்தைப் பற்றிய கருத்தை வகுத்துரைக்கிறார்.
ஹெகலிடம் எல்லா அந்நியமாதலுமே கருத்தின் அந்நியமாதலாக இருந்தது, அகப்பொருளின் “உணர்வில்” இந்த ரகத்தைச் சேர்ந்த ஊடுருவுதலும் சாத்தியமாக இருந்தது. ஆனால் அவர் உலகத்துடன் தன்னுடைய உறவுகளின் அடிமைத் தன்மையை உணர்ந்து கொண்டிருப்பதால் அவருடைய அந்நியமாதல் மறையவில்லை, அது அதிகரிக்கிறது.
நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் நீந்துவதாகக் கற்பனை செய்வது மட்டும் போதாது. சுதந்திரம் வேண்டுமென்றால் சுதந்திரமாக இருப்பதைப் போலக் கருதுவது மட்டும் போதாது. “தனிச் சொத்துடைமைக் கருத்தை ஒழிப்பதற்கு கம்யூனிசம் என்ற கருத்து போதுமானதாகும். உண்மையாகவே தனிச் சொத்துடைமையை ஒழிப்பதற்கு மெய்யாகவே கம்யூனிஸ்ட் நடவடிக்கை அவசியம்.”(9)
“வரலாறு இதற்கு இட்டுச் செல்லும்” என்பதை மார்க்ஸ் சந்தேகிக்கவில்லை. ஆனால் கற்பனாவாதிகளைப் போல தனிச் சொத்துடைமை ஒழிப்பு வேகமாகவும் துன்பமின்றியும் நடைபெறும் என்று மார்க்ஸ் கருதவில்லை. இது “மிகவும் கரடுமுரடான, நெடுங்கால நிகழ்வுப் போக்காக”(10) இருக்கும் என்பதை அவருடைய வரலாற்று உணர்வு பிழையில்லாமல் எடுத்துக்காட்டியது.
தனிச் சொத்துடைமை முறை மந்திரக் கோலை ஆட்டியதும் திடீரென்று தோன்றிவிடவில்லை. அது பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்தது, வெவ்வேறு வடிவங்களை அடைந்தது. அதன் வளர்ச்சி இன்னும் முடிந்துவிடவில்லை. அது இப்பொழுது தொழில்துறை மூலதனம் என்ற வடிவத்தை அடைந்திருக்கிறது, அது சமூகத்தின் எல்லா இடுக்குகளுக்குள்ளும் நுழைந்து அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற வரை, “அதன் உலகளாவிய வடிவத்தில் உலக வரலாற்றுச் சக்தியாகும்” வரை இந்த வடிவத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடையும்.
தனிச் சொத்துடைமை இந்த வளர்ச்சியடைந்த வடிவத்தில், முழு ஜீவனோடிருக்கும் பொழுது தன் எதிரியை, மரணத்தை, தொழில்துறைத் தொழிலாளர்களின் ஒடுக்குமுறைக்குள்ளான, அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பை எதிரிடுகிறது.
அந்தத் தருணத்திலிருந்து அது தன் சொந்த அழிவை நோக்கிச் செல்கிறது, ஆனால் மரணத்தை நோக்கி அதன் பாதை முதிர்ச்சியை நோக்கி வளர்ச்சியடைந்த பாதையைப் போல இருக்கிறது: கம்யூனிச உருவாக்கத்தின் வெவ்வேறு வடிவங்களிலும் கட்டங்களிலும் அது தோன்றுகிறது. கம்யூனிசம் முதலில் கரடுமுரடான சமத்துவவாதக் கம்யூனிசமாகத் தோன்றுகிறது என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார் (அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஏழைகளின் கம்யூன்களை ஏற்படுத்துவதற்குச் செய்யப்பட்ட ஆரம்பகாலத் தவறுகளை மார்க்ஸ் மனதில் கொண்டிருக்க வேண்டும்).
“இக்கம்யூனிசம்” தனிச் சொத்துடைமையின் காட்டுமிராண்டித்தனமான தன்மைக்குக் காட்டுமிராண்டித்தனமான சாதனங்களைக் கொண்டு எதிர்ப்பதைக் காட்டுகிறது. தனிச் சொத்துடைமை மற்றும் அது ஏற்படுத்துகின்ற சமத்துவமற்ற நிலைமையின் “தாக்கத்தில்” அது இன்னும் இருக்கின்றபடியால் ஒவ்வொருவரையும் (பெண்கள் சமூகம் உள்பட) பொதுவான தரத்துக்கு வகைப்படுத்துவதற்கு விரும்புகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற ஒவ்வொன்றையும் எல்லோரும் பெற்றிருக்க முடியாத ஒவ்வொன்றையும் அழிப்பதற்கு முயற்சிக்கிறது.
ஆகவே கரடுமுரடான, பாசறைக் “கம்யூனிசம்” மனிதனுடைய திறமையிலிருந்து, அவனுடைய ஆளுமையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறது. அது தொழிலாளியின் அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பை ஒழிப்பதற்கு ஏங்கவில்லை, ஒவ்வொருவரையும் தொழிலாளர்களாக மாற்றுவதற்கு விரும்புகிறது.
ஒவ்வொரு துறையிலும் மனிதனுடைய ஆளுமையை “மறுக்கின்ற” இவ்விதமான “கம்யூனிசம்” அதே சமயத்தில் “கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மொத்த உலகத்தையும்” மறுப்பதாக இருக்கிறது. எவ்விதமான தேவையும் இல்லாத ஏழையின் இயற்கைக்குப் புறம்பான எளிமையே அதன் குறிக்கோள். இந்த “எளிமை” தனிச் சொத்துடைமைக்கு அப்பால் போக முடியாமற் போய்விட்டது மட்டுமல்ல அது இன்னும் அதைக் கூட எட்டவில்லை என்பதை இக்குறிக்கோள் நிரூபிக்கிறது.
படிக்க :
♦ நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்
♦ மரியா ஜெனோவா : மகிழ்ச்சி அளிப்பது முதலாளித்துவமா கம்யூனிசமா ?
இந்த ரகத்தைச் சேர்ந்த “கம்யூனிசத்தில்” உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலுள்ள எதிர்நிலைத் தன்மை ஒழிக்கப்படவில்லை. உழைப்பு (அதன் மிகவும் ஆரம்ப வடிவத்தில்) ஒவ்வொரு மனிதனும் வைக்கப்பட்டிருக்கும் நிலையாகத் தோன்றுகிறது; மூலதனம் சர்வாம்ச மூலதனமாக மற்றும் சமூகத்தின் சக்தியாகத் தோன்றுகிறது.
இந்தக் “கரடுமுரடான கம்யூனிசம்” “தனிச் சொத்துடைமையின் வெறுக்கத்தக்க” வெளியீடு என்று மார்க்ஸ் கூறினார். இந்த விமர்சனம் இன்றைய தினத்திற்கும் அதன் தத்துவ ரீதியான மற்றும் செய்முறை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது, அதிதீவிரமான புரட்சிகர வாய்ப்பந்தலையும் மனிதகுலத்தை ஆனந்தமாக வைத்திருப்பதற்குப் பாசறை முறைகளையும் நேசிப்பவர்கள் மாபெரும் கம்யூனிசக் கருத்துக்களைக் கொச்சைப்படுத்துவதையும் கேவலப்படுத்துவதையும் எதிர்க்கும் போராட்டத்துக்கு உதவி செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல.
மார்க்ஸ் சுட்டிக்காட்டுகின்ற இரண்டாவது வடிவம்-அவர் முதலாவதாகவும் முதன்மையாகவும் அக்காலத்திய கற்பனாவாத சோஷலிஸ்டுகளுக்கும் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கும் குறியடையாளமான, எதிர்காலத்தைப் பற்றிச் சிற்சில கருத்துக்களை மனதில் கொண்டிருக்கிறார் – தன்னுடைய அரசியல் தன்மையை இன்னும் இழக்காத கம்யூனிசமாகும். அது ஜனநாயகமாக இருக்கிறது அல்லது எதேச்சாதிகாரமாக இருக்கிறது. அது தனிச் சொத்துடைமையின் கைதியாக இருக்கிறது, அதனால் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.
முடிவாக, மூன்றாவது வடிவம் மனிதகுலக் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மொத்தச் செல்வத்தையும் பாதுகாத்து வளர்த்துச் செல்கின்ற அடிப்படையில் அந்நியமாதலின் எல்லா வடிவங்களையும் உண்மையில் அகற்றுகின்ற முறையில் தனிச் சொத்துடைமையின் “ஆக்கபூர்வமான” அழித்தலை முன்னாகிக்கிறது. இந்தக் கம்யூனிசம் முழு வளர்ச்சியடைந்த மனிதாபிமானத்துக்குச் சமம்: “மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் மோதலுக்கு இது உண்மையான தீர்வு.”(11)
வரலாற்றின் மொத்த இயக்கமுமே இக்கம்யூனிசத் தோற்றத்தின் உண்மைச் செயலே, அதன் வாழ்க்கையின் பிறப்பே. இப்பிரச்சினைக்குத் தீர்வு “புரிந்து கொள்வதைப் பற்றிய பிரச்சினையாக மட்டுமே ஒருபோதும் இருக்கவில்லை, அது வாழ்க்கையின் உண்மையான பிரச்சினை; தத்துவஞானம் இப்பிரச்சினையை வெறும் தத்துவ ரீதியான ஒன்றாக மட்டுமே கருதியதனால் தான் அதைத் தீர்க்க முடியவில்லை.”(12)
இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு மார்க்ஸ் இக்கருத்தைத் தன்னுடைய பிரபலமான ஆய்வுரையில் பின்வருமாறு வகுத்துரைத்தார்: “தத்துவஞானிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி மட்டுமே வந்திருக்கிறார்கள், ஆனால் அதை மாற்றுவதுதான் இப்போதுள்ள விஷயமாகும்”.(13)
மார்க்ஸ் தன்னுடைய 1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் தெரிவித்த கருத்துக்களை இதற்குப் பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்குப் பிறகு அவர் அதிகமான செறிவுடனும் விவரத்துடனும் வளர்த்துக் கூறினார்.
உழைப்பு மற்றும் மூலதனத்தின் எதிர்நிலைத் தன்மை, தொழிலாளி பண்டமாக இருத்தல், பண்ட வழிபாடு, தொழிலாளியை உயிருள்ள இயந்திரமாக, பகுதியளவுக்கு இயந்திரத்தின் உறுப்பாக மாற்றுதல் முதலியன இத்தகைய கருத்துக்களாகும்; முதலாளி மூலதனத்தின் உருவமாகவும் பாட்டாளி உழைப்புச் சக்தியின் உருவமாகவும் இருக்கின்ற பண்ட உறவுகளின் உலகத்தில் மனித ஆளுமை அந்நியமாக்கப்படுதல் என்பதைப் பற்றிய கருத்துக்களும் இவற்றில் அடங்கும்.
“அந்நியமாதல்” என்ற தத்துவஞானக் கருத்தமைப்புக்குப் பதிலாகத் துல்லியமான, சந்தேகத்துக்கு இடமளிக்காத பொருளாதாரக் கருத்தமைப்புகளை மார்க்ஸ் மென்மேலும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்; ஆனால் இது சொற்பிரயோகத்தைப் பற்றிய பிரச்சினையே தவிர, கோட்பாட்டைப் பற்றியதல்ல.
1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் புதிய உலகக் கண்ணோட்டத்தின் மேதாவிலாசம் நிறைந்த உருவரை, ஒரு செயல்திட்டத்தின் உருவரை; அதை விரித்துரைக்கின்ற பணி கார்ல் மார்க்சின் எஞ்சிய வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெற்றது.
இப்புத்தகம் எழுதப்பட்டு சுமார் 90 வருடங்களுக்குப் பிறகு, அதன் ஆசிரியர் மரணமடைந்து சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு தான் உலகம் இப்புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டது.
ஆனால் முக்கியமாக இருக்கின்ற ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி அப்பொழுது எழுதப்பட்ட புத்தகத்தைப் போல அது உடனடியாக அதிகமான கவனத்தைக் கவர்ந்தது. அதற்குப் பிறகு இப்புத்தகத்தைப் பற்றிப் பல்வேறு நாடுகளில் ஏராளமான ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன, இன்னும் எழுதப்படுகின்றன, வாதங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்புத்தகம் எழுதப்பட்ட காலத்திலிருந்து நாம் எவ்வளவு தள்ளி வருகிறோமோ அவ்வளவுக்கு இப்புத்தகம் அதிகமான உடனடி முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
இந்நூலில் எழுப்பப்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் மார்க்சியத்தைப் பற்றி மிகவும் வேறுபட்ட கருத்துக்களுக்கிடையில் – கொச்சையான வறட்டுச் சூத்திரவாதம் முதல் கொச்சையான திருத்தல் வாதம் வரை – மோதல் நடைபெறுகின்ற களமாக இருக்கின்றன.
இந்த இரண்டு “முனைக்கோடிகளும்” பொதுவான அம்சத்தைக் கொண்டிருப்பது சுவாரசியமானதே. இளமைக் கால மார்க்ஸ், முதிர்ச்சிக் கால மார்க்ஸ் என்று இரண்டு மார்க்ஸ்கள் இருப்பதாகக் கூறி அவரிடத்தில் வேறுபாட்டைக் காண்கின்றன. எனினும் வித்தியாசம் என்னவென்றால் அவை வெவ்வேறு வழிகளில் இதைச் செய்கின்றன: முந்தியது இளமைக் கால மார்க்ஸ்தான் “உண்மையான” மார்க்ஸ் என்று கூறும் பொழுது பிந்தியது முதிர்ச்சிக் கால மார்க்ஸ்தான் “உண்மையான” மார்க்ஸ் என்று கூறுகிறது.
இரண்டு அணுகுமுறைகளுமே மார்க்சியத்தைப் பற்றி உருத்திரிபான, பூர்விகமான கருத்தைக் கொண்டிருக்கின்றன. இவை அறிவு சார்ந்த சோம்பேறித்தனத்தினால் மார்க்சியத்தை வறட்டுக் கோட்பாட்டுவாத அளவுகளைக் கொண்டு அளக்கின்றன. கையேடுகளும் மூலதனமும் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு கொள்கைகள் அல்ல; முதலாவதில் “மனிதாபிமானமும்” பின்னதில் “பொருளாதாரவாதமும்” மையமான இடங்களைப் பெற்றிருக்கின்ற இரண்டு முழுமையான தத்துவஞான அமைப்புகள் அல்ல.
அவை ஒன்றுக்கொன்று எதிராக இருக்குமானால் அது பிறப்பிடமும் சிகரமும் என்ற முறைகளில் மட்டுமே; உலகறிந்த நிகழ்வுகளைப் பற்றிப் புதிய பகுப்பாய்வு முறை கண்டுபிடிக்கப்பட்ட நூல், அது கையாளப்படுகின்ற நூல் என்ற முறைகளில் மட்டுமே. தத்துவஞான பொருளாதார நூல், பொருளாதார-தத்துவஞான நூல் என்ற முறைகளில் மட்டுமே.
மார்க்சியத்தின் மூலவர்கள் அடிக்கடி வலியுறுத்தியதைப் போல அது ஒரு கோட்பாடு அல்ல, அது ஒரு முறை. எனவே வெவ்வேறு நூல்களில் தரப்பட்டிருக்கின்ற “முன்னரே தயாரிக்கப்பட்ட” வகுத்துரைத்தல்களைக் கூறுவதன் மூலம் அதைப் புரிந்து கொள்ள முடியாது. இயக்கத்தில், கருத்துக்களின் பிறப்பில், முறையைத் தொடர்ச்சியாகப் பதுக்கித் தருவதில் மட்டுமே மார்க்சியத்தின் ஜீவனைப் புரிந்து கொள்ள முடியும்.
கோட்பாட்டுவாதக் குறுகிய அறிவு மூலதனத்தில் “மனிதாபிமானத்தைக்” காண்பதில்லை; ஏனென்றால் மார்க்சின் மொத்த பாரம்பரியத்தில் இப்புத்தகத்தின் இடத்தை அது புரிந்து கொள்வதில்லை. மார்க்ஸ் எத்தகைய மனித இலட்சியங்களுக்காகப் “பொருளாதார மனிதனைப்” பற்றி மிகவும் கருத்தூன்றி ஆராய்ந்தார் என்பதை அது புரிந்து கொள்வதில்லை. அது மார்க்சின் மனிதாபிமானத்தைப் பார்ப்பதில்லை, ஏனென்றால் அது தத்துவத் துறையில் பகற்கனவு காண்பவர்களின் போலிப் பரோபகார உணர்வை “மனிதாபிமானம்” என்று கருதிப் பழகிவிட்டது.
மறு பக்கத்தில் இளமைக் கால மார்க்சை விமர்சனம் செய்பவர்கள் – இவர்களும் அவர்களைப் போன்று குறுகிய அறிவுடையவர்களே – மார்க்சியத்தின் உருவாக்கத்தில் கையேடுகளின் மாபெரும் முக்கியத்துவத்தைப் பாராட்டக்கூடிய தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.
“அந்நியமாதல்”, “மனிதாபிமானம்” என்ற சொற்களைக் கேட்டவுடனே இவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள்-இக்கருத்தினங்கள் மார்க்சியமா? அவர்கள் மார்க்சைக் குறுகிய வறட்டுக் கோட்பாட்டு ரீதியில் புரிந்து கொண்டவர்கள், அவர்களால் மார்க்சின் வளமான கருத்துக்களை ஜீரணிக்க முடிவதில்லை; எனவே அவர்கள் “பரிசுத்தமான” மார்க்சுக்கும் “அசுத்தமான” மார்க்சுக்கும், “முதிர்ச்சியடைந்த” மார்க்சுக்கும் “முதிர்ச்சியில்லாத” மார்க்சுக்கும் இடையில் வேறுபாடுகளைத் தேடுகிறார்கள்.
மார்க்சின் மனிதாபிமானம் தற்காலிகமான தத்துவ ஈடுபாடு அல்ல. “கரடுமுரடான கம்யூனிசம்” என்று மார்க்ஸ் பெயரிட்டுக் கண்டித்த சித்தாந்திகள் தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ அப்படிச் சிந்திக்க விரும்புகிறார்கள். மனிதாபிமானம் மார்க்சியத்தின் ஒட்டுப் பகுதி அல்ல, அது மார்க்சியத்தின் இதயம், அதற்கு சக்தியும் வாழ்க்கையும் தருகின்ற உள்விசை மனிதகுலத்தின் மகிழ்ச்சிக்காகப் போராடுகின்ற கோடிக்கணக்கானவர்களின் உலகக் கண்ணோட்டமாக மார்க்சியத்தை ஆக்கியிருப்பது அதுவே.
1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் (மற்றும் Deutsch Französische Jahrbücherஇல் எழுதப்பட்ட இதனை ஒட்டிய கட்டுரைகளும்) மார்க்சின் ஆன்மிக வளர்ச்சியில் மிகவும் முக்கியமான சந்திக்குமிடமாக அமைந்திருக்கின்றன. இந்தக் கட்டத்துக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தகங்கள் மார்க்சியத்தை நோக்கி அவருடைய பாதையைக் குறிக்கின்றன என்றால், அதற்குப் பிறகு எழுதப்பட்ட புத்தகங்கள் எல்லாப் பகுதிகளிலும், சிறப்பாக அரசியல் பொருளாதாரத்தில் மார்க்சியத்தின் வளர்ச்சியை, ஸ்தூலப்படுத்துதலை, விரித்துரைத்தலைக் குறிக்கின்றன.
1844 -ம் வருடத்தை விஞ்ஞான உலகக் கண்ணோட்டம் பிறந்த வருடம் என்று கூறலாம். ஆனால் இந்த உலகக் கண்ணோட்டத்தின் உருவாக்கம் பூர்த்தியடைந்த வருடத்தை நம்மால் கூற முடியாது. மார்க்சும் எங்கெல்சும் மரணமடைகின்ற வரை எழுதிய எல்லா நூல்களிலும் அது தொடர்ந்தது. அது இன்றும் தொடர்கிறது, மனித சமூகம் நீடிக்கின்ற வரை அது தொடரும்.
குறிப்புகள்:
(1) Marx, Engels, Collected Works, Vol. 3, pp. 323, 324.
(2) Ibid., pp. 324, 325.
(3) Ibid., p. 300.
(4) Ibid., p. 326.
(5) Ibid., p. 304.
(6) Karl Marx, Grundrisse der Kritik der politischen Okonomie. (Rohentwurt) 1857— 1858, Berlin, 1953, S. 387.
(7) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 279.
(8) Ibid., p. 280.
(9) Ibid., p. 313.
(10) Ibid.
(11) Ibid., p. 296.
(12) Ibid., p. 302.
(13) கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள், பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 1, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1983, பக்கம் 11.
– தொடரும்
இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை
ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...
-
இந்த நாட்டில் தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளை விட தொடங்கிய காலம் முதல் டிராட்ஸ்கியவாதம் உடன் பிறந்தே கொல்லும் வ...
-
பல நாட்களாக எழுத நினைத்தும் நிறைவேறாமல் இருந்த இந்த எழுத்தை குறிபிட்ட அளவில் தயார் ஆன நிலையில் பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறே...
-
ஓடுகாலி காவுத்ஸ்கியை பற்றிய விமரசனத்தில் லெனின் மதிப்பீடு செய்துள்ளவைதான். இங்கே முன்னால் கம்யூனிஸ்டாக அவர் செய்த பணி எவ்வளவு உய...