நேற்றை கிளப் அவுஸ் விவாதம் சமூக அடிதளம் பற்றி ஒலி வடிவில் இங்கே அழுத்தி முழு வகுப்பையும் கேட்க்க முடியும் தோழர்களே.
வகுப்பு தொடங்கியவுடன் இன்றைய வகுப்பின் பேசுபொருளான "சமூக வளர்ச்சியில் அடிதளம் மேல்கட்டுமானம்" பற்றிய மார்க்சிய கோட்பாட்டை நான் பேசிய பின் தோழர் ரவீந்திரன் விளக்கமாக இன்று காணும் கருத்துமுதல்வாத போக்கை எப்படியெல்லாம் மார்க்சியத்தோடு இணைக்க பார்க்கின்றனர் மற்றும் மார்க்சிய பார்வையில் நாம் சரியாக அணுக கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக புரிய வைக்க முனைந்தார், அவரை அடுத்து பேசிய தோழர் ஈஸ்வரன் அ.கா அவர்கள் , மிக எளிமையாக புரிந்துக் கொள்ளும் வகையில் அடித்தளம் மேல் கட்டுமானம் பற்றி விளக்கியதோடு அல்லாமல் மார்க்சியத்தை மறுக்கும் மார்க்சியம் அல்லாத கருத்துகளை மார்க்சியம் என்று எப்படியெல்லாம் திணிக்கிறார்கள் என்று பேசினார். மேலும் தோழர் வேலன் பேசினார் இறுதியாக அடுத்த வகுப்பில் விவாதம் தொடரும் என்று வகுப்பை முடித்துக் கொண்டோம் 1:10 மேல் வகுப்பு செல்லவே..
மேலும் புரிதலுக்காக
மேல் கட்டுமானம் பற்றி மட்டும் இப்பொழுது பேசுவோம்.
ஒரு மாடி கட்டிடம் எவ்வாறு நிற்கிறது...அதன் அஸ்திவாரம் அடித்தளம் அல்லது அடிப்படை அமைப்பு என்று கூறுகிறோம். இந்த அடித்தளத்தின் இறுதியிலேயே மேற்கட்டுமானம் அல்லது மேல்மட்ட அமைப்பு நிலையாக நிற்கிறது. மாமேதை மார்க்ஸ் சமூக அமைப்பைஇவ்வாறு விளக்கி உள்ளார். சமூக அமைப்பு இறுதியாக தீர்மானிப்பது அதன் அடித்தளம் ஆகிய பொருளாதாரம் அதாவது சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளும் ( இயந்திரம் மற்றும் பல உற்பத்தி கருவிகள்)உற்பத்தி உறவுகளும்(மனித உழைப்பு ) மாகும் இவையே சமூகத்தின் அடித்தளமாகும்.
இந்த அடித்தளத்தின் மீதான மேல் கட்டமைப்பாக அரசியல் சட்டம் கல்வி மதம் ஒழுக்கம் கலை இலக்கியம் முதலியவை ....
இவற்றை இரண்டாகப் பிரிக்கலாம் அரசியல் கருத்தியல்
1).அரசியல் சட்டம் சார்ந்தவை ;அரசும் சட்ட விதிகளும் வன்மையானவை (வன்முறையானவை) .
2).கருத்தியல்கள் கல்வி மதம் ஒழுக்கங்கள் கலை இலக்கியம் முதலியன இவை வன்முறை அற்றவை.
இங்கே கட்டிடம் பற்றிய பேச்சு புரிதலுக்கான தே ஏனென்றால் சமூகம் உயிரோட்டமான அது பல்வேறு விதமான வளர்ச்சிப்போக்கில் அடித்தளம் மேற்கட்டுமானம் இடையில் தாக்கத்தை உண்டாக்குகிறது.
இன்றைய நமது அரசியலமைப்பு சட்டங்கள் தெய்வம் போல தொழுவது எதைக் காட்டுகின்றன நமது சட்டமானது தனியுடைமை பாதுகாப்பதும் தொழிலாளர் விவசாயிகளை நிராகரிப்பது தானே. அதுபோலவே கல்வியை மதம் கலை இலக்கியங்கள் யாவும் பரிசுத்தமானவன் அல்ல அவையும் நாம் வாழும் சமூக நீதிக்கு உட்பட்டவையே இவை இன்றைய சமூகத்திற்கான வையே.
நமது கல்வி முறையானது இச்சமூகத்திற்க்கு தேவையான கூலி உருவாக்குவதற்கான தே. இதன்மேல் மக்கள் கொண்டிருக்கும் மயக்கம் சொல்ல முடியாததாகும். தம் பிள்ளைகள் கல்வியால் முன்னேற்றம் அடையலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் நமது கல்வி முறையானது தமது உற்பத்தி உறவில் இருந்து பிரித்து தமது உழைப்பு செலவிட்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை நம்பி பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அங்கு சரியான அறிவையோ உற்பத்தியில் ஈடுபட்ட தக்க கல்வியோ அரசொ/தனியார் நிறுவனங்களோ கல்வியை அளிப்பதே இல்லை .கூலி அடிமைச் சந்தைக்கே பிள்ளைகளை தயாரிக்கிறார்கள் ஆனால் கூலி அடிமை சந்தையோ நிரம்பியுள்ளது .இதனால் அவர்கள் வேலையற்றோர் என்று தெருவில் நிற்கின்றனர். வேறு வகைப்பட்ட உழைப்பிலும் ஈடுபடுவதற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்கள் வாழ்வதற்கு வழியற்று நிற்கின்றனர்.
மதம் வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்க நிலவுடைமையாளர்கள் தோற்றுவிக்கப்பட்ட பொய் வழிபாடாகும் .
அதேபோல் கலை இலக்கியமும் இச்சமூக அமைப்பின் விற்பனை பொருளாகவும் வர்க்க அமைப்பின் பாதுகாவலனாகவும் பேணப்பட்டு வருகிறது.
மேற் கட்டுமான அமைப்பு ஆகிய இவையாவும் அடித்தளமான பொருளாதாரம் மீது அமைக்கப்பட்ட வையே இவற்றில் அரசியல் முதன்மை வகித்த போதும் பிற மேல்மட்ட அமைப்புகளும் அதற்கு பக்கபலமாக நின்று அடிப்படை அமைப்பை பெறுவதையேயாகும்.
அடிப்படை அமைப்பு தகர்ந்த பிறகும் மேல்மட்ட அமைப்பு முற்றுமுழுதாக அடிபட்டு விடும் என்று நாம் சொல்ல முடியாது சீனாவில் சோசலிச புரட்சி ஆரம்பித்து 18 ஆண்டுகளுக்குப் பின் கலாச்சாரப் புரட்சி ஒன்று நடத்த வேண்டி நேரிட்டது நாம் வரலாற்றில் கண்டோம். இதையைதான் மாவோ அடிப்படை அமைப்பிற்கும் மேல்மட்ட அமைப்பிற்கும் உள்ள தொடர்பையும் மேல்மட்ட அமைப்பிற்கும் அடிப்படை அமைப்பு உறவுகளையும் நாம் மறந்துவிடக் கூடாது என்றார்.
மார்க்சியம் என்பது, மனித
சமுதாயங்களின் இயங்கியலை அறிவதற்காக உருவாக்கப்பட்ட கொள்கை யாகும். இது, சமூகங்களின்
இயக்கத்தை வர்க்க உறவுகளின், வர்க்கமுரண்பாடுகளின் அடிப்படையில்
விளக்குகின்றது. வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
மார்க்சியத்தின் அடிப்படைத் தத்துவங்களாகின்றன. மார்க்சியத் தத்துவத்தை
ஜெர்மன்நாட்டைச் சேர்ந்த கார்ல்மார்க்சும் ஃபிரடெரிக் ஏங்கல்சும் 19ஆம்
நூற்றாண்டின் நடுப் பகுதியில் தோற்றுவித்தனர். இத்தத்துவம் பின்னர், ருஷ்யப்புரட்சியைத்
தோற்றுவித்த லெனினாலும் சீனத்தில் மாபெரும் புரட்சியை உருவாக்கிய மாசேதுங்கினாலும்
மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. மார்க் சியத்துக்கு முன்பிருந்த தத்துவங்களெல்லாம், உலகத்தை
விளக்கத்தான் செய்தன. மார்க்சியம் மட்டும்தான் உலகத்தை மாற்றுவதற்கு வழிகாட்டியது.
ஏங்கல்ஸ் குறிப்பிட்டதுபோல மார்க்சியம் என்பது, வெறும்
கோட்பாடு மட்டுமன்று; அது, செயல்முறைக்கான
தத்துவமாகும்.
மார்க்சியத் தத்துவத்தின் மிக முக்கியமான பகுதி வரலாற்றுப்
பொருள்முதல்வாதம் ஆகும். மனித சமூகத்தையும் அதன் வரலாற்று முன்னேற்றத்தையும்
அவற்றின் உற்பத்தி உறவுகளின் வழிப் புரிந்துகொள்வதே வரலாற்றுப் பொருள்முதல்வாதமாகும்.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் சமுதாய அமைப்பை, அடித்தளம் (Base), மேற்கட்டுமானம் (Super Structure) என இரண்டாகப் பிரிக்கின்றது. நமது புறவயமான சமுதாய வாழ்வியலை -
சமுதாய இருப்பை அடித்தளமாகக் கொள்கின்றது. இது, உற்பத்தி சக்திகள், உற்பத்திக் கருவிகள் மற்றும் உற்பத்தி உறவுகள் செயல்படுகின்ற
பொருளாதார அமைப்பைப் பற்றியது. பொருளாதார அடித்தளம் என்பதிலிருந்து மேலெழுகின்ற
அரசியல், சட்டம், சமயம், கலை, இலக்கியம் என்பனவற்றை மேற் கட்டுமானமாகவும் வரையறுக்கின்றது.
பொருளாதார உற்பத்தி உறவுகளின் சாராம்சமான அடித்தளம் என்பதைச் ‘சமுதாய இருப்பு’ (Social Being) என்றும் மேற்கட்டுமானம் என்பதைச் ‘சமுதாய உணர்வுநிலை’ (Social Consciousness) என்றும் அது மேலும் விளக்குகின்றது. இதற்கடுத்தநிலையில், சமுதாய இருப்பு
என்கின்ற அடித்தளம்தான், சமுதாய உணர்வுநிலை என்கின்ற
மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கின்றது என்று அடித்தளத்தின் தீர்மானகரமான
பாத்திரத்தை மார்க்சியம் வரையறுக்கின்றது. உணர்வுநிலை வாழ்வைத் தீர்மானிப்பதில்லை; மாறாக, வாழ்க்கையே உணர்வு நிலையைத்
தீர்மானிக்கின்றது. மார்க்சும் ஏங்கல்சும் ‘ஜெர்மானியக் கருத்துநிலை’ என்ற நூலில் இதனை விளக்கியுள்ளனர். எனவே, இலக்கியம் என்பதை மேற்கட்டுமானத்தின் ஒரு பகுதியாக மார்க்சியம் வரையறுக்கின்றது.
இதன் காரணமாக, இலக்கியமும் சமுதாய
இருப்பிலிருந்து உருவாகியுள்ள சமுதாய உணர்வுநிலைகளுள் ஒன்றாக அமைகின்றது.
சமுதாயத்தில் உற்பத்தி உறவுகள் குறிப்பிட்ட முறையின் வடிவத்தில் நிலவுகின்றன. இந்த முறைதான் சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்திலும் இதன் பொருளாதார அமைப்பு அல்லது பொருளாதார அடித்தளமாகும். இந்தப் பொருளில்தான் அடிமையுடைமை சமுதாயம், நிலப்பிரபுத்துவம், முதலாளித் துவம், சோஷலிசத்தின் பொருளாதார அடித்தளங் களைப் பற்றிப் பேசப்படுகிறது.
ஒவ்வொரு சமூக அமைப்பிற்கும் அதனதன் பொரு ளாதார அடித்தளம் உண்டு. இது இல்லாமல் பொரு ளாயத நலன்களை உற்பத்தி செய்ய முடியாது, சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடையாது. எல்லா உற்பத்தி உறவுகளின் ஒட்டுமொத்தமாகத் திகழும் பொருளாதார அடித்தளம் இறுதியில் மற்ற எல்லா சமூக உறவுகளையும் நிர்ணயிக்கிறது. இந்த சமூக உறவுகள் தான் பொருளாதார அடித்தளத்தின் மீது மேற்கட்டுமானமாக எழுகின்றன. ஒவ்வொரு பொருளாதார அடித்தளத்திற்கும் அதனதன் மேற்கட்டுமானம் உண்டு. மேற்கட்டுமானம் என்பது அரசியல், சட்ட, தத்துவஞான, தார்மீக, மத, மற்ற கண்ணோட் டங்கள், கருத்துக்களும் இவற்றிற்கு ஏற்ற ஸ்தாபனங் களும் நிறுவனங்களும் (அரசு, அரசியல் கட்சிகள், சட்ட, கலாசார, நீதிபரிபாலன, மத, மற்ற நிறுவனங் கள்) ஆகும்.
அந்தந்த பொருளாதார அடித்தளத்தால் தோற்று விக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட மேற்கட்டுமானம், தன் பங்கிற்கு தீவிர சக்தியாகி, அடித்தளம் உருவாகவும் வலுவடையவும் உதவுகிறது. நவீன சூழ்நிலைகளில் பொருளாதார அடித்தளத்தின் மீது மேற்கட்டுமானத்தின் தாக்கம் விசேஷமாக வெளிப்படுகிறது. முதலாளித்துவ நாடுகளில் அரசியல் மேற்கட்டுமானம் பிற்போக்கான பங்காற்றுகிறது, ஏனெனில் இது பழைய, காலங்கடந்த பூர்ஷ்வா பொருளாதர அடித்தளத்தையும், கண்டிப்பாக அழிந்து போக வேண்டிய சுரண்டல் வர்க்கங்களையும் பாதுகாக்கிறது. இங்கே மேற்கட்டுமானம் சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது, உலக ஆதிக் கத்திற்காகப் பாடுபடும் மிகப் பெரும் ஏகபோகங் களின் கருவியாகத் திகழ்கிறது. சோவியத் யூனியனிலும் மற்ற சோஷலிச நாடுகளிலும் மேற்கட்டுமானம் முற்போக்கான பங்காற்றுகிறது, சோஷலிச உற்பத்தியின் துரிதமான வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும் கலாசாரத்தை வளர்க்கவும் உதவுகிறது: உற்பத்தியில் உற்பத்திச் சக்திகள்தான் பெரிதும் மாறும் தன்மையுள்ள, மிகவும் புரட்சிகரமான அங்க மாகும். உற்பத்திச் சக்திகளின் நிலையைப் பொருத்து, இவற்றிற்கு ஏற்றபடி மனிதர்களின் உற்பத்தி உறவுகள் மாறுகின்றன, சமுதாயத்தின் பொருளாதார அடித்தளம் மாறுகிறது. அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்களோ தம் பங்கிற்கு மேற்கட்டுமானத்தில் உரிய மாற்றங்களுக்கு வழிகோலுகின்றன. குறிப்பிட்ட பொருளாதார அடித் தளத்தின் மீது எழும் மேற்கட்டுமானம் தன் பங்கிற்கு இந்த அடித்தளத்தைப் பலப்படுத்த தீவிரமாக முயலு கிறது, இதனால் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது அல்லது தடை செய்கிறது.
சமூக விஞ்ஞானம் என்ற முறையில் அரசியல் பொருளாதாரம் உற்பத்தி உறவுகளையும், இவற்றிற்கும் உற்பத்திச் சக்திகள், மேற்கட்டுமானத்திற்கும் இடையிலான சிக்கலான பரஸ்பர செயலாக்கத்தையும் ஆராய்கிறது. இந்த பரஸ்பர செயலாக்கத்தின் சாரத்தை வெளிப் படுத்தாமல் உற்பத்தி உறவுகளின், சமுதாயத்தினுடைய பொருளாதார அடித்தளத்தின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ள இயலாது. உதாரணமாக, முதலாளித்து வத்தின் கீழ் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான ஆழ்ந்த முரண்பாடுகளை ஆராயாமல், பொருளாதார வளர்ச்சியின் மீது பூர்ஷ்வா அரசு தாக்கம் செலுத்தும் முறைகள், வடிவங்களை வெளிப் படுத்தாமல் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை ஆராய முடியாது.
தொடரும் விவாதம்...
No comments:
Post a Comment