முதலாளித்துவ சமூக அமைப்பில் முதலாளிகளால் வகுக்கப் பட்ட ஜனநாயகமாகும். இங்கு ஆளும் வர்க்க முதலாளிகள் தம் வர்க்கத்தவரிடை மட்டும் ஜனநாயகத்தை வைத்துக் கொண்டு தொழிலாளி, விவசாயிகள் மேல் நடத்தும் சர்வாதிகார ஆட்சியாகும்.
நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், தேர்தல், வயது வந்தோர் வாக்குரிமை, தொழிற்சங்க உரிமை யாவும் முதலாளித்துவப் புரட்சி ஏற்பட்டபின் கிடைக்கப்பட்ட சலுகைகளாகும். இவை யாவும் ஆளும் வர்க்கத்திற்கு ஆபத்து ஏற்படாத மட்டுமே கிட்டுவன.
நெருக்கடி ஏற்படும் போது உரிமைகள் யாவும் தம் வர்க்க அளவில் வைத்துக் கொள்வர்.
ஆங்கிலேயர் தமது ஜனநாயக முறையைத் தாம் ஆண்ட காலணி நாடுகளுக்கும் வழங்கிச் சென்றனர். இதன்படி நாடாளுமன்றம் சட்டம் இயற்றவும், அதை நடைமுறைப்படுத்த அரசு அதிகாரிகளும், நீதி வழங்க நீதித்துறையும் ஆக மூன்று வடிவங்களும் தனித் தனியே சுதந்திரமாக, ஒன்றின் சுதந்திரத்தில் மற்றென்று தலையிடாது இயங்கும் என்ற தூய்மையான, கோட்பாடுகளைக் கொண்டிருக்கும். இது பாடப் புத்தக ஜனநாயகம். நடைமுறையில் வேறாக இருக்கும்.
அண்மையில் சாத்தான் குள விவகாரத்தில் போலிஸ் நீதிதுறைக்கு இடையிலே ஏற்பட்ட நிகழ்வு... ஏற்பட்ட முரண்பாடு யாவரும் அறிந்ததே. நீதித்துறைக்கும் காவல் துறைக்குமான மோதல் சாட்டப்பட்ட குற்றங்கள் தவறு என யார் வாதாடுகிறார், இவ்வழக்கை விசாரித்து நீதி வழங்குபவர் யார்? மக்களா?
புரிந்துக் கொள்ளவே தோழர்களே....
No comments:
Post a Comment