சொல்லும் வர்க்கச் சார்பும்

 ஒவ்வொரு சொல்லுக்குப் பின் வர்க்கச் சார்பு இருக்கிறது

உலகிலுள்ள எல்லா இயக்கங்களும் வர்க்கச் சார்புடனேயே அமைந்துள்ளன. சமுதாயத்தின் அடிப்படை அமைப்பான பொருளாதாரக் கட்டமைப்பிலுள்ள இயக்கமாயினும் சரி, அல்லது அது தவிர்த்த பிற எல்லாவுமான மேல்மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த இயக்கமாயினும் சரி, அங்கெல்லாம் வர்க்கச் சார்புடனேயே இயக்கங்கள் காணப்படுகின்றன. ஒருவகையில் பார்த்தால் இந்தச் ‘சொல்’ என்பதும் "வர்க்கம்’ என்பதும் கூட வர்க்கச் சார்புடனேயே பிறந்ததெனலாம்! முன்னிலையே பயன்படுத்தப்படும், தன்னிலும் மேலானவர்களிடம் 'நவில்க" "மொழிக" என்றும், தன்னைப்போல ஒப்பாரிடம் கூறு கூறுக" என்றும் வழங்கி வருகிறது.
ஒடுக்கப்பட்டவர் ஒடுக்குவோரிடமிருந்து மீட்சிபெற வேண்டும் என்ற நல்லெண்ணம் தோன்றுகின்ற போதுதான் மக்கள் முதலான பல்வேறு பகுதிகளைப் பாகுபடுத்திப் பார்க்கும் ‘வர்க்கம்’ என்ற சொல் பிறக்கிறது. எதிர்மறையாக முரண்பட்டிருக்க எல்லாச் சொல்களும் ஒன்று ஒரு தரப்பிற்கும் மற்றது மற்றத் தரப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது வெளிப்படை.
வர்க்கம் / வர்க்கச் சார்பு என்றால் என்ன?
சொல்லுக்கும் வர்க்கச் சார்புக்குமுள்ள தொடர்புகளை ஆயப்புகுமுன் வர்க்கம் என்றால் என்ன? வர்கச் சார்பு என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு ஒரு தெளிவான வரையறை செய்து கொள்ளலாம்.
வர்க்கம்
இயற்கைச் சமூகம் சிந்தனை முதலானவற்றில் ஒரே மாதிரியா நலன் கொண்ட குழுவே ஒரு வர்க்கமாகும்.
இயற்கையில் முரண்பாடான காட்சிகள் பல கண்ணுக்குப் பளிச் செனத் தெரியும்
இரவுXபகல்;
பயிர்Xகளை;
புலிXமான்.
சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகள் சில:
ஒவ்வொரு சமுதாயமும் தனக்கு முன் தோன்றிய சமுதாயத்திற்கு உற்பத்தி முறையால் முரண்பட்டு இருக் கிறது. உடைமை வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் முரண் உடையதாகும். கருத்து முதல்வாதமும் பொருள் முதல்வாதமும் சிந்தனையில்காணப்படும் முரண்பாடுகளாகும்:
எனவே முரண்பாடுகளால் வர்க்கங்கள் தோன்றுகின்றன என்று கூறலாம். . வர்க்கச் சார்புதத்துவம் எப்பொழுதுமே ஒருதலைச் சார்புடையது. எல்லா வர்க்கங்களின் நலனையுங் காக்கும் பொதுசன தத்துவம் உலகில் எப்பொழுதுமே இருந்ததில்லை. சமுதாயத்தில் உதித்தெழும் ஒவ்வொரு தத்துவமும் ஏதாவதொரு வர்க்க நலனைக் காக்கும் பொருட்டே பணி செய்கிறது. பல சமயம் வலுவுடைய வர்க்கம், தன் வர்க்க நலனைக் காக்கும் பொருட்டே, தனக்குரிய தத்துவத்தைத் தானே உருவாக்கிக் கொள் கிறது.
ஒரு தத்துவம் / கொள்கை / கருத்து | மெய்மை உடைமை வர்க்க நலனைக் காத்தால் அது உடைமை வர்க்கத் தத்துவம் என்றும் பாட்டாளி வர்க்க நலனைக் காத்தால் அதனைப் பாட்டாளி வர்க்கத் தத்துவம் என்றும் கூறுகிறோம்.
காந்தியடிகள் கண்ட தருமகருத்தாமுறை, வினேபாபாவே தோற்றுவித்த பூமிதான இயக்கம், மாநில அரசுகள் கண்டிருக்கும் நிலஉச்ச வரம்புச் சீர்திருத்தச் சட்டங்கள் முதலானவைகள் எல்லாம், கூர்ந்து கவனமாக ஆராய்ந்து பார்த்தால், உடைமை வர்க்கம் அழிந்துவிடாத படி பாதுகாப்பதற்காகச் செய்யப்பட்டவை அல்லது அவ்வர்க்கத்தின் ஆயுளை நீடிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவை என்பது புலப்படும். எனவே இத்தத்துவங்களை உடைமை வர்க்கத் தத்துவங்கள் என்றும், இவை உடைமை வர்க்கச் சார்புடையன என்றும் கூறலாம்.
மார்க்சுக்கு முன்னும் பின்னும் இன்றுவரையுள்ள விஞ்ஞான சோஷலிச தத்துவவாதிகள், சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் எல்லாம் சமூக உடைமைகளாக இருக்க வேண்டும் என்றும், யார் எந்தப் பொருளை உற்பத்தி செய்கிறார்களோ அந்தப் பொருளை விநியோகிக்கக் கூடிய சகல உரிமைகளும் அவர்களுக்கே இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
அதாவது நிலங்கள் எல்லோருக்கும் பொதுவான சமூகச் சொத்தாக இருக்கும் அந்நிலத்தில் வரக்கூடிய உற்பத்திப் பொருட்களை அந் நிலத்தில் பாடுபடுபவர்களே சகலருக்கும் விநியோகிப்பர். இந்தத் தத்துவம் உடைமையற்ற பரட்டாளிகளின் நலனைக் கொண்டிருப்பதால், இதனைப் பாட்டாளிவர்க்க தத்துவம் என்றும், இது விஞ்ஞான முறையில் அமைந்துள்ளதால் விஞ்ஞான சோஷலிச தத்துவம் என்றும். இதனை உரு வாக்குவதில் மார்க்சின் பங்கு அதிகமிருந்ததால் மார்க்சிய தத்துவம் என்றும் அழைக்கின்றனர். மார்க்சியம் வளத்தை எல்லோருக்கும் பங்கிடக் கூறுகின்றதேயன்றி சிலர் தவருகக் கூறுவதுபோல் வறுமையைப் பங்கு போடக் கூறவில்லை.
No photo description available.
Tholar Velan, Rocky and 8 others
2 Comments
4 Shares
Share

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...