அறிவு என்றால் என்ன ?

 அறிவு என்றால் என்ன ?

++++++++++++++++++++++++
அறிவின் தோற்றத்தை புரிந்துக் கொள்ள மிக எளிதாக மார்க்சியம் சமூக வளர்க்சி போக்கோடு பேசுவதை பாருங்கள்
ஆதியில் மனிதன் அறிவியலை அறிந்திருக்கவில்லை அதற்கான அறிவும் வளர்ச்சியும் அவன் அடையவில்லை; மனிதன் அறியாமையில் தவழ்ந்து கிடந்தான். இயற்கையின் பல்வேறு விளையாட்டுகளில் திக்கித் திணறிக் கொண்டிருந்தான். அவனுக்கு இயற்கையான இரவு பகல் ஏன் மழை புயல் வெள்ளம் மின்னல் போன்ற இயற்கை சக்திகளை கண்டு அஞ்சினான். அந்த இயற்கை சீற்றத்தை அறியாமையால் அடி பணிந்து வணங்கினான்.
மனிதனின் தேவைக்கேற்ப அவன் இயற்கையோடு போரிட்டான் அவனின் முயற்சியால் ஆரம்பகட்டத்தில் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகளும் பிற்போக்கு கற்பிதங்களினாலும் கவரப்பட்டான். அந்த காலத்து பல்வேறுவிதமான பிற்போக்குத் தனங்கள் அந்த சமூக தேவைக்காகவே ஏற்படுத்தப்பட்டது அவர்களின் அறிவு வளர்ச்சி பின்தங்கியே இருந்தது.
இயற்கைக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மனிதன் இயற்கையை எதிர்த்துப் போரிட்டான் தெரிந்தோ தெரியாமலோ இயற்கையை எதிர்த்துப் போரிட்டதன் விளைவாக மனிதன் இயற்கையை புரிய தொடங்கினான். மனித வாழ்க்கை போராட்டமானது அவன் உயிர் வாழ போராடித்தான் ஆக வேண்டும். உயிர் வாழ உணவு அவசியம். மனித வாழ்க்கைக்குத் தேவையான மற்ற பொருட்களை விட உணவுதான் முதன்மையான முக்கியமான பொருளாக கண்டெடுக்கப்பட்டது. உண்ண வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். உழைப்பு அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகிறது.
அறிவு என்பது இயற்கையையும் சமூக நடைமுறை செயல்பாடுகளையும் சார்ந்து இயங்குவதாகும். குறிப்பாக அது மனிதனுடைய பொருள் உற்பத்திக்கான நடவடிக்கையை பெரிதும் சார்ந்து அவற்றை அடிப்படையாகக்கொண்டு விளங்குவதாகும்.
அறிவு என்பது மனித மனதில் ஏற்படுத்தும் புறப்பொருளின் பிம்பமாகும் அறிவிற்கு ஆதாரமாக விளங்குவது புறப்பொருளே என பொருள்முதல்வாதம் கூறுகின்றது .
நடைமுறை என்பது உற்பத்தி , வர்க்கப் போராட்டம், அரசியல், விஞ்ஞானம், கலாச்சாரம் இன்ன பிற அனைத்து துறைகளிலும் நடைபெறும் மனித செயல்பாடுகள் அனைத்தையும் குறிப்பதாகும். (இதனை
பின் விரிவாக பார்ப்போம் தோழர்களே)
அதற்க்கு முன் நமது கல்வி பாடம் என்ன சொல்கிறது பார்ப்போம்.
அறிவு என்றால் என்ன ? என்று மாணவர்களிடம் கேட்டால் , அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான knowledge என்று பதில் சொல்கின்றனர்.
மேதைகளிடம் கேட்டால் “ உனக்கு என்ன தெரியும், என்ன தெரியாது” என தெரிவது. தான் அறிவு என்கின்றனர். கற்றவர்கள் கல்வி மூலம் பெறுவதெல்லாம் அறிவு என்கின்றனர்.
இதையே. கல்வி கல்லாதவர்களிடம் கேட்டால் அனுபவமே அறிவு என்கின்றனர்.
அறிவியல் அறிஞர்களோ. புதிய கண்டுபிடிப்புகளே அறிவு என்கின்றனர்.
இன்னும் அறிவுக்கு , கருத்துகளின் தொகுப்பு, இயற்கைபற்றிய ஞானம்,என பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.
அறிவுபற்றி இன்னும் பல விளக்கங்கள. உள்ளன, பட்டறிவு, படிப்பறிவு, தொழில்சார் அறிவு, துறைசார் அறிவு, பொது அறிவு, என பல குறிப்பான அறிவாக. கூறப்படுகின்றன.
ஆன்மீகவாதிகளோ அறிவை , பேராறிவு, சிற்றறிவு, என அறிவுக்கு விளக்கம் கொடுக்கின்றனர். தத்துவ்வாதிகளோ அறிவை. ஐந்தறிவு, ஆறறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு என்று அறிவை. வேறுபடுத்துகின்றனர்.
ஆக
பொருளைப் பற்றிய அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் அதைப்பற்றி அறியாமை நீங்கி கொண்டே இருக்கும். ஒரு பொருளைப் பற்றி எந்தளவுக்கு அறிந்து கொண்டிருக்கிறோம் எந்தளவுக்கு அறிந்து கொள்ளவில்லை என்ற அளவில் மட்டுமே வேறுபாடு நிலவுகின்றது. இது கோட்பாட்டின் இயங்கியல் அம்சமாகும் .
விரிவாக பின்னர்......

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...