மனித விடுதலை- சாதியத்தின் வேரும்-சி.ப
நான் மனித விடுதலை அதற்க்கான பங்களிப்பென்பது பற்றி விவரமாக எழுத நினைக்கிறேன், முயற்சிக்கிறேன் சரியான முறையில் விவரிக்க. பல சந்தர்ப்பங்களில் பல அரசியல் தலைவர்கள் சமூக நலனில் அக்கரை கொண்டுச் சமூக சீர்திருத்தம் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பயன்பட்டுள்ளது ஆம் சிலர் அரச பதவிகளில் மிக உயர்ந்த பொருப்புகளுக்கு வந்துள்ளனர் ஆனால் மறுபுரம் அதே கடை நிலை மக்களின் நிலை இன்னமும் தாழ்ந்து கொண்டே உள்ளது ஆகவே சரியான பாதையை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளதுஅதாவது நொண்டி குதிரையை நம்பி தண்ணீர் உள்ள ஆற்றை கட்க்க முடியாது, ஆம் மொத்த மக்களுக்கான விடுதலையின்றி இந்த சமூக இயக்கத்தை மாற்றமுடியாது அப்படியெனின் சரியான பாதை என்னவென்பதை விளக்கும் முன் நம் அரசுதான் என்ன ஏன் நாம் மாற்று அரசியல் பற்றி பேச வேண்டியுள்ளது. முதலில் நம்து பாராளுமன்றம் பற்றி, “தமிழக சட்டசபை தேர்தலின் போது பல முன்னனி கட்சிகள் வெட்கம் மானம் சூடு சொரனை எதுவும் இன்றி, கொள்கை அற்ற நிலையில் ஓட்டு மட்டுமே குறிக்கோளாக வலம்வந்தன, அவர்கள் வாக்குபடி அப்படியே அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் மாற்றம் நடந்திருக்குமா? அது அவர்களின் எல்லைக்கு வெளியே உள்ளவிவகாரமாக முடிந்திருக்கும்! இன்றோ GST என்ற வரிவிதிப்பு மாநிலங்களின் உரிமையை பறித்துவிட்டது ஆனால் ஒட்டு மொத்த ஓட்டு கட்சிகள் இதனை எதாவது ஒருவழியில் ஆதரித்தன,” ஆகவே அரசு என்றால் என்ன? என்பதை பார்க்கும்முன் இதனை எழுதுவதன் என் நோக்கம்!!!
நான் தினம் வாட்சாட் மற்றும் முகநூலில் காணும் பல நண்பர்கள் மெத்த படித்தவர்கள் அவர்கள் அறிவாற்றல் குதிரைக்கு கடிவாளமிட்டதுபோல் அவர்களின் தளபகுதி மட்டுமே சார்ந்தது, அதற்க்கு மேல் ஊடகங்களின் கைபாவையே அவர்கள், சுயசிந்தனை என்பது அரிதே! அறிவுஜீவிகளின் கொத்தடிமைகள்!! அவர்களுக்கு காலையில் எழுவதிலிருந்து இரவு உறங்கும்வரை சமூகத்தின் (முதலாளித்துவ சிந்தனையை மண்டியிட்டு வாழும்) உபதேசங்களில் வாழும் மனநிலை அல்லது சுரண்டலில் ஆழ்படும் அவர்களை சற்று எழுப்பிவிட என் சிறிய முயற்ச்சி. ஆகவே அரசு என்பதனை பற்றி பார்போம்:-
|
![]() |
மேலே உள்ள படம் வாயிலாக அரசு என்பது என்ன என்பதனை புரிந்திருப்பீர் என்று நினைக்கிறேன், அதாவாது மக்கள் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றம் பாராளுமன்றம் பற்றிபேசும் எல்லா அறிவு ஜீவிகளும் ஏனோ மக்களால் தேர்ந்தெடுக்கபடாத எப்பொழுதும் மக்களின் மீது ஆளுமை செய்யும் இராணுவம், நீதிமன்றம், நிர்வாகம் பற்றி தவறியும் வாய் திறப்பதில்லை!
யார் ஆட்சிக்கு வந்தாலும் தொடரும் இவர்கள் ஆளூமையே! அதனால் இதனின் அடிவேரை தேடி செல்வோமே!
அரசு எங்கின்ற இந்த ஏற்பாடு ( நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ் )ஏன் எதற்க்கு எப்போது தோன்றியது என்பதனை குறித்து அறிவோம்.
வரலாற்று பக்கம் தேடினால், மனித இனம் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன ஆனால் எழுத்து வடிவிலான வரலாறோ எழுதி சில ஆயிரம் வருடங்களே ஆகின்றன, மனிதன் முதன்முதலாக தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்த காட்டுமிராண்டிக்கு அரசுதேவைபடவில்லை தண்ணீரும் உணவும் தேடி குழுக்களாக கூட்டம் கூட்டமாக நடக்கதொடங்கிய ஆதிகால மனிதன் கூட்டாக வேட்டையாடி கூட்டமாக பகிர்ந்துண்டனர். அப்போது வேட்டையாடும் மிருகம் மற்றும் பழம் கிழங்கு ஒரே நாளில் தின்றுவிடவோ அல்லது அடுத்த நாள் தேவைக்கு சேமிக்கவோ தெரியாத அவர்கள் சமமாக பங்கிட்டுக் கொண்டனர், அங்கே தனி மனித வாழ்க்கையோ அல்லது தனி சொத்தோ பாதுகாக்கபடவில்லை அன்றோ எல்லாம் பொதுசொத்தாக இருந்தது எல்லோரும் சமமாக நடத்தபட்டனர் இதனை ஆதிகால பொதுவுடைமை சமூகம் என்பர்.
ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேட்டையாடினர், பிரசவகாலங்களில் பெண்கள் குகையில் தங்க நேரிடும் அப்போது மரம் செடி கொடிகளை கவனித்து பயிரிட கற்று தேர்ந்த மக்கள் விவசாயம் செய்ய தொடங்கினர். குகையைவிட்டு காட்டை நோக்கி நடந்த மனித சமூகம் காட்டை அழித்து விவசாயம் செய்யவும் அவன் ஆடு மாடுகளையும் வளர்க்கவும் தெரிந்து கொண்டான். அவன் விளைசலின் தணியங்கள் பண்டங்களையும் சேமிக்க அதன் வழி அவையே “தனி சொத்தாகி” காட்டை வளைத்துப் போட்டு தனியுடைமையாக்குகிறான், இயற்க்கை கொடுத்த பொதுவுடமையை மனிதன் “தனியுடைமையாக்குகிறான்”. பொதுவுடைமை காலத்தில் எந்த மரத்திலும் கனிகாய்களை பறிக்கலாம் ஆனால் தனியுடைமை காலத்தில் சண்டையும் அடித்து கொள்ளவும் தொடங்கினர். சொத்துடையவன் சொத்தற்றவன் அதாவது உடைமையுள்ள ஒரு கூட்டம் உடைமை அற்ற பெரும் கூட்டம் உழைத்தால் மட்டும் வாழமுடியும் என்ற நிலை உருவானது
இரண்டு நேர் எதிரான சமூக பிரிவு அதாவது காடுகளையெல்லாம் ஒரு சிலர் வளைத்து போட மற்றவர்கள் உழைத்து வாட ஏங்கும் நிலை உருவானது. சொத்துள்ளவன் உடைமை கூட்டத்தினன்(வர்க்கம்), உடைமையற்ற உழைப்பாளர்கள் உழைக்கும் வர்க்கம்(கூட்டம்). ஒருவர் மற்றவருடன் மோதல் உருவானது அதனை நிர்வகிக்க நிர்வாகம், சட்டம், நீதி என்ற அரசின் தூண்கள் தோண்றின...
இப்படியாக தனிசொத்து என்ற ஒன்று வந்த பிறகுதான் அதைப் பாதுகாப்பதற்க்காக நீதி, நிர்வாகம், இராணுவம்,போலிஸ், ஜெயில் எல்லாம் வந்தது, சொத்தை பாதுகாக்க அதாவது உள்ளவனை இல்லாதவனிடமிருந்து பாதுகாக்க உருவாக்க பட்டதே இராணுவம்,
இதனை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் ”வர்க்கப்பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன் விளைவாய்த் தொன்றியதே அரசு-லெனின்”.
அரசு என்பது ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறைக் கருவி என்றார் லெனின்.
ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்களை வைத்திருந்தார்கள், தனியுடைமை (சொத்துடைமை) சமுகம் அரசை உருவாக்கி செய்த முதல்வேலை பொது மக்களிடமிருந்த ஆயுதங்களை பறித்ததுதான். பின்னர் இராணுவமும் போலிசும் சீருடை அணிவித்து தன் சேவைக்கு (உடைமையாளர்களின் பணிக்குதான் என்பதனை அறியாமலே எதிரிக்காக அடியாளாக பல்லாயிரம் இராணுவத்தினர் மடிந்து கொண்டுள்ளனர்) வைத்து கொண்டது.
ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்க்கான உறுப்பே அரசு...
இப்பொழுது ஒட்டு சீட்டு அரசியலுக்கு வரலாம்,” டாட்டா, பிர்லா,அம்பானி,அதானி போன்ற பெரு முதலாளிகலுக்கும் ஒரு ஓட்டுதான், உழைத்தால்தான் உணவு என்று வாழ்கின்ற உழைப்பாளிக்கும் ஒரு ஓட்டுதான், இதனால் இருவரும் சமம் ஆகிவிடுமா?”, இதை ஜனநாயக நாடு எனலாமா? அல்லது பணநாயகமா? அதாவது முதலாளிகளுக்கான ஜனநாயகம்!
இதை வேரு வார்த்தையில் சொன்னால்,” 1947ல் ஆங்கிலேயர் கையிலிருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 200 கோடிக்கு அதிபதியாய் இருந்த பெரும் முதலாளி (இதனை உச்சாணியில் இருந்த தரகு முதலாளிகள் என்றெடத்து கொள்ளவோம்) கூட்டம் இன்றோ பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் மறுபக்கம் இரண்டு வேலை உணவுகூட இல்லாமல் வாடும் கூட்டம்”. இதனை புரியும் படி சொன்னால், அந்த பெரு முதலாளிகளின் தேவைக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கு நீதி மற்றும் இராணுவம் நெகிழ்ந்து போகவும், மொத்த மக்களின் உழைப்பை அந்த முதலாளிகளுக்கு காணிக்கையாக்கதான் அரசின் மொத்த இயந்திரமும் இயங்கி கொண்டுள்ளது”.
இப்பொழுது அமெரிக்க அடிமையாகி கொண்டிருக்கும் நடுவண் அரசு, ஊடகங்கள் ஊமைகளாகிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையை அறிவதே அரிதாய் உள்ள நிலையில். அரசின் அடிமட்டத்தை அசைக்காமல் மேலேறிக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.
எந்த அரசு முதலாளிகளின் தேவையை முன்னிருத்துகின்றதோ?
எந்த அரசு ஏகாதியபத்தியத்தை முன்னிருத்துகின்றதோ?
எந்த அரசு மக்கள் நலன் இன்றி முதலாளிகளின் சிருபான்மையினரின் உயர்வை தூக்கிபிடிக்கிறதோ?
அவை எல்லா மக்களின் அரசாக இருக்க முடியாது, இவற்றை அடியோடு மாற்றினால் மட்டுமே மக்களுக்கான விடிவுகாலம் வரும்!!!!
இதனை நான் மேம்போக்காக எழுதியுள்ளேன்... பாராளுமன்றம், சட்டமன்றம் அதனை பற்றி விரிவாக அடுத்த பதிவில் தொடர்வேன்- உங்கள் -சி.பி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் என் பதிவை தொடராமல் நமது சாதியம் மற்றும் சமூக சிந்தனை குறித்து கீழே விள்ளக்கவுள்ளேன்:-
எந்தவொரு ஒடுக்குமுறை வடிவமும் இரண்டு தளங்களில் நிகழ்கின்றன, ஒன்று கருத்தியல் தளம் மற்றொன்று பொருளாதர தளம். இதனை அடியொட்டி நாம் ஒடுக்குமுறை எனும் பிரச்சினையை ஆய்வு செய்வோமானால் – இனம், மதம், சாதி, திறன், குடியுரிமை, பாலியல் தேர்வு, கலாச்சாரம் போன்றவை – ஒடுக்குமுறைக்கான கருத்தியல் வடிவங்கள் என்பதும், வர்க்க ஒடுக்குமுறை என்பது பொருளாதார அடிப்படையிலானது என்பதும் விளங்கும். இருப்பினும், கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறையிலும் பொருளாதார பின்விளைவுகள் இருக்கும், ஏனென்றால் மேலாதிக்கத்தின் தோற்றுவாயே பொருளாதார அடிப்படையிலானது, அவ்வமைப்பிற்குள் பொதிந்திருக்கும் அதிகார உறவுகளானது மேல்மட்டத்தில் பிரதிபலிக்கின்றது. மேலாதிக்கம், ஆளும் வர்க்கத்தின் பொதுப்படுத்தும் விதிமுறைகளும், அதன் விளைவான ஆளும் வர்க்க அதிகாரத் தொடர்ச்சியும் வாழ்வனுபவத்தின் மூலம் வளர்த்தெடுக்கப்படுகிறது. ஒடுக்குமுறைக்கு அடித்தளமாய் இருக்கும் பொருளாதார நிலைமைகளை புறக்கணிக்கவியலாது. ஆனால், முதன்மை அல்லது அடிப்படை பிரச்சினை என்று அவரவரின் குறைபட்ட பார்வையினால், நாம் குறுகிய அணுகுமுறைகளையே காண முடிகிறது. இந்த முற்சார்பானது ஒடுக்குமுறையின் ஒவ்வொரு வடிவத்தையும் ஒரு தனித்த பிரச்சினையாகக் கருத வழிகோலும், அதன் விளைவாக, பல்வகை ஒடுக்குமுறையினை பிணைக்கும் மூல காரணத்தை அடையாளம் காணத்தவறிவிடும் சூழல் உருவாகிறது. இதன் விளைவாக, தமக்குள்ளாகவும், மற்ற இயக்கங்களோடும் முரண்பாடுகளும், பகைமையும் வளர்ந்து, பெரும்பாலும் அது சுய-விரக்தியில் சென்று முடிகிறது.
அகவாத கண்ணோட்டத்தினால் சமூகப் பாகுபாட்டின் வேரை நம்மால் அடையாளம் காணவும் முடியாது, அதனால் கருத்தியல்ரீதியான உருமாற்றங்கள் நிகழக் காரணமாய் இருக்கும் அடித்தளத்தை மாற்றியமைக்கும் முயற்சி சாத்தியமற்ற ஒன்றாகத் தோன்றுகிறது. ஒவ்வொன்றாய் களைவோம் என்று நாம் முடிவெடுத்தால், தன்னளவில் அது பெரும் பின்விளைவுகளையும், முரண்களையும் கொண்டதாகிப் போகும் (அம்பேத்கார்-பெரியார் நிலைபாடுகளை கூருகிறேன்). மேலும், அடித்தளம் மாறாத நிலையில் மேலாதிக்கமானது உருமாறிக்கொண்டே இருக்கும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு அது மேலெழும்.ஒடுக்குமுறை, மேலாதிக்கத்தின் முகவரமைப்பானது தொன்றுதொட்ட காலம் முதல் இருந்திருக்க வாய்ப்பில்லை, ஆகவே அதன் வரலாற்று வளர்ச்சியை நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல்வேறு காரணிகள் படிநிலை அமைப்பிற்கும், மேலாதிக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றன.
கடந்தகால சமூகம் குறித்த சமூக விஞ்ஞான ஆய்வானது – அதாவது உற்பத்தி முறையின் அடிப்படையிலான சமூக ஆய்வானது – சந்தைக்கென உற்பத்தி நடைபெறவில்லை என்பதையும், அப்போது ‘சரக்கு’, ‘பணம்’ குறிப்பாக கூலி உழைப்பு இருக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. அதனால் அப்போது சுரண்டலோ மேலாதிக்கமோ நிலவவில்லை. “சமூகத்தின் ஆரம்ப கால உற்பத்திகள் அனைத்தும் கூட்டு உற்பத்தி முறையிலானவையே, அதேபோல் பெரிய அல்லது சிறிய அளவிலான கம்யூனிச சமுதாயங்களுக்குள்ளாக நேரடி விநியோகம் மூலமாகவே நுகர்வும் நிகழ்ந்தது.”(engles- )
மனிதர்கள் வாழ்வதற்கு ‘பொருள்’ உற்பத்தி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். கச்சாப் பொருட்கள், கருவிகள் மற்றும் துணைக் கருவிகளின் பயன்பாடு அதற்கு முன்நிபந்தனையாகிறது. இவையெல்லாம் கிடைத்துவிட்ட போதிலும், ஒன்றுக்கொன்று அருகருகில் வைத்துவிட்டால் உற்பத்தியானது தானாக நிகழ்ந்துவிடாது. அதன் மீது யாரேனும் உழைப்பை செலுத்த வேண்டும் – ஆக, இங்கு நமக்கு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இவ்வாறாக, ஒரு பொருளை உற்பத்தி செய்ய நமக்கு உற்பத்தி சாதனங்களும், உழைப்பும் தேவை. உற்பத்தி முறையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது உழைப்புப் பிரிவினைக்கும், வர்க்க உருவாக்கத்திற்கும் வழிகோலியது. அப்போதைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களித்த சூழ்நிலைகளானது அப்போதைய சமூக ஒழுங்காகிப் போனது. சமூக விஞ்ஞானிகள் அவ்வமைப்புகளை முறையே புராதன (ஏறக்குறைய கம்யூனிச) அமைப்பு, அடிமையுடைமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் மற்றும் முதலாளித்துவ சமூகம் என்று விளக்கியுள்ளனர். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உற்பத்தி முறையான முதலாளித்துவம் குறித்தும், நாம் விரிவாகக் காண்போம். (இதனை பின் விள்க்கமாக காண்போம்)
இப்பொழுது இன்றைய சாதிய அடக்கு முறை குறித்து ஆய்வோம்:-
கருத்தியலை விதைப்பது என்பது பொருளாதார அமைப்பை அதனைத் தீர்மானிக்கின்றது. மனித வர்க்கத்தின் வளர்ச்சியின் ஊடாக உருவாக்கப்படும் சின்னங்கள், கட்டுக்கதைகள், வரலாற்றுப் புனைவுகள், இயற்கையை கட்டுப்படுத்த முடியாத மனிதர் தனக்கு மேலாக ஒரு சக்தி இருப்பதாக எண்ணுகின்ற எண்ணவோட்டம் போன்றவற்றால் கட்டமைக்கப்படுவதாகும். உழைப்பினை வழங்காது உருவாகும் மூளை உழைப்புப் பிரிவினரின் உருவாக்கம் என்பது அறிவு வர்க்கம் உருவாக்கப்படுகின்றது. முதலில் ஆண்பெண் பிள்ளைபெறும் நிலையே முதல் முதலாக தோன்றிய வேலைப்பிரிவினை என்றார் ஏங்கெல்ஸ்.
சாதியம் என்பது இறைக்கோட்பாடு, சமயக் கோட்பாடுகள் போல் கருத்தியலே அது அந்த பொருளாதார நியதிக்கு ஏற்ப பணிந்து செல் என்று போதிக்கின்றது. அந்தக் சமூகக் கட்டமைப்பினுள் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மற்றவர்களின் உழைப்பை வழங்காமலே மற்றவர்களின் உழைப்பை உறுஞ்சுவது மாத்திரம் அல்ல. மனிதர்களின் உழைப்பை பெறுவதற்காய் ஆண்டான் அடிமைகளாக தமது குடும்ப உற்பத்தி வட்டத்தினுள் சமூக உறுப்பினர்களை வதைக்கின்ற பொருளாதாரச் சிந்தனையைக் கொண்டது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு கூலி கொடுக்காமலே அவர்களின் உழைப்பை உறுஞ்சும் சமூக அமைப்பாகும். ஆண்டைகள் தமது ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பின் இருந்து பயன்பாட்டுப் பெறுமானத்தை பெருக்கிக் கொள்கின்றார்கள். இவ்வாறு பயன்பாட்டுப் பெறுமானத்தை பெருக்கிக் கொள்வதன் ஊடாக பரிவர்த்தனைக்கு அந்த உழைப்பை உண்டாக்கி மூலதனத்தினை ஆண்டைகள் பெருக்கிக் கொள்கின்றார்கள்.
சாதியம் என்பது உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி உறவு என்ற அடிக்கட்டுமாத்தின் மேல் கட்டப்பட்டதே அனைத்து வடிவங்களாகும். சாதியச் சிந்தனையான பொருளாதார அமைப்புச் சார்ந்த சிந்தனை வடிவம் என்பது அன்றைய கால கட்டத்தின் பொருளாதார கட்டமைப்பிற்கு துணைசெய்கின்றது.
சாதியம் என்பது இறைக்கோட்பாடு, சமயக் கோட்பாடுகள் போல் கருத்தியலே அது அந்த பொருளாதார நியதிக்கு ஏற்ப பணிந்து செல் என்று போதிக்கின்றது. அந்தக் சமூகக் கட்டமைப்பினுள் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மற்றவர்களின் உழைப்பை வழங்காமலே மற்றவர்களின் உழைப்பை உறுஞ்சுவது மாத்திரம் அல்ல. மனிதர்களின் உழைப்பை பெறுவதற்காய் ஆண்டான் அடிமைகளாக தமது குடும்ப உற்பத்தி வட்டத்தினுள் சமூக உறுப்பினர்களை வதைக்கின்ற பொருளாதாரச் சிந்தனையைக் கொண்டது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு கூலி கொடுக்காமலே அவர்களின் உழைப்பை உறுஞ்சும் சமூக அமைப்பாகும். ஆண்டைகள் தமது ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பின் இருந்து பயன்பாட்டுப் பெறுமானத்தை பெருக்கிக் கொள்கின்றார்கள். இவ்வாறு பயன்பாட்டுப் பெறுமானத்தை பெருக்கிக் கொள்வதன் ஊடாக பரிவர்த்தனைக்கு அந்த உழைப்பை உண்டாக்கி மூலதனத்தினை ஆண்டைகள் பெருக்கிக் கொள்கின்றார்கள்.
சாதியம் என்பது உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி உறவு என்ற அடிக்கட்டுமாத்தின் மேல் கட்டப்பட்டதே அனைத்து வடிவங்களாகும். சாதியச் சிந்தனையான பொருளாதார அமைப்புச் சார்ந்த சிந்தனை வடிவம் என்பது அன்றைய கால கட்டத்தின் பொருளாதார கட்டமைப்பிற்கு துணைசெய்கின்றது.
சிறிது இங்கு மார்க்சின் சிந்தனைவடிவத்தினை குறைகூறும் பார்வையானது எவ்வளவு மோசமன செயல் என்பதனை விளக்க அன்றே மார்க்ஸ் சொன்னவற்றை பார்க்கலாம்,
‘‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி‘ ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் விளைவுகள்‘‘மார்க்ஸ் ப. 201 மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் நூல் திரட்டு தொகுதி 3) என்ற பகுதிகளில் ஒர் நேர்மையான வரலாற்று ஆய்வாளரின் செயற்பாடே மிதமிஞ்சிக் கிடக்கின்றது. இந்தப் பகுதிகளில் மார்க்ஸ் நவீனமயமாதல், நகர்ப்புறமயமாதல், தொழிற்சாலையில் உழைப்பை விற்கும் நிலை ஏற்படல், உள்கட்டுமான (infrastructure) வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை எவ்வாறு உருவாக்குகின்றது, இப்படி பல விடயங்களை எடுத்துக் கூறுகின்றார். இந்த நோக்கில் வரலாற்றில் எவ்வாறான சமூகத் தன்மை கொண்ட மக்கள் அங்கு இருக்கின்றனர் என்பது பற்றிய நிலையில் இருந்து ஆய்வை முன்வைக்கின்றார். சமூகம் என்பது அதற்கே உரித்தான உலகப் பார்வையை, சமூக நீதி நெறியைக் கொண்டு இருந்ததே காரணமாகும். இதன் காரணமாக அவர்களுடைய சிந்தனையும் அவர்கள் சமூக உறவும் உறவு முறைக்கு உள்ளடங்கப்பட்டதேயாகும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தொட்ர்வேன் பின்னர்+++++++++
No comments:
Post a Comment