கிராமங்களில் வளர்ச்சி பெருகுகிறதோ இல்லையோ சாலைகள் பெருகிக் கொண்டுதான் உள்ளது. ஆம் அதன் தேவை எல்லோருக்கும் இல்லாமல் இல்லை ...
அதே அளவில் அந்த மக்களின் வாழ்வாதாரங்களை பெருற்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறதா என்பது தான் கேள்வி ?
இதோ நான் படத்தில் காட்டப்படும் நான்கு வழி சாலை ஆகட்டும் ஆறு வழி சாலை ஆகட்டும் அந்த நிலத்தை ஒட்டியோருக்கும் நிலத்தை இழந்தவருக்கும் ஏதோ ஒரு வகையில் தற்காலிக இழப்பீடு கிடைத்திருக்கிறது அல்லது இன்று நிலம் வைத்திருப்பவர்களுக்கு அந்த நிலத்திற்கான மதிப்பு பல் மடங்கு கூடிவிட்டது அவற்றை விற்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். அவை அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுமா என்ற கேள்வி தான் நான் கேட்பது?
கிராமப்புறம்தான் இன்றும் இந்தியாவின் பெரும் பகுதி வாழும் பகுதியாக உள்ளது அந்த மக்களின் வாழ்நிலை பற்றி சிந்திக்காத இந்த அரசு ...
அவர்களை சிந்தனை ரீதியாக மதரீதியாக ஜாதி ரீதியாக வாழவைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது ...
ஆனால் அவர்கள் வாழ்வதற்கான வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி பேசுவதில்லை ... நாமும் அவர்களை ஏளனப்படுத்துதலோடு நின்று கொண்டு அவர்களை மூடநம்பிக்கையில் உள்ளவர்களாக மதவாதியாக ஜாதிவாதியாக முத்திரை குத்தி ஒதுங்கிக் கொள்கிறோம்.
உண்மையாலுமே அவர்கள் மத்தியில் செயல்பட வேண்டிய நாம் செயல்படாமல் விலகி உள்ளது தான் அவர்களை இதுபோன்ற பிற்போக்குத்தனங்களில் வாழ வைக்கிறது ... இந்த பிற்போக்குத்தனங்களுக்கான அடிப்படை இந்த ஆளும் கும்பல் தான் என்பதை அவர்களுக்கு புரிய வைத்து இதிலிருந்து விடுபட வைக்க வேண்டிய பணி நமக்கு உள்ளது ...
அதற்கான தத்துவத்தை நமக்கு மார்க்சியம் வழங்கி உள்ளது அதற்கான பணி தான் நடைமுறையாக்கும் நமது பணியாக இருக்கும் ...
இதனைப் பற்றி தொடர்ந்து விவாதிக்க வாருங்கள் தோழர்களே
No comments:
Post a Comment