மார்க்சியத்தை தங்களின் எண்ணம்போல் எழுதிக் கொண்டே அதை விமர்சனம் செய்வோரை நீங்கள் பேசுவது மார்க்சியமல்ல என்று பொய்யான தகவல்களை தங்களின் எண்ணம்போன்ற போக்கில் நான் பேசுவதுதான் மார்க்சியம் என்று பேசும் மார்க்சியமில்லாத போக்கை அம்பலப் படுத்தும் நோக்கில் இந்தப் பதிவு எழுதுகிறேன் தோழர்களே.
அரசின் தொகை 2011 கணக்குபடி 1210854977 குழந்தைகள் 164515253 படித்தவர்கள் 763638812- படிக்காதவர்கள் 447216165 மொத்தம் வேலை செய்பவர்கள் -481888868 ..... இப்படி செல்லும் புள்ளி விவரம் என்னே சொல்கிறது சொல்லுங்கள் நானும் புரிந்துக் கொள்ளதான்.
· குறிப்பு:- “முதலாளித்துவம் வளர்ச்சி விவசாயத்தில் ஏதுவாகவும் பல வடிவங்களும் நுழைகின்றது மேலும் விவசாயத்தில் முதலாளித்துவம் அதன் தன்மையிலேயே தொழில்துறை போல் சமமாக வளர்ச்சி அடைய முடியாது ஒரு இடத்தில் ஒரு நாட்டில் ஒரு பகுதியில் ஒரு வடிவத்தில் விவசாயத்தில் ஒரு அம்சம் அது முன்னுக்கு எடுத்துச் செல்கிறது” - லெனின் .
· தொழில்துறை முதலாளித்துவம் விவசாயத்துறை முதலாளித்துவம் உள்ள ஒப்பீட்டு ரீதியான வளர்ச்சியையும் இயங்கியல் உறவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியை ஆராய முடியும். தொழில்துறை முதலாளித்துவத்தில் வெளிப்படும் தெளிவான வர்க்க அணி சேர்க்கையும் வர்க்க முரண்பாடுகளும் விவசாயத்துறை முதலாளித்துவத்தில் காண்பது இயலாது. ஆனால் ஒப்பீட்டு ரீதியான அளவில் தொழில்துறை முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஏற்ப அதன் பலம் பலவீனம் உள்வாங்கிக்கொண்டு விவசாயத்துறையில் முதலாளித்துவம் வளரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
· முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது இதற்கு முந்தி எல்லா உற்பத்தி முறைகளில் உயர்ந்த கட்டமாகும். அதுமட்டுமல்லாமல் முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது மிகவும் சிக்கலான பரிணாமங்களை பல்வேறு விதமான வடிவங்களில் கொண்டதாக அமைந்திருக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் சீராகவும் ஒரே மாதிரியாக ஒத்த தன்மை உடையதாகவும் அமைந்திருக்க இயலாது. முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் மாற்றங்களை எளிய மற்றும் நேர்கோடான சூத்திரத்தில் அடக்கிவிட முடியாது. அது இடத்திற்கு இடம் நாட்டிற்கு நாடு காலத்திற்கு ஏற்ப மாறுபட்ட வடிவங்களில் கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது. முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் இட்டுச்செல்லும் வடிவங்கள் பல இருப்பினும் அவை பொதுவாக இரண்டாகப் பிரிக்கலாம் ஒன்று புரட்சியின் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையை உருவாக்குதல் இந்த வகையான தங்குதடையற்ற முதலாளித்துவ மாற்றங்கள் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நடந்தேறின மற்றது மெதுவான படிப்படியான முதலாளித்துவ வளர்ச்சி இது பிரஷ்யன் ஷங்கர் பாணி முதலாளித்துவ வளர்ச்சி என்றழைக்கப்படுகிறது. இம்மாதிரியான முதலாளித்துவ வளர்ச்சி இன்று நமது நாட்டில் நடந்தேறி வருகிறது. தொடரும்…
The 2021 Census of India, also the 16th Indian Census, has been postponed till October 2023
No comments:
Post a Comment