டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு

பூமியிலுள்ள உயிரினங்கள் தங்களுக்கென ஒரு நிரந்தர உருவத்தோடு பிறந்ததில்லை என்பதை உலகிற்கு அறியச்செய்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்கையிலாளர் சார்லஸ் டார்வின்.

சார்லஸ் டார்வின் இளமைகாலம்.

1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விஞ்ஞானி சார்லஸ் டார்வின் இங்கிலாந்தில் பிறந்தநாள். தனது அறிவுக் கூர்மையினால் புதிய அறிவியல் கொள்கைகளைக் கண்டுபிடித்து வகுத்தளித்து, மனித சிந்தனையில் புரட்சிகரமான திருப்பங்களை உண்டாக்கிய விஞ்ஞானிகள் ஒரு சிலரே. அவர்களுள் டார்வினும் ஒருவர். உயிர்ப் பரிணாம இயலின் தந்தை என்று இவர் போற்றப்படுகிறார். இவரது தாத்தாவும், தந்தையும் மருத்துவர்கள். இவரையும் மருத்துவராக்கவே அவர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் இவரது ஆர்வமோ வேறாக இருந்தது. சிறு வயது முதலே இவர் பூச்சிகள், விலங்குகள் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவற்றைப் பிடித்து பரிசோதித்துப் பார்த்துவந்தார். இவரை பாதிரியாராக ஆக்கிவிடலாம் என்று பிறகு முயற்சித்தனர். அதுவும் நடக்கவில்லை. 1831-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து பீகிள் என்ற கப்பல் தென் அமெரிக்காவின் கடல் பகுதிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்றது. இந்த கப்பலில் இயற்கை விஞ்ஞானியாக டார்வினும் பயணம் செய்தார். கடல் வழியாகவும், ஆங்காங்கே இறங்கி நிலவழியாகவும் 5 ஆண்டு காலத்திற்கு இவர் மேற்கொண்ட பயணம் மிக முக்கியமான திருப்பமாக அமைந்துவிட்டது. உயிரினங்களிடையே காணப்படும் ஒற்றுமை, வேற்றுமைகளைப் பற்றி புரிந்துகொள்வதற்கு பயணத்தின் போது இவர் முயற்சித்தார். எலும்புகள் போன்றவற்றை சேகரித்தார். குறிப்புகளை எழுதி எடுத்துவந்தார். ஒரு தீவுக்கூட்டத்தில் இருக்கும் வெவ்வேறு தீவுகளில் வாழும் ஒரே இனத்தைச் சேர்ந்த குருவிகளின் அலகு அமைப்புகள், அவைகளுக்கு ஆங்காங்கே கிடைக்கக்கூடிய உணவுக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு இருப்பதை அவர் கண்டார்.  மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களை அங்கு சேகரித்தார்.

டார்வின் கலபகோஸ் தீவுகள் சென்றபோது, பிரம்மாண்ட அளவிலான ஆமைகளை அங்கு கண்டார்.

அந்த ஆமைகள் வெவ்வேறு தீவுகளில், வெவ்வேறு விதமான தனித்துவ பண்புகளோடு விளங்கின.எங்கெல்லாம் நிறைய உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது கழுத்தை சுருக்கிக்கொண்டன. ஆனால், வறண்ட தீவுகளில் நீளமான கழுத்துடன் காணப்பட்டனபுதிய வகை விலங்குகளை உருவாக்க எப்படி கலப்பினத்தை ஆர்வலர்கள் உருவாக்குகிறார்கள் என்பதை டார்வின் கவனிக்க ஆரம்பித்தார்.பிழைப்பதற்கு இயற்கையாகவே போராட வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தார்.எந்த இனம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறதோ அந்த இனம் உயிர் வாழ முடியும்.

தன்னை மாற்றிக்கொள்ளாத இனம் அடுத்த சந்ததியினரே இல்லாமல் மறைந்து விடுகிறது.மிகவும் ஆரோக்கியமாக வாழும் உயிரினங்கள் தங்கள் பண்புகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கின்றனர்.மாற்றத்தால் புதிய இனமாக மாறாத வரை தங்கள் குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

ஆமைகளில் உள்ள வேறுபாடுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவாகும்ஒருபுறம் தீவில், நீண்ட கழுத்துடன் உள்ள உயிரினங்கள், உணவுக்காக உயர்ந்த இடம் வரை செல்ல முடியும். மற்றொருபுறம் மிக குறுகிய கழுத்து உள்ள உயிரினங்கள் தரைமட்டத்தில் உள்ள புல் செடிகளை உண்டு, எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும்.

மேலும் அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையர் இனத்தில் இருந்து உருவானது என டார்வின் கூறுகிறார்இப்போது காணப்படும் அனைத்து வகையான உயிரினங்களும் ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்திருக்க வில்லை. இவை ஆரம்பகால உயிரினத்திலிருந்து பரிணமித்து ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைவிட்டு வளர்ந்து, வெவ்வேறு காலகட்டங்களில் உருவாகி வந்திருக்கின்றன என்பது டார்வினின் கோட்பாடு.  

"டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு

டார்வின் 1859ம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த தனது புத்தகத்தை வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் பிரிட்டனின் 19 ஆம் நூற்றாண்டின் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையை உலுக்கியது.

பன்முகத்தன்மை கடவுளிடம் இருந்து வந்தது அல்ல, அறிவியலில் இருந்து வந்தது என விளக்கம் அளித்து மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான வழியை வகுத்தவர் டார்வின்எல்லா உயிரினங்களையும் வைக்கும் அதே தளத்தில் தான் மனிதனையும் டார்வின் வைத்தார்.

 

1871-ம் ஆண்டு வெளியான சார்லஸ் டார்வினின் தி டிசன்ட் ஆஃப் மேன்' (‘The Descent of Man’) புத்தகம் இந்த உலகிற்கு உணர்த்த நினைத்தது மனிதனுக்கு, குரங்குகளுக்கும் மூதாதையர் ஒன்றே என்பதைத்தான். இங்குள்ள மதவாதிகள் கருதுவது போல் குரங்கில் இருந்து மனிதன் நேரடியாக பரிணாமம் அடைந்தான் என டார்வின் எங்குமே குறிப்பிடவில்லை. மாறாக பறவைகள், மீன்கள், பாலூட்டிகள், ஊர்வன உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு இடையேயான ஒற்றுமையை சுட்டிக் காட்டியதுடன் அனைத்து உயிர்களும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடையது என்றே அவர் குறிப்பிட்டார். அதாவது, எல்லா பெரிய ஜீவராசிகளும் சிறு உயிரினங்களில் இருந்தே மரபணு உரு இயல் மாற்றங்கள் மூலமே பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்றார்.

டார்வின் மறைந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் 20-ம் நூற்றாண்டில்தான் அவருடைய கோட்பாடுகள் அறிவியல் ஆதாரங்களோடு விளக்கப்பட்டன. டிஎன்ஏ-வின் (deoxyribonucleic  acid) கண்டுபிடிப்பு பலலட்சம்கோடி ஆண்டுகளாக எப்படி மரபணு மாற்றம் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டது என்பதற்கான விளக்கத்தை நல்கியது. சில உயிரினங்களின் உருவ அமைப்பு படிமங்களுக்கும், அவற்றின் அங்க அமைப்பு படிமங்களுக்கும் இடையே நிலவிய ஒற்றுமை டார்வினின் கோட்பாடுகளுக்கு மேலும் வலுசேர்த்தது. அதேபோல் குரங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மரபணு வரிசை ஒத்துப்போனதும் அந்த காலகட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களால் தெரியவந்தது.

மத ரீதியான எதிர்ப்புகள்:

டார்வினின் கோட்பாடுகளுக்கு எப்போதுமே மத ரீதியான எதிர்ப்புகள் இருந்துள்ளது. ஏனெனில், டார்வினின் கோட்பாடுகள் உலகம் இறை சக்தியால் உருவானது என்ற படைப்பாற்றல் கோட்பாட்டுக்கு விரோதமாக இருக்கிறது. எல்லா, மதநூல்களிலும் இவ்வுலகை மனிதர்கள் இறைவன் படைத்ததாகவே உள்ளது.உயிரினங்கள் ஒவ்வொன்றும் கடவுளால் தனித்தனியாக படைக்கப்பட்டவை என்று மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் நம்பிவந்தனர். மதங்களின் கோட்பாடுகளும் இந்த வகையினதாகவே இருந்தன. மாடுகளின் சாணத்திலிருந்து பூச்சிகள் உருவாகின்றன என்று அவர்கள் நம்பினர். காலகாலமாக நம்பப்பட்டு வந்த இத்தகைய சிந்தனைகளுக்கு மாற்றாக டார்வினின் கோட்பாடுகள் அமைந்தன. படைப்புக்கொள்கை என்பதை மறுத்து பரிணாமக் கொள்கையை டார்வின் முன்வைத்தார். டார்வினுக்கு முன்பாகவே இனம், பேரினம், குடும்பம் என்று விலங்கினங்களும், தாவர இனங்களும் விஞ்ஞானிகளால் வகைப்படுத்தப்பட்டிருந்தன. லாமார்க் என்பவர் பரிணாமக் கோட்பாடுகள் சிலவற்றை டார்வினுக்கு முன்பே கூறியிருந்தார். ஆனாலும், மாறிவரும் சூழல்களில், ஒரு உயிரினம் பரிணாம வளர்ச்சி கண்டு எப்படி பிழைத்து வாழ்கிறது என்பதை டார்வினின் பரிணாமக் கோட்பாடுகள்தான் சிறப்பாக விளக்கின. ‘இயற்கைத்தெரிவு வழிமுறைகளின்படி உயிரினங்களின் தோற்றம்என்ற நூலை டார்வின் 1859-ம் ஆண்டில் வெளியிட்டார். உயிரினங்கள் படிப்படியான சில குறிப்பிட்ட மாற்றங்களை காலஓட்டத்தில் மெல்ல மெல்ல அடைகின்றன என்பது டார்வினின் தத்துவம்.
இந்திய மதவாதிகளின் எதிர்ப்பும் ஏமாற்றும்.
பேரண்டத்தையும் மனிதர்கள் உட்பட உள்ள அனைத்து உயிரினங்களையும் படைக்க கடவுள் ஆறு நாட்களை எடுத்துக் கொண்டார் என்கிறது கிறித்தவ மதம். பைபிளில் உள்ள படைப்புக் கொள்கையை. அதன் அடிப்படையாக வைத்தே அமெரிக்காவில் சிலர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பரிணாமக் கொள்கையோடு படைப்புக் கொள்கையையும் சொல்லித் தர வேண்டும் என்கின்றனர். 

இங்கே இந்தியாவில் உள்ள இந்துத்துவாவாதிகள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுத்தாலும் மத அடிப்படைவாதம் என்று வரும்போது அங்குள்ள பழமைவாதிகளைப் பின்பற்றவே முனைகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை?

கோல்வால்கர் பழைய இந்தியாவை அல்ல, நவீன இந்தியா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்கிறார். அவரைப் பொறுத்தவரை நமது பண்பாடு மொழி இனம் ஆகியவை ஆரிய இனம். நவீன இந்தியாவின் அடையாளங்களாக இருக்க வேண்டும் என்கிறார். மத அடிப்படைவாதத்தை மட்டுமல்ல, பாசிசத்தையும் இந்துத்துவாவாதிகள் மேற்குலகிலிருந்தே பெறுகிறார்கள். அறிவியலுக்கும் மேலானதாக அவர்கள் மதத்தை வைக்கக் காரணம், கேள்வி கேட்கும் பகுத்தறிவு சிந்தனைகளைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர். வெறுப்பு, பயம் அடிப்படையில் அமைந்த இந்தியாவையே அவர்கள் கட்டமைக்க விரும்புகின்றனர்.

குரங்கிலிருந்து மனிதன் வந்ததை யாரும் பார்க்கவில்லை. அதனால் குரங்கிலிருந்து மனிதன் வந்தானென்பது அறிவியல்பூர்வவமாக தவறானது என்று மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சத்யநாத் சிங் சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆக அறிவியலை மறுத்து தாக்குதல் தொடுக்கும் மதவாதிகள் மக்களை மூடர்களாக இருக்க சொல்கின்றனர்.

முதலில் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று எங்காவது குறிப்பிட்டிருக்கிறாரா டார்வின்- இல்லவேயில்லை. டார்வின் மனிதக் குரங்குகளும், மனிதர்களும் ஏற்கனவே வாழ்ந்து மறைந்த மனிதக் குரங்குகளிலிருந்து பரிணமித்திருக்கலாம். மிகவும் சரியாகச் சொன்னால் அவர் வார்த்தைகளிலேயே ““We may infer that some ancient member of the anthromorphous subgroup gave birth to man”” இந்த வாக்கியத்தில் எங்கேயாவது குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா?  

உடற்செயலியல் ரீதியாக, கரு வளர்ச்சியின் போது, உருவ அமைப்பில், ஏன் மரபணுக்களின் செயல்பாட்டில் விலங்குகளுக்கான ஒற்றுமை அமைப்பை வெகுவாக விளக்கிவிட்டார்கள். குரங்கிலிருந்து மனிதன் வந்துவிட்டான். அந்தக் குரங்கு ஏன் இன்னொன்றாக பரிணமிக்கவில்லை என்பதும் சிறுபிள்ளைத்தனமான கேள்வியே! இயற்கைத் தேர்வு நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு வாதத்திற்கே வைத்துக் கொண்டாலும்கூட டார்வின் குறிப்பிடும் ancient anthropomorphous ancient anthropomorphous group வாழ்ந்த காலம் சமார் 60 இலட்சம் வருடங்களுக்காவது முந்தையது. ஆதித்தாய் என்று கருதப்படும், மனிதனுமல்லாத, மனிதக் குரங்குமல்லாத நிமிர்ந்த நடை பழகிய அர்திபித்திகஸ் ரேமிடஸ் வாழ்ந்த காலம் குறைந்தது 43 இலட்சம் வருடங்கள். இந்த மதவாதிகள் அத்தனை வருடங்கள் வாழ்ந்து விடுவார்களா என்ன அதையெல்லாம் பார்ப்பதற்கு? மனித ஆயுளை வைத்து பரிணாமத்தையெல்லாம் கணித்துவிட முடியாது. இக்கால அறிவியல் சூழல் போலவே தகுதியுள்ளவை தங்கி நிற்கும்’ ((Survival of the fittest)) என்பதும் டார்வினால் வரையறுக்கப்பட்டதல்ல.

டார்வின் சமகாலத்தவரான ஆப்ஃபிரட் ரஸ்ஸல் வாலங் மலாய் தீவுக் கூட்டங்களில் ஆய்வு நடத்தி இந்தக் கோட்பாட்டினை உருவாக்கினார். ‘இயற்கைத் தேர்வுதம் சூழலுடன் மிகச் சிறப்பாக, ஒத்திசைந்துபோகும் உயிர்களே பிழைத்திருக்கும். அவை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு மரபணு சார்ந்த பண்பியல்புகளை அதிக அளவில் வழங்கும். சரிவர ஒத்திசைந்து போகாதவை வெளியேற்றப்படும் என்பதே இந்த ஆய்வு. இந்த ஆய்வை டார்வின் ஏற்றுக் கொண்டார். அதேபோல இயற்கைத் தேர்விற்கு பாரபட்சம் கிடையாது.

அதுமட்டுமல்ல, அனுகூலமான பண்புகளைக் கொண்ட விலங்குகள் வெற்றிகரமாக வாழ்ந்துவிடும் என்பதும் தவறு.

 

விஞ்ஞானிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு:

மதவாதிகள் மட்டுமல்ல கடந்த காலங்களில் சில விஞ்ஞானிகள்கூட டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். டார்வினின் கோட்பாடுகளை உறுதி செய்யும் அளவுக்கு உயிரிகளின் படிமங்கள் கிடைக்காததையும், வாழும் மற்றும் அழிந்த உயிரினங்களுக்கு இடையேயான ஒற்றுமையை மூலக்கூறு உயிரியல் வாயிலாக உறுதிப்படுத்த முடியாததையும் சுட்டிக் காட்டி விஞ்ஞானிகள் டார்வின் கோட்பாட்டை ஏற்க மறுக்கின்றனர்.

அண்மையில் 'தி கார்டியன்' பத்திரிகையில் ஜூல்ஸ் ஹோவர்டு எனும் விலங்கியல் நிபுணர், "டார்வினின் கோட்பாடுகள் நாம் இயற்கையில் காணும் பல்வேறு விஷயங்களை விளக்குவதாகவே உள்ளது. ஆனால், இதைவிட துல்லியமாக இப்பூமியில் வாழும் உயிரினங்களின் பன்முகத்தன்மையை விளக்கும் ஓர் ஆய்வறிக்கை வெளிவந்தால் டார்வின் கோட்பாடு அறிவியலில் இருந்து வெளியேற்றப்படும்" எனக் கூறியுள்ளார்.

ஆக இயக்கவியல் என்பதனை நாம் புரிந்துக் கொண்டால் அறிவியல் வளர்ச்சியானது புதிய புதிய கண்டுபிடிப்புகள் போல் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை வளர்தெடுக்கும் முயற்ச்சி வரவேற்க்க தக்கவையே.

-சிபி

 



வரலாற்று போக்கில் பெண்ணும் பெண் விடுதலையும்-சிபி

 முன்னுரை:-

நான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்துகளை ஒன்றிணைத்து இங்கே தொகுக்க நினைக்கிறேன்.நிறை குறைகளை சுட்டிக் காட்டுங்கள் தோழமைகளேஇந்தப் பகுதியை எழுத நீண்ட காலமாக முயற்ச்சி செய்துக் கொண்டுள்ளேன் அவை இப்பொழுதுதான் சாத்தியமாகி உள்ளது.

இந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்கமாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், ஆண்பிள்ளைகளுடன் விளையாடவோ, பேசவோ கூடாது என ஏராளமான கட்டுப்பாட்டுகள் காலம் காலமாக பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டே வருகின்றன.

 அதே போல் பெண்களின் விடுதலை பற்றிய பல்வேறு தளங்களிலும் வற்புறுத்தப்படுகின்றன. பெண்கள் மீதான ஒடுக்குமுறையினை அடையாளம் காண்பதிலும் அதற்குரிய விடுதலை பாதையைத் தேர்வு செய்வதிலும் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இதில் சரியான நிலைப்பாடு மார்க்சியர்வாதிகளை தவிர வேறு யாரும் அல்ல.

 நமது ஆசான் எங்கெல்ஸ் சொல்லியது போல் சமூகத்தில்

ஆதி பொதுவுடைமை சமூகத்தில் சுதந்திரமாக இருந்த பெண்  அடுத்த கட்ட உடைமை சமூகத்தில் ஆணுக்கு பெண் அடிமை ஆவதோடு அவளின் எல்லா திறமையும் முடகப் படுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் சிறிது சுதந்திரம் கிடைத்தாலும் ஒட்டுமொத்த பெண்களின் சுதந்திரமாகவோ அல்லது பெண்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபட்டு விட்டார்கள் என்பதோ அபத்தமே ஏனெனில் ஒடுக்கும் வர்க்கத்தின் கையில் உள்ள  அதிகாரம் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக சுதந்திரம் அளிப்பதற்காக இல்லை என்பது உண்மை நிலவரம்.

பெண் விடுதலைக்கான சில போராட்ட வடிவங்கள் கோட்பாடுகளும் அவற்றை நாம் சீர்தூக்கி பார்த்தால் பொதுவுடைமை சமூகத்தில் மட்டுமே ஆண்பெண் சமத்துவத்தை காண முடியும்..

 

NGO பாணி 

சீர்திருத்தவாத 

முதலாளித்துவ

சோசலிச

 ஒரு சமுதாயம் சிறக்க சமூகத்தின் சரிபாதியான பெண்கள் சுதந்திரம் மானவர்களாக நல்ல கல்வி கற்றவர்களாக சமூக அறிவு படைத்தவர்களாக மற்றும் சுதந்திரமான ஆளுமை கொண்ட தாயால் மட்டுமே ஒரு குழந்தையை சமூகத்தின் சரியான பங்களிக்கும் திறன் கொண்ட வளமான எதிர்கால சந்ததியை வளர்க்க முடியும் என்பது திண்ணம்.

ஏன் பெண்மீதான இத்தனை வன்மம் கடந்த காலத்தை சற்று திரும்பிப் பார்ப்போம்.அதனூடாக இன்று பெண் மீது சுமத்தபட்டுள்ளக் கட்டுக்கதைகளையும் அறிவோம்.

 மதம் பெண்கள் மீது ஏவி உள்ள அடக்குமுறை.

 ஒவ்வொரு மதத்தின் கடும் கோட்பாட்டு வாதம் பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறது.ஒவ்வொரு மதகலவரம் மதவெறி படுகொலையின் போதும் பெண்களை மிருகத்தனமாக தாக்குகிறார்கள் பாலியல் வன்முறையில் பெண்களை யே துன்புறுத்துகின்றனர்.

பெண்களை சமூகத்தின் அடிமை நிலையில் வைத்திருக்கும் மதம் அதையே புனிதமானது என்றும் மாற்று மதத்தினர் ரத்தக் கலப்பை தடுக்கும் தன் மதத்தின் தனிச் சிறப்பான அம்சமாக பீற்றிக் கொள்கிறது. கற்பு புனிதம் என்று செயற்கையாக ஏற்பட்ட கருத்தை கொண்டே பெண்கள் மீது இழைக்கப்படும் கொடுமை கணக்கில் அடங்காதவை.

 பெண்களது உடல் உயிர் வாழ்வு என்பதனை மதமே தீர்மானிக்கிறது.

1947ல் நாடு பிரிவினையின் போது பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பல அதில் முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே கிராமம்  கிராமமாக இந்துப் பெண்கள் கிணறுகளில் வீசப்பட்டனர் உயிரோடு கொளுத்தியோ நஞ்சு கொடுத்தோ கொன்றார்கள் இதை செய்தவர்கள் தந்தை சகோதரன் கணவன்- இவர்கள் செய்த்தது தங்களின் குலகௌரவம் காப்பதற்காக என்று!!!.

 நாடு பிரிவினையின் போது மதக் காரணங்களுக்காக நேற்று வரை ஒன்றாக இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் காட்டுமிராண்டிகள் போல் அதில் பெண்களை இழிவுபடுத்தியும் பெண்களின் உடல் மீது மத சின்னங்களை வரைந்தும் கொக்கரித்தார்கள்.

குஜராத்திலோ மதக் கலவரத்தில் பெண்கள் குறிவைத்து தாக்கப்பட்டதும் அவர்களின் மீதான வன்முறைகளும் நாடறிந்த ஒன்று. இன்று இந்துமதவெறி நிறுவனங்கள் பெண்களை இழிவுபடுத்தி வேத மனு தர்மப்படி வாழ பயமுறுத்துகின்றது. குண்டர்கள் போல் பலாத்காரமாக பெண்களுக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றன மத நிறுவனங்கள்.

பெண்கள் மீது மட்டுமே திணிக்கப்பட்ட ஒழுக்கம் பெரும் வன்முறை தன்மை கொண்டதாகவும் ஒடுக்குமுறையின் அடையாளமாகவும் வரலாற்றுப் பக்கங்களில் காணலாம்.

தனிச் சொத்துரிமைக்காக வாரிசுரிமை பாதுகாக்க ஆண் பெண்ணுக்கு கற்புக் கோட்டைபாட்டை வலியுறுத்தினான்.

குடும்பத்தில் பெண்.

++++++++++++++++++

பெண் குழந்தை கருவில் இருக்கும் போதே அவளின் மீதான உதாசீனம் ஆரம்பமாகிவிடுகிறது .அவள் பிறந்த பின் அவளுக்கான எல்லாமே ஆணிடம் இருந்து வேறுபட்டே நடக்கிறது. குழந்தைப் பருவத்தில் விளையாட்டு கூட வேறுபட்டு உடையவையாக இருப்பதும்; குடும்பத்தில் தாயுடன் சேர்ந்து வீட்டு வேலை செய்து கற்றுக்கொள்ள வேண்டும் .அவள் மீது சுமத்தப்படும் ஒரு சுமையை ஏனோ ஆண்கள் மீது சுமத்துவதில்லை.வீட்டிற்குள் உள்ள எல்லா வேலையையும் பெண்ணே செய்ய வேண்டும்.

 பெண்கள் தன் குடும்பத்தில் போராடியே சில சுதந்திரம் பெற முடிகிறது. ஒரு பெண் சுதந்திரமான அடையாளமற்றவளாக ஒருவரின் மகளாக, மனைவியாக,தாயாக இப்படி பரிணமித்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம் இவை குடும்பத்தின் எல்லைக்குள் வாழ வேண்டிய கட்டாயம்.

குடும்ப கூண்டில் பெண்கள் சில சலுகைகளை அனுபவித்தாலும்,  சமூகம் பெண்ணின் மீது சுமத்தப்பட்டுள்ள தளைகளை அறுத்து எறிவது கடினமான ஒன்றேசமூக சிந்தனையாளர்கள் சமூகத்தைத் கட்டிக்காப்பதன் பெயரில் தர்ம சாஸ்திரங்கள் நல்லொழுக்க கோட்பாடுகள் என்று மத கோட்பாடுகளை மக்கள் மீது திணித்து அதில் பெண்கள் மீது பெரும் சுமையை சுமத்தினர் சுமத்தப்பட்டுள்ளது.

அதாவது போர்களின் விளைவாக பலப்படுத்தப்பட்ட தனியுடமை அடிப்படையிலான குடும்ப முறையும் அதைத்தொடர்ந்த ஆணின் ஆதிக்கமும்,  சமூக வேலைப் பிரிவினையும் , அதன் உற்பத்தியிலும் பெண்களை நிராகரித்து , இதன் விளைவாக பெண்களுக்கு இருந்த சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறித்ததாக புரிந்துக் கொள்கிறோம்.

பெண்களை அடிமை நிலைக்குக் கொண்டு நிறுத்தியது இது .அப்போது சமுதாயத்தில் பலம் பெற்ற ஆணின் பலாத்காரத்தில் உருவாக்கப்பட்டது. சமூக உற்பத்தியில் தன்னுடைய உழைப்பை கொடுத்தபோது ஆணுக்கு நிகராக பெண்கள் இருந்த கூட்டு சமுதாய நிலையிலிருந்து தாழ்ந்து இப்போது குடும்பத்திற்குள் சுருக்கப்பட்டால். இதனை சுருக்கமாக கூறுவதெனில் தமிழ் சமுதாயத்தில் உறுதிப்படுத்தப்பட்ட அரசு சமுதாயத்தில் தனியுரிமையை கோலோச்சிய சமூகத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட இழுக்கே இதுவாகும்.

 "எந்த நுகத்தடியில் இருந்து விடுதலை அல்லது எந்த வர்க்கத்தின் நுகத்தடியிருந்து விடுதலை எந்த வர்க்கத்துக்கு விடுதலை ?இந்த கேள்விகளை கேட்காமல் இவற்றுக்கு முதலிடம் கொடுக்காமல் இவற்றைப் பேசாது இருப்பதை மறைப்பதை,மழுங்கடிப்பதை  எதிர்த்துப் போராடாமல் அரசியலையும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சோசலிசத்தையும் பற்றி யாராவது ஒருவர் பேசினால் அந்த நபர்" (லெனின் நூல் திரட்டு  தொகுதி 39 பக்கம் 285-288) இந்த ஆட்சியாளர்களின் ஆம் முதலாளித்துவ கையாள்,அவர்கள் உழைக்கும் மக்களின் பரம விரோதி, ஆட்டு தோல் போர்த்திய ஓநாய் என்கிறார் லெனின்.

இந்தப் பொய் ஒழிஞ்சு போகட்டும் ஒடுக்கப்பட்ட வர்க்கம்,  ஒடுக்கும் வர்க்கம் மூலதனம்,தனிச் சொத்துரிமை களஞ்சியம் கொள்ளாத தானியத்தை  வைத்துக் கொண்டு பசியால் வாடும் மக்களை அந்த உபரி தானியத்தின் மூலமாக அடிமைப்படுத்துகிறது மக்கள் இருக்கும் வரை,எல்லோருக்கும் சுதந்திரம் சமத்துவம் என்று பேசுகிற பொய்யர்கள் ஒழியட்டும்.

எல்லோருக்கும் சுதந்திரம் எல்லோருக்கும் சமத்துவம் என்பதற்கு பதிலாக ஓடுபவர்களை சுரண்டல்களையும் எதிர்த்து போராட்டங்கள் ஆரம்பமாகட்டும் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் செய்வதற்கான வாய்ப்பு ஒழிக்கப்பட வேண்டும் இதுவே நம்முடைய கோஷம்.

 

இனி நூலின் தொடக்கம்.

முகவுரை

ஆதியில் பெண்

வர்க்க சமூகத்தில் பெண்

முதலாளித்துவ சமூகத்தில் பெண்

இன்றைய சமூகத்தில் பெண்

பெண் விடுதலைக்கான போராட்டங்கள்

முடிவாக

ஆதியில் பெண்

 

மானிட சமூக வளர்ச்சியின் ஊடாக பெண்ணின் பங்களிப்பு.

 

நாம்வாழ்ந்து வரும் மக்களைப் பற்றி நம்மால்முடிந்த அளவு நன்கு அறிந்துகொள்ளவதுஒவ்வொருமனிதனின் கடமையாகும்இவ்வாறு அறிந்துகொள்வதன் மூலம் ஒருவருக்கொருவர் சரியான வழிமுறை வகுத்துக் கொள்ளக்கூடியதாயிருக்கும். மனித சமுகம் பற்றிய ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததும் பெரும் பயன் தரக் கூடியதுமாகும்.

இப்பொழுதுள்ள மனிதவகைகள் யாவும் மனித இயல்புகளையே பெற்றிருந்த ஒருவகைப் பூர்வீக மனிதரிலிருந்தே(குரங்கிலிருந்தே) வந்தவை என்பதில் இப்பொழுது சந்தேகமில்லை. அப்பூர்வீக மனிதவகையினரிலிருந்து தோன்றியவர்களே இப் பொழுதுள்ள மனித வகையினர். மனித இனம் ஓரிடத்திலிருந்து இன்னோரு இடத்திற்க்கு நகர்வில் முன்னேறிக் கொண்டும் மாறிக் கொண்டும் உள்ளதென்றால் மிகையன்று.

 இப்பொழுதுள்ள ஆபிரிக்க நீக்ரோகள், ஐரோப்பிய வெள்ளையர்கள் ’, சீனவிலுள்ள மஞ்சள்நிற மக்கள்மற்றும் உலகெங்கும் சிதறுண்டுள்ள பல்வேறு வகையினர் இன்று பல்வேறு நாடுகளாக பிரிந்துக் கிடக்கும் நிலையை அறிவோம் ஆக அன்றிலிருந்து இன்று வரை இந்த மாற்றங்களின் ஊடே பெண்களின் நிலை பற்றி பேசுவதே இந்த நூலின் நோக்கம்.

புராதன எலும்புக்கூடுகளை ஆராய்ந்து பார்த்தபொழுது முன்னிருந்த சில மனிதவகையினர் இப்பொழுது வாழும் மனிதவகையினரிலிருந்து சில முக்கிய விவரங்களில் மாறுபடுவதாகக் காணப்பட்டது. அழிந்து விட்ட மனித உருவங்களின் பழைய எலும்புக்கூடுகள் நியாண்டர்தல் இனத்தைச் சேர்ந்தவை. வருங்காலத்திற் புதிய வகைகள் கண்டுபிடிக்கப் படும் என எதிர்பார்க்கலாம்

வாலில்லாக் குரங்குகள் இறைச்சியுணவு சிறிது உண்கின்றன ; ஆனால் அவை பெரும்பாலும் தாவர உணவையே விரும்புகின்றன. ஆதிகாலமனிதர் இயற்க்கைசார்ந்தஉணவுகளையும் பெரும்பாலும் மிருகங்களின் உணவையே நெடுங்காலமாகப் பச்சையாக, உண்டு வந்தனர். மிருகங்களை, அவை பெரியவை ஆயினும் சிறியவை ஆயினும், வேட்டையாடியே அவ்வுணவை உண்டனர்.

இப்படி நீண்டுக் கொண்டிருக்கும் மனித இனத்தின் ஆதியை சுருக்கமாக பார்ப்போம்.

1).சுமார் 4 மில்லியன் (40 இலட்சம்) ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக வாலில்லாக் குரங்கு இரண்டு கால்களில் நடக்க தொடங்கின.

2). 150000 ஆண்டுகளுக்கு முன் ஹோமொசெபியன் என்ற முதல் நவீன மனிதர்கள் தோன்றி இரை தேடி வர்க்க ஒடுக்குமுறை அற்ற சிறு குழுக்களாக நாடோடிகளாக வாழ்ந்த காலம்.

3). 10000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலில் விவசாயி வாழ்க்கை தொடங்குகிறது, அதாவது உணவுக்கான தானிய பயிர் வளர்க்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் கற்கிறான்.

4). 7000 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பை பயன்பாட்டிற்க்கு வருகிறது.

5). 6000 ஆண்டுகளுக்கு முன்பு நகரங்களும் செம்பு பயன்பாடும் நைல் நதிக்கரையில் காணப்படுகிறது.

6). 6000 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 3000) அரசுகள் உருவாக்கம், சமூகம் வர்க்கமாகவும் ஆணுக்கு பெண் கீழானவள் என்ற போக்கு ஆரம்பமாகிறது.

( நூல் ஆதரம்:- உலக மக்களின் வரலாறு கிறிஸ் ஹார்மன் பக்கம் 22 ).

 இப்படி சுரண்டும் வடிவிலாக உருவான சமூகத்தில் முதல் முதலில் பெண்தான் அடிமை ஆக்கப் பட்டால் என்று குடும்பம் தனி சொத்து அரசு உருவாக்கம் என்ற நூலில் எங்கெல்ஸ் குறிப்பிட்டிருப்பார்.

உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது.கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால இனக்குழு, நாடோடியாக வாழ்ந்த போது பெண்ணே முன் நின்று வேட்டையாடவும் தன் குழுவை நிர்வகிப்பதையும் செய்தனர்.

ஆனால்  நிலம் சார்ந்த உழைப்பு தொடங்கிய போது அந்த உழைப்பில் பெண்ணே பயிர் வளர்க்கவும் விலங்குகளை வளர்க்கவும் தொடங்கினர். சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சியில் ஆண் வேட்டை யாடவும்பெண்சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பகிர்ந்தளிப்பதும் பணியானது,இவைகுடும்ப நிர்வாகத்தையும் பெண் கவனிக்க  வேண்டியதாகியது.

நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப அமைப்பு உருவானது. இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிர்வாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது.இச்சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்பம், அரசியல்,பொருளாதாரம்,உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக திகழ்கிறது.

முதலாளித்துவ சமூகத்தில் பெண்

நிலவுடைமைச் சமூகம் வளர்ச்சி பெற்ற பின்பு, குடும்பம், பொருளாதாரம், அரசு நிறுவன அமைப்பு வரலாற்று அடிப்படையிலான ஆணாதிக்கப் போக்கினைப் பற்றி ஏங்கல்ஸ் குறிப்பிடுவது வரலாற்றுக்கு முந்திய புராதனமான சமூகங்களில் பெண்ணுக்குச் செயலூக்கமான பங்கிருந்தது. அது பின்னர் வேளாண்மைச் சமூக மாற்றத்தால் புதிதாக உருவான குடும்பம், நிலவுடைமை அரசு ஆகியவற்றால் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலைமையே பெண்ணுக்கான முழு வாழ்வாக அமையலாயிற்று என்று ஏங்கல்ஸ் கூறுகிறார்.

 பெண் எல்லா இடங்களிலும் அனைத்துச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்டாள். நவீன முதலாளித்துவத்தில் மேலும் ஒடுக்கப்பட்டாள். பெண்கள் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களாய் நியமனம் செய்யப்பட்டு, சுரண்டப்பட்டார்கள், பலர் வீட்டு வேலை செய்பவர்களாய் மாறினர். பணம்,மதிப்பீடுகளை முடிவு செய்கிற போது பெண் வெளியே சென்று பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது.

தன் வீட்டில் நாள் முழுவதும் செய்யப்படுகிற வீட்டு வேலைகளுக்குச் சம்பளமில்லாததால், அவள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போனது. முதலாளித்துவச் சமுதாய சுரண்டலுக்கேற்ப்ப பாலின வேறுபாடு முதலாளித்துவச் சமூகத்திற்கு முக்கியமாய் அமைந்து, பெண்கள் குறைந்த கூலிக்கு வரும் உழைப்பாளிகளாக்கப்பட்டு அவர்களைப் பயன்படுத்தி லாபம் பெறுவது முதலாளித்துவப் போக்காகிவிட்டது.

மார்க்சு,ஏங்கல்சு ஆகியோர் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தில் பெண்ணைப்பற்றி, பெண்ணின் சமூகத் தகுதி நிலையைப் பற்றி விளக்கும்போது, உயிர் உற்பத்தி செய்வதிலும்,சமூகத்தில் உற்பத்தி சக்திகளை உருவாக்குவதிலும்,சுதந்திரமாகவும் சமஉரிமை பெற்றும் வாழ்ந்து வந்த பெண்கள் மேற்கூறிய முதலாளித்துவத்தின் போக்கினாலும் தனிச் சொத்துரிமையாலும், தன் நிலை இழந்து ஆணை சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப் பட்டாள். இம்மாற்றம் வரலாற்று நிகழ்ச்சியில் தவிர்க்கவியலாத  மாற்றமாகியது என விளக்குகின்றனர்.

அதாவது இன்று பெண்ணை பற்றி நம் சமுகத்தில் உள்ள மதிப்புறை என்ன?

பெண்என்பவள்சிறுவயதில் இருந்தே மென்மையான விசயங்களுக்கு அவள் பழக்கப்படுத்தப்படுகிறாள்..

நன்றாக கவனிக்கனும் மென்மையான விசயங்கள் அவளுடைய தகவமைப்பில் இல்லை..

அவள் அதற்கு பழக்கப்படுத்தப்படுகிறாள்..

வீட்ல இருக்கற இடம் தெரிய கூடாது..

சத்தமா சிரிக்க கூடாது..

பலமா தும்ம கூடாது..

கொலுசு சத்தம் கூட கேக்காம நடக்கனும் இப்படி..

சின்ன சின்ன விசயங்கள் தான் அவளை அவளாவே இருக்கவிடாம பண்ணுது..

சரி சத்தம் போட்டுகிட்டு ஆடிக்கிட்டு பாடிக்கிட்டு இருந்தா அந்த பொண்ணு என்ன ஒழுக்கங்கெட்டவளா? அய்யய்யோ அப்படி இல்லங்க பக்கத்து வீட்டுல அக்கம் பக்கத்துல இருக்கவங்க என்ன சொல்லுவாங்க.. இத கவனிக்கனும் பெண் பிள்ளைகளே.. மத்தவங்களுக்காக நாம வாழல, நம்மக்குனு சுதந்திரம் இருக்கு.. ஆனா அந்த சுதந்திரம் மத்தவங்கள பாதிக்காத வண்ணம் இருந்தா போதும்

கல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் இரு முக்கிய சவால்கள் முதலாவதாக அவர்களுக்கென கழிப்பிட வசதி பல அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் இருப்பதில்லை. அவ்வாறு இருக்கும் கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாமல் தகுதியற்ற நிலையில்தான் உள்ளது.பெண் மாணவர்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் சொல்ல முடியா துயரத்திற்க்கு ஆளாக்கப்படுகிறார்கள்.இதனாலேயே பல பெண்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். பெண்கள் பள்ளியை தொடர முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவில் ஓன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் 100 ஆண் குழந்தைகளில் 39குழந்தைதான் எட்டாம் வகுப்பவரை பள்ளியில் தக்க வைக்கப்படுகின்றனர்கள்.அதிலும் 23 குழந்தைகள் மட்டுமே பத்தாம் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கின்றனர். இதே 100 பெண்குழந்தைகளில் வெறும் 17 குழந்தைகளே எட்டாம் வகுப்புவரை போகிறார்கள்.கல்லூரிக்கு மூன்று பேர்தான் அடியெடுத்து வைக்கிறார்கள்.(1990ல் வெளியான ஒருஆய்வரிக்கையின் படி)

 இன்று பெண்கள் விடுதலைக்கு பேசுவோரும் உண்மையில் பெண்கள் விடுதலை என்பது இந்த சமூக மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம் என்பதே பெண் எல்லா இடங்களிலும் அனைத்துச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்டாள். நவீன முதலாளித்துவத்தில் மேலும் ஒடுக்கப்பட்டாள். பெண்கள் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களாய் நியமனம் செய்யப்பட்டு, சுரண்டப்பட்டார்கள், பலர் வீட்டு வேலை செய்பவர்களாய் மாறினர். பணம்,மதிப்பீடுகளை முடிவு செய்கிற போது பெண் வெளியே சென்று பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது. நாள் முழுவதும் செய்யப்படுகிற வீட்டு வேலைகளுக்குச் சம்பளமில்லாததால், அவள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போனது. முதலாளித்துவச் சமுதாயம் தேவை. இனவேறுபாடு போன்றே பாலின வேறுபாடும் முதலாளித்துவச் சமூகத்திற்கு முக்கியமாய் அமைந்து, பெண்கள் குறைந்த கூலிக்கு வரும் உழைப்பாளிகளாக்கப்பட்டு அவர்களைப் பயன்படுத்தி லாபம் பெறுவது முதலாளித்துவப் போக்காகிவிட்டது.

பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றியும் அவற்றிலிருந்து விடுதலை பெறுவது என்பதும் பேசாப் பொருளாக இருந்து வந்தது. ஆனால் இன்று ஓரளவுக்குத் தானும் சமூகத்தின் சில மட்டங்களிலே பெண் விடுதலை பற்றிய குரல்கள் மேலெழும்பி ஒலிக்கவே செய்கின்றன.

சோசலித்தின் தற்காலிகப் பின்னடைவிற்குப் பின்,மாக்சியம் தோல்வி கண்டு விட்டதென பிரசாரம் முன் எடுக்கப் பட்டு சூழலில் பெண் விடுதலைபற்றிய நவீன கருத்தியல்கள் பின்நவீனத்துவப் பின்புலத்தில் பெண்ணிய விடுதலை பற்றிய தீவிர கருத்துகள் வலிந்து முன்வைக்கப்பட்டன. மேற்குலகிலே பேசப்படும் பெண்ணியக் கருத்துக்களை அரச சாரா நிறுவனங்கள் மூலம் சிலர் நம்மிடையே நட்டுவைக்க முயன்றனர்.அதன் மூலம் குறிப்பிட்ட மேல்தட்டுப் பெண்ணியக்காரர்கள் தங்களளவில் தம்மை உயர்த்திக் கொண்டனர். .

மார்க்சியம்தான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது.வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து ஆண்-பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது. சோசலிசத்தின் கீழ் தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர்.

முதலாளித்துவ அமைப்பின் தொழில்துறை வளர்ச்சியும்,சுரண்டல் அமைப்பும் ஒரு ஆணின் உழைப்பில் மட்டும் தங்கிநின்று ஒரு குடும்பம் வாழமுடியாத நிலையை உருவாக்கியபோது பெண்களும் வீட்டுக்கு வெளியே சமூக உழைப்பிலும் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய இரட்டைச் சுமைகளும்ஆணதிகாரமும் அழுத்தியதால் பெண் விடுதலை இயக்கங்கள் பிரிட்டன்,அமெரிக்கா போன்ற தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே முதலில் எழுந்தன. இன்று தீவிர பெண்நிலைவாதிகள்மார்க்சியப் பெண்நிலைவாதிகள் என்று பல பிரிவாக இவர்கள் வளர்ந்து வருகின்றனர். இதில் தீவிர பெண் நிலை வாதத்தை ஆதரிப்போர் ஆண்களால் முன்னெடுக்கப்படும் சமூகவிடுதலை இயக்கங்களை ஆதரிக்க மறுப்பதுடன்,பாலியல் பிறழ்வுகளை ஊக்குவிக்கும் நிலைப் பாட்டைக் கொண்டுள்ளவர்களாகவும்,மார்க்சியப் பெண்நிலை வாதிகள் தமது தனித்துவத்தைப் பேணுவதுடன் ஆண்களுடன் இணைந்து தமது பொதுப் போராட்டங்களை ஏற்றுக்கொள்வதுடன் புதிய ஒழுக்கமுறைக்கு வழிகோலுபவர் களாகவும் இருந்து வருகின்றனர்.

தவறான பழமைக்கருத்துக்களில் இருந்து முற்றாக விடுபடாத நமது சமூகத்தில் பெண்விடுதலைக்கு எதிரான கருத்துடையவர்களாகவும் இருக்கின்றனர். உயிரியல், உளவியல், உடற்கூற்றுக் காரணங்கள் எதைக்கூறினும் இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உணர்வும் கொண்ட ஒரு மானிட உயிரி என்ற வகையில் பெண் சுதந்திரமானவள். ஒடுக்கப்படும் பெண்களுக்கு ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடும் உரிமை உண்டு. பெண்கள் தமது விடுதலைக்கு தாமே போராட வேண்டும்.

பெண்விடுதலை என்பது சமூகவிடுதலையின் ஒருபகுதி என்றவகையில் பெண்கள் தமது விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஏனைய போராட்டங்களுடனும் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். பகுதியும், முழுமையும் இணையும் இத்தகைய போராட்டங்களினால்தான் முற்றுமுழுதான சமூக விடுதலையை விரைவுபடுத்த முடியும்.

நாம் வாழும் சமூகத்தில் பெண் ஒடுக்குமுறை போன்று பல்வேறு ஒடுக்குமுறைகள் நிலவுகின்றன. ஒரு சமூகத்தின் பொருளாதார அமைப்பு, கல்வி, கலை, கலாசாரம், மத நம்பிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இயக்குகின்ற அதிகார நிறுவனம் அரசாகும். அந்த வகையில் அதன்கீழ் உள்ள அனைத்து அடக்குமுறைகளுக்கும் அரசே காரணமாகின்றது. முதலாளித்துவ அரசுகள் எங்கும் வசதி படைத்த ஒரு சாராரின் நலன்களைப் பேணுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

 மனிதகுல விடுதலைக்கு வழிகாட்டிய மார்க்சியத் தத்துவம்,மக்களை ஒடுக்கும் அரசுகளை ஒழித்து, மக்கள் தமக்கான அரசுகளை உருவாக்கும் வழிமுறையை காட்டி நின்றது. அந்த வழியிலே நின்று விடுதலைபெற்ற நாடுகளில் பெண் ஒடுக்குமுறை முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் பெருமளவு குறைந்துள்ளது.

 இன்று வரலாற்றின் போக்கைப் புரிந்துகொண்டு மார்க்சியத்தை எதிர்க்க ஏகாதிபத்திய அரசுகள் பலவகையான பொருளாதாரச் சீர்த்திருத்தங்களைச் செய்ய முன்வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான அரசுசாரா உதவி நிறுவனங்கள் உலகின் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் கிளைவிட்டுப் பரவியுள்ளன. இதன்மூலம் சிறுசிறு உதவிகளை வழங்கி விட்டு பெருந் தொகையான இலாபங்களைக் கொள்ளையடித்துச் செல்வதுடன்,தமது கலாசார சிந்தனைகளை பரப்புவதிலும் இவர்கள் வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக குட்டிமுதலாளித்துவ சிந்தனைகள் இன்று உலகெங்கிலும் ஊட்டி வளர்க்கப்படுகின்றது.

முழுமனித குலத்தையுமே ஒடுக்குகின்ற போர்வெறி கொண்ட அவர்கள் பொதுவுடமை அரசுகளையும்,பொதுவுடமை அமைப்பை நோக்கிய விடுதலைப் போராட்டங்களையும் பலவீனப்படுத்து வதற்காக தாமும் சில ஒடுக்குமுறைகளுக் கெதிராக போராட்டங்களை வளர்த்தெடுக்க நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஆதரவு நல்குகின்றனர்.

நிலப் பிரபுத்துவ அமைப்பு கட்டிக்காத்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகளை முதலாளித்துவம் தகர்த்த போதிலும் குடும்பப் பொறுப்பு முரண்பாடுகள் நிறைந்த தனிக் குடும்ப அலகை தனது நலனுக்காகக் கட்டிக்காக்கவும் முற்படுகிறது. பழமைப் பிடிப்பும்பொருளாதாரப் பிணைப்பும் கொண்ட இக்குடும்ப உறவுமுறைகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், உழைக்கும் வர்க்கத்தின் சமூக மாற்றத்திற்கான எழுச்சியையும், பேராற்றலையும் மழுங்கடிக்கவும் உதவும் என்பதை இவ் அரசுகள் உணர்ந்துள்ளன.

முன்பு தாய்,தந்தையர்பிள்ளைகள்மருமக்கள்பேரப்பிள்ளைகள் என்று இருந்த கூட்டுக்குடும்பங்கள் இன்று பொருளாதாரக் காரணங்களினால் சிதைவுற்று கணவனும் மனைவியும் கொண்ட தனிக்குடும்பங்கள் உருவாகின்றன. இதனால் கணவனின் பெற்றோர்,உற்றார்உறவினருக்குக் கீழ்ப்படிந்து சேவை செய்யும் நிலையிலிருந்து பெண் விடுதலைபெற்று வருகின்றாள். சோசலிச நாடுகளில் ஒருபுதிய குடும்ப உறவுமுறைக்கான திட்டமிட்ட கல்விமுறையும், வயது வந்த பெண்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட்டது.இதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வயது வந்த இளம்பெண்கள் பெற்றோரிடம் வாழும் நிலைமாறுகின்றது. தனிச் சொத்து வடிவம் அங்கு இன்மையினால் பெற்றோரின் தலையீடு இன்றியே வாழ்க்கைத் துணைவனைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவள் பெறுகின்றாள். திருமணத்தின் பின்னும் சமூக உழைப்பில் அவள் தொடர்ந்தும் ஈடுபடுவதால் பொருளாதாரக் காரணங்களுக்காகக் கணவனில் தயவில் வாழ வேண்டிய அடிமை நிலையிலிருந்தும் அவள் விடுபடுகிறாள்.

அரசினாலும், தொழிற்சாலைகளினாலும் நடத்தப்படும் பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், தொழில் பார்க்கும் பெண்களின் வேலைப்பழுவைக் குறைக்கின்றது. சமத்துவ உணர்வு பெற்ற வாழ்க்கைத் துணைவன் வீட்டு வேலைகளிலும் பங்காளியாகின்றான். முதியவர்களானபோது அவர்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் உண்டு. இதனால் சமூக நலனை நோக்கித் திட்டமிடப்படாத நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ அமைப்புக்களில் அடிமையாக இருந்த பெண் அங்கு விடுதலை பெற்றவளாக வாழ்கிறாள்.

அரசே அவர்களது நலன்களை உறுதிசெய்வதால் தனியுடமை அமைப்பு காலம் காலமாக வளர்த்துவந்த சுயநலம் உணர்வு தளர்வடைகின்றது. பிறர்நலம் பேணும் பொது நோக்கு உருவாகின்றது.

இவை மிக நீண்டப் பதிவு சுருக்கி கொண்ர்ந்துள்ளேன் இவை சில பாகமாக எழுதுவேன் நம்து சமூகத்தில் நிலவும் பெண் ஒடுக்குமுறையின் ஒரு வடிவமான "சீதனம்" பற்றியதே இந்தப் பதிவு..

தனியுடமைப் பொருளாதார அமைப்பின் தோற்றத்தோடு உருவாகிய பெண்ணடிமை முறையை பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்திப் பாதுகாக்க உதவிவரும் பொருளாதார கலாசார நடைமுறைகளுள் சீதனமுறையும் ஒன்று, சமுதாய உழைப்பிலிருந்து பெண்கள் பிரிக்கப்பட்டு சொத்துக்களோடு சொத்துக்களாக-போகப்பொருட்களாக-வீட்டு அடிமைகளாக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ அமைப்பில் இது பெரு வழக்காகியது.

அன்று சமயச் சடங்குகளிலும், திருமண வைபவங்களிலும் கோதானம், பூதானம் என்று பல்வேறு தானங்களையும் செய்தவர்கள், அவ் அட்றிணைப் பொருட்களோடு ஒன்றாகப் பெண்களைக்கருதி கன்னிதானம் செய்யும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள். இன்றுவரை அவை சடங்குகளாக நம்மிடையே நிலவிவருகின்றன. பெண்களைப் பரிவர்த்தனைப் பொருட்களாகக் கருதும் இத்தகைய நடைமுறைகள் காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்ப பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தன. பெண்களின் பெற்றோருக்கு ஈடு கொடுத்து பெண்களை வாங்கும் வழக்கமும் உலகின் பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவியது போன்றே எம்மிடையே சில பிரிவினரிடம் நிலவி வந்தது. இளங்கோவடிகளின் சிலப் பதிகாரத்தில் இத்தகைய இருவழக்குகளும் வெவ்வேறு வடிவத்தில் அருகருகே இருக்கக் காண்கிறோம். பெரும் சீதனத்தோடு கண்ணகியை மணமுடித்த கோவலன், பொருள் கொடுத்தே மாதவியைப் பெற்றுக் கொள்கிறான்.

நிலவுடமையாளர்கள் பொன்னையும், மண்ணையும், பொருளையும் மட்டுமல்ல, அவர்களின் கீழ் இருந்த அடிமை குடிமைகளையும்

அன்று சீதனமாகக் கொடுத்தார்கள். இந்த நூற்றாண்டின் தொடக்க காலம்வரை இத்தகைய கொடியமுறை இந்த மண்ணில் நிலவிவந்ததற்கான சான்றாதாரங்கள் நிறைய உள்ளன.

இந்த சீதனமுறை ஆரம்பத்தில் எண்ணிக்கையில் மிகக் குறைந்த ஆளும் வர்க்கத்தினரால் மட்டுமே பேணப்பட்டு வந்தது. மிகப்பெரும் எண்ணிக்கையைக் கொண்ட உழைக்கும் மக்கள் மத்தியில் இம்முறை பின்பற்றப்படவில்லை. காரணம் உரிமையற்று அடிமைகளாக இருந்த அவர்களிடம் சொத்துக்கள் இருக்கவில்லை. சந்ததி சந்ததியாக அவர்கள் உழைத்தும், அவர்களுக்கு நிலங்கள் சொந்தமாக இருக்கவில்லை. தமிழக சிதம்பரம் ஆலயத்துக்குக்கூட ஏக்கர் கணக்கான நிலங்களை எழுதிவைத்த நிலவுடமையாளர்கள் இந்த மண்ணை உழுது வாழ்வு தந்த உழைப்பாளி மக்களுக்கு அவர்கள் குந்தியிருந்த நிலங்களைக்கூட சொந்தமாகக் கொடுக்கவில்லை. இதனால் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்த மக்களால் அண்மைக் காலம்வரை இச்சீதனமுறை பின்பற்றப்படவில்லை.

ஒரு இனத்தின் பண்பாடு, கலாசாரம் என்பது சாரம்சத்தில் அதன் ஆளும் வர்க்கத்தின் மேலாண்மைக்குரிய பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்து வருகின்றது. இவற்றை நாம் இருவகையாக அடையாளம் காணமுடியும். மனித சமூகம் தன் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் பெற்ற அனுபவங்கள், வாழ்க்கையின் உயரிய விழுமியங்கள், நாகரீகக் கூறுகளை ஒரு புறமாகவும், பலபேர் உழைப்பில் சிலபேர் வாழும் ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பை சிதைந்து போகாமல் பேணிக்காக்க உதவும், பொருளாதார ஒடுக்குமுறை அம்சங்களை உள்ளடக்கிய பண்பாட்டுக் கூறுகளை வேறாகவும் கொள்ள முடியும். சாதி, சமயசடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாட்டுக் கூறுகளை வேறாகவும் கொள்ள முடியும். சாதி, சமயசடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாட்டு மரபுகள் ஒவ்வொன்றின் பின்னாலும் சமத்துவமற்ற நிலையும், பொருளாதாரக் காரணிகளோடு பின்னிப் பிணைந்த ஒடுக்குமுறை

வடிவங்களும் தொடர்ந்து வருவதை நாம் கவனிக்கலாம். இவை சாதீயம், பெண்ணடிமை, சீதனமுறை என்பவற்றில் மிகவும் கூர்மையாகவே வெளிப்படுகிறது.

இதன் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ஆளும் வர்க்க கலாச்சார நடைமுறைகளை உயர்வாக எண்ணி விமர்சனம் ஏதுமின்றி அதன் ஒடுக்குமுறை அம்சங்களை விலக்கிக் கொள்ளாமல் அப்படியே பின்பற்றி வாழும் ஒருபோக்கு என்றும் இருந்து வருகிறது. இத்தகைய குருட்டுத்தனமான பின்பற்றலுடன் கூடிய படிமுறை வளர்ச்சிப்போக்கே பல்வேறு அடிமைத்தனங்களும் எதிர்ப்பின்றி காலம்காலமாக வேரூன்றி இருப்பதற்கு காரணமாகிறது.

ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருந்த மக்களே சிறிது வாய்ப்பும், வசதியும் பெற்றபின் மற்றவர்களை ஒடுக்கும் மனப்பான்மை உடையவர்களாக மாறுகின்றனர். அதுபோன்ற ஒருகாலத்தில் பொருளாதாரக் குறுக்கீடின்றி, சீதன முறையைப் பின்பற்றாமல் தமது திருமணங்களை முடித்த உழைப்பாளி மக்கள், மத்தியதர வர்க்க உணர்வு நிலைக்குத் தள்ளப்பட்டதும் சீதனவிலங்கை தமக்குத் தாமே மாட்டிக்கொண்டு துயர்படுகின்றனர்.

இத்தகைய கலாசார ரீதியான ஒடுக்குமுறைகள் ஒப்பீட்டளவில் நேரடியான ஆயுத பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒடுக்குமுறைகளைவிட பன்மடங்கு பலம் வாய்ந்ததாகும். மூன்றாம் உலகநாடுகளில் குறிப்பாக ஆசியப் பெண்கள் மத்தியில் ஆணாதிக்க, பொருளியல் அடக்குமுறை அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார நடைமுறைகளை பொன்விலங்காக ஏற்று சகித்து வாழும் நிலை இன்றும் தொடர்கிறது. மனுநீதிமுதல் இன்றைய தமிழ் சினிமாவரை இலக்கியங்களும், மதக்கருத்துக்களும், சடங்கு முறைகளும் இவர்களுக்கு இவற்றையே தொடர்ந்தும் போதித்து பயிற்றுவித்து வருகின்றன. பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் தனியுடமை அமைப்பின் பொருளாதார நலன்களோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் சீதனமுறை போன்ற பல்வேறு ஒடுக்குமுறை வடிவங்களை சமுதாயத்திலிருந்து இல்லாதொழிப்பதற்கு மக்கள் மத்தியில் ஓர் புதிய கலாசார விழிப்புணர்ச்சி ஏற்படவேண்டும்.

பெண் ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களுள் சீதனமுறை ஒன்றே பெண்களை மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களையும், உடன்பிறந்தவர்களையும் குறிப்பாக ஆண்களையும் பாதித்து வருகின்றது. மணவயதை எட்டியும் மணமாகாதிருக்கும் பெண்களைப் போலவே உடன்பிறந்த சகோதரிகளின் சீதனத்துக்காக மணமாகாது உழைக்கும் ஆண்களும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். எனவே இதற்கு எதிராக ஏற்படும் விழிப்புணர்வு பெண்ணடிமை முறையின் ஏனைய வடிவங்களுக்கும் எதிரான முழுச் சமூகத்தின் எதிர்ப்பாகவும், சமூகத்தில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சமுதாய மாற்றத்திற்கான விழிப்புணர்வாகவும் பரிணமிக்கிறது.

இன்றைய வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்டுவரும் பொருளாதார, கலாசார மாற்றங்களோடு இச் சீதனமுறையும் தொற்றுநோய் போலப் பரவி முழுச் சமுதாயத்தையுமே ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளுகின்றது. உலக மய தாரள மயக் பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்டுவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், “பொருளாதார அகதி வாழ்வும் நமது மக்களில் ஒரு பகுதியினரின் வர்க்க நிலைமைகளில் மாற்றங்களைச் செய்து வருகின்றன. பின்தங்கிய கிராமங்கள் வரை இறுகிக் கிடந்த வர்க்க ஏற்றத் தாழ்வை கருத்தியல் ரீதியாகவாவது அடித்து நொருக்குகின்றன. இதனால் பெரும்பாலான தொழிலாள விவசாயிகளின் வாழ்க்கை நிலை உயராவிடினும், தாமும் வெளிநாடு சென்று 

வந்தால் தமது வாழ்க்கைநிலை உயர்ந்துவிடும் என்று கருதுகின்றனர். உழைப்பின்மீது இருந்துவந்த பிடிப்பு தளர்வடைந்து உடலை வருத்தாமல் பொருளைச் சேர்க்க எண்ணும் மத்தியதர வர்க்க உணர்வு-குட்டிமுதலாளித்துவ மனப்பான்மை பெரும்பாலானவர்களிடம் வளர்ந்து வருகிறது.

இத்தகைய ஒரு சூழலில் சீதனமுறையை தமது

பொருளாதாரநிலையை உயர்த்த உதவும் ஏணிப்படியாக இவர்கள் கருதுகின்றனர். பொருளாதார வளர்ச்சி என்பது எப்பொழுதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. அதற்குப் பெண்களையும், அவர்களது பெற்றோர்களையும், உடன்பிறந்தவர்களையும்

ஏணிப்படிகளாக மிதிக்கும் இச்சீதனமுறை தொடரவேண்டுமா? குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கும், கொள்ளை லாபம் ஈட்டுவதற்கும், அடுத்தவன் உழைப்பைச் சுரண்டி வாழ்வதற்கும் இதற்கும் வேறுபாடு என்ன? இச்சீதனமுறைக்கு சமூகம் வழங்கும் அங்கீகாரம் சமூகத்தில் நிலவும் ஏனைய ஊழல்களுக்கும் உற்சாகம் தருவதில்லையா? இதுபோன்ற கேள்விகள் இன்று இளம் சந்ததியினர் மத்தியில் பரவலாக எழுகின்றன.

இதற்க்கு தீர்வு

"கம்யூனிசத்தின் மூலமாக மட்டுமே பெண்கள் மெய்யான விடுதலை பெறமுடியும் என்பது இந்த விரிவுரைகளில் நன்கு வலியுறுத்தப்பட வேண்டும் . மானுடர்கள் என்ற முறையிலும் சமுதாய றுப்பினர்கள் என்ற முறையிலும் பெண்களுக்கு உள்ள நிலைக்கும் உற்பத்தி சாதனங்களில் தனியார் உடமைக்கும் நிலவும் துண்டிக்க முடியாத இணைப்பு பற்றிய பிரச்சினையை நீங்கள் தீர்க்கமாய் பகுத்து ஆராய வேண்டும் . பெண் விடுதலைக்கான முதலாளித்துவ இயக்கத்திலிருந்து நம்மைப் பிரித்திடும் தக்கதோர் எல்லைக்கோட்டை இது அளித்திடும் , மற்றும் இதன் மூலம் நாம் பெண்கள் பிரச்சினையை சமுதாய , தொழிலாளி வர்க்கப் பிரச்சினையின் ஒரு பகுதியாக கொண்டு பரிசீலிப்பதற்கான அடிப்படையையும் நிறுவிக்கொள்ளலாம். இப்பிரச்சனை பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட துடனும் புரட்சியுடனும் உறுதியாக இணைத்து பிணைக்கப் படுவதை இவ்வாறு இது சாத்தியமாகி விடும். பெண்களது கம்யூனிஸ்ட் இயக்கம் பொதுவான வெகுஜன இயக்கத்தின் ஒரு பகுதியாய் அமைந்த வெகுஜன இயக்கமாக நடந்தேற வேண்டும் . பாட்டாளி வர்க்கத்தாரின் இயக்கம் மட்டும் அல்லாது சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருவோர் அனைவரது , முதலாளித்துவத்துக்கு பலியானோர் எல்லோரது இயக்கத்தின் ஒரு பகுதியான வெகுஜன இயக்கமாய் இது இருத்தல் வேண்டும் . பாட்டாளி வர்க்கத்தினது வர்க்கப் போராட்டத்திலும் கம்யூனிச சமுதாயத்தை சமைப்பது என்னும் அதன் வரலாற்றுச் சிறப்புக்குரிய ஆக்கப் பணியிலும் பெண்களது இயக்கத்துக்கு உள்ள முக்கியத்துவம் இதில்தான் அடங்கியுள்ளது. புரட்சிகர பெண் குலத்து மாணிக்கங்கள் நமது கட்சியினுள் , கம்யூனிஸ்ட் அகிலத்தினுள் இருக்கிறார்கள் என பெருமிதம் கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு . ஆனால் இது மட்டும் போதாது, நகரையும் கிராமப்புறத்தையும் சேர்ந்த கோடானு கோடியான உழைப்பாளி பெண்களை நாம் நமது போராட்டத்திலும் இன்னும் முக்கியமாய் சமுதாயத்தின் கம்யூனிசப் புணரமைப்பிலும் அணிதிரள செய்தாக வேண்டும் .பெண்கள் இன்றி மெய்யான எந்த வெகுஜன இயக்கமும் இருக்க முடியாது."

-லெனின் கிளாரா ஜெட்கினிடம், என் நினைவுகளில் லெனின் நூலிலிருந்து....

பொதுவாகப் பெண்கள் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர்.இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையாகவும் கீழ்நிலையாகவும் உள்ளோரிடத்துக் காணலாம்.மேட்டுக்குடியில் பிறந்த பெண்கள் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது.அதற்காக அவர்கள் வேலைக்காரர்களை வைத்துள்ளனர்இது இரு வீட்டாரின் சம்மதத்தால் நிகழும் திருமணத்திலும் இதே, பொருளாதார உற்பத்தியில் பெண்ணின் உழைப்பை அங்கீகரிக்கின்ற போதிலும், அதிகமாக வீட்டுப்பணியில் ஈடுபடுவதையே சமூக நியதியாக்கியிருக்கிறது. எனவே பெண்களின் உழைப்பு ஆணாதிக்கச் சமுதாயத்தைச் சார்ந்தது.

பெண் என்பவள் எந்த நிலையில் இருந்தாலும்,பொருளாதாரம்,தொழில்கல்வி என்று சிறந்து விளங்கினாலும் சுயதீனமாய் இந்த சமூக கட்டமைப்பில் இருந்து உண்மையான சுதந்திரத்தோடு பயணிப்பது கடினம் என்பதே வேதனையான உண்மை.

எனவே பெண்ணினம் அடிமைமுறையிலிருந்துவிடுதலை பெற பெண்ணினம் முழுவதையும் சமுக உற்பத்தியில் மீண்டும் புகுத்துவதுதான் பெண் விடுதலைக்குறிய முதல் நிபந்தனையாகும்.

முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்து கொண்டிருக்கின்ற அழிவுக்கு பிறகு பால் உறவுகளை ஒழுங்குபடுத்துவதை பற்றி நாம் ஊகமாக சொல்ல கூடியது,உற்பத்தி சாதனங்களை பொதுவுடமையாக்கும் பொழுது கூலியுழைப்பும் பாட்டாளி வர்க்கமும் மறைந்து விடுகின்றன.

பெண்கள் பணத்திற்காக தம்மை விற்க வேண்டிய அவசியமும் மறைந்து விடுகிறது, விபச்சாரமும் மறைத்து விடுகிறது.ஒருதாரமணம் நலிந்துபோவதற்க்கு பதிலாக முடிவில் ஆணும் பெண்ணும் சேர்வது எதார்த்தமாகிறது,

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலிலிருந்து எங்கெல்ஸ்

இன்றை உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளை மேன்மேலும் சுரண்டிக் கொள்ளையிட்டு வருகின்றது.இதில் பெண்கள் பன்முகப்பட்ட வழிகளில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் பெண் ஒடுக்குமுறைக்குள்ளாவதை காணமுடிகிறது.

பழமைவாதக் கருத்தில் அழுத்தப்பட்டுள்ள பெண்களை விடுவிப்பது,அடுத்து இன்றுள்ள சமூகச் சூழலின் பன்முகத் தாக்கங்களிலிருந்தும் பெண்கள் அறிவு ரீதியாகவும் நடைமுறை வாயிலாகவும் விடுபட வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது.

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...