“கீழடி” ஆய்வுக்கு உதவியாக தமிழக இந்திய எழுத்துகளின் வரலாற்றைக் கூறும் நூல்களின் PDF வடிவம் உங்களுக்காக…..
நண்பர்களே….
சென்ற பதிவைச்(22.11.2019) சுருக்கமாக எழுதியதால் எழுத்துப் பற்றிய வரலாற்று நூல்களையும் அவற்றின் கருத்துகளையும் உங்களுக்கு விரிவாகச் சொல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது. தமிழில் இன்று எழுதிக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் ஆசிரிய பெரு மக்களும் சென்ற பதிவை பெரியளவில் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது இத்துறைச் சார்ந்து நண்பர்கள் பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. எனவே இது சார்ந்து சிந்திப்பதற்கு துணையாக இந்திய, தமிழ்நாட்டு எழுத்து வரலாற்றை ஆராய்ச்சியுடனும் ஆதாரத்துடனும் விளக்கும் சில நூல்களை நீங்கள் தரவிறக்கம் செய்து கொண்டு வாசிப்பதற்கு வசதியாக இணையதள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.
இதில்
1.அசோகன் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள்
2. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள பிராமி எழுத்துகளின் வரலாறு
3. கிரந்த எழுத்துகளின் வரலாறு
4. வட்டெழுத்துகளின் வரலாறு
இவ்வாறான எழுத்து வரலாற்று செய்திகளை எத்தகையவருக்கும் எளிதாகப் புரியும்படியான நூல்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு நூல் ஆங்கிலத்தில் உள்ளது. தென்னிந்தியாவின் எழுத்து வரலாற்றை 1878 இல் முதன்முதலாக ஆராய்ந்த நூல் இதுதான் என்பது குறி்ப்பிடத்தக்கது.
தென்னிந்திய எழுத்துக்களின் வரலாறு A.C.பர்னல் ENGLISH 1878
3Shanmugam Chandrasekharan, Saravanan Veeraiah and 1 other
No comments:
Post a Comment