இருநாட்களுக்கு முன் தோழர் போன் செய்து முகநூல் விவாதத்தில் ஆங்கிலம் vs தமிழ் அதனை பற்றி பேசினார் இருந்தும் உடனடியாக எழுதமுடியாமைக்கு என் பணி சுமையும் முகநூலில் பயன்படுத்தும் நேரத்தையும் குறைத்து விட்டமையால்... தோழர் கால தாமதத்தை ஏற்று கொள்வாராக.....
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எந்த ஒரு மொழியின் அதன் எல்லாத்துறை அறிவையும் அது சார்ந்த எல்லா கலைச் சொற்களையும் எல்லோரும் அறிந்திருப்பதாக சொல்ல முடியாது. கல்வி அறிவின் அடிப்படையில் தான் அவரவர் சார்ந்த துறை சார்ந்த அறிவை பெற்றிருக்க முடியும். இதே போல் ஒரு மொழியில் உள்ள எல்லாவித கலைச் சொற்களையும் அவர்கள் கற்றிருப்பார் என்பது கடினமே.
இதை எளிதாக புரிந்துக் கொள்ள
சுற்றுலா தலங்களில் , ரயில்வே பணியில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளிகள் முதல் அதன் அலுவல் ஈடுபாட்டில் உள்ளவர்கள், பல தேச கூட்டு (MNC) நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தங்கும் விடுதியில் பணியாற்றும் பணியாளர்கள் என்று இவர்கள் எல்லோரும் பல்வேறு மொழிகளை கற்று இருப்பதனால் பன்மொழி புலமை வாய்ந்தவர்கள் அல்லர், அவர்கள் கையாளும் துறை சார்ந்த அறிவு மட்டுமே தான் தெரியும் என்பதும் அந்த மொழியின் அனைத்து துறைகளையும் பாண்டித்தியம் பெற்றிருப்பார்கள் என்பது அல்ல. அதில் அவர்கள் அத் துரை சார்ந்த மொழியை கற்றிருப்பதே பொருள். இதைத்தான் ஆறு மாதத்தில் எந்த மொழியும் கற்கலாம் என்று மொழி அறிஞர்கள் சொல்கின்றனர்.
ஆங்கில மொழிக் கொள்கையின் மோகம்
+++++++++++++++++++++++++++++++++
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தன் நிர்வாக வசதிக்காகவும் ஆதிக்க நலனுக்காகவும் ஆங்கிலக் கல்வியை 1835 மார்ச் 7 ம் நாள் அறிமுகப்படுத்தி போது மெக்காலே சொன்னதுதான் "இந்தியர்கள் அனைவரும் தோற்றத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருந்தாலும் அவர்கள் உள்ளத்தாலும் உணர்வாளும் உளவியல் உருவாக்கத்தாலும் தங்களை ஆங்கிலேயர்கள் போல் உணர செய்ய வேண்டும் "என்று .
அந்நிலையில் இந்தியா முழுவதும் ஆங்கிலம் பேசுவதும் படிப்பதும் பெருமையாக கருதப்பட்டது.
ஆங்கிலேயர் இந்தியா விட்டு சென்றுவிட்ட பிறகும் இன்றும் அந்த மோகம் நீடிக்கிறது.
ஆங்கிலம் அறிந்தவர்கள் எல்லாம் அறிவாளிகளாகவும் மேதாவிகளாகவும் கருதப்பட்டு வருவதும் அவர்கள் தான் சமூகத்தின் உயர் நிலையிலே வைத்து மதிக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது. அதோடு இது ஆங்கிலம் கற்றால் தான் உலகின் எந்த மூளைக்கும் வேலைக்கு போகலாம் என்கிற கருத்தையும் கட்டமைத்து அது சார்ந்து மயக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
உண்மையில் ஆங்கிலம் அறிந்தாலே ஒருவன் அறிவாளியாக ஆகிவிட முடியுமா? அப்படி என்றால் ஆங்கிலம் தெரியாத எல்லோரும் முட்டாளாக இருக்கிறார்களா ?.
ஆக எல்லா மொழிகளிலும் அறிவாளிகளும் உண்டு முட்டாள்கள் உண்டு இதே தான் ஆங்கிலத்திற்கும் பொருந்தும்?!!!.
உலகம் முழுதும் ஆங்கிலம் பேசுகிறார்கள் ஆங்கிலம் படித்தால் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்பது பொய்.
சில ஏகாதிபத்திய நாடுகளும் வளர்முக நாடுகளும் தங்கள் தாய் மொழியிலே கல்வி கற்கின்றனர், தாய்மொழியிலே ஆராய்ச்சி செய்கின்ற அறிவியலில் தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்து சாதனை படைக்கின்றனர், நோபல் பரிசு வரை பெற்றுள்ள பல அறிஞர்கள் உள்ளனர் .அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது உண்மை.
ஆக ஆங்கிலம் தான் தமிழ் மொழியை பாதுகாக்கும் கேடயம் என்பது பொய், உண்மையை சொல்லபோனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்துக்கும் தடைகளை கல்லாக முட்டுக்கட்டையாய் இருந்து வருவது பெரும்பாலும் ஆங்கிலம் தான் . ஆங்கில அதிகம் இருக்கும் வரை தமிழ் வளர்ச்சி பெற முடியாது முன்னேறவும் முடியாது என்பது உண்மை.
இன்று வெள்ளையர் விதேசி கொள்கைக்கு மாற்றாக இந்திய சுதேசிக் கொள்கையை முன்வைத்து இந்தி மொழி ஆதிக்க கொள்கையானது , எல்லா தாய்மொழியின் முக்கியத்துவத்தை மறுக்கின்றது.
இதனை புரிந்துக் கொள்ள வரலாற்றில் அடிப்படையில் சில விஷயங்களை தேடுவோம்.
அன்று ஆங்கிலேயன் தனது நிர்வாக வசதிக்காக செய்த அதே சூழ்ச்சியில் இன்று நிர்வாக வசதிக்காக இந்தி மொழியை திணிக்கின்றனர் . அன்று அவன் நாட்டு மக்களையோ பிரதேச வாரியான மக்களையோ கேட்டு எதையும் செய்யவில்லை. இன்றுள்ள ஆட்சியாளர்களும் மக்களுக்கான எந்த வகையான சட்டத்தையும் மதிக்காமல் ஆட்சியாளர்களின் தேவைகளை ஒட்டியே செயல்படுத்துகின்றனர். ஆகவே மக்கள் தேவையை அறியாத இவர்களுக்கு மொழியையும் சுரண்டலுக்காக பயன்படுத்த நினைக்கின்றனர்.
சற்று அறிவோம் மொழிக் கொள்கை.
மும்மொழிக் கொள்கை
+++++++++++++++++++
இந்திய அரசமைப்பு சட்டத்தில் மொழி பற்றிக் கூறும் பகுதி 17 இல் உள்ள சட்டப்பிரிவு 343 இந்தி தான் இந்தியரின் ஆட்சி மொழி என்கிறது.
அதே வேளையில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ஆட்சி மொழியான ஆங்கிலத்தையும் சிறிது காலம் ஆட்சி மொழியாக துணை மொழியாக பயன்படுத்துவதையும் ஏற்றுக் கொள்கிறது.
பிரிவு 345 அந்தந்த மாநிலத்திலும் அந்தந்த மாநில சட்டமன்றத்திலும் அந்த மாநிலத்தின் மொழியினை ஆட்சி மொழியாக கொள்ளலாம் என்கிறது..
அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் இதுவரை சரிவர தமிழை ஆட்சி மொழியாகவில்லை என்பது நம் கண் முன் உள்ள பிரச்சினையாகும்.
இரு மொழி கொள்கை
+++++++++++++++++
மும்மொழிக் கொள்கையின் சட்ட வேர்கள் எதுவானாலும் அது பற்றி பொதுமக்கள் கருத்து தமிழ்நாட்டுக்கு தமிழ் இந்தியாவிற்கு இந்தி உலகத்துக்கு ஆங்கிலம் என்பதாக பரப்பப்பட்டது. அதுவே நியாயமாகவும் கற்பிக்கப்பட்டது.
அதாவது இங்கே சொல்லப்படுவது தமிழ்நாட்டுக்கு தமிழ் உலகத் தொடர்பு ஆங்கிலம் என்றால் அந்த உலகத் தொடர்புக்கான ஆங்கிலத்தை வைத்து இந்தியாவின் பிறப்பகுதிகளோடு தொடர்பு கொள்ள முடியாதா என்பதனை நாம் கேட்க்க கூடாத?
இதன் தொடர்ச்சியே தமிழ்நாட்டில் மழலையார் கல்வி தொடங்கி தொடக்கக் கல்வியிலிருந்தே ஆங்கில கற்பதும் உயர் கல்வி அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதும் நிர்வாக நடைமுறைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நீடிப்பதுமாகும் . ஆங்கிலத்தை அகற்றி விட்டால் அந்த இடத்தில் இந்தி வந்து குந்துவிடும் என்கின்ற பூச்சாண்டி காட்டுகின்றனர்.
உண்மையில் இந்தி வந்து குந்தாமல் தடுக்க தமிழை பாதுகாக்க வேண்டியதையும் விடுத்து, ஆங்கிலத்தைக் கேடயமாக பயன்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலத்தை பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டி வருகின்றனர் இக்கொள்கையினர் .
ஒரு மொழிக்கு கொள்கை
+++++++++++++++++++++
அவரவர் மாநிலக் கொள்கை அவரவர் தாய் மொழிக்கு முக்கியத்துவத்தையும் மழலையர் கல்வி தொடக்கம் ஆராய்ச்சி கல்வி வரை அவரவர் தாய் மொழியில் இருத்தல் வேண்டும்.
ஆட்சி அலுவல் மற்றும் பண்பாட்டு தளங்களிலும் அவரவர் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் .
ஆக"மும்மொழிக் கொள்கை மோசடி கொள்கை; இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை; ஒரு மொழிக் கொள்கையை உண்மையான கொள்கை" அதுவே நமது உரிமை என்று மக்கள் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும் .அதுதான் ஜனநாயக உரிமையும், எல்லா மொழி வழி ஒற்றுமைக்கும் சமத்துவத்திற்கும் பயனளிக்கும் ....
விவாதித்துன் ஊடாக இன்னும் புரிந்து பேசுவோம் தோழர்களே...
/"தமிழகத்தில் இதுவரை சரிவர தமிழை ஆட்சி மொழியாகவில்லை என்பது நம் கண் முன் உள்ள பிரச்சினையாகும். இந்தி திணிப்பை மட்டும் பேசும் நாம் தமிழ் மொழியை ஓரங்கட்டுவதையும் கணக்கில் கொள்ள வேண்டும்."//
//"ஆங்கிலம் தான் தமிழ் மொழியை பாதுகாக்கும் கேடயம் என்பது பொய், உண்மையை சொல்லபோனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்துக்கும் தடைகளை கல்லாக முட்டுக்கட்டையாய் இருந்து வருவது பெரும்பாலும் ஆங்கிலம் தான் . ஆங்கில அதிகம் இருக்கும் வரை தமிழ் வளர்ச்சி பெற முடியாது முன்னேறவும் முடியாது என்பது உண்மை."//
//"அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் இதுவரை சரிவர தமிழை ஆட்சி மொழியாகவில்லை என்பது நம் கண் முன் உள்ள பிரச்சினையாகும்.//
//"உண்மையில் இந்தி வந்து குந்தாமல் தடுக்க தமிழை பாதுகாக்க வேண்டியதையும் விடுத்து, ஆங்கிலத்தைக் கேடயமாக பயன்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலத்தை பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டி வருகின்றனர்."//
//"மும்மொழிக் கொள்கை மோசடி கொள்கை; இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை; ஒரு மொழிக் கொள்கையை உண்மையான கொள்கை" அதுவே நமது உரிமை என்று மக்கள் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும் .அதுதான் ஜனநாயக உரிமையும், எல்லா மொழி வழி ஒற்றுமைக்கும் சமத்துவத்திற்கும் பயனளிக்கும்."//
மேலே காட்டப்பட்டுள்ள அத்தனையும் மிகச் சரியானவையே என்று நான் கருதுகிறேன். இத்துடன் ஒருமொழிக்கொள்கை என்பது தேசிய இனம்சார்ந்த ஒரு ஜனநாயகக்கொள்கை என்பதையும் இணைத்து வலியுறுத்தவேண்டும். ஒரு இனத்தின் அடிப்படை அடையாளமே அந்த இனத்தின் தாய்மொழிதான் என்பதையும் வற்புறுத்தவேண்டும். ஒரு இனம் தன் தாய்மொழிக்காகப் போராடுவது என்பது இன ஒடுக்குமுறைக்கு எதிரான தேசிய இனப் போராட்டத்தின் ஒரு முகமையான பகுதி என்பதையும் வற்புறுத்தவேண்டும்.
No comments:
Post a Comment