இன்று கம்யூனிஸ்டுகள் ஜாதி பிரச்சினையை சரியாக அணுகாதனாலேயே இன்று கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவை கண்டுள்ளது -விவாதம்

 ஓர் உறையாடல் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்க்கலாம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நேற்று ஒரு சில தோழர்கள் இடையில் ஏற்பட்ட விவாதம்.
தோழர் 1. இன்று கம்யூனிஸ்டுகள் ஜாதி பிரச்சினையை சரியாக அணுகாதனாலேயே இன்று கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவை கண்டுள்ளது.
தோழர் 2. எனது அனுபவத்தில் அன்றைய பிரிட்டிஷ் காலகட்டம் ஆகட்டும்; அதன்பிறகு தெலுங்கானா போராட்டம் ஆகட்டும் நக்சல்பாரி காலகட்டம் ஆகட்டும்; ஏன் 70 க்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட பல போராட்ட வடிவங்கள் ஆகட்டும் மிகச்சரியாகவே பாட்டாளிவர்க்க நிலையில் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க திறமையுடன் செயல்பட்டார்கள் என்பேன்.
தோழர் 1. மேம்போக்காக சொல்லுவது பயனில்லை தோழர் விளக்கமாக சொல்லுங்கள்.
தோழர் 2. அன்றைய பிரிட்டிஷ்காரர் எதிர்ப்பு போராட்டத்தில் மத, சாதிய, இன, மொழி வேறுபாடின்றி ஒன்றுபட்டு பிரிட்டிஷாரை விரட்டி அடிப்பதில் போராடினர். அதே காலகட்டத்தில் குறிப்பாக தமிழக தஞ்சை பகுதிகளில் சீனிவாசராவ் கூலி விவசாயிகளை வர்க்க ரீதியாக ஒன்றிணைத்து போராட்டம் நடத்தி கூலிவிவசாயிகளை வர்க்கமாக அணி திரட்டினார். (அவர் சார்ந்து நின்ற கட்சியானது இதனை கைவிட்டதன் விளைவே அதன் பிறகு தஞ்சை பகுதியில் விவசாயிகள் மத்தியில் தனிமைப்பட்டு போயினர் மற்றும் பல போக்குகள் உருவாகின) . தெலுங்கானா போராட்டத்தில் எடுத்துக் கொண்டாலும் அங்கே உழைக்கும் விவசாயிகளுக்கான போராட்டமாக தான் இருந்தது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அன்றைய கட்டத்தில் நிலத்துக்கான போராட்டமாக இருந்தது. (அங்கேயும் அந்தப் போரட்டத்தை முன்னெடுத்த கட்சி அதனை கைவிட்டதன் விளைவாக பின்னர் பல்வேறு விதமான போக்குகள் உருவாகின ). 70 காலகட்டத்தில் நடந்த நக்சல்பாரி போராட்டத்தில் மக்களுக்கு எதிரான கொடுமைகளைக் கணக்கில் கொண்டே போராட்டம் நடத்தப்பட்டது அங்கே ஜாதியோ மதமோ மொழியோ அடிப்படையாக கொள்ளப்படவில்லை.
தோழர் 1. அப்படி என்னும் பொழுது இன்றைய கோரிக்கைகள் "பட்டியல் இன மக்களை" கம்யூனிஸ்ட்டுகள் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றசாட்டுக்கு பதில் என்ன?
தமிழகத்தில் கூட்டகுழு போராட்ட வடிவத்தில் பாலனும், சீராளனும் நடத்திய உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமைக்கான போராட்டம் இன்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை ஏன்? அவர்கள் உண்மையான மக்களின் விடுதலைக்காக போரிட்டனர். 1976 ல் தோழர் சீராளன் அவர்கள் வடஆற்காடு மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் பல்வேறு போராட்டங்களை எடுத்து நடத்தி வந்தார். அவர் கூலிப்பிரச்சினை நிலஉடைமையாளர் ரவுடிகள் கட்ட பஞ்சாத்து ஆதிக்கத்துக்கு எதிராக தீண்டாமையை எதிர்த்துப் பிரச்சாரம் நிலஉடைமையாளர் அடியாட்களுடன் மோதல் மக்களோடு மக்களாக பல போராட்டங்களை கண்டார்.
பொன்னேரி பகுதியில் இருவேறு ஜாதிகள் இடையில் உள்ள மக்களை ஒன்றிணைத்து பட்டியலின மக்கள் வீடுகளில் உணவு வருந்தவும் அவர்களுடன் ஒன்றுபட்டு போராடுவதும் அவர் நடைமுறை ஆக்கினார். நில உடையாளர்கள் ஆதிக்கமும் போலீஸின் அடாவடியும் அங்கே ஒடுக்கப்பட்டது இதை கண்ட இந்திய ஆளும் வர்க்கம் சீராளனை 1976 ல் கொன்றது. பின்னர் மக்களை பிதிகுள்ளக்கியது என்பதை விட அன்று பிரிட்டிஷ் செய்த அதே சூழ்ச்சியை இந்திய ஆளும் வர்க்கம் கையில் எடுத்தது ஒன்றாக வர்க்கமாக ஒன்றிணைந்த மக்களை ஜாதியாக பிரித்தது அவை 1990 களில் நடைமுறையாகியது இன்று ஜாதிய பிரச்சினையை பேசும் பலரும் இந்த வரலாற்று நிகழ்வுகளை எவ்வளவு உள்வாங்கி யுள்ளனர் தெரியாது?
தோழர் 1. ஆக இன்றைய நிலைக்கு காரணம் கம்யூனிஸ்ட்டுகள் இல்லையா?
தோழர் 2- ஆம், இன்று வர்க்க ஒற்றுமையை மறுக்கும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு உகந்த சித்தாந்தகளால் மக்கள் சிந்தனை சிதைந்து அவர்கள் பின் செல்வதும், உலக கம்யூனிச இயக்க பின்னடைவும் கம்யூனிஸ்ட்களின் ஒற்றுமை இன்மையும் இன்னும் பல...
தோழர்கள் கருத்து கூறலாம் நேற்றைய கருத்து கேட்ப்பில் இருந்து.

ஒரு தோழருடன் விவாதித்த பொழுது அவர் வைத்த கேள்வியே இது,"பட்டியலின மக்களுக்கு இறந்தபின் சுடுகாட்டுக்கு போவதற்கு வழி இல்லை இதற்குத் தீர்வு என்ன?".
இந்த அரசு அமைப்பானது எல்லா மக்களும் வாழ வழிசெய்யும் சட்டதிட்டங்களை கொண்டுள்ளது. ஆகவே எல்லா மக்களுக்குமான அரசு என்றால், எல்லா மக்களுக்கும் உண்மையாலுமே அவர்களின் அடிப்படை உரிமைக்கு துணை நிற்க வேண்டிய கடமை பட்டதே.
ஆக சட்டவாதம் பேசும் பொழுது, அந்த சட்டம் வர்க்கம் சார்ந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
வெறும் பிரச்சினையை பேசும் பொழுது புறசூழலையும் அணுக வேண்டும். அதனை புரிந்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். அந்த சட்ட நடைமுறைகளை சிக்கலாக்குவதேன் எல்லா மக்களுக்கும் அவை உதவில்லை ஏன் என்பதனை புரிந்துக் கொள்ள சில 50 ஆண்டுகளுக்கு முன்னர் சில நிகழ்வுகளை உங்களுக்கு புரியவைக்க நினைக்கிறேன்..
உண்மையாலுமே ஒரு பொதுவுடமை வாதியாக இருப்பவன் இந்த பிரச்சனைக்கு மக்களை அணுகி அவர்கள் மத்தியில் பேசி இதற்கு தீர்வு காண முடியும் அவைதான் நமது கடந்த கால வரலாறு ..
வர்க்கமாக இருந்த மக்களை அன்று ஒன்று திரட்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று இல்லை. அதாவது தஞ்சை பகுதிகள் ஆகட்டும் தர்மபுரி ஆற்காடு பகுதிகளாகட்டோம். உழைக்கும் கூலிகளை, ஏழை, எளிய மக்களை ஒன்றுபடுத்தி போராடிய அந்த போராட்டக்காரர்கள் அங்கே சாதிகளாயிருந்த உழைப்பாளிகளை வர்க்கங்களாக திரட்டிப் போராடினார்கள், அவர்களின் போராட்டம் பிற்போக்கான நிலடைமை ஒடுக்குமுறைக்கும் ஜாதிய ஏற்ற தாழ்வுகளுக்கும் எதிர்த்து தீர்மானகரமாக பங்காற்றினர். அன்று இங்கே ஏன் இந்தக் கொடுமைகள் நடக்கவில்லை ஏனெனில் அன்று மக்கள் மத்தில் பொதுவுடைமை இயக்கம் செயல்பட்டது.
அதையைதான் அவர்கள் செய்வதால் அச்சம் கொண்ட அரசு சாதி சங்கங்களை களத்தில் இறக்கி அவர்களை அப்புறப்படுத்திவிட்டு....
இன்று அவர்களை தேடினால் என்ன செய்ய???
இன்று ஜாதிக்குள்ளே வர்க்கங்கள் வளர்ந்து விட்டபின் . வர்க்கப் போராட்டமானது திசை மாறிப் போய்விட்டது. ஓரே ஜாதிக்குள்ளே உடைமை வர்க்கமும் உடைமை அற்ற வர்க்கமும் உள்ள போது. இவை வர்க்க போராட்டமா ஜாதி போராட்டமா?
உடைமை வர்க்கம் தன்னை மேனிலை படுத்திக் கொள்ள உடைமை அற்ற ஏழை எளிய மக்களையும் தன் பின்னால் அணி திரட்டி ஜாதிய சங்கமாக திகழ்கிறது.
உடைமை அற்ற மக்களுக்காக போராட வேண்டியவர்கள் வர்கங்களாக திரள வேண்டியது மார்க்சிய பொதுவுடைமை சித்தந்தம், ஜாதியாக திரளச் சொல்வது உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆளும் வர்க்க ஒடுக்கும் வர்க்க சித்தந்தமே.
ஜாதி போராட்டங்களை புரிந்து வினையாற்ற வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பலவீனமே இதற்கு காரணம் என்று சாதாரணமாகச் கூறிக்கொள்ளலாம்.
இருந்தும் உழைக்கும் வர்க்கம் ஒற்றுமையின்றி எதிரிகளின் சூழச்சியால் வீழ்த்தப் பட்டுள்ளது என்பதனை மட்டும் பதிவு செய்ய நினைக்கிறேன் இன்னேரத்தில்.
சில நாட்களுக்கு முன் ஒரு தோழரை காண சென்றபோது அவர் இரு கேள்விகளை கேட்டார் .
முதல் கேள்வி:- "நாட்டின் உயர்ந்த பதவிக்கு ஒரு பட்டியல் இனத்தவரான ராம்நாத் கோவிந்த் வந்தாலும் அவர் பூரி ஜெகநாத் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. அப்படி எனும்பொழுது ஜாதிய கொடுமை என்பது எவ்வளவு மோசமாக உள்ளது பாருங்கள்" என்றார்.
உண்மைதான் இவை புரிந்துக் கொள்ள வேண்டியவையே.
அதற்கு முன் நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன், "ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் சாதாரண மனிதர் அல்ல, இந்திய அரசியலமைப்பின் மேலடுக்கு பொறுப்பிலிருப்பவர்".
அதாவது இங்கு இந்தப் பதவி என்பது உடமை வர்க்கத்தை காக்கும் அரசமைப்புக்கானதுதானே இதனை அவரே ஏற்று தானே செயல்பட்டுக் கொண்டுள்ளார்.
இந்த அரசு அமைப்பானது எல்லா பிற்போக்குத் தனங்களையும் எல்லா ஒடுக்குமுறைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குவதாகும். அப்படி எனும் பொழுது அவர் இந்த அரசமைப்பின் எல்லா ஒடுக்குமுறையும் ஏற்றுக் கொண்டுதானே இவர் இந்த உயர் பதவிக்கு வந்தவர். அப்படி எனும் பொழுது அவர் தனது பதவிக்காக இந்த எல்லா ஒடுக்குமுறையையும் தான் ஏற்றுக் கொண்டதோடு தன்னை சார்ந்தவர்களையும் சகித்து வாழ சொல்வதுதான் இதில் எளிமையான கோட்பாடாகும்.
மேலும் அர்ப்ப சம்பளம் வாங்கும் ஒரு பூஜரிக்கு இவ்வளவு தைரியம் வரும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றே என்பேன். இவரிடமுள்ள அதிகார பலமும் இவரிடம் உள்ள பல்வேறு விதமான சட்டதிட்டங்களும் பயன்படாமல் போவது ஏன் இதுதான் சிந்திக்க வேண்டியது உள்ளது.
ஆம் இந்த சமூகத்தில் பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கியதுதான் அரசமைப்பு என்பது அதில் மத அமைப்பான மத நிறுவனங்களை தூக்கி நிறுத்தும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதாக கூறும் கோயில்கள் அந்த மதக் கோட்பாடுகளை கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது தான் இவர்களின் நியாயம் தர்மம் என்று பேசப்படுகிறது.
ஆக இந்த சமூக அமைப்பான உடைமை வர்க்கம் சமுகத்தை தூக்கி நிறுத்தும் இவர்கள் செயலானது இதைத் தீர்ப்பதற்கு எந்த வழிவகையும் அல்ல என்பதே நமது பதிலாகும்.
ஆக இந்த உடைமை சமூகத்தில் இதற்கு தீர்வு அல்ல ஆகவே உடைமை அற்ற(பொதுவுடைமை) சமூகத்தில் மட்டுமே இதற்கு தீர்வு (இதற்க்கு நீண்ட போராட்டம் நடைபெறும்) என்று கூறும் அதேவேளையில் இதற்கான பொதுவுடைமை கட்சி வலிமை பலம் இருந்தால் மட்டுமே இதற்கான சரியான வழி வகை செய்ய முடியும் என்பதுதான் உண்மையான தீர்வாகும் .
மேலும் செய்தியை தெரிந்துக் கொள்ள பத்திரிக்கை லிங்க்...
May be an image of 4 people, people standing and outdoors
Subramani Kumarasamy, Rajendren Ramakrishnan and 12 others
18 Comments
4 Shares
Like
Comment
Share
May be an image of 4 people and text that says 'இன்றைய தோழர்1. ஜாதி பிரச்சினையை சரியாக அணுகாதனாலேயே இன்று கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவை தோழர் பி.சீனிவாசராவ் கண்டுள்ளது. தோழர். எனது அனுபவத்தில் அன்றைய காலகட்டம் அதன்பிறகு தெலுங்கானா போராட்டம் நினைவுதினம் ஆகட்டும் நக்சல்பாரி காலகட்டம் ஆகட்டும் க்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட பல போராட்ட வடிவங்கள் ஆகட்டும் மிகச்சரியாகவே பாட்டாளிவர்க்க நிலையில் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க என்பேன். அன்றைய பிரிட்டிஷ்காரர் எதிர்ப்பு அன்று சாதிய இன மொழி வேறுபாடின்றி பிரிட்டிஷாரை விரட்டி போராடினர். தஞ்சை நடத்தி சார்ந்து அவர்கள் பொருளாதார ரீதியான கையில் எடுத்தார். இதனை கைவிட்டு அதன் அதன் பிறகு தஞ்சை மத்தியில் போயினர் மற்றும் பல உருவாகின) போராட்டத்தில் எடுத்துக் கொண்டாலும் அங்கே உழைக்கும் எனக்கூறி போராட்டமாக தான் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும் அன்றைய கட்டத்தில் நிலத்துக்கான கைவிட்டதன் விளைவாக (அங்கேயும் அந்தப் போரட்டத்தை முன்னெடுத்த பின்னர் பல்வேறு விதமான போக்குகள் காலகட்டத்தில் நடந்த நக்சல்பாரி'
சு.கா.சீவா, Ayyub Khan and 1 other
1 Comment

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...