முனைவர். கோ. கேசவனின் நூலின் மீதான விமர்சன கூட்டம் பற்றிய பதிவு.
நான் யாரையும் குறை கூற எழுதவில்லை இந்தப் பதிவு. ஒரு விமர்சன கூட்டத்தின் மீதே விமர்சனம் எழுத வேண்டியாகி விட்டது அதற்க்கு அவர்கள் பொறுத்துக் கொள்வார்களாக.
தோழர்களே நான் ஒரு மூத்த தோழர் எந்த கூட்டத்திற்க்கும் போக வேண்டும் என்று எப்பொழுதும் வலியுறுத்துவார் அதனடிப்படையில் என்னால் இயன்றளவு பங்குகொள்வதும் அதில் நான் பெற்ற கருத்துகளை முடிந்தளவு பகிர்வதையும் செய்துக் கொண்டுள்ளேன்.
கொ.கேசவன் அவர்கள் தன் நூலில் மிகத்தெளிவாக பெசியுள்ளதை கூட முழுமையாக உள்வாங்கி பேசாமையால் அதில் மாறுபட்ட கருத்துள்ளவர்கள் கோ.கேசவனையே குறைக் கூறுகின்றனர். உண்மையில் யாரும் விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இருந்தும் இங்கே ஒருவரை விமர்சிக்கும் பொழுது அவரின் எழுத்தை உள்வாங்கி விமர்சித்திருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே என் அவா.
சரி தோழர்களின் குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்க கோ.கேசவனின் "சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்" நூலின் அடிப்படையில் எனது தேடுதல் இவை.
இந்நூலின் முன்னுரையில் 1925 பின் பொதுவுடமைக் கருத்துக்களை நோக்கி மக்கள் ஓரளவு ஈர்க்கப்பட்டனர் என்பதை நாடு முழுவதும் நடந்த பல்வேறு வேலைநிறுத்த சம்பவங்களில் எடுத்துக் காட்டின. எனினும் பொதுவுடமை இயக்கம் ஒரு குழு என்ற நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை. (அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணத்தை ஆதாரம் காட்டியுள்ளார்).
இதன் அடிப்படையில் 1930ல் இருந்து 1936 க்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த சமதர்மம் பேசிய சுயமரியாதை இயக்கத்துக்கும் பொதுவுடைமை இயக்கத் திற்கும் இடையிலான உறவைப் பற்றிப் பேசுவது மட்டுமே நோக்கமாக எழுதுவதாக இந்நூலைப் பற்றி கூறுகிறார்.
இங்கே நான் சொல்ல விரும்புவது மேடையேறி இல்லாதவற்றை பேசி அவை அடக்கம் அறியாத ஒரு புத்திஜீவி பெரியாரின் நூலை படிக்கமலே வாழும் பெரியாரிஸ்டாக இருக்கலாம்.
மேலும்...
இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றையோ தமிழகத்தில் பொதுவுடமை கருத்துக்களின் வரலாற்றையோ தொகுத்துக் கூறும் நோக்கம் கொண்டது அன்று தெளிவாக எழுத்தாளர் கூறிவுள்ள போது பிரச்சினை புரிந்துக் கொள்வதில் உள்ளது என்பேன்.
சமதர்மம் பேச வேண்டும் என்று சுயமரியாதை இயக்க முடிவு எடுத்தது ஆனால் நாத்திக பிரச்சாரத்தை கூட பெரியார் 1936 கைவிட்டார் என்னும் பொழுது இதற்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்வுகளே இந்த நூலின் ஆய்வு களமாகும் இதற்கு உறுதுணையாக நாம் ஆய்வு காலத்தில் முன்னும் பின்னும் உள்ள வரலாற்று நிகழ்வு எடுத்தாளப்பட்டுள்ளன.
எனவே நம்மை நோக்கத்திற்கு உகந்த வகையில் 1939ஆம் ஆண்டு வரையிலான சுயமரியாதை இயக்கத்தையும் பொதுவுடைமை இயக்கத்தின் சுருக்கமாக காண்போம் என்கிறார் கோ.கேசவன்.
கோ கேசவனின் ஆய்வு முறையானது வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படை கொண்டது அவரின் நூலும் இதனை மிகச் சிறப்பாக செய்து உள்ளது ஆனால் விமர்சகர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை என்பதே எனது விமர்சனமாகும். நூலில் ஒன்பது தலைப்புகளில் விவரித்துள்ளார் அவர் பெரியாரின் நிலைப்பாட்டை ஆரம்பக் கட்டங்களில் அவரின் செயலை மிகத் தெளிவாக மூன்று அத்தியாயங்களில் பேசியுள்ளார்.
இதன் சுருக்கமாக பெரியாரியல் என்று நான்காம் அத்தியாயத்தில் அவருடைய நிலைப்பாட்டை பேசியுள்ளார்.
அதன் பிறகு தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கும் அதனுடைய நிலைகளை பற்றி பேசியுள்ளார்.
முடிவுரையாக அவரின் இந்நூலின் மொத்த கருத்துகளை சுருக்கமாக தெளிவாக பேசியுள்ளார் .
தேவைப்படுவோர் அறிந்துக் கொள்ள உதவும் என்பதே என்கருத்து.
சுருக்கமாக பெரியாரின் செயலை புரிந்துக் கொள்ள உதவும் என்பதால்....
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையும் சட்ட வாத எல்லைக்குட்பட்ட வழிமுறையும் இயக்கத்தின் கொள்கையாகவும் நடைமுறையாகும் இருந்தன. இவையிரண்டும் காலனிய நாட்டின் அரசு அதிகார கட்டமைப்பில் இருந்து மீறவே இல்லை.
அரசு அலுவலர்களும் சட்டமன்ற பதவிகளும் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் அல்லாதார் என்ற சண்டை சச்சரவுகளுக்கு இடையில் இவையெல்லாம் காலனிய அரசு அதிகார கட்டமைப்பில் தத்தமக்குரிய பங்கேற்பு கோருவதற்கான என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிக்கையின் இன்னொரு பரிணாமம் இதில் முதல் பயனை உய்தவர்கள் பிராமணர்கள் இருந்ததில் வியப்பில்லை.
1860 முதல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கல்வி நவீன பொருளாதாரம் நவீன அரசியல் நிறுவனங்கள் ஆகியவற்றின் முதற் பயனை பிராமணர்களே நுகர்ந்தனர். இங்கு அதற்குமுன் பிராமண சிந்தனை போக்கும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் இருந்தது. இங்கே பிராமணக் குடும்பங்கள், வேளாளர் நிலப்பிரபுத்துவதுடன் முரண்பாடு கொண்டிருந்தனர்.
நவீன கல்வி பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த வேளாளர்கள் விரைவாக நலன் பெற்றனர். இப்போது காலனிய அரசு அதிகாரத்தின் இளைய பங்குதாரர்களாக வேளாளர்கள் ஆவதில் பிராமணர்களுடன் முரண்பட்டனர்.
பணப்பயிர் பொருளாதாரத்தின் விளைவாக கவுண்டர், நாயுடு, நாடார், வன்னியர், செட்டியார் ஆகிய ஜாதிகளில் இருந்த பணக்கார விவசாயிகள், வட்டி முதலாளியாக, ஆலை முதலாளியாக வளர்ந்தனர். இத் தோற்றமாறனது, அதுவரை பிராமணர்கள் மட்டுமே செய்துவந்த வட்டி முதலாளி, தரகு வணிகர், ஆலை முதலாளி ஆகிய வர்க்கங்கள் இந்த ஜாதிக்குள்ளும் தோன்றின. அந்த ஜாதிக்குள் இருந்த சிறுபான்மை இவ்வாறு புதிய வர்க்கமாக உருவெடுத்தனர். எனினும் இந்த புதிய வர்க்கம் தத்தம் பழைய ஜாதி அடையாளத்தை இழந்து விடவில்லை . அதற்கு மாறாக ஜாதியில் உள்ள பெரும்பான்மையான மக்களின் பலத்துடன் புதிய ஜாதிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.
புதிய பொருளாதார தகுதியுடன் புதிய கலாச்சார தகுதியும் இந்தப் புதிய வர்க்கங்கள் தோன்றின, எனவே இது காலனிய அரசு அதிகார கட்டமைப்பில் அரசியல் பொருளாதார நிலைகளில் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் கீழ் உள்ள பிராமண, நிலப்பிரபுத்துவ, தரகு வணிக, வட்டி முதலாளிகளின் ஆலை முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தும் வேலையாகும். இருந்தும் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற தொடர் எதிர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது பல்வேறு சாதிகளில் இருந்து தோன்றிய பணக்கார விவசாயிகளும் முதலாளிகளும் படைப்பாளிகளும் பிராமண ஆதிக்கத்தை எதிர்க்க முனைந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இத்தகைய எதிர்ப்பை காலனி ஆதிக்க ஆதரவு என்ற பரந்துபட்ட அடைப்புக்குள் காண வேண்டும்.
முதல் காலகட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் லட்சியமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பிராமணர் கலாச்சார எதிர்ப்பு அரசு ஆதரவு பார்ப்பனர் அல்லாதவர்கள் இடையே உள்ள ஜாதி வேறுபாடுகளை களைதல், சமயச் சீர்திருத்தங்கள் வருண சிரம ஒழிப்பு என்பனவாக இருந்தன.
இன்றும் சாதி ஒடுக்குமுறை இருந்தாலும் இந்த ஜாதியில் தோன்றிய புதிய வர்க்கங்களான அதிகாரிகளும் முதலாளிகளும் வணிகர்களும் தத்தம் நலன்களை அடைந்து கொள்வதில் ஜாதியின் எல்லா மக்களையும் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு பிரதானமாக உள்ளது.
புதிய மேல்நிலை வர்க்கங்கள் சாதிகளை கடந்து தமக்குள் ஒருங்கிணைவு ஏற்படுத்திக் கொண்டனர் இதுவே பிராமணரல்லாதோர் என்ற பெயரில் ஒளிந்து கொண்டது.
அதுமட்டுமின்றி பிராமணர் இடத்தில் உள்ள மேல்நிலை வர்க்கத்தில் இவர்களும் உறவு கொண்டுள்ளனர்.
ஆனால் உழைக்கும் ஏழை எளிய மக்கள் எல்லா ஜாதி பிரிவினருக்கிடையே உள்ளனர், அவர்கள் இன்று ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இந்த பல்வேறு நிலைகளில் இருந்து ஒன்றுபடுத்த வரர்க்கங்களாக அணி திரட்டுவது பெரும்பாடாக உள்ளது .
ஒரே ஜாதிக்குள் இருக்கும் முதலாளியை அதிகாரியை முதலாளியாகவும் அதிகாரியாகவும் பார்க்காமல் தன் ஜாதி காரணமாக மட்டுமே பார்க்கும்படி பாமரமக்கள் பழக்கப் படும்வரை ஜாதியானது வர்க்க அணி சேர்க்கைக்கும் தடையாக இருக்கும் என்பதில் சந்தேகப் பட தேவையில்லை... இதனை பேசியவர் கவனித்தில் கொண்டிருந்தால் சிறாப்பாக இருந்திருக்கும் என்றுக் கூறி கொள்கிறேன்.
இன்னும் பின்னர் தோழர்களே...
1Ayyub Khan
No comments:
Post a Comment