தோழர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள் கருத்துநிலை அதாவது அகவய சிந்தனையில் இருந்து அல்லாமல் மார்க்சியத்தை உள்வாங்கி கொஞ்சம் பேச வாருங்கள். ஏனெனில் மார்க்சியம் எல்லா சமூக ஆய்வையும் தெளிவாக காட்டியுள்ளது அதனை புரிந்து நமது சமூகத்திற்க்கேற்றப்ப பொருத்தி பார்க்க வேண்டிய புரிதல் வேண்டும் என்பதே. மற்றபடி நீங்கள் காட்டும் ஆதாரங்களை கொண்டு நான் வாசித்து தெளிவடையவதை விட உங்கள் கண்ணோட்டம் மார்க்சிய வகை பட்டதா என்பதனை நீங்கள் ஆய்ந்தறிய வேண்டும் தோழர்களே.
[0:27 pm, 12/08/2022] kravichandran00@gmail com: பாராளுமன்ற சனநாயகம் போலி சனநாயகம்!
மக்கள் சனநாயகமே உண்மை சனநாயகம்!
அதிகார வர்க்க ஆட்சிமுறை ஒழியட்டும்!
மக்களதிகார ஆட்சிமுறை மலரட்டும்!
சட்டம் இயற்றும் அமைப்பும், நடைமுறைப்படுத்தும் அமைப்பும்
தனித்தனியாய் இருக்கின்ற
முதலாளிய சனநாயக
மக்கள் விரோத ஆட்சியினை
உடைத்தெறிந்து தூக்கியெறிவோம்!
சட்டம் இயற்றும் அதிகாரமும் நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் மக்களதிகார கமிட்டிகளுக்கே
அதிகாரம் கொண்ட நிர்வாகிகளை
தேர்ந்தெடுப்போம்! திருப்பியழைப்போம்!
அனைத்து நிர்வாக அதிகாரங்களும்
மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கும் மக்கள் சனநாயக ஆட்சி முறைக்கே.
ஆர்ப்பரிப்போம்
அணிதிரள்வோம்!!
மக்கள் கரங்களில் அதிகாரம்!
மக்கள் கரங்களில் பொருளுற்பத்தி!
மக்களுக்கே விநியோகம்
தேவைக்கேற்ற உற்பத்தி
உழைப்புக்கேற்ற ஊதியம்.
மக்கள் அதிகாரமும்
மக்கள் சனநாயகமும்
மக்கள் பிரதி நிர்வாகங்களும்
மக்கள் நீதி மன்றங்களும்
மக்கள் காவல் படைகளும்
மக்கள் சனநாயக ஆட்சி முறையில்
மக்களை கொண்டு நிறுவுவோம்!
மண்ணின் விடுதலை!
மக்களின் விடுதலை!
மொழி விடுதலை! தேச விடுதலை!
உழைக்கும் மக்கள் தலைமையிலே
புதிய சனநாயக வடிவிலே
முன்னெடுப்போம்!
முன்னெடுப்போம்!
🤝
[0:28 pm, 12/08/2022] CP: “விமர்சனம், சுய விமர்சனம்" என்ற பிரச்சினையைப் பற்றிச் சற்று சிந்திப்போம், புதிய தலைவர்களைச் சிருஷ்டிப்பதற்கும், உள்ளவர்களிடமிருந்து கூடிய சேவையைப்பெறுவதற்கும், கம்யூனிஸ்டுகளாகிய எங்களிடமுள்ள புனிதமான கருவி 'விமர்சனம் சுய விமர்சனம்’’ ஆகும். இந்த முறை கம்யூனிஸ் இயக்கத்துடனேயே தோன்றியது. சோ. க. க. (போல்ஷ்விக்)யினுடைய மாஸ்கோ ஸ்தாபனத்தில் தோழர் ஸ்டாலின் சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்: "எமக்குத் தண்ணிரும், காற்றும் எவ்வளவு அவசியமோ, அதேபோல் விமர்சனமும்-சுய விமர்சனமும் அவ்வளவு அவசியம். ’’ இது இல்லாமல், எமது கட்சி முன்னேற முடியாது; எமது தவறுகளைப்புரிந்துகொள்ள முடியாது. குறைபாடுகளைத் திருத்திக்கொள்ளமுடியாது. எம்மிடம் குறைபாடுகள் ஏராளம். இதை நாம் ஒழிவு மறைவின்றியும், நேர்மையாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். சில தோழர்கள், ‘எமது எதிரிகள் குறைபாடுகளைப் பயன்…
[0:29 pm, 12/08/2022] CP: திரிபுவாதத்தைத் தோற்கடித்து, தனது இறுதி இலட்சியத்தை நிறைவேற்ற, கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைமை தனது மார்க்சிஸ்-லெனினிஸ் அறிவை மேலும் வளர்க்க வேண்டும். கட்சியின் கொள்கைகளைத் தெளிவாகக் கற்றறிய வேண்டும். புத்தகவாதப் போக்கையும், பிரச்சினைகளை அக்கறையின்றி, கண்மூடித்தனமாக அணுகுவதையும் தவிர்க்க வேண்டும், சுக போகங்களில் விருப்பங்கொள்ளாது, சுய நலத்தை (இலஞ்ச ஊழல்களை) எதிர்த்துப் போராட வேண்டும்.
[0:30 pm, 12/08/2022] CP: நான் எழுதியவை இந்திய நிலையை நமது மார்சிய லெனினிய கண்ணோட்டத்தில் புரிந்துக் கொள்ள... தோழர்கள் அவசியம் விவாதியுங்கள்
[1:48 pm, 12/08/2022] CP: விமர்சனம் என்பது நோயை குணப்படுத்துவதாக இருக்கவேண்டுமே ஒழிய நோயாளியை கொள்வதாக இருக்கக்கூடாது என்றும் விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் கட்சியில் உள்ள தவறுகளை களைய போராட வேண்டும் என்றும் அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால் எவ்வளவு தூரம் உணரப்பட்டுள்ளது ? தவறிழைக்கும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் தவறுகளை திருத்திக்கொள்ள உதவி செய்வதில் முதன்மையானது, பெரும் தவறுகளை இழைத்தபின்னும் வழிகாட்டலை ஏற்க மறுத்து திருத்திக் கொள்ளாதவர்கள் விஷயத்திலேயே அம்பலப்படுத்தும் விதத்திலான போராட்ட முறை கைக்கொள்ள வேண்டும் இத்தகைய பொறுமையின்றி எடுத்த எடுப்பிலே ஒருவரை "சந்தர்ப்பவாதி திரிப்பு வாதி எதிர் புரட்சியாளர்" என முத்திரை குத்தி விடுவதும் போராட அறைகூவல் விடுவதும் குறுங்குழுவாத போக்கின் விளைவேயாகும் . விமர்சனம் சுய விமர்சனம் மூலம் மாற்றி அமைப்பதற்க்கான வழிமுறை க்கு எ…
[1:49 pm, 12/08/2022] CP: 1).கட்சியின் உள் முரண்பாடுகளும் மாற்றுக்கருத்துக்கள் அல்லது வழிகளும் நிலவும் ; அவை ஒன்றுபட்டு நிற்கிற நேரத்தில் தம்முள் போராடிக் கொண்டிக்கொண்டுமிருக்கும் என்ற பொருள் முதல்வாத இயங்கியல் கண்ணோட்டத்தில் அங்கீகரிக்க மறுக்கின்ற தூய கட்சி வாதம் பிளவுகளும் அழிவுவாதத்திற்கும் வழிவகுக்கின்றது.
2) . ஒரு அரசியல் வழி அல்லது அமைப்பு வழியில் நின்று கொண்டு தவறான சிந்தனை மற்றும் செயல்முறைகளை எதிர்த்து போரிடுவதற்கு உட்படுத்தி தனிநபரின் நல்ல அல்லது தவறான பண்புகளை அணுகுவதற்கும் பதில் தனிநபரின் பண்புகளில் இருந்து உட்கட்சிப் போராட்டத்தை தொடங்குவது கோஷ்டி வாதத்தையும் அதிகார வர்க்கப் போக்கையும் தோற்றுவிக்கிறது.
3). சுய விமர்சனம், விமர்சனம் மூலம் தன்னைத் திருத்திக் கொண்டு பிறரையும் திருத்துவதன் மூலம் கட்சியை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்ற நிகழ்ச்சி போக்கே கட்சியின் வ…
[1:50 pm, 12/08/2022] CP: கடந்த கால படிப்பினைகள் என்ன சொல்கின்றது யுத்த தந்திர கோட்பாடுகளையும் செயல் தந்திர கோட்பாடுகளையும் கிரகித்து புரட்சியாளர்கள் மத்தியில் சிந்தனை ரீதியாக ஊட்டவில்லை, இதனால் புரட்சியாளர்கள் தன்னியல்பு வகைப்பட்ட சிந்தனையிலிருந்து கோட்பாட்டு ரீதியில் முறித்துக் கொள்ளவில்லை . (அதாவது முன்னர் இருந்த கட்சியின் சித்தாந்தத்தை சொல்லுகிறார்) . பின்னர் தலைமை பொருளாதார வாதத்திற்கு மாற்றாக பயங்கரவாதத்தையும் இடது சகாசவாதத்தையும் ஏற்படுத்தியது முடிந்தது .தத்துவ அரசியல் பணிகளின் முக்கியத்துவத்தை குறைத்து இயக்கத்தில் சித்தாந்த ஒற்றுமையை பலவீனப்படுத்தி விடுகிறது.
தன்னியல்பான நடைமுறைக்கு ஏற்ப அமைப்பு துறையில் கற்றுக்குட்டி தனமும் அதிகாரவர்க்க மனப்பாங்கும் இடம்பெற்றன .
ஆக தத்துவ பணியாற்றிய விதம் மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமை, இடதுசாரி சாகாச வாதத்தில் தன் …
[1:51 pm, 12/08/2022] CP: முழுமையாக வாசிக்க விவாதிக்க இணைய தளத்தில் உள்ளது தோழர்களே... கேள்விகளுக்கு பதிலளிப்பேன்.
[3:23 pm, 12/08/2022] +91 94459 40622: இது (இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரச்சினைகள்) தொடர்பாக, இளம் கம்யூனிஸ்ட் கழகம் சார்பில் வெளியிட்ட இந்த அறிக்கை பற்றி தோழர்கள் கருத்து சொல்லுங்கள்.
அறிக்கையிலிருந்து - "இந்திய சமூகம் பற்றியும், இன்றைய சர்வதேச அரசியல் பொருளாதார நிலைமைகள் பற்றியும் செய்யும் ஆய்வுப் பணி என்பது நம் கையிலிருந்து தட்டிப் பறிக்க முடியாத, இந்தத் தருணத்தில் மிக முக்கியமாய் உள்ள, சங்கிலி முழுவதும் நம் கைவசமாகி விடுவதற்கு உத்தரவாதம் தரும் கண்ணியாக உள்ளது."
https://yclindia.wordpress.com/2021/09/03/young-communist-league-the-strategy-of-research-work/
[3:37 pm, 12/08/2022] CP: இவை ஆசிய பாணி உற்பத்தி முறையின் அடிப்படையில் பேசப்பட்டுள்ளது தோழர் ஆகவே இங்கே மார்க்சிய புரிதலை கைவிடப்பட்டுள்ளது என்பது கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் இவர்கள் இதுவரை சீனாவை அறுதியிட்டு எவ்வகைப்பட்ட உற்பத்தி முறையில் உள்ளது என்பதை தெளிவு படுத்தவில்லை அங்கே இன்னும் கம்யூனிச சமூகம் நிலவுவதாக கூறுகின்றனர். வர்க்கத்தை விட இவர்கள் ஜாதியை பிரதானமாக காட்டுகின்றனர். உண்மையில் இங்கு நிலவும் உற்பத்தி முறையும் சரியான முறையில் கணிக்கவில்லை என்பேன்
[3:43 pm, 12/08/2022] +91 94459 40622: 1. ஆசியபாணி உற்பத்தி முறை என்பது மார்க்சிய அடிப்படையிலானதுதானே?
2. சீனா பற்றி ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
3. வர்க்கத்தை விட சாதியை பிரதானமாகக் காட்டுகின்றனர் என்று ஏன்/எப்படி சொல்கிறீர்கள்?
4. இங்கு நிலவும் உற்பத்தி முறையை கணிக்க ஆய்வு செய்ய வேண்டும் என்பதுதான் முன்மொழிவு.
[3:48 pm, 12/08/2022] CP: அப்படி எனும்பொழுது அது தவறான கருத்து தான் ஆசிய பாணி உற்பத்தி முறை என்பது மார்க்சியம் அல்ல என்பது பல தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது . சீன பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்து கொண்டிருப்பீர்கள் தோழர்.தியான மென் சதுக்கத்தில் தனது மாணவர்களையும் தனது மக்களையும் எதிர்ப்பாளர்களின் என்று கொன்றொழித்தது கம்யூனிஸ்ட் நாடாக இருக்கவே முடியாது. நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் அதிலுள்ள கருத்துகளின் அடிப்படையில் பேசி உள்ளேன் தோழர் அதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்
[7:32 pm, 12/08/2022] +91 94459 40622: ஆசியபாணி உற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் விரிவாக எழுதியுள்ளார். அதன் அடிப்படையில்தான் இந்திய சமூகத்தை (சாதியப் பிரச்சினை, தேசிய இனப் பிரச்சினை, இந்துத்துவ பெரும்பான்மைவாத அரசியல்) ஆகியவற்றை சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று கருதுகிறேன், தோழர்.
ஆசியபாணி உற்பத்தி முறை பற்றி தைமூர் ரஹ்மான் என்ற பாகிஸ்தானிய மார்க்சிய ஆய்வாளர் (கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரும் கூட) எழுதிய புத்தகத்தையும், மரியன் சாயர் எழுதிய விமர்சன பகுப்பாய்வு நூலையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
[7:33 pm, 12/08/2022] +91 94459 40622: The Class Structure of Pakistan
[7:33 pm, 12/08/2022] +91 94459 40622: அலைகள் பதிப்பகம் சார்பில் தமிழில் வெளியிட்டுள்ளார்கள்
[7:35 pm, 12/08/2022] CP: மாறா நிலை சமூகம் என்பது ஆசிய பாணி உற்பத்தி முறையாகும் ஆகவே நீங்கள் எந்த அடிப்படையில் பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் என்ற பெரிய நூல் ஒன்று உள்ளது தோழர் முடிந்தால் அதை வாசித்துப் பாருங்கள். மார்க்சியம் என்பது இயக்கியவியலை அடிப்படை கொண்டது . ஆசிய பாணி உற்பத்தி முறை என்பது அக்கால ஆங்கிலேயர்களின் ஆவணங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம் மேலும் இதனை குறித்து சுனிதி குமார் கோஷ் தனது பெரு முதலாளி வர்க்கம் என்ற நூலில் மிகத் தெளிவாக விளக்கி மார்க்சிய நூல்களின் அடிப்படையில் விளக்கியிருப்பார் முடிந்தால் தோழர் வாசித்துப் பாருங்கள்
[7:37 pm, 12/08/2022] +91 94459 40622: இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை – தைமூர் ரஹ்மான்
(தைமூர் ரஹ்மான் ஒரு பாகிஸ்தானிய கல்வியாளர், இசைக்கலைஞர் மற்றும் சோசலிச அரசியல் ஆர்வலர். இவர் பாகிஸ்தானின் மஸ்தூர் கிசான் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் முன்னணி கித்தார் கலைஞராகவும், லால் என்ற முற்போக்கான இசைக் குழுவின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். அவர் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கிறார்)
https://yclindia.wordpress.com/2021/11/18/taimur-rahman-the-class-structure-of-pakistan/
[7:39 pm, 12/08/2022] CP: தோழர் நூலை வாசிப்பது மார்க்சிய அடிப்படைகளை புரிந்து கொள்வதற்காக தான். ஆகவே சமூகம் சம்பந்தமான எல்லா வரையறைகளையும் மார்க்ஸ் எங்கெல்ஸ் மிகத் தெளிவாக பேசி உள்ளனர். எங்கெல்ஸின் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் ஆதி பொதுவுடமை சமூகம் அடிமை உடைமைச் சமூகம் நிலவுடைமை சமூகம் முதலாளித்துவ சமூகம் என்றுதான் வரையருத்துள்ளார்கள் அதில் எங்கேயும் ஆசிய பாணி சமூகம் என்று எங்கும் இல்லை தோழர் என்பதையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.
[7:40 pm, 12/08/2022] +91 94459 40622: இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதியதையும், பிற ஆதாரங்களையும் வைத்துதான் நான் குறிப்பிட்ட நூல்களை எழுதியுள்ளனர். நீங்கள் அவற்றையும் வாசித்திருந்தால் பயனளிக்கும். ஆங்கிலேயர் ஆவணங்களாகவே இருந்தாலும் அவற்றை வைத்துக் கொண்டு அவசர கதியில் முடிவுக்கு வரும் அளவுக்கு பலவீனமான ஆய்வாளர் இல்லை, மார்க்ஸ். அவரது எழுத்துக்களில் ஆசியபாணி சொத்துடைமை என்பது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.
(மார்க்ஸ்) எங்கெல்சின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலின் அடிப்படையில் இந்தியாவில் வர்க்க சமூகமும் அரசுகளும் தோன்றியது பற்றிய பகுப்பாய்வுக்கு ஆசியபாணி சொத்துடைமை என்ற மார்க்சின் கருத்துரு மிகவும் இன்றியமையாத ஒன்று என்று கருதுகிறேன்.
[7:43 pm, 12/08/2022] CP: ஆமாம் தோழர் அதற்கு தான் நானும் விளக்கம் கொடுத்துள்ளேன் அதையும் கொஞ்சம் வாசித்துப்பாருங்கள். நூலை வாசிப்பதற்கு முன் நாம் மார்க்சியத்தை எவ்வளவு உள் வாங்கி இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டால் புரிதல் எளிதாக இருக்கும் என்பது எனது கருத்து தோழர்
[7:44 pm, 12/08/2022] +91 94459 40622: குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் அதீனிய அரசின் தோற்றம், ரோமாபுரி அரசின் தோற்றம், ஜெர்மானிய அரசின் தோற்றம் என்ற மூன்று அரசுகள் பற்றியும்தான் பருண்மையாக எழுதப்பட்டுள்ளது.
இந்திய அரசின் தோற்றம் என்று பருண்மையாக வரலாற்று ரீதியில் தொகுக்க வேண்டியுள்ளது.
[7:45 pm, 12/08/2022] CP: தோழர் நான் பல கேள்விகள் மேல் வைத்து உள்ளேன் அதை விவாதியுங்கள் தோழர் வெறும் நூல்களை ஆதாரம் காட்டாதீர்கள் மார்க்சியத்தின் அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள வேண்டும் தோழர்
[7:46 pm, 12/08/2022] CP: சாரம்சத்தில் எத்தனை விதமான சமூக அமைப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தோழர் அதுதான் கேள்வி
[7:46 pm, 12/08/2022] +91 94459 40622: மார்க்சியத்தின் அடிப்படையில்தான் நானும் கருத்துக்களை முன் வைக்கிறேன், கேள்விகளை எழுப்புகிறேன்.
[7:48 pm, 12/08/2022] +91 94459 40622: "இந்த விவாதங்களில் நான் எதை பிரச்னைக்குரியது என்று பார்க்கிறேன் என்றால், ”முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன் இருக்கும் உற்பத்திமுறை நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை” என்ற முன்முடிவு தான். இது குறித்து பேசுவதற்கு முன் இந்தப் புத்தகத்தில் இருக்கும் முதல் இரண்டு தலைப்புகள் இந்தியாவுக்கும் முக்கியத்துவமுடையதே என்று குறிப்பிடுகிறேன். அடுத்த இரண்டு தலைப்புகள் குறிப்பாக பாகிஸ்தானின் தற்கால வர்க்க கட்டமைப்பு என்ற அம்சத்தைப் பற்றி பல்வேறு தரவுகளுடன் பரிசீலிப்பதாக உள்ளன.
தலைப்புகளுக்குள் போவதற்கு முன்பு நான் ஒன்றை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நூல் முழுக்க முழுக்க தெற்காசிய சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்யும் நூல். இந்த நூல் வரலாற்று ஆய்வு, சமூகவியல் ஆய்வு தொடர்பானது அல்ல . மேலும் இந்த ஆய்வு முழுக்க முழுக்க ஒர…
[7:51 pm, 12/08/2022] CP: ஆசிய பாணி உற்பத்தி முறையை மார்க்ஸ் கையாண்டிருந்தால் அவர் தொடர்ந்து தனது நூல்களிலும் ஏன் மூலதனம் நூலில் கூட கையாண்டு இருக்கவேண்டும் தானே அவர் இதனை கைவிட்டு விட்டார் என்று ஆதாரபூர்வமான நூல்கள் பல உள்ளன அதில் முக்கியமாக இந்தியா பற்றி மார்க்ஸ் நூலில் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளனர். மேலும் இந்தியாவில் ஆசிய பாணி உற்பத்தி முறை என்பது சமூகம் இயங்கா நிலையில் தேங்கிக் கிடப்பது என்பது தான் அதாவது மாற்றங்களை தூக்கிப்போட்டுவிட்டு மார்க்சியத்தை நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் அர்த்தம் . மார்க்சியமானது இயங்கியலை அடிப்படையாகக் கொண்டது அப்படி எனும் பொழுதுஇயங்கா நிலையை மார்க்ஸ் போதனை எதன் அடிப்படையில் அன்றைய ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது என்று பின்குறிப்புகள் உள்ளது என்பதை தெளிவடையுங்கள்
[7:53 pm, 12/08/2022] +91 94459 40622: மூலதனம் நூலில் மார்க்ஸ் தொடர்ந்து ஆசியபாணி சொத்துடைமை முறை, இந்திய கிராம சமுதாயம் என்று தொடர்ந்து குறிப்பிடுகிறார்.
"ஏங்கெல்ஸின் ”குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலை எடுத்துக் கொள்வோம், அதில் அவர் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை தோன்றியதற்கான குறிப்பான சூழ்நிலைகளை விளக்குகிறார். அதாவது, ரோமானிய பேரரசின் வீழ்ச்சியும், அதனை கைப்பற்றிய ஜெர்மானிய மக்களினத்தின் குறிப்பான தன்மைகளைக் கொண்ட, இரண்டு உற்பத்தி முறைகள் சேர்ந்து உருவாகும் புதிய உற்பத்திமுறையைத் தான் அவர் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை என்கிறார்.
ஆக இந்தக் குறிப்பான வரலாற்று நிகழ்ச்சி தான் ஐரோப்பாவில் இந்த புதிய உற்பத்தி முறையை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை, தோற்றுவித்தது என்றால் தெற்காசிய சமூகத்தில் இதே போன்றதொரு நிகழ்வை நாம் எங்கே பார்க்கிறோம்?"
- தைமூர் ரஹ்மான்
[7:54 pm, 12/08/2022] CP: நவ மார்க்சியவாதி களுக்கு பதிலளிக்க முடியாது என்பது எனது கருத்து ஆக மார்க்சியத்தை தலை கீழாக்கி எதையும் பேசலாம் தோழர். சமூக மாற்றமும் மார்க்சியமும் நேர்கோட்டில் எங்கும் யாரும் சொல்லவில்லை பல ஏற்றத்தாழ்வுகளை கொண்டதுதான் ஆனால் அவை எல்லாம் இந்த சமூக அமைப்புகள் தான் அடங்கும் என்பது தான் மார்க்சியம். அப்படி அடங்காது என்றால் அது மார்க்சிம் அல்ல என்பது எனது கருத்து மற்றவை உங்கள் விருப்பம்
[7:57 pm, 12/08/2022] +91 94459 40622: "அவை எல்லாம் இந்த சமூக அமைப்புகள் தான் அடங்கும் என்பது தான் மார்க்சியம். அப்படி அடங்காது என்றால் அது மார்க்சியம் அல்ல" - இதுதான் மார்க்சியம் என்று சுருக்குவதைத் தவிர்க்க வேண்டும், தோழர். பருண்மையான நிலைமைகளை பருண்மையாக ஆய்வு செய்வது மார்க்சியத்தின் அடிப்படை.
அத்தகைய ஆய்வுகளை கருத்தில் எடுத்துக் கொண்டு விமர்சன பகுப்பாய்வு செய்வது மார்க்சியத்தை வளர்த்துச் செல்லும்.
[8:01 pm, 12/08/2022] CP: மார்க்சியம் இல்லாத போக்குகளை மார்க்சியம் என்று சொல்லமுடியாது தோழர் .அவைதான் மார்க்சியத்தை கேள்விக்குள்ளாக்கி மார்க்சியத்தை குறைபாடு உள்ளாக்கி மார்க்சியத்தை குழப்பும் வேலையை செய்து கொண்டுள்ளது இவை மார்க்சிய விரோத போக்குகள் இவை சோவியத் தகர்வில் இருந்து தொடங்கியது இதன் தொடர்ச்சி பல்வேறு விதமாக இன்று வியாபித்துள்ள எங்கும் ஆகவே மார்க்சியத்தை குறைசொல்லும் போக்கு தான் இன்று உருவாகியுள்ளது. அந்தப் போக்குகளைப் பற்றி விரிவாக நாளை காலை எழுதுகிறேன் தோழர்
இன்றைய பதில்கள் கீழே
இன்னொரு நூல் பெருமுதலாளி வர்க்கம் என்ற சுனிதி குமார் கோஸ் அவர்களின் நூல் உள்ளது அதில் தெளிவாக இந்திய சமூகம் பற்றிய ஆய்வு உள்ளது. ஆக இங்குள்ள நூல்கள் கொஞ்சம் வாசித்து நிறைகுறைகளை பேசலாமே? நான் தைமூர் நூல் பற்றி விமர்சனங்கள் படித்துள்ளதால் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் தோழர்களே
பாட்டாளிவர்க்கப் பேராசான் ஸ்டாலினது மறைவிற்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய குருஷ்சேவ், பிரஷ்னேவ் திருத்தல்வாதக் கும்பல் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு என்பதை அனைத்து மக்களுக்குமான அரசு என்றும், பாட்டாளி வர்க்கத்தின் இரும்புக் கோட்டையான கம்யூனிஸ்ட் கட்சியை வெகுமக்கள் கட்சி எனவும் மாற்றமடையச் செய்து மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளுக்குத் துரோகமிழைத்தது. சமாதானப் பூர்வமான மாற்றம், சமாதானப்பூர்வமான போட்டி, சமாதான சகவாழ்வு என்ற கோரிக்கைகளை முன்வைத்து வர்க்கப்போராட்டத்தை முற்றிலுமாக கைவிடுவதற்கு அடித்தளமிட்டது. அதனால் உலகில் பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சிகள் வர்க்க அரசியலையும் வர்க்கப் போராட்டத்தையும் கைவிட்டு, பாராளுமன்றவாத, பொருளாதாரவாத, சீர்திருத்தவாத, திருத்தல்வாதக் கட்சிகளாக தரங்கெட வழியேற்படுத்தி பாட்டாளிவர்க்க சர்வதேசியத்திற்குத் துரோகமிழைத்தது.
"பின்நவீனத்துவவாதிகள் சமுகவிரோதிகளாவர் என்று கூறுவதைவிட சமூகத்தைப் பிளவு படுத்துபவர்கள் என்று கூறுவதே சரி. இந்த அடையாள அரசியலின் நோக்கம் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைப்பதாக இருப்பதால் பின்நவீனத்துவவாதிகளை பாட்டாளிவர்க்க விரோதிகள் என்று கூறுவது வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும்."
உலகமயமாதலும், தாராளமயமாதலும், தனியார்மயமாதலும் கொடிகட்டிப் பறக்கும் இந்த நேரத்தில் புரிந்துக் கொள்ளுதல் அவசியம் தோழர்களே. ஆக நான் அடிப்படை மார்சியத்தை புரிந்து பேசுங்கள் என்று இதனால்தான் கூறுகிறேன் நன்றி தோழர்களே
மேலும் தோழர்களே, கடந்தகால சமூகம் குறித்த சமூக விஞ்ஞான ஆய்வானது – அதாவது உற்பத்தி முறையின் அடிப்படையிலான சமூக ஆய்வானது – சந்தைக்கென உற்பத்தி நடைபெறவில்லை என்பதையும், அப்போது ‘சரக்கு’, ‘பணம்’ குறிப்பாக கூலி உழைப்பு இருக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. அதனால் அப்போது சுரண்டலோ மேலாதிக்கமோ நிலவவில்லை. “சமூகத்தின் ஆரம்ப கால உற்பத்திகள் அனைத்தும் கூட்டு உற்பத்தி முறையிலானவையே, அதேபோல் பெரிய அல்லது சிறிய அளவிலான கம்யூனிச சமுதாயங்களுக்குள்ளாக நேரடி விநியோகம் மூலமாகவே நுகர்வும் நிகழ்ந்தது.” (மூலதனம் நூலில் காரல் மார்க்ஸ்).
மனிதர்கள் வாழ்வதற்கு ‘பொருள்’ உற்பத்தி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். கச்சாப் பொருட்கள், கருவிகள் மற்றும் துணைக் கருவிகளின் பயன்பாடு அதற்கு முன்நிபந்தனையாகிறது. இவையெல்லாம் கிடைத்துவிட்ட போதிலும், ஒன்றுக்கொன்று அருகருகில் வைத்துவிட்டால் உற்பத்தியானது தானாக நிகழ்ந்துவிடாது. அதன் மீது யாரேனும் உழைப்பை செலுத்த வேண்டும் – ஆக, இங்கு நமக்கு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இவ்வாறாக, ஒரு பொருளை உற்பத்தி செய்ய நமக்கு உற்பத்தி சாதனங்களும், உழைப்பும் தேவை. உற்பத்தி முறையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது உழைப்புப் பிரிவினைக்கும், வர்க்க உருவாக்கத்திற்கும் வழிகோலியது. அப்போதைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களித்த சூழ்நிலைகளானது அப்போதைய சமூக ஒழுங்காகிப் போனது. சமூக விஞ்ஞானிகள் அவ்வமைப்புகளை முறையே புராதன(ஏறக்குறைய கம்யூனிச) அமைப்பு, அடிமையுடைமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் மற்றும் முதலாளித்துவ சமூகம் என்று விளக்கியுள்ளனர். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உற்பத்தி முறையான முதலாளித்துவம் குறித்தும், நாம் விரிவாகக் காண்போம்.
அடிப்படை வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி என்பது முதலாளித்துவத்தின் கீழ் செல்வக் குவிப்பிற்கான உற்பத்தியாக மாறிப்போனது. இலாபம் என்பது இயற்கையான ஒரு விதியல்ல. செல்வக் குவிப்பிற்காக முதலாளித்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்காக தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான பணிச் சூழல்களில், இரக்கமற்ற பணி நேரங்களுக்குக்கு ஆட்பட்டு கடுமையாக உழைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த உழைப்புச் சக்திகளின் அதிக உழைப்பு நேரத்தினால் ஈட்டப்படும் மதிப்பைத்தான் ‘உபரி மதிப்பு’ என்று காரல் மார்க்ஸ் விளக்குகிறார். அவ்வாறு அபகரிக்கும் அந்த உபரி மதிப்பைத்தான் முதலாளித்துவமானது இலாபம் என்று சொல்கிறது. இந்த உபரி மதிப்பு அதிகரிப்பே மேலாதிக்க சமூக உறவுகளுக்கும், அதன் படிநிலை வெளிப்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்பதே அவரது விளக்கம்.
முந்தைய உற்பத்தி முறையிலும், முதலாளித்துவத்திலும் காணப்படும் இந்த உழைப்புப் பிரிவினையை மார்க்ஸ் தெளிவாக விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் பின்வருமாறு:
முதலாளித்துவத்தின் கீழ், தனியுடைமையின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையின் விளைவாக உருவாகும் உறவுமுறைகள் மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பிலானவை. எஜமானர் – தொழிலாளி என்று அது வரையறுக்கப்படுகிறது. முந்தைய அமைப்பிற்கும், முதலாளித்துவ அமைப்பிற்குமான முக்கிய வேறுபாடு என்னவெனில் உழைப்புக்கு ஈடாக கூலி(பணம்) எனும் புதிய முறையிலான ஒரு இழப்பீடு வழங்கப்படுகிறது; பொருட்கள் ‘சரக்கு’களாகின்றன; உற்பத்தி சாதனங்கள் ‘மூலதனம்’ ஆகின்றன, சுரண்டல்வாத சூத்திரம் இலாபம் என்று அழைக்கப்படுகிறது. உற்பத்தி சாதனங்களின் ‘எஜமானர்’ உழைப்புச் சக்தியை வாங்கி, உபரி மதிப்பை இலாபம் என்று அபகரிக்கும் இந்த முறையே உழைப்புச் சுரண்டல் எனப்படுகிறது. தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறையும், அதன் கீழான பொருளாதார அமைப்பும் முதலாளித்துவம் எனப்படுகிறது. இதன் மூலம், முதலாளித்துவ பொருளாதாரமானது சுரண்டலின் அடிப்படையிலானது, ஏற்றத்தாழ்வு மிக்கது என்பதை சொல்லவும் தேவையில்லை.
வாழ்வதற்காக மனிதர்கள் பொருளை உற்பத்தி செய்யவும், நுகரவும் வேண்டும். உற்பத்தியும் அதனோடு தொடர்புடைய நடைமுறைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகும். அதனால், மனித வாழ்வின் நிர்ணய சக்தியாக அதுவே விளங்குகிறது. இவ்வாறாக, மனிதர்கள் தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், உற்பத்தி உறவுகளுக்கு உள்ளாகிறார்கள், அதன் மறுபெயர் உழைப்பு உறவுகள். உழைப்பு உறவுகள் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றவையாக இருக்கின்ற போது, அதன் விளைவாக ஏற்படும் சமூக உறவுகளும் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றதாகவே இருக்கும்.
செல்வக் குவிப்பென்னும் வேட்கையினால் கடிவாளமிடப்பட்டுள்ள மனிதர்கள் உருவாக்கிய சமூக ஒழுங்கானது முரண்பாடுகளால் நிறைந்திருப்பதால் அது நியாயமான விநியோகத்தை (உற்பத்தியையும்) அனுமதிப்பதில்லை. கார்ல் மார்க்ஸ் இதனை சொத்துடைமையோடு தொடர்புடைய வர்க்க முரண்பாடு என்கிறார். அத்தகைய முரண்பட்ட குழுக்களை அவர்:
1) பூர்ஷுவாக்கள் (உற்பத்தி சாதனங்களை உடையோர், இலாபம் எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 2) நிலப் பிரபுக்கள் (வாடகை அல்லது குத்தகை எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 3) பாட்டாளி வர்க்கம் (கூலிக்காக உழைப்புச் சக்தியை விற்பவர்) என்று வகைப்படுத்துகிறார்.
முரண்பாடுகள் மற்றும் அரசுருவாக்கம் பற்றிய தனித்தனியான அணுகுமுறைகளால், அரசு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களால்தான் ஆளப்படுகிறது எனும் புரிதல் இன்றி நாம் அரசிடமே அரசியல் சீர்த்திருத்தம் வேண்டி நிற்கிறோம். அரசு இயந்திரங்களானவை நிலவும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்குபவை.
No comments:
Post a Comment