அடியும் முடியும் தேடி அழைந்த அவர்களது வரலாறு எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கைகாக கூறப்பட்டது என்பதில் ஐயமில்லை. அடிமுடி தேடுவதும் ஒரு பொருளில் காரண காரியத்தை அறிவு தொடர்புடையது. ஆகவே அடிமுடி தேடுவது என்பது காரண காரியத்தை அறியக் கூடாது என்பதாகும் மேலெழுந்தவாரியாக மத சித்தாந்திகளின் எழுத்தும் பணியுமாக உள்ளது. அந்த புராணங்களை கட்டுக்கதைகள் என்று பகுத்தறிவு பேரால் எள்ளி நகையாடும் பலர் புராணங்களில் காணும் நம்பிக்கைக்கு பலியாக இருப்பதை நாம் காணலாம்.
இது தனிப்பட்ட சிலருக்கு குறைபாடு என்று கூறுவதில் அர்த்தமில்லை அத்தகையோரை குறைகூறிப் பயனில்லை. நமது சமுதாயத்தில் ஆழப் பதிந்துள்ள ஒரு தத்துவத்தின் உலக பார்வையின் வெளிப்பாடு இது எனக் கொள்வது பொருத்தமாகும் ...
அத்தத்துவத்தின் அடியையும் முடியையும் ஆராய்வதற்கு வழிபிறக்கும். ஒரு தனிப்பட்ட நபரின் திரிப்புணர்ச்சி அல்லது மருள்(delusion) இரங்கத்தக்க தாயினும் அதிகம் அஞ்ச வேண்டியதல்ல; ஆனால் ஒரு கூட்டத்தவரது அல்லது சமூகத்தினரது பொய்மை(Illusion) அச்சமூகத்தவருக்கு மாத்திரமல்லாது பிறருக்கும் பேராபத்து விளைவிக்கக் கூடியதாகும். எடுத்துக்காட்டாக ஜெர்மனில் நாஜீ சித்தாந்தம் .இன்றைய ஆர்எஸ்எஸ் தன்னுடைய சித்தாந்தம் போல . தன் பொய்மையால் ஒட்டுமொத்த சமூகத்தையும் தன் நச்சு சிந்தனையால் சீரழித்துக் கொண்டுள்ளது.
இத்தகைய அமைப்பில் உள்ள பேராபத்து யாதெனில் ஒத்துப்போதல் என்ற கொள்கையின் அடிப்படையில் எதிரான அல்லது மாறுபட்ட சிந்தனைகள் அடக்கி ஒடுக்கப்படுவதாகும். அமெரிக்காவில் பொதுவுடமைக் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டது. இவ்வடிப்படையிலேதான். சில நம்பிக்கைகள் இடைவிடாத பிரசாரத்தின் மூலம் பொதுத்தன்மை ஆக்கப்படுகின்றன. பகுத்தறிவின் அடிப்படையில் சமய சடங்குகளும் புராணச் செய்திகளும் மறுக்கப்படும் அதேவேளையில் அய்தீகங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை . கருத்துக்களும் நம்பிக்கைகளும் ஒவ்வொரு கால சமூகத்தின் அடிப்படையில் பிறந்து நிலவுகின்றன. அவ்வச் சமுதாயத்துக்குப் பக்க பலமாயமைவன. அவற்றை மாற்றுவது இலகுவான காரியமல்ல. அடிப்படையான சமுதாய மாற்றம் ஏற்படும் பொழுது தான் அவற்றை மாற்றி அமைக்க கூடிய சூழ்நிலை உருவாகிறது. அங்கும் கூட அரசியல் பொருளாதார நிறுவனங்கள் மாற்றப்படும் வேகத்தை விட குறைந்த வேகத்தில் சில எண்ணங்கள் மறைகின்றன. எனவே தாம் பிறந்த சமுதாயத்தின் பௌதிக நிலைமை மாறிய பின்னரும் நீடித்து நிலைக்கும் ஆற்றல் கருத்துக்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் உண்டு. அதனால் தவறான கருத்துகளை சாடும் அதேவேளையில் கருத்துக்களை கருத்துக்களினால் மாத்திரம் வெல்ல முடியாது என்பதை மனங்கொள்ள வேண்டியதே.
ஆக நமது சமூகத்தைப் புரிந்து கொள்வதற்காக நமது கருத்துக்களும் எண்ணங்களும் பெறப்பட்ட புற சமூக நிலையிலிருந்து காணல் வேண்டும் .
நமது சமுதாயத்தில் பலரால் நம்பியும் நம்பாமலும் ஏற்றுக்கொள்ளப்படும் எண்ணம் ஒன்றின் குறியீடாகவே பல கருத்துகள் உள்ளது. நமது கலை இலக்கிய உலகில் காணும் பல குறைபாடுகளும் தயக்கம் மயக்கங்களும் இந்த எண்ணத்தினின்றும் தோன்றுவனவே அவ்வெண்ணத்தின் அடிப்படையும் அதன் வெளிப்பாடுகளை சுருக்கமாக காண்போம்.
இருபதாம் நூற்றாண்டின் பெரும்பாலான இந்திய கல்வியாளர்கள் அரசியல் தலைவர்களும் முக்கியமான பிரச்சனைக்கு பண்டைய நூல்கள் இருந்து தரவுகளை காட்டினர் இவர்களைப் போலவே பெரும்பான்மையான தமிழ் தலைவர்கள் திருக்குறளைத் தமிழ் வேதமாய் கொண்டு வேண்டியவாறு மேற்கோள் காட்டுவதுண்டு. ஆக பல நூற்றாண்டுகள் கழித்து பின்னரும் சிற்சில நூல்கள் காலம் கடந்தவையாக கருதப்படுவது வெளிப்படை.
மிகப்பெரிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி தமது கூற்றுக்கு அரண் செய்வது சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக மட்டும், அவர்கள் நடைமுறை வாதிகளாகவோ பயன்பாட்டு வாதிகளாகவோ அவ்வாறு செய்கிறார்கள் என்பதில்லை. அவ்வாறு செய்யும் ஒரு மரபும், அம்மரபுக்கு ஆதாரமான ஒரு நம்பிக்கையும் இந்திய மெய்யியல் வரலாற்றில் முதன்மை வந்திருகின்றன.
இந்திய மெய்யியலைப் பொறுத்தவரை ஆராய்ச்சி என்றைக்கோ முடிந்து முடிவுகளும் அறுதியாக வெளியிடபட்டுவிட்டன. அந்த அடிப்படையில் ஆராய்ச்சிகளும் முடிவுகளும் அமைய வேண்டும் என்பதே இங்குள்ளோரின் நிலை. உண்மைகள் மக்களால் அவரவர் சக்திக்கும் பக்குவத்துக்கும் ஏற்ப அறியப்பட வேண்டுமேயன்றி புதிதாக கூறத்தக்க உண்மைகள் இனி உண்டு என்பதில்லை.
இவ்வடிப்படை நம்பிக்கையின் விளைவுகள் பாரதூரமானவை. அவற்றுள் ஒன்று இந்நம்பிக்கை வரலாற்று நோக்குக்கு அறவே இடமளிக்காததாகும். எக்காலத்திற்கும் பொருந்தும் உண்மைகள் அன்றே கூறப்பட்டு விட்ட படியால் அவை காலம் கடந்தவையாகின்றன. ஆகவும் அவற்றை கால அடைவில் ஆராயும் அவசியம் இல்லாது போகின்றது . போகவே அவற்றை காரணம் காரியங்களுக்கு நியதிக்கு உட்படுத்தும் நோக்கமும் அற்றுப்போகிறது .இது சுய சிந்தனைக்கும் விமர்சனத்திற்கும் ஏற்ற நம்பிக்கை என்று கூற முடியுமோ?.
மெய்யியலாளர் மட்டுமன்றி பிறத்துறையினரும் இம்மனப்பாங்குடனேயே இயங்கி வந்துள்ளனர். தமிழ் இலக்கியத்திற்கு பரிச்சயம் உடையோர் உரையாசிரியர்களின் நினைவுக்கு வரலாம். உதாரணமாக தொல்காப்பியத்துக்கு உரைகண்டோர் பல்வேறு காலத்தைச் சேர்ந்தவர்கள் உண்மையில் தத்தம் கால மாற்றங்களுக்கு இடையில் புது விதிகளும் விளக்கங்களும் கூறும் பொழுதும் அவற்றை தனது கருத்தாக கூறாது அவையே தொல்காப்பியர் கருத்து என்று கூறிக் கொள்வர் இந்திய உரைகாரர் பலருக்கும் இது பொதுவான பண்பு.
இவ்வாறாக பழைய நூல்கள் அதாவது பிராமணமாக (ஆதாரமாக) அமையும் நூல்கள் எக்காலத்துக்கு உரியவை என கொள்வதால் அவற்றை இயற்றியோர் ஆதி மனிதராக இருக்க வேண்டியது தவிர்க்க இயலாததாகிறது இக்காரணம் பற்றியே தொல்காப்பியரும் திருக்குறளையும் காணலாம்.
இந்தியாவுக்கு பொதுவான இப் பழமை போற்றும் மனப்பான்மை ஆனது தமிழ்நாட்டிற்கு பொருந்தும்.
தமிழ்மொழி பற்றி கொண்டுள்ள கருத்துகளில் சில பார்ப்போம் .
பரம்பொருளின் அடியை அறியமாட்டாது விஷ்ணு சரண் அடைந்தது அதுபோலவே தமிழின் தொன்மையையும் தோற்றத்தையும் துருவி ஆராய இயலாது என அறிவிக்கிறார்கள். சந்திர மண்டலத்தையும் செவ்வாய் கிரகத்துக்கும் ஆராய்ந்து கண்டு தெளிவடையும் அறிவியல் வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காலகட்டத்தில். உலகத்தின் தோற்றம் மற்றும் அதைவிட பெரிய புதிர் ஒரு மொழியின் தோற்றம் என்றும் ஒருவர் கூறுவது வியப்பாகத்தான் இருக்கிறது. உலகத்தின் தோற்றம் ஒருவராலும் அறியப்படாத அதுபோல தன்னிறைவுடன் கூறி செல்வது அறிவின் பாற்படுவதன்று வெறும் மயக்கமே ஆகும் .தமிழின் தோற்றம் ஊக்கத்துக்கும் அப்பாற்பட்டது என கூறுவது சிந்தனை விதிகள் யாவற்றுக்கும் புறம்பானதாகும் நாள் தேதி போட்டுக் கூறுவது இயலாது இருக்கலாம் இன்றுள்ள ஆராய்ச்சி நிலையில் பல கண்டுபிடிப்புகள் தெளிவாக கூறிக் கொண்டுதான் உள்ளது. மொழிக் குடும்பம் மொழி பற்றி தெளிவான வரையறைகள் இன்று எங்கும் காணப்படுகிறது.
கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆகட்டும் அவரின் ஆராய்ச்சி ஆகட்டும் பல ஆய்வாளர்களின் முயற்சியும் வளர்ச்சியும் பல புதிய கருத்துகளை படைக்கவில்லையா? அகழ்வாராய்ச்சியின் மூலம் இன்று பல்வேறு விஷயங்களில் ஊகித்தறிய முடிகின்றது அதே அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன, வருங்காலத்தில் இன்னும் பெரும்பாலான உறுதி செய்யப்படும். ஆக தமிழ்மொழியின் தோற்றத்தை அறிய முடியாது என்பது ஆராய்ச்சிக்கு அறவே முரணான மனப்பாங்கு ஆகும் .
இது குறிப்பிட்ட மதத்தினரால் வகுத்துக் கொள்ளப்பட்ட கொள்கை கூறுகள் போன்றவையாகும். அவை நம்பிக்கையின் பேரில் ஏற்றுக்கொள்வதன்றி ஏன் எதற்கு என்று கேட்கும் வழக்கம் இல்லை. தமிழின் தொன்மை பற்றி மட்டுமின்றி பழந்தமிழ் நூல்கள் பலவற்றின் காலம் இத்தகையோருக்கு நம்பிக்கைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது .
தமிழ் மக்களில் ஒரு பகுதியாருக்கு திருக்குறள் சிலப்பதிகாரம் இவற்றின் காலம் சமயக் கொள்கை போல் ஆகிவிட்டது. இதன் பொருட்டுத் தங்கள் உயிரை கூட இழந்து விடுவார்கள் போல் தோன்றுகிறது. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்கு பிற்பட்டவவாக இந்நூல்களை குறித்தால் அதற்கு அவர்கள் மனம் ஒப்புவதில்லை. பிற்காலத்தன வாயிருக்க கூடும் என்று யாரேனும் கூறினால் அவரை தமிழ் துரோகி என்று பட்டம் கட்டி விடுகிறார்கள்.இதனால் விஷம் நிரம்பிய காற்று நமது தமிழ்நாட்டில் உலவி வருகிறது .ஆராய்ச்சியை நெரித்திவிடுகிறார்கள். உண்மை தனது உயிருக்கு மன்றாட வேண்டியதாக இருக்கிறது ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கடமை தெளிவாக உள்ளது. உண்மையின் சார்பில் இரண்டொருவர் இருந்தாலும் அவர்களுடன் துணிந்து வாழ்வதே அவன் கடமை-பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (அடியும் முடியும் நூலின் பக்கம் 21) .
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போல தனி மனிதருக்கு ஏற்படும் திரிபுக் முழு சமுதாயத்தினருக்கே உண்டாக கூடிய மயக்கம் பற்றி. கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்துள், தமிழ மொழி பற்றிய வளர்க்கப் பட்டிருக்கும் பொய்மை இன்று சமுதாயத் திரிப்பாக இருக்கிறது. இதிலொன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை, உலக வரலாற்றில் இதற்க்கு எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம்.
உலகத்தின் தோற்றம் விளக்கம் மற்றதும் புதிராக உள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியானது உயிரியல் விலங்கியல் புதிய புதியதான என்று எல்லா விஞ்ஞான ஆராய்ச்சியையும் அதன் முடிவுகளையும் இன்று பலரும் ஏற்றுக் கொள்கின்றனர் .
கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வானூலறிஞன் தொலமி(Ptolemy) வகுத்த கோட்பாடு பூமியை மையமாக வைத்து மற்ற கோள்கள் இயங்குகின்றன என்பதாகும். இந்தக் கருத்துக்கள் 1543 வரை யாவரும் ஏற்றுக் கொண்டனர். கோப்பர்நிக்கஸ் (Copernicus) கோட்பாடுகள் பழையதை புறந்தள்ளி அது உண்மையாக பூமியே சூரியனைச் சுற்றி வருகிறது என்று வகுத்து அளித்தார். அதன் பின் வந்த ஆராட்சியாளர்கள் இதனை செழுமை படுத்தினார் கெப்லர் (Kepler) 1571-1630. பல்வேறு விஞ்ஞான ஆராய்ச்சிக்கு வழிவகுத்தன. ஆக பண்டைய கண்டுபிடிப்புகள் புதிய கண்டுபிடிப்புகளால் கைவிடப்பட்டு நவீன கண்டுபிடிப்புகளின் ஒளியில் வழங்கிழந்தன .
இதே ஆராய்ச்சி போல் மொழி துறையிலும் பல்வேறு நுட்பமான ஆராய்ச்சி நடைபெறாமல் இல்லை மொழியில் அறிவு என்பது தொன்மொழி பாண்டித்தியம் என்ற நிலையிலிருந்து பிற துறைகளைப் போலவே திட்டவட்டமான நுண்ணிய ஆராய்ச்சிகளின் பயனாக பல்வேறு கருத்துகள் வளர்ந்துள்ளது.
மொழி தோன்றிய காலம் முதலாக அது பல்கிப் பெருகி இன்று கிளை உடையதாக பெருமரம் ஆகிவிட்டது .மொழி என்பது யாது? அதன் தோற்றம் எத்தகையது? மக்கள் பேச்சு மொழிகள் எவை? அவை எவ்வாறு உண்டாகின்றன? சொற்களும் பொருள்களும் உள்ள தொடர்பு யாது? மொழிக்கும் கருத்துக்களுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது? மொழிகளுக்கும் பிற அறிவியலுக்கும் உள்ள உறவு எத்தகையது? மொழியில் வரிவடிவ வரலாறு என்பன போன்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டு மொழி ஆராய்ச்சிகள் புதிய புதிய விடையங்களை வழங்கியுள்ளது. இதைவிட தனிமொழி ஒன்றை எடுத்துக்கொண்டு அதனை கால அடைவில் நோக்கி அதன் வளர்ச்சிப் படிகளை யாவையும் மொழி வரலாறு மொழி வழங்கும் பிரதேசங்களில் சிதைவுகள் ஏற்பட்டு நாளடைவில் அது பிராந்திய மொழிகளில் ஆராய்ச்சிக்கும் பிரதேச மொழிகள் காலக்கிரமத்தில் கிளைகளில் ஆகிய ஒப்பியல் ஆராய்ச்சியும் ஒப்பியல் நோக்கு ஆராய்ச்சியின் விளைவாக பிறக்கும் மொழி தத்துவ ஆராய்ச்சியின் மொழியோடு தொடர்புடையது நாகரீக அரசியல் வரலாறும் இவைபோன்ற பிறவும் மொழி நூலின் முக்கிய பிரிவுகளாக அமைந்த கணிதவியலில் இருந்து இயர்பியல் வானியல் வேதியியல் என்று பல்துறை ஆராய்ச்சிகள் என்று தனித் துறையாக அது பரிணமித்துள்ளது இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய அறிவுதேடுதலே.
தமிழ்மொழியின் தோற்றம்
மதம் சண்டை போலவே மொழி சார்ந்த சண்டையும் பிற்காலத்தில் நிகழ்ந்தன. ஒரு மொழியை சார்ந்த மற்றொன்றை பழிக்கும் வீண் முயற்சிகளெல்லாம் மேற்கொள்ளப்பட்டன. சிலர் வடமொழியை வானாளாவாப் புகழ்ந்தது அதனை தேவபாடை என்று பெருமை பாராட்டவும் வேறு சிலர் ஏட்டிக்குப் போட்டியாக தமிழின் தெய்வப் பழமை மரபு பேசுவோராயினர். மத சண்டை மலிந்த காலத்தில் அதன் சாயலிலேயே மொழி சண்டை நடத்தியதில் வியப்பில்லை. ஆனால் மனித அறிவு மண்ணையும் விண்ணையும் பகுத்து கணித்து ஊகித்து அறியும் இன்றைய காலகட்டத்தில் மந்திர உச்சாடனங்கள் மறைக்க மதவாதமும் எந்த பயனும் இல்லை. அதே போல்அநாகரிக நிலையில் இருந்து நாகரி நிலைக்கு மனித குலம் காலெடுத்து வைக்க பயன்பட்ட மொழி தமிழ் என்பது அறிவியல் பூர்வமானதா என்பதை பேசுவதை விட நமது மொழிக்கு பயன் உண்டா?.
கைகளாலும் பல்வேறு உணர்ச்சி குறிப்புகளாலும் எண்ணத்தை உணர்த்திய காட்டுமிராண்டி நிலையிலிருந்து முன்னேறிய மனிதன் மொழியை பயன்படுத்த தொடங்கினான்.
பழந்தமிழ் இலக்கியங்களோ கடமை ஒப்புரவு மரபு முறைமை முதலிய ஒரு பன்மொழி வழக்குகள் கூர்ந்து கவனிக்க வேண்டியவை இவற்றைப் பற்றி வாழ வழிவகுத்த வள்ளுவர் கூறுகின்றார் அல்லவா அதே வரிசையில் ராமாயண மகாபாரதக் கதைகளும் அரசரும் முறைமையும் அன்றைய சமூகப் பண்பு அல்லவா நமக்கு புரிதலை அளிக்கின்றன. நால் வருணப் பாகுபாடு, உழுவோர் உழுதுவித்துண்போர் என்ற வேறுபாடும் ஆண்டான் அடிமை என்ற அமைப்பும் உயர்ந்தோர் இழிந்தோர் என்ற ஏற்றத்தாழ்வும் வேத வழக்கு அச்சமூகத்தில் இவற்றுக்கு அடிப்படையாக அரணாக நியாயமாக முழுமையாக அந்த சொற்களாகும் அந்தக் குறிப்பிட்ட சமுதாய அமைப்பை கட்டிக் காப்பதற்கு ஏதுவாக இயங்கின.
இவை அந்த சமுதாயத்தின் தத்துவ வெளிப்பாடு ஆகும் வரலாற்று வளர்ச்சியை என்று நாம் கணக்கில் கொண்டு இதனை பேச வேண்டும் தமிழ் மொழி கன்னித்தன்மையுடன் என்றென்றும் இருக்கிறது என்று வழிபடத் தொடங்கியதும் பழைய நடையையும் பொருளையும் போற்றுவது தவிர்க்க இயலாததாகிறது அதன் அடிப்படையில்தான் செந்தமிழ் எழுதவேண்டும் என சிலர் கூறுகிறார் இதுபற்றி வையாபுரிப்பிள்ளை சுவைபடக் கூறுகிறார். "எவ்வகையான வேறுபாடுமின்றி தோன்றிய காலத்தில் இருந்தது போலவே தமிழ் மொழி இருந்து வருகிறது என்று கருதுவோர் தமிழ் வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறும் அறியாதவர் என்று தான் கூறவேண்டும் ஆதியில் இருந்த கலப்பற்ற தூய நிலைக்கு நமது மொழி பின்னோக்கி செல்வதாகவும் என்பது இயற்கைக்கு மாறாக செல்வதுதான் உயரிய நெறி என்பர் கொள்கையாக உள்ளது .
எல்லா மரபுகளும் ஒவ்வொரு காலத்தில் இருந்து வழங்கிவருவனவே, அக்கால பௌதிக நிலையிலிருந்து அவை பிறந்தன. ஆனால் இது காலவரை இருந்த பழைய சமுதாயங்கள் யாவும் நிறைவுடையன அல்ல. லட்சியமான சமுதாயம் இன்றும் உருவாகவில்லை ஆகவே இலட்சியமான அறிவும் இன்னும் உருப் பெறவில்லை. ஒவ்வொரு காலப்பகுதியிலும் முந்திய காலப்பகுதியின் குறைபாடுகளை குறைத்தும் நீக்கியும் இன்பமாய் வாழ்வதற்கு ஏற்ற நிலைமைகளை உண்டாக்க முயல்கிறான் மனிதன். நிறைவான சமுதாயத்திலேயே நிறைவான அறிவு நிலவ முடியும், சாத்தியமாகும். அத்தையை சமுதாயம் இல்லாத பட்சத்தில் அதனை உருவாக்குவதே முதல் கடமையாகிறது.
அறிவு என்பது என்ன? அதன் பண்பும் பயனும் யாது? செயலிக்கு வழிகாட்டும் வகையில் நடைமுறை சார்ந்ததாக இருப்பது அறிவின் லட்சணம், மாய வித்தையிலும் மந்திர சக்தியில் நம்பிக்கை வைத்து அவற்றில் வல்லவராயர் இருந்தவரை அறிவராக ஏற்க்க முடியுமா?. இவைதான் கடந்தகால அறிவியல் பூர்வமாக சிந்திக்க ஆற்றல் இல்லாத போக்கு
மனித குல வரலாற்றின் அடிப்படையான வளர்ச்சிப் பாதையை கண்டவர் மார்க்ஸ். அறிவுக் கருவிக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்தார். அவர் சொன்னார் புறநிலை உலகின் விதிகளை விளங்கிக் கொண்டு அவற்றை பிறருக்கும் விளக்கி விவரிப்பதில் திறமை பெற்று இருப்பது பெருமைப்படத்தக்கதல்ல. அவ்விதிகள் பற்றிய அறிவை ஆயுதமாகக் கொண்டு ஊக்கத்துடன் உலகை மாற்றுவதற்கு அதனை பயன்படுத்துவது தான் மிக முக்கியமான சாதனை. அறிவியல் எனப்படும் விஞ்ஞானம் பெருமளவுக்கு இவ்வடிப்படையிலேயே வளர்ந்து வந்துள்ளது. ஆனால் விஞ்ஞானம் வேறு கலைதுறை வேறு என்று தவறாக எண்ண நம்மவரிடையே வேரூன்றியிருப்பதால் இவ்வளர்ச்சி முறை மொழி இலக்கிய துறைகளில் ஈடுபாடு கொண்டிருப்பவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
ஆக மார்க்சியமான இயங்கியலை அடிப்படை அளவுகோலாக கொண்டுள்ளது அதனை புரிந்துக் கொள்ளாமையே இது பொன்றோரின் மருள்ச்சிக்கு காரணம் என்று மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தமிழ் ஆர்வழர்கள் செய்துக் கொண்டிருக்கும் பிழையை சுட்டிக் காட்ட எடுத்து கொண்ட முயற்ச்சி... முனைவர் க.கைலாசபதியின் அடியும் முடியும் கட்டுரையின் அடியொற்றி எழுதப் பட்டவையே இந்தப் பதிவு தேவைப்பட்டால் இன்னும் எழுதுவேன்.
No comments:
Post a Comment