[5:26 am, 13/08/2022] CP: மேலும் தோழர்களே, கடந்தகால சமூகம் குறித்த சமூக விஞ்ஞான ஆய்வானது – அதாவது உற்பத்தி முறையின் அடிப்படையிலான சமூக ஆய்வானது – சந்தைக்கென உற்பத்தி நடைபெறவில்லை என்பதையும், அப்போது ‘சரக்கு’, ‘பணம்’ குறிப்பாக கூலி உழைப்பு இருக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. அதனால் அப்போது சுரண்டலோ மேலாதிக்கமோ நிலவவில்லை. “சமூகத்தின் ஆரம்ப கால உற்பத்திகள் அனைத்தும் கூட்டு உற்பத்தி முறையிலானவையே, அதேபோல் பெரிய அல்லது சிறிய அளவிலான கம்யூனிச சமுதாயங்களுக்குள்ளாக நேரடி விநியோகம் மூலமாகவே நுகர்வும் நிகழ்ந்தது.” (மூலதனம் நூலில் காரல் மார்க்ஸ்).
மனிதர்கள் வாழ்வதற்கு ‘பொருள்’ உற்பத்தி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். கச்சாப் பொருட்கள், கருவிகள் மற்றும் துணைக் கருவிகளின் பயன்பாடு அதற்கு முன்நிபந்தனையாகிறது. இவையெல்லாம் கிடைத்துவிட்ட போதிலும், ஒன்றுக்கொன்று அருகருகில் வைத்துவிட்டால் உற்பத்தியானது தானாக நிகழ்ந்துவிடாது. அதன் மீது யாரேனும் உழைப்பை செலுத்த வேண்டும் – ஆக, இங்கு நமக்கு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இவ்வாறாக, ஒரு பொருளை உற்பத்தி செய்ய நமக்கு உற்பத்தி சாதனங்களும், உழைப்பும் தேவை. உற்பத்தி முறையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது உழைப்புப் பிரிவினைக்கும், வர்க்க உருவாக்கத்திற்கும் வழிகோலியது. அப்போதைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களித்த சூழ்நிலைகளானது அப்போதைய சமூக ஒழுங்காகிப் போனது. சமூக விஞ்ஞானிகள் அவ்வமைப்புகளை முறையே புராதன(ஏறக்குறைய கம்யூனிச) அமைப்பு, அடிமையுடைமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் மற்றும் முதலாளித்துவ சமூகம் என்று விளக்கியுள்ளனர். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உற்பத்தி முறையான முதலாளித்துவம் குறித்தும், நாம் விரிவாகக் காண்போம்.
அடிப்படை வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி என்பது முதலாளித்துவத்தின் கீழ் செல்வக் குவிப்பிற்கான உற்பத்தியாக மாறிப்போனது. இலாபம் என்பது இயற்கையான ஒரு விதியல்ல. செல்வக் குவிப்பிற்காக முதலாளித்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்காக தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான பணிச் சூழல்களில், இரக்கமற்ற பணி நேரங்களுக்குக்கு ஆட்பட்டு கடுமையாக உழைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த உழைப்புச் சக்திகளின் அதிக உழைப்பு நேரத்தினால் ஈட்டப்படும் மதிப்பைத்தான் ‘உபரி மதிப்பு’ என்று காரல் மார்க்ஸ் விளக்குகிறார். அவ்வாறு அபகரிக்கும் அந்த உபரி மதிப்பைத்தான் முதலாளித்துவமானது இலாபம் என்று சொல்கிறது. இந்த உபரி மதிப்பு அதிகரிப்பே மேலாதிக்க சமூக உறவுகளுக்கும், அதன் படிநிலை வெளிப்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்பதே அவரது விளக்கம்.
முந்தைய உற்பத்தி முறையிலும், முதலாளித்துவத்திலும் காணப்படும் இந்த உழைப்புப் பிரிவினையை மார்க்ஸ் தெளிவாக விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் பின்வருமாறு:
முதலாளித்துவத்தின் கீழ், தனியுடைமையின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையின் விளைவாக உருவாகும் உறவுமுறைகள் மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பிலானவை. எஜமானர் – தொழிலாளி என்று அது வரையறுக்கப்படுகிறது. முந்தைய அமைப்பிற்கும், முதலாளித்துவ அமைப்பிற்குமான முக்கிய வேறுபாடு என்னவெனில் உழைப்புக்கு ஈடாக கூலி(பணம்) எனும் புதிய முறையிலான ஒரு இழப்பீடு வழங்கப்படுகிறது; பொருட்கள் ‘சரக்கு’களாகின்றன; உற்பத்தி சாதனங்கள் ‘மூலதனம்’ ஆகின்றன, சுரண்டல்வாத சூத்திரம் இலாபம் என்று அழைக்கப்படுகிறது. உற்பத்தி சாதனங்களின் ‘எஜமானர்’ உழைப்புச் சக்தியை வாங்கி, உபரி மதிப்பை இலாபம் என்று அபகரிக்கும் இந்த முறையே உழைப்புச் சுரண்டல் எனப்படுகிறது. தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறையும், அதன் கீழான பொருளாதார அமைப்பும் முதலாளித்துவம் எனப்படுகிறது. இதன் மூலம், முதலாளித்துவ பொருளாதாரமானது சுரண்டலின் அடிப்படையிலானது, ஏற்றத்தாழ்வு மிக்கது என்பதை சொல்லவும் தேவையில்லை.
வாழ்வதற்காக மனிதர்கள் பொருளை உற்பத்தி செய்யவும், நுகரவும் வேண்டும். உற்பத்தியும் அதனோடு தொடர்புடைய நடைமுறைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகும். அதனால், மனித வாழ்வின் நிர்ணய சக்தியாக அதுவே விளங்குகிறது. இவ்வாறாக, மனிதர்கள் தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், உற்பத்தி உறவுகளுக்கு உள்ளாகிறார்கள், அதன் மறுபெயர் உழைப்பு உறவுகள். உழைப்பு உறவுகள் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றவையாக இருக்கின்ற போது, அதன் விளைவாக ஏற்படும் சமூக உறவுகளும் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றதாகவே இருக்கும்.
செல்வக் குவிப்பென்னும் வேட்கையினால் கடிவாளமிடப்பட்டுள்ள மனிதர்கள் உருவாக்கிய சமூக ஒழுங்கானது முரண்பாடுகளால் நிறைந்திருப்பதால் அது நியாயமான விநியோகத்தை (உற்பத்தியையும்) அனுமதிப்பதில்லை. கார்ல் மார்க்ஸ் இதனை சொத்துடைமையோடு தொடர்புடைய வர்க்க முரண்பாடு என்கிறார். அத்தகைய முரண்பட்ட குழுக்களை அவர்:
1) பூர்ஷுவாக்கள் (உற்பத்தி சாதனங்களை உடையோர், இலாபம் எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 2) நிலப் பிரபுக்கள் (வாடகை அல்லது குத்தகை எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 3) பாட்டாளி வர்க்கம் (கூலிக்காக உழைப்புச் சக்தியை விற்பவர்) என்று வகைப்படுத்துகிறார்.
முரண்பாடுகள் மற்றும் அரசுருவாக்கம் பற்றிய தனித்தனியான அணுகுமுறைகளால், அரசு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களால்தான் ஆளப்படுகிறது எனும் புரிதல் இன்றி நாம் அரசிடமே அரசியல் சீர்த்திருத்தம் வேண்டி நிற்கிறோம். அரசு இயந்திரங்களானவை நிலவும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்குபவை.
[5:43 am, 13/08/2022] +91 73582 23297: அதேபோல்
பாட்டாளி வர்க்க அமைப்பு என்பது தலைவர்களின் அமைப்பு ஆகும்.
[5:51 am, 13/08/2022] CP: புரியவில்லை தோழர்
[8:34 am, 13/08/2022] +91 94864 86321: மார்க்சியம் அறமா? அறிவியலா? இந்த கேள்விக்கு விடை தேடினால் பல பிரச்சனைகள் தீரும். ஓர் அறிவியல் உண்மை அறத்தை தாங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லாதது. அறமும் அறிவியலும் ஒரு புள்ளியில் இணைய பிரபஞ்சத்தில் வாய்ப்பில்லை.
[8:42 am, 13/08/2022] +91 88705 99129: அறம் என்றால் என்ன?
[8:47 am, 13/08/2022] CP: புதிய கண்டுபிடிப்பு
[8:58 am, 13/08/2022] +91 73582 23297: நடைமுறையில் மக்களின் முரண்பாடுகளை கையாள வேண்டும்.
[8:58 am, 13/08/2022] +91 88705 99129: முரண் என்கிற இரு பகுமை இருக்கிற போது, அறத்திற்கு இங்கு எந்த வேலையும் இல்லை. அதாவது ஒட்டுமொத்த மக்களுக்கும் அது நன்மையை வழங்கும் என்பது இல்லை. அது முதலாளிகளுக்கு எதிரானதாக இருக்கிறது.
அறிவியலாக்கலாம். ஆனால், அது நமது பயன்பாடுகளில் இருக்கிறது.
அறிவியல் என்பது சரியான உண்மையை கண்டுபிடித்தலை நோக்கி நகர்வது.
அதுபோல மார்க்சியம் நகர்வு தன்மையில் இருந்தால் அது அறிவியல் . இல்லையென்றால் அது வெறும் எழுத்துசூத்திரம்.
அறிவியலாக்கலாம். அறமாக்க வாய்ப்பில்லை.
[9:00 am, 13/08/2022] CP: //அதேபோல்
பாட்டாளி வர்க்க அமைப்பு என்பது தலைவர்களின் அமைப்பு ஆகும்.// முரணான பதில். ஒருபுறம் பாட்டாளி வர்க்கம் என்பது தலைவர்களின் அமைப்பு என்று கூறும் நீங்களே முரண்களை கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறீர்கள் எங்கிருந்து இந்த மாதிரி கொண்டு வந்தீர்கள் .
[9:03 am, 13/08/2022] CP: தோழர்களே சிறிதேனும் மார்க்சிய நூல்களை வாசிக்க முயற்சியுங்கள். வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற நூல் மிகத்தெளிவாக அறிவின் தோற்றம் சமூக வளர்ச்சி பல்வேறு விதமான போக்குகளை தெளிவாக மார்க்சிய அறிஞர்கள் வைத்துள்ளனர். அறிவு என்றால் என்ன அறிவின் தோற்றம் அறிவியல் என்றால் என்ன அறிவியலின் வளர்ச்சி பல்வேறு விதமான போக்குகளை மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர். ஆக அக நிலையிலிருந்து பேசுவதை விடுத்து ஒரு மார்க்சிய வாதியாக பேச முயற்சியுங்கள் என்பதே எனது கருத்து
[9:21 am, 13/08/2022] +91 88705 99129: அவர் கேட்பது சரியான கேள்விதானே.
மார்க்சியவாதி என்றால் மார்க்சியத்தை கேள்விக்குள்ளாக்கமல் போவதுதானா?
[9:23 am, 13/08/2022] +91 94864 86321: மிகச் சரியாக சொல்லி உள்ளீர்கள். கூடவே சமூகவியலில் அறிவியல் என்பது பொருத்தமற்றது, சாத்தியமற்றது, புனைவானது என்பது எனது கருத்து மட்டுமல்ல அனுபவமும். சமூகவியல் என்பது அறவியல் குறித்த விவாதமாக மட்டுமே இருக்க முடியும். அங்கே அறிவியலுக்கு இடமில்லை.
[9:33 am, 13/08/2022] +91 88705 99129: இல்லை. அறிவியலுக்கு ஆதாரங்கள் என்கிற பொருள் வடிவும் இருந்தால் போதுமானது.
நீங்கள் அறிவியலையும் சமூகத்தையும் பிரித்து வைத்து பார்க்கக்கூடாது.
அறிவியலும் சமூகமும் இணைந்தே பயணிப்பது.
ஆதிகால சமூகமும் ஆதிகால அறிவியல் வடிவமும் தன்னுடைய தன்மையை அந்தந்த காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்திதான் வந்திருக்கிறது.
அறிவியலின் பல மாற்றங்கள் என்பது தேவையின் அடிப்படையில் நிகழ்வது. அதுபோல மார்க்சியமும் தேவையின் அடிப்படையில் உருவானது. அதை பழமைவாத அறிவியலாக விட்டுவிடுவதும் அதை கையிலெடுத்து சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கி சுழற்சியின் கீழ் இன்னும் பல மேன்மைகளையும் உருவாக்கி சமூக உண்மைத்தன்மையை கண்டறியும் கருவியாக பயன்படுத்துவும் நம் சூழ்நிலையோடுதான் அடங்கியிருக்கிறது.
[9:35 am, 13/08/2022] CP: மார்க்சியத்தை அடித்து நொறுக்கி விடுவோம் கவலைப்படாதீர்கள் அவைதான் உங்களுடைய தேவையும். மார்க்சியம் அல்லாத மார்க்சியம் எது தெரியவில்லை .தேவையற்ற விவாதம் நன்றி வீண் விவாதத்தில் பயனில்லை
[9:39 am, 13/08/2022] +91 88705 99129: தேவையற்றவை என்று அங்கீகரிப்பது தனிநபர் முடிவன்று.
ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த விவாதம் தேவைப்படுகிறது.
பிறருக்கு புரியவைக்கும் முயற்சியில் விவாதம் நகர வேண்டும்.
அப்படி நகர்வது தான் ஆரோக்யமான உரையாடலுக்கு வழிவகுக்கும்.
[10:25 am, 13/08/2022] CP: மார்க்சியத்தை கேள்விக்குறியாக்கி விட்டபிறகு மார்க்சியம் அல்ல அது. ஒரு மார்க்சியவாதி ஒருவர் மார்க்சியத்தை கேள்விக் குறியாக்குவது அல்ல மார்க்சியத்தை விளக்குவதுதான் . ஆக தோழர்களே மார்க்சியம் அல்லாத போக்குகளை வீண் விவாதத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதே எனது வாதம். நீண்ட நெடிய விவாதம் தேவைப்படின் உங்கள் மீதான எனது கருத்துக்களை தெளிவாக வரைந்து ஒரு கட்டுரை கொடுக்கிறேன் வாதிகள் பின்னர். இப்பொழுது நன்றி வணக்கம்
[10:47 am, 13/08/2022] +91 94864 86321: பொருள் சார்ந்த உண்மைகளுக்குத் தான் ஆதாரமும் அறிவியலும் சாத்தியமாகும். ஏனெனில் பொருட்கள் மனம் சாராமல் திட்டவட்டமாக இயங்கக் கூடிய வை. ஆனால் சமூகக் கருத்துக்கள் மனம் சார்ந்து இயங்கக் கூடியவை. மனம் சாராத சமூகக் கருத்துக்கள் சாத்தியமில்லை. எனவே சமூகக் கருத்துக்களில் அறிவியல் சாத்தியமில்லை.ஒருவர் தனது கருத்துக்களை அறிவியல் என்று சொல்வார் எனில் பிறருடனான அவரது விவாதம் என்பது அவரைப் பொறுத்து வெற்று சடங்காகி விடும். தாங்கள் சொல்வதெல்லாம் அறிவியல் என்ற அகங்காரத்தில் தான் பல மார்க்சியக் குழுக்களும், கட்சிகளும், தேங்கி போயின.
[10:55 am, 13/08/2022] +91 94459 40622: தோழர்,
மார்க்சியம் என்பது காரல் மார்க்சின் பெயரால் அறியப்படுவதாலேயே, மார்க்ஸ் சொன்ன எல்லா முடிவுகளையும் அப்படியே மார்க்சியத்தின் வரையறைகள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, இந்திய சமூகம் பற்றிய ஆசியபாணி உற்பத்தி முறை என்ற மார்க்சின் வரையறையை இர்ஃபான் ஹபீப் (இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் நூலுக்கு முன்னுரையில்), சுனிதி குமார் கோஷ் ஆகியோர் நிராகரித்திருக்கின்றனர். "இந்திய சமூகத்தை ஆசியபாணி உற்பத்தி முறை என்று வரையறுப்பது சரியில்லை, புராதன பொதுவுடைமை சமூகம், அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம், சோசலிச சமூகம் என்று வரையறுப்பதே சரியானது என்று வாதிட்டு தமது கோட்பாடுகளை முன் வைத்தனர்.
எனவே, இந்தியாவில் புராதன பொதுவுடைமை சமூகத்தைத் தொடர்ந்து ஆசியபாணி உற்பத்தி முறை என்று மார்க்ஸ் சொன்னதாலேயோ அல்லது இர்ஃபான் ஹபீப் அல்லது சுனிதி குமார் கோஷ் அதற்கு மாறாக நால்வகை சமூக வரையறையை சொன்னதாலேயோ அது மார்க்சியத்தின் இறுதி வரையறை ஆகி விடாது.
இறுதி வரையறையை தீர்மானிப்பது நடைமுறை. இது இயற்கை அறிவியலுக்கும் பொருந்தும், சமூக அறிவியலான மார்க்சியத்துக்கும் பொருந்தும்.
இர்ஃபான் ஹபீப் சார்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, சுனிதி குமார் தொடங்கி வழி நடத்திய மார்க்சிய லெனினிய கட்சியோ அவர்கள் உருவாக்கிய கோட்பாட்டின் அடிப்படையில் இந்தியப் புரட்சியை வழிநடத்தி முடித்திருந்தால் அந்த வரையறைகளோ, கட்சித் திட்டங்களோ அதன் பிறகு கேள்விக்கு உள்ளாகாது. அவை நடைமுறையில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் புரட்சி நடந்து பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றாத நிலையில், மார்க்சியம் என்று இர்ஃபான் ஹபீப் அல்லது சுனிதி குமார் கோஷ் அல்லது வேறு எந்த ஒரு கட்சியும் முன் வைத்த வரையறைகளும் முடிவுகளும் கேள்விக்குள்ளாகத்தான் செய்யும்.
பருண்மையான நிலைமைகளை பருண்மையாக ஆய்வு என்ற அறிவியல் ஆய்வு முறையின்படியும், முந்தைய கருத்துக்கள் மீதான விமர்சன பகுப்பாய்வு முறையின்படியும் செய்யப்படும் பணிகள் அனைத்தும் மார்க்சியத்தை வளர்த்துச் செல்பவைதான்.
மார்க்ஸ் சொன்னது என்று குறிப்பிட்ட சில வரையறைகளையோ அல்லது வேறு ஒரு தலைவர்/அறிவாளி சொன்னது என்று இன்னும் சில வரையறைகளையோ பிடித்துக் கொண்டிருப்பது மார்க்சியம் ஆகாது.
இதை பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
[11:05 am, 13/08/2022] +91 88705 99129: சமூகம் மனம் சார்ந்து இயங்குதா?..
[11:05 am, 13/08/2022] +91 94459 40622: இந்திய சமூகம் பற்றிய மார்க்சிய வரையறை - 1 மார்க்ஸ்
==================================
முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை முறைகளைப் பற்றிய மார்க்சின் குறிப்புகளில் (Grundrisse, மூலதனம் நூலை எழுதுவதற்கான முதல் வரைவு - 1857க்கும் 1861-க்கும் இடையே எழுதப்பட்டது), இந்திய சமூகத்தின் தனிச்சிறப்பு அழுத்தம் திருத்தமாக சொல்லப்படுகிறது.
முதலில் மூன்று வகை சொத்துடைமைகளுக்கு இடையேயான வேறுபாடு
"1. நிலத்தில் தனிநபர் சொத்துடைமை இல்லை. வெறும் அனுபோகம் மட்டுமே உண்டு என்கிற முறையில் சொத்துடைமை தனிநபரது சமூக வாழ்வால் பெறப்படும் சமூகச் சொத்துடைமையாக இருப்பது. [இந்தியா மற்றும் பல சமூகங்களின் சொத்துடைமை முறை]
2. அரசு மற்றும் தனியார் சொத்துடைமை என்று அக்கம்பக்கமாக இரட்டைச் சொத்துடைமை வடிவம் இருப்பினும் தனியார் சொத்துடைமைக்கு முன்நிபந்தனையாக அரசு சொத்துடைமை இருப்பது. எனவே கு…
[11:08 am, 13/08/2022] +91 88705 99129: சரிதான்.
🤝❤️
[11:15 am, 13/08/2022] +91 94459 40622: இந்திய சமூகம் பற்றி மார்க்சிய வரையறைகள் - 2 - இர்ஃபான் ஹபீப்
=====================================================
இர்ஃபான் ஹபீப் 2010-ம் ஆண்டில் இந்த விவாதம் பற்றி எழுதும் போது தனது ஆய்வு மார்க்சின் ஆசியபாணி உற்பத்தி முறை என்ற வரையறைக்கு நெருக்கமாக இருக்கிறது என்கிறார். 1960-களில் இதற்கு மாறான கருத்து நிலவியதற்கான அரசியல் சூழலையும் விளக்குகிறார்.
பார்க்கவும் (The Marxist, XXVI 4, October–December 2010 - IRFAN HABIB - Note Towards a Marxist Perception of Indian History)
இதற்குப் பிறகு இர்ஃபான் ஹபீப் இந்தப் பொருளைப் பற்றி எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இருந்தாலும், இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் நூலில் எழுதியதற்குப் பின்னர் 2010-ல் இர்ஃபான் ஹபீப் எழுதிய கட்டுரையில் சொல்லும் கருத்து அந்நூலில் அவர் சொன்ன கருத்துக்களிலிருந்து வேறுபடும் அவரது இறுதிக் கருத்து…
[11:18 am, 13/08/2022] +91 94864 86321: அருமையான விளக்கம்.
[11:29 am, 13/08/2022] +91 94864 86321: சமூகம் மனம் சார்ந்து இயங்குகிறது என்று என் பதிவில் எதுவும் இல்லை. மனித மனம் சாராத சமூகக் கருத்து சாத்தியமில்லை என்று தான் சொல்ல வருகிறேன்.
[11:32 am, 13/08/2022] +91 94864 86321: ஆனால் அறிவியல் கருத்து என்பது மனித மனம் சாராமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனை உடையது.
[11:36 am, 13/08/2022] Thirup Guna: மார்க்சிய நிபுணத்துவத்துக்கான விவாதம் அவசியமானதுதான். ஆனால் அது இந்தியாவில் குறிப்பாக கட்சி கட்டும் சிக்கலுக்கு அடிப்படையானதில்லை
[11:40 am, 13/08/2022] kravichandran00@gmail com: ‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️
இயற்கையின் இயங்கியல் அறிவியல் விதிகள்
சமூகத்தின் இயங்கியல் அறிவியல் விதிகள்
இவ்விரண்டு விதிகளும் ஒன்றுபடும் மாறுபடும் புள்ளிகளை பிரித்தும் பார்க்க வேண்டும்.
இயற்கை, சமூகம் ஆகிய இரண்டு கூறுகளின் இயங்கியல் அறிவியல் விதிகள் மூன்றாவது கூறாகிய மனிதசிந்தனை யின் இயங்கியல் அறிவியல் விதிகளின் வழியாகத்தான் மனித மனங்களில் வினைபுரிகின்றன.
‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️
[0:29 pm, 13/08/2022] +91 88705 99129: சமூக கருத்துக்கள் மனம் சார்ந்து இயங்கக்கூடியவை என்று குறிப்பிட்டுயிருக்கிங்க.
[0:32 pm, 13/08/2022] CP: தோழர் இங்கேதான் நீங்கள் மார்க்சியத்தை கைவிட்டு விலகும் போக்கு உள்ளது. மார்க்சியமானது ரசிய புரட்சியின் ஊடாக லெனினியமானது பல்வேறு நடைமுறை சிக்கல்களை தீர்வு கண்டு தன் ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் என்று லெனின் நிறுவியதால் மார்க்சிய-லெனினியமானது மேலும் கலாச்சார புரட்சியின் ஊடாக வர்க்க போராட்டத்தை முன்னெடுத மாவோவின் செயல்பாட்டால் மாவோ சிந்தனையானது என்று சுருக்கமாக குறிபிடும் இதே வேளையில் லெனினின் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்தந்திரங்களில், முன்னேறிய அய்ரோப்பிய பகுதியும் பின் தங்கிய ஆசிய பகுதியையும் இணைத்து அதற்கான வழியில் புரட்சி நடத்த வேண்டியது நம் முன் உள்ள கடமை என்பார். மேலும் சீனா ஆசியாவில் இல்லாத அய்ரோபாவிலா உள்ளது தோழர் அங்கு புரட்சி நடக்கவில்லையா? நீங்கள் பேசும் ஆசிய பாணி சொத்துடைமையை அவர்கள் எப்படி எதிர் கொண்டனர் கொஞ்சம் தரவுகள் இருந்தால் விளக்குங்கள் தோழர். மார்க்சியத்தை குறைக்கூறி மார்சியத்தை பேசுவது மார்க்சியம் அல்ல எனது ஆணிதரமான கூற்று.. அப்படிதான் பேசுவேன் என்றால் இத்தோடு முடித்துக் கொள்வோம் விவாதத்தை
[0:55 pm, 13/08/2022] +91 94459 40622: "ரசியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி" என்று ரசியாவின் பொருளாதார நிலைமை பற்றி பருண்மையான ஆய்வில் தொடங்கி, "என்ன செய்ய வேண்டும்", "நாட்டுப்புற ஏழை மக்களுக்கு", "சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்தந்திரங்கள்", ஏன், "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" என்ற தத்துவ நூலைக் கூட லெனின் ரசியாவின் பருண்மையான நிலைமைகளுக்கு மார்க்சியத்தை பொருத்திதான் ரசியப் புரட்சிக்கு வழிநடத்தினார் லெனின்.
அதே போல மாவோவின் படைப்புகளும் கோட்பாடுகளும் சீன நிலைமைகளுக்கு மார்க்சிய ஆய்வுமுறையை பொருத்தி வந்தடையப்பட்டவை, உதாரணம் நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்ற போர்தந்திரம்.
இந்த முடிவுகளை லெனினும் மாவோவும் வந்தடைந்த ஆய்வுமுறையை கற்று, ரசிய/சீன நிலைமைகளுக்கும் இந்திய நிலைமைகளுக்கும் இடையேயான பொதுவான அம்சங்களை அடையாளம் கண்டு எடுத்துக் கொள்ளும் அதே நேரம், இந்தியாவின் பருண்மையான நிலைமைகளுக்கு (சாதி/வருண கட்டமைப்பு, பெரிய அளவிலான பல தேசிய இனங்கள், இசுலாமியர் ஆட்சி, பிரிட்டன் என்ற ஒற்றை ஏகாதிபத்திய சக்தியின் கீழ் காலனியாக்கப்பட்டது இன்னபிற) பருண்மையான ஆய்வை செய்வது அவசியம்.
ஒரு நாட்டின் புரட்சிக்கான கோட்பாட்டை நகல் எடுத்து இன்னொரு நாட்டின் நிலைமைகளுக்குப் பொருத்துவது மார்க்சியம் ஆகாது.
ரசியப் புரட்சிக்காக ரசியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய கோட்பாட்டை (ரசியப் பாதை), அல்லது சீனப் புரட்சிக்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய கோட்பாட்டை (சீனப் பாதை) நகல் எடுப்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாறாக இருந்திருக்கிறது. அதாவது நீங்கள் மார்க்சியம் என்று வரையறுப்பதைத்தான் கட்சிகளும் குழுக்களும் ஏற்றுக் கொண்டு பின்பற்றி வந்துள்ளன.
சீனாவிலும் ரசியாவிலும் புரட்சி நடந்து விட்டது, ஏன் இந்தியாவில் இன்னும் புரட்சி நடக்கவில்லை (சீனாவைப் போல) என்று நீங்கள் விளக்குங்கள்.
[1:07 pm, 13/08/2022] CP: நான் ஏன் இங்கு புரட்சி நடத்தவில்லை என்பதற்க்கு என்னுடை இரண்டு பதிவுகள் முன்னரே சமர்பித்துள்ளேன் மேலும் இங்கு புரட்சியை நடத்துவதற்க்கு தடைகற்கள் நீங்கள் சொல்லுவதை அவர்கள் மேற்கொண்ட அனுபவத்தை நீங்கள் புரிந்துக் கொள்ளவேயில்லை என்பேன். அங்கு ஆசிய பகுதிகள் இல்லையா என்பதையே நான் கேட்ட கேள்வியின் அர்த்தம் மேலும் ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் 1900 முன் நடந்த போராட்டங்களாகட்டும் 1920 பின் நடந்த போராட்டங்களும் என்ன சுட்டிக் காட்டுகிறது?. மதமாக சாதியாக ஏன் நீங்கள் பேசும் வர்ணமாக கூட மக்கள் பிரிந்திருக்கவில்லை அவர்கள் ஒடுக்கப் பட்ட மக்களாக ஒன்றுபட்டுதான் போராடினார்கள் அவை எப்படி கீழ்தஞ்சையில் சீனிவாஸ்ராவ் தலைமையில் நடந்த விவசாய போராட்டம் சாதியா? வர்ணமா? வர்க்கமா? எதை முன்னெடுத்தது தோழர்? இன்றைய இவ்வளவு பெரிய முரண் எப்பொழுது எங்கிருந்து வந்தது தோழர்?
No comments:
Post a Comment